11-08-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! பாப்தாதாவின் அன்பு
நினைவுகளை பெற வேண்டும் என்றால் சேவை செய்யத் தகுந்தவராக
ஆகுங்கள், புத்தியில் ஞானம் நிறைந்திருந்தது என்றால் மழையாகப்
பொழியுங்கள்.
கேள்வி:
எந்த ஒரு போதை, (ஞானம்)
நிறைந்திருக்கும் மேகங்களைக் கூட பொழிய விடாமல் ஓட வைத்து
விடும்?
பதில்:
ஒருவேளை வீணான தேக அபிமானத்தின்
போதை வந்தது என்றால், (ஞானம்) நிறைந் திருக்கும் மேகங்கள் கூட
பறந்து சென்று விடும். பொழிந்தாலும் கூட சேவைக்குப் பதிலாக
நேருக்கு மாறாக சேவை (டிஸ்சர்வீஸ்) நடந்து விடும். பாபாவிடம்
அன்பு இல்லை என்றாலும், அவருடன் நினைவின் தொடர்பு இல்லா
விட்டாலும் ஞானம் இருந்தும் காலியாக இருப்பது போல்தான் ஆகும்.
இப்படிப்பட்ட காலியான மேகங்கள் பலருக்கு எப்படி நன்மை செய்யும்?
ஓம் சாந்தி.
கொஞ்சம் மேகங்கள் மீதி இருக்கின்றன. மழை குறையும்போது கடலுக்கு
மேலே மேகங்கள் குறைந்து, குளிர்ந்து விடுவது போல, இங்கும் கூட
குளிர்ந்து போய் விடுகின்றனர். புத்துணர்ச்சி அடைந்து சென்று
ஞான மழையாய் பொழிகின்றவர்களை மேகங்கள் என சொல்லலாம். மழை
பொழியவில்லை என்றால் மேகங்கள் என சொல்ல மாட்டார்கள். இது ஞான
மேகமாகும். அவை நீராலான மேகங்கள் ஆகும். சீஸன் (பாப்தாதாவை
சந்திக்க) வரும்போது ஞானத்தின் மேகங்கள் வருகின்றன. புத்துணர்வு
அடைந்து சென்று மற்றவர் களுக்கும் புத்துணர்வு கொடுக்கின்றன.
மேகங்களும் கூட வரிசைக்கிரமமாக இருக் கின்றன. சில மேகங்களோ
மிகவும் நன்றாகப் பொழிகின்றன. மேகங்களின் வேலையே நன்றாகப்
பொழிந்து காய்ந்து கிடக்கும் தாவரங்களை புத்துணர்வு அடையச் (துளிர்விட)
செய்வதாகும். யாருக்குள் முழுமையான ஞானம் உள்ளதோ அவர்கள்
மறைந்து இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு பாபாவின் அனுமதி கூட
தேவையில்லை. மேகங்களாகவே இருக்கின்றனர். இங்கு வருவதே ஞானத்தை
நிரப்பிக் கொண்டு போய் பொழிவதற்காக ஆகும். எங்கு பார்த் தாலும்
காய்ந்த (வரண்ட) நிலம்தான் உள்ளது, எனவே அங்கு சென்று பசுமையாக
ஆக்க வேண்டும். மகாரதி குழந்தைகள் அனைத்து சென்டர்களையும் நல்ல
விதமாக அறிவார்கள். எந்த சென்டர் குளிர்ந்து போய் கிடக்கிறது?
எந்த சென்டரின் குழந்தைகளுக்கு அதிகமாக புயல் காற்றுகள்
வருகின்றன? சேவை செய்யக்கூடிய மகாரதி குழந்தைகளுக்கு நன்றாகத்
தெரியும். சேவை செய்யும் குழந்தைகளுக்கு அன்பு நினைவுகள்
கொடுங்கள் என பாபாவும் எப்போதும் சொல்கிறார். நல்ல நல்ல
மேகங்கள் சேவைக்குச் செல்லும். கண்காட்சிகளிலும் அனைவருமே ஒரே
மாதிரியாக புரிந்து கொள்வதில்லை. முக்கிய மான விசயமே
இதுதானாகும் - கீதையின் பகவான் பரமபிதா பரமாத்மா ஆவார்
சாகாரமான ஸ்ரீகிருஷ்ணர் அல்ல. புரிய வைப்பதற்கு மிக நல்ல நடத்தை
(புத்தி) தேவை. அனைவருக்கும் சென்று விழிப்புணர்வு கொடுக்க
வேண்டும் என முழு நாளும் இதே சிந்தனையில் இருக்க வேண்டும்.
அனைவரும் அடர்ந்த காரிருளில் கிடக்கின்றனர். அனைவருக்கும்
அன்புடன் புரிய வைத்தபடி இருங்கள் - இரண்டு தந்தையர்
இருக்கின்றனர். ஒருவர் எல்லைக்குட்பட்டவர், மற்றவர்
எல்லைக்கப்பாற்பட்டவர். எல்லைக்கப் பாற்பட்ட தந்தையைத் தான்
பதித பாவனர் என்று சொல்கின்றனர். இப்போது குழந்தைகளாகிய
உங்களுக்கு புத்தி கிடைத்துள்ளது. உலகில் உள்ள மனிதர்கள்
பார்ப்பதற்கு என்னவோ மிகவும் பகட்டு மிக்கவர்களாக இருக்கின்றனர்,
ஆனால் கல்புத்தியாக உள்ளனர். பெயர் பெற்ற இந்த சாதுக்கள்
முதலானவர்களையும் கூட நான்தான் முன்னேற்ற வேண்டி யுள்ளது என
தந்தை தாமே சொல்கிறார். அவர்களுக்கும் கூட படைப்பவர் மற்றும்
படைப்பைப் பற்றி தெரியாது. சத்யுகத்தில் இருந்து இந்த ஞானம்
மறைந்து விடுகிறது. ஆனால் இது யாருக்கும் தெரியாது.
சாஸ்திரங்களில் இந்த ஞானம் கிடையாது. அதன் மூலம் யாருக்கும்
சத்கதி கிடைக்காது, கீதைக்கு எவ்வளவு மதிப்பு உள்ளது, ஆனால் அது
பக்தி மார்க்கமாகும். தந்தை பதித பாவனர், அவர் அமர்ந்து
இராஜயோகம் கற்பிக்கிறார். ஆக கண்டிப்பாக இராஜ்யம் செய்வதற்காக
புதிய உலகம் தேவைப்படுகிறது. தந்தை தான் வந்து இராஜயோகத்தை
கற்பிப்பார். யாருக்கு கல்பத் திற்கு முன்பு புரிய வைக்கப்
பட்டிருக்குமோ அவர்களுக்குத்தான் இப்போது புரிய வைப்போம்,
மீண்டும் புரிந்து கொள்வார் கள் என்பதும் கூட உங்களுக்கு
இப்போது தெரிந்துள்ளது. இந்த சண்டை அது அல்ல. எப்போதும்
வழக்கமாக ஏற்படும் சண்டை போலத்தான் ஆகும். 8-10 வருடங்கள்
நடந்து பிறகு நின்று போய்விடும். நாடகத்தின்படி உருவாகியுள்ள
அணுகுண்டுகள் எதுவும் அப்படியே வைப்பதற்கானவை அல்ல. தூய்மையற்ற
மனிதர்களின் மரணம் ஏற்படாத வரை சத்யுகம் வராது. அமைதி எப்படி
ஏற்படும் என்பதையும் கூட புரிய வைக்க வேண்டும். அமைதியை ஸ்தாபனை
செய்வது மற்றும் சிரேஷ்டாச்சாரி (உயர்வான) உலகத்தை உருவாக்கு
வது என்பது ஒரு தந்தையின் வேலைதான் ஆகும். மற்ற தொடர்புகளை
புத்தியிலிருந்து நீக்கி ஒருவரின் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள
வேண்டும். தேகத்துடன் சேர்த்து கண்ணால் காணக்கூடிய
அனைத்திலிருந்தும் நீக்க வேண்டும். இப்போது நாம் திரும்பிச்
செல்ல வேண்டும், ஆகையால் வீட்டைத்தான் நினைவு செய்ய வேண்டும்.
இது மரண லோகம் என இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நாம்
அமரலோகத்திற்குச் செல்வதற்காக அமரகதையை கேட்டுக்
கொண்டிருக்கிறோம். தேவதைகள் தெய்வீக குணமுள்ள மனிதர்கள் என
சொல்லப்படுகின்றனர். இங்கே அதுபோல ஒருவர் கூட இருக்க முடியாது.
கிருஷ்ணர் குறித்து கூட எவ்வளவு இழிவாக எழுதி விட்டுள்ளனர்.
புத்தியில் எதுவும் வருவதில்லை.
இப்போது குழந்தைகளாகிய நீங்கள் நல்ல விதமாக முயற்சி செய்ய
வேண்டும், தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும். தெய்வீக
குணம் என எதற்கு சொல்லப்படுகிறது என்பதும் கூட புரிய வைக்கப்
படுகிறது. முழுமையான விகாரமற்றவராக கண்டிப்பாக ஆக வேண்டும். இது
முக்கியமான முதன்மையான குணமாகும். அங்கும் இங்கும் என எங்கே
பார்த்தாலும் தூய்மையானவர் முன் தலை வணங்குகின்றனர்.
சத்யுகத்தில் தூய்மையாகத் தான் இருப்பார்கள், ஆகவே அங்கே கோவில்
இருப்பதில்லை. பிறகு பூஜாரிகள் ஆகும்போது கோவில்களை
கட்டுகின்றனர், தூய்மையாய் இருந்தவர்களே தூய்மையற்றவராக
ஆகின்றனர். இது பல பிறவிகளின் கடைசி பிறவியாகும்.. இந்த பழைய
உலகத்தை, பழைய சரீரத்தையும் கூட மறந்து போக வேண்டும். இந்த
பழைய உலகம் இப்போது அழிய வேண்டியுள்ளது. இது முடிந்து போவதில்
கால தாமதம் எதுவும் ஆகாது. இந்த பழைய உலகம், செல்வம்,
சொத்துக்கள் அனைத்தும் போயே போய்விட்டது. கொஞ்ச நாட்கள் மீதி
உள்ளது. இந்த பழைய உலகம் அழியப்போகிறது என உலகில் யாருக்கும்
தெரியாது. நீங்கள் சொல்கிறீர்கள், ஆனால் நம்பிக்கை இருக்க
வேண்டுமே. பகவானுடைய மகா வாக்கியம் என எப்போது புரிந்து கொள்
கிறார்களோ அப்போது புத்தியில் பதியும்.
தன்னை ஆத்மா என புரிந்துக் கொண்டு தந்தையான என்னை நினைவு
செய்யுங்கள் என தந்தை குழந்தை களாகிய உங்களுக்கு கூறுகிறார்.
எல்லைக்கப்பாற்பட்ட தந்தை நமக்கு இராஜயோகம் கற்பிக்கிறார் என
குழந்தைகளுக்குத் தெரியும். அவர் அனைத்து ஆத்மாக்களின் தந்தை
ஆவார். அனைவரும் சகோதரர்கள் ஆவர். சொர்க்கத்தில் அனைத்து
சகோதரர்களும் சுகம் மிக்கவர் களாக இருந்தனர், நரகத்தில் அனைத்து
சகோதரர்களும் துக்கம் மிக்கவர்களாக இருக்கின்றனர். அனைத்து
ஆத்மாக்களும் நரகவாசிகள் ஆவர். அனைத்து ஆத்மாக்களுமே
நரகவாசிகளாக உள்ளனர். ஆத்மா மட்டும் இருக்காது அல்லவா. சரீரமும்
தேவை அல்லவா. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் ஆத்ம அபிமானி ஆக
வேண்டும். இதில்தான் உழைக்க வேண்டி யுள்ளது. சித்தி வீடு போல
அல்ல. முதலில் பரமபிதா பரமாத்மா நம்மை படிப்பிக்கிறார் என்ற
நிச்சயம் ஏற்படும்போது இந்த நிலை உறுதியாக ஆகும். சிவபாபா
வருவதே இந்த சரீரத்தின் மூலம் படிப்பிப்பதற்காகும். நாமும்
சரீரத்தின் மூலம் கேட்கிறோம், தாரணை செய்கிறோம். சம்ஸ்காரங்களை
அனுசரித்துத்தான் ஒரு சரீரத்தை விட்டு மற்றொன்றை தாரணை செய்
கிறோம். பாபா சண்டை செய்பவர்களின் (இராணுவ வீரர்கள்) உதாரணத்தை
சொல்வது போல ஆகும். சண்டை போடும் சம்ஸ்காரத்தை எடுத்துச்
சென்றால் பிறகு அப்படிப்பட்டவர் களாகத் தான் (மறுபிறவியில்)
வருவார்கள். நிராகாரமான எல்லைக்கப் பாற்பட்ட தந்தைக்குள் என்ன
சம்ஸ்காரங்கள் உள்ளன என இப்போது தந்தையின் சம்ஸ்காரங்கள்
பற்றியும் உங்களுக்குத் தெரியும். அவர் மனித சிருஷ்டியின் விதை
ரூபம் ஆவார். பதித பாவனர், ஞானக் கடல் ஆவார். அவர்தான் வந்து
தூய்மையாக்குவார். என்னை மட்டும் நினைவு செய்தீர்கள் என்றால்
உங்களின் பிறவி பிறவிகளின் பாவ கர்மங்கள் அழிந்து போகும் என
தந்தை சொல்கிறார். இல்லாவிட்டால் அதிக தண்டனைகளை அனுபவிக்க
வேண்டியிருக்கும். பதவி எதுவும் கிடைக்காது.
பாபா நமக்கு சகஜமான வழியைச் சொல்லிக் கொடுக்கிறார் என இப்போது
குழந்தைகள் அறிவீர்கள். மன்மனாபவ என சொல்கிறார். இந்த
வார்த்தையும் கீதையில் இருக்கிறது, ஆனால் இதன் அர்த்தத்தை
புரிந்து கொள்வதில்லை. என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என
தந்தை சொல்கிறார். தேகத்துடன் சேர்த்து தேகத்தின் அனைத்து
தர்மங்களையும் விடுத்து தன்னை ஆத்மா என புரிந்து பரமபிதா
பரமாத்மாவாகிய என்னை நினைவு செய்யுங்கள். நினைவு தான் யோக அக்னி
எனப்படுகிறது. யோகம் என்பது பொதுவான வார்த்தை ஆகும். கீதையிலும்
உள்ளது, ஆனால் கிருஷ்ணரின் பெயரைப் போட்டுவிட்டதால் மட்டுமே
அடர்ந்த காரிருளாக ஆக்கி விட்டனர். இப்போது நீங்கள் எடுத்துக்
கூறினால், இவையெல்லாம் உங்கள் கற்பனை என்று சொல்லி விடுகின்றனர்.
கொஞ்சமும் தெரிந்துக் கொள்வதில்லை. அவர்கள் ஆஸ்தியை
எடுத்துத்தான் ஆக வேண்டும். இவர் எல்லைக்கப்பாற்பட்ட தந்தை,
தந்தையாகவும் இருக்கிறார், ஆசிரியராகவும் இருக்கிறார்,
சத்குருவாகவும் இருக்கிறார், அவர் நம்மைப் படிப்பிக்கிறார் என
முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும். இந்த உறுதியான நம்பிக்கை
தேவை. புதிய மனிதர் களுக்கு நம்பிக்கை ஏற்படுவது என்பது
நடக்காத ஒன்று. ஒரு சில புதிய புதியவர்கள் புத்திசாலி களாகவும்
இருக்கின்றனர், புரிந்துக் கொள்கின்றனர். சிலரோ இங்கே வரவே
விரும்புவதில்லை, கொஞ்சமும் புரிந்து கொள்வதில்லை. கொஞ்சமும்
புத்தியில் வருவதில்லை. இவ்வளவு அளவற்ற பி.கு.க்கள் (பிரம்மா
குமார்-குமாரிகள்) இருக்கின்றனர், கண்டிப்பாக இவர்களுக்கு
தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைத்திருக்கும். அது குடும்பமாக
ஆகிவிட்டது. பெயரும் பிரஜாபிதா பிரம்மா குமார்-பிரம்மா குமாரி
என எழுதப்பட்டுள்ளது எனும்போது குடும்பம் என்றாகிவிட்டது அல்லவா.
பிரஜாபிதா பிரம்மாவின் குடும்பம் எவ்வளவு பெரியது, ஆனால் இந்த
விஷயம் யாருடைய புத்தியிலும் வர வாய்ப் பில்லை. உங்களுடைய
இலட்சியம் குறிக்கோள் என்ன? என யாராவது கேட்டால் சொல்லுங்கள் -
வெளியே பெயர்ப்பலகையில் பிரஜாபிதா பிரம்மாகுமார் குமாரிகள் என
போடப்பட்டுள்ளது எனும்போது குடும்பம் என்றாகி விட்டது. தாத்தா
விடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. பிரஜாபிதா பிரம்மாவின் வாய்
மூலம் சிவபாபா படைப்பை படைக்கிறார். எனவே இவர் படைப்பவர்
ஆகிறார், சொர்க்கத்தைப் படைக்கிறார் எனும்போது கண்டிப்பாக
குழந்தைகளுக்கு சொர்க்கத்தின் ஆஸ்தியை கொடுப்பார். ஆக இது
குடும்பமாகி விட்டதல்லவா. தந்தை, குழந்தைகள் மற்றும் தாத்தா
ஆகியோர் உள்ளனர். பிரம்மாவும் இருக்கிறார், சிவனும் இருக்கிறார்.
அவர் படைப்பவர் ஆவார். நிராகாரமானவர் எனும்போது குழந்தைகளுக்கு
ஆஸ்தியை எப்படி கொடுப்பார்? பிரம்மாவின் மூலம் ஆஸ்தியை
கொடுக்கிறார். இதை நல்ல விதமாக புரிய வைக்க வேண்டும். இது
உங்களுடைய தந்தையின் வீடு என சொல்லுங்கள். இதை ருத்ர ஞான யக்ஞம்
என சொல் கிறோம். நாங்கள் பிராமணர்கள், தந்தையைத் தவிர
இராஜயோகத்தை வேறு யாராலும் கற்பிக்க முடியாது. கீதையிலும்
உள்ளதல்லவா - மன்மனாபவ அதாவது (மாமேகம்) என்னை மட்டும் நினைவு
செய்யுங்கள். ஆக, நாங்கள் அந்த ஒரு தந்தையைத்தான் நினைவு
செய்கிறோம். பாபா நீங்கள் வந்தீர்கள் என்றால் நாங்கள் பலியாகி
விடுவோம், நாங்கள் உங்களுடையவர் ஆவோம் என பக்தி மார்க்கத்தில்
பாடுகின்றனர். ஆத்மாக்களாகிய நாங்கள் இந்த தேகத்தை விட்டு
விட்டு உங்களுடன் சென்று விடுவோம். உங்களுடையவர் களாக ஆவோம்
எனும்போது உங்களுடன் கூட செல்வோம். நிச்சயதார்த்தம் செய்தால்
மணமகன் உடன் அழைத்துச் செல்வார் அல்லவா. இந்த சிவனாகிய மணமகனும்
சொல்கிறார் - நான் உங்களை இந்த துக்கத்திலிருந்து விடுவித்து
சுகதாமத்திற்கு அழைத்துச் செல்வேன். பிறகு அவரவருடைய
முயற்சிக்குத் தகுந்தாற்போல சென்று இராஜ்யம் செய்வோம், யார்
எவ்வளவு ஞான செல்வத்தை தாரணை செய்கின்றனரோ அந்த அளவு உயர்ந்த
பதவியை அடைவார்கள். சின்ன சின்ன குமாரிகள் கூட சேவை செய்து
கொண்டிருக்கின்றனர். அவர்கள் தான் பெரிய பெரிய வித்வான்கள்,
பண்டிதர்கள் முதலானவர் களுக்குப் புரிய வைக்க வேண்டும். ஆர்வம்
இருக்க வேண்டும். குத்துச் சண்டை நடக்கும்போது இவர்களுடன் நாம்
சண்டையிடுவோம் என பெரிய பெரிய சவால்கள் விடுகின்றனர். சேவை
செய்யத்தக்க குழந்தைகள் ஓய்ந்து தூங்கக் கூடாது. ஓய்வு
தவிர்க்க வேண்டிய ஒன்றாகும். தம்மை மகாரதி என புரிந்து
கொண்டிருப்பவர்கள் சுகமாக தூங்கக் கூடாது. சேவையில் சுற்றிக்
கொண்டிருக்க வேண்டும். இன்றைய நாட்களில் பாபா கண்காட்சிகள்
நிறைய நடத்திக் கொண்டி ருக்கிறார். பெரிய பெரியவர்களுக்கு
அழைப்பிதழ் அனுப்புங்கள். இப்போதில்லா விட்டாலும் பின்னர்
வருவார்கள். சாது சன்னியாசிகள், மஹாத்மாக்கள் யாராயினும்
எழுப்பியபடி இருங்கள், ஆனால் அவர்களுடன் பேசுவதற்கு மகாரதிகள்
தேவைப்படுகிறார்கள். யாருக்கு தந்தையிடம் நினைவின் தொடர்பு
இல்லையோ, அன்பில்லையோ அவர்கள் காலி மேகங்கள் போன்றவர்கள்.
அவர்கள் என்ன செய்வார்கள்? படித்தவர்களின் முன்னால்
படிக்காதவர்கள் மூட்டை தூக்கு வார்கள் என்பதையும் அறிவீர்கள்.
நாம் எதுவரை படித்திருக்கிறோம் என அனைவருமே தன்னைப் பற்றி
புரிந்துக் கொள்ள முடியும். சேவை செய்து காட்டுவேன் எனக் கூற
வேண்டும். மேகம் நிரம்பியிருந்தும் பொழியவில்லை என்றால் அந்த
மேகத்தால் என்ன லாபம்? ஒவ்வொரு வருக்கும் தன்னைப் பற்றி
புரிந்திருக்க வேண்டும். வீணான தேக அபிமானத்தின் போதையில்
இருந்தால் எப்போதும் உயர்ந்த பதவியே அடைய முடியாமல் இழந்து
விடுவீர்கள். பாபாவுக்கு சேவையின் ஆர்வம் எவ்வளவு இருக்கிறது.
எங்களுக்கு ஹால் கொடுங்கள், அங்கே நாங்கள் இந்த ஆன்மீக சேவை
செய்து மனிதர்களை தேவதைகளாக ஆக்குவோம் என அரசாங்கத் திற்குப்
புரிய வைக்க வேண்டும். தந்தை வந்ததே இராஜயோகம் கற்பிப்பதற்காக,
ஆனால் யுக்தி யுக்தமாக புரிய வைக்க வேண்டும். சொற்பொழிவு
செய்யவே தெரியாதவர்கள் புரிய வைக்க முடியாது. சேவை செய்பவர்கள்
பதவியை அடைய முடியும். இந்த ஞானம் இல்லாமல் பாரதத்தின் மற்றும்
உலகின் நன்மை ஏற்பட முடியாது. படிப்பு முக்கியமானது. இந்த
லட்சுமி நாராயணர் கூட படிப்பின் மூலமே உயர் பதவியை அடைந்தனர்
அல்லவா. முந்தின பிறவியில் இராஜயோகம் கற்றனர். நாமும் கூட
இப்போது இங்கே படித்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் இந்த
பரீட்சை எழுதி பின் சென்று இன்னாராக ஆகப் போகிறோம் என பள்ளியில்
மாணவர் களும் புரிந்து கொள்கின்றனர். உங்களுக்கு கிடைக்கும்
இந்த ஞானம் இந்த உலகிற்கானதல்ல. நீங்களும் எதிர்காலத்தின் 21
பிறவிகளுக்கான பலனை உருவாக்குவதற்காக படிக்கிறீர்கள். அவர்கள்
இந்த பிறவியின் சுகத்திற்காகப் படிக்கின்றனர். எனவே அதையும்
படிக்க வேண்டும், கூடவே இந்த படிப்பை யும் கற்றுக் கொள்ள
வேண்டும், இதில் பயப்பட வேண்டிய விசயம் ஏதுமில்லை. ஆன்மீக
ஞானத்தை ஏன் எடுக்கக் (கற்க) கூடாது? படங்களை எடுத்துச் சென்று
புரிய வைக்க வேண்டும். ஞானம் அனைவருக்கும் மிக அவசியமாகும் என
சொல்லுங்கள். ஆனால் குழந்தைகள் எழுந்து நிற்பதில்லை (தயாராவதில்லை).
வேலைச் சுமையில் சிக்கிக் கொண்டுள்ளனர். பந்தனத் திலிருந்து
விடுபட்டவர் என்றால் பிறகு சேவையில் ஈடுபட்டு விடவேண்டும்.
அனைவரும் ஸ்ரீமத்படி நடப்பவர் களாக இல்லை. இடையில் மாயை அடி
கொடுத்து விடுகிறது. சில குழந்தைகளுக்கு மிகவும் ஆர்வம்
இருக்கிறது, ஆனால் நாம் சென்று பலருக்கும் நன்மை செய்வோம் என்ற
போதை ஏறுவதில்லை. பாபாவும் இந்த இளமைப் பருவத்தில் ஏமாற்றத்தை
ஏன் அடைய வேண்டும் என புரிந்து கொள்வார். நாங்கள் பாரதத்தை
முன்னேற்ற வேண்டும் என சொல்ல முடியும். உண்மையான சேவை செய்து
மனிதர்களை தேவதைகள் ஆக்க வேண்டும். பாபாவுக்கு ஆச்சரியம்
ஏற்படுகிறது, போதை ஏறுவதில்லை ஆகையால் ரஜோ புத்தி என பாபா
சொல்கிறார். மிக நல்ல வாய்ப்புள்ளது. பலரும் ஞானத்தின் கர்வம்
மிக்கவர்களாக உள்ளனர் ஆனால் நேர் எதிர் சேவை (டிஸ்-சர்வீஸ்)
நிறைய செய் கின்றனர். அவர்களுக்கும் பாபாவுக்கும் மட்டுமே இது
தெரியும். (இது வெல்லத்துக்குத் தெரியும், வெல்லம் உள்ள
பைக்குத் தெரியும்) ராகுவின் கிரகாச்சாரம் பிடித்து விடுகிறது.
பிருஹஸ்பதி தசை (குரு பார்வை) இறங்கி ராகுவின் தசை அமர்ந்து
விடுகிறது. அவ்வப்போது பாருங்கள் நன்றாக நடந்து
கொண்டிருக்கின்றனர், அப்போது பாருங்கள் கிரகாச்சாரம் பிடித்து
விடுகிறது, விழுந்து விடுகின்றனர். குழந்தை களுக்கு நிறைய
தைரியம் இருக்க வேண்டும். சபதம் செய்ய வேண்டும். நாங்கள் இந்த
பாரதத்தை சொர்க்க வாசியாக ஆக்கிவிட்டுத்தான் ஓய்வோம். உங்களின்
தர்மம் நரக வாசிகளை சொர்க்கவாசிகளாக ஆக்கு வதாகும்.
பிரஷ்டாச்சாரிகளை (கீழானவர்களை) சிரேஷ்டாச்சாரிகளாக (உயர்வானவர்களாக)
ஆக்க வேண்டும். பாபா நன்றாக போதையை ஏற்றுகிறார், ஆனால்
குழந்தைகளுக்குள் வரிசைக்கிரமமாகத்தான் போதை ஏறுகிறது. நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. பந்தனத்திலிருந்து விடுபட்டவர் ஆகி பாரதத்திற்கு உண்மையான
சேவை செய்ய வேண்டும். ஆன்மீக சேவை செய்து மனிதர்களை தேவதைகள்
ஆக்க வேண்டும். ஞானத்தின் கர்வத்தில் வரக்கூடாது. ஆன்மீக
போதையில் இருக்க வேண்டும்.
2. நிச்சய புத்தியுள்ளவராகி முதலில் தன் நிலையை உறுதியாக
ஆக்கிக் கொள்ள வேண்டும். தேகத்துடன் சேர்த்து கண்ணால் பார்க்கக்
கூடிய அனைத்தையும் மறந்து ஒரு தந்தையுடன் தொடர்பை ஈடுபடுத்த
வேண்டும்.
வரதானம்:
சொல்வது மற்றும் செய்வது - இவை இரண்டையும் சமமாக்கி, தரம்
வாய்ந்த (குவாலிட்டி) சேவை செய்யக்கூடிய உண்மையான சேவாதாரியாக
ஆகுக
எப்பொழுதும் கவனம் இருக்கட்டும் - முதலில் செய்ய வேண்டும்,
பிறகுதான் சொல்ல வேண்டும். சொல்வது எளிதானது, செய்வதில் உழைப்பு
இருக்கிறது; உழைப்பின் பலன் நல்ல தாக இருக்கும். ஆனால், நீங்கள்
மற்றவர்களுக்குச் சொல்லி, அதைத் தாங்களே செய்யவில்லை என்றால்,
சேவையோடு சேர்த்து அவச்சேவையும் (டிஸ் ஸர்விஸ்)
வெளிப்பட்டுவிடும். அமிர்தத்தின் நடுவே விˆத்தின் ஒரு துளி
விழுந்தாலும் முழு அமிர்தமும் விˆமாக மாறிவிடு வதைப் போல,
நீங்கள் எவ்வளவு தான் சேவை செய்திருந்தாலும், ஒரு சிறிய தவறு
அந்தச் சேவையை அழித்து விடுகிறது. எனவே, முதலில் தன் மீது கவனம்
செலுத்துங்கள், அப்போது தான் உண்மையான சேவாதாரி என்று
கூறப்படுவீர்கள்.
சுலோகன்:
வேறுபாடுகளில் ஒற்றுமையைக் கொண்டு வருவது, கெட்டுப் போனதைச் சரி
செய்வது - இதுவே அனைத்தையும் விடப் பெரிய சிறப்பம்சமாகும்.
அவ்யக்த சமிக்ஞை: அபவித்திரதாவின் விதையைக் கூட அழித்துவிட்டு,
சம்பூரண தூய்மையானவராக (பவித்திரமானவராக) ஆகுங்கள்.
எப்போது அபவித்திரதா அதாவது காமம் என்னும் மகா எதிரி, கனவிலோ
அல்லது சங்கல்பத் திலோ கூடத் தாக்காமல் இருக்கிறதோ, அப்போது
தான் இரட்டை அகிம்சாவாதி என்று கூறப்படுவீர்கள். எப்பொழுதும்
சகோதரன்-சகோதரன் என்ற நினைவு எளிதாகவும், தானாகவே நினைவு
சொரூபமாகவும் இருக்கட்டும். ஒருபோதும் தன்னுடைய முழுமையான
சதோபிரதான ஸ்திதியிலிருந்து கீழே விழுந்து, தனக்குத்தானே
துரோகம் செய்து கொள்ளக்கூடாது. ஆத்மா வின் அசல் குண சொரூபம்
மற்றும் சக்தி சொரூப ஸ்திதியிலிருந்து கீழே வருவது அதாவது அதை
மறந்து போவது கூட பாவக் கணக்கில் தான் சேரும்.