11.10.26    காலை முரளி            ஓம் சாந்தி 18.01.2012      பாப்தாதா,   மதுபன்


சேவையின் கூடவே ஒருவருக்கொருவர் உதவியாளராகி வாயுமண்டலத்தில் தீவிர முயற்சிக்கான அலை பரப்புங்கள், மனதை வென்றவர்களாகி ஆத்மாக்களுக்கு மனசேவை செய்யுங்கள்

இன்று விசேஷமாக அன்பிற்கான நாளாகும். நாலாப்புறங்களிலும் உள்ள குழந்தைகள் அன்பு சொரூபமாகி சந்திப்பு செய்து கொண்டிருக்கின்றனர். நீங்கள் அனைவரும் கூட அன்பு சொரூபத் தில் மூழ்கியிருக்கிறீர்கள். இன்று அமிர்தவேளையிலிருந்து நாலாப்புறங்களிலும் உள்ள குழந்தை கள் அமிர்தவேளைக்கும் முன் அன்பான ரூபத்தில் மனதில் அன்பு என்ற முத்துமாலை எடுத்துக் கொண்டு வந்து விட்டனர். அநேக விதமான விதவிதமான மன உணர்வுகளை தந்தையிடம் வர்ணனை செய்து கொண்டிருந்தனர். குழந்தைகளின் அன்பு எவ்வளவு பிரிய மானது என்பதை நீங்கள் அறிவீர்கள். விதவிதமான மொழிகள், விதவிதமான உணர்வுகளுடன் பாப்தாதாவின் முன் தனது மனதின் விசயங்களை பேசிக் கொண்டிருந்தனர். மேலும் கண்களின் மூலம், வார்த்தைகளின் மூலம் தனது உணர்வுகளை தெளிவுபடுத்திக் கொண்டிருந்தனர். பாப்தாதா நாலாப்புறங்களிலும் உள்ள குழந்தை களின் அன்பான உணர்வுகளைப் பார்த்து அனைவரின் அன்பில் மூழ்கி விட்டார். மேலும் மனதில் ஆஹா குழந்தைகளே! ஆஹா என்ற வார்த்தை வெளிப்படுகிறது. குழந்தைகளின் வாயில் ஆஹா பாபா ஆஹா! என்ற பாடல் கேட்டுக் கொண்டி ருந்தது. பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் பார்த்து குழந்தைகளின் அன்பில் மூழ்கி யிருந்தார் மற்றும் குழந்தைகளும் தந்தையின் அன்பில் மூழ்கியிருந்தனர்.

இன்றைய நாள் தந்தை குழந்தைகளை குழந்தை மற்றும் எஜமான் ஆக்கும் திருஷ்டியுடன் பார்த்துக் கொண்டிருந்தார். இன்றைய நாள் குழந்தைகளின் இராஜ்ய திலகத்திற்கான நாளாகும். இன்றைய நாள் பாப்தாதா சுயம் பரிஸ்தா ரூபத்தில் இருந்து குழந்தைகளை உலக சேவைக்கு நிமித்தம் ஆக்கினார். சுயம் முதுகெலும்பாகி குழந்தைகளை உலக மேடையில் வெளிப்படுத் தினார். பாப்தாதா இப்பொழுது குழந்தைகளின் சேவையைப் பார்த்து, என்ன பொறுப்பு கொடுத்திருந்தேனோ அந்த ரிசல்ட் பார்த்து குழந்தைகள் மீது மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றார். மேலும் மனதில் வாழ்த்துக்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.

இப்பொழுதும் கூட தந்தை கொடுத்த உலக சேவாதாரிக்கான வரதானத்தின் படி ஒவ்வொரு குழந்தையும் மிக அன்பாக மற்றும் உள்ளப்பூர்வமாக சேவை செய்ததை, செய்து கொண்டி ருப்பதை பாப்தாதா பார்த்தார். பாப்தாதா ரிசல்ட்டையும் பார்த்தார். ஒவ்வொரு குழந்தையின் மனதில் என்னுடைய பாபா என்ற ஈடுபாடு இருக்கிறது. தந்தையின் மனதில் ஆஹா என்னுடைய குழந்தைகளே என்ற அன்பு இருக்கிறது. தற்சமயம் சிறிய, பெரிய சேவை நிலையத்தில் வசிக்கும் குழந்தைகளிடம் ஆர்வம் இருக்கிறது - இப்பொழுது கூடிய விரைவில் தந்தையை வெளிப்படுத்தியே ஆக வேண்டும். இந்த ஆர்வம், இந்த உற்சாகம் பாப்தாதா சுற்றி வந்து பார்த்தார். சிறிய, பெரிய சேவை நிலையத்தின் குழந்தைகளிடம் சேவைக்கான ஆர்வம் மிக மிக மிக நன்றாக இருக்கிறது, வரும் நாட்களிலும் நன்றாகவே இருக்கும். இன்று அன்பிற்கான நாள், நாலாப்புறங்களிலும் உள்நாட்டு, அயல்நாட்டுக் குழந்தைகள் அனைவருக்கும் தனது திருஷ்டியின் மூலம், மனதார அன்பு மற்றும் சேவையின் கைமாறாக மனதார அன்பு பல கோடி மடங்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.

இப்பொழுது நேரத்தின் அனுசாரம் தந்தையை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆர்வம், சிறிது சிறிதாக ஆத்மாக்களின் மனதில் வர ஆரம்பித்து விட்டது. பிரம்மா குமாரிகள் எதையோ அடைந்திருக்கிறார்கள், மாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்று நினைக்கின்றனர். என்ன செய்கின்றனர் தெரியவில்லை என்று முன்பு நினைத்தனர், இப்பொழுது நல்ல காரியம் செய்து கொண்டிருக்கின்றனர் என்று கூறும் அளவிற்கு வந்திருக்கின்றனர். நாம் என்ன செய்ய முடியாதோ, அதை இவர்கள் குழுவாக சேர்ந்து செய்து வெற்றி அடைந்திருக்கின்றனர், ஆகையால் இன்று பாப்தாதா எதிரில் அமர்ந்திருக்கும் குழந்தைகள் மற்றும் நாலாப்புறங் களிலும் கேட்டுக் கொண்டிருக்கும், பார்த்துக் கொண்டிருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் மனதார அன்பு, மனதார பாசம் விசேஷமாக கொடுத்துக் கொண்டிருக்கின்றார். இப்பொழுது அடுத்து என்ன செய்ய வேண்டும்? சேவைக்கான வாழ்த்துக்கள் பாப்தாதா கொடுத்து விட்டார். இப்பொழுது பாப்தாதா இதைத் தான் விரும்புகின்றார் - ஒவ்வொரு குழந்தையும் இப்பொழுது இந்த ஆர்வம்-உற்சாகம், திட நிச்சயம், தீவிர முயற்சி செய்ய வேண்டும் - இப்பொழுது பாப்சமான் பரிஸ்தா ஆகியே தீர வேண்டும். ஏனெனில் இப்பொழுது அனைவரும் தந்தையுடன் திரும்பும் பயணம் செய்ய வேண்டும். சமமாக பரிஸ்தா ஆகியே தீர வேண்டும். ஏனெனில் கூடவே செல்வோம், கூடவே இராஜ்யம் செய்வோம் என்று அனைவரும் உறுதி செய்திருக் கிறீர்கள். எனவே பிரம்மா பாபா பரிஸ்தா ஆகிவிட்டார், பிறகு கூடவே எப்படி செல்வீர்கள்? பிரம்மா பாபா வாழ்க்கை வாழ்ந்து கொண்டே பரிஸ்தா சொரூபம் காண்பித்தார். எவ்வளவு பொறுப்புகள் இருந்தது! அனைவரையும் யோகிகளாக ஆக்கியே தீர வேண்டும். ஆனால் இவ்வளவு பொறுப்புகள் இருந்தும் கூட விடுபட்டு மற்றும் அன்பாக இருந்ததை நீங்கள் அனைவரும் பார்த்தீர்கள். சதா கவலையற்ற சக்கரவர்த்தியாக இருந்தார், எந்த கவலையும் இல்லை, கவலையற்ற சக்கரவர்த்தி. அதே போன்று குழந்தைகளாகிய நீங்களும் கூட இப்பொழுது தந்தைக்குச் சமம் கவலையற்ற சக்கரவர்த்தி பரிஸ்தாவாக ஆகியே தீர வேண்டும் என்ற திட சங்கல்பம் இருக்க வேண்டும். அல்லது ஆகி விடுவோம் என்று யோசிக்கிறீர்களா?

பாப்தாதா பார்த்தார்கள் - காலத்தின் அனுசாரமாக சேவையில் எவ்வளவு ஆர்வம்-உற்சாகம் நடைமுறையில் இருக்கிறதோ, அவ்வளவு தீவிர முயற்சியாளர் ஆக வேண்டும் மற்றும் ஆக்க வேண்டும், சம்பன்னம் ஆக வேண்டும் மற்றும் ஆக்க வேண்டும். இந்த கருத்தின் மீது இப்பொழுது சுயமும் ஆர்வம்-உற்சாகத்துடன் இருக்க வேண்டும் மற்றும் வாயுமண்டலத்திலும் ஆர்வம்-உற்சாகத்தை நிரப்ப வேண்டும். ஒருவருக்கொருவர் உதவியாளராகி இப்பொழுது வாயுமண்டலத்தில் தீவிர முயற்சிக்கான அலை பரப்புங்கள். ஒருவருக்கொருவர் சேவையின் ஆர்வத்தை வாயுமண்டலத்தில் பரப்பியது போன்று இந்த அலையை வாயுமண்டலத்தில் பரப்ப வேண்டும் என்று பாப்தாதா குழந்தைகளிடம் இந்த சுப ஆசை வைக்கின்றார். பாப்தாதா குஷியடைகின்றார். ஆனால் இப்பொழுதும் முயற்சியாளராக இருக்கிறீர்கள், தீவிர முயற்சி செய்ய வேண்டும். இப்பொழுது ஒவ்வொரு குழந்தையிடத்திலும் பாப்தாதா இந்த விருப்பம் வைத்திருக்கின்றார் - ஒவ்வொரு குழந்தையும் தந்தையின் ஆசை நட்சத்திரங்களாக ஆக வேண்டும். அப்படிப்பட்ட நட்சத்திரங்களாக இருக்கிறீர்களா? நான் தந்தையின் ஆசை நட்சத்திர மாகி இந்த ஆர்வம்-உற்சாகத்தின் வாயுமண்டலத்தை பரப்புவேன் என்று நினைப்பவர்கள் கை உயர்த்துங்கள். நல்லது. மிக நன்றாக கை உயர்த்துகிறீர்கள். கைகளைப் பார்த்து பாப்தாதா குஷியடைந்து விடு கின்றார். மெஜாரிட்டி கை உயர்த்தினர், பின்னால் அமர்ந்திருப்பவர்களது கை தென்படவில்லை, முன்னால் அமர்ந்திருப்பவர்களது கை தென்பட்டது. இப்பொழுது பின்னால் அமர்ந்திருப்பவர்களும் உயர்த்திக் கொண்டிருக் கின்றனர், வாழ்த்துக்கள், வாழ்த்துக் கள், நல்லது.

மனதில் எந்த ஒரு விசயத்திற்கான ஆர்வம்-உற்சாகம் வந்து விட்டால் அந்த காரியம் சாகார ரூபத்தில் நன்றாகவே நடந்து விடுவதை பாப்தாதா பார்த்தார். ஆகையால் பாப்தாதா இந்த முறை அன்பான நாளன்று வீட்டுப் பாடம் கொடுக்கின்றார் - ஒவ்வொரு குழந்தையும் மனதின் காரணத்தினால் சங்கல்பம் மற்றும் நேரம் வீணாகின்றன. எப்போதாவது வீண் எண்ணங்கள் வந்து விடுகிறது எனில் அதில் எவ்வளவு நேரம் வீண் ஆகிறது என்ற அனுபவம் அனை வருக்கும் இருக்கும். எவ்வளவு சக்தி வீணாகி விடுகிறது. எனவே பாப்தாதா இந்த வீட்டுப் பாடம் கொடுக்க விரும்புகின்றார் - இந்த இரண்டு மாதங்கள் ஒவ்வொரு குழந்தையும் மனதின் வீண் எண்ணங்கள் மற்றும் நேரம் வீணாக்குதல் என்பதில் தனக்காக பட்ஜெட்டுக்கான விதி உருவாக்குங்கள். இந்த இரண்டு மாதங்களில் ஒவ்வொருவரும் தனது சார்ட் வைக்க வேண்டும் - நேரம் விணாக்குதல், வீண் எண்ணங்களின் மீது எவ்வளவு கட்டுப்படுத்தினேன்? ஏனெனில் இப்பொழுது காலத்தின் அனுசாரம் நீங்கள் அனைவரும் மன சக்தியின் மூலம் ஆத்மாக்களுக்கு மன சேவை செய்யக் கூடியதாக இருக்கும். இதற்கு சதா மனதின் மீது கவனம் செலுத்துவது அவசியமாகும். மனதை வென்றால் உலகை வெல்ல முடியும் என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே மன்மனாபவ என்ற வாயுமண்டலத்தில் மனதின் வீண் எண்ணங்களை அழித்து விட வேண்டும். செய்ய முடியுமா? செய்வீர்களா? கை உயர்த்துங்கள். பாப்தாதா பரிசு கொடுப்பார். தனது ரிசல்ட் தானே பார்க்க வேண்டும். மனம் குஷியாக இருந்தால் மனம் குஷியை பகிரும். இந்த முயற்சியில் அனைவரும் முதல் நம்பர் வருவதற்கான கவனம் வையுங்கள். சங்கல்பம், நேரம் இரண்டிலும் வீணானவை அழிந்து விட வேண்டும். மேலும் சக்திசாலியான சங்கல்பம், சக்திசாலியான நேரம் - வரக் கூடிய காலகட்டத்தில் வாயுமண்டலம் பரப்பும்.

பாப்தாதா குழந்தைகளின் ஒரு விசயத்தைப் பார்த்து குஷியடைகின்றார். எந்த விசயத்தில்? ஒவ்வொரு குழந்தையும் சேவை செய்தீர்கள், ஆனால் பாப்தாதாவின் சமிக்ஞை டபுள் இராஜா ஆகுங்கள். அறிவீர்கள் தானே! ஒன்று சுய இராஜ்ய அதிகாரி, மற்றொன்று எதிர்கால இராஜ்ய அதிகாரி. தந்தைக்கு போதை இருக்கிறது - தனது ஒவ்வொரு குழந்தையும் சுய இராஜ்ய அதிகாரியாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட தந்தை யாரும் இருக்க முடியாது. நீங்கள் அனைவரும் சுய இராஜ்ய அதிகாரிகள் அல்லவா! சுயத்தின் மீது ஆத்மா இராஜ்யம் செய்கிறது. கர்மேந்திரியங்களுக்கு வசமாகாமல் சுய இராஜ்ய அதிகாரி. ஆக தந்தை விரும்புவது இது தான் ஒவ்வொரு குழந்தையும் சுய இராஜ்ய அதிகாரிகளாக சதா இருக்க வேண்டும், அவ்வப்பொழுது அல்ல. ஆக முடியுமா? கொடுத்திருக்கும் இந்த இரண்டு மாதங்களில் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள் - சுய இராஜ்ய அதிகாரியாக இருந்தேனா? அல்லது கர்மேந்திரியங்களுக்கு வசமாகி விட்டேனா? இப்பொழுது கர்மாதீத நிலை அடைய வேண்டும். நேரம் நெருக்கத்தில் வந்து கொண்டிருக்கிறது. எனவே என்ன செய்ய வேண்டும்? நடந்தாலும், காரியங்கள் செய்தாலும் சுய இராஜ்ய அதிகாரிகளாக ஆகியே தீர வேண்டும். இந்த சன்ஸ்காரம் பிராமணக் குழந்தைகளாகிய உங்களுடையது ஆகும். டபுள் இராஜா, சுய இராஜ்ய அதிகாரி, பிறகு எதிர்காலத்தில் விஷ்வ இராஜ்ய அதிகாரி. பாப்தாதா சுற்றி வந்து குழந்தைகளின் ரிசல்ட் குறிப்பெடுக்கும் பொழுது சதா சுய இராஜ்ய அதிகாரி என்பதில் இப்பொழுது கவனம் செலுத்த வேண்டும். இரண்டு காரியங்கள் பாப்தாதா கொடுத் திருக்கின்றார், ஒன்று இந்த இரண்டு மாதங்களில் சுய இராஜ்ய அதிகாரியாக எவ்வளவு இருந்தேன்? என்று தனது ரிசல்ட் பார்க்க வேண்டும். கூடவே மனதை கட்டுப்படுத்தும் சக்தி, ஆளுமை சக்தியின் மூலம் வீணானவை களை அழிக்க வேண்டும். இதில் யார் நம்பர் எடுக்கிறார்களோ அவர்களுக்கு பாப்தாதா பரிசு கொடுப்பார். பிடித்திருக்கிறதா? செய்ய வேண்டும் அல்லவா! செய்வீர்களா? செய்வீர்கள் தானே! தலை அசையுங்கள். நல்லது.

அனைவரின் அன்பையும் பாப்தாதா ஏற்றுக் கொண்டார். அமிர்த வேளையிலும் கூட பல குழந்தைகளின் ஜொலிப்பு இருந்தது. அட்வான்ஸ் பார்ட்டியும் வதனத்தில் இன்று தங்களது மனதின் அன்பு கொடுப்பதற்கு, அடைவதற்கு வந்திருந்தனர். இப்பொழுது அவர்கள் உங்களிடம் கேட்கின்றனர் - எங்களது இந்த பாகம் எவ்வளவு காலம்? என்ன பதில் கொடுப்பீர்கள்? முதல் வரிசையில் உள்ளவர்கள் கூறுங்கள் என்ன பதில் கூறுவீர்கள்? என்ன கூறுவீர்கள்? (நான் தயார் என்று தாதி ஜானகி கூறினார்). நீ தனியாக செல்வாயா? (அனைவரும் செல்வோம்) உங்களுக்கு அன்பு இருக்கிறது அல்லவா! இவ்வாறு விட்டு விட்டு இராஜ்யம் எப்படி செய்வாய்? (அட்வான்ஸ் பார்ட்டியினர் நம்மை விட்டு விட்டு ஏன் சென்றனர்?) அவர்களது பாகம் இருந்தது அல்லவா! அவர்கள் சென்றே ஆக வேண்டியிருந்தது. இப்பொழுது நீங்கள் இந்த முயற்சி செய்யுங்கள் - விரைவாக இந்த குழுவை தயார் செய்யுங்கள். இரண்டு மாதங்களுக்கு என்ன வேலை கொடுத் தேனோ, இந்த வேலையை நீங்கள் அனைவருக்கும் செய்ய வைத்து விட்டால், ரிசல்ட் வெளிப் படும், விரைவாக நடந்து விடும். (பாபாவின் அன்பில் செய்து முடித்து விடுவோம்) அன்பு இருக்கவே செய்கிறது. அன்பு என்ற விசயத்தில் அனைவரும் தேர்ச்சி பெற்று விட்டீர்கள். பாப்தாதா பார்க்கின்றார் - அனைவரும் அன்பு வைத்திருக் கின்றனர், ஆனால் அன்பின் கூடவே சக்தியும் தேவை. இதற்கு அமிர்தவேளையை சக்திசாலியாக ஆக்குங்கள். அமர்கிறீர்கள், அமர்ந்ததற்காக பாப்தாதா வாழ்த்துக்கள் கொடுக்கின்றார். ஆனால் அமர்வதால் சூழ்நிலை சக்திசாலியாக ஆக வேண்டும், சிலர் ஒருவிதமாக, சிலர் வேறு ஒரு விதமாக அமர்கிறீர்கள். ஒருவேளை நீங்கள் அதை போட்டோ எடுத்தீர்கள் எனில் உங்களுக்கே தோன்றும் இன்னும் நன்றாக செய்திருக்க வேண்டும். பாப்தாதா கூறிய ஜுவாலா சொரூப யோகா மீது இப்பொழுது இன்னும் ஆழமான கவனம் கொடுக்க வேண்டும். அனைவரும் முயற்சி செய்கிறீர்கள், ஆனால் முயற்சிக்கு முன் தீவிரம் என்ற வார்த்தை சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும் இந்த இரண்டு மாதங்கள் கொடுத்திருக்கின்றார். இதில் எவ்வளவு கவனம் கொடுப்பீர்களோ, கவனத்தின் கூடவே பாப்தாதாவும் அதிகப்படியான உதவி உங்களுக்கு செய்வார். மனதிற்கு எஜமான், கை, கால்களை நடத்துவது போன்று மனதை நடத்துங்கள். எப்படி விரும்புகிறீர்களோ அவ்வாறு செய்கிறீர்கள் அல்லவா! இங்கு வைக்காமல் இந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் வைக்க முடியுமல்லவா! அதே போன்று மனதையும் கட்டுப்படுத்துங்கள். என்ன விரும்புகிறீர்களோ, மனம் அந்த சங்கல்பம் செய்ய வேண்டும். தினமும் இரவில் ரிசல்ட் பாருங்கள், இன்று கட்டுப்படுத்தும் சக்தி, ஆளுமை சக்தி எவ்வளவு இருந்தது? இப்பொழுது வீணானவைகளை விரைவில் அழித்து விட வேண்டும். இப்பொழுது சக்திசாலியாகி வாயுமண்டலத்தில் சக்திசாலியான சக்திகளை பரப்புங்கள். குழந்தை களின் துக்கம், வலி, கூக்குரல் கேட்டு குழந்தைகளின் மூலம் விரைவாக சமாப்தி செய்விக்க பாப்தாதா விரும்புகின்றார். அனைவரும் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறீர்கள், ஆனால் இப்பொழுது தீவிரம் என்பதை சேர்த்துக் கொள்ளுங்கள். செய்தே ஆக வேண்டும், செய்வேன், பார்க்கலாம் என்பது நடக்காது.

அன்பின் காட்சியை இன்று பார்த்தேன். ஒவ்வொருவரின் மனதிலும் எவ்வளவு அன்பு இருக்கிறது! ஆனால் எவ்வளவு அன்பு இருக்கிறதோ, அவ்வளவு சக்தியும் வேண்டும். இப்பொழுது சக்தியை நிரப்பிக் கொள்ளுங்கள். எந்த ஒரு சகோதரியும் தன்னை சக்தியாக நினைக்காமல் சிவசக்தியாக நினைக்க வேண்டும். சிவசக்தி, தந்தை கூடவே இருக்கின்றார். பாண்டவர்களுக்கு பாண்டவபதி கூடவே இருக்கின்றார். எனவே இப்பொழுது என்ன செய்வீர்கள்? பாப்தாதா கூறியிருக்கின்றார் - முயற்சிக்கு முன் தீவிரம் என்ற வார்த்தை சேர்த்துக் கொள்ளுங்கள். வாயுமண்டலம் உருவாக்குங்கள். ஒருவருக்கொருவர் உதவியாளராகி ஒவ்வொருவரும் அவரவர்கள் இருக்கும் இடத்தை சக்திசாலியாக ஆக்குங்கள், கூட இருப்பவர் களை சக்திசாலியாக ஆக்குங்கள். ஆக இப்பொழுது என்ன செய்வீர்கள்? புதுமை செய்வீர்கள் அல்லவா! என்னுடைய பாபா என்று கூறுகிறீர்கள் எனில் என்னுடையவர் போன்று ஆக வேண்டியிருக்கும் அல்லவா! ஒவ்வொருவரும் தனது மனதில் திட சங்கல்பம் செய்யுங்கள், நல்ல நல்ல சங்கல்பம் செய்கிறீர்கள், அமிர்தவேளையில் பாப்தாதா பார்க்கின்றார் - நல்ல சங்கல்பங்கள் செய்கிறீர்கள், இது செய்வேன், இது செய்வேன். ஆனால் கர்மயோகி ஆகின்ற பொழுது, சம்பந்தம்- தொடர்பில் வரும் பொழுது வேறுபாடு ஏற்படுகிறது. கர்மயோகி ஸ்திதியில் இன்னும் அதிக கவனம் தேவை. நல்லது.

அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் அல்லவா! குஷியாக இருக்கிறீர்களா? பாருங்கள் எவ்வளவு பேர் புதிது புதிதாக வந்திருக்கின்றனர்! புதிதாக, முதல் முறை வந்திருப்பவர்கள் கை உயர்த்துங்கள். பாருங்கள் எவ்வளவு பேர் இருக்கின்றனர்? பாதி வகுப்பு புதியவர்கள் வந்திருக்கின்றனர். வந்திருக்கும் புதிய குழந்தைகளைப் பார்த்து பாப்தாதா குஷி அடைகின்றார். ஏனெனில் அழிவு நேரத்திற்கு முன்பாகவே வந்து விட்டீர்கள். ஆனால் எவ்வளவு தாமதமாக வந்தீர்களோ, அவ்வளவு தீவிர முயற்சி செய்ய வேண்டியிருக்கும். ஏனெனில் இந்த குறுகிய காலத்தில் நீங்கள் முழு 21 பிறவிகளுக்கான எதிர்காலம் உருவாக்க வேண்டும். அந்த அளவிற்கு கவனம் செலுத்த வேண்டும். நேரத்தை மிச்சப்படுத்துங்கள், விநாடியும் வீணாக்கக் கூடாது. தீவிர முயற்சியாளராக இருக்க வேண்டும், சாதாரண முயற்சியின் மூலம் இலட்சியம் அடைவது கடினமாகும். இருப்பினும் வந்திருக்கும் குழந்தைகளுக்கு பாப்தாதா மனதார வாழ்த்துக்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். நல்லது.

ஆசிரியர் சகோதரிகள் அதிகம் வந்திருக்கின்றனர்: ஆசிரியர்களைப் பார்த்து பாப்தாதா அதிகம் குஷி அடை கின்றார். ஏனெனில் யார் நிமித்த ஆசிரியர்களாக ஆகியிருக்கிறார்களோ, அவர்கள் பாப்தாதா வெளிப்படுத்துவதற்கு நிமித்தம் ஆகியிருக்கிறார்கள். எந்த ஒரு ஆசிரியரைப் பார்த்தாலும் குஷி அடைகின்றார், ஏனெனில் ஆசிரியர்கள் என்றலே தனது முகத்தின் மூலம் எதிர்காலத்தை காண்பிக்கக் கூடியவர்கள். உங்களது எதிர்காலம் எது? எதிர் காலம் சதா மனமகிழ்ச்சி, சதா அதிகாரி, அடிமை கிடையாது. ஆக ஆசிரியர்களின் முகம் இந்த சாட்சாத் காரம் செய்விக்கின்றது. ஒவ்வொரு ஆசிரியரும் சதா இதையே புரிந்து கொள்ள வேண்டும், சொற்பொழிவு செய்தீர்கள், செய்யவில்லை, பரவாயில்லை. ஆனால் நிகழ்கால பிராப்தி மற்றும் எதிர்கால பிராப்தி உங்களது முகம், உங்களது தோற்றம் காண்பிக்கிறது. சதா இதில் கவனம் கொடுங்கள் - எனது முகம் அவ்வாறு சாட்சாத்காரம் ஏற்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். ஆசிரியர் முன் யார் வந்தாலும், ஆசிரியரைப் பார்த்து ஒன்று குஷியடைய வேண்டும், அவரது வாழ்வில் குஷி தென்பட வேண்டும். அந்த அளவிற்கு குஷியானவர்களாக மற்றும் அதிர்ஷ்டசாலிகளாக இருக்க வேண்டும். பாப்தாதா பார்த்தார்கள் - ஒவ்வொரு ஆசிரியரின் இலட்சியம் நன்றாக இருக்கிறது. செய்தே ஆக வேண்டும், ஆகியே தீர வேண்டும். அப்படித் தானே? இலட்சியம் என்ன? இது தான் இலட்சியம் அல்லவா! ஆக இந்த இலட்சியம் இலட்சணத்தில் தென்படவும் செய்கிறது, இன்னும் அதிகம் தென்பட வேண்டும். யார் வந்தாலும் அவசியம் குஷி எடுத்துச் செல்ல வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு மனிதனுக்கும் குஷி அவசியம் தேவைப் படுகிறது. விரும்புகின்றனர், ஆனால் அடைய முடியவில்லை. ஆக ஆசிரியர் என்றால் முகத்தின் மூலமாகவும் சேவை செய்ய செய்ய வேண்டும். இவர்கள் என்ன ஆகிவிட்டனர் என்று அனுபவம் செய்ய வேண்டும். நாட்கள் செல்லச் செல்ல உங்களது முகம் மற்றும் நடத்தை இந்த சேவை அதிகம் செய்யும். ஏனெனில் நாசூக்கான நேரம் வரும்பொழுது நேரம் குறைவாக கிடைக்கும். ஆனால் விரும்பம் அதிகரிக்கும், ஏதாவது கிடைக்க வேண்டும், ஏதாவது கிடைக்க வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் சதா எவரெடியாக இருக்க வேண்டும், ஒருவர் வந்தால் அவர் குறைந்தது ஏதாவது அடைந்து தான் செல்ல வேண்டும். முகம் மற்றும் நடத்தையின் மூலம் ஏதாவது அடைந்து செல்ல வேண்டும். வள்ளலின் குழந்தைகள் அல்லவா! பாப்தாதா ஆசிரியர்களைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றார். மனதிற்குள்ளே குணங்களின் மகிமை செய்கின்றார் - ஆஹா ஆசிரியர்களே ஆஹா! ஏனெனில் ஒவ்வொரு ஆசிரியரும் சேவை செய்து கொண்டு தான் இருக்கிறீர்கள், தனது ரிசல்ட் இரவில் பார்ப்பீர்கள்-இன்று என்ன சேவை செய்தேன்! தனது சார்ட் சுயம் பார்ப்பீர்கள். சேவையில் என்ன இலட்சியம் வைத்தீர்களோ, அது நடந்ததா? ஒருவேளை ஏதாவது ஒரு காரணத்தினால் நடக்கவில்லை யெனில் அடுத்த நாள் இரண்டாகச் செய்யுங்கள். காலியாக விட்டு விடாதீர்கள், ஏனெனில் ஆசிரியர்கள் என்றால் நிமித்த வள்ளலின் குழந்தைகள் வள்ளல்கள் ஆவர். ஆக பாப்தாதா குஷி அடைகின்றார், சிறிய சேவை நிலையமாக இருந்தாலும், பெரிய சேவை நிலையமாக இருந்தாலும். ஆனால் தியாகம் செய்து சேவை நிலையத்திற்கு வருவது என்பதும் தைரியம் இருக்கிறது அல்லவா! உங்களது தைரியத்தைப் பார்த்து பாப்தாதா குஷி அடைகின்றார். இப்பொழுது இன்னும் துணைவர்களை உருவாக்குங்கள். இன்னும் ஆசிரியர்களை உருவாக்குங்கள். ஏனெனில் சேவை அதிகரிக்கவே செய்யும். சிறிது குழப்பம் ஏற்படும் பொழுது அனைவரும் ஆர்வத்துடன் உங்களிடம் வருவார்கள். சேவை அதிகரிக்கப் போகிறது, குறையப் போவது கிடையாது. நல்லது.

ஆசீர்வாதம்:
சுவமானம் என்ற இருக்கையில் நிலைத்திருந்து மாயாவை
அர்ப்பணம் செய்விக்கக் கூடிய சிரேஷ்ட சுவமானதாரி ஆகுக.

சங்கமயுகத்தின் மிகப் பெரிய சுவமானமாகிய மாஸ்டர் சர்வசக்திவான் என்ற நினைவில் இருங்கள். ஒரு பெரிய அலுவலர் அல்லது இராஜா தனது சுவமானத்தின் இருக்கையில் நிலைத்திருக்கும் பொழுது மற்றவர்களும் அவருக்கு மரியாதை கொடுப்பர். ஒருவேளை சுயம் இருக்கையில் நிலைத்திருக்கவில்லை எனில் அவரது கட்டளையை யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அதே போன்று நீங்களும் சுவமானதாரி ஆகி தனது சிரேஷ்ட சுவமானம் என்ற இருக்கையில் நிலைத்திருந்தால் மாயா உங்களிடம் அர்ப்பணம் ஆகிவிடும்.

சுலோகன்:
சாட்சி ஸ்திதியில் இருந்து திலாராம் (தந்தையின்) துணை அனுபவம் செய்யக் கூடியவர்கள் தான் அன்பில் மூழ்கிய ஆத்மா.


அவ்யக்த சமிக்கை: பரோபகார பாவனையால் (மற்றவர்களுக்கு உதவி செய்யும் உணர்வினால்) நிரம்பப்பெற்று தீமை செய்பவருக்கும் நன்மை செய்யுங்கள்

அபகாரம் செய்பவர்களுக்கும் உபகாரம் செய்ய வேண்டும் - இது தான் ஞானி ஆத்மாவின் கடமையாகும். நிந்தனை செய்பவர்களையும் தந்தை நன்மைக்கான பார்வையுடன் பார்த்தார். நன்மை செய்பவர்களுக்கு உலகத்தினரும் நன்மை செய்கின்றனர், பக்த ஆத்மாக்களும் செய்கின்றனர். ஆனால் ஞானி ஆத்மா என்பதன் பொருளே அனைவரின் மீதும் நன்மைக்கான பாவனை, தீமைக்கான சங்கல்பமும் இருக்கக் கூடாது. அபகாரிகளின் மீதும் உபகாரம் செய்ய வேண்டும். அப்போது தான் உலகிற்கு நன்மை செய்பவர் என்று கூற முடியும்.