11-09-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! இந்த கடைசிப்
பிறவியில் இல்லறத்தில் இருந்தாலும் தாமரை மலர் போன்று
தூய்மையாக இருங்கள், ஒரே ஒரு தந்தையை நினைவு செய்யுங்கள், இதுவே
குப்தமான முயற்சியாகும்.
கேள்வி:
ஞானம் என்ற மூன்றாவது கண்
கிடைத்ததும் எந்த ஒரு வித்தியாசம் தெளிவாக அனுபவம் ஆகும்?
பதில்:
பக்தியில் பகவானை அடைவதற்காக வீடு
வீடாக (உலகிய யாத்திரை) எவ்வளவு அலைந்தோம்! எவ்வளவு ஏமாற்றங்கள்
அடைந்திருந்தோம்! இப்போது அவர் நமக்கு கிடைத்து விட்டார். 2)
மனிதர்கள் இன்னமும் கூட அலைந்து கொண்டிருக்கின்றனர், வழி தேடிக்
கொண்டி ருக்கின்றனர் என்ற கருணையும் வருகிறது. அலைவதிலிருந்து
பாபா நம்மை விடுவித்து விட்டார். பாபாவுடன் செல்வதற்கான ஏற்பாடு
நாம் செய்து கொண்டிருக்கிறோம்.
பாடல்:
இன்று மனிதர்கள் இருளில்
இருக்கின்றனர் ...........
ஓம் சாந்தி.
ஒருபுறம் பக்தர்கள் நினைவு செய்து கொண்டிருக்கின்றனர். மறுபுறம்
ஆத்மாக்களுக்கு மூன்றாவது கண் கிடைத்து விட்டது, அதாவது
ஆத்மாக்களுக்கு தந்தையின் அறிமுகம் கிடைத்து விட்டது. நாம்
அலைந்து கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் கூறுகின்றனர். இப்போது
நீங்கள் அலைவது கிடையாது. எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது!
குழந்தைகளாகிய உங்களை கூடவே அழைத்துச் செல்ல தந்தை ஏற்பாடு
செய்து கொண்டிருக்கின்றார். மனிதர்கள் குருக்களுக்குப் பின்னால்,
தீர்த்த யாத்திரை, மேளா (கும்பமேளா) போன்றவைகளுக்குச் சென்று
எவ்வளவு அலைந்து கொண்டிருக்கின்றனர்! நீங்கள் அலைவது இப்போது
நின்று விட்டது. அலைவதிலிருந்து விடுவிப்பதற்காகவே தந்தை
வந்திருக்கின்றார் என்பதை குழந்தைகள் அறிவீர்கள். எவ்வாறு
கல்பத்திற்கு முன்பு தந்தை வந்து கற்பித்தாரோ அல்லது இராஜயோகம்
கற்பித்தாரோ அதே போன்று கற்பித்துக் கொண்டி ருக்கின்றார். நாம்
5 விகாரங்கள் மீது வெற்றியடைந்து கொண்டிருக்கிறோம் என்பதை
குழந்தை கள் அறிவீர்கள். மாயாவை வென்றவர்கள் உலகை வென்று
விடுவர் என்று கூறப்படுகிறது. மாயை என்று 5 விகாரங்கள் என்ற
இராவணன் கூறப்படுகிறது. மாயை எதிரியாக இருக்கிறது. மாயை என்று
செல்வம், சொத்து முதலியவற்றிற்குக் கூறப்படுவது கிடையாது. 5
விகாரங்கள் என்ற இராவணன் அல்லது மாயை ....... என்று எழுதும்
போது மனிதர்கள் சிறிதளவாவது புரிந்து கொள்வர். இல்லையெனில்
புரிந்து கொள்ள முடியாது. மாயாவை வென்றால் உலகை வென்றிட
முடியும். இதில் யாதவர்கள் மற்றும் கௌரவர்கள் அல்லது அசுரர்கள்
மற்றும் தேவதைகளுக்கான விசயம் ஏதுமில்லை. ஸ்தூல யுத்தம் நடைபெற
வில்லை. யோக பலத்தினால் மாயா, இராவணனை வென்றால் உலகை வென்று
விடுவீர்கள் என்று கூறப்படு கிறது. ஜெகத் என்றால் உலகம் என்பதை
குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். உலகை வெல்ல வைப்பதற்காக
உலகிற்கு எஜமானராக இருப்பவரே வருகின்றார். அவரே சர்வசக்தி
வானாக இருக்கின்றார். தந்தையை நினைவு செய்தால் தான் பாவங்கள்
அழியும் என்பதை குழந்தைகள் புரிந்து கொண்டீர்கள். நினைவிற்கான
விசயம் தான் முக்கியமானது. நினைவு செய்வதன் மூலம் உங்கள் மூலம்
எந்த விகர்மமும் ஏற்படாது. மேலும் குஷியாகவும் இருப்பீர்கள்.
பதீத பாவன் தந்தை தூய்மை ஆக்குவதற்காக வந்திருக்கின்றார் எனில்
பிறகு நாம் ஏன் விகர்மங்கள் செய்ய வேண்டும்? தன்னை பாதுகாத்துக்
கொள்ள வேண்டும். மனிதர்களுக்கு புத்தி இருக்கிறது அல்லவா! இதில்
சண்டை யிடுவதற்கான விசயம் ஏதுமில்லை. 5 விகாரங் களை
வெல்வதற்காக தந்தையை நினைவு செய்வது மிகவும் எளிதாகும். ஆம்,
இதில் உழைப்பு இருக்கிறது, நேரம் தேவைப்படுகிறது. தீபத்தை
அணைப்பதற்காக மாயை அடிக்கடி புயல்களை கொண்டு வருகிறது. மற்றபடி
இதில் சண்டையிடுவதற்கான விசயம் ஏதுமில்லை. அங்கு இருப்பதோ
தேவதைகளின் இராஜ்யமாகும். எந்த அசுரர்களும் இருக்கமாட்டார்கள்.
நாம் பிராமணர்கள், பிரம்மாவின் வாய்வழி வம்சத்தினர்கள். யார்
பிராமண குலத்தைச் சார்ந்தவர் களோ அவர்கள் தான் தன்னை பிராமணன்
என்று புரிந்து கொள்வார்கள். ஆன்மீகத் தந்தை அமர்ந்து ஆத்மாக்
களாகிய நமக்கு ஞானம் கொடுக்கின்றார். ஞானக் கடலானவர், பதீத
பாவன், சத்கதி கொடுக்கும் வள்ளல் ஒரே ஒருவர் தான். அவர் தான்
சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவர் ஆவார். குழந்தைகளாகிய
உங்களுக்கு மிகுந்த குஷி ஏற்பட வேண்டும். அயல்
நாட்டினர்களுக்கும் தெரிந்து விடும், இவர்கள் அதே சிந்தி
சமூகத்தைச் சார்ந்த பிரம்மா குமார், குமாரிகள். ஸ்ரீமத் மூலம்
சொர்க்கத்தை ஸ்தாபனை செய்து காண்பிக்கிறோம் என்று கூறக்
கூடியவர்கள். ஆத்மா சரீரத்தின் மூலம் கூறுகிறது அல்லவா! ஆத்மா
கேட்கிறது மற்றும் கட்டளைப்படி நடக்கிறது. கல்ப கல்பத்திற்கு
தந்தை வந்து தான் யுக்தி கூறுகின்றார். தந்தை குப்தமாக
இருக்கின்றார், யாருக்கும் தெரிவது கிடையாது. எத்தனையோ
மனிதர்களுக்குப் புரிய வைத்தாலும் கோடியில் சிலர் தான் புரிந்து
கொள்வர். நமக்கு ஆல்ரவுண்ட் பாகம் இருக்கிறது என்பதை இப்போது
குழந்தைகளாகிய நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். நீங்கள் தான்
அதாவது இப்போது தன்னை இந்து என்று கூறிக்கொள்ளும் பாரதவாசிகள்
இராஜ்யத்தை அடைகிறீர்கள், வேறு யாரும் அடைய முடியாது என்பதை
தந்தை புரிய வைத்திருக்கின்றார். மக்கள் தொகை கணக்கெடுப்பிலும்
இந்து என்று எழுதி விடுகின்றனர். நாம் எந்த பெயர் கொடுத்தாலும்
உண்மையில் நாம் ஆதி சநாதன தேவி தேவதா தர்மத்தைச் சார்ந்தவர்கள்.
அவர்களது தர்மம் மற்றும் செயல்கள் கீழானதாக ஆன காரணத்தினால்
தன்னை இந்து என்று கூறி விட்டனர். இந்து என்ற பெயர் ஏன் வந்தது?
என்பதும் யாருக்கும் தெரியாது. உங்களது இந்து தர்மத்தை ஸ்தாபனை
செய்தது யார்? என்பதை கூறுங்கள் என்று கேட்க வேண்டும். இது
இந்துஸ்தானின் பெயராகும். யாராலும் கூற முடியாது. இப்போது
பிராமணன், தேவதா, சத்ரியா தர்மம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது.
பிராமண் தேவி தேவதாய நமஹ என்று கூறுகின்றனர். பிராமணர்கள் சர்வ
உத்தமமானவர்கள், முதல் தரமானவர்கள். உண்மையில் சொர்க்கம் என்று
சத்யுகம் தான் கூறப்படுகிறது. இராமச்சந்திரனின் இராஜ்யத்தையும்
கூட சொர்க்கம் என்று கூறப் படுவது கிடையாது. அரைக் கல்பம் இராம
இராஜ்யம், அரைக் கல்பம் அசுர இராஜ்ய மாகும். இவை அனைத்தையும்
உள்ளத்தில் தாரணை செய்ய வேண்டும். சொர்க்கம் செல்வதற்கு இப்போது
நாம் என்ன செய்ய வேண்டும்? அவசியம் தூய்மையாக இருந்தே ஆக
வேண்டும். தந்தை கூறுகின்றார் - காமம் மிகப் பெரிய எதிரி, இதை
வென்று தூய்மையாக இருக்க வேண்டும். அதனால் தான் தாமரை மலர்
அடையாளமாக காண்பித்திருக்கின்றனர். இல்லறத்தில் இருந்தாலும்
தாமரை மலர் போன்று இருக்க வேண்டும். இந்த உதாரணம் உங்களுக்கானது.
ஹடயோகிகளால் இல்லறத்தில் இருந்து கொண்டே தாமரை மலர் போன்று
இருக்க முடியாது. அவர்கள் தங்களது துறவர மார்க்கத்திற்கான
பாகத்தை நடித்துக் கொண்டி ருக்கின்றனர். இல்லற விவகாரத்தில்
இருக்க முடியாத படியால் வீடு வாசலை விட்டு சென்று விடுகின்றனர்.
நீங்கள் இரண்டு சந்நியாசத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.
இல்லற மார்க்கத்தில் இருப்பவர்களுக்குத் தான் புகழ் இருக்கிறது.
இல்லறத்தில் இருந்து கொண்டு இந்த ஒரே ஒரு பிறவியில் தைரியம்
வைத்து தாமரை மலர் போன்று தூய்மையாக இருங்கள் என்று தந்தை
கூறுகின்றார். தனது இல்லறத்திலேயே இருங்கள். அந்த சந்நியாசிகள்
இல்லறத்தை விட்டு சென்று விடுகின்றனர். பல சந்நியாசிகளுக்கு
உணவு கொடுக்க வேண்டியிருக்கிறது. முதலில் அவர்களும்
சதோபிரதானமாக இருந்தனர், இப்போது தமோபிரதானமாக ஆகி விட்டனர்.
நாடகத்தில் இதுவும் அவர்களது பாகமாகும். மீண்டும் இவ்வாறே
நடைபெறும். இந்த தூய்மையற்ற உலகம் விநாசம் ஆகியே தீரும் என்று
தந்தை புரிய வைக்கின்றார். சிறு சிறு விசயங்களிலேயே
ஒருவரையொருவர் திட்டிக் கொள்கின்றனர். ஒருவேளை இப்படி
நடக்கவில்லையெனில் பெரிய சண்டை ஏற்பட்டு விடும். கல்பத்திற்கு
முன்பும் இவ்வாறு நடை பெற்றது என்பதை குழந்தைகளாகிய நீங்கள்
அறிவீர்கள். வயிற்றிலிருந்து உலக்கை வெளி வந்தது, இது நடந்தது
.... என்று சாஸ்திரங் களில் எழுதப்பட்டிருக்கிறது. பிறகு ஹோலி
அன்று வேடம் போடுகின்றனர். உண்மையில் இது தொலை தூரம் பாயும் அணு
ஆயுதம், இதன் மூலம் விநாசம் ஏற்படுகிறது. எதுவெல்லாம் கடந்து
முடிந்ததோ அது மீண்டும் நடைபெறும் என்பதும் குழந்தைகள்
அறிவீர்கள். ஏற்கெனவே உருவாக்கப்பட்டது நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது ....... இப்போது உங்களது புத்தியில் முழு
ரகசியமும் இருக்கிறது. சொல்வதற்கான விசயம் கிடையாது. யாரையும்
குற்றம் கூற முடியாது. நாடகத்தில் பாகம் இருக்கிறது. நீங்கள்
தந்தையின் செய்தியைக் கொடுத்தால் போதும். இந்த நாடகம்
அநாதியானது, அழிவற்றது. என்ன பதிவாகியிருக்கிறது? என்பதையும்
நீங்கள் புரிந்து கொண்டீர்கள். இது கலியுகத்தின் இறுதி மற்றும்
சத்யுக ஆரம்பத்தின் சங்கமம் மிகவும் பிரசித்தமானது. இது தான்
புருஷோத்தம யுகம் என்று கூறப்படுகிறது. இன்றைய நாட்களில்
குழந்தைகள் புருஷோத்தம யுகம் பற்றி நன்றாகப் புரிய
வைக்கப்படுகின்றனர். இது உத்தம புருஷர்களாக ஆகக் கூடிய
யுகமாகும். அனைவரும் சதோபிரதானமாக, உத்தமானவர்களாக
ஆகிவிடுவீர்கள். இப்போது தமோபிர தானமாக, கீழானவர்களாக
இருக்கிறீர்கள். இந்த வார்த்தைகளையும் நீங்கள் தான் புரிந்து
கொள்கிறீர்கள். கலியுகம் முடிவடைந்து சத்யுகம் வரும், பிறகு
வெற்றியோ வெற்றி ஏற்படும். கதை கூறப் படுகிறது அல்லவா! இது
எளிதிலும் எளிமையானது. பொய்யான கதைகள் பல உள்ளன. இப்போது தந்தை
சுயம் அமர்ந்து புரிய வைக் கின்றார், பக்தி மார்க்கத்தில்
நீங்கள் எனது மகிமை பாடி வந்தீர்கள். இப்போது நடைமுறையில்
சுகதாமம் மற்றும் சாந்தி தாமத்திற்கான வழி உங்களுக்கு
கூறுகிறேன். சத்கதி என்றால் சுகமான நிலை, துர்கதி என்றால்
துக்கமான நிலை என்று கூறலாம். கலியுகத்தில் துக்கமும்,
சத்யுகத்தில் சுகமும் இருக்கிறது. புரிய வைக்கும் போது அனைவரும்
புரிந்து கொள்வர். நாளடைவில் புரிந்து கொள்வார்கள். நேரம் மிகக்
குறைவாக இருக்கிறது, இலட்சியம் மிக உயர்வாக இருக்கிறது.
கல்லூரிக்குச் சென்று நீங்கள் புரிய வைக்கும் போது இந்த ஞானத்தை
நல்ல முறையில் புரிந்து கொள்வார்கள். இந்த நாடகச் சக்கரம்
சுற்றிக் கொண்டே இருக்கிறது, வேறு எந்த உலகமும் கிடையாது. மேலே
வேறு உலகம் இருப்பதாக நினைக்கின்றனர், அதனால் தான் நட்சத்திரம்
போன்றவைகளை தேடி செல்கின்றனர். உண்மையில் அங்கு எதுவும்
கிடையாது. கடவுள் ஒருவர், படைப்பும் ஒன்று. மனித சிருஷ்டி இது
தான். மனிதர்கள் மனிதர்கள் தான். தேகத்திற்குத் தான் பல
தர்மங்கள் உள்ளன. எவ்வளவு மதங்கள் உள்ளன! சத்யுகத்தில் ஒரே ஒரு
தர்மம் இருந்தது, அது தான் சுகதாமம் என்று கூறப்படுகிறது.
கலியுகம் துக்கதாமம் ஆகும். சுகம் மற்றும் துக்கத்திற்கான
விளையாட்டு அல்லவா! தந்தை ஒரு போதும் குழந்தைகளுக்குத் துக்கம்
கொடுக்கமாட்டார். தந்தை வந்து துக்கத்திலிருந்து
விடுவிக்கின்றார். துக்கத்தை போக்குபவர் அவர் ஒருபோதும்
யாருக்கும் துக்கம் கொடுக்கமாட்டார். இப்போது இராவண
இராஜ்யமாகும். மனிதர்களிடத்தில் 5 விகாரங்கள்
பிரவேசமாகியிருக்கிறது. அதனால் தான் இராவண இராஜ்யம் என்று
கூறப்படு கிறது. உலகின் சரித்திர, பூகோளத்தின் ரகசியம் இப்போது
குழந்தைகளாகிய உங்களது புத்தியில் வந்து விட்டது. தினமும்
கேட்கிறீர்கள், இது மிகவும் உயர்ந்த படிப்பாகும். ஆக இன்னும்
சிறது காலம் தான் இருக் கிறது என்று தந்தை புரிய வைக் கின்றார்.
இதில் தந்தையிடமிருந்து முழு ஆஸ்தி அடைய வேண்டும். ஈஸ்வரன்
இந்த வழியைத் தான் புரிய வைக்கின்றார் என்பதை சிறிது சிறிதாக
மனிதர்கள் புரிந்து கொள்வார்கள். உலகில் வேறு யாரும் ஈஸ்வரனை
அடையும் வழி கூறுவது கிடையாது. ஈஸ்வரனை அடையும் வழியை ஈஸ்வரனே
கூறுகின்றார். அவரது குழந்தைகளாகிய நீங்கள் செய்தியை கொடுக்கக்
கூடியவர்களாக இருக்கிறீர்கள். கல்பத்திற்கு முன்பும் யார்
நிமித்தமாக ஆகியிருந்தார்களோ அவர்களே இப்போதும் ஆவார்கள்
மற்றும் ஆக்கிக் கொண்டே செல்வார்கள். குழந்தைகள் ஞானச் சிந்தனை
செய்ய வேண்டும். பாபா, இந்த மாதிரியான சித்திரங்கள் இருந்தால்
மனிதர்கள் நன்றாகப் புரிந்து கொள்வர் என்று கருத்துகளை கொடுக்க
வேண்டும். குறைந்த சித்திரங்கள் என்று பாபா ஏன் கூறு கின்றார்
எனில் பல சென்டர்கள் மிகவும் சிறியதாக இருக்கின்றன. 5-7
சித்திரங்கள் வைப்பதும் கடினமாக இருக்கிறது.
வீட்டுக்கு வீடு கீதா பாடசாலை இருக்க வேண்டும் என்று பாபா
கூறுகின்றார். ஒரே ஒரு அறை யிலேயே அனைத்தையும் செய்பவர்கள் பலர்
இருக்கின்றனர். முக்கிய சித்திரங்கள் வைத் திருந்தால் மனிதர்கள்
புரிந்து கொள்ள முடியும். பகவான் என்று யார் கூறப்படுகின்றார்?
அவரிட மிருந்து என்ன கிடைக்கிறது? பகவான் பாபா என்று
கூறுப்படுகின்றார். பபுல்நாத் பாபா என்று கூறுவது கிடையாது.
ருத்ர பாபா என்று கூறுவது கிடையாது. சிவபாபா தான் பிரபலமாக
இருக்கிறது. இது அதே கல்பத்திற்கு முந்தைய ஞான யக்ஞமாகும் என்று
பாபா கூறுகின்றார். எல்லையற்ற தந்தையாகிய சிவன் யக்ஞத்தை
உருவாக்கியிருக்கின்றார். பிரம்மாவின் மூலம் பிராமணர்களை
படைத்திருக்கின்றார். பிரம்மா உடலில் பிரவேசமாகி ஸ்தாபனை
செய்திருக் கின்றார். இது இராஜ யோகத்திற்கான ஞானமாகும். மேலும்
யக்ஞ மாகவும் இருக்கிறது, இதில் முழு பழைய உலகமும் அர்ப்பணம்
ஆகிவிடும். அவர் ஒருவரே தந்தையாகவும் இருக்கின்றார்,
ஆசிரியராகவும் இருக்கின்றார், குருவாகவும் இருக்கின்றார், ஞானக்
கடலாகவும் இருக்கின்றார். இவ்வாறு வேறு யாரும் கிடையாது.
இன்றைய நாட்களில் யக்ஞத்தை படைக்கின்றனர் எனில் நாலாபுறமும்
சாஸ்திரங்களை வைக்கின்றனர். அர்ப் பணிப்பதற்கென்று ஒரு யாக
குண்டத்தை உருவாக்குகின்றனர். உண்மையில் இது ஞான யக்ஞமாகும்,
இதையே அவர்கள் காப்பி செய்திருக்கின்றனர். இங்கு ஸ்தூல
பொருட்கள் போன்ற எதுவும் கிடையாது. இப்போது குழந்தைகளாகிய
உங்களுக்கு எல்லையற்ற தந்தை கிடைத்திருக்கின்றார், எல்லையற்ற
ஞானம் கிடைத்திருக்கின்றது, வேறு யாருக்கும் இது தெரியாது.
எல்லையற்ற அர்ப்பணம் ஏற்பட வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
பழைய உலகம் அழிந்து விடும். இராம இராஜ்யம் ஸ்தாபனை ஆகிறது என்ற
குஷி ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது, இது மிகவும் நல்லது. ஆனால்
ஸ்தாபனை செய்வது தனக்காகத் தான் செய்வீர்கள் அல்லவா! உழைப்புகள்
அனைத்தும் தனக்காகவே செய்வீர் கள். இந்த மகாபாரத யுத்தமும்
இந்த யக்ஞத்தின் மூலம் தான் ஆரம்பமானது என்பதை நீங்கள்
அறிவீர்கள். எல்லைக்குட்பட்ட விசயம் எங்கிருக்கிறது, எல்லையற்ற
விசயம் எங்கிருக்கிறது! நீங்கள் தனக்காகவே முயற்சி
செய்கிறீர்கள். எதுவரை தந்தையை அறியவில்லையோ அதுவரை ஆஸ்தி அடைய
முடியாது. தந்தை தான் வந்து ஆத்மாக்களுக்கு அறிவுரைகள்
கொடுக்கின்றார். உங்களுடையது அனைத்தும் குப்தமானது. ஆத்மா இம்சை
தரக்கூடியதாக ஆகிவிட்டது, அது இப்போது அகிம்சை குண முடையதாக ஆக
வேண்டும். யார் மீதும் கோபப்படக் கூடாது. 5 விகாரங்களையும்
தானம் கொடுத்து விட்டால் தான் கிரஹச்சாரம் நீங்கும்.
விகாரத்தின் மூலம் தான் கருப்பாக ஆகிவிட்டீர்கள். இப்போது
மீண்டும் சர்வ குணங்கள் நிறைந்தவர்களாகவும், 16 கலைகளில் முழுமை
யானவர்களாகவும் எப்படி ஆவது? என்பதை தந்தை அமர்ந்து புரிய
வைக்கின்றார். இந்த லெட்சுமி நாராயணனை இவ்வாறு ஆக்கியது யார்?
எந்த குருவிட மாவது சென்றார்களா? இவர்கள் உலகிற்கு எஜமானர்
களாக இருந்தனர். கண்டிப்பாக முந்தைய பிறவியில் நல்ல செயல்களைச்
செய்திருக்க வேண்டும், அதனால் தான் நல்ல பிறப்பு
கிடைத்திருக்கிறது. நல்ல செயல்கள் மூலம் நல்ல பிறப்பு
கிடைக்கும். பிரம்மா மற்றும் விஷ்ணுவிற்கு அவசியம் தொடர்பு
இருக்கிறது. ஒரு விநாடியில் பிரம்மாவிலிருந்து விஷ்ணுவாக
ஆகின்றார். மனிதனிலிருந்து தேவதையாக ஆகின்றார், விநாடியில்
ஜீவன் முக்தி என்று இதற்குத் தான் கூறப்படுகிறது. தந்தை
யினுடையவராக ஆகிறீர்கள், ஜீவன் முக்திக்கான ஆஸ்தி அடைந்து
விட்டீர்கள். இராஜா, பிரஜைகள் அனைவரும் ஜீவன்முக்தி
அடைந்திருக்கின்றனர். யாரெல்லாம் இன்னும் வரக்கூடியவர்கள்
உள்ளனரோ அவர்களும், ஜீவன் முக்தி அடைய வேண்டும். தந்தை
அனைவருக்கும் புரிய வைக்கின்றார். பிறகு உயர்ந்த பதவி அடைவதற்கு
முயற்சி செய்ய வேண்டும். அனைத்திற்கும் ஆதாரம் முயற்சியில்
இருக்கிறது. ஏன் நாம் தீவிர முயற்சி செய்து செய்து உயர்ந்த பதவி
அடையக் கூடாது? தந்தையை அதிகம் நினைவு செய்வதன் மூலம் தந்தையின்
மனதில் அதாவது சிம்மாசனத்தில் அமர்ந்து விடுவீர்கள். தந்தை
எந்த கடின உழைப்பும் கொடுப்பது கிடையாது. அபலைகளிடத்தில் வேறு
என்ன உழைப்பு செய்ய வைப்பார்? தந்தையின் நினைவும் குப்தமாக
இருக்கிறது. ஞானம் தெளிவாக வெளிப் பட்டுவிடுகிறது. இவரது
சொற்பொழிவு மிகவும் நன்றாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.
ஆனால் எந்த அளவு யோகாவில் இருக்கிறோம்? தந்தையை நினைவு
செய்கிறீர்களா? எவ்வளவு நேரம் நினைவு செய்கிறீர்கள்? நினைவின்
மூலம் தான் பல பிறவிகளுக்கான விகர்மங்கள் அழிந்து விடும். இந்த
ஆன்மீக ஞானத்தை கல்ப கல்ப மாக ஆன்மீக தந்தையாகிய சிவன் வந்து
தான் கொடுக்கின்றார். வேறு யாரும் ஞானம் கொடுக்க முடியாது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) அழிவற்ற நாடகத்தின் இரகசியத்தை புத்தியில் வைத்து யாரையும்
குற்றவாளியாக ஆக்கக்கூடாது. உத்தம புருஷராக (ஆத்மாவாக)
ஆவதற்கான முயற்சி செய்ய வேண்டும். இந்த குறுகிய காலத்தில்
தந்தையிடமிருந்து முழு ஆஸ்தி அடைய வேண்டும்.
2) இரட்டை அகிம்சாதாரி ஆவதற்காக ஒருபோதும் யாரிடத்திலும்
கோபப்படக் கூடாது. விகாரங்களை தானம் கொடுத்து விட்டு சர்வ
குணங்கள் நிறைந்தவர்களாக ஆவதற்கான முயற்சி செய்ய வேண்டும்.
வரதானம்:
விநாடியில் அனைத்து பலவீனங்களிலிருந்தும் முக்தியடைந்து மரியாதா
புருசார்த்தம் ஆகக் கூடிய சதா அன்பானவர் ஆகுக.
அன்பானவர் அன்பில் வந்து தனது அனைத்தையும் அர்பணித்து விடுவார்.
அன்பானவர் எதையும் அர்பணிப்பதற்கு யோசிக்க வேண்டியிருக்காது.
ஆக என்ன நியமங்களை கேட்கிறீர் களோ அதை நடைமுறையில் கொண்டு
வருவதற்கு அதாவது அனைத்து பலவீனங்களிலி ருந்தும் முக்தி
அடைவதற்கு எளிய யுக்தி - சதா ஒரு தந்தைக்கு அன்பானவராக ஆகுங்கள்.
யாருக்கு அன்பானவர்களாக இருக்கிறீர்களோ, நிரந்தரமாக அவரது
சகவாசத்தில் இருந்தீர்கள் எனில் ஆன்மிகத்தின் வர்ணம் பூசப்பட்டு
விடும். மேலும் ஒரு விநாடியில் மரியாதா புருசோத்தமர்களாக
ஆகிவிடுவீர்கள். ஏனெனில் அன்பானவர்களுக்கு தந்தையின் உதவி
தானாகவே கிடைத்து விடும்.
சுலோகன்:
நிச்சயத்தின் அஸ்திவாரம் உறுதியாக இருந்தால்
சம்பூர்ண நிலை அடைவது உறுதியாகும்.
அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது உங்களின் வள்ளல் சொரூபத்தை
வெளிப்படுத்துங்கள்.
நிகழ்காலத்தில் அனைத்து ஆத்மாக்களும் யாசிப்பவர் ரூபத்தில்
பகவானிடம் எதையாவது கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அனைவரின்
வாயில் அல்லது மனதில் இது கொடுங்கள் என்று இருக்கிறது. சிலர்
செல்வத்தை யாசிக்கின்றனர், சிலர் உதவி யாசிக்கின்றனர், சிலர்
சம்பந்தம், சிலர் சிறிது நேரத்திற்கு சுகம்-சாந்தி, சிலர் ஓய்வு
அல்லது தூக்கம், சிலர் சிஷ்யர்கள் என்று யாசிக்கின்றனர்.
நீங்கள் வள்ளலின் குழந்தைகள் மாஸ்டர் வள்ளலாகி தனது சுப
பாவனையின் விருத்தி மூலம் யாசிக்கும் ஆத்மாக்களின் பசியை
போக்குங்கள்.