12-09-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! உங்கள் படிப்பின் முழு ஆதாரமும் யோகத்தில் நினைவில் உள்ளது. நினைவினால் தான் ஆத்மா தூய்மை ஆகின்றது. விகர்மங்கள் விநாசமாகின்றன.

கேள்வி:
அநேகக் குழந்தைகள் தந்தையுடையவர்களாக ஆகிப் பிறகு கைவிட்டு விடுகின்றனர். காரணம் என்ன?

பதில்:
தந்தையை முழுமையான ரீதியில் அறிந்து கொள்ளாத காரணத்தால், முழு நிச்சய புத்தி இல்லாத காரணத்தால், 8-10 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட தந்தையின் கையை விட்டு விடு கின்றனர். பதவி தாழ்ந்ததாக ஆகி விடுகின்றது. 2. குற்றமான பார்வை இருப்பதால் மாயாவின் கிரகச்சாரம் அமர்ந்து கொள்கிறது. மனநிலை மேலே-கீழே ஆகிக் கொண்டே இருக்கிறது என்றாலும் கூட படிப்பை விட்டு விடுகின்றனர்.

ஓம் சாந்தி.
ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தை புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். இப்போது புரிந்து கொண்டிருக்கிறீர்கள், நாம் அனைவரும் ஆன்மிக எல்லையற்ற தந்தையின் குழந்தைகள் ஆவோம். இவர் பிரம்மா பாபா பாப்தாதா என அழைக்கப்படுகிறார். எப்படி நீங்கள் ஆன்மிகக் குழந்தைகளாக இருக்கிறீர்களோ, அதுபோல் இவரும் (பிரம்மா) சிவபாபாவின் ஆன்மிகக் குழந்தை ஆவார். சிவபாபாவுக்கு இரதமோ அவசியம் வேண்டும் இல்லையா? அதனால் எப்படி ஆத்மாக்களாகிய உங்களுக்கு உடல் உறுப்புகள் கர்மம் செய்வதற்காகக் கிடைத்துள்ளனவோ, அது போல் சிவபாபாவுக்கும் கூட இது இரதமாகும். ஏனென்றால் இது கர்ம சேத்திரமாகும். இதில் கர்மம் செய்ய வேண்டியுள்ளது. அது (மேலே இருப்பது) ஆத்மாக்கள் வசிக்கும் வீடாகும். ஆத்மா அறிந்து கொண்டுள்ளது, நம்முடைய வீடு சாந்திதாமம் என்று. அங்கே இந்த விளையாட்டு நடை பெறுவதில்லை. தீபங்கள் (சூரிய, சந்திர, நட்சத்திரங்கள் முதலியன) அங்கே எதுவும் கிடையாது. ஆத்மாக்கள் மட்டுமே வசிக் கின்றனர். இங்கே பார்ட்டை நடிப்பதற்காக ஆத்மாக்கள் வருகின்றனர். உங்களுடைய புத்தியில் உள்ளது - இது எல்லையற்ற டிராமா என்று. இதில் நடிகர்களின் பார்ட்டை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை குழந்தைகள் நீங்கள் நம்பர்வார் புருஷார்த்தத்தின் ஆதாரத்தில் அறிந்து கொண்டிருக்கிறீர்கள்.. இங்குள்ள எந்த ஒரு சாது-சந்நியாசி முதலான எவரும் புரிய வைப்பதில்லை. இங்கே குழந்தைகள் நாம் எல்லையற்ற தந்தையிடம் அமர்ந்திருக்கின்றோம். இப்போது நாம் திரும்பிச் செல்ல வேண்டும். பவித்திரமாகவோ ஆத்மா அவசியம் ஆகியே தீர வேண்டும். சரீரமும் கூட இங்கேயே பவித்திரமாக வேண்டும் என்பதில்லை. ஆத்மா பவித்திர மாகின்றது. சரீரமோ, எப்போது 5 தத்துவங்களும் சதோபிரதானமாகின்றனவோ, அப்போது பவித்திர மாகும். இப்போது ஆத்மா நீங்கள் புருஷார்த்தம் செய்து பாவனமாகிக் கொண்டிருக்கிறீர்கள். அங்கே ஆத்மா, சரீரம் இரண்டும் பவித்திரமாக உள்ளன. இங்கே அதுபோல் இருக்க முடியாது. ஆத்மா பவித்திரமாகி விட்டதென்றால் பிறகு பழைய சரீரத்தை விட்டுவிடுகின்றது. பிறகு புதிய தத்துவங் களால் புதிய சரீரம் உருவாகின்றது. நீங்களே அறிவீர்கள், நாம் ஆத்மா எல்லையற்ற தந்தையை நினைவு செய்கின்றோமா, அல்லது செய்வதில்லையா? என்பதை இதை ஒவ்வொருவரும் தன்னைத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும். படிப்பின் முழு ஆதாரமும் நினைவில் உள்ளது. படிப்போ சுலபமானது. சக்கரம் எப்படிச் சுற்றுகிறது என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். முக்கியமானது நினைவு யாத்திரையாகும். இது உள்ளுக்குள் குப்தமாக உள்ளது. கண்ணால் பார்க்க இயலாது. இவர் அதிகம் நினைவு செய்கிறாரா, குறைவாக நினைவு செய்கிறாரா என்று பாபா சொல்ல முடியாது. ஆம், ஞானத்தைப் பற்றி சொல்ல முடியும்- இவர் ஞானத்தில் மிகவும் தீவிர மாக உள்ளார். நினைவிலிருக்கிறோமா, இல்லையா என்பதை யாராலும் கண்ணால் பார்க்க முடிவ தில்லை. ஞானம் வாயினால் பேசப்படுகின்றது. நினைவோ அஜபாஜபமாகும் (மனதால் நினைப்பது). ஜபம் என்ற சொல் பக்தி மார்க்கத்தினுடையதாகும். ஜபம் என்றால் யாருடைய பெயரையாவது ஜெபிப்பது. இங்கோ ஆத்மா தன்னுடைய தந்தையை நினைவு செய்ய வேண்டும்.

நீங்கள் அறிவீர்கள், நாம் பாபாவை சதா நினைவு செய்து-கொண்டே இருந்து படிப்படியாக பவித்திரமாக ஆகி-முக்திதாமம்-சாந்திதாமத்திற்குச் சென்று சேர்ந்து விடுவோம். டிராமாவிலிருந்து விடுபட்டு விடுவோம் என்பதில்லை. முக்தி என்பதன் அர்த்தமாவது-துக்கத்திலிருந்து விடுபட்டு சாந்திதாமம் சென்று பிறகு சுகதாமம் வருவோம். யார் பவித்திரமாகின்றனரோ, அவர்கள் சுகத்தை அனுபவிக்கின்றனர். அபவித்திர மனிதர்கள் அவர் களுக்கு உதவி செய்கின்றனர். பவித்திரமானவர் களுக்கு மகிமை உள்ளது. இதில் தான் முயற்சி உள்ளது. கண்கள் மிகவும் ஏமாற்றி விடுகின்றன. கீழே விழுந்து (விகாரி ஆகி) விடுகின்றனர். கீழே-மேலேயோ அனை வருக்கும் ஆகத் தான் செய்கின்றது. கிரகச்சாரம் என்பது அனைவருக்கும் ஏற்படுகின்றது. பாபா சொல்கிறார், குழந்தைகள் கூட புரிய வைக்க முடியும் என்று. பிறகு சொல்கின்றனர், மாதா குரு வேண்டும் என்று. ஏனென்றால் இப்போது மாதா குருவின் நடைமுறை உள்ளது. முன்பு பிதாக்களினுடையதாக இருந்தது. இப்போது முதல்-முதலில் கலசம் மாதாக்களுக்குக் கிடைக்கின்றது. மாதாக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். குமாரிகள் துôய்மைக்காக ராக்கி கட்டுகின்றனர். பகவான் சொல்கிறார், காமம் மகாசத்ரு. அதன் மீது வெற்றி கொள்ளுங்கள். இரட்சாபந்தன் தூய்மையின் அடையாளமாகும். தூய்மையாகவோ ஆவதில்லை. அவை அனைத்தும் செயற்கை யான ராக்கி. யாரும் தூய்மை ஆவது கிடையாது. இதற்கு ஞானம் வேண்டும். இப்போது நீங்கள் ராக்கி கட்டு கிறீர்கள். அர்த்தத்தையும் புரிய வைக்கிறீர்கள். எப்படி சீக்கியர்களுக்குக் கங்கணம் அடையாளமாக உள்ளது. ஆனால் தூய்மையாகவோ ஆவதில்லை. தூய்மையற்றவர்களைப் தூய்மையாக்குபவர், அனைவருக்கும் சத்கதி அளிப்பவர் ஒருவர் தான். அவரும் தேகதாரி அல்ல. தண்ணீரின் கங்கையோ இந்தக் கண்களால் பார்க்கக் கூடியதாக உள்ளது. சத்கதி அளிக்கக் கூடிய வள்ளலாகிய பாபாவை இந்தக் கண்களால் பார்க்க முடியாது. ஆத்மாவை யாராலும் பார்க்க முடியாது-அது என்ன பொருள் என்று. சொல்லவும் செய்கின்றனர், நமது சரீரத்திற்குள் ஆத்மா உள்ளது என்று. அதைப் பார்த்திருக்கிறீர்களா? இல்லை என்று தான் சொல்வார்கள். மற்ற அனைத்துப் பொருட் களும்-எதற்கெல்லாம் பெயர் உள்ளதோ, அவற்றையெல்லாம் பார்க்க முடியும். ஆத்மாவுக்கும் கூட பெயர் உள்ளது. சொல்லவும் செய்கின்றனர், புருவ மத்தியில் ஒரு அழகான அற்புதமாக ஜொலிக்கின்றது என்று. ஆனால் அதைப் பார்க்க முடியாது. பரமாத்மாவையும் நினைவு செய்கின்றனர். அவரைப் பார்க்க முடியாது. லட்சுமி-நாராயணரை இந்தக் கண்களால் பார்க்க முடியும். லிங்கத்துக்குப் பூஜை செய்கின்றனர் என்ற போதிலும் அது ஒன்றும் யதார்த்த ரீதியிலானது கிடையாது இல்லையா? பார்த்த போதிலும் அதைப் பற்றித் தெரியாது. பரமாத்மா என்னவாக இருக்கிறார்? இதை யாராலும் அறிந்து கொள்ள முடியாது. ஆத்மாவோ மிகச் சிறிய புள்ளி. அதைப் பார்க்க முடியாது. ஆத்மாவையும் பார்க்க முடியாது, பரமாத்மாவையும் பார்க்க முடியாது. அறிந்து கொள்ள முடியும். இப்போது நீங்கள் அறிவீர்கள், நம்முடைய பாபா வந்திருக்கிறார், இவருக்குள் (பிரம்மாவுக்குள்). இந்த சரீரத்திற்குத் தம்முடைய ஆத்மாவும் உள்ளது. பிறகு பரமபிதா பரமாத்மா சொல்கிறார்-நான் இவருடைய ரதத்தில் அமர்ந்துள்ளேன். அதனால் பாப்தாதா எனச் சொல்கிறீர்கள். இப்போது தாதாவையோ உங்கள் கண்களால் பார்க்கிறீர்கள். தந்தையைப் பார்க்கவில்லை. அறிந்து கொண்டிருக்கிறீர்கள், பாபா ஞானக்கடலாக உள்ளார். அவர் இந்த சரீரத்தின் மூலம் நமக்கு ஞானம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் ஞானக்கடலாக, பதித-பாவனராக உள்ளார். நிராகாராக இருப்பவர் எப்படி வழி சொல்வார்? பிரேரணை (தூண்டுதல்) மூலமாகவோ எந்த ஒரு காரியமும் நடைபெறுவதில்லை. பகவான் வருகிறார் என்பது யாருக்கும் தெரியாது. சிவஜெயந்தியும் கொண்டாடுகின்றனர் என்றால் நிச்சயமாக இங்கே வந்திருப்பார் இல்லையா? நீங்கள் அறிவீர்கள், இப்போது அவர் நமக்குப் படிப்பு சொல்லித் தந்து கொண்டி ருக்கிறார். பாபா இவருக்குள் வந்து கற்றுத் தருகிறார். பாபாவை முழுமையாக அறிந்திராத காரணத்தால் நிச்சய புத்தி இல்லாத காரணத்தால் 8-10 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட கைவிட்டு விடுகின்றனர். மாயா முற்றிலுமாக குருடர்களாக ஆக்கி விடுகின்றது. பாபாவுடையவர்களாக ஆகிப் பிறகு கைவிடுகின்றனர் என்றால் பதவி கீழானதாக ஆகி விடுகின்றது. இப்போது குழந்தை களாகிய உங்களுக்கு பாபாவின் அறிமுகம் கிடைத்துள்ளது என்றால் மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும். ரிஷி-முனி முதலானவர்கள் நேத்தி-நேத்தி (தெரியாது-தெரியாது) எனச் சொல்லிச் சென்றுள்ளனர். முன்பு நீங்களும் கூட அறியாமல் இருந்தீர்கள். இப்போது நீங்கள் சொல்வீகள், ஆம், நாங்கள் அறிவோம் என்றால் (ஆஸ்திகர்) ஆஸ்திக்கு உரியவர் ஆகி விட்டீர்கள். சிருஷ்டியின் சக்கரம் எப்படிச் சுற்றுகிறது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். முழு உலகம் மற்றும் நீங்களும் கூட இந்தப் படிப்புக்கு முன்பு நாஸ்திகர்களாக இருந்தீர்கள். இப்போது பாபா புரிய வைத்துள்ளார் என்றால் நீங்கள் சொல்கிறீர்கள், எங்களுக்குப் பரமபிதா பரமாத்மா கற்றுத் தந்திருக்கிறார், எங்களை ஆஸ்திகராக ஆக்கியிருக்கிறார் என்று. நாம் படைப்பவர் மற்றும் படைப்பின் முதல்-இடை-கடை பற்றி அறியாதிருந்தோம். பாபா தான் படைப்பவர், பாபா தான் சங்கமயுகத்தில் வந்து புது உலகின் ஸ்தாபனையும் செய்கிறார். மேலும் பழைய உலகின் விநாசமும் செய்கிறார். பழைய உலகின் விநாசத்திற்காக இந்த மகாபாரத யுத்தம். இதற்காக அச்சமயம் கிருஷ்ணர் இருந்ததாகப் புரிந்து கொண்டுள்ளனர். இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், நிராகார் தந்தை இருந்தார், அவரைப் பார்க்க முடியாது. கிருஷ்ணருக்கோ சரீர உருவம் உள்ளது, பார்க்க முடியும். சிவனைப் பார்க்க முடியாது. கிருஷ்ணரோ சத்யுகத்தின் இளவரசர். அதே தோற்ற அமைப்பு பிறகு இருக்காது. கிருஷ்ணரும் கூட எப்போது எப்படி வந்தார்-இதையும் யாரும் அறிந்திருக்கவில்லை. கிருஷ்ணரைக் கம்சனின் சிறையில் இருப்பதாகக் காட்டுகின்றனர். கம்சன் சத்யுகத்தில் இருந்தானா என்ன? இது எப்படி இருக்க முடியும்? கம்சன் என்று அசுரனுக்குத் தான் சொல்லப் படுகிறது. இச்சமயம் முழுவதுமே அசுர சம்பிர தாயமாக உள்ளது இல்லையா? ஒருவர் மற்றவரை அடிக்கவும் வெட்டவுமாக உள்ளனர். தெய்வீக உலகம் இருந்தது என்பதை மறந்து விட்டுள்ளனர். ஈஸ்வரிய தெய்வீக உலகத்தை ஈஸ்வரன் ஸ்தாபனை செய்தார். இதுவும் உங்களுடைய புத்தியில் உள்ளது - நம்பர்வார் புருஷார்த்தத்தின் அனுசாரம். இப்போது நீங்கள் ஈஸ்வரியப் பரிவாரம். பிறகு அங்கே தெய்வீகப் பரிவாரம் இருக்கும். இச்சமயம் ஈஸ்வரன் உங்களைத் தகுதி யுள்ளவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார், சொர்க்கத்தின் தேவி-தேவதை ஆக்குவதற்காக. பாபா படிப்பு சொல்லித் தந்து கொண்டிருக்கிறார். இந்த சங்கமயுகத்தை யாரும் அறிந்திருக்கவில்லை. எந்த ஒரு சாஸ்திரத்திலும் இந்தப் புருஷோத்தம சங்கமயுகத்தின் விஷயம் கிடையாது. புருஷோத்தம யுகம் என்றால் அங்கே புருஷோத்தம் (ஆத்மாக்களுள் உத்தமமானவர்களாக) ஆக வேண்டியுள்ளது. சத்யுகத்தைப் புருஷோத்தம யுகம் எனச் சொல்வார்கள். இச்சமயமோ மனிதர்கள் புருஷோத்த மமாக (உயர்ந்த ஆத்மாவாக) இல்லை. இவர்களை மிகத் தாழ்ந்த தமோபிரதானமானவர்கள் எனச் சொல்வார்கள். இந்த அனைத்து விஷயங்களையும் பிராமணர்களாகிய உங்களைத் தவிர வேறு யாரும் புரிந்துக் கொள்ள முடியாது. பாபா சொல்கிறார், இது அசுர பிரஷ்டாச்சாரி (மிகத் தாழ்ந்த) உலகம். சத்யுகத்தில் இது போன்ற எந்த ஒரு சூழ்நிலையும் இருக்காது. அது சிரேஷ்டாச்சாரி (மிக உயர்ந்த) உலகமாக இருந்தது. அவர்களின் சித்திரங்கள் உள்ளன. நிச்சயமாக இவர்கள் சிரேஷ்டாச் சாரி உலகத்தின் எஜமானர்களாக இருந்தனர். பாரதத்தின் ராஜாக்கள் இங்கே இருந்து சென்றுள்ளனர், அவர்கள் பூஜிக்கப்படுகின்றனர். பூஜைக்குரிய, தூய்மையாக இருந்தவர்கள் தான் பிறகு பூஜாரி ஆனார்கள். பூஜாரி என்று பக்தி மார்க்கத்திற்கும், பூஜைக்குரியவர் என்று ஞான மார்க்கத்திற்கும் சொல்லப் படுகின்றது. பூஜைக்குரியவரே பூஜாரியாகவும், பூஜாரியே பிறகு பூஜைக்குரியவராகவும் எப்படி ஆகின்றனர்? இதையும் நீங்கள் அறிவீர்கள், இவ்வுலகில் ஒருவர் கூட பூஜைக்குரியவர் இருக்க முடியாது. பூஜைக்குரியவர் என்று பரமபிதா பரமாத்மா மற்றும் தேவதைகள் தான் சொல்லப்படுகின்றனர். பரமபிதா பரமாத்மா அனைவரின் பூஜைக்குரியவர். அனைத்து தர்மங்களைச் சேர்ந்தவர் களும் அவருக்குப் பூஜை செய்கின்றனர். அத்தகைய தந்தை யின் ஜென்மம் இங்கே தான் பாடப் படுகின்றது. சிவஜெயந்தி கொண்டாடப்படுகிறது இல்லையா? ஆனால் அவருடைய ஜென்மம் பாரதத்தில் நடைபெறுகின்றது, என்பது மனிதர்களுக்கு எதுவும் தெரியாது. இப்போதோ சிவஜெயந்திக்கு விடுமுறை கூட விடுவதில்லை. ஜெயந்தி கொண்டாடுங் கள் அல்லது கொண்டாடாமல் இருங்கள், அது உங்கள் விருப்பம். அதிகாரப் பூர்வ விடுமுறை கிடையாது. யார் சிவஜெயந்தியை மதிப்பதில்லையோ, அவர்கள் தங்களின் காரியத்தில் சென்று விடுகின்றனர். அநேக தர்மங்கள் உள்ளன இல்லையா? சத்யுகத்தில் இத்தகைய விசயங்கள் இருப்ப தில்லை. அங்கே இந்தச் சூழ்நிலையே இருக்காது. சத்யுகம் என்பதே புது உலகம், ஒரே தர்மம். அங்கே நமக்குப் பின் சந்திர வம்சி இராஜ்யம் இருக்கும் என்பது தெரியாது. இங்கே நீங்கள் அனைத்தும் அறிவீர்கள் - எதெல்லாம் நடந்து முடிந்துள்ளது என்பதை. சத்யுகத்தில் நீங்கள் இருப்பீர்கள். அங்கே எந்தக் கடந்த காலத்தை நினைவு செய்வீர்கள்? கடந்து சென்றதோ கலியுகம். அதனுடைய சரித்திர-பூகோளத்தை அறிவதால் என்ன பயன்?

இங்கே நீங்கள் அறிவீர்கள், நாம் பாபாவுடன் அமர்ந்துள்ளோம். பாபா ஆசிரியராகவும் உள்ளார், குருவாகவும் உள்ளார். தந்தை வந்துள்ளார், அனைவருக்கும் சத்கதி அளிப்பதற்காக. ஆத்மாக்கள் அனைவரையும் நிச்சயமாக அழைத்துச் செல்வார். மனிதர்களோ தேக அபிமானத்தில் வந்து சொல்கின்றனர், அனைத்தும் மண்ணோடு மண்ணாகப் போகப் போகிறது. ஆத்மாக்களோ போய் விடும், மற்றப்படி இந்த சரீரம் மண்ணாலானது. இந்தப் பழைய சரீரம் அழிந்து போகும் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. நாம் ஆத்மா ஒரு சரீரத்தை விட்டுப்போய் வேறொன்றை எடுத்துக் கொள்வோம். இது இந்த உலகில் நமது கடைசி ஜென்மம். அனைவரும் பதீத். சதா தூய்மை யாகவோ யாருமே இருக்க முடியாது. சதோபிரதான், சதோ, ரஜோ, தமோ இருக்கவே செய்கின்றனர். அந்த மனிதர்களோ, அனைவரும் ஈஸ்வரனின் ரூபங்கள் எனச் சொல்லி விடுகின்றனர். ஈஸ்வரன் தனக்கு அநேக ரூபங்களை உருவாக்கிக் கொண்டுள்ளார், விளையாட்டை நடத்துவதற்காக. கணக்கு-வழக்கு எதையும் அறிந்து கொள்ளவில்லை. விளையாட்டை நடத்துபவரையும் அறிந்திருக்கவில்லை. பாபா தான் அமர்ந்து உலகின் சரித்திர-பூகோளத்தைப் புரிய வைக்கிறார். விளையாட்டில் ஒவ்வொருவரின் பார்ட்டும் தனித்தனியாகும். அனைவரின் அந்தஸ்தும் தனித்தனி. யாருடைய அந்தஸ்து உயர்வாக உள்ளதோ, அப்படிபட்டவருக்கு மகிமை உள்ளது. இந்த அனைத்து விசயங்களையும் பாபா சங்கம யுகத்தில் தான் புரிய வைக்கிறார். சத்யுகத்தில் பிறகு சத்யுகத்தின் பார்ட் நடைபெறும். அங்கே இந்த விசயங்கள் இருக்காது. இங்கே உங்களுக்கு சிருஷ்டிச் சக்கரத்தின் ஞானம் சுற்றிக் கொண்டே உள்ளது. உங்களுடைய பெயரே சுயதரிசனச் சக்கரதாரி. லட்சுமி-நாராயணருக்கு சுயதரிசனச் சக்கரம் தரப்படுவதில்லை. இது இங்கே (சங்கம யுகத்தில்) உள்ளது தான். மூலவதனத்தில் ஆத்மாக்கள் தான் வசிக்கின்றனர். சூட்சுமவதனத்தில் எதுவும் இல்லை. மனிதர்கள், மிருகங்கள், பறவைகள் எல்லாம் இங்கே உள்ளன. சத்யுகத்தில் மயில் முதலியவற்றைக் காட்டுகின்றனர். அங்கே மயிலின் இறகைப் பிரித்தெடுத்து அணிந்து கொள்வதில்லை. மயிலுக்கு அங்கே துக்கம் கொடுக்க மாட்டார்கள். கீழே விழுந்த மயிலின் தோகையைக் கிரீடத்தில் அணிந்து கொள்வார்கள் என்பதும் கிடையாது. கிரீடத்திலும் பொய்யான அடையாளம் காட்டப் பட்டுள்ளது. அங்கே அனைத்தும் அழகான பொருள்களாக இருக்கும். அழுக்கான எந்த ஒரு பொருளின் பெயர்-அடையாளமும் இருக்காது. பார்த்த உடனே வெறுப்பு வருகிற மாதிரியான எந்த ஒரு பொருளும் அங்கே இருப்பதில்லை. இங்கோ வெறுப்பு வருகிறது இல்லையா? அங்கே மிருகங்களுக்கும் கூட துக்கம் ஏற்படுவதில்லை. சத்யுகம் எவ்வளவு முதல் தரமானதாக இருக்கும்! பெயரே சொர்க்கம், ஹெவன், புது உலகம். இங்கோ பழைய உலகத்தில் பாருங்கள், அதிக மழையின் காரணத்தால் கட்டடங்கள் விழுந்து கொண்டே இருக்கின்றன. மனிதர்கள் இறந்து போகின்றனர். நிலநடுக்கம் வரும், அனைவரும் புதையுண்டு மடிந்து போவார் கள். சத்யுகத்தில் மிகக் கொஞ்சம் பேர் தாம் இருப்பார்கள். பிறகு பின்னாளில் மக்கள் தொகை அதிகமாகிக் கொண்டே போகும்.. முதலில் சூரியவம்சி இருப்பார்கள். எப்போது உலகம் 25 சதவிகிதம் பழையதாக ஆகின்றதோ, அப்போது பின்னால் சந்திரவம்சி வருவார்கள். சத்யுகம் 1250 வருடங்கள் இருக்கும். அது 100 சதவிகிதம் புது உலகம். அங்கே தேவி-தேவதைகள் இராஜ்யம் செய்கிறார்கள். உங்களிலும் கூட அநேகர் இவ்விஷயங்களை மறந்து விடுகின்றனர். இராஜ தானியோ ஸ்தாபனை ஆகவே செய்யும். மனமுடைந்து போகக் (ஹார்ட்ஃபெயில் ஆகக்) கூடாது. இது புருஷார்த்தத்தின் விஷயம். பாபா அனைத்துக் குழந்தைகளையும் சமமாகப் புருஷார்த்தம் செய்ய வைக்கிறார். நீங்கள் தங்களுக்காக உலகத்தில் சொர்க்கத்தின் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கிறீர்கள். நாம் என்னவாக ஆகப் போகிறோம் என்று தன்னைத் தான் பார்க்க வேண்டும். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) இந்தப் புருஷோத்தம யுகத்தில் தேவி-தேவதை ஆவதற்கான படிப்பைப் படித்து, தன்னைத் தகுதியுள்ளவராக ஆக்கிக் கொள்ள வேண்டும். புருஷார்த்தத்தில் மனமுடைந்து போகக் கூடாது.

2) இந்த எல்லையற்ற விளையாட்டில் ஒவ்வொரு நடிகரின் பார்ட் மற்றும் அந்தஸ்து (நிலை) தனித்தனியானது. எப்படி ஒருவரின் அந்தஸ்த்துக்கு ஏற்றபடி அவருக்கு மதிப்புக் கிடைக்கிறது. இந்த அனைத்து ரகசியங்களையும் புரிந்து கொண்டு உலகத்தின் சரித்திர-பூகோளத்தைச் சிந்தனை செய்து சுயதரிசனச் சக்கரதாரி ஆக வேண்டும்.

வரதானம்:
தந்தையின் ஒவ்வொரு ஸ்ரீமத்தையும் கடைபிடிக்கக் கூடிய உண்மையான நாயகி ஆகுக.

எந்தக் குழந்தைகள் சதா ஒரு தந்தையின் அன்பில் மூழ்கி இருக்கிறார்களோ, அவர்களுக்கு தந்தையின் ஒவ்வொரு வார்த்தையும் பிரியமானதாக இருக்கும், கேள்விகள் அழிந்து விடும். பிராமண வாழ்க்கையின் அஸ்திவாரம் அன்பு. யார் அன்பான நாயகி ஆத்மாக்களோ, அவர்களுக்கு தந்தையின் ஸ்ரீமத் கடைபிடிப்பதில் கஷ்டமாக அனுபவமாகாது. அன்பின் காரணத்தினால் சதா இந்த ஆர்வம் இருக்கும் - பாபா என்ன கூறுகின்றாரோ, அது எனக்காகத் தான், நான் செய்ய வேண்டும். அன்பான ஆத்மாக்கள் பறந்த உள்ளமுடையவர்களாக இருப்பார்கள். ஆகையால் அவர் களுக்கு ஒவ்வொரு பெரிய விசயமும் சிறியதாக ஆகிவிடும்.

சுலோகன்:
எந்த ஒரு விசயத்திற்கும் வருந்துகின்றோம் (பீல்) எனில் இது தான் தோல்வி (பெயில்) ஆவதற்கான அடையாளமாகும்.

அவ்யக்த சமிக்ஞை: இப்போது ஈடுபாடெனும் அக்னியை மூட்டி யோகத்தை ஜூவாலா ரூபமாக்குங்கள்.

எரிமலை (ஜுவாலா) சொரூப ஸ்திதியின் அனுபவம் செய்வதற்காக நிரந்தர நினைவிற்கான சுடர் எரிந்து கொண்டே இருக்க வேண்டும். இதற்கான எளிய விதி - சதா தன்னை சாரதி மற்றும் சாட்சி என்று புரிந்து கொண்டு நடங்கள். ஆத்மா இந்த ரதத்தில் சாரதியாக இருக்கிறது - இந்த நினைவு தானாகவே இந்த ரதத்திலிருந்து (தேகம்) அல்லது எந்த விதமான தேக உணர்விலிருந்து விடுபட்ட வர்களாக ஆக்கி விடும். தன்னை சாரதி என்று புரிந்து கொள்வதன் மூலம் அனைத்து கர்மேந்திரி யங்களும் தனது கட்டுப்பாட்டில் இருக்கும். சூட்சும சக்திகள் மனம்-புத்தி-சன்ஸ்காரம் இவைகளும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.