13.09.26 காலை முரளி
ஓம் சாந்தி 15.11.2011 பாப்தாதா,
மதுபன்
இப்பொழுது தடைகளற்றவர் மற்றும் எவரெடியாக இருந்து 108 மணியை
தயார் செய்யுங்கள். பிரம்மா பாபாவைப் போன்ற சம்பன்னம் மற்றும்
சம்பூர்ணம் ஆகுங்கள்.
இன்று சர்வசக்திவான் தந்தை தனது மாஸ்டர் சர்வசக்திவான்
குழந்தைகளுக்கு சர்வ சக்தி களின் பொக்கிஷங்கள் கொடுப்பதற்காக
வந்திருக்கின்றார். சர்வசக்திகளின் பொக்கிஷங்கள் எவ்வளவு
எளிதாக பலனாக கிடைக்கிறது! ஒரு விநாடியில் என்னுடைய பாபாவை
அறிந்து கொள்கிறீர்கள், பாபா கூறுகின்றார் என்னுடைய குழந்தைகள்.
இதற்குள் பொக்கிஷங்களுக்கு எஜமானர்களாக ஆகிவிட்டீர்கள். ஆக
ஒவ்வொரு குழந்தையிடம் அனைத்து பொக்கிஷங்களும் சதா கூடவே
இருக்கிறது தானே! தந்தையின் பொக்கிஷம் என்னுடைய பொக்கிம் என்ற
போதை இருக்கிறது. தந்தை ஒவ்வொரு குழந்தைக்கும் அனைத்து
பொக்கிஷங்களையும் கொடுத்திருக் கின்றார், ஒன்றில் கூட
குறையில்லை. ஆனால் அந்த அனைத்து பொக்கிஷங்களும் ஒவ்வொரு
வரிடமும் சதா கூடவே இருக்கிறதா? அல்லது சில பொக்கிஷம்
இருக்கிறது, சில குறைவாக இருக்கிறதா? என்று சோதனை செய்யுங்கள்.
பாப்தாதா கொடுத்து விட்டார். ஆனால் ஒவ்வொரு வரிடமும் அனைத்து
பொக்கிஷங்களும் சதா இருக்கிறதா? அனைத்து பொக்கிஷங்களும் சரியான
நேரத்தில் காரியத்தில் பயன்படுத்திக் கொண்டிருக் கிறேனா?
எஜமானர்களாகி கட்டளையிடும் போது சரியான நேரத்தில் பொக்கிஷம்
அனுபவம் ஆகிறதா? நாலாப்புறங்களிலும் உள்ள குழந்தை களிடம்
சேவையின் ஆர்வத்தை பாப்தாதா பார்த்தார், கேட்டறிந்தார்.
நாலாப்புறங்களிலும் ஆர்வம்- உற்சாகத்துடன் இந்த 75 ஆம் ஆண்டு
(2011) ஜெயந்தியை நன்றாக கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள், சவால்
விட்டுக் கொண்டிருக் கிறீர்கள் - இப்பொழுது மாற்றம் ஏற்பட்டே
விட்டது. மிகவும் நன்றாக சவால் விட்டு கொண்டிருக்கிறீர்கள்.
குழந்தைகளின் ஆர்வம்-உற்சாகத்தைப் பார்த்து பார்த்து பாப்தாதா
குஷியடைகின்றார், மேலும் என்ன பாடல் பாடு கின்றார்? ஆஹா
குழந்தைகளே ஆஹா! கூடவே பாப்தாதா பார்த்தார் - ஆர்வம்-
உற்சாகத்துடன் மிக நன்றாக சவால் விட்டுக் கொண்டிருக் கிறீர்கள்.
ஆனால் கூடவே குழந்தைகள் தனக்குள் அனைத்து தாரணைகளில் வெற்றி
சொரூபத்தையும் பார்த்தார். நீங்கள் அனைவரும் கூட தனது சம்பன்னம்
மற்றும் வெற்றி சொரூபத்தை அறிவீர்கள். ஏனெனில் நிமித்தமாக
இருக்கும் அனைத்துக் குழந்தைகளும் சதா சம்பன்னம் மற்றும்
வெற்றிமூர்த்தியாக ஆகிவிட்டீர்களா? அல்லது ஆக வேண்டுமா? ஏனெனில்
சுகமான உலகிற்கு ஆதார சொரூபம் குழந்தைகளாகிய நீங்கள் தான். எனவே
பாப்தாதா அனைத்துக் குழந்தைகளின் ரிசல்ட் பார்த்தார். நீங்கள்
ஆதார மூர்த்திகளாக இருக்கிறீர்கள், குறைவான குழந்தைகள்
மட்டுமல்ல, அனைத்து குழந்தைகளின் சவால் என்னவெனில் நாம் சுகமான
உலகம் கொண்டு வருவதற்கு நிமித்தமாக இருக்கிறோம்.
ஆக பாப்தாதா அனைத்து குழந்தைகளிடமும் கேட்கின்றார் - சுகமான
உலகம் கொண்டு வருவதற்கு நிமித்தமாக இருக்கும் குழந்தைகள்
சம்பூர்ண சம்பன்ன ஆதாரமூர்த்தியாக ஆகி விட்டீர்களா? ஒவ்வொரு
குழந்தையும் வெற்றிமூர்த்தி ஆக வேண்டும் என்பது பாப்தாதா
குழந்தைகளின் மீது வைத்திருக்கும் ஆசையாகும். ஏனெனில் நீங்கள்
தந்தைக்கு துணைவர் களாக இருந்து சங்கல்பம் செய்திருக்கிறீர்கள்,
மேலும் மிகுந்த குஷியுடன் சவால் விட்டிருக் கிறீர்கள் - மாற்றம்
ஏற்பட்டே விட்டது. எனவே தன்னிடம் கேளுங்கள் - உலக மாற்றத்திற்கு
நிமித்தமாக இருக்கும் குழந்தைகள் சுயம் சம்பன்னம் மற்றும்
சம்பூர்னம் எவ்வளவு ஆகியிருக் கிறீர்கள்? ஏனெனில் இராஜ்யம்
ஸ்தாபனை ஆக வேண்டுமெனில் முதலில் இராஜ்யத்திற்கு நிமித்தமாக
இருக்கும் ஆத்மாக்கள் நிமித்தம் ஆவார்கள், அதன் பிறகு
மற்றவர்கள் நிமித்தம் ஆவார்கள். இப்பொழுது சம்பூர்னம் ஆவதற்கு
சிறிது இடைவெளி இருப்பதை பாப்தாதா பார்த்தார். சேவை செய்தீர்கள்,
ஆனால் சேவையின் ரிசல்டில் உங்களுக்கு துணையாக எத்தனை பேர்
ஆகியிருக்கின்றனர்? கணக்கு பாருங்கள், யார் கேட்டார்களோ,
அவர்களில் எத்தனை பேர் நெருக்கத்தில் வந்திருக்கின்றனர்?
குழந்தைகளின் தைரியத்தைப் பார்த்து பாப்தாதா குஷியடை கின்றார்.
ஆனால் இப்பொழுது சேவையின் ரிசல்டில் இன்னும் வேகம் கொண்டு வர
வேண்டும். ஒவ்வொரு நேரத்திலும் ஆத்மாக்களை மிகவும் நெருங்கிய
சம்பந்தத்தில் கொண்டு வாருங்கள். மிகவும் குஷி யடைகின்றனர்,
இப்பொழுது பிரம்மா குமாரிகளின் காரியங்களை அறிந்து கொள்வதில்
நெருக்கத்தில் வந்திருக் கின்றனர். ஆனால் பாப்தாதா முன்பே
கூறியிருக்கின்றார் - ஆத்மாக்களுக்கு ஆஸ்தி தந்தையிடமிருந்து
கிடைக்க வேண்டும். எனவே தந்தையை அறிந்து கொள்ள வேண்டும்,
நேரத்தை அறிந்து கொள்ள வேண்டும், சுவமானத்தை அறிந்து கொள்ள
வேண்டும், அப்பொழுது தான் ஆஸ்திக்கு அதிகாரி ஆக முடியும்.
இப்பொழுது தந்தை வந்திருக்கின்றார், தந்தை ஆஸ்தி கொடுத்துக்
கொண்டிருக்கின்றார் என்பது புத்தியில் வரும் போது தான் ஆஸ்தி
அடைந்து இராஜ்ய அதிகாரி ஆக முடியும்.
நாலாப்புறங்களிலும் இந்த ஓசை பரவ வேண்டும், பாடலும்
பாடுகிறீர்கள் - நம்முடைய பாபா வந்து விட்டார். இப்பொழுது
பாப்தாதா இந்த ரிசல்ட் பார்க்க விரும்புகின்றார். மாற்றம்
ஏற்பட்டிருக்கிறது, சேவையில் இலாபம் ஏற்பட்டிருக்கிறது,
உழைப்பின் பலன் கிடைத்திருக் கிறது. ஆனால் இப்பொழுது தந்தை வரை
சென்றடையவில்லை. இதற்கு ஏதாவது திட்டம் உருவாக்குங்கள். தந்தைளை
எப்படி வெளிப்படுத்துவது? இராஜ்யத்தில் இராஜ்யம் செய்யக்
கூடியவர்களும் தடையற்றவர்களாக ஆகியிருக்கின்றனரா? இப்பொழுது
மாற்றம் என்ற பொத்தானை நாடகம் அழுத்தட்டுமா? எவரெடியாக
இருக்கிறீர்களா? எவரெடியா? பொத்தான் அழுத்தட்டுமா? என்ன
நினைக்கிறீர்கள், பொத்தான் அழுத்தட்டுமா? எவரெடியாக
இருக்கிறீர்களா? ஏனெனில் அனைத்தும் தயாராக இருக்க வேண்டும்,
இராஜ்ய அதிகாரிகளும், இராயல் குடும்பத் தினர்களும், இராயல்
பிரஜைகளும் மற்றும் சாதாரணை பிரஜைகள் ஒன்றும் பெரிய விசய மில்லை.
ஆக இன்று பாப்தாதா குழந்தைகளிடம் ரிசல்ட் கேட்கின்றார். என்ன
நினைக்கிறீர்கள்? பொத்தான் அழுத்துவதற்கு பாப்தாதாவிற்கு நேரம்
ஏற்படாது. முதல் வரிசையினர் என்ன நினைக்கிறீர்கள்? சக்திகள்
என்ன நினைக்கிறீர்கள்? பாண்டவர்கள் என்ன நினைக்கிறீர்கள்? பதில்
கூறுங்கள். ஆம், பாண்டவர்கள் பதில் கூறுங்கள். பொத்தான்
அழுத்தட்டுமா? எவரெடியாக இருக்கிறீர்களா? (பாபா, நீங்கள்
எஜமானர், பொத்தான் அழுத்த வேண்டும் என்ற சங்கல்பம் வந்தால்
அழுத்தி விடுங்கள்). பாப்தாதா குழந்தைகளிடம் கேட்கின்றார், ஏன்?
ஏனெனில் தந்தை இராஜ்யத்தில் வரமாட்டார். பிரம்மா பாபா வருவார்.
(இங்கு பாப்தாதாவை சந்தித்துக் கொண்டே இருக்கலாம், இது மிகவும்
நன்றாக இருக்கிறது). இது நல்ல விசயம் தான், ஆனால் பாப்சமான் ஆகி
தந்தையின் கூடவே வாழ்க்கையின் அனுபவம் செய்ய வேண்டும், இதுவும்
தேவை அல்லவா! அது இருக்கிறதா? தயாராக இருக்கிறீர்களா? நீங்கள்
மட்டுமல்ல, இராஜ்யம். நீங்கள் யார் மீது இராஜ்யம் செய்வீர்கள்?
இராஜ்யம் வேண்டும் அல்லவா! (அனைவரும் கூடவே இருக்கிறார்கள்).
அனைவரும் தயாராக இருக்கிறீர்களா? (முற்றிலும் தயாராக
இருக்கிறோம்). சம்பன்னம் ஆவதில் தயாராக இருக்கிறீர்களா? நல்லது,
அனைவரும் யோசிக்கிறீர்கள், ஒன்றும் பெரிய விசயமில்லை.
பாப்தாதா அறிவார் - இன்று வரை ரெடியாக இருக்கிறீர்கள், எவரெடி
ஆக வேண்டியிருக்கிறது. பாப்தாதா இரண்டு விசயங்கள்
கூறியிருந்தார் - விநாடியில் முற்றுப்புள்ளி வைக்கும் குழந்தை
தேவை. வீண் எண்ணங்களின் பெயர், அடையாளம் இருக்கக் கூடாது.
யாருக்கெல்லாம் செய்தி கொடுப்பீர்களோ, அவர் செய்தி கேட்டு
மாற்றம் கொண்டு வருவதற்கான ஆர்வம்-உற்சாகத்தில் வந்து விட
வேண்டும். பாப்தாதா இப்பொழுது இந்த ரிசல்ட் விரும்புகின்றார்.
இதற்கு பாப்தாதா குழந்தைகளுக்கு கருத்து கூறுகின்றார்,
கட்டளையிடுகின்றார் - சேவை செய்கிறீர்கள், ஆனால் யாருக்கு சேவை
செய்கிறீர்களோ, அவர்களுக்கு ஒரே நேரத்தில் மூன்ற ரூபங்கள்
மற்றும் மூன்று விதங்களில் சேவை செய்யுங்கள். மூன்று ரூபம் -
ஞானம் நிறைந்தவர், சக்தி நிறைந்தவர் மற்றும் அன்பு நிறைந்தவர்.
இந்த மூன்று ரூபங்களின் மூலம் சேவை செய்யுங்கள். மேலும் மூன்று
விதங்களில் சேவை செய்யுங்கள். அந்த மூன்று விதங்கள் ஒரே
நேரத்தில் எண்ணம்-சொல்-செயலின் மூலம், வார்த்தைகளின் சேவை
மட்டுமின்றி வார்த்தைகளின் கூடவே மன சேவையும் செய்ய வேண்டும்.
மனம் சக்திசாலியாக இருக்க வேண்டும். ஆக இப்பொழுது அவசியமானது -
ஒரே நேரத்தில் சக்திசாலியாக இருந்து ஆத்மாக்களின் மனதை யும்
மாற்றி விட வேண்டும். வார்த்தைகளின் மூலம் முழு ஞானம்
தெளிவாக்கி விட வேண்டும், செயல்களின் (கர்மனா சேவை) மூலம் அந்த
ஆத்மாக்கள் அனுபவம் செய்ய வேண்டும் - உண்மையில் நாம் நமது
குடும்பத்திற்கு வந்து சேர்ந்து விட்டோம். குடும்பம் என்ற
உணர்வு வருவதன் மூலம் நெருங்கிய உறவுகளாக ஆகிவிடுவர். ஆக
பாப்தாதா இப்பொழுது ஒரே நேரத்தில் மூன்று ரூபங்களின் சேவை
விரும்புகின்றார். முடியுமா? முடியுமா? கை உயர்த்துங்கள்,
முடியுமா? பாப்தாதா இப்போதைய ரிசல்ட் பார்த்தார் -
வார்த்தைகளின் மூலம் ஞானம் நிறைந்தவர்களாக ஆகின்றனர், ஆனால்
குடும்ப உறவினர்களாக ஆக வேண்டும் என்பதில் நேரம் ஏற்படுகிறது.
நேரத்தின் சவால் கூடவே இப்பொழுது சேவையில் இப்படிப்பட்ட சேவை
செய்யுங்கள் - ஒரே நேரத்தில் மூன்று சேவையின் மூலம்
பிராப்தியின் அனுபவம் செய்ய வேண்டும். சந்திப்பு செய்வதற்காக
அனைவரும் ஆர்வம்-உற்சாகத்துடன் வந்து சேர்ந்து விட்டீர்கள்.
குழந்தைகளின் ஆர்வத்தைப் பார்த்து பாப்தாதா குஷியடைகின்றார்.
இப்பொழுது சம்பன்னம் மற்றும் சம்பூர்னம் ஆவதில் கவனம் செலுத்த
வேண்டும். ஏனெனில் குறைந்தது 108 மணி மாலையை தயார் செய்யுங்கள்,
செய்ய முடியுமா? 108 மணிகள் தயாராக இருக்கிறதா? தயாராக
இருக்கிறதா? ஏனெனில் இராஜ்யத்தில் இராஜ்ய அதிகாரிகளாக அவர்கள்
தான் ஆவார்கள் இல்லையா! எனவே 108 இரத்தினங்களின் பட்டியல்
இப்பொழுது உருவாக்க முடியுமா? ஆம் என்று கூற முடியவில்லையா?
108 இராஜ்ய அதிகாரிகள், பிறகு 16108 இராஜ்ய அதிகாரிகள்.
அவர்களுக்குப் பிறகு வரிசைக் கிரமமம். எனவே பாப்தாதா இப்பொழுது
நேரத்தின் அநுசாரம், நேரத்தை நெருக்கத்தில் கொண்டு வரும்
குழந்தைகளிடம் இதையே விரும்புகின்றார் - 108 மணிகள் எவரெடியாக
இருக்க வேண்டும், பாப்சமான் ஆக வேண்டும். முதல் வரிசையில்
உள்ளவர்கள் 108 பெயர்களை உருவாக்க முடியுமா? ஆம் அல்லது இல்லை
என்று கூறுங் களேன்! சாகாரத்தில் பிரம்மா பாபா இருந்த பொழுது
பல முறை சோதனை செய்தார். ஆனால் முடிவு எடுக்க முடியவில்லை.
ஆனால் இப்பொழுது 75 ஆண்டுகள் முடிவடைந்து கொண்டி ருக்கிறது.
இந்த 75 ஆவது விழாவில் ஏதாவது புதுமை செய்வீர்கள் தானே! இந்த
புதுமை செய்யுங்கள் - ஒவ்வொருவரும் தன்னை 108 மாலையில் மணியாக
ஆக்க வேண்டும். கணக் கெடுக்கும் போது 108 மணி மாலை உருவாகி
விட்டது என்று வர வேண்டும். ஏனெனில் முதலில் இராஜ்ய அதிகாரிகள்
தயார் ஆக வேண்டும், அப்போது தான் அவர்களுக்குப் பின் இராஜ்ய
தொடர்பில் வருபவர்கள் தயார் ஆவார்கள். அவர்களுக்கும் இடம் தேவை
அல்லவா! ஆக பாப்தாதா கூறுவதன் சாரம் இதுவே - இப்பொழுது
ஒவ்வொருவரும் தீவிர முயற்சி செய்து மற்றும் திட சங்கல்பம்
செய்ய வேண்டும் - நான் பாப்சமான் ஆகியே தீர வேண்டும். ஏனெனில்
பாப்தாதா கூறிவிட்டார் - திடீரென்று மாற்றம் ஏற்பட வேண்டும்.
அதற்கு முன் குறைந்தது சேவைக்கு நிமித்தமாக இருப்பவர்கள்,
மண்டல தலைவர்கள் கூடவே கிளை பொறுப்பாளர்கள், மேலும் அவர்களுக்கு
நெருக்கமாக இருக்கும் பாண்டவர்கள், அவர்கள் சேவை நிலைய பொறுப்
பாளர்களாக ஆவது கிடையாது, ஆனால் ஏதாவது ஒரு விசேஷ காரியத்திற்கு
நிமித்தமாக இருக்கிறார்கள், அவர்களைத் தான் அனைவரும் விசேஷ
ஆத்மா என்ற பார்வையில் பார்க்கின்றனர். அப்படிப்பட்ட
பாண்டவர்களும் இப்பொழுது தீவிர முயற்சி செய்து சுய
மாற்றத்திற்கான ஜொலிப்பு வெளி மேடைக்கு கொண்டு வர வேண்டும்.
இதற்கு எவரெடியாக இருக்கிறீர்களா? இந்த காரியம் செய்தே ஆக
வேண்டும் என்று நினைப் பவர்கள், தன்னை பாப்சமான், பிரம்மா
பாபாவிற்கு சமம் தந்தையை பின்பற்றியே ஆக வேண்டும், செய்தே ஆக
வேண்டும் என்று நினைப்பவர்கள் கை உயர்த்துங்கள். கைகளை நன்றாக
உயர்த்தி குஷிப் படுத்தி விடுகிறீர்கள். நன்றாக செய்கிறீர்கள்.
ஆனால் கைகளின் கூடவே திட சங்கல்பமும் செய்யுங்கள். திட
சக்தியானது மிகுந்த சகயோம் செய்யும்.
ஆக பாப்தாதா குஷியடைகின்றார், கைகளை உயர்த்துவதில் அனைவரும்
புத்திசாலிகளாக இருக்கிறீர்கள். இப்பொழுது திடதாவை நடைமுறையில்
கொண்டு வருவீர்கள். புத்திசாலிகள் அல்லவா - குழந்தைகளே! உறுதி
எடுத்துக் கொள்ளவும் செய்கிறீர்கள், ஆனாலும் உறுதித் தன்மை
விதவிதமான ரூபத்தில் மாறி விடுகிறது. இது ஆகிவிட்டது, இது
ஆகிவிட்டது. இது நடந்திருக்கா விட்டால் அது நடந்திருக்காது.
இவ்வாறு சாக்கு கூறுவதில் மிகுந்த புத்திசாலி களாக
இருக்கிறீர்கள். ஆக இப்பொழுது பாப்தாதா என்ன விரும்புகின்றார்?
இப்பொழுது ஒவ்வொருவரும் பாப்சமான் ஆக வேண்டும். மனம், சொல்,
செயல், சம்பந்தம், தொடர்பில் உங்களை யார் பார்த்தாலும், யார்
சந்தித்தாலும் அவர்கள் ஆஹா மாற்றம் ஆஹா என்றே கூற வேண்டும்.
பாப்தாதாவிற்கு நன்றாக இருக்கின்றது. நிமித்தமாக இருக்கும்
குழந்தைகளைப் பார்த்து குஷியடைகின்றார் மற்றும் சந்திப்பு
செய்வதிலும் மிகுந்த குஷியடைகின்றார். ஆக இன்று என்ன சங்கல்பம்
செய்தீர்கள்? ஆகியே தீர வேண்டும். பிரம்மா பாபாவிற்கு சமம்
ஆகியே தீர வேண்டும். ஆக வேண்டும் என்பது கிடையாது, ஆகியே தீர
வேண்டும். எந்த விசயம் நடந்தாலும், விசயத்திற்குப் பதிலாக
தந்தையை முன் நிறுத்துங்கள். ஆக தூரத்தில் அமர்ந்திருக் கும்
குழந்தைகள், நெருக்கத்தில் அமர்ந்திருக்கும் குழந்தைகள்
இருவரையும் பாப்தாதா பார்த்து பார்த்து மகிழ்ச்சி அடைந்து
கொண்டிருக்கின்றார். அனைத்துக் குழந்தைகளும் மிக நன்றாக
திட்டங்கள் உருவாக்கு கிறீர்கள். அமிர்தவேளையில் அனைவரும் மிக
இனிமையான விசயங்கள் பேசுகிறீர்கள். மெஜாரிட்டி இனிமையான
விசயங்கள் பேசுகிறீர்கள், அதை கேட்டு தந்தையும் கூட பலியாகி
விடுகின்றார். ஆனால் பிறகு என்ன நடக்கிறது என்பது தெரியுமா?
கர்மúஷத்திரத்தில் வரும் பொழுது, சம்பந்தங்களில் வரும் பொழுது,
சேவையில் வரும் பொழுது ஏற்படும் பிரச்சனைகளில் சிறிது மாறி
விடுகிறீர்கள். அமிர்தவேளையில் இருக்கும் ஆர்வம்-உற்சாகம் செயல்
செய்யும் பொழுது, சம்பந்தங்களில் வரும் பொழுது சிறிது மாறி
விடுகிறது.
இப்பொழுது பாப்தாதா ஒரு காரியம் கொடுக்கின்றார், செய்வதற்கு
தயாராக இருக்கிறீர்கள் தானே! தலை அசையுங்கள். கை உயர்த்துங்கள்.
பாப்தாதாவிற்கு சங்கல்பம் இருக்கிறது - ஒரு மாதத்திற்கு தன்னை
திட சங்கல்பத்தின் ஆதாரத்தில் பாப்சமான் ஸ்திதியில் நிலைக்கச்
செய்ய முடியுமா? ஒரு மாதம், செய்ய முடியுமா? அல்லது அதிகமாக
இருக்கிறதா? ஒரு மாதம் உறுதித்தன்மையுடன், உறுதியை துணையாக்கி
தந்தையை சதா எதிரில் வைக்க வேண்டும், பிரம்மா பாபாவை கண்களில்
நிறைத்து வைத்துக் கொள்ள வேண்டும் மற்றும் பிரம்மா பாபா எண்ணம்,
சொல், செயலில் என்ன செய்தாரோ அதையே செய்ய வேண்டும். நீங்கள் நடை
முறையில் பார்த்தீர்கள் அல்லது பார்க்கவில்லை, ஆனால் ஞானம்
இருக்கிறது அல்லவா! எந்த ஒரு காரியம் செய்வதற்கு முன் இதை சோதனை
செய்ய வேண்டும் - பிரம்மா பாபாவின் சங்கல்பம் இவ்வாறு தான்
இருக்குமா, இவ்வாறு தான் பேசுவாரா, இவ்வாறு தான் காரியம்
செய்வாரா, இவ்வாறு தான் சம்பந்தத்தில் வருவாரா, இவ்வாறு தான்
தொடர்பில் வருவாரா? முதலில் யோசியுங்கள் பிறகு செய்யுங்கள்.
இதற்கு கை உயர்த்துங்கள். முடியுமா, மிக நன்றாக கை
உயர்த்துங்கள். தாய்மார்கள் இங்கு உடற்பயிற்சி செய்கிறீர்கள்
அல்லவா, உயராமாக கை உயர்த்துங்கள். முன்னால் இருப்பவர்களும்
உயர்த்துவீர்கள் அல்லவா? மதுவனத்தில் உள்ள அனைவரும் இதில்
நம்பர் ஒன் வர வேண்டும். முன்னால் மதுவனத்தில் இருப்பவர்கள்
அமர்ந்திருக்கிறீர்கள் அல்லவா! மதுவனம் என்றால் சாந்திவனம்
மட்டுமல்ல, யாராக இருந்தாலும் ஒரு மாதம் தடையற்றவர்களாக,
ஒவ்வொரு சேவை நிலையமும் தடையற்றதாக, குஜராத் ஆசிரியர்கள் கை
உயர்த்துங்கள். குஜராத் ஆசிரியர்கள் முடியும் என்று
நினைக்கிறீர்களா! மிக உயரமாக கை உயர்த்துங்கள். மேலோட்டமாக
உயர்த்தாதீர்கள், உயரமாக கை உயர்த்துங்கள். முடியுமா? நல்லது.
சாந்திவனத்தில் வசிப்பவர்கள் கை உயர்த்துங்கள், குறைவாக
இருக்கின்றனர். அமர்ந்திருப்பவர்கள் அனைவரும், கடைசியிலும்
அமர்ந்திருக் கின்றனர். ஆக மதுவனத்தின் 4-5 இடங்களில்
உள்ளவர்கள் செய்வீர்களா? செய்வீர்களா, கை உயர்த்துங்கள்?
மதுவனத்தில் உள்ளவர்கள் இரண்டு கைகளை உயர்த்துங்கள். குஜராத்
மாணவர்களும், ஆசிரியர்களும், நிமித்த சகோதரர்களும் அனைவரும் கை
உயர்த்துங்கள், செய்வீர்கள் தானே! மிக உயரமாக கை உயர்த்துங்கள்.
பின்னால் இருப்பவர்களின் கை தென்படவில்லை, நல்லது. குஜராத்
ஆத்மாக்கள் எழுந்து நில்லுங்கள். குஜராத்திலிருந்து அதிகம்
வந்திருக்கின்றனர். பாதி ஹால் குஜராத் ஆத்மாக்களாக
இருக்கின்றனர். (குஜராத் 15 ஆயிரம் பேர் இருக்கின்றனர், பாக்கி
3 ஆயிரம் பேர்). குஜராத் ஆத்மாக்களுக்கு பாப்தாதா மற்றும்
குடும்பத்தின் சார்பாக மிகுந்த வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.
இப்பொழுது கை தட்டியது போன்று ஒரு மாதத்திற்குப் பிறகு
ரிசல்டில் குஜராத் நம்பர் ஒன்னில் வர வேண்டும். நல்லது.
எண்ணிக்கை மிக நன்றாக இருக்கிறது. பாப்தாதா குஷியடைகின்றார் -
குழந்தைகளுக்கு தந்தை யின் மீது மற்றும் மதுவனத்தின் மீது
உள்ளப்பூர்வமான அன்பு இருக்கிறது. மிகவும் நல்லது. இப்போது
குஜராத் அதிசயம் செய்து காட்ட வேண்டும். இந்த ஒரு மாத ரிசல்டில்
நம்பர் ஒன் வந்து காண்பிக்க வேண்டும். அனைவரும் நம்பர்ஒன் வர
வேண்டும். மதுவனத்தில் உள்ளவர்கள் நம்பர் ஒன்னில் வருவீர்கள்
தானே, கை உயர்த்துங்கள்! எது நடந்தாலும், எப்படிப்பட்ட பிரச்சனை
வந்தாலும், பிரச்சனை வரும், மாயை கேட்டுக் கொண்டிருக்கிறது,
எனவே மாயை தனது ரூபத்தை காண்பிக்கத் தான் செய்யும். ஆனால்
மாயாவின் வேலை வருவது, உங்களது வேலை வெற்றி அடைவது. இவ்வாறு
ஆகிவிட்டது, அது நடந்து விட்டது என்று கூறக் கூடாது. வரும்,
நடக்கும் என்று பாப்தாதா முன்கூட்டியே கூறி விட்டார். ஏனெனில்
மாயை கேட்டுக் கொண்டி ருக்கிறது. அது மிகவும் புத்திசாலியாக
இருக்கிறது. ஆனால் நீங்கள், மாயை எவ்வளவு தான் புத்திசாலியாக
இருந்தாலும் நீங்கள் சர்வசக்திவானின் துணையாக இருக்கிறீர்கள்,
மாயை என்ன செய்ய முடியும்? பாப்தாதா டி.வி யில் பார்த்துக்
கொண்டிருக் கின்றார், அனைவரும் நம்பர் ஒன் வர வேண்டும். யாரும்
இரண்டாம் நம்பராக ஆகக் கூடாது, ஒன் நம்பர். நல்லது.
பாப்தாதா இப்பொழுது அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே ஒரு சிரேஷ்ட
சங்கல்பம் கூற விரும்புகின்றார் - இப்பொழுது தானும்
தடையற்றவராக இருக்க வேண்டும், மேலும் தன்னுடன் இருப்பவர்கள்,
சம்பந்தத்தில் வருபவர்களையும் தடையற்றவர்களாக ஆக்குங்கள்.
அனைவரை யும் நெருக்கத்தில் அழைத்து வாருங்கள். குழந்தைகளின்
துக்கம், அசாந்தி பாப்தாதாவினால் பார்க்க முடியவில்லை.
இப்பொழுது தனது இராஜ்யத்தை கூடிய விரைவில் பூமியில் கொண்டு
வாருங்கள். பாப்தாதாவிற்கு ஒவ்வொரு குழந்தையும் பிரியமானவர்,
கடைசி நம்பரில் உள்ள குழந்தையும் பிரியமானவர், ஏனெனில்
பலவீனமாக இருக்கிறார் அல்லவா! பலவீனமானவர் மீது இன்னும் அதிக
கருணை ஏற்படுகிறது. நீங்கள் அனைவரும் கூட எப்படிப்பட்ட
ஸ்திதியுடையவர்கள், சுபாவம் உடையவர்களாக இருந்தாலும் அவர்கள்
என்னுடையவர்கள். தந்தை எப்படி என்னுடையவராக இருக்கிறாரோ, அதே
போன்ற குடும்பமும் என்னுடையது. எனவே அவரது சுபாவ,
சன்ஸ்காரத்தைப் பார்க்காமல் அவருக்கு இன்னும் சகயோகம் கொடுங்கள்,
நல்ல பாவணை கொடுங்கள், சுப பாவணை கொடுங்கள். நல்லது, எதிரில்
இருக்கும் குழந்தைகள் அல்லது தூரத்தில் அமர்ந்து பார்க்கக்
கூடிய குழந்தைளுக்கு பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் தனது
எதிரில் பார்த்து திருஷ்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றார்
மற்றும் வாழ்த்துக் களும் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.
நல்லது.
ஆசீர்வாதம்:
வார்த்தைகளினால் ஞான இரத்தினங்களை
தானம் செய்யக் கூடிய மாஸ்டர் ஞானம் நிறைந்தவர் ஆகுக.
யார் வார்த்தைகளின் மூலம் ஞான இரத்தினங்களை தானம் செய்கிறார்களோ,
அவர்களுக்கு மாஸ்டர் ஞானம் நிறைந்தவர் என்ற வரதானம் பலனாக
கிடைக்கிறது. அவர்களது ஒவ்வொரு சப்தத்திற்கு மிகுந்த மதிப்பு
இருக்கும். அவர்களது ஒவ்வொரு வார்த்தையை கேட்பதற்கு அநேக
ஆத்மாக்கள் தாகத்துடன் இருப்பார்கள். அவர்களது ஒவ்வொரு
சப்தத்திலும் சென்ஸ் (சாரம்) நிறைந்திருக்கும். அவர்களுக்கு
விசேஷமாக குஷி பிராப்தியாக கிடைக்கும். அவர்களிடம் பொக்கிஷம்
நிறைந்திருக்கும். ஆகையால் அவர்கள் சதா திருப்தியாக மற்றும்
மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்களது வார்த்தைகள் பிரபாவத்தை
ஏற்படுத்தக் கூடியதாக ஆகிவிடும். வார்த்தைகளை தானம் செய்வதனால்,
வார்த்தைகளில் அதிக குணம் வந்து விடும்.
சுலோகன்:
சுய இராஜ்யத்திற்கு எஜமானர் ஆகும் பொழுது
முழு ஆஸ்திக்கான அதிகாரம் கிடைத்து விடும்.
அவ்யக்த இஷôரே: இப்பொழுது தனது வள்ளல் சொரூபத்தை
வெளிப்படுத்துங்கள்
மாஸ்டர் வள்ளல், பிராப்தி சொரூப குழந்தைகளாகிய நீங்கள் உலக
ஆத்மாக்களின் மீது கருணை மற்றும் ஆர்வம் ஏற்பட வேண்டும் - எனது
சகோதரர் அல்ப கால இச்சைகளில் எவ்வளவு அலைந்து
கொண்டிருக்கின்றார்! வள்ளலின் குழந்தைகள் தனது சகோதரர்களின்
மீது கருணை மற்றும் இரக்கப் பார்வை காட்டுங்கள். மகாதானி,
வரதானி ஆகுங்கள். ஜொலிக்கும் திருப்தி மணியாகி அனைவருக்கும்
மகிழ்ச்சி கொடுங்கள்.