12-09-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! இப்பொழுது இந்த
இராவண இராஜ்யம், பழைய உலகம் முடிந்து புது உலகம் வந்து
கொண்டிருக்கிறது. ஆகையால் ஸ்ரீமத் படி நடந்து தூய்மை ஆனீர்கள்
என்றால் சிரேஷ்டமான தேவி தேவதை ஆவீர்கள்.
கேள்வி:
தந்தை தன்னுடைய குழந்தைகளுக்கு
சத்திய நாராயணருடைய கதை சொல்கின்றார். அந்தக் கதையின் இரகசியம்
என்ன ?
பதில்:
இராஜ்யத்தைப் பெறுவது மற்றும்
இழப்பது என்பதே அதன் இரகசியமாகும். தந்தைக்கு அல்லாஹ் கிடைத்து
விட்டார், எனவே அற்பமானவற்றை விட்டுவிட்டார். யார் விஷ்வத்தின்
எஜமானர்களாக இருந்தனரோ அவர்களே 84 ஜென்மங்கள் எடுத்து
இராஜ்யத்தை இழந்து விடுகின்றனர். பிறகு, தந்தை அவர்களுக்கு
இராஜ்யத்தை அளிக்கின்றார். பதீதத்திலிருந்து பாவனம் ஆவது,
அற்பமானவற்றை விட்டுவிட்டு இராஜ்யத்தைப் பெறுவது - இந்த சத்திய
நாராயணனின் கதையை தந்தை சொல்கிறார்.
பாடல்:
கடைசியில் அந்த நாளும் இன்று
வந்தது...
ஓம் சாந்தி.
ஓம் சாந்தியின் அர்த்தத்தை ஆன்மிகத் தந்தை
புரியவைத்திருக்கிறார். ஓம் என்றால் நான் ஆத்மா மற்றும் எனது
சரீரம் என்பதாகும். ஆத்மா பார்வைக்குத் தெரிவதில்லை. நான் ஆத்மா,
இது எனது சரீரம் என்பது புரிந்து விட்டது. ஆத்மாவில் தான் மனம்,
புத்தி உள்ளது. சரீரத்தில் புத்தி இல்லை. ஆத்மாவில் தான் நல்ல
அல்லது கெட்ட சமஸ்காரங்கள் இருக்கின்றன. முக்கியமானது ஆத்மா
தான். அந்த ஆத்மாவை எவரும் காண இயலாது. சரீரத்தை ஆத்மா
பார்க்கிறது. ஆத்மாவை சரீரம் காண முடியாது. ஆத்மா பிரிந்து
விடுவதால் சரீரம் ஜடம் ஆகிவிடுகிறது என்று அறிந்து கொள்ள
முடியும் . ஆத்மா கண்களுக்குத் தென்படுவதில்லை, சரீரம்
தென்படுகிறது. அவ்வாறே, ஆத்மாவின் தந்தை யாரோ, யாரை ஓ காட் ஃபாதர்
என்று கூறுகின்றனரோ அவரும் கண்களுக்குப் புலப்படுவதில்லை.
அவரைப் புரிந்து கொள்ள இயலும், அறிந்து கொள்ள இயலும்.
ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள். சரீரத்தில் வரும்பொழுதே,
இவர்கள் சகோதரன்-சகோதரி என்று கூறுவார்கள். பரமபிதா பரமாத்மா
ஆத்மாக்களின் தந்தை ஆவார். உலகாய சகோதரன் சகோதரி ஒருவரை ஒருவர்
காண முடியும். அனைத்து ஆத்மாக்களின் தந்தை ஒருவர், அவரைக் காண
இயலாது. எனவே, பழைய உலகை புதியதாக மாற்றுவதற்காகத் தந்தை
வந்திருக்கிறார். புதிய உலகம் சத்யுகம் இருந்தது. இந்த பழைய
உலகம் கலியுகம் ஆகும். இது இப்பொழுது மாற வேண்டும். எவ்வாறு
பழைய வீடு இடிக்கப்பட்டு புதிய வீடு கட்டப்படுகிறதோ, அவ்வாறு
இந்த பழைய உலகம் அழியப் போகின்றது. சத்யுகத்திற்குப் பின்
திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் பிறகு சத்யுகம் அவசியம்
வரவேண்டும். உலகத்தின் வரலாறு பூகோளம் திரும்பவும் நடைபெற
வேண்டும். சத்யுகத்தில் தேவி தேவதைகளின் இராஜ்யம் நடக்கிறது.
சூரியவம்சம் மற்றும் சந்திரவம்சம் அரைகல்பம் நடக்கிறது. அவர்களை
இலட்சுமி-நாராயணரின் ராஜ வம்சம், இராமர் -சீதையின் ராஜ வம்சம்
என்று கூறப்படுகின்றது. எனவே, இது சகஜமானது அல்லவா! பிறகு,
துவாபர, கலியுகத்தில் மற்ற தர்மங்கள் வருகின்றன. பின்னர், எந்த
தேவி தேவதைகள் பவித்திரமாக இருந்தனரோ, அவர்கள் அபவித்திரம்
ஆகிவிடுகின்றனர். இதை இராவண இராஜ்யம் என்று சொல்லப்படுகின்றது.
இராவணனை வருடா வருடம் எரிக்கின்றனர், ஆனாலும் எரிவது இல்லை.
அனைவருடைய பெரிய எதிரி இராவணன்! ஆகையினால் இராவணனை எரிக்கும்
பழக்கம் ஏற்பட்டுவிட்டது. பாரதத்தின் முதல் நம்பர் எதிரி
இராவணன் மற்றும் முதல் நம்பர் நண்பன், சதா சுகம்
கொடுக்கக்கூடியவர் இறைவன் ஆவார். இறைவனை நண்பன் என்று சொல்
கின்றனர் அல்லவா. இதைப்பற்றிய ஒரு கதையும் உள்ளது. எனவே, இறைவன்
நண்பனாக இருக்கிறார். இராவணன் எதிரியாக இருக்கிறார். இறை நண்பரை
ஒருபோதும் எரிப்பதில்லை. இராவணன் எதிரி. ஆகையால் 10 தலைகள்
உடைய இராவணனை உருவாக்கி அதை வருடா வருடம் எரிக்கின்றனர். நமக்கு
இராம இராஜ்யம் வேண்டும் என்று காந்திஜியும் கூறினார். இராம
இராஜ்யத்தில் சுகம் இருக்கிறது. இராவண இராஜ்யத்தில் துக்கம்
இருக்கிறது. இப்பொழுது இதை யார் புரிய வைக்கின்றார்? பதீத
பாவனர் தந்தை, சிவபாபா, பிரம்மா தாதா . பாபா எப்பொழுதும்
பாப்தாதா என்றே கையெழுத்து போடுகிறார். பிரஜாபிதா பிரம்மாவும்
அனைவருக்கும் உரியவராகவே இருப்பார். அவர் ஆதாம்
என்றழைக்கப்படுகின்றார். அவரை கிரேட்கிரேட் கிராண்ட் ஃபாதர்
என்று கூறப்படுகிறது. மனித சிருஷ்டியில் பிரஜாபிதா ஆகிவிட்டார்.
பிரஜாபிதா பிரம்மா மூலம் பிராமணர் பிறகு பிராமணரிலிருந்து
தேவி-தேவதை ஆகின்றனர். தேவதை, சத்ரியர், வைஷ்யர், சூத்திரர்
ஆகின்றனர். இவரை பிரஜாபிதா பிரம்மா மனித சிருஷ்டியின் மூத்தவர்
என்று கூறப்படுகின்றது. பிரஜாபிதா பிரம்மாவிற்கு எத்தனை அதிக
மான குழந்தைகள் உள்ளனர். பாபா-பாபா என கூறிக்கொண்டே
இருக்கின்றனர். இவர் சாகார பாபா ஆவார். சிவபாபா நிராகார பாபா
ஆவார். பிரஜாபிதா பிரம்மா மூலம் புதிய மனித சிருஷ்டியைப்
படைக்கின்றார் என்று பாடப் படுகின்றது. இது பதீத உலகம் இராவண
இராஜ்யம் ஆகும். இப்பொழுது இராவணனுடைய அசுர உலகம் முடிந்து
விடும், அதற்காகவே இந்த மகாபாரத யுத்தம் நடைபெறுகிறது. பிறகு,
சத்யுகத்தில் இந்த இராவணன் எதிரியை எவரும் எரிப்பதில்லை.
இராவணன் இருப்பதே இல்லை. இந்த துக்கமான உலகத்தை உருவாக்கியதே
இராவணன் தான். யாரிடம் அதிகப் பணம் உள்ளதோ, பெரிய பெரிய
மாளிகைகள் முதலியவை உள்ளனவோ, அவர்கள் சொர்க்கத்தில்
இருக்கின்றார்கள் என்பதல்ல. சிலரிடம் கோடிகள் இருக்கின்றன,
ஆனால் சாந்தி இல்லை, பணம் முதலிய அனைத்தும் மண்ணில் கலந்துவிடப்
போகிறது என்று தந்தை புரிய வைக்கின்றார். புதிய உலகத்தில் புது
சுரங்கங்கள் வெளிப் படுகின்றன. அதன் மூலம் புது உலகத்தின்
மாளிகை முதலிய அனைத்தும் உருவாக்கப் படுகின்றன. இந்த பழைய உலகம்
இப்பொழுது முடிய வேண்டும். சத்யுகத்தில் விகார மற்றவர்களாக,
சம்பூர்ண நிர்விகாரிகளாக இருப்பார்கள். அங்கே யோக பலத்தின்
மூலம் குழந்தைகள் பிறக்கின்றனர். விகாரம் அங்கு கிடையாது. தேக
அபிமானம் கிடையாது, கோபம் கிடையாது, காமம் கிடையாது. 5
விகாரங்கள் இருக்காது. ஆகையால் அங்கு ஒருபோதும் இராவணனை
எரிப்பதில்லை. இங்கோ இராவண இராஜ்யம் நடக்கிறது, ஆகையால், ஹே!
பதீத பாவனரே! வாருங்கள், என்று அனைவரும் அழைக்கின்றனர். அவர்
விடுவிப்பவராகவும் (லிபரேட்டர்) இருக்கின்றார். அனைவருடைய
துக்கத்தையும் நீக்குபவர். இப்பொழுது அனை வரும் இராவண
இராஜ்ஜியத்தில் உள்ளனர். தந்தை வந்து விடுவிக்க வேண்டி யுள்ளது.
நீங்கள் தூய்மை ஆகுங்கள் என்று இப்பொழுது தந்தை கூறுகின்றார்.
இந்த பதீத உலகம் முடியப் போகின்றது. யார் ஸ்ரீமத்படி
நடப்பார்களோ அவர்கள் சிரேஷ்டமான தேவி தேவதை ஆவார்கள். வினாசம்
ஏற்படும், அனைவரும் அழிந்து விடுவர். பாக்கி யார்
தப்பிப்பார்கள்? யார் ஸ்ரீமத்படி பவித்திரமாக இருக்கின்றார்களோ,
அவர்களே தந்தையின் வழிப்படி நடந்து விஷ்வ இராஜ்யத்தின் ஆஸ்தியை
அடைகின்றார் கள். இந்த இலட்சுமி-நாராயணருடைய இராஜ்யம் இருந்தது
அல்லவா! இப்பொழுதோ இராவண இராஜ்யம் நடக்கிறது. இது முடியவேண்டும்.
சத்யுக இராம இராஜ்யம் ஸ்தாபனை ஆக வேண்டும். அந்த சீதையின் ராமர்
அல்ல. சாஸ்திரங்களிலோ மிகவும் தவறான விஷயங்கள்
எழுதப்பட்டிருக்கின்றன. இந்த முழு உலகமும் இலங்கை ஆகும். இதில்
இராவணனின் இராஜ்யம் நடக்கிறது. பாரதம் சத்யுகத்தில் தங்கக்
குருவியாக இருந்தது. அப்பொழுது வேறு எந்த இராஜ்யமும் கிடையாது.
தந்தை பாரதத்தில் வந்து மீண்டும் தங்கக் குருவியான சொர்க்கத்தை
உருவாக்குகிறார். மற்ற தர்மங்கள் என்ன வெல்லாம் உள்ளனவோ, அவை
அனைத்தும் அழிந்து விடும். கடலும் பொங்கி எழும். பாம்பே
என்னவாக இருந்தது? ஒரு சிறிய கிராமமாக இருந்தது. இப்போது
சத்யுக ஸ்தாபனை நடைபெறுகிறது, பிறகு பாம்பே முதலியவை இருக்காது.
சத்யுகத்தில் மிகக் குறைந்த மனிதர்களே இருக்கின்றனர். தலை
நகரமாக டெல்லி இருக்கும். அங்கு இலட்சுமி நாராயணருடைய இராஜ்யம்
இருக்கும். டெல்லி, சத்யுகத்தில் சொர்க்கமாக இருந்தது. டெல்லி
தான் சிம்மாசனமாக இருந்தது. இராம இராஜ்யத்திலும் டெல்லி தான்
தலை நகரமாக இருந்தது. ஆனால், இராம இராஜ்யத்தில் வைர
வைடூரியங்களாலான மாளிகைகள் இருந்தன, அளவிட முடியாத சுகம்
இருந்தது. தந்தை கூறுகின்றார், நீங்கள் விஷ்வ இராஜ்யத்தை (உலக
ஆட்சி) இழந்து விட்டீர்கள். நான் மீண்டும் கொடுக்கின்றேன்.
நீங்கள் எனது வழிப்படி நடங்கள். சிரேஷ்டம் ஆகவேண்டும் எனில்,
என்னை மட்டுமே நினைவு செய்யுங் கள், வேறு எந்த தேகதாரியையும்
நினைக்காதீர்கள். தன்னை ஆத்மா எனப் புரிந்து தந்தையை நினைவு
செய்தீர்கள் என்றால், நீங்கள் தமோபிரதானத்திலிருந்து
சதோபிரதானம் ஆகிவிடு வீர்கள். நீங்கள் என்னை வந்தடைவீர்கள்.
நீங்கள் எனது கழுத்து மாலை ஆகி பிறகு விஷ்ணுவின் கழுத்து மாலை
ஆகிவிடுவீர்கள். மாலையில், மேலே நான் இருக்கிறேன். பிறகு
இருக்கும் இருவர் -பிரம்மா, சரஸ்வதி. அவர்களே சத்யுகத்தின்
மகாராஜா, மகாராணி ஆகின்றார்கள். பிறகு, முழு மாலையும் யார்
வரிசைக்கிரமமாக சிம்மாசனத்தில் அமர்கின்றார் களோ, அவர்களுடைய
தாகும். நான் பாரதத்தை இந்த பிரம்மா, சரஸ்வதி மற்றும்
பிராமணர்கள் மூலமாக சொர்க்க மாகப் படைக்கின்றேன். யார்
உழைக்கின்றார்களோ, பின்னர் அவர் களுடைய நினைவுச் சின்னம்
உருவாகின்றன . ஆத்மாக்கள் வசிக்கும் இடம் பரந்தாமம் ஆகும். அதை
பிரம்மாண்டம் என்றும் கூறுகின்றனர். ஆத்மாக்களாகிய நாம்
அனைவரும் தந்தையுடன் இனிமையான வீட்டில் இருக்கக் கூடியவர்கள்.
அது சாந்திதாமம். நாம் முக்திதாமம் செல்ல வேண்டும் என மனிதர்கள்
விரும்புகின்றனர். ஆனால், எவரும் திரும்பிச் செல்ல இயலாது.
அனைவரும் நடிப்பதற்கு வந்து தான் ஆகவேண்டும். அதுவரை தந்தை
உங்களை தயார் செய்து கொண்டே இருக்கின்றார். நீங்கள்
தயாராகிவிட்டால் அங்கிருக்கும் ஆத்மாக்கள் அனைவரும்
வந்துவிடுவர், பின்னர் முடிந்துவிடும். நீங்கள் புது உலகில்
இராஜ்யம் செய்வீர்கள். பிறகு, வரிசைக்கிரமமாக சக்கரம் சுழலும்.
கடைசியில் அந்த நாளும் இன்று வந்தது என்று பாடலில் கேட்டீர்கள்
அல்லவா! பக்தி மார்க்கத்தில் ஏமாற்றத்தை அடைந்து கொண்டே
இருந்தீர்கள். தந்தை ஞான சூரியன். ஞான சூரியன் உதயமானது...
இப்பொழுது உங்களுடைய புத்தியில் சிருஷ்டியின் ஆதி, மத்யம்,
அந்திமத்தின் ஞானம் உள்ளது. எந்த பாரதவாசிகள் நரகவாசிகளாக
இருக்கின்றனரோ, அவர்கள் பிறகு சொர்க்க வாசிகள் ஆவார்கள் என்பதை
அறிந்திருக்கிறீர்கள். மீதம் உள்ள அனைத்து ஆத்மாக்களும்
சாந்திதாமம் சென்றுவிடுவர். மிகக் குறைவாகப் புரிய வைக்க
வேண்டும். தந்தை இராஜ்யம். தந்தை மூலம் அரசாட்சி கிடைக்கின்றது.
அற்பமானது முடிந்துவிடுகிறது. அதன் கதையைத் தந்தை புரிய
வைக்கின்றார். இது உண்மையான சத்திய நாராயணரின் கதை ஆகும். மற்ற
அனைத்தும் கட்டுக்கதைகள் ஆகும். பாபா நரனிலிருந்து நாராயணர்
ஆகுவதற்காக ஞானத்தைச் சொல்கின்றார். வரலாறு, பூகோளம் அல்லவா!
இலட்சுமி, நாராயணரின் இராஜ்யம் எப்பொழுது ஆரம்பம் ஆனது? எதுவரை
நடந்தது? எனவே, கதையாகவும் இருக்கிறது அல்லவா! யார் விஷ்வத்தின்
மீது இராஜ்யம் செய்தார்களோ, அவர்கள் 84 பிறவிகள் எடுத்து
முற்றிலும் தமோபிரதானம் ஆகிவிட்டார்கள் .
நான் அதே இராஜ்யத்தை மீண்டும் ஸ்தாபனை செய்கின்றேன் என்று
இப்பொழுது தந்தை கூறுகின்றார். நீங்கள் எவ்வாறு
பதீதத்திலிருந்து பாவனமாக, பாவனத்திலிருந்து பதீதமாக
ஆகின்றீர்கள் என்ற அந்த முழு வரலாறு பூகோளத்தை புரிய
வைக்கின்றார். முதன் முதலில் சூரியவம்சிகளின் இராஜ்யம் பிறகு
சந்திர வம்சிகளினுடையது... இதற்கிடையில் பௌத்த மதத்தவர்கள்,
இஸ்லாமியர்கள் பிறகு கிறிஸ்தவர்கள் வந்தனர். பின்னர், எந்த தேவி
தேவதை தர்மம் இருந்ததோ அது மறைந்துவிட்டது. பிறகு, உலகின்
வரலாறு பூகோளம் மறுபடியும் நடக்கும். சாஸ்திரங்களில்
பிரம்மாவின் ஆயுள் 100 வருடங்களாக காண்பிக்கப்பட்டுள்ளது. எந்த
பிரம்மாவிற்குள் தந்தை வந்து ஆஸ்தி அளிக்கின்றாரோ, அவருடைய
சரீரமும் அழிந்துவிடும். ஆத்மாக்களுக்கு ஆத்மாக்களின் தந்தை
சொல்கின்றார். அவரே பதீத பாவனர் ஆவார். மனிதர் மனிதரை பாவனம்
ஆக்க இயலாது. யார் சுயம் முக்தி அடைய முடிவதில்லையோ அவர்கள்
பிறரை எவ்வாறு விடுவிப்பார்கள். அவர்கள் அனைவரும் பக்தியைக்
கற்பிக்கும் அனேக குருக்களாக இருக்கின்றனர். இன்னாரை பக்தி
செய்யுங்கள் என்று சிலர் கூறுவார்கள், சிலர் சாஸ்திரம்
கேளுங்கள் என்று கூறுவார்கள். அனேக மட மடாந்திரங்கள் உள்ளன.
ஆகையினால் அனைவரும் இன்னும் அதிகமாக புத்தியற்றவர்கள்
ஆகிவிட்டனர். இப்பொழுது தந்தை வந்து புத்திவானாக ஆக்குகின்றார்.
இந்த இலட்சுமி, நாராயணர் புத்திவான்களாக, விஷ்வத்தின்
எஜமானர்களாக இருந்தார்கள் அல்லவா! இப்பொழுது எவ்வளவு ஏழ்மை
ஆகிவிட்டனர். பிறகு, சிவபாபா வந்து நரகவாசி யிலிருந்து
சொர்க்கவாசியாக ஆக்குகின்றார். இங்கு அதிர்ஷ்டம்
விழிப்படைந்திட வேண்டும் என்று தந்தை எவ்வளவு நல்ல முறையில்
புரிய வைக்கின்றார். மனிதர்களின் அதிர்ஷ்டத்தை விழிப்படையச்
செய்வதற்காகவே தந்தை வந்திருக்கிறார். அனைவரும் பதீதமாக துக்கம்
நிறைந்தவர்களாக இருக்கின்றனர் அல்லவா! அனைவரும் ஐயோ! ஐயோ! என்று
வினாசம் ஆகிவிடுவார்கள். ஆகையினால், ஐயோ, ஐயோ என்ற நிலை வரும்
முன்பே எல்லையற்ற தந்தையிடமிருந்து கொஞ்சம் ஆஸ்தியைப் பெற்றுக்
கொள்ளுங் கள் என்று பாபா கூறு கின்றார். இந்த உலகத்தில்
என்னவெல்லாம் பார்க்கின்றீர்களோ அவை அனைத்தும் அழியப் போகின்றன.
பாரதத்தின் வீழ்ச்சி, பாரதத்தின் உயர்வு. இது பாரதத் தினுடைய
விளையாட்டு ஆகும். உயர்வு சத்யுகத்தில் ஏற்படும். இப்பொழுது
கலியுகத்தில் வீழ்ச்சி ஏற்படவேண்டும். இவை அனைத்தும் இராவண
இராஜ்யத்தின் பகட்டு ஆகும். இப்பொழுது வினாசம் ஆகப் போகிறது.
உலகின் வீழ்ச்சி, உலகின் உயர்வு. சத்யுகத்தில் யார் யார்
இராஜ்யம் செய்கின்றார்கள் என்பதை தந்தை புரியவைக்கின்றார்.
பாரதத்தின் உயர்வு, தேவதைகளின் இராஜ்யம். பாரதத்தின் வீழ்ச்சி,
இராவணனுடைய இராஜ்யம். இப்பொழுது புது உலகம் உருவாகிக்
கொண்டிருக்கிறது. பழைய உலகம் முடிந்துவிடும். இதற்கு முன்னதாக
தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெற நீங்கள் படித்துக்
கொண்டிருக்கிறீர்கள். எவ்வளவு எளிதானது. இது மனிதனிலிருந்து
தேவதை ஆவதற்கான படிப்பு ஆகும். சந்நியாசிகளுடையது சந்நியாச
மார்க்கம் ஆகும். அந்த தர்மமே தனிப்பட்டது ஆகும். அவர்களோ
கிரஹஸ்த விவகாரத்தை விட்டுவிட்டு சென்றுவிடுகின்றனர்.
அவர்களுடையது எல்லைக்குட்பட்ட சந்நியாசம். நீங்கள் இந்த பழைய
உலகை சந்நியாசம் செய்து, பிறகு இங்கு வரக்கூடாது. எந்தெந்த
தர்மம் எப்பொழுது வருகின்றது என்பதையும் நல்ல முறையில் புரிய
வைக்க வேண்டும். துவாபரயுகத்திற்குப் பின்னரே மற்ற தர்மங்கள்
வருகின்றன. முதலில் சுகத்தை அனுபவிக் கின்றனர் பிறகு துக்கத்தை
அனுபவிக்கின்றனர். இந்த முழு சக்கரமும் புத்தியில் பதிய
வைக்கப்படுகிறது. நீங்கள் சக்கரத்தில் வந்ததிலிருந்து மகாராஜா,
மகாராணி ஆகிறீர்கள். பாபா, ஆஸ்தியை(அல்ஃப் மற்றும் பே) புரிய
வைக்க வேண்டும்.
பாபா வெளிநாட்டிற்குச் செல்வதற்கு யாருக்கும் தடை விதிப்பதில்லை.
தன்னுடைய தேசத்தில் மரணம் ஏற்பட வேண்டும் என அனைவரும்
விரும்புகின்றனர். இப்பொழுது வினாசம் நடந்தே ஆகவேண்டும். பிறகு,
வெளிநாட்டிலிருந்து வரவே இயலாத அளவிற்கு குழப்பங்கள் பெருகி
விடும். ஆகவே, தந்தை வந்து அவதரித்திருக்கும் பாரத பூமி அனைத்
தையும் விட உத்தமம் ஆனது என்று தந்தை புரிய வைக்கின்றார்.
சிவஜெயந்தியும் கொண்டா டப்படுகின்றது. கிருஷ்ணருடைய பெயரைப்
போட்டதனால் மட்டுமே அனைத்து மகிமையும் முடிந்துவிட்டது. அனைத்து
மனிதர்களையும் விடுவிப்பவர் இங்கு வந்து அவதரித்திருக்கின்றார்.
இறைவன் தந்தையாக இருப்பதால் வந்து விடுதலை செய்கிறார். எனவே,
அப்பேற்பட்ட தந்தையை வணங்க வேண்டும், அவரது ஜெயந்தியைக்
கொண்டாட வேண்டும். ஆனால், கிருஷ்ணரின் பெயரைப் போட்டதால் முழு
மதிப்பும் மறைக்கப்பட்டுவிட்டது. இல்லையெனில், பாரதம்
அனைத்தையும் விட உயர்ந்த தீர்த்த ஸ்தலமாகும். அந்தத் தந்தை
இங்கு வந்து தான் அனைவரையும் பாவனம் ஆக்குகின்றார். ஆகவே, இது
அனைத்தையும் விட உயர்ந்த தீர்த்த ஸ்தலமாகும். அனைவரையும்
துர்கதி யிலிருந்து விடுவித்து சத்கதி அளிக்கின்றார். இந்த
நாடகம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. நம்முடைய பாபா இந்த
சரீரத்தின் மூலமாக இரகசியங் களை புரியவைத்துக் கொண்டிருக்கிறார்
என்பதை இப்பொழுது ஆத்மாக்களாகிய நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
நாம் ஆத்மாக்கள் இந்த சரீரத்தின் மூலம் கேட்கின்றோம். ஆத்ம
அபிமானி ஆகவேண்டும், தன்னை ஆத்மா எனப் புரிந்து தந்தையை நினைவு
செய்தீர்கள் என்றால் துரு நீங்கிவிடும். மேலும் பவித்திரம் ஆகி
நீங்கள் தந்தையிடம் வந்துவிடுவீர்கள். எந்தளவு நினைவு
செய்வீர்களோ அந்தளவு பவித்ரம் ஆவீர்கள். பிறரையும் தனக்குச்
சமமாக ஆக்கினீர்கள் என்றால் அனேகருடைய ஆசீர்வாதம் கிடைக்கும்.
உயர்ந்த பதவியை அடைவீர்கள். ஆகை யினால் தான் ஒரு நொடியில் ஜீவன்
முக்தி கிடைக்கிறது என்று பாடப்படுகின்றது. நல்லது .
இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத்
தந்தையின் நமஸ்காரம் .
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தந்தையின் கழுத்து மாலை ஆகி விஷ்ணுவின் கழுத்து மாலை
ஆவதற்காக சம்பூரண சதோபிரதானம் ஆகவேண்டும். ஒரு தந்தையின்
வழிப்படி நடக்க வேண்டும்.
2. அனேக ஆத்மாக்களின் ஆசீர்வாதம் கிடைத்துக் கொண்டே
இருக்கும்படியாக சேவை செய்ய வேண்டும். ஐயோ,ஐயோஎனும் நிலைக்கு
முன்பே தந்தையிடமிருந்து முழுமையான ஆஸ்தியைப் பெற வேண்டும்.
வரதானம்:
அன்பானவராகுவதன் ஆழமான இரகசியத்தைப் புரிந்து அனைவரையும்
மகிழ்விக்கும் (திருப்திப்படுத்தும்) இராஜயுக்த் (இரகசியங்களை
அறிந்தவர்) யோகயுக்த் ஆகுக
எந்தக் குழந்தைகள் ஒரு சர்வசக்திவான் தந்தையின் அன்பானவர்களாக
இருக்கின்றார்களோ, அவர்கள் அனைத்து ஆத்மாக்களின் அன்புக்கு
உரியவர்களாக தானாகவே ஆகிவிடுகின்றார்கள். இந்த ஆழமான
இரகசியத்தைப் புரிந்து கொள்கிறவர்கள் இராஜயுக்த், யோகயுக்த்
மற்றும் தெய்வீகக் குணங்கள் நிறைந்த யுக்தியுக்தியாக
ஆகிவிடுகின்றார்கள். இப்படிப்பட்ட இராஜயுக்த் ஆத்மா அனைத்து
ஆத்மாக்களையும் எளிதாக மகிழ்வித்து விடுகின்றார் (திருப்திப்படுத்தி
விடு கின்றார்). இந்த இரகசியத்தை அறியாதவர்கள், சில சமயம்
மற்றவர்களை கோபப்படுத்து கின்றார்கள், சில சமயம் தாங்களே
கோபமடைகின்றார்கள். எனவே, எப்போதும் அன்பின் இரகசியத்தை அறிந்து
இராஜயுக்த்தாக ஆகுங்கள்.
சுலோகன்:
யார் நிமித்தமாக இருக்கிறார்களோ, அவர்கள் பொறுப்புகளை
பராமரிக்கும் போதும் சதா இலேசாக இருக்கிறார்கள்.
அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது உங்களின் வள்ளல் சொரூபத்தை
வெளிப்படுத்துங்கள்.
பாப்தாதா எப்போதும் பரந்த உள்ளம் படைத்தவர்களாக, எல்லையற்ற மனம்
படைத்தவர்களாக இருக்கின்றார்கள். அதனால் அனைவரின் உள்ளத்தையும்
கவரும் திலாராமாக இருக்கின்றார் கள். அதேபோல் எல்லையற்ற உள்ளம்,
தாராள மனப்பான்மை, வள்ளல் தன்மை கொண்ட உள்ளத்தைப் பெற்ற
குழந்தைகளாகிய நீங்களும் எப்போதும் மகிழ்ச்சியான உள்ளத்தால்
உலகையே மகிழ்ச்சியடையச் செய்யும் அதிர்ஷ்டசாலி ஆத்மாக்கள்
ஆவீர்கள். சிரேஷ்ட ஆத்மாக்களாகிய நீங்களே உலகத்தின்
ஆதாரமாவீர்கள். நீங்கள் அனைவரும் விழித்திருக்கும், சுடர்விடும்
ஜோதியாக மாறும்போது உலகத்தினரும் விழித்தெழுகிறார்கள். உங்களது
நிலை உயரும்போது, அனைத்து ஆத்மாக்களுக்கும் நன்மை உண்டாகிறது.
|
|
|
|