12-07-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! நீங்கள் உண்மையிலும் உண்மையான வைஷ்ணவர்களாக ஆக வேண்டும், உண்மையான வைஷ்ணவர்கள் உணவில் பத்தியம் கடைப்பிடிப்பதன் கூடவே தூய்மையாகவும் இருப்பார்கள்.

கேள்வி:
எந்த அவகுணம் நற்குணமாக மாறிவிட்டால் கவலைகள் துன்பம் தூர விலகி விடும்?

பதில்:
அனைத்தையும் விட மிகப் பெரிய அவகுணம் பற்றுதல் ஆகும். பற்றுதலின் காரணத்தினால் உறவினர்களின் நினைவு தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது. (குரங்கின் உதாரணம்) ஒருவருடைய உறவினர் இறந்து விட்டார் எனில் 12 மாதங்கள் வரை அவரை நினைவு செய்து கொண்டே இருக்கின்றனர். முகத்தை மூடிக்கொண்டு அழுது கொண்டே இருக்கின்றனர், நினைவு வந்து கொண்டே இருக்கிறது. இதே போன்று தந்தையின் நினைவு வந்து கொண்டிருந்தால், இரவு, பகல் நீங்கள் தந்தையை நினைவு செய்தால் உங்களது கவலைகள் தூர விலகி விடும். எவ்வாறு லௌகீக உறவினர்களை நினைவு செய்கிறீர்களோ அதே போன்று தந்தையை நினைவு செய்தால் ஆஹா! சௌபாக்கியம் .......

ஓம் சாந்தி.
தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு தந்தையின் நினைவில் அமருங்கள் என்று தந்தை தினம் தினம் குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். இன்று இதில் மற்றொன்றையும் சேர்க்கின்றார் - நினைவு மட்டும் செய்யாமல் இன்னொன்றையும் புரிந்து கொள்ள வேண்டும். பரம்பிதா பரமாத்மா சிவனைத் தான் இறை தந்தை என்றும், ஞானக்கடல் என்றும் கூறுகிறோம். ஞானக் கடலாக இருப்பதால் ஆசிரியராகவும் இருக்கின்றார், இராஜயோகம் கற்பிக்கின்றார். இதை புரிய வைப்பதன் மூலம் சத்தியமான தந்தை இவர்களுக்கு கற்பித்துக் கொண்டிருக்கின்றார் என்பதை புரிந்து கொள்வர். நடைமுறை விசயங்களை இவர்கள் கூறுகின்றனர். அவர் அனை வருக்கும் தந்தையாகவும் இருக்கின்றார், ஆசிரியராகவும் இருக்கின்றார், சத்கதியின் வள்ளலாகவும் இருக்கின்றார். மேலும் அவர் ஞானம் நிறைந்தவர் என்றும் கூறப்படுகின்றார். தந்தை, ஆசிரியர், பதீத பாவன், ஞானக் கடல். முதன் முதலில் தந்தையின் மகிமை செய்ய வேண்டும். அவர் நமக்குப் கற்பித்துக் கொண்டிருக் கின்றார். நாம் பிரம்மா குமார், குமாரிகள். பிரம்மாவும் சிவபாபாவின் படைப்பு ஆவார். மேலும் இப்பொழுது இது சங்கமயுகமாகும். இராஜயோகத்தின் இலட்சியம், குறிக்கோளும் இருக்கிறது, நமக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். ஆக ஆசிரியர் என்பது நிரூபணம் ஆகிறது. மேலும் இந்த படிப்பே புது உலகிற்காகத் தான். இங்கு அமர்ந்து கொண்டு இதை உறுதியாக்குங்கள் (பக்கா) - நான் என்னென்ன புரிய வைக்க வேண்டும்? அது உள்ளுக்குள் தாரணை ஏற்பட வேண்டும். சிலருக்கு அதிகம் தாரணை ஏற்படுகிறது, சிலருக்கு குறைவாக ஏற்படுகிறது என்பதை அறிவீர்கள். இங்கும் யார் ஞானத்தில் தீவிர வேகத்தில் செல்கிறார்களோ அவர்களுக்கு புகழ் ஏற்படுகிறது. பதவியும் உயர்வானதாகி விடுகிறது. பத்தியத்தைப் பற்றியும் பாபா கூறுகின்றார். நீங்கள் முழுமையான வைஷ்ணவர்களாக ஆகிறீர்கள். வைஷ்ணவர்கள் என்றால் சைவமாக இருப்பவர்கள். புலால் போன்றவைகளை சாப்பிடாதவர்கள். ஆனால் விகாரத்தில் செல் கின்றனர். பிறகு வைஷ்ணவனாக இருந்து என்ன பலன் இருக்கிறது? வைஷ்ணவ குலத்தைச் சார்ந்தவர் என்று கூறிக் கொள்கின்றனர் அதாவது புலால் போன்ற தமோகுண உணவுகளை சாப்பிடுவது கிடையாது. தமோகுண பொருட்கள் எது எது? என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். சிலர் நல்ல மனிதர்களாகவும் இருக்கின்றனர், அவர்கள் தான் தர்ம சிந்தனை உடையவர் அல்லது பக்தர் என்று கூறப்படுகின்றனர். சந்நியாசிகளை தூய்மையான ஆத்மாக்கள் என்று கூறுவர், மேலும் யார் தானம் போன்றவைகள் செய்கிறார்களோ அவர்களைப் புண்ணிய ஆத்மா என்று கூறுவர். இதன் மூலம் நிரூபணம் ஆகிறது - ஆத்மா தான் தானம், புண்ணியம் செய்கிறது. அதனால் தான் புண்ணிய ஆத்மா, தூய்மையான ஆத்மா என்று கூறப்படுகிறது. ஆத்மா வில் எதுவும் ஒட்டாமல் (நிர்லேப்) இருப்பது கிடையாது. இவ்வாறு நல்ல நல்ல வார்த்தைகளை நினைவு செய்ய வேண்டும். சாதுக்களையும் மகாத்மா என்று கூறுகின்றனர். மகான் பரமாத்மா என்று கூறுவது கிடையாது. ஆக சர்வவியாபி என்று கூறுவது தவறாகி விடுகிறது. அனைவரும் ஆத்மாக்கள், யாரெல்லாம் இருக்கிறார்களோ அனைவருக்குள்ளும் ஆத்மா இருக்கிறது. படிப்பறிவு உள்ளவர்கள் மரத்திலும் ஆத்மா இருப்பதாக நிரூபித்துக் கூறுகின்றனர். 84 லட்சம் பிறப்பு, இறப்பு இருக்கிறது எனில், அதிலும் ஆத்மா இருக்கிறது என்று கூறுகின்றனர். ஆத்மா இல்லையெனில் பிறகு எப்படி விருத்தியடையும்? மனித ஆத்மாக்கள் ஜடத்திற்குச் செல்ல முடியாது. சாஸ்திரங் களில் இப்படிப்பட்ட விசயங்களை எழுதி வைத்து விட்டனர். இந்திரபிரஸ்தத்தை (பாண்டவர்கள் நகரம்) ஏமாற்றியதால் கல் போன்று ஆகிவிட்டனர். இப்பொழுது தந்தை அமர்ந்து புரிய வைக்கின்றார், தேகத்தின் சம்மந்தங்களை விடுத்து தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று தந்தை குழந்தைகளுக்குக் கூறுகின்றார். உங்களது 84 பிறவிகள் முடிவடைந்து விட்டது. இப்பொழுது தமோ பிரதானத்திலிருந்து சதோ பிரதானமாக ஆக வேண்டும். துக்கதாமம் அசுத்தமான இடமாகும். சாந்திதாம் மற்றும் சுகதாம் தூய்மையான இடங்க ளாகும். இதைப் புரிந்திருக்கிறீர்கள் அல்லவா! சுகதாமத்தில் இருக்கக் கூடிய தேவதைகளின் முன் தலைவணங்குகின்றனர். பாரதத்தில், புது உலகில் தூய்மையான ஆத்மாக்கள் இருந்தனர், உயர்ந்த பதவியில் இருந்தனர் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகிறது. என்னிடத்தில் எந்த குணங்களும் இல்லை என்று இப்பொழுது பாடுகின்றனர். இப்படித் தான் இருக்கின்றனர். எந்த குணங்களும் கிடையாது. மனிதர்களிடத்தில் பற்றுதலும் அதிகமாக இருக்கிறது. இறந்து போனவரையும் நினைவு செய்கின்றனர். இவர் எனது குழந்தை என்பது புத்தியில் வருகிறது. கணவன் அல்லது குழந்தை இறந்து விட்டால் அவரை நினைவு செய்து கொண்டே இருக்கின்றனர். மனைவி 12 மாதங்கள் வரை அதிகமாக நினைவு செய்து கொண்டே இருக்கிறார், முகத்தை மூடி அழுது கொண்டே இருக்கிறார். இதே போன்று முகத்தை மூடிக்கொண்டு இரவு பகல் நீங்கள் தந்தையை நினைவு செய்தால் கவலைகள் தூர விலகிவிடும். தந்தை கூறுகின்றார் - எவ்வாறு நீங்கள் கணவரை நினைவு செய்து கொண்டே இருக்கிறீர்களோ அவ்வாறு என்னை நினைவு செய்தால் உங்களது விகர்மங்கள் விநாசம் ஆகிவிடும். இப்படி இப்படி செய்யுங்கள் என்று தந்தை யுக்திகளைக் கூறுகின்றார்.

இன்று இவ்வளவு நஷ்டம் ஏற்பட்டது, இவ்வளவு லாபம் ஏற்பட்டது என்று வியாபாரிகள் தினமும் கணக்கு பார்க்கின்றனர், சிலர் மாதம் ஒருமுறை பார்க்கின்றனர். இங்கும் இது மிகவும் அவசிய மானது. தந்தை அடிக்கடி புரிய வைத்திருக்கின்றார். தந்தை கூறுகின்றார் - குழந்தைகளாகிய நீங்கள் சௌபாக்கியசாலிகள், ஆயிரம் மடங்கு பாக்கியசாலிகள், கோடி மடங்கு பாக்கியசாலிகள், பல மடங்கு பாக்கியசாலிகள். எந்த குழந்தைகள் தங்களை சௌபாக்கியசாலிகள் என்று நினைக்கிறார் களோ, அவர்கள் அவசியம் நல்ல முறையில் தந்தையை நினைவு செய்து கொண்டே இருப்பர். அவர்கள் தான் ரோஜா மலர்களாக ஆவார்கள். இதை சுருக்கமாகப் புரிய வைக்க வேண்டி யிருக்கிறது. நறுமணமுள்ள மலர்களாகத் தான் ஆக வேண்டும். முக்கியமானது நினைவிற்கான விசயமாகும். சந்நியாசிகள் யோகா என்ற வார்த்தையை கூறிவிட்டனர். என்னை நினைவு செய்யுங்கள்? அல்லது என் நினைவு இருக்கிறதா? என்று லௌகீகத் தந்தை கேட்கமாட்டார். தந்தைக்கு குழந்தை, குழந்தைக்கு தந்தையின் நினைவு இருக்கத் தான் செய்யும். இது சட்டமாகும். இங்கு கேட்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் மாயை மறக்க வைத்து விடுகிறது. இங்கு வருகிறீர்கள், நான் தந்தையிடம் செல்கிறேன் என்ற புரிந்து கொள்கிறீர்கள், ஆக தந்தையின் நினைவு இருக்க வேண்டும். அதனால் தான் தந்தை சித்திரங்களையும் உருவாக்குகின்றார், அதை கூடவே வைத்திருக்க வேண்டும். முதன் முதலில் தந்தையின் மகிமையிலிருந்து ஆரம்பியுங்கள். இவர் நமது பாபா, அதாவது அனைவருக்கும் தந்தை ஆவார். அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் ஆவார், ஞானக்கடலாவார், ஞானம் நிறைந்தவர் ஆவார். பாபா நமக்கு சிருஷ்டிச் சக்கரத்தின் முதல், இடை, கடையின் ஞானம் கொடுக்கின்றார். இதன் மூலம் நாம் திரிகால தர்சிகளாக ஆகிவிடுகிறோம். திரிகாலதர்சிகளாக இந்த சிருஷ்டியில் மனிதர்கள் யாரும் இருக்க முடியாது. தந்தை கூறுகின்றார் - இந்த லெட்சுமி நாராயணனும் திரிகாலதர்சி கிடையாது. இவர் திரிகாலதர்சியாக ஆகி என்ன செய்யப் போகிறார்? நீங்கள் ஆகிறீர்கள் மற்றும் ஆக்குகிறீர்கள். இந்த லெட்சுமி நாராயணனிடம் ஞானம் இருந்தால் பரம்பரையாக நடைபெற்று வரும். இடையில் விநாசம் ஆகிவிடுகிறது. ஆகையால் பரம்பரை என்று கூற முடியாது. ஆக குழந்தைகள் இந்த படிப்பை நல்ல முறையில் சிந்தனை செய்ய வேண்டும். நீங்களும் உயர்ந்ததிலும் உயர்ந்த படிப்பை சங்கமத்தில் தான் படிக்கிறீர்கள். நீங்கள் நினைவு செய்வது கிடையாது, தேக அபிமானத்தில் வந்து விடுகிறீர்கள் எனில், மாயை அடி கொடுத்து விடுகிறது. 16 கலைகள் நிறைந்தவர்களாக ஆகின்ற பொழுது தான் விநாசத்திற்கான ஏற்பாடும் நடைபெறும். அவர்கள் விநாசத்திற்காக, நீங்கள் அழிவற்ற பதவிக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறீர்கள். கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களுக்கான யுத்தம் நடைபெறவில்லை. கௌரவர்கள் மற்றும் யாதவர்களுக்கு நடைபெறு கிறது. நாடகப்படி பாகிஸ்தானும் உருவாகிவிட்டது. எப்பொழுது உங்களது பிறப்பு ஏற்பட்டதோ அப்பொழுது தான் அதுவும் ஆரம்பமானது. இப்பொழுது தந்தை வந்திருக்கின்றார் எனில் அனைத்தும் நடை முறையில் ஏற்பட வேண்டும் அல்லவா! இரத்த நதி ஓடும், பிறகு தான் நெய்யாறு ஓடும் என்று இங்கு தான் கூறப்பட்டிருக்கிறது. இப்பொழுதும் பாருங்கள் – சண்டை யிட்டுக் கொண்டே இருக்கின்றனர்! இந்த இடத்தை கொடுத்து விடுங்கள், இல்லையெனில் சண்டை யிடுவோம். இதை (பாதை) கடக்கக் கூடாது, இது எமது பாதையாகும். அவர்கள் என்ன செய்ய முடியும்? படகு எப்படி செல்லும்? பிறகு கலந்துரையாடுகின்றனர். அவசியம் கருத்து கேட்கின்றனர். உதவிக்கான நம்பிக்கை ஏற்பட்டிருந்தாலும் அதை தங்களுக்குள்ளே அழித்து விடுவர். இங்கு உள்நாட்டுக் கலவரம் என்பது நாடகத்தில் பதிவாகியிருக்கிறது.

இப்பொழுது தந்தை கூறுகின்றார் - இனிய குழந்தைகளே! மிக மிக புத்திசாலிகளாக ஆகுங்கள். இங்கிருந்து வெளியில் வீட்டிற்கு சென்றதும் மறந்து விடாதீர்கள். இங்கு நீங்கள் வருமானம் சேமிப்பதற்காக வருகிறீர்கள். சிறிய சிறிய குழந்தைகளை அழைத்து வருகிறீர்கள் எனில் அவர்களது பந்தனத்தில் இருக்க வேண்டியிருக்கிறது. இங்கு ஞானக் கடலின் கடற்கரைக்கு வருகிறீர்கள், எந்த அளவு வருமானம் செய்வீர்களே நல்லது ஆகும். இதில் ஈடுபட்டு விட வேண்டும். அழிவற்ற ஞான ரத்தினங்களினால் புத்தி பையை நிரப்பிக் கொள்வதற்காகத் தான் நீங்கள் வருகிறீர்கள். போலாநாத் ஆக இருப்பவரே, புத்தி பையை நிரப்பி விடுங்கள் என்று பாடு கிறீர்கள் அல்லவா! பையை நிரப்பி விடுங்கள் என்று பக்தர்கள் சங்கர் முன் சென்று கூறுகின்றனர். அவர் சிவன்-சங்கரை ஒன்று என்று நினைத்து விட்டனர். சிவ-சங்கர மகாதேவ் என்று கூறிவிடுகின்றனர். ஆக மகாதேவன் பெரியவராக ஆகி விடுகிறார். இந்த மாதிரி சிறிய சிறிய விசயங்கள் மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய விசயங்களாகும்.

இப்பொழுது நீங்கள் பிராமணர்களாக இருக்கிறீர்கள், ஞானம் அடைந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைக்கப்படுகிறது. மனிதர்கள் படிப்பின் மூலம் விழிப்படைகின்றனர். நடத்தைகளும் நல்லதாக ஆகிவிடுகிறது. இப்பொழுது நீங்கள் படிக்கிறீர்கள். யார் அனைவரையும் விட அதிகமாக படிக்கிறார்களோ மற்றும் கற்பிக்கிறார்களோ, அவர்களது நடத்தைகளும் நன்றாக இருக்கும். அனைவரின் நடத்தைகளை விட மிக நல்ல நடத்தை மம்மா, பாபாவினுடையது என்று நீங்கள் கூறுவீர்கள். இவர் பெரிய தாயாக ஆகிவிடுகிறார், இவருள் பிரவேசம் செய்து குழந்தைகளைப் படைக்கின்றார். தாய், தந்தை இணைந்து இருக்கின்றனர். எவ்வளவு குப்தமான விசயமாகும்! எவ்வாறு நீங்கள் படிக்கிறீர்களோ அதே போன்று மம்மாவும் படித்தார்கள். அவரைத் தத்தெடுத்தார். புத்திசாலியாக இருந்தார், அதனால் தான் நாடகப்படி சரஸ்வதி என்ற பெயர் பெற்றார். பிரம்மாபுத்திரா நதி பெரிய நதியாகும். கடல் மற்றும் பிரம்மபுத்திரா நதியில் தான் மேளா நடை பெறுகிறது. இவர் (பிரம்மா) பெரிய நதியாக இருக்கிறார், தாயாகவும் இருக்கிறார் அல்லவா! இனிமையிலும் இனிய குழந்தைகளாகிய உங்களை எவ்வளவு உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்கிறார்! குழந்தைகளாகிய உங்களைத் தான் தந்தை பார்க்கின்றார். அவர் யாரையும் நினைக்கமாட்டார். இவரது ஆத்மாவும் தந்தையை நினைவு செய்ய வேண்டும். தந்தை கூறுகின்றார் - நாம் இருவரும் குழந்தைகளைப் பார்க்கின்றோம். ஆத்மாவாகிய நான் சாட்சியாக இருந்து பார்க்கக் கூடாது, ஆனால் தந்தையின் சகவாசத்தின் (சேர்ந்திருப்பதன்) மூலம் நானும் அவ்வாறே பார்க்கிறேன். தந்தையின் கூடவே இருக்கிறேன் அல்லவா! அவரது குழந்தையாக இருப்பதால் கூடவே இருந்து பார்க்கிறேன். நான் உலகிற்கு எஜமானாகி சுற்றி வருகிறேன், நான் தான் செய்கிறேன் என்பது போன்று உணர்கிறேன். நான் திருஷ்டி கொடுக்கிறேன். தேக சகிதமாக அனைத்தும் மறக்க வேண்டியிருக்கிறது. மற்றபடி குழந்தை மற்றும் தந்தை இருவரும் ஒன்று போல் ஆகிவிடுகிறோம். ஆக அதிகமாக முயற்சி செய்யுங்கள் என்று தந்தை புரிய வைக்கின்றார். மம்மா, பாபா அனைவரையும் விட அதிகமாக சேவை செய்தனர். வீட்டிலும் தாய், தந்தை அதிகம் சேவை செய்வர் அல்லவா! சேவை செய்பவர்கள் பதவியும் அவசியம் உயர்ந்ததாக அடைவார்கள் எனில் பின்பற்ற வேண்டும் அல்லவா! தந்தை எவ்வாறு அபகாரம் செய்பவர்களுக்கு உபகாரம் செய்கிறாரோ, அவ்வாறு நீங்களும் பின்பற்றுங்கள். இதன் பொருளையும் புரிந்து கொள்ள வேண்டும். தந்தை கூறுகின்றார் - என்னை நினைவு செய்யுங்கள், வேறு யார் கூறுவதையும் கேட்காதீர்கள். யாராவது ஏதாவது கூறினால் கேட்டும் கேட்காதது போல் இருந்து விடுங்கள். நீங்கள் புன்முறுவல் செய்து கொண்டே இருந்தால் அவர்கள் தானாகவே குளிர்ந்து விடுவார்கள். யாராவது கோபப்பட்டால் நீங்கள் அவர் மீது மலர் தூவுங்கள் என்று பாபா கூறியிருக்கின்றார். நீங்கள் அபகாரம் செய்கிறீர்கள், நாங்கள் உபகாரம் செய்கிறோம் என்று கூறுங்கள். சுயம் தந்தை கூறுகின்றார் - முழு உலகிலும் உள்ள மனிதர்கள் எனக்கு அபகாரிகளாக இருக்கின்றனர், என்னை சர்வவியாபி என்று கூறி எவ்வளவு நிந்தனை செய்கின்றனர்! நான் அனைவருக்கும் உபகாரம் செய்கின்றேன். குழந்தைகளாகிய நீங்களும் அனைவருக்கும் உபகாரம் செய்யக் கூடியவர்கள். நாம் எப்படியிருந்தோம்? இப்பொழுது என்ன ஆகிறோம்? என்று நீங்கள் சிந்தியுங்கள். உலகிற்கு எஜமானர்களாக ஆகிறீர்கள். நினைத்துக் கூட பார்க்கவில்லை. பலருக்கு வீட்டில் அமர்ந்த படியே சாட்சாத்காரம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் சாட்சாத்காரத்தினால் எதுவும் ஏற்பட்டு விடாது. சிறிது சிறிதாக மரம் விருத்தியடைந்து கொண்டே இருக்கும். புதிய, தெய்வீக மரம் ஸ்தாபனை ஆகிக்கொண்டிருக்கிறது அல்லவா! நமது தெய்வீக மலர்களின் தோட்டம் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதை குழந்தைகள் அறிவீர்கள். சத்யுகத்தில் தேவதைகள் தான் இருப்பார்க ள், பிறகு சக்கரம் சுற்ற ஆரம்பித்து விடுகிறது. 84 பிறவிகளும் அவர்கள் தான் எடுப்பார்கள். மற்ற ஆத்மாக்கள் எங்கிருந்து வருவார்கள்? நாடகத்தில் எத்தனை ஆத்மாக்கள் இருக்கிறார்களோ, யாரும் நடிப்பதி-ருந்து விடுபட முடியாது. இந்த சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கும். ஆத்மா ஒருபொழுதும் குறைவது கிடையாது, சிறிது, பெரிதாக ஆவது கிடையாது.

தந்தை வந்து இனிமையிலும் இனிய குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார், குழந்தைகளே! சுகம் கொடுப்பவர்களாக ஆகுங்கள் என்று கூறுகின்றார். தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள் என்று தாய் கூறுவார் அல்லவா! எல்லையற்ற தந்தையும் குழந்தைகளுக்கு கூறுகின்றார் - நினைவு யாத்திரை மிகவும் எளிதாகும். அந்த யாத்திரை பல பிறவிகளாக செய்து வந்தீர்கள், இருப்பினும் ஏணியில் இறங்கி பாவ ஆத்மாக்களாக ஆனீர்கள். இது ஆன்மீக யாத்திரை என்று தந்தை கூறுகின்றார். நீங்கள் இந்த மரண உலகிற்குத் திரும்பி வரக் கூடாது. அந்த யாத்திரை முடித்து திரும்பி வந்து விடுவர், பிறகு முன்பு போலவே ஆகி விடுவர். நாம் சொர்க்கத்திற்குச் செல்வோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். சொர்க்கம் இருந்தது, மீண்டும் ஏற்படும். இந்த காலச்சக்கரம் சுற்றியே ஆக வேண்டும். உலகம் ஒன்று தான், மற்றபடி நட்சத்திரங்களில் உலகம் கிடையாது. மேலே சென்று பார்ப்பதற்கு தலையை எவ்வளவு உடைத்துக் கொள்கின்றனர்! தலையை உடைத்து உடைத்து மரணம் எதிரிலேயே வந்து விடும். இவை அனைத்தும் விஞ்ஞானமாகும். மேலே செல்வார்கள், பிறகு என்ன நடக்கும்? மரணம் எதிரில் இருக்கிறது. ஒருபுறம் மேலே சென்று தேடுகின்றனர். மற்றொருபுறம் மரணத்திற்காக அணுகுண்டுகளைத் தயார் செய்து கொண்டிருக்கின்றனர். மனிதர்களின் புத்தி எப்படியெல்லாம் இருக்கிறது பாருங்கள்! யாரோ தூண்டுதல் கொடுப்பதாகவும் நினைத்துக் கொள்கின்றனர். உலக யுத்தம் அவசியம் ஏற்படும் என்று சுயம் கூறுகின்றனர். இது அதே மகாபாரத யுத்தமாகும். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்களும் எந்த அளவிற்கு முயற்சி செய்வீர்களோ, அந்த அளவிற்குத் தான் நன்மை செய்வீர்கள். குதாவின் (இறைவனின்) குழந்தைகளாக இருக்கிறீர்கள் பகவான் தனது குழந்தைகளாக ஆக்குகின்றார் எனில் நீங்கள் பகவான், பகவதிகளாக ஆகிவிடுகிறீர்கள். லெட்சுமி, நாராயணனை தேவி, தேவதைகள் என்று கூறுகின்றனர் அல்லவா! கிருஷ்ணரை கடவுள் என்று கூறுகின்றனர், இராதையை அந்த அளவிற்கு ஏற்றுக் கொள்வது கிடையாது. சரஸ்வதிக்குப் புகழ் இருக்கிறது, இராதைக்குக் கிடையாது. பிறகு கலசத்தை லெட்சுமியிடம் காண்பிக்கின்றனர். இந்த தவறும் செய்து விட்டனர். சரஸ்வதிக்கும் பல பெயர்கள் வைத்து விட்டனர். அது நீங்கள் தான். தேவிகளுக்கு பூஜைகள் நடை பெறுகிறது என்றால், ஆத்மாக்களுக்கு பூஜை ஏற்படுகிறது. தந்தை குழந்தைகளுக்கு ஒவ்வொரு விசயத்தையும் புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். நல்லது.

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) எவ்வாறு தந்தை அபகாரம் செய்பவர்களுக்கும் உபகாரம் செய்கிறாரோ, அதே போன்று தந்தையைப் பின்பற்ற வேண்டும். யார் என்ன பேசினாலும் கேட்டும் கேட்காதது போன்று இருந்து விட வேண்டும், புன்முறுவலுடன் இருக்க வேண்டும். ஒரு தந்தை கூறுவதை மட்டுமே கேட்க வேண்டும்.

2) சுகமானவர்களாகி அனைவருக்கும் சுகம் கொடுக்க வேண்டும். தங்களுக்குள் சண்டை யிட்டுக் கொள்ளக் கூடாது. புத்திசாலிகளாகி தனது பையை அழிவற்ற ஞான இரத்தினங் களினால் நிறைத்துக் கொள்ள வேண்டும்.

வரதானம்:
கடலுக்கு அடியில் சென்று அனுபவம் என்ற இ ரத்தினத்தைப் பெறக்கூடிய சதா சக்திசாலி ஆத்மா ஆகுக.

சக்திசாலி ஆத்மா ஆகுவதற்காக யோகத்தின் ஒவ்வொரு விசேஷத்தன்மையினுடைய, ஒவ்வொரு சக்தியினுடைய மற்றும் ஞானத்தின் ஒவ்வொரு முக்கியமான கருத்தினுடைய பயிற்சி செய்யுங்கள். பயிற்சியாளரான, அன்பில் மூழ்கி இருக்கக்கூடிய ஆத்மாவிற்கு முன்பாக எந்தவிதமான தடையும் நிற்க முடியாது, ஆகையினால், பயிற்சியின் ஆய்வகத்தில் அமர்ந்து விடுங்கள். இப்பொழுதுவரை ஞானத்தின் கடல், குணங்களின் கடல், சக்திகளின் கடலில் மேலோட்டமான அலைகளில் ஆடுகின்றீர்கள், ஆனால், இப்பொழுது கடலின் அடிக்கு செல்லுங்கள், அப்பொழுது அனேகவிதமான விசித்திரமான அனுபவங்களின் இரத்தினங்களை அடைந்து சக்திசாலி ஆத்மா ஆகிவிடுவீர்கள்.

சுலோகன்:
அசுத்தம் தான் விகாரம் என்ற பூதங்களை வரவேற்கிறது ஆகையினால், சங்கல்பங்களிலும் கூட சுத்தமானவர் ஆகுங்கள்.

அவ்யக்த சமிக்ஞை: எண்ணங்களின் சக்தியை சேமிப்பு செய்து சிறந்த சேவைக்கு கருவி ஆகுங்கள்.

எவ்வாறு பிரம்மா பாபா விசேஷமான சிரேஷ்ட சங்கல்பத்தின் மூலம் குழந்தைகளை வரவேற்றார், அதாவது படைப்பை படைத்தார். இந்த சங்கல்பத்தின் படைப்பு கூட குறைந்தது அல்ல. சிரேஷ்டமான சக்தி சாலியான சங்கல்பமானது பிரேரணை கொடுத்து விதவிதமான தர்மங்களின் திரைகளில் இருந்து விலக்கி அருகாமையில் கொண்டு வந்தது. அவ்வாறு குழந்தை களாகிய நீங்களும் கூட சக்திசாலியான சிரேஷ்ட சங்கல்ப தாரியாக ஆகுங்கள். தன்னுடைய சங்கல்பங்களின் சக்தியை அதிகம் செலவு செய்யாதீர்கள், வீணாக இழக்காதீர்கள். சிரேஷ்ட சங்கல்பத்தினால் பிராப்தியும் சிரேஷ்டமானதாக ஆகிவிடும்.