13-09-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! என்னுடைய ஆத்மாவில் படிந்துள்ள கறையை எப்படி நீக்குவது என்ற சிந்தனையை முதலில் செய்ய வேண்டும், ஊசியில் துரு இருக்கும் வரை காந்தத்தால் ஈர்க்கப்பட முடியாது.

கேள்வி:
புருஷோத்தம சங்கமயுகத்தில் நீங்கள் உத்தமமான நிலையை அடைவதற்காக எப்படிப்பட்ட முயற்சி செய்ய வேண்டும்?

பதில்:
கர்மாதீத் நிலை அடைய வேண்டும். எந்தவொரு கர்ம சம்மந்தங்களின் மீதும் புத்தி செல்லக்கூடாது அதாவது கர்ம பந்தனங்கள் உங்களை தன் பக்கம் இழுக்கக்கூடாது. அனைத்து சம்மந்தங்களும் ஒரு தந்தையிடம் இருக்க வேண்டும், வேறு எவரிடத்திலும் உங்கள் மனம் வசமாகக்கூடாது. வேண்டாத, தேவையில்லாத விசயங்களில் சென்று தனது நேரத்தை வீணாக்கக் கூடாது, நினைவில் இருப்பதற்கான பயிற்சி செய்ய வேண்டும், இவ்வாறு முயற்சி செய்ய வேண்டும்.

பாடல்:
விழித்தெழுங்கள் அன்பானவர்களே....

ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகள் (ஆத்மாக்கள்) சரீரத்தின் மூலம் பாடலைக் கேட்டீர்களா? ஏனென்றால் தந்தை இப்பொழுது குழந்தைகளை ஆத்ம அபிமானியாக ஆக்குகின்றார். உங்களுக்கு ஆத்மாவைப் பற்றிய ஞானம் கிடைத்திருக்கின்றது. முழு உலகத்திலும் எந்தவொரு மனிதருக்கும் ஆத்மாவைப் பற்றிய ஞானம் கிடையாது. பிறகு பரமாத்மாவின் ஞானம் எப்படி தெரிந்திருக்க முடியும்? இதனை தந்தையே வந்து புரிய வைக்கின்றார். சரீரத்தில் வந்துதான் புரியவைப்பார். சரீரம் இல்லாமல் ஆத்மாவால் எதுவும் செய்ய முடியாது. நான் வசிக்கும் இடம் எது, நான் யாருடைய குழந்தை என்பதை இப்பொழுது ஆத்மா அறிந்திருக்கின்றது. இப்பொழுது நீங்கள் அனைத்தையும் சரியானபடி புரிந்துள்ளீர்கள், அனைவரும் நடிகர்களாக இருக்கின்றனர். வெவ்வேறு தர்மத்தைச் சேர்ந்த ஆத்மாக்கள் எப்பொழுது வருகின்றனர் என்பதும் உங்கள் புத்தியில் இருக்கின்றது. பாபா ஒட்டுமொத்தமாக அனைத்தையும் புரிய வைக்கின்றார், கொஞ்சமாகப் புரிய வைக்கவில்லை. ஒட்டுமொத்தமாக என்றால் ஒரு விநாடியில் அந்தளவு தெளிவுபடுத்துகின்றார் எதன் மூலம் சத்யுகம் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை நமக்குள் எவ்வாறு நாடகத்தின் பங்கு பதிவாகியுள்ளது என்பது புரிந்திருக்கின்றது. தந்தை யாராகயிருக்கின்றார், அவருக்கு இந்த நாடகத் தில் எப்படிப்பட்ட பங்கு இருக்கின்றது? என்பதையும் நீங்கள் புரிந்துள்ளீர்கள். உயர்ந்ததிலும் உயர்ந்தவர், அனைவருக்கும் சத்கதி தரும் வள்ளல், துக்கத்தைப் போக்கி சுகத்தைத் தருபவர் ஒரேயொரு தந்தை மட்டுமே என்பதையும் நீங்கள் அறிந்துள்ளீர்கள். சிவஜெயந்தி என மகிமை செய்யப்படுகின்றது, ஆகவே சிவ ஜெயந்தி நிச்சயமாக அனைத்தையும் விட உயர்ந்ததாகும். குறிப்பாக பாரதத்தில் மட்டுமே சிவஜெயந்தி கொண்டாடப்படுகின்றது. எந்தெந்த ஆட்சி காலத்தில் அவர்களைச் சார்ந்த உயர்ந்த மனிதர்கள் வாழ்ந்தார்களோ அவர்களுடைய தபால் தலை வெளியிடப்படுகின்றது. ஆக இப்பொழுது சிவஜெயந்தி கொண்டாடப் படுகின்றது, ஆகவே அனைத்தையும் விட உயர்ந்த ஜெயந்தி யாருடையது? யாருக்கு முதலில் தபால் தலை வெளியிடவேண்டும் என புரிய வைக்க வேண்டும். சில சாது, சந்நியாசிகள் மற்றும் சீக்கிய மதத்தினர், முஸ்லீம்கள் மற்றும் பிரிட்டிஷார், தத்துவ ஞானிகள் அனைவருக்கும் ஸ்டாம்ப் வெளியிடுகின்றனர், ராணா பிரதாப்புக்கும் தபால் தலை வெளியிட்டனர். ஆனால் உண்மையில் ஒரேயொரு தந்தைக்கு மட்டுமே ஸ்டாம்ப் வெளியிட வேண்டும், ஏனென்றால் அவரே அனை வருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் ஆவார். இந்த நேரம் தந்தை வரவில்லையெனில் சத்கதி எப்படி ஏற்படும், ஏனென்றால் அனைவரும் கொடிய நரகத்தில் மூழ்கி யிருக்கின்றனர். அனை வரைக் காட்டிலும் உயர்ந்தவர் பதீதபாவனர் சிவபாபா. சிவனுக்கு மிக உயர்வான இடங் களில் கோவில்கள் உருவாக்கியுள்ளனர். ஏனெனில் அவரே உயர்ந்ததிலும் உயர்ந்தவர் அல்லவா! தந்தை தான் வந்து பாரதத்தை சொர்க்கத்தின் எஜமானராக ஆக்குகின்றார், அவர் வந்துதான் சத்கதி தருகின்றார், ஆகவே தந்தையை மட்டுமே நினைவு செய்ய வேண்டும். சிவபாபாவிற்கு தபால் தலை எப்படி உருவாக்க வேண்டும்? பக்தி மார்க்கத்தில் சிவலிங்கத்தை உருவாக்கியுள்ளனர், அவரே உயர்ந்ததிலும் உயர்ந்த ஆத்மாவாக இருக்கின்றார், உயர்ந்ததிலும் உயர்ந்த கோவிலும் சிவனுக்கு மட்டுமே என ஏற்றுக் கொள்கின்றனர். சோமநாதர் கோவில் சிவனுடையது அல்லவா! பாரதவாசிகள் தமோபிரதானம் ஆனக் காரணத்தினால் சிவன் யார், எதற்காக பூஜை செய்கின்றோம், அவர் செய்யக்கூடிய காரியங்கள் என்ன என்பதைப் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர். ராணா பிரதாப் யுத்தம் செய்தார், அதுவும் துன்பம் நிறைந்த யுத்தமல்லவா! இந்த நேரம் அனைவரும் டபுள் ஹிம்சையாளராக இருக்கின்றனர். விகாரத்தில் செல்வது, காம விகாரத்தில் ஈடுபடுவது இவையெல்லாம் ஹிம்சையல்லவா! இந்த இலட்சுமி - நாராயணர் டபுள் அஹிம்சையாளர்கள். மனிதர்களுக்கு முழு ஞானமும் தெரிந்தால் முழு அர்த்தம் நிறைந்த தபால் தலையை உருவாக்கு வார்கள். சத்யுகத்தில் இலட்சுமி - நாராயணருடைய தபால் தலை வெளியிடப்படும். இப்பொழுதும் கூட பாரதத்தில் அந்த தபால் தலையை மட்டுமே இருக்க வேண்டும். திரிமூர்த்தி சிவபாபா மட்டுமே உயர்ந்ததிலும் உயர்ந்தவர். அவருடைய தபால் தலை எப்பொழுதும் இருக்க வேண்டும் ஏனென்றால் அவர் பாரதத்திற்கு அழியாத அரசாட்சியை கொடுக்கின்றார். பரம்பிதா பரமாத்மா பாரதத்தை சொர்க்கமாக ஆக்குகின்றார். நிறைய குழந்தைகள் கூட பாபா நம்மை சொர்க்கத்தின் எஜமானராக ஆக்குகின்றார் என்பதை மறந்துவிடு கின்றனர். இந்த மாயா மறக்கவைக்கின்றது. தந்தையைப் புரிந்து கொள்ளாத காரணத்தினால் பாரதவாசிகள் எவ்வளவு தவறு செய்கின்றனர். சிவபாபா என்ன செய்கின்றார் என்பது யாருக்கும் தெரியவில்லை. சிவஜெயந்தியின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை. இந்த ஞானம் தந்தையைத் தவிர வேறு யாரிடமும் இல்லை.

இப்பொழுது நீங்கள் மற்றவர்களின் மீது கருணை காட்டுங்கள், தன் மீதும் தானே கருணை காட்டுங்கள் என தந்தை புரிய வைக்கின்றார். ஆசிரியர் படிப்பை கற்றுக் கொடுப்பதே கருணை யல்லவா? இவரும் நான் ஆசிரியராக இருந்து உங்களுக்கு கற்பிக்கின்றேன் என கூறுகின்றார். ஆக இந்த இடத்தை பாடசாலை என கூறமுடியாது, இது மிகப்பெரிய யுனிவர்சிட்டியாகும். மற்ற அனைத்தும் பொய்யானதாக இருக்கின்றது. மற்ற எதுவும் முழு உலகத்திற்கான கல்லூரி ( யூனிவர்சிட்டி) இல்லை. இந்த யுனிவர்சிட்டி மட்டுமே ஒரு பாபா வினுடையது, அவரே முழு உலகத்திற்கும் சத்கதி தருபவர். ஆகவே இது மட்டுமே உண்மையான யுனிவர்சிட்டி யாகும். இதன் மூலமாக அனைவரும் முக்தி, ஜீவன்முக்தி அடைகின்றனர் அதாவது அமைதி மற்றும் சுகத்தை அடைகின்றனர். உலகம் என்பது இதுதான், எனவே பயப்பட வேண்டாம் என பாபா கூறுகின்றார். இவையனைத்தும் புரிய வைக்க வேண்டிய விசயங்களாகும். எமர்ஜென்சி காலங்களில் யாரும் யார் சொல்வதையும் கேட்க மாட்டார்கள், பிரஜைகளின் ஆட்சி நடக்கின்றது. மேலும் எந்த தர்மமும் முதலில் இருந்து ஆட்சி செய்வதில்லை, அவர்கள் முதலில் தர்மத்தை உருவாக்க வருகின்றனர். பிறகு இலட்சக்கணக்கான எண்ணிக்கையில் அந்த தர்மத்தை சேர்ந்தவர்கள் வந்த பிறகு அரசாட்சி செய்வார்கள். இங்கு முழு உலக அரசாட்சியை தந்தை உருவாக்குகின்றார், இதையும் கூட புரியவைக்க வேண்டும். தெய்வீக அரசாட்சி மீண்டும் இந்த புருஷோத்தம சங்கமயுகத்தில் உருவாகின்றது. கிருஷ்ணர், நாராயணர், இராமர் ஆகியோரின் கருப்பான சித்திரங்களை நீங்கள் எடுத்துக் கொண்டு புரியவைக்க வேண்டும். கிருஷ்ணரை ஷியாம் சுந்தர் என ஏன் கூறுகிறார்கள்? அழகாக இருந்தவர் ஏன் பிறகு கருப்பாகி விட்டார்? என கேளுங்கள். பாரதம் மட்டுமே சொர்க்கமாக இருந்தது, இப்பொழுது நரகமாக இருக்கின்றது. நரகத்தில் கருப்பாக வும், சொர்க்கத்தில் அழகாகவும் இருப்பார்கள். இராம இராஜ்யத்தை பகல் என்றும், இராவண இராஜ்யத்கை இரவு என்றும் கூறப்படுகின்றது. தேவாத்மாக்களை கருப்பாக ஏன் உருவாக்கி யுள்ளனர் என நீங்கள் புரியவைக்கமுடியும். நீங்கள் இப்பொழுது புருஷோத்தம சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள், நீங்கள் இங்கு அமர்ந்துள்ளீர்கள் அல்லவா! மற்றவர்கள் இங்கு இல்லை என தந்தை புரிய வைக்கின்றார். நீங்கள் மட்டுமே புருஷோத்தம நிலை அடைவதற்காக புருஷார்த்தம் செய்கின்றீர்கள். விகாரமான பதீத மனிதர்களோடு உங்களுக்கு எந்தவிதமான சம்மந்தமும் இல்லை, ஆனாலும் இப்பொழுது கர்மாதீத் நிலை ஏற்படாததால் கர்ம சம்மந்தகளின் மீது மனம் வசமாகிவிடுகின்றது. கர்மாதீத் நிலை அடைவதற்கு நினைவு யாத்திரை அவசியமாகும். நீங்கள் ஆத்மாக்கள், உங்களுக்கு பரமாத்ம தந்தையோடு எவ்வளவு அன்பு இருக்க வேண்டும்! ஆஹா! பாபா நமக்கு கற்பிக்கின்றார், இந்த உற்சாகம் சிலருக்கு இல்லை. மாயா அடிக்கடி தேக அபிமானத்தில் கொண்டுவருகின்றது. சிவபாபா நம் ஆத்மாக்களோடு உரை யாடல் செய்கின்றார் என்பது புரிந்திருக்கின்றது, ஆகவே எவ்வளவு ஈர்ப்பு மற்றும் மகிழ்ச்சி இருக்க வேண்டும். எந்த ஊசியில் துரு இல்லையோ அது காந்தத்தின் பக்கம் உடனடியாக ஈர்க்கப்படும், சிறிதளவு துரு இருந்தாலும் ஈர்க்கப்படாது, எந்த பக்கம் துரு இல்லையோ அதை நோக்கி காந்தம் இழுத்துவிடும். குழந்தைகள் நினைவு யாத்திரை செய்தால் ஈர்ப்பு உருவாகும், கறையிருந்தால் ஈர்க்க முடியாது. ஈர்க்கப்பட வில்லையென்றால் கறை படிந்துள்ளதாக அர்த்தமாகும். நீங்கள் அதிகமாக நினைவு செய்தால் பாவங்கள் எரிந்து சாம்பலாகும். நல்லது, மீண்டும் பாவம் செய்தால் 100 மடங்கு தண்டனை ஏற்படும், மீண்டும் கறை படிந்து விட்டார், பிறகு நினைவு செய்யவே முடியாது. தன்னைத்தான் ஆத்மா என புரிந்து தந்தையை நினைவு செய்யுங்கள், மறந்தால் மீண்டும் கறை படிந்துவிடும். பிறகு ஈர்ப்பு, அன்பு ஏற்படாது. கறை நீங்கினால் அன்பு ஏற்படும், அந்த மகிழ்ச்சி யினால் முக மலர்ச்சி ஏற்படும். நீங்கள் எதிர்காலத்தில் அவ்வாறு ஆக வேண்டும். சேவை செய்யாமல் இருப்பவர்கள் பழைய வேண்டாத விசயங்களைப் பேசுவார்கள், அவர்கள் தந்தை யிடமிருந்து புத்தியின் தொடர்பைத் துண்டித்து விடுவார்கள், இதனால் ஏற்கனவே இருந்த பொலிவானது மறைந்துவிடும், பிறகு தந்தையின் மீது துளியளவும் அன்பு ஏற்படாது. யார் நன்றாக தந்தையை நினைவு செய்கின்றார்களோ அவர்களுக்குத் தான் அன்பு ஏற்படும். தந்தைக்கும் அவர்கள் மீது ஈர்ப்பு ஏற்படும், இந்த குழந்தை சேவையும் நன்றாக செய்து மற்றும் நினைவிலும் ஈடுபடுகின்றார்கள் என தந்தை புரிந்துகொண்டு அவர்கள் மீது அன்பு செலுத்துவார். நம் மூலமாக ஏதாவது பாவம் ஏற்படவில்லை தானே என தன் மீது கவனம் செலுத்துவார்கள். நினைவு செய்யவில்லையெனில் ஆத்மாவின் கறை எவ்வாறு நீங்கும்? சார்ட் எழுதினால் கறை நீங்கும் என தந்தை கூறுகின்றார். தமோபிர தானத்தில் இருந்து சதோபிரதானம் ஆக வேண்டுமானால் கறைகளை நீக்க வேண்டும். கறைகள் நீங்கி மீண்டும் ஏற்பட்டால் 100 மடங்கு தண்டனை ஏற்படும். தந்தையை நினைவு செய்யவில்லையெனில் ஏதாவது பாவம் செய்து விடுவார்கள் உங்களுடைய கறைகளை நீக்காமல் நீங்கள் என்னிடத்தில் வரமுடியாது என தந்தை கூறுகின்றார், இல்லை யெனில் தண்டனை கிடைக்கும், அடியும் கிடைக்கும், பிறகு பதவியும் குறைந்துவிடும். பிறகு பாபாவிடமிருந்து என்ன பிராப்தி கிடைக்கும்? அப்படிப்பட்ட கர்மம் செய்யக்கூடாது அதாவது அதன் மூலம் மீண்டும் கறை படியக்கூடாது. முதலில் தன்னுடைய கறையை நீக்குவதற்கு சிந்திக்க வேண்டும். அவ்வாறு சிந்திக்கவில்லை யென்றால் இவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லையென தந்தை புரிந்து கொள்வார். தகுதிகளும், நல்ல பழக்க வழக்கங்களும் வேண்டும். இலட்சுமி-நாராயணரின் பழக்க வழக்கங்கள் மிகவும் சிறந்தது என கூறப்படுகின்றது, இக்காலத்தைச் சேர்ந்த மனிதர்கள் அவர்களுக்கு முன்பாகச் சென்று தன்னுடைய நடைமுறைகளை வர்ணிக்கின்றனர். சந்நியாசிகளிடம் செல்கின்றனர், ஆனால் சத்கதி கொடுக்கக்கூடிய வள்ளல் சிவபாபா மட்டுமே என்பதை அறியவில்லை. தந்தை மட்டுமே சொர்க்கத்தை உருவாக்குகின்றார், பிறகு அனைவரும் கீழே இறங்கி வரத்தான் வேண்டும். தந்தையைத் தவிர வேறு யாராலும் பாவனமாக்க முடியாது. மனிதர்கள் அமைதிக்காக மலையில், குகைகளில், நதிக்கரையில் அமர்கின்றனர், மேலும் கங்கை கரையிலும் அமர்ந்தால் சுத்தமாகி விடுவோம் என புரிந்துள்ளனர், ஏனென்றால், கங்கையை பதீத பாவனி என நம்புகின்றனர். மனிதர்கள் அமைதியை விரும்புகின்றனர், அனைவரும் பரந்தாம வீட்டிற்குச் சென்றுவிட்டால் நடிப்பு முடிந்துவிடும். பரந்தாமமே அனைத்து ஆத்மாக்களின் வீடாகும். இங்கு அமைதி எப்படி கிடைக்கும்? தபஸ்யா செய்கின்றனர், இதுவும் கர்மம் அல்லவா! அமைதி யாக இருந்து தவம் செய்கின்றனர். ஆனாலும் சிவபாபாவை அறியவில்லை, ஆகவே அவையனைத்தும் பக்தி மார்க்கமாகும். புருஷோத்தம சங்கமயுகம் ஒன்று மட்டும் தான், இந்த நேரத்தில் மட்டுமே தந்தை வருகின்றார். ஆத்மா சுத்தமாகி முக்தி - ஜீவன்முக்திக்குச் சென்று விடும். யார் கடின உழைப்பு (முயற்சி) செய்கின்றனரோ அவர்கள் இராஜ்யம் செய்வார்கள், உழைப்பு செய்யாதவர்கள் தண்டனை அடைவார்கள். ஆரம்பத்தில் தண்டனைகளைப் பற்றிய சாட்சாத்காரம் காட்டப்பட்டது, கடைசியிலும் காண்பிக்கப்படும். நாம் ஸ்ரீமத்படி நடக்காததால் இந்த நிலை ஏற்பட்டது என புரிந்துகொள்வார்கள். குழந்தைகள் கல்யாண காரியாக ஆக வேண்டும். தந்தை மற்றும் படைப்பின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். துருப்பிடித்த ஊசியை மண்ணெண்ணை மூலமாக சுத்தம் செய்தால் துரு நீங்கிவிடுகின்றது, அதேபோல தந்தையை நினைவு செய்வதன் மூலம் ஆத்மாவின் துரு நீங்கிவிடும். இல்லையெனில் தந்தை மீது ஈர்ப்பு மற்றும் அன்பு ஏற்படாது. பிறகு உற்றார், உறவினர்களின் மீது அன்பு ஏற்பட்டு அவர்களிடம் சென்றுவிடுவார்கள். இங்கு உள்ள சுத்தமான சம்மந்தம் எப்படிப்பட்டது, அங்கு உள்ள சம்மந்தம் எப்படிப் பட்டது என பாருங்கள். அங்கு சென்றுவிட்டால் மீண்டும் ஆத்மாவில் கறைப்படிந்துவிடும். கறையை நீக்குவதற்காகவே தந்தை வந்திருக்கின்றார். நினைவின் மூலமாகவே பாவனமாவீர்கள்;. அரைக்கல்பமாக மிகவும் அதிகமாக கறை படிந்துவிட்டது. இப்பொழுது காந்தமாக இருக்கக்கூடிய தந்தை என்னை நினைவு செய்யுங்கள் என கூறுகின்றார். புத்தியின் தொடர்பை என்னிடத்தில் செலுத்தும் பொழுது ஆத்மாவின் கறை நீங்கிவிடும். புதிய உலகம் உருவாக வேண்டும், சத்யுகத்தில் முதன் முதலில் தர்மத்தின் மரம் சிறியதாக இருக்கும், தேவி-தேவதைகளின் தர்மம் பிறகு வளர்ச்சியடையும். இங்கு இருப்பவர்கள் தான் முயற்சி செய்கின்றனர், மேலேயிருந்து வந்து யாரும் முயற்சி செய்வதில்லை. மற்ற தர்மத்தைச் சேர்ந்தவர்கள் மேலே இருந்து இங்கு வருகின்றனர். இங்கு உங்களுடைய அரசாட்சி தயாராகிக் கொண்டிருக்கின்றது. எல்லா ஆதாரமும் படிப்பிலும், தந்தையின் ஸ்ரீமத்படி நடப்பதில் தான் இருக்கின்றது. புத்தியின் தொடர்பு வெளியே சென்றால் மீண்டும் கறை படிந்துவிடும். இங்கு அனைவரும் கணக்கு, வழக்குகளை முடித்து உயிரோடு இருந்து கொண்டு அனைத்தையும் முடித்துவிட்டு வருவார்கள். சந்நியாசிகளும் சந்நியாசம் செய்த பிறகும் சிறிது காலம் வரை அனைத்தும் நினைவில் இருக்கும்.

இப்பொழுது நமக்கு உண்மையான சத்சங்கம் கிடைத்திருக்கின்றது. நாம் தன்னுடைய தந்தையின் நினைவில் இருக்கின்றோம். தனது உற்றார், உறவினர்களையும் அறிந்திருக்கின்றோம். குடும்பச் சூழ்நிலையில் இருந்து கொண்டு, கர்மம் செய்து கொண்டு தந்தையை நினைவு செய்து தூய்மையாக ஆக வேண்டும், பிறருக்கும் இதனை கற்பிக்க வேண்டும். பிறகு அதிர்ஷ்டம் இருந்தால் அவர்களும் தொடர்ந்து முயற்சி செய்வார்கள். பிராமண குலத்தில் வராமல் தெய்வீக மான குலத்தில் எப்படி வரமுடியும்? மிகவும் சகஜமாக புத்தியில் உடனே பதியுமளவிற்கு விசயங்கள் கூறப்படுகின்றன. வினாச காலத்தில் விபரீத புத்தியுடையவர்களின் சித்திரங்களும் தெளிவாகக் காட்டப்பட்டிருக்கின்றது. இப்பொழுது தெய்வீகமான இராஜ்யம் இல்லை, தெய்வீக இராஜ்யத்தை சொர்க்கம் என கூறப்படுகின்றது. இப்பொழுது பஞ்சாயத்து இராஜ்யம் நடக்கின்றது, இதைப் புரியவைப்பதில் எந்தவித கஷ்டமும் இல்லை. ஆனால் ஆத்மாவின் கறை நீங்கிவிட்டால் நீங்கள் புரியவைப்பது அம்பு போல் ஆழமாகப் பதியும். முதலில் தனது ஆத்மாவின் கறைகளை நீக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இரவு பகலாக நான் என்ன செய்கின்றேன்? என தனது பழக்கவழக்கங்களைப் பார்க்க வேண்டும். சமையலறையில் உணவு சமைக்கும் பொழுது, ரொட்டி செய்யும் பொழுது, அங்கும் இங்கும் சுற்றும் பொழுதும் எவ்வளவு முடியுமோ அதிகமாக நினைவு செய்யுங்கள். பாபா அனைவருடைய நிலையையும் அறிந்துள்ளார் அல்லவா! வேண்டாத, தேவையில்லாத விசயங்களைப் பேசினால் இன்னும் ஆத்மாவில் கறை படியும். பரசிந்தனைக் கான எந்தவிசயங்களையும் கேட்க வேண்டாம். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும் ! ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. எவ்வாறு தந்தை ஆசிரியர் ரூபத்தில் கற்பித்து அனைவர் மீதும் கருணை காட்டுகின்றாரோ, அதே போன்று நீங்களும் தன்மீதும், மற்றவர்கள் மீதும் கருணை காட்ட வேண்டும். படிப்பு மற்றும் ஸ்ரீமத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும், தனது பழக்க, வழக்கங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

2. தங்களுக்குள் எந்தவிதமான பழைய விசயங்கள், பரசிந்தனைக்கான விசயங்களைப் பேசி தந்தையிடமிருந்து புத்தியின் தொடர்பை துண்டித்து கொள்ளக்கூடாது. எந்தவிதமான பாவகர்மங்களும் செய்யக் கூடாது, தந்தையின் நினைவில் இருந்து ஆத்மாவின் கறைகளை நீக்க வேண்டும்.

வரதானம்:
உறுதித்தன்மை மூலம் தரிசு நிலத்தில் கூட பழம் விளையச் செய்யக்கூடிய வெற்றி சொரூபம் ஆகுக.

எந்தவொரு விசயத்திலும் வெற்றி சொரூபம் ஆகுவதற்காக உறுதித்தன்மை மற்றும் அன்பான குழு தேவை. இந்த உறுதித்தன்மை தரிசு நிலத்தில் கூட பழம் விளையச் செய்து விடுகிறது. தற்காலத்தில் விஞ்ஞானிகள் மணல் வெளியில் கூட பழத்தை விளையச் செய்வதற் காக முயற்சி செய்து கொண்டு இருக்கின்றார்கள். அதுபோல், நீங்கள் அமைதி சக்தி மூலம் அன்பின் தண்ணீர் ஊற்றி பலன் தருபவராக ஆகுங்கள். உறுதித்தன்மை மூலம் நம்பிக்கை அற்றவர்களுக்குள் நம்பிக்கையின் தீபம் ஏற்றி வைக்க முடியும், ஏனெனில், தைரியத்தினாலேயே தந்தையின் உதவி கிடைக்கிறது.

சுலோகன்:
தன்னை சதா பிரபுவின் அடகுப்பொருள் என்று புரிந்துகொண்டு நடந்தீர்கள் என்றால் கர்மத்தில் ஆன்மிகத்தன்மை வந்துவிடும்.

அவ்யக்த சமிக்ஞை: இப்போது ஈடுபாடெனும் அக்னியை மூட்டி யோகத்தை ஜூவாலா ரூபமாக்குங்கள்.

சாரதி என்றால் ஆத்ம அபிமானி, ஏனென்றால், ஆத்மா தான் சாரதி ஆகும். பிரம்மா பாபா இந்த விதியினால் முதல் எண்ணில் வெற்றி அடைந்தார், எனவே, தந்தையைப் பின்பற்றுங்கள். எவ்வாறு தந்தை தேகத்தை கீழ்படியச் செய்து பிரவேசம் ஆகின்றார், அதாவது சாரதி ஆகின்றார், தேகத்திற்கு அடிமையாகுவதில்லை, ஆகையினால், பற்றற்றவராக மற்றும் அன்பானவராக இருக்கின்றார். அது போலவே பிராமண ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் கூட தந்தைக்கு சமமாக சாரதி என்ற ஸ்திதியில் இருங்கள். சாரதியானவர் தானாகவே சாட்சியாகி எதையும் செய்வார், பார்ப்பார், கேட்பார் மற்றும் அனைத்தையும் செய்தாலும் கூட மாயாவினுடைய தாக்கத்தில் இருந்து விடுபட்டு இருப்பார்.