15.03.26 காலை முரளி
ஓம் சாந்தி 24.03.2009 பாப்தாதா,
மதுபன்
பாப்தாதாவின் மூலம் அடைந்த பொக்கிஷங்களை தனக்குள் கொண்டு வந்து
காரியத்தில் பயன்படுத்துங்கள், அனுபவ அதாரிட்டி ஆகுங்கள்.
இன்று நாலாப்புறங்களிலும் அனைத்து பொக்கிஷங்களையும் சேமிப்பு
செய்யக் கூடிய சம்பன்ன குழந்தை களை பார்த்துக்
கொண்டிருக்கின்றார். கூடவே ஒவ்வொரு குழந்தையும் எந்த அளவிற்கு
அனைத்து பொக்கிஷங்களை சேமிப்பு செய்திருக்கிறார்கள்? என்ற
ரிசல்ட் பார்த்துக் கொண்டி ருந்தார். பாப்தாதாவின் மூலம் அதிக,
அழிவற்ற பொக்கிஷங்கள் கிடைத்திருக்கிறது. அனைத்தை யும் விட
உயர்ந்ததிலும் உயர்ந்த பொக்கிஷம் ஞானச் செல்வம். இதன் மூலம்
முக்தி மற்றும் ஜீவன் முக்தி பலனாக அடைந்தீர்கள். பழைய தேகம்
மற்றும் பழைய உலகிலிருந்து முக்தியாகி ஜீவன்முக்தி ஸ்திதி
மற்றும் முக்திதாமம் செல்வதற்கான பிராப்தி அனைத்து
குழந்தைகளுக்கும் கிடைத்திருக்கிறது. மேலும் ஒரு ஞானப்
பொக்கிஷம் மட்டுமின்றி யோகாவும் பொக்கிஷமாகும். இதன் மூலம்
சர்வசக்திகளும் பிராப்தியாக கிடைக்கிறது. மேலும் தாரணை
செய்வதற்கான பொக்கிஷமும் இருக்கிறது, இதன் மூலம் அனைத்து
குணங்களும் பிராப்தியாக கிடைக்கிறது. மேலும் சேவையின்
பொக்கிஷமும் இருக்கிறது, இதன் மூலம் ஆசிர்வாதம் என்ற பொக்கிஷம்,
குஷி என்ற பொக்கிஷம் பிராப்தியாக கிடைக்கிறது. ஆனால்
அனைத்தையும் விட உயர்ந்ததிலும் உயர்ந்த பொக்கிஷம் நிகழ்கால
சங்கமயுகமாகும், நேரத்தின் பொக்கிஷம். ஏனெனில் முழு
கல்பத்திலும் இந்த சங்கமயுக நேரம் விலைமதிக்க முடியாத
பொக்கிஷமாகும். இந்த சங்கமத்தின் ஒவ்வொரு சங்கல்பம் அல்லது
ஒவ்வொரு நேரமும் மிகவும் விலைமதிப்பற்றது. ஏனெனில் சங்கமயுக
நேரத்தில் தான் பாப்தாதா மற்றும் குழந்தைகளின் இனிய சந்திப்பு
நிகழ்கிறது. வேறு எந்த யுகத்திலும் பரமாத்மத் தந்தை மற்றும்
பரமாத்ம குழந்தைகளின் சந்திப்பு ஏற்படுவது கிடையாது. மேலும்
சங்கமயுக நேரத்தில் தான் பாப்தாதாவின் மூலம் அனைத்து பொக்கிஷங்
களும் பிராப்தியாக கிடைக்கிறது. பொக்கிஷங்களை சேமிக்கும் நேரம்
சங்கமயுகமே ஆகும். வேறு எந்த யுகத்திலும் சேமிப்புக் கணக்கு,
சேமிக்கும் வங்கி கிடையாது. இந்த ஒரு சங்கமயுகத்தில் மட்டுமே
பொக்கிஷங்களை எவ்வளவு சேமிக்க விரும்புகிறீர்களோ, அவ்வளவு
செய்ய முடியும். மேலும் சங்கமயுக நேரத்தின் மகிமை என்னவெனில்
ஒரு பிறவியில் பல பிறவி களுக்கு சேமிப்பு செய்ய முடியும்.
ஆகையால் இந்த சிறிய யுகத்தில் அதிக மகத்துவம் இருக்கிறது.
மேலும் பாப்தாதாவின் மூலம் அனைத்து குழந்தைகளுக்கும்
பொக்கிஷங்கள் பிராப்தியாக கிடைக்கிறது. தந்தை அனைத்து
குழந்தைகளுக்கும் கொடுக்கின்றார். ஆனால் பொக்கிஷங்கள் சேமிப்பு
செய்வதில் ஒவ்வொரு குழந்தையும் அவரவர்களது முயற்சியின் அநுசாரம்
செய்கின்றனர். கொடுக்கக் கூடிய தந்தையும் ஒருவர் தான்,
அனைவருக்கும் ஒரே மாதிரியாகத் தான் கொடுக் கின்றார், ஒரே
நேரத்தில் தான் கொடுக்கின்றார். ஆனால் தாரணை செய்வதில் என்ன
பார்த்தார்? தந்தை ஒரே மாதிரியாகத் தான் கொடுத்தார். ஆனால்
தாரணை செய்வதில் ஒவ்வொருவரும் அவரவரது முயற்சியின் படி
இருக்கிறீர்கள். ஏனெனில் பொக்கிஷங்களை தாரணை செய்வதற்கு ஒன்று
தனது முயற்சியின் ஆதாரத்தில் உருவாக்க முடியும், இரண்டாவது சதா
சுயம் திருப்தியாக இருந்து அனைவரையும் திருப்திப்படுத்த
வேண்டும், திருப்பு என்ற விசேஷதா மூலம் பொக்கிஷங் களை சேமிக்க
முடியும். மூன்றாவது சேவையின் மூலம். ஏனெனில் சேவையின் மூலம்
அனைத்து ஆத்மாக்களுக்கும் குஷி பிராப்தியாக கிடைக்கிறது எனில்
குஷி என்ற பொக்கிஷத்தை பிராப்தியாக அடைய முடியும். தனது முயற்சி
மற்றும் அனைவரையும் திருப்திப்படுத்தும் முயற்சி மற்றும்
மூன்றாவது சேவைக்கான முயற்சி. இந்த மூன்று விதத்தில்
பொக்கிஷங்களை சேமிக்க முடியும். பொக்கிஷங்களை சேமிப்பதற்கு,
குறிப்பாக சம்பந்தம்-தொடர்பில் வருவதில் ஒன்று பொறுப்புணர்வு,
பணிவு, சுயநலமற்ற நிலை, ஒவ்வொரு ஆத்மாவின் மீதும் சுப பாவனை
மற்றும் சுப விருப்பம் வைப்பது அவசியமாகும். சேவையில் அல்லது
சம்பந்தம்-தொடர்பில் இவை அனைத்தும் இருக்கிறது எனில் புண்ணிய
கணக்கு மற்றும் ஆசிர்வாதத்தின் பொக்கிஷம் மிக எளிதாக சேமிக்க
முடியும்.
பாப்தாதா அனைவரின் கணக்கையும் பார்த்துக் கொண்டிருந்தார். என்ன
பார்த்தார்? நாலாப்புறங்களிலும் குழந்தைகள் வரிசைக்கிரமமாக
இருப்பதை பார்த்தார். தந்தை ஒருவர், ஒரே நேரத்தில் தான்
கொடுக்கின்றார், ஆனால் சேமிப்பதில் இரண்டு விதமான குழந்தைகளைப்
பார்த்தார் - ஒன்று சில குழந்தைகள் சேமித்த பொக்கிஷத்தை
செலவழிக்கின்றனர், சேமிக்கவும் செய்கின்றனர், செலவழித்து
அழித்து விடுகின்றனர். இரண்டாவது சேமிக்கின்றனர், செலவழிக்
கின்றனர், இருப்பினும் சேமிப்பதில் கவனம் செலுத்தி
அதிகப்படுத்தவும் செய்கின்றனர். பொக்கிஷங்களை
அதிகப்படுத்துவதற்கான சாதனம் என்ன? அதிகப்படுத்துவதற்கான சாதனம்
என்ன பொக்கிஷங்கள் கிடைத்திருக்கிறதோ, அதை சரியான நேரத்தில்
என்ன பிரச்சனைகள் வருகிறதோ, அப்பிரச்சனைகளுக்கு தகுந்தவாறு
காரியத்தில் பயன்படுத்த வேண்டும். யார் காரியத்தில்
பயன்படுத்துகிறார்களோ, ஸ்திதியின் மூலம் பிரச்சனைகள் மாற்றி
விடுகிறார்களோ அவர்களுக்கு சேமிப்பாகி விடுகிறது. யார்
காரியத்தில் பயன்படுத்த வில்லையோ, அவர்களுக்கு சேமிப்பு ஆகாது.
ஆக ஒவ்வொருவரும் தனக்குள் கேளுங்கள் - சரியான நேரத்தில்
தனக்காவும், மற்றவர்களுக்காகவும் காரியத்தில் பயன்படுத்துகிறேனா?
எவ்வளவு காரியத்தில் பயன்படுத்து கிறீர்களோ, அவ்வளவு
அதிகரிக்கும். ஏனெனில் காரியத்தில் பயன்படுத்துவதனால் அனுபவம்
ஏற்படுகிறது. அனுபவ அதாரிடி அதிகரித்து விடும். எனவே சோதனை
செய்யுங்கள் - இந்த அனைத்து பொக்கிஷங்களும் சேமிப்பாகி
இருக்கிறதா? என்று தனக்குள் கேளுங்கள். அதிகப்படுத்து வதற்கான
சாதனத்தை சரியான நேரத்தில் காரியத்தில் பயன்படுத்துகின்றேனா?
அனுபவ அதாரிட்டி அதிகரித்துக் கொண்டே செல்கிறதா? ஏனெனில்
அதாரிட்டியில் உயர்ந்தது அனுபவ அதாரிட்டி என்று கூறப்படுகிறது.
எனவே ஒவ்வொருவரும் தனது சேமிப்பை அதிகப்படுத்த வேண்டும். சோதனை
செய்ய வேண்டும். ஏனெனில் இந்த நேரம் சோதனை செய்து பொக்கிஷங் களை
அதிகப்படுத்திக் கொள்ள முடியும். இப்போது வாய்ப்பு இருக்கிறது,
பிறகு வாய்ப்பும் நின்று விடும். பொக்கிஷங்களை அதிகப்படுத்த
விரும்புவீர்கள், ஆனால் அதிகப்படுத்த முடியாது.
பாப்தாதா பார்த்தார் - பொக்கிஷங்கள் கிடைத்திருக்கிறது, குஷி
குஷியாக தனக்குள் தாரணை செய்வதற்கான முயற்சியும் செய்கிறீர்கள்.
ஆனால் பொக்கிஷங்கள் முரளியின் மூலம் தான் கிடைக்கிறது எனும்
போது இரண்டு விதமான குழந்தைகள் இருக்கின்றனர். ஒன்று
கேட்பவர்கள், இரண்டாவது தாரணை செய்பவர்கள். சில குழந்தைகள்
கேட்டு மிகவும் குஷியடைகின்றனர். ஆனால் கேட்பது மற்றும் தாரணை
செய்வது இரண்டிலும் அதிக வித்தியாசம் இருக்கிறது. தாரணை
செய்பவர்கள் அனுபவிகளாக ஆகிக் கொண்டே செல்கின்றனர். ஏனெனில்
தாரணை செய்ததை சரியான நேரத்தில் காரியத்தில்
பயன்படுத்துகின்றனர், பொக்கிஷங்களை அதிகப் படுத்திக் கொண்டே
இருக்கின்றனர். கேட்பவர்கள் வர்ணிக்கின்றனர், மிகவும் நன்றாக
கூறினார், பாபா மிக நல்ல விசயங்களை கூறினார், ஆனால் தாரணையின்றி
சரியான நேரத்தில் காரியத்தில் கொண்டு வர முடியாது. எனவே நீங்கள்
அனைவரும் சோதனை செய்யுங்கள் - தாரணை செய்யக் கூடியவனாக
இருக்கிறேனா? சிறிதளவு குறைவாக இருந்தாலும்,
நிறைந்திருக்கவில்லை எனில் குழப்பம் இருக்கும். ஆனால் தாரணை
செய்பவர்கள் நிறைந்திருப்பார்கள், எனவே குழப்பம்
அடையமாட்டார்கள். ஆகையால் இன்று பாப்தாதா அனைவரின்
பொக்கிஷங்களையும் சோதனை செய்தார். கேட்டீர்கள் அல்லவா - இரண்டு
விதமான குழந்தைகள் இருக்கின்றனர். நான் யார்? என்பதை இப்பொழுது
தனக்குத் தானே சோதனை செய்யுங்கள். பொக்கிஷங்களை அதிகப்
படுத்துவது என்றால் சரியான நேரத்தில் காரியத்தில்
பயன்படுத்துவதாகும். எந்த அளவிற்கு காரியத்தில்
பயன்படுத்துவீர்களோ, அந்த அளவிற்கு பொக்கிஷம் அதிகரித்துக்
கொண்டே செல்லும். ஏனெனில் பொக்கிஷங்களுக்கு எஜமானர்களாக
இருப்பவர்கள் பொக்கிஷங்களை காரியத்தில் பயன்படுத்துவர்.
பொக்கிஷங்கள் தன்னை காரியத்தில் ஈடுபடுத்திக் கொள்ளாது. ஆக
உங்கள் அனைவருக்கும் தந்தை அனைத்து பொக்கிஷங் களையும் ஆஸ்தி
ரூபத்தில் கொடுத் திருக்கின்றார். எனவே தந்தையின் பொக்கிஷங்களை
தனது பொக்கிஷங்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதில்
ஒவ்வொருவரும் கவனம் கொடுக்க வேண்டும். ஏனெனில் எந்த அளவிற்கு
பொக்கிஷம் நிறைந்திருக்குமோ, அந்த அளவிற்கு நிறைந்த நிலையில்
ஆடாது, அசையாது இருப்பீர்கள்.
பாப்தாதா விரும்புவது என்னவெனில் ஒவ்வொரு குழந்தையும் சம்பன்னம்
ஆக வேண்டும், குறைந்தவர்களாக இருந்து விடக் கூடாது. ஏனெனில்
இந்த வாய்ப்பு தந்தையின் மூலம் அழிவற்ற வருமானம் சேமிப்பாக
வேண்டும். இது இப்பொழுது மட்டுமே செய்ய முடியும். ஆகையால் தான்
இப்பொழுது இல்லையெனில் எப்பொழுதும் இல்லை என்றும்
கூறப்பட்டிருக்கிறது. இது சங்கமயுகத்தின் நேரத்திற்காகத் தான்
கூறப்பட்டிருக்கிறது. என்ன சேமித்திருந்தீர்களோ அதன் பலனை
எதிர்காலத்தில் பிராப்தியாக அடைவீர்கள். ஆனால் பிராப்திக்கான
நேரம் இப்பொழுது மட்டுமே. எனவே ஒவ்வொருவரும் தனது சேமிப்பை
பார்க்க வேண்டும். யாருக்கு எந்த அளவிற்கு களஞ்சியம்
நிறைந்திருக்குமோ, அவர்களது கண்கள், நடத்தைகள், முகத்தின் மூலம்
தெரிந்து விடும். அவர்களது நடத்தை மற்றும் முகம்
மலர்ந்திருக்கும் ரோஜா போன்று இருக்கும். பாப்தாதா ஒவ்வொருவரின்
நடத்தை மற்றும் முகத்தினை பார்த்துக் கொண்டே இருக்கின்றார் -
எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக, எந்த அளவிற்கு புன்முறுவலுடன்
இருக்கிறார்கள்? கண்களில் ஆன்மிகம், முகத்தில் புன்முறுவல்
மற்றும் செயலில் ஒவ்வொரு குணம் அனைவருக்கும் அனுபவம் ஆக
வேண்டும். எனவே ஒவ்வொருவரும் தன்னைத் தான் சோதனை செய்யுங்கள்.
பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் மீதும் இந்த சுபபாவனை
வைத்திருக்கின்றார் - ஒவ்வொரு குழந்தையும் அநேக ஆத்மாக்களை
பொக்கிஷம் நிறைந்தவர்களாக ஆக்க வேண்டும். இன்று உலக ஆத்மாக்கள்
அனைவரும் ஏதாவது ஆன்மிக சக்தி கிடைக்க வேண்டும் என்று தான்
விரும்புகின்றனர். ஆன்மிக சக்தியின் வள்ளல் பிராமண
ஆத்மாக்களாகிய நீங்கள் தான். ஏனெனில் ஹோலியஸ்ட் (தூய்மையானவர்கள்),
ஹையஸ்ட் (உயர்ந்தவர்கள்), மற்றும் ரிச்சஸ்ட் (செல்வந்தவர்கள்)
ஆத்மாக்களாகிய நீங்களே தான். அனைத்து ஆத்மாக்களையும் விட அதிக
தூய்மையானவர்கள் நீங்கள் தான். ஆத்மாக்களாகிய உங்களுக்கு
விதிப்படி பூஜைகள் நடப்பது போன்று வேறு யாருக்கும் நடப்பது
கிடையாது. இப்போது கடைசிப் பிறவியிலும் ஆத்மாக்களாகிய
உங்களுக்கு பூஜை நடப்பது போன்று வேறு எந்த தர்மபிதாக்களுக்கு
அல்லது நிமித்தமாக இருக்கக் கூடிய மகான் ஆத்மாக்களுக்கு நடப்பது
கிடையாது. நினைவுச் சின்னங்களை உருவாக்கலாம், ஆனால்
விதிப்பூர்வமாக பூஜை நடப்பது கிடையாது. பிறகு உலகிலேயே அதிக
செல்வந்தவர்கள், பிராமண ஆத்மாக்களாகிய உங்களது ஒரு பிறவிக்கான
பொக்கிஷம் 21 பிறவிகளுக்கு கூடவே இருக்கும். ஏனெனில் தந்தையின்
மூலம் தந்தையின் ஆஸ்தி கிடைத்திருக்கிறது. எவ்வாறு தந்தை
அழிவற்றவரோ, அவ்வாறு தந்தையின் மூலம் கிடைத்திருக்கும்
பொக்கிஷங்களும் அழிவற்றதாக ஆகிவிடுகிறது. ஆகையால் உலகிலேயே
அதிக செல்வந்தர்கள், உலகிலேயே அதிக தூய்மை யானவர்களாக
இருக்கிறீர்கள்.
ஆக நீங்கள் அனைவரும் இவ்வாறு விசேஷ சேவாதாரி என்று
நினைக்கிறீர்களா? இன்றைய கால கட்டத்தில் உலக ஆத்மாக்களுக்கு
எந்த பொருள் அவசியமானதாக இருக்கிறது என்பதை அறிவீர்கள் தானே!
இன்று உலகில் குஷி, சக்தி மற்றும் அன்பு அவசியமானதாக இருக்கிறது.
ஆன்மிக அன்பு விரும்புகின்றனர். ஆனால் பிராமண ஆத்மாக்களாகிய
நீங்கள் இப்போதைய காலத்தின் அநுசாரம் வள்ளலாக ஆகுங்கள்.
மனதினால் சக்திகளை கொடுங்கள், வார்த்தை களினால் ஞானம் கொடுங்கள்
மற்றும் செயலினால் குண தானம் செய்யுங்கள். பிரம்மா பாபா
கடைசியில் மூன்று வார்த்தைகள் அனைத்து குழந்தைகளுக்கும் பரிசாக
கொடுத்தார், நினை விருக்கிறது அல்லவா - இந்த மூன்று வார்த்தைகளை
சேவையில் பயன்படுத்தும் போது பல ஆத்மாக்களை திருப்திப்படுத்த
முடியும். அந்த மூன்று வார்த்தைகள்-நிராகாரி, நிர்அகங்காரி
மற்றும் நிர்விகாரி. மனதில் நிராகாரி, வார்த்தைகளில்
நிர்அகங்காரி மற்றும் செயலின் மூலம் நிர்விகாரி. இந்த மூன்று
வார்த்தைகளை சேவையில் பயன்படுத்துங்கள். இப்பொழுது உலகிற்கு
உங்களது சக்தியின் மூலம் சிறிதளவு உள்ளப்பூர்வமான ஆனந்தம்,
சுகத்தின் பிராப்தி ஏற்பட வேண்டும். அனைவரும் நிராசையுடன்
இருக்கிறார்கள். மேலும் நீங்கள் உலகின் ஆசை நட்சத்திரங்களாக
இருக்கிறீர்கள். பாப்தாதா அனைத்து குழந்தைகளையும் தந்தையின் ஆசை
நட்சத்திரங்களாக பார்க்க விரும்புகின்றார். நம்பிக்கை
நட்சத்திரங்களாக மட்டும் அல்ல, ஆசைகளை நிறைவேற்றக் கூடிய ஆசை
நட்சத்திரங்களாக இருக்க வேண்டும்.
பாப்தாதாவிடம் குழந்தைகளின் அன்பு சதா வந்தடைந்து
கொண்டிருக்கிறது. மேலும் அனைத்தையும் விட எளிய முயற்சி எது?
வித விதமான முயற்சி இருந்தாலும் அனைத்தையும் விட எளிய முயற்சி
அன்பு. அன்பில் முயற்சியும் கூட அன்பான ரூபமாக மாறி விடுகிறது.
ஆக தந்தைக்கு சிநேகி ஆவது என்றால் எளிய முயற்சி செய்வதாகும்.
அன்பில் நீங்கள் அனைவரும் தன்னை அன்பானவர் என்று
நினைக்கிறீர்கள், அவ்வப்போது அல்ல, சதா அன்பானவர். யார் தன்னை
சதா அன்புக் கடலில் மூழ்கியிருப்பதாக நினைக்கிறீர்களோ, சதா
அன்புக் கடலில் மூழ்கி யிருக்க வேண்டும். மேலோட்டமாக
மூழ்குபவர்கள் அல்ல, கலந்திருப்பவர்கள். யார் தன்னை அவ்வாறு
அன்புக் கடலில் கலந்திருப்பதாக நினைக்கிறீர்களோ அவர்கள் கை
உயர்த்துங்கள். சதா? சதா என்ற வார்த்தை அடிகோடிட வேண்டும். கை
உயர்த்துங்கள், சதா, சதா? கை நன்றாக உயர்த்தி விட்டீர்கள்.
பாப்தாதா கைகளைப் பார்த்து குஷி அடைகின்றார். ஏனெனில் தைரியம்
வைக்கிறீர்கள். ஒருவேளை சிறிது குறைந்தாலும் கை
உயர்த்திருக்கிறேன் என்ற நினைவு வந்து விடும். ஏனெனில்
பாப்தாதாவிற்கு ஒவ்வொரு குழந்தையின் மீதும் மிகுந்த அன்பு
இருக்கிறது. ஏன்? ஏனெனில் பாப்தாதா அறிவார் - இந்த ஒவ்வொரு
ஆத்மாவும் பல முறை அன்பானவர்களாக ஆகியிருக்கின்றனர்,
இப்பொழுதும் ஆகியிருக்கின்றனர், மேலும் ஒவ்வொரு கல்பத்திலும்
இதே ஆத்மாக்கள் தான் அன்பானவர்களாக ஆவார்கள். நாம் தான் ஒவ்வொரு
கல்பத்திற்கும் அதிகாரி ஆத்மாக்கள்? என்ற போதை மற்றும் குஷி
இருக்கிறதா?
இவ்வாறு அதிகாரி ஆத்மாக்களைப் பார்த்து பாப்தாதா
உள்ளப்பூர்வமான ஆசிர்வாதம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். சதா
களைப்பற்றவர்களாகி பறந்து கொண்டே செல்லுங்கள். அவ்வபோது ஏதாவது
பிரச்சனை வந்தது எனில் சுய ஸ்திதியை மேலே கீழே ஆக்காதீர்கள்.
சுய ஸ்திதிக்கு முன் பிரச்சனை ஒன்றும் செய்ய முடியாது.
நல்லது, முதல் முறை யார் வந்திருக்கிறார்கள்? அவர்கள் கை
உயர்த்துங்கள். பலர் வந்திருக்கிறீர்கள். பாப்தாதாவிற்கு
ஒவ்வொரு குழந்தையையும் பார்த்து பெருமையாக இருக்கிறது - ஆஹா
எனது குழந்தை ஆஹா! நீங்கள் இயற்கையாகவே ஆஹா பாபா ஆஹா! என்னுடைய
பாபா ஆஹா! என்று பாடல் பாடுகிறீர்கள் அல்லவா! அதே போன்று
தந்தையும் குழந்தைகளின் பாட்டு பாடுகின்றார் - ஆஹா ஒவ்வொரு
குழந்தை ஆஹா!. ஏனெனில் தந்தையும் கல்பத்திற்கு பின்
குழந்தைகளாகிய உங்களை சந்திக்கின்றார். மேலும் ஒவ்வொரு வரும்
உலகின் முன் மகான் களாக இருக்கிறீர்கள். எனவே தந்தையும் பாடல்
பாடுகின்றார் - ஆஹா குழந்தை ஆஹா! ஆஹா ஆஹா என்று இருக்றீர்கள்
தானே! ஆஹா! ஆஹா! குழந்தைகளாக இருக்கிறீர்கள் தானே! ஆஹா! ஆஹா!
குழந்தைகளாக இருப்பவர்கள் கை உயர்த்துங்கள்.
எனவே சதா நான் ஆஹா ஆஹா என்று இருக்கிறேன் என்பதை சதா நினைவில்
வையுங்கள். முயற்சியாளராக இருக்கலாம், ஆனாலும் ஆஹா! ஆஹா!
குழந்தை. தந்தையின் ஆஹா! ஆஹா! குழந்தைகள். தந்தையின் கூடவே
செல்வீர்கள். இருந்து விடமாட்டீர்கள் தானே! தந்தை கூறுகின்றார்
- ஒவ்வொரு குழந்தையையும் அன்பு மடியில் அமர்த்தி அழைத்துச்
செல்வேன். தயாராக இருக்கிறீர்களா? தயாராக இருக்கிறீர்களா?
வழியில் நின்று விடமாட்டீர்களா? கூடவே வருவீர்கள். ஏனெனில்
உறுதி எடுத்திருக்கிறீர்கள், உறுதிமொழியை கடைபிடிப்பவர்கள்.
இப்பொழுது பாப்தாதா இதைத் தான் விரும்புகின்றார் - தனது பரிஸ்தா
ரூபத்தை வெளிப் படுத்துங்கள். நடந்தாலும், காரியம் செய்தாலும்
பரிஸ்தா ரூப ஆடையின் அனுபவம் செய்வியுங்கள். பாப்தாதா டிரில்
கூறியிருக் கின்றார் அல்லவா! ஆடை மாற்றிக் கொள்ளும் பழக்கம்
இருக்கிறது தானே! சரீர ஆடையை மாற்றுவது போன்று ஆத்மாவின்
சொரூபம் பரிஸ்தா, அடிக்கடி அனுபவம் செய்யுங்கள். பரிஸ்தா ஆடை
பிடித்திருக்கிறது அல்லவா! பிரம்மா பாபா அவ்யக்த பரிஸ்தா
ரூபத்தில் வதனத்தில் அமர்ந்திருப்பது போன்று பாப்சமான் நீங்கள்
அனைவரும் கூட நடந்தாலும், காரியங்கள் செய்தாலும் பரிஸ்தா
ரூபத்தின் அனுபவம் செய்யுங் கள். ஏனெனில் பரிஸ்தா ஆனபின்பும்
தான் தேவதையாக ஆவீர்கள். தந்தையின் மூன்று ரூபங்கள்
நினைவிருக்கிறது தானே! தந்தை, ஆசிரியர் மற்றும் சத்குரு. அதே
போன்று தனது மூன்று ரூபங்களையும் நினைவு செய்யுங்கள் -
பிராமணனிலிருந்து பரிஸ்தா மற்றும் பரிஸ்தாவிலிருந்து தேவதை.
இந்த மூன்று ரூபம் பக்கா தானே! சில நேரம் பிராமணன் ஆடையை
அணிந்து கொள்ளுங்கள், சில நேரம் பரிஸ்தா, சில நேரம் தேவதை.
இந்த மூன்று ரூபத்தில் இயற்கை யாகவே திரிகாலதர்சி என்ற
இருக்கையில் அமர்ந்து சாட்சியாகி ஒவ்வொரு காரியமும் செய்து
கொண்டே இருப்பீர்கள். எனவே அனைவரிடத்திலும் பாப்தாதா இதையே
விரும்புகின்றார் - சதா தந்தையுடன் இருங்கள், தனியாக
இருக்காதீர்கள். கூடவே இருந்தால் தான் கூடவே வருவீர்கள்.
அவ்வபொழுது இருந்தீர்கள் எனில் கூடவே எப்படி வர முடியும்!
அன்பானவர்கள் அன்பானவரை ஒருபோதும் மறக்க முடியாது. முழு நாளும்
இந்த பயிற்சி செய்து கொண்டே இருங்கள். அவ்வபொழுது பிராமணன்,
அவ்வபொழுது பரிஸ்தா, அவ்வபொழுது தேவதை. நல்லது.
நாலாப்புறங்களிலும் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும், சதா
பொக்கிஷங்களில் நிறைந்திருப் பவர்கள், சதா தனது நடத்தை மற்றும்
முகத்தின் மூலம் சேவாதாரியாக இருப்பவர்கள், ஏனெனில் நீங்கள்
அனைவரும் உறுதிமொழி எடுத்திருக்கிறீர்கள் - நாம் உலகை
மாற்றுபவர்களாகி உலகை மாற்றுவோம். எனவே நடந்தாலும், காரியம்
செய்தாலும் சேவாதாரி, சேவையில் தயாராக இருக்கிறீர்கள்.
இப்படிப்பட்ட உலக சேவாதாரி, உலகை மாற்றுபவர் ஒவ்வொருவரையும்
தந்தையின் பொக்கிஷங்களை நிறைக்கக் கூடிய பாப்தாதாவின்
நாலாப்புறங்களிலும் உள்ள குழந்தைகளுக்கு அன்பு நினைவுகள்
மற்றும் உள்ளப்பூர்வமான ஆசிர்வாதங்கள் மற்றும் நமஸ்தே. நல்லது.
ஆசீர்வாதம்:
மாஸ்டர் திரிகாலதர்சி ஆகி ஒவ்வொரு காரியமும் யுக்தியுக்த் ஆக
செய்யக் கூடிய கர்ம பந்தனங்களிலிருந்து விடுபட்டவர் ஆகுக.
எந்த ஒரு சங்கல்பம், வார்த்தை அல்லது காரியம் செய்தாலும் அதை
மாஸ்டர் திரிகாலதர்சி ஆகி செய்தால் எந்த ஒரு காரியமும்
வீணானவையாக அல்லது அர்த்தமற்றதாக இருக்காது. திரிகால தர்சி
என்றால் சாட்சி நிலையில் நிலைத்திருந்து, கர்மத்தின் ஆழமான
ரகசியத்தை அறிந்து இந்த கர்மேந்திரியங்களின் மூலம்
செய்விப்பதாகும். அவ்வாறு செய்யும் போது அவ்வபோது கர்மபந்
தனங்களில் மாட்டிக் கொள்ளமாட்டீர்கள். ஒவ்வொரு காரியம்
செய்தாலும் கர்மபந்தனங்களிலுந்து விடுபட்டு, கர்மாதீத் நிலை
அனுபவம் செய்து கொண்டே இருப்பீர்கள்.
சுலோகன்:
யார் எல்லைக்குட்பட்ட ஆசைகளிலிருந்து விடுபட்டு இருக்கிறார்களோ,
அவர்களே மகான் செல்வந்தர்கள் ஆவர்.
அவ்யக்த இஷாரே: நிச்சயம் என்ற அஸ்திவாரத்தை உறுதியானதாக ஆக்கி
சதா பயமற்றவர் மற்றும் கவலையற்று இருங்கள்
காவல் காக்கும் காவல்காரர் ஆயுதத்துடன் இருந்தால் மற்றும் எனது
ஆயுதங்கள் எதிரியை விரட்டி விடும், தோல்வியடையச் செய்யும் என்ற
நிச்சயம் இருந்தால் அவர் மிகவும் பயமற்ற வராக நடந்து கொள்வார்.
ஆக உங்களிடமும் சர்வ சக்திகள் என்ற ஆயுதங்கள் சதா இருக்கின்றன.
ஆவாஹனம் (அழைத்தால்) செய்தால் போதும், அதாவது எஜமானர்களாகி
கட்டளையிட்டால் வெற்றி சதா காலத்திற்கும் கிடைத்து விடும்.