13-08-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! அகால
மூர்த்தியாகிய தந்தை பேசுவதற்கு, நடப்பதற்கான சிம்மாசனம் இந்த
பிரம்மாவாகும், எப்பொழுது இந்த பிரம்மாவிடம் வருகின்றாரோ
அப்பொழுது தான் பிராமணர்களாகிய உங்களை படைக்கின்றார்.
கேள்வி:
அறிவாளி குழந்தைகள் எந்த
ரகசியத்தைப் புரிந்து கொண்டு சரியான முறையில் புரிய வைக்க
முடியும்?
பதில்:
பிரம்மா யார்? மேலும் அவர்
பிரம்மாவிலிருந்து விஷ்ணுவாக எப்படி ஆகிறார்? பிரஜாபிதா பிரம்மா
இங்கு இருக்கின்றார், அவர் தேவதை கிடையாது. பிரம்மா தான்
பிராமணர்களின் மூலம் யக்ஞத்தை படைத்திருக் கின்றார்.......
இந்த அனைத்து ரகசியங்களையும் அறிவாளி குழந்தைகள் தான் புரிந்து
கொண்டு புரிய வைக்க முடியும். குதிரைப் படையினர் மற்றும்
காலாட்படையினர் இதில் குழப்பமடைந்து விடுவர்.
பாடல்:
ஓம் நமச் சிவாய ........
ஓம் சாந்தி.
பக்தியில் ஒருவரின் மகிமை செய்கின்றனர். மகிமை பாடுகின்றனர்
அல்லவா! ஆனால் அவரை அறிந்து கொள்வது கிடையாது, அவரது
யதார்த்தமான அறிமுகத்தை அறியவில்லை. ஒருவேளை யதார்த்த மகிமையை
அறிந்திருந்தால் அவசியம் வர்ணனையும் செய்வர். உயர்ந்ததிலும்
உயர்ந்தவர் பகவான் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள்.
அவரது சிலை (உருவம்) தான் முக்கியமானது. பிரம்மாவிற்கு
குழந்தைகளும் இருப்பார்கள் அல்லவா! நீங்கள் அனைவரும்
பிராமணர்கள் என்று கூறப்படுகிறீர்கள். பிரம்மாவையும்
பிராமணர்கள் அறிந்திருப் பார்கள், வேறு யாரும்
அறிந்திருக்கமாட்டார்கள். அதனால் தான் குழப்பமடைகின்றனர். இவர்
பிரம்மா வாக எப்படி ஆக முடியும்? பிரம்மாவை சூட்சுமவதனவாசியாக
காண்பித்திருக் கின்றனர். இப்பொழுது பிரஜாபிதா சூட்சுமவதனத்தில்
இருக்க முடியாது. அங்கு படைப்புகள் இருக்க மாட்டார்கள். இதில்
உங்களிடத்தில் அதிக வாத விவாதங்களும் செய்கின்றனர். பிரம்மா
மற்றும் பிராமணர்கள் இருக்கின்றனர் எனில் சரி தானே என்று புரிய
வைக்க வேண்டும். எவ்வாறு கிறிஸ்துவினால் கிறிஸ்தவர்கள் என்ற
வார்த்தை உருவானது அல்லவா! புத்தரிடமிருந்து பௌத்தம்,
இப்ராஹமிடமிருந்து இஸ்லாம்! அதே போன்று பிரஜாபிதா பிரம்மா
விடமிருந்து பிராமணர்கள் பிரபலமானவர்கள் ஆவர். ஆதிதேவன் பிரம்மா
ஆவார். உண்மையில் பிரம்மாவை தேவதை என்று கூற முடியாது. அதுவும்
தவறாகும். யார் தன்னை பிராமணன் என்று கூறிக் கொள்கிறார்களோ
அவர்களிடம் கேட்க வேண்டும் - பிரம்மா எங்கிருந்து வந்தார்? இவர்
யாருடைய படைப்பு? பிரம்மாவை படைத்தது யார்? ஒருபொழுதும் யாரும்
கூற முடியாது, அறிந்திருக்க வேயில்லை. இவர் சிவபாபாவின் ரதம்
ஆவார், இவரிடம் சிவபாபா பிரவேசிக்கின்றார் என்பதையும்
குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். யார் இளவரசர் கிருஷ்ணராக
இருந்தாரோ அவரது ஆத்மா தான் இவர். 84 பிறவிகளுக்குப் பின்
இவ்வாறு (பிரம்மா) ஆகின்றார். இவரது ஜாதகம் தனியாக இருக்கும்
அல்லவா! இருப்பினும் மனிதராகத் தான் இருக்கிறார் அல்லவா! பிறகு
இவரிடம் தந்தை பிரவேசம் ஆனவுடன் இவருக்கு பிரம்மா என்ற பெயர்
வைத்து விடுகின்றார். இதே பிரம்மா தான் விஷ்ணு ரூபமாக
இருக்கின்றார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள்.
நாராயணன் ஆகிறார் அல்லவா! 84 பிறவிகளின் கடைசியில் சாதாரண இரதம்
ஆகிவிடுகிறார் அல்லவா! சரீரம் என்பது அனைத்து ஆத்மாக்களுக்கும்
ரதமாக இருக்கிறது. அகாலமூர்த்தி பேசுவதற்கும், நடப்பதற்கும் ஆன
சிம்மாசனமாகும். சீக்கியர்கள் இதை சிம்மாசனமாக ஆக்கி விட்டனர்.
அதை அழிவற்ற சிம்மாசனம் என்று கூறுகின்றனர். இந்த அழிவற்ற
சிம்மாசனம் அனைவரிடத்திலும் இருக்கிறது. ஆத்மாக்கள் அனைத்தும்
அழிவற்ற மூர்த்திகளாகும். உயர்ந்ததிலும் உயர்ந்த பகவானுக்கு
இந்த ரதம் தேவை அல்லவா! இரதத்தில் பிரவேசித்து, அமர்ந்து ஞானம்
கொடுக் கின்றார். அவர் தான் ஞானம் நிறைந்தவர் என்று
கூறப்படுகின்றார். படைப்பவர் மற்றும் படைப்பின் முதல், இடை,
கடையின் ஞானம் கொடுக்கின்றார். ஞானம் நிறைந்தவர் என்றால்
எங்கும் நிறைந்தவர் அல்லது அனைத்தையும் அறிந்தவர் என்பது
கிடையாது. சர்வவியாபி என்பதன் பொருள் தனி, அனைத்தையும்
அறிந்தவர் என்பதன் பொருள் தனியாகும். மனிதர்கள் அனைத்தையும்
ஒன்றாக்கி என்ன தோன்றுகிறதோ, அதை கூறிக் கொண்டே செல்கின்றனர்.
இப்பொழுது நாம் அனைத்து பிராமணர்களும் பிரம்மாவின் குழந்தைகள்
என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நமது குலம்
அனைத்தையும் விட உயர்ந்தது. அவர்கள் தேவதைகளை உயர்வாக
கருதுகின்றனர். ஏனெனில் சத்யுக ஆரம்பத்தில் தேவதைகள் இருந்தனர்.
பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் பிராமணர்கள் என்பதை
குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அவர்கள்
அவர்கள் பிரம்மா சூட்சும வதனத்தில் இருப்பதாக நினைக்கும் பொழுது
எப்படி தெரிந்து கொள்ள முடியும்? அவர்கள் பூஜை செய்யக் கூடிய
உலகாய பிராமணர்கள் தனிப்பட்டவர் சமைத்து படைக்கப்பட்ட உணவை
சாப்பிடுகிறார்கள். நீங்கள் சாப்பிடுவது கிடையாது. பிரம்மாவின்
ரகசியத்தை குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது நன்றாகப் புரிய
வைக்க வேண்டியிருக்கிறது. மற்ற விசயங்களை விட்டு விட்டு
தூய்மையில்லாதவர்களை தூய்மை ஆக்கக் கூடிய தந்தையை முதலில்
நினைவு செய்யுங்கள் என்று கூறுங்கள். பிறகு இந்த விசயங்களையும்
புரிந்து கொள்வார்கள். சிறிது சந்தேகம் வந்து விட்டால் தந்தையை
விட்டு விடுகின்றனர். முதல் முக்கிய விசயம் தந்தை மற்றும் ஆஸ்தி
ஆகும். என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார்.
நான் அவசியம் யார் சரீரத்திலாவது வருவேன் அல்லவா! அவருக்கு
பெயரும் இருக்க வேண்டும். வந்து அவரை படைக்கிறேன். பிரம்மாவைப்
பற்றி புரிய வைப்பதற்கு உங்களிடம் மிகுந்த அறிவு இருக்க
வேண்டும். காலாட்படை, குதிரைப் படையினர் குழப்பமடைந்து
விடுகின்றனர். மனநிலையைப் பொருத்து புரிய வைக்கிறீர்கள் அல்லவா!
பிரஜாபிதா பிரம்மா இங்கு இருக்கின்றார். பிராமணர்களின் மூலம்
யக்ஞம் படைக்கின்றார் எனில் அவசியம் பிராமணர்கள் தேவை அல்லவா!
பிராமணர்களை படைப்பதற்கு பிரஜாபிதா பிரம்மாவும் இங்கு தேவை.
அவர் மூலம் பிராமணர்கள் உருவாகிறார்கள். நாம் பிரம்மா வின்
குழந்தைகள் என்று பிராமணர்களும் கூறுகின்றனர். பரம்பரையாக நமது
குலம் இருக்கிறது என்று நினைக்கின்றனர். ஆனால் பிரம்மா எப்போது
இருந்தார்? என்பது தெரியாது. இப்பொழுது நீங்கள் பிராமணர்களாக
இருக்கிறீர்கள். பிரம்மாவின் குழந்தைகள் தான் பிராமணர்கள். நமது
குலம் அவசியம் பிரம்மாவின் மூலம் தான் உருவானது என்று அந்த
பிராமணர்களும் நினைக்கின்றனர். ஆனால் எப்பொழுது? எப்படி?
...... என்பதை வர்ணிக்க முடியாது. பிரஜாபிதா பிரம்மா தான்
பிராமணர்களைப் படைக்கின்றார் என்பதை நீங்கள்
புரிந்திருக்கிறீர்கள். இந்த பிராமணர்கள் தான் பிறகு தேவதைகளாக
ஆகின்றனர். பிராமணர்களுக்கு வந்து தந்தை ஆன்மீக கல்வி
கற்பிக்கின்றார். பிராமணர்களுக்கு இராஜ்யம் கிடையாது.
பிராமணர்களுக்கு குலம் இருக்கிறது, எப்பொழுது இராஜா, இராணியாக
ஆகிறீர்களோ அப்பொழுது தான் இராஜ்யம் என்று கூறப்படும்.
சூரியவம்ச இராஜ்யம் இருப்பது போன்று! பிராமணர்களில் நீங்கள்
இராஜாவாக ஆவது கிடையாது. கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின்
இராஜ்யம் இருந்ததாக அவர்கள் கூறுகின்றனர், இரண்டும் பொய்யாகும்.
இருவருக்கும் இராஜ்யம் கிடையாது. பிரஜைகளின் மீது பிரஜைகளின்
இராஜ்யம் இருக்கிறது, அதை இராஜ்யம் என்று கூறுவது கிடையாது.
கிரீடம் கிடையாது. பாரதத்தில் முதலில் இரட்டை கிரீடம் இருந்தது,
பிறகு ஒற்றை கிரீடம் ஆகிவிட்டது. இந்த நேரத்தில் எந்த கிரீடமும்
கிடையாது. இதையும் நல்ல முறையில் நிரூபணம் செய்து கூற வேண்டும்.
யார் முற்றிலும் நல்ல தாரணையுடையவர்களோ அவர்கள் நல்ல முறையில்
புரிய வைக்க முடியும். பிரம்மாவைப் பற்றி தான் அதிகம் புரிய
வைக்க வேண்டியிருக்கிறது. விஷ்ணுவையும் அறியாமல் இருக்கின்றனர்.
இதையும் புரிய வைக்க வேண்டும். வைகுண்டம் விஷ்ணுபுரி என்று
கூறப்படுகிறது, அதாவது லெட்சுமி நாராயணனின் இராஜ்யமாக இருந்தது.
கிருஷ்ணர் இளவரசர் எனில் எனது தந்தை இராஜா என்று கூறுவார்
அல்லவா! கிருஷ்ணரின் தந்தை அரசர் அல்ல என்பது கிடையாது.
கிருஷ்ணர் இளவரசர் என்று கூறப்படுகின்றார் எனில் அவசியம் அரச
குடும்பத்தில் பிறப்பெடுத்திருக்க வேண்டும். செல்வந்தர்
வீட்டில் பிறப்பெடுத் திருந்தால் இளவரசர் என்று கூற முடியாது.
இராஜா பதவி மற்றும் செல்வந்தர் பதவியில் இரவு பகல் வித்தியாசம்
ஏற்பட்டு விடுகிறது. கிருஷ்ணருக்கு தந்தையாக இருக்கும் அரசரின்
பெயர் கிடையாது. கிருஷ்ணரின் பெயர் எவ்வளவு பிரபலமாக இருக்கிறது!
அந்த தந்தைக்கு உயர்ந்த பதவி என்று கூற முடியாது. அவர் இரண்டாம்
நிலைக்கான பதவியுடையவர், கிருஷ்ணருக்கு பிறப்பு கொடுப்பதற்கு
மட்டும் நிமித்தமாகின்றார். கிருஷ்ணரின் ஆத்மாவை விட அவர்
அதிகம் படித்திருப்பார் என்பது கிடையாது. கிருஷ்ணர் தான் பிறகு
நாராயணனாக ஆகின்றார். மற்றபடி அந்த தந்தையின் பெயர் மறைந்து
விடுகிறது. அவரும் அவசியம் பிராமணன் தான். ஆனால் படிப்பில்
கிருஷ்ணரை விட குறைவானவர் ஆவார். கிருஷ்ணரின் ஆத்மா தனது
தந்தையை விட அதிகம் படித்தவர் ஆவார். அதனால் தான் இந்த அளவிற்கு
புகழ் இருக்கிறது. கிருஷ்ணரின் தந்தை யார்? என்பது யாருக்கும்
தெரியாது. நாளடைவில் தெரிந்து விடும். இங்கிருப்பவர்கள் தான்
ஆக வேண்டும். இராதைக்கும் தாய், தந்தை இருப்பார்கள் அல்லவா!
ஆனால் அவர்களைக் காட்டிலும் இராதையின் புகழ் அதிகமாக இருக்கிறது.
ஏனெனில் தாய், தந்தை குறைவாக படித்திருக்கின்றனர். இராதையின்
புகழ் அவர்களை விட அதிகமாக ஏற்பட்டு விடுகிறது.
குழந்தைகளுக்குப் புரிய வைப்பதற்கு இது விரிவான விசயங்களாகும்.
அனைத்திற்கும் ஆதாரம் படிப்பாகும். பிரம்மாவைப் பற்றி புரிய
வைப்பதற்கும் அறிவு தேவை. அதே கிருஷ்ணரது ஆத்மா தான் 84
பிறவிகள் எடுக்கிறது. நீங்களும் 84 பிறவிகள் எடுக்கிறீர்கள்.
அனைவரும் ஒன்றாக சேர்ந்து வந்து விட முடியாது. யார் படிப்பிலும்
முன்னால் இருக்கிறார்களோ அவர்கள் தான் அங்கும் முன்னால்
வருவார்கள். வரிசைக்கிரமமாக வருவீர்கள் அல்லவா! இது மிகவும்
ஆழமான விசயமாகும். குறைந்த புத்தியுடையவர்கள் தாரணை செய்ய
முடியாது. வரிசைக்கிரமமாக செல்வீர்கள். நீங்கள் வரிசைக்கிரமமாக
மாற்றம் (டிரான்ஸ்பர்) ஆவீர்கள். எவ்வளவு நீண்ட வரிசை இருக்கும்,
கடைசி யில் செல்வார்கள்! வரிசைக்கிரமமாக அவரவர்களது இடத்திற்கு
சென்று விடுவார்கள். அனைவருக்கும் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இது மிகவும் அதிசயமான விளையாட்டாகும். ஆனால் யாரும் புரிந்து
கொள்வது கிடையாது. இது முட்கள் நிறைந்த காடு என்று
கூறப்படுகிறது. இங்கு அனைவரும் ஒருவருக்கொருவர் துக்கம்
கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். அங்கு இயற்கையான சுகம்
இருக்கும். இங்கு செயற்கையான சுகம் இருக்கிறது. உண்மையான சுகம்
ஒரே ஒரு தந்தை தான் கொடுக்கக் கூடியவர். இங்கு காக்கையின்
எச்சத்திற்கு சமமான சுகம் இருக்கிறது. நாளுக்கு நாள் தமோ
பிரதானம் ஆகிக் கொண்டே செல்கிறது. எவ்வளவு துக்கம் இருக்கிறது!
மாயையின் புயல்கள் அதிகம் வருகிறது என்று கூறுகின்றனர். மாயை
குழப்பத்தில் கொண்டு வந்து விடுகிறது. அதிக துக்கம் ஏற்படுகிறது.
சுகம் கொடுக்கும் வள்ளலில் குழந்தையாக ஆன பின்பும் துக்கத்தின்
உணர்வுகள் ஏற்பட்டால் குழந்தைகளே! இது உங்களது மிகப் பெரிய
கர்ம கணக்காகும் என்று தந்தை கூறுகின்றார். தந்தை
கிடைத்திருக்கும் பொழுது துக்க உணர்வுகள் வரவே கூடாது. பழைய
பாவக் கணக்குகளை யோக பலத்தின் மூலம் முடித்து விடுங்கள்.
ஒருவேளை யோக பலம் இல்லையெனில் தண்டனை அடைந்து முடிக்க
வேண்டியிருக்கும். தண்டனை அனுபவித்து குறைந்த பதவி அடைவது
நல்லதல்ல. முயற்சி செய்ய வேண்டும், இல்லையெனில் பிறகு
நீதிபதிகளின் குழு அமர்ந்திருக்கிறது. பிரஜைகள் பலர் உள்ளனர்.
நாடகப்படி இவர்கள் அனைவரும் கர்பச் சிறையில் அதிக தண்டனைகளை
அனுபவிக்கின்றனர். ஆத்மாக்கள் அதிகம் அலையவும் செய்கின்றன.
யாரிட மாவது அசுத்த ஆத்மா பிரவேசமாகி விட்டால் எவ்வளவு தொந்தரவு
கொடுக்கிறது! சில ஆத்மாக்கள் அதிகம் நஷ்டப்படுத்தி விடுகிறது.
புது உலகில் இந்த விசயங்கள் இருக்காது. நாம் புது உலகிற்குச்
செல்ல வேண்டும் என்ற முயற்சி நீங்கள் இப்பொழுது செய்கிறீர்கள்.
அங்கு சென்று புதுப்புது மாளிகைகள் கட்ட வேண்டியிருக்கும்.
எவ்வாறு கிருஷ்ணர் பிறப்பு எடுப்பது போன்று இராஜாக்களிடத்தில்
பிறப்பு எடுப்பீர்கள். ஆனால் இவ்வளவு மாளிகைகள் முன்கூட்டியே
தயாராகி விடாது. அதை உருவாக்க வேண்டும். அங்கு பிறவி
எடுப்பவர்கள் தான் உருவாக்க வேண்டியிருக்கும். இராஜாக்களிடம்
பிறவி எடுப்பீர்கள் என்றும் பாடப்படுகிறது. என்ன நடக்கும்?
என்பதை நாளடைவில் பார்ப்பீர்கள். இப்பொழுது பாபா கூற மாட்டார்.
பிறகு அது செயற்கையான நாடகமாக ஆகிவிடும். ஆகையால் எதையும்
கூறுவது கிடையாது. நாடகத்தில் முன்னதாகவே கூற வேண்டும் என்று
பதியப்படவில்லை. நானும் நடிகன் என்று தந்தை கூறுகின்றார். வரக்
கூடிய விசயங்களை முன் கூட்டியே அறிந்திருந்தால் அதிக
விசயங்களைக் கூற வேண்டியிருக்கும். பாபா அனைத்தும் அறிந்தவராக
இருந்தால் முன் கூட்டியே கூறியிருப்பார். தந்தை கூறுகின்றார் -
அவ்வாறு கிடையாது, நாடகத்தில் எது நடந்தாலும் அதை சாட்சியாக
பார்த்துக் கொண்டே செல்லுங்கள், கூடவே நினைவு யாத்திரையில்
மூழ்கியிருங்கள். இதில் தான் தோல்வி அடைகிறீர்கள். ஞானம்
ஒருபொழுதும் குறைவதோ, அதிகமாவதோ ஆவது கிடையாது. நினைவு யாத்திரை
தான் சில நேரங்களில் குறைவாக, சில நேரங்களில் அதிகம் ஆகிறது.
என்ன ஞானம் கிடைத்ததோ அது இருக்கவே செய்கிறது. நினைவு
யாத்திரையில் சில நேரங்களில் ஆர்வம் இருக்கிறது, சில நேரங்களில்
குறைவாக இருக்கிறது. யாத்திரையில் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது.
ஞானத்தில் நீங்கள் ஏணியில் ஏறுவது கிடையாது. ஞானம் யாத்திரை
என்று கூறப்படுவது கிடையாது. யாத்திரை என்பது நினைவு ஆகும்.
நினைவில் இருப்பதன் மூலம் நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள்
என்று தந்தை கூறுகின்றார். தேக அபிமானத் தில் வருவதன் மூலம்
நீங்கள் அதிகம் ஏமாற்றம் அடைகிறீர்கள். விகர்மம் செய்து
விடுகிறீர்கள். காமம் மிகப் பெரிய எதிரியாகும், அதில் தோல்வி
அடைந்து விடுகிறீர்கள். கோபத்தைப் பற்றி பாபா அந்த அளவிற்கு
பேசுவது கிடையாது.
ஞானத்தின் மூலம் விநாடியில் ஜீவன் முக்தி கிடைத்து விடும் என்று
கூறப்படுகிறது அல்லது கடலை மையாக்கினாலும் எழுத முடியாது
என்றும் கூறப்படுகிறது. இல்லையெனில் அல்லாவை மட்டும் நினைவு
செய்யுங்கள் என்றும் கூறப்படுகிறது. எது நினைவு என்று
கூறப்படுகிறது? என்பதும் அறியாமல் இருக்கின்றனர்.
கலியுகத்திலிருந்து எங்களை சத்யுகத்திற்கு அழைத்துச்
செல்லுங்கள் என்று கூறுகின்றனர். பழைய உலகில் துக்கம்
இருக்கிறது. மழையினால் எத்தனை கட்டிடங்கள் இடிந்து விழுந்து
விடுகிறது! எத்தனையோ கட்டிடங்கள் மூழ்கி விடுகின்றன! என்பதை
பார்க்கிறீர்கள்! வெள்ளம் போன்ற இந்த இயற்கை சீற்றங்களும்
ஏற்படும். இவை அனைத்தும் எதிர்பாராமல் நடைபெறும். கும்பகர்ண
உறக்கத்தில் தூங்கிக் கொண்டிருக்கின்றனர். விநாச நேரத்தில்
விழிப்படைவர், பிறகு என்ன செய்ய முடியும்? இறந்து விடுவர். பூமி
மிகவும் வேகமாக அசையும் (பூகம்பம்), புயல், வெள்ளம் போன்றவைகள்
ஏற்படும். அணுகுண்டும் போடுவார்கள். ஆனால் இங்கு உள்நாட்டுக்
கலவரம் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ரத்த நதி பாயும்
என்று பாடப்பட்டிருக்கிறது. இங்கு சண்டை சச்சரவுகள் நடைபெறும்.
ஒருவருக்கொருவர் மீது வழக்கு போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆக
அவசியம் சண்டை போடவும் செய்வார்கள். அனைவரும் செல்வமற்றவர்களாக
இருக்கின்றனர், நீங்கள் செல்வமுடையவராக இருக்கிறீர்கள். நீங்கள்
எந்த சண்டையும் போடக் கூடாது. பிராமணன் ஆவதன் மூலம் நீங்கள்
செல்வந்தரின் குழந்தையாக ஆகிவிட்டீர்கள். செல்வந்தர் என்று
தந்தை அல்லது கணவன் கூறப்படுகின்றார். சிவபாபா பதிகளுக்கெல்லாம்
பதியாக இருக்கின்றார். நிச்சயதார்த்தம் ஏற்பட்டு விட்டால் நான்
இப்படிப்பட்ட பதியை மீண்டும் எப்பொழுது சந்திப்பது? என்று
கேட்கின்றனர். ஆத்மாக்கள் கூறுகின்றன - சிவபாபா, நமக்கு
உங்களுக்கும் நிச்சயதார்த்தம் ஏற்பட்டு விட்டது. இப்பொழுது
உங்களை எப்படி சந்திப்பது? சிலர் உண்மையை எழுதுகின்றனர், சிலர்
அதிகம் மறைக்கின்றனர். பாபா, என் மூலம் இந்த தவறு நடந்து
விட்டது, மன்னித்து விடுங்கள் என்று உண்மையை எழுதுவது கிடையாது.
ஒருவேளை யாராவது விகாரத்தில் விழுந்து விட்டால் எந்த தாரணையும்
ஏற்படாது. இந்த மாதிரி மோசமான தவறு நீங்கள் செய்தால் எலும்பும்
கிடைக்காத அளவிற்கு சிதைந்து விடுவீர்கள் என்று பாபா
கூறுகின்றார். உங்களை தூய்மையாக்கி, அழகானவர்களாக்குவதற்காக
நான் வந்திருக் கிறேன், பிறகு நீங்கள் ஏன் முகத்தை
கருப்பாக்கிக் கொள்கிறீர்கள்? சொர்க்கத்திற்கு வருவீர்கள்,
சிறிய பதவி தான் அடைவீர்கள். இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக்
கொண்டிருக்கிறது அல்லவா! சிலர் தோல்வியடைந்து பல பிறவிகளுக்கு
பதவியை குறைத்துக் கொள்கின்றனர். தந்தையிடம் இந்த
பதவியடைவதற்காக நீங்கள் வந்திருக்கிறீர்கள், தந்தை எவ்வளவு
உயர்வாக இருக்கிறார், குழந்தைகளாகிய நாம் பிரஜையாக ஆகமாட்டோம்
என்று கூறுவர். தந்தை சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார், குழந்தை
தாச, தாசியாக ஆவது என்பது எவ்வளவு வெட்கப்பட வேண்டிய விசயமாகும்!
கடைசியில் உங்களுக்கு அனைத்தும் சாட்சாத்காரம் கிடைக்கும்.
பிறகு அதிகம் பட்சாதப்படுவீர்கள். வீணாக இப்படி செய்து விட்டேனே!
சந்நியாசிகளும் பிரம்மச்சரியத்துடன் இருப்பதால் விகாரிகள்
அனைவரும் அவருக்கு தலை வணங்குகின்றனர். தூய்மைக்கு மரியாதை
இருக்கிறது. யாருக்கு அதிர்ஷ்டம் இல்லையோ அவர்கள்
தந்தையிடத்தில் படித்தாலும் தவறு செய்து கொண்டே இருப்பர்.
நினைவு செய்யமாட்டார்கள். விகர்மங்கள் அதிகரித்து விடுகின்றன.
குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது குரு திசை நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது. இதை விட உயர்ந்த திசை வேறு எதுவும் கிடையாது.
குழந்தைகளாகிய உங்களிடம் திசைகள் சுற்றிக் கொண்டே இருக்கிறது.
நல்லது.
இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) இந்த நாடகத்தின் ஒவ்வொரு காட்சியையும் சாட்சியாகப் பார்க்க
வேண்டும். ஒரு தந்தையின் நினைவில் மூழ்கியிருக்க வேண்டும்.
நினைவு யாத்திரையில் ஒருபொழுதும் ஆர்வம் குறையக் கூடாது.
2) படிப்பில் ஒருபொழுதும் தவறு செய்யக் கூடாது. தனது
அதிர்ஷ்டத்தை உயர்வாக்கிக் கொள்வதற்கு அவசியம் தூய்மை ஆக
வேண்டும். தோல்வியடைந்து ஜென்ம ஜென்மங் களுக்கு பதவியை
குறைத்துக் கொள்ளக் கூடாது.
வரதானம்:
உண்மையான சேவை மூலம் அவிநாசி, அலௌகிக குஷியின் கடல் அலைகளில்
அசைந்தாடக் கூடிய அதிர்ஷ்டசாலி ஆத்மா ஆகுக.
எந்தக் குழந்தைகள் சேவைகளில் பாப்தாதா மற்றும் நிமித்தமான
பெரியவர்களின் அன்பின் ஆசிர்வாதங் களை அடைகிறார்களோ,
அவர்களுக்கு உள்ளுக்குள் இருந்து அலௌகிக ஆத்மிகக் குஷியின்
அனுபவம் ஏற்படும். அவர்கள் சேவைகள் மூலம் உள்ளார்ந்த குஷி,
ஆன்மிக மகிழ்ச்சி, எல்லையற்ற பிராப்தியின் அனுபவம் செய்து
கொண்டே சதா குஷியின் கடல் அலைகளில் அசைந்தாடிக் கொண்டே
இருப்பார்கள். உண்மையான சேவை அனைவரின் அன்பு, அனைவரின் மூலமாக
அவிநாசி மதிப்பு மற்றும் குஷியின் ஆசிர்வாதங்கள் பெறுவதற்கான
அதிர்ஷ்டத்தின் சிரேஷ்ட பாக்கியத்தை அனுபவம் செய்விக்கும். யார்
சதா குஷியாக இருக்கிறார்களோ, அவர்கள் தாம் அதிர்ஷ்டசாலிகள்.
சுலோகன்:
சதா மகிழ்ச்சி நிறைந்தவராக மற்றும் கவர்ச்சியின் மூர்த்தி
ஆவதற்காக திருப்தியின் மணி ஆகுங்கள்.
அவ்யக்த சமிக்கை: சகஜயோகி ஆக வேண்டும் என்றால் பரமாத்ம அன்பின்
அனுபவி ஆகுங்கள்
கர்மத்தில், வார்த்தையில், தொடர்பு-சம்பந்தத்தில் அன்பு மற்றும்
ஸ்மிருதி அல்லது ஸ்திதியில் மூழ்கி இருக்க வேண்டும். ஒருவர்
எவ்வளவு அன்பானவராக இருக்கிறாரோ, அவ்வளவு அன்பில் மூழ்கியவராக
இருக்க முடியும். இந்த அன்பில் மூழ்கிய ஸ்திதியை மனித
ஆத்மாக்கள் ஐக்கியமாகி விடும் (ஒன்று கலந்து விடும்) அவஸ்தா
எனச் சொல்லி விட்டனர். பாபா மீதான அன்பை முடித்து விட்டு
வெறுமனே மூழ்கி இருக்கும் (லீன் என்ற வார்த்தையை) மட்டும்
பிடித்துக் கொண்டனர். குழந்தைகள் நீங்கள் பாபாவின் அன்பில்
மூழ்கி இருப்பீர்களானால் மற்றவர்களையும் சுலபமாகத் தங்களுக்கு
சமமாக மற்றும் பாபாவுக்கு சமமாக ஆக்க முடியும்.