14-08-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! பாபாவிடம் நேர்மையாக இருங்கள். தன்னுடைய உண்மையிலும் உண்மையான சார்ட் வையுங்கள். யாருக்கும் துக்கம் கொடுக்காதீர்கள். ஒரு பாபாவின் சிரேஷ்ட வழிமுறைப்படி நடந்து கொண்டே இருங்கள்.

கேள்வி:
யார் முழுமையாக 84 பிறவிகளை எடுப்பவர்களோ, அவர்களின் புருஷார்த்தம் எப்படி பட்டதாக இருக்கும்?

பதில்:
அவர்களின் விசேஷ புருஷார்த்தம் நரனிலிருந்து நாராயணன் ஆவதற்காக இருக்கும். தங்களின் கர்மேந்திரியங்கள் மீது அவர்களின் முழுக் கட்டுப்பாடு இருக்கும். அவர்களின் கண்கள் குற்றமுள்ளதாக இருக்காது. இப்போது வரையிலும் கூட யாரையாவது பார்ப்பதால் விகாரி சிந்தனைகள் வருகின்றன, குற்றமான பார்வை உள்ளது என்றால் புரிந்து கொள்ளுங்கள், முழு 84 பிறவிகளை எடுக்கக் கூடிய ஆத்மா இல்லை என்று.

பாடல்:
இந்தப் பாவ உலகத்தில் இருந்து புண்ணிய உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள்..........

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மிகக் குழந்தைகள் அறிவார்கள், இது பாவங்களின் உலகம். புண்ணியத்தின் உலகத்தைப் பற்றியும் மனிதர்கள் அறிவார்கள். முக்தி மற்றும் ஜீவன் முக்தி என்பது புண்ணியத்தின் உலகத்திற்குச் சொல்லப்படுகின்றது. அங்கே பாவம் இருப்ப தில்லை. பாவம் இருப்பது துக்க உலகமாகிய இராவண இராஜ்யத்தில். துக்கம் கொடுக்கும் இராவணனையும் பார்த்தாயிற்று. இராவணன் என்று எந்த ஒரு பொருளும் கிடையாது.. இருந்தாலும் இராவணனின் உருவ பொம்மையை எரிக்கின்றனர். குழந்தைகள் அறிவார்கள், நாம் இச்சமயம் இராவண இராஜ்யத்தில் உள்ளோம். ஆனால் அதிலிருந்து விலகியிருக்கிறோம். நாம் இப்போது புருஷோத்தம சங்கமயுகத்தில் இருக்கிறோம். குழந்தைகள் இங்கே வரும்போது அவர்களின் புத்தியில் உள்ளது-நாம் நம்மை மனிதரில் இருந்து தேவதை ஆக்குகிற அந்தத் தந்தை யிடம் வருகிறோம். சுகதாமத்தின் எஜமானராக ஆக்குகிறார். சுகதாமத்தின் எஜமானனாக ஆக்குபவர் பிரம்மா கிடையாது, எந்த ஒரு தேகதாரியும் கிடையாது. அவர் தான் சிவபாபா, அவருக் கென்று தேகம் கிடையாது. தேகம் உங்களுக்கும் கூட இல்லாமல் தான் இருந்தது. ஆனால் நீங்கள் பிறகு தேகத்தை எடுத்துக் கொண்டு பிறப்பு-இறப்பில் வருகிறீர்கள். நீங்கள் புரிந்து கொண்டிருக் கிறீர்கள், எல்லையற்ற தந்தையிடம் நாம் செல்கிறோம் என்று. அவர் நமக்கு உயர்வான வழிமுறை தருகிறார். நீங்கள் அத்தகைய புருஷார்த்தம் செய்வதால் சொர்க்கத்தின் எஜமானர் ஆக முடியும். சொர்க்கத்தையோ அனைவருமே நினைவு செய்கின்றனர். நிச்சயமாக புது உலகம் என்பது உள்ளது எனப் புரிந்து கொண்டுள்ளனர். அதையும் ஸ்தாபனை செய்பவர் யாரோ ஒருவர் இருக்கிறார். நரகத்தையும் யாரோ ஒருவர் ஸ்தாபனை செய்கிறார். உங்களுடைய சுகதாமத்தின் பார்ட் எப்போது முடிவடைகின்றது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். பிறகு இராவண இராஜ்யத்தில் நீங்கள் துக்கம் அடைபவர்களாக ஆகிறீர்கள். இச்சமயம் இது துக்க உலகம். எவ்வளவு தான் கோடீஸ்வரராக, பல கோடிக்கு அதிபதியாக இருந்தாலும் பதீத் உலகம் என்றுதான் அவசியம் சொல்வார்கள் இல்லையா? இது ஏழை உலகம், துக்க உலகம். எவ்வளவு தான் பெரிய-பெரிய கட்டடங்கள் இருந்தாலும் சரி, சுகத்திற்கான அனைத்து சாதனங்களும் இருந்தாலும் கூட இதைப் பதீத், பழைய உலகம் என்று தான் சொல்வார்கள். விஷ வைதரணி நதியில் மூழ்கி எழுந்து கொண்டே இருக்கின்றனர். விகாரத்தில் போவது பாவம் என்பதைக் கூட அறிந்து கொள்வ தில்லை. இது இல்லாமல் சிருஷ்டி எப்படி விருத்தியாகும் எனக் கேட்கின்றனர். அழைக்கவும் செய்கின்றனர், ஹே பகவான், ஹே பதித-பாவனா வந்து இந்தப் பதீத் உலகத்தைப் பாவன மாக்குங்கள். ஆத்மா சரீரத்தின் மூலமாகச் சொல்கிறது. ஆத்மா தான் பதீத் ஆகியுள்ளது. அதனால் தான் அழைக்கின்றது. சொர்க்கத்தில் ஒருவர் கூட பதீத்தாக இருக்க மாட்டார்கள்.

குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், சங்கம யுகத்தில் யார் நல்ல முயற்சியாளர்களோ அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர், நாம் 84 பிறவிகள் எடுத்துள்ளோம், பிறகு இந்த லட்சுமி-நாரயணரோடு கூடவே நாம் சத்யுகத்தில் இராஜ்யம் செய்வோம். என்பதையும் அறிந்துள்ளனர். ஒருவர் மட்டுமே 84 பிறவிகள் எடுக்கவில்லையா என்ன? இராஜாவுடன் கூட பிரஜைகளும் வேண்டும். பிராமணர் களாகிய உங்களில் கூட நம்பர்வார் இருக்கிறீர்கள். சிலர் இராஜா-ராணி ஆகின்றனர், சிலர் பிரஜை ஆகின்றனர். பாபா சொல்கிறார், குழந்தைகளே, இப்போது தான் நீங்கள் தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும். இந்தக் கண்கள் குற்றமுள்ளவை, யாரையாவது பார்க்கும் போது விகாரத்தின் பார்வை செல்கிறது என்றால் அவருக்கு 84 பிறவிகள் இருக்காது. அவர் நரனிலிருந்து நாராயணன் ஆக முடியாது. எப்போது இந்தக் கண்கள் மீது வெற்றி கொள்கிறீர்களோ, அப்போது கர்மாதீத் நிலை ஏற்படும். அனைத்து ஆதாரமும் கண்களில் தான் உள்ளது. கண்கள் தான் ஏமாற்று கின்றன. ஆத்மா இந்தக் கண்களாகிய ஜன்னல் மூலம் பார்க்கின்றது. இவருக்குள்ளோ (பிரம்மா) இரண்டு ஆத்மாக்கள் உள்ளன. சிவபாபாவும் இந்த ஜன்னல்களின் வழியாகப் பார்த்துக் கொண்டி ருக்கிறார். நமது திருஷ்டியும் ஆத்மாவின் மீது செல்கிறது. பாபா ஆத்மாக்களுக்குத் தான் புரிய வைக்கிறார். பாபா சொல்கிறார், நானும் கூட சரீரத்தை ஆதாரமாக எடுத்துக் கொண்டுள்ளேன். அப்போது தான் பேச முடியும். நீங்கள் அறிவீர்கள், பாபா நம்மை சுகத்தின் உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார். இது இராவண இராஜ்யம். நீங்கள் இந்தப் பதித் உலகத்திலிருந்து விலகி விட்டீர்கள். சிலர் அதிகம் முன்னேறிச் சென்றுள்ளனர், சிலர் பின் தங்கி விட்டனர். ஒவ்வொருவரும் சொல்லவும் செய்கின்றனர், என்னை அக்கரை கொண்டு சேருங்கள் என்று. இப்போது கடந்து சென்று விடுவார்கள், சத்யுகத்திற்கு. ஆனால் அங்கே பதவி உயர்ந்ததாகப் பெற வேண்டும் என்றால் பவித்திரமாக ஆக வேண்டும். முயற்சி செய்ய வேண்டும். முக்கிய விசயம், பாபாவை நினைவு செய்வீர்களானால் விகர்மங்கள் விநாசமாகும். இது முதல் பாடமாகும்.

நீங்கள் இப்போது அறிவீர்கள், ஆத்மாக்கள் நாம் நடிகர்கள். முதல்-முதலில் நாம் சுகதாமத்தில் வந்தோம். பிறகு இப்போது துக்கதாமத்தில் வந்துள்ளோம். இப்போது பாபா மீண்டும் சுகதாமத்திற்கு அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளார். பாபா சொல்கிறார், என்னை நினைவு செய்யுங்கள், பவித்திரமாகுங்கள். யாருக்கும் துக்கம் கொடுக் காதீர்கள். ஒருவர் மற்றவர்க்கு அதிக துக்கம் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். யாருக்குள்ளாவது காமத்தின் பூதம் வந்தது, சிலருக்குள் கோபம் வந்தது, கையை நீட்டி விட்டார்கள் என்றால் பாபா சொல்வார், இவர்களோ, துக்கம் கொடுக்கும் பாவாத்மாக்கள். புண்ணிய ஆத்மாவாக எப்படி ஆவார்கள்? இது வரையிலும் கூட பாவம் செய்து கொண்டே இருக்கின்றனர். இவர்களோ பெயரைக் கெடுக்கின்றனர். அனைவரும் என்ன சொல்வார்கள்? சொல்கின்றனர், எங்களுக்கு பகவான் படிப்பு சொல்லித் தருகிறார் என்று. நாங்கள் மனிதரில் இருந்து தேவதையாக, உலகத்தின் எஜமானராக ஆகிறோம். அவர்கள் பிறகு இதுபோன்ற காரியம் செய்வார்களா என்ன? அதனால் பாபா சொல்கிறார், தினமும் இரவில் தன்னைத்தான் பாருங்கள். நல்ல குழந்தை என்றால் சார்ட் அனுப்பி வைக்க வேண்டும். சிலர் சார்ட் எழுதலாம், ஆனால் அதனுடன் நாம் யாருக்காவது துக்கம் கொடுத்தோமா, அல்லது இந்தத் தவறு செய்தோமா என்பதை எழுதுவதில்லை. நினைவு செய்து கொண்டே இருக்கின்றனர், மற்றும் தலைகீழான கர்மம் செய்து கொண்டே இருக்கின்றனர் என்றால், இதுவும் சரியல்ல. எப்போது தேக அபிமானி ஆகின்றனரோ, அப்போது தலைகீழான காரியம் செய்கின்றனர்.

இந்தச் சக்கரம் எப்படிச் சுற்றுகிறது - இதை புரிந்து கொள்வது மிகவும் சுலபம். ஒரு நாளில் கூட ஆசிரியர் ஆக முடியும். பாபா உங்களுக்கு 84 பிறவிகளின் இரகசியத்தைப் புரிய வைக்கிறார், கற்பிக்கிறார். பிறகு போய் அதைப் பற்றிச் சிந்தனை செய்ய வேண்டும். நாம் 84 பிறவிகளை எப்படி எடுத்தோம்? அந்தக் கற்பிக்கிற ஆசிரியரிடமிருந்து தெய்விக குணங்களையும் அதிகம் தாரணை செய்கிறோம். பாபா உறுதிப்படுத்திச் சொல்ல முடியும். பாபா, எங்கள் சார்ட்டைப் பாருங்கள் எனக் காட்டுகின்றனர். நாங்கள் யாருக்கும் கொஞ்சம் கூட துக்கம் கொடுத்ததில்லை. பாபா சொல்வார், இந்தக் குழந்தையோ மிக இனிமையான குழந்தை. நல்ல நறுமணத்தை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர். ஆசிரியர் ஆவதோ ஒரு விநாடியின் காரியம். ஆசிரியரைக் காட்டிலும் மாணவர்கள் நினைவு யாத்திரையில் தீவிரமாக வெளிப்பட முடியும். எனவே ஆசிரியரை விடவும் உயர்ந்த பதவி பெறுவார்கள். பாபாவோ கேட்கிறார், யாருக்குக் கற்றுத் தருகிறீர்கள்? தினந்தோறும் சிவாலயங்களுகுச் சென்று கற்றுக் கொடுங்கள். சிவபாபா எப்படி வந்து சொர்க்கத்தின் ஸ்தாபனை செய்கிறார்? சொர்க்கத்தின் எஜமானர் ஆக்குகிறார். புரிய வைப்பது மிகவும் சுலபம். பாபாவுக்கு சார்ட் அனுப்பி வைக்கின்றனர்- பாபா, எனது மனநிலை இதுபோல் உள்ளது என்று. பாபா கேட்கிறார், குழந்தாய், விகர்மம் எதுவும் செய்யவில்லை தானே? குற்றமான பார்வை தலைகீழான காரியங்களைச் செய்ய வைக்கவில்லை தானே? தன்னுடைய மேனர்ஸ், கேரக்டர்களைப் பார்க்க வேண்டும். நடத்தை-நடவடிக்கைகளின் ஆதாரம் எல்லாம் கண்களில் தான் உள்ளது. கண்கள் அநேக விதமாக ஏமாற்றம் தருகின்றன. கொஞ்சம் கூடக் கேட்காமல் பொருள்களை எடுத்துச் சாப்பிட்டால் அதுவும் பாவமாக ஆகி விடுகின்றது. ஏனென்றால் அனுமதி இல்லாமல் எடுத்தீர்கள் இல்லையா? இங்கே விதிமுறைகள் அதிகம் உள்ளன. சிவபாபாவின் யக்ஞம் இல்லையா? பொறுப்பானவரைக் கேட்காமல் பொருளைச் சாப்பிட முடியாது. ஒருவர் சாப்பிட்டால் மற்றவர் களும் அதுபோல் செய்யத் தொடங்குவார்கள். உண்மையில் இங்கே எந்த ஒரு பொருளையும் பூட்டி வைக்க வேண்டிய தேவை இல்லை. சட்டம் சொல்கிறது, இந்த வீட்டுக்குள் சமையலறைக்கு முன் எந்த ஓர் அபவித்திரமானவரும் வரக் கூடாது. வெளியிலோ அபவித்திரம் மற்றும் பவித்திரதாவின் கேள்வியே கிடையாது. ஆனால் பதீத் என்றோ தன்னைத் தான் சொல்லிக் கொள்கின்றனர் இல்லையா? அனைவரும் பதீத். யார் ஒருவரும் வல்லபாச்சாரியார் அல்லது சங்கராச்சாரியார் மீது கை வைக்க (தொட) முடியாது. ஏனென்றால் அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர், நாம் பாவனம், அவர்கள் பதீத் என்பதாக. இங்கே அனைவரின் சரீரமும் பதித்தாக இருந்த போதிலும் முயற்சியின் அனுசாரம் விகாரங்களின் சந்நியாசம் செய்கின்றனர். ஆக, நிர்விகாரிக்கு முன் விகாரி மனிதர்கள் தலை வணங்குகின்றனர். இவர்கள் மிகத் தூய்மையான தர்மாத்மா மனிதர்கள் எனச் சொல்கின்றனர். சத்யுகத்திலோ தாழ்ந்தவர்கள் இருப்பதில்லை. அதுவே பவித்திர உலகம். ஒரே இணத்தவர்கள் மட்டுமே. நீங்கள் இந்த ரகசியம் முழுவதையும் அறிவீர்கள். ஆரம்பத்திலிருந்து சிருஷ்டியின் முதல்-இடை-கடை பற்றிய ரகசியம் புத்தியில் இருக்க வேண்டும். நாம் அனைத்தையும் அறிவோம். மற்றப்படி அறிந்து கொள்வதற்கென்று எதுவும் இல்லை. படைப்பவர் பாபாவை அறிந்து கொண்டீர்கள், சூட்சும வதனத்தை அறிந்து கொண்டீர்கள். வருங்காலப் பதவி பற்றி அறிந்து கொண்டீர்கள். அதற்காகத் தான் புருஷார்த்தம் செய்கிறீர்கள். பிறகு நடத்தை இப்படி ஆகி விட்டால் உயர்ந்த பதவி பெற முடியாது. யாருக்காவது துக்கம் கொடுக்கிறீர்கள், விகாரத்தில் செல்கிறீர்கள், அல்லது தீய பார்வை வைக்கிறீர்கள் என்றால் இதுவும் பாவமாகும். பார்வையை மாற்றுவது என்பது பெரிய முயற்சியாகும். பார்வை மிக நல்லதாக இருக்க வேண்டும். கண்கள் பார்க்கின்றன-இவர் கோபப்படுகிறார் என்றால் தானும் சண்டையிடத் தொடங்குகின்றனர். சிவபாபாவிடம் கொஞ்சம் கூட அன்பு இல்லை, நினைவு செய்வதே இல்லை. ஆத்ம சமர்ப்பணம் எல்லாம் சிவபாபாவுக்குத் தான். குருவே உங்களுக்கு சமர்ப்பணம்............ யார் கோவிந்த ஸ்ரீகிருஷ்ணரின் சாட்சாத்காரம் செய்வித்தாரோ, அந்த சத்குருவுக்குத் தான் சமர்ப்பணம். குருவின் மூலமாக நீங்கள் கோவிந்த் ஆகிறீர்கள். சாட்சாத் காரத்தினால் வாய் இனிப்பாக ஆவதில்லை. மீராவுக்கு வாய் இனிப்பானதா என்ன? உண்மை யிலேயே சொர்க்கத்திற்கோ அவர் செல்லவில்லை. அது பக்தி மார்க்கம். அதை சொர்க்கத்தின் சுகம் எனச் சொல்ல மாட்டாகள். கோவிந்தைப் பார்த்தால் மட்டும் போதாது. அவர் போல் ஆக வேண்டும். நீங்கள் இங்கே வந்திருப்பதே அதுபோல் ஆவதற்காகத் தான். இந்த நஷா இருக்க வேண்டும்- யார் நம்மை இதுபோல் ஆக்குகிறாரோ, அவரிடம் நாம் செல்கிறோம். ஆக, பாபா அனைவருக்கும் இந்த அறிவுரை தருகிறார், சார்ட்டில் இதையும் எழுதுங்கள் - கண்கள் ஏமாற்றமோ தரவில்லை தானே? பாவமோ செய்யவில்லை தானே? கண்கள் ஏதேனுமொரு விஷயத்தில் ஏமாற்றத்தை அவசியம் தருகின்றது. கண்கள் முற்றிலும் குளிர்ச்சியடைந்து விட வேண்டும். தன்னை அசரீரி என உணருங்கள். இந்தக் கர்மாதீத் நிலை கடைசியில் வரும். அதுவும் பாபாவுக்குத் தனது சார்ட்டை அனுப்பி வைக்கும் போது. தர்மராஜரின் ரிஜிஸ்டரில் அனைத்தும் தானாகவே (பதிவு) சேமிப்பாகின்றது. ஆனால் பாபா சாகாரத்தில் வந்துள்ளார் எனும்போது சாகார மனிதர்களுக்குத் தெரிய வேண்டும். அப்போது எச்சரிக்கை தருவார். குற்றமான பார்வை அல்லது தேக அபிமானமுள்ளவராக இருந்தால் வாயுமண்டலத்தை அசுத்தமாக்கி விடுவார்கள். இங்கே அமர்ந்திருந்த போதும் புத்தியோகம் வெளியில் சென்று விடுகின்றது. மாயா மிகவும் ஏமாற்றி விடுகின்றது. மனம் மிகவும் அலையக் கூடியது. எவ்வளவு முயற்சி செய்ய வேண்டியுள்ளது-இப்படி ஆவதற்கு! பாபாவிடம் வருகின்றனர், பாபா ஆத்மாவுக்கு ஞானத்தின் அலங்காரம் செய்விக்கிறார். நாம் ஆத்மா ஞானத்தினால் பவித்திர மாவோம் எனப் புரிந்திருக்கிறீர்கள். பிறகு சரீரமும் கூடப் பவித்திரமானமாகக் கிடைக்கும். ஆத்மா மற்றும் சரீரம் இரண்டுமே பவித்திரமாக சத்யுகத்தில் இருக்கும். பிறகு அரைக்கல்பத்திற்குப் பின் இராவண இராஜ்யம் ஆகின்றது. பகவான் ஏன் இப்படிச் செய்தார் என்று மனிதர்கள் கேட்பார்கள். இந்த அநாதி டிராமா ஏற்கனவே உருவாக்கப் பட்டது. பகவான் எதுவும் செய்யவில்லை. சத்யுகத்தில் இருப்பது - ஒரு தேவி-தேவதா தர்மம். ஒரு சிலர் சொல்கின்றனர், இப்படிப்பட்ட பகவானை நாம் ஏன் நினைவு செய்ய வேண்டும்? ஆனால் உங்களுக்கு மற்ற தர்மங்களோடு எந்தத் தொடர்பும் கிடையாது. யார் முள்ளாக ஆகியிருக் கின்றனரோ, அவர்கள் தான் வந்து மலராக ஆகின்றனர். மனிதர்கள் கேட்கின்றனர், பகவான் என்ன பாரதவாசிகளை மட்டும் தான் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வாரா? நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம், பகவானுக்கும் கூட இரண்டு கண்கள் உள்ளனவா என்பார்கள். ஆனால் இதுவோ உருவாக்கப்பட்ட டிராமா. அனைவரும் சொர்க்கத்திற்கு வந்து விட்டால் பிறகு அநேக தர்மங்களின் பாôட் எப்படி நடைபெறும்? சொர்க்கத்தில் இத்தனைக் கோடிப் பேர் இருக்க மாட்டார்கள். முதல்-முதல் முக்கிய விசயம், பகவான் யார், அவரையோ புரிந்து கொள்ளுங்கள். இதைப் புரிய வைக்கவில்லை என்றால் அநேகக் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். தன்னை ஆத்மா என உணர்வார்களானால் இதுவோ சரியான விசயம் தான் எனச் சொல்வார்கள். நாம் பதித்திலிருந்து பாவனமாக அவசியம் ஆக வேண்டும் என்பார்கள். அவர் ஒருவரை நினைவு செய்ய வேண்டும். அனைத்து தர்மங்களிலும் பகவானை நினைவு செய்கின்றனர்.

குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது இந்த ஞானம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், இந்த சிருஷ்டிச் சக்கரம் எப்படிச் சுற்றுகிறது என்று. கண்காட்சி களிலும் நீங்கள் எவ்வளவு புரிய வைக்கிறீர்கள்! முற்றிலும் மிகச் சிலரே வெளிப்படுகின்றனர். ஆனால் இதன் காரணமாக செய்யக் கூடாது எனச் சொல்ல மாட்டார்கள். டிராமாவில் இருந்தது, செய்தோம். கண்காட்சிகள் மூலம் எங்கெங்கோ வெளிப்படவும் செய்கின்றனர். சில இடங்களில் வெளிப்படுவதில்லை. இன்னும் போனால் வருவார்கள், உயர்ந்த பதவி பெறுவதற் கான புருஷார்த்தம் செய்வார்கள். யாருக்காவது குறைந்த பதவி பெற வேண்டுமென்று இருந்தால் அவ்வளவு புருஷார்த்தம் செய்ய மாட்டார்கள். பாபா குழந்தைகளுக்குப் பிறகும் கூடச் சொல்லிப் புரிய வைக்கிறார், விகர்மம் எதுவும் செய்யாதீர்கள். இதையும் குறித்து வையுங்கள், நாம் யாருக்கும் துக்கம் கொடுக்காமல் இருந்தோமா? பாபா சொல்கிறார், விகர்மம் ஏதேனும் செய்திருந்தால் அதை எழுதுங்கள். இதையோ அறிவீர்கள், துவாபர யுகத்திலிருந்து தொடங்கி விகர்மங்கள் செய்தே வந்து, இப்போது அதிக விகர்மம் செய்பவராக ஆகி விட்டிருக்கிறீர்கள். பாபாவுக்கு எழுதித் தெரியப் படுத்துவதன் மூலம் சுமை இலேசாகி விடும். நான் யாருக்கும் துக்கம் கொடுப்பதில்லை என எழுதுகின்றனர். பாபா சொல்வார், நல்லது, சார்ட் எடுத்து வாருங்கள் பார்க்கிறேன். அத்தகைய நல்ல குழந்தைகளை பாபா அழைக்கவும் செய்வார், நான் அவர்களைப் பார்த்தால் சரியாக இருக்கும் என்பார். நல்ல குழந்தைகள் மீது பாபா மிகுந்த அன்பு செலுத்துவார். பாபாவுக்குத் தெரியும், இன்னும் யாரும் சம்பூர்ணமாக ஆகவில்லை. பாபா ஒவ்வொருவரையும் பார்க்கிறார், எப்படிப் புருஷார்த்தம் செய்கிறார்கள் என்று. குழந்தைகள் சார்ட் எழுதுவதில்லை என்றால் நிச்சயமாக ஏதோ குறைபாடுகள் உள்ளன. அவற்றை பாபாவிடமிருந்து மறைக்கின்றனர். யார் சார்ட் எழுதுகின்றனரோ, அவர்களைத் தான் நேர்மையான குழந்தைகள் எனப் புரிந்து கொள்கிறேன். சார்ட்டுடன் கூடவே நல்ல மேனர்ஸ் கூட வேண்டும். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) தன்னுடைய சுமையை இறக்கி இலேசாக ஆக்குவதற்கு செய்துள்ள விகர்மங்கள் அனைத்தையும் பாபாவுக்கு எழுதித் தெரியப் படுத்த வேண்டும். இப்போது யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது. நல்ல குழந்தையாகி இருக்க வேண்டும்.

2) தனது பார்வையை மிக நல்லதாக (குற்றமற்றதாக) ஆக்கிக் கொள்ள வேண்டும். கண்கள் ஏமாற்றம் தரக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். தன்னுடைய நடத்தை மிக-மிக நன்றாக வைத்திருக்க வேண்டும். காம-கோப வசமாகி எந்த ஒரு பாவமும் செய்யக் கூடாது.

வரதானம்:
லட்சியம் மேலும் குறிக்கோளை சதா நினைவில் வைத்து தீவிர புருஷார்த்தம் செய்யக்கூடிய சதா ஹோலி (தூய்மையான) மற்றும் ஹேப்பி (மகிழ்ச்சியான) ஆத்மா ஆகுக.

பிராமண வாழ்க்கையின் லட்சியமே - எந்தவொரு எல்லைக்கு உட்பட்ட ஆதாரமும் இல்லாமல் - சதா உள்ளார்ந்த குஷியில் இருப்பது. எப்பொழுது இந்த லட்சியத்தை விட்டு எல்லைக்குட்பட்ட பிராப்திகள் (பலன்கள்) என்ற சிறு சிறு தெருக்களில் சிக்கிக் கொள்கின்றீர்களோ அப்பொழுது குறிக்கோளிலிருந்து தூரமாகி விடுகின்றீர்கள். எனவே என்ன நடந்தாலும், எல்லைக்குட்பட்ட பலன்களை தியாகம் செய்ய வேண்டிய நிலை வந்தாலும் கூட அதை (எல்லைக்கு உட்பட்டதை) விட்டு விடுங்கள் ஆனால் அழிவற்ற குஷியை ஒருபோதும் விட்டு விடாதீர்கள். ஹோலி மற்றும் ஹேப்பி ஆகுக என்ற வரதானத்தை நினைவில் வைத்து தீவிர புருஷார்த்தத்தின் மூலம் அழிவற்ற பிராப்திகளை செய்யுங்கள்.

சுலோகன்:
குண மூர்த்தியாகி குணங்களை தானமாக கொடுத்துக் கொண்டே செல்லுங்கள் - இதுவே அனைத்தையும் விட மிகப் பெரிய சேவை ஆகும்.

அவ்யக்த சமிக்கை: சகஜயோகி ஆக வேண்டும் என்றால் பரமாத்ம அன்பின் அனுபவி ஆகுங்கள்

மாஸ்டர் ஞானம் நிறைந்தவர், மாஸ்டர் சர்வ சக்திவான் என்ற நிலையில் நிலைத்திருப்பதன் மூலம் வித விதமான க்யூவை விட்டு (வரிசையில் காத்திருப்பதை விட்டு) வெளியேறி, தந்தை யுடன் சதா சந்திப்பை கொண்டாடக்கூடிய ஆர்வத்தில் தன்னுடைய நேரத்தை ஈடுபடுத்துங்கள் மேலும் அன்பில் மூழ்கிய ஸ்திதியில் (மனோ நிலையில்) இருங்கள் அப்பொழுது அனைத்து விஷயங்களும் சகஜமாக முடிவுக்கு வந்துவிடும் பிறகு உங்கள் முன்னால் உங்களுடைய பிரஜை கள் மற்றும் பக்தர்கள் க்யூவில் நிற்பார்கள்.