15-05-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! இந்த உலகம்
சுடுகாடு ஆகப் போகிறது. ஆகவே இதன் மீது மனதைச் செலுத்தாதீர்கள்.
சொர்க்கத்தை நினையுங்கள்.
கேள்வி:
ஏழைக் குழந்தைகளாகிய உங்களைப்
போன்று அதிர்ஷ்டசாலி உலகத்தில் யாரும் இல்லை ஏன்?
பதில்:
ஏனென்றால் ஏழைக் குழந்தைகளாகிய
நீங்கள் தான் நேரடியாக பாபாவினுடையவர் ஆகியிருக்கிறீர்கள்.
இதனால் சத்கதி என்ற சொத்து கிடைக்கின்றது. ஏழைக் குழந்தைகள்
தான் படிக்கிறார்கள். பணக்காரக் குழந்தைகள் சிறிது படித்தாலும்
அவர்களுக்கு பாபாவின் நினைவு இருப்பது கடினமாக இருக்கும்.
உங்களுக்கு கடைசியில் பாபாவின் நினைவு தவிர வேறு எந்த நினைவும்
வராது. ஆகவே நீங்கள் அனைவரையும் விட அதிர்ஷ்டசாலிகள்.
பாடல்:
மனதின் துணை உடைந்து போகக்கூடாது.....
ஓம் சாந்தி.
குழந்தைகளுக்கு பாபா புரிய வைத்துக் கொண்டு இருக்கின்றார்.
மேலும் குழந்தைகள் இந்த உலகம் சுடுகாடு ஆகப்போகின்றது என்பதைப்
புரிந்து கொள்கிறீர்கள். முன்பு இந்த உலகம் சொர்க்கமாக இருந்தது.
இப்போது பழையதாகி விட்டது. ஆகவே இதற்கு சுடுகாடு என்று
கூறப்படுகின்றது. அனைவரும் மண்னோடு மண்ணாக வேண்டும். பழைய
பொருள் மண்ணில் இடப்பட்டால் அதாவது மண்ணில் கலந்து போகிறது. இதை
குழந்தைகளாகிய நீங்கள் மட்டும் தான் அறிகிறீர்கள். உலகத்தில்
யாரும் அறியவில்லை. சில வெளிநாட்டவர்களுக்கு அழியக்கூடிய நேரம்
தெரிகிறது. சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யக்கூடிய நம்முடைய தந்தை
மீண்டும் வந்திருக்கிறார் என உங்களுக்கும் தெரியும். ஒரு வேளை
இந்த சுடுகாட்டில் மனதை வைத்திருந் தால் நஷ்டம் என்பதை
குழந்தைகள் புரிந்து கொள்கிறீர்கள். இப்பொழுது நீங்கள்
எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற சுகத்தின் ஆஸ்தியை போன
கல்பத்தைப் போன்றே அடைந்து கொண்டு இருக்கிறீர்கள். ஒவ்வொரு
அடியும் மன்மனாபவ என்ற நினைவிலிருந்து வைக்க வேண்டும் என்பது
குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் இருக்கிறது. பாபாவின்
நினைவில் இருப்பதால் தான் சொர்க்கத்தினராக மாறலாம். பாரதம்
சொர்க்கமாக இருந்தது. மற்ற எந்த கண்டமும் சொர்க்கமாவதில்லை. இது
மாயா இராவணனின் வெளிப் பகட்டாகும். இது கொஞ்ச காலத்திற்கே ஆகும்.
இது ஒரு பொய்யான வெளிப்பாடு ஆகும். பொய்யான மாயை, பொய்யான உடல்
என்கிறார்கள் அல்லவா? இது கடைசி நேரத்தின் வெளிப்பகட்டாகும்.
இவைகளைப் பார்த்து சொர்க்கம் இப்பொழுது இருக்கிறது, முன்பு
நரகமாக இருந்தது என நினைக்கிறார்கள். பெரிய பெரிய கட்டிடங்களைக்
கட்டுகிறார்கள். இவை 100 வருடத்தில் வந்தவையாகும். டெலிபோன்,
மின்சாரம், விமானம் போன்ற அனைத்தும் 100 வருடங்களுக்குள்
உருவாகியவை. எவ்வளவு வெளிப்பகட்டு இருக்கிறது. ஆகவே சொர்க்கம்
இங்கேயே இருக்கிறது என நினைக்கிறார்கள். பழைய டெல்லியில் என்ன
இருந்தது. இப்பொழுது புது டெல்லி எவ்வளவு நன்றாக
உருவாக்கப்பட்டு இருக்கின்றது. பெயரே புது டெல்லி என்று
வைக்கப்பட்டுள்ளது. புதிய உலகம் இராம இராஜ்யம் வேண்டும்,
சொர்க்கம் ஆக வேண்டும் என காந்திஜி விரும்பினார். இது ஒரு
தற்காலிகமான வெளிப் பகட்டாகும். எவ்வளவு பெரிய பெரிய கட்டிடம்
நீருற்றுகள் போன்றவைகளை உருவாக்கு கின்றார்கள். இதற்கு
செயற்கையான சொர்க்கம் என்று கூறப்படுகிறது. இது அல்பகாலத்திற்கே
ஆகும். இதனுடைய பெயர் சொர்க்கம் இல்லை என்பது உங்களுக்குத்
தெரியும். இதனுடைய பெயர் நரகம் ஆகும். நரகத்தின் ஒரு
வெளிப்பகட்டு ஆகும். இது அல்ப காலத்திற்கான பகட்டாகும்.
இப்பொழுது இது முடிந்து போகும் தருவாயில் உள்ளது.
சாந்தி தாமத்தை நினையுங்கள் என்று குழந்தைகளுக்கு பாபா
இப்பொழுது கூறுகின்றார். அனைத்து மனிதர்களும் அமைதியைத்
தேடிக்கொண்டு இருக்கின்றார்கள். எங்கிருந்து அமைதி கிடைக்கும்.
உலகத்தில் அமைதி எப்படி ஏற்படும் என்ற கேள்வி முழு
உலகத்திற்கும் இருக்கிறது. நாம் அனைவரும் உண்மையில் சாந்தி
தாமத்தில் வசிக்கக்கூடியவர்கள் என்பது மனிதர்களுக்குத்
தெரியவில்லை. ஆத்மாக்களாகிய நாம் சாந்தி தாமத்தில் சாந்தமாக
இருக்கின்றோம், பிறகு இங்கே நடிப்பதற்காக வருகின்றோம். அதுவும்
குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இப்பொழுது நீங்கள் சாந்தி
தாமம் வழியாக சுகதாமம் செல்வதற்கு முயற்சி செய்து கொண்டு
இருக்கிறீர்கள். ஒவ்வொரு ஆத்மாவின் புத்தியிலும் ஆத்மாக்களாகிய
நாம் அனைவரும் நம்முடைய வீடாகிய சாந்தி தாமத்திற்குச்
செல்கின்றோம் என்று இருக்கின்றது. இங்கே அமைதியின் விஷயம்
இருக்க முடியாது. இது துக்க உலகம் ஆகும். சத்யுகம் தூய்மையான
உலகம், கலியுகம் அழுக்கான உலகம். இந்த விஷயங்களை இப்பொழுது
குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள். உலகத்தில்
இருப்பவர்களுக்கு எதுவும் தெரியாது. எல்லையற்ற தந்தை நமக்கு
சிருஷ்டி சக்கரத்தின் முதல் இடை கடைபற்றிய ரகசியத்தைப் புரிய
வைக்கிறார் என்பது புத்தியில் இருக்கிறது. பிறகு எப்படி
தர்மத்தை ஸ்தாபனை செய்பவர்கள் வந்து தர்மத்தை ஸ்தாபனை
செய்கிறார்கள். இப்பொழுது இந்த சிருஷ்டியில் எவ்வளவு அளவற்ற
மனிதர்கள் இருக்கிறார்கள். பாரதத்தில் பலர் இருக் கிறார்கள்.
பாரதத்திலும் நிறைய பேர் இருக்கிறார்கள். பாரதம் சொர்க்கமாக
இருந்த பொழுது, நிறைய போர் பணக்காரர்களாக இருந்தார்கள். வேறு
எந்த தர்மமும் இல்லை. குழந்தைகளாகிய உங்களுக்கு தினம் தோறும்
புத்துணர்வு அளிக்கப்படுகிறது. அப்பா மற்றும் ஆஸ்தியை நினையுங்
கள். பக்தி மார்க்கத்தில் கூட இது தொடர்ந்து வந்திருக்கிறது.
பரமாத்மாவை நினையுங்கள் என விரலை காண்பிக்கிறார்கள். பரமாத்மா
அல்லது அல்லா அங்கே இருக்கின்றார். ஆனால் இவ்வாறு நினைப்பதால்
எதுவும் நடக்காது. துக்க நேரத்தில் ஹே! ராம்... என
அழைக்கிறார்கள். ஆத்மா நினைவு செய்கிறது. ஆனால் சுகம் சாந்தி
என்று எதற்கு கூறப்படுகிறது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.
நாம் அனைவரும் ஒரு பாபாவின் வாரிசு, என்றால் என் துக்கம் ஏற்பட
வேண்டும் என்பது உங்கள் புத்தியில் வருகிறது. உங்களுக்கு
எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற சொத்து கிடைக்கின்றது.
இது படத்தில் தெளிவாக இருக்கின்றது. பகவான் தான் சொர்க்கத்தை
ஸ்தாபனை செய்யக்கூடிய சொர்க்கத்தின் இறை தந்தை ஆவார். அவர்
பாரதத்தில் தான் வருகிறார். ஆனால் இதை யாரும் புரிந்து
கொள்ளவிலலை. தேவி தேவதா தர்மத்தின் ஸ்தாபனை நிச்சயமாக
சங்கமத்தில் தான் நடக்கிறது. சத்யுகத்தில் எப்படி நடக்கும்?
ஆனால் இந்த விஷயத் தினை பிற மதத்தினர் அறியவில்லை. பாபா தான்
ஞானம் நிறைந்தவர். அவர் தான் ஆதி சனாதன தேவி தேவதா தர்மம்
எப்படி உருவானது என்பதைப் புரிய வைக்கின்றார். சத்யுகத்தின்
ஆயுள் லட்சக்கணக்கான ஆண்டுகள் என மிகத் தொலைவிலிருப்பதாகக் கூறி
விட்டனர். குழந்தைகளாகிய நீங்கள் படங்களை வைத்து தான் புரிய
வைக்க வேண்டும். பாரதத்தில் இந்த லட்சுமி நாராயண னின் இராஜ்யம்
இருந்தது. இவர்கள் எப்போது எப்படி இந்த இராஜ்யத்தைப் பெற்றனர்.
இவர்கள் சத்யுகத்தின் அதிபதி என்று மட்டும் கூறுகின்றனர்.
அவர்கள் முன்பு சென்று பிச்சை எடுக்கின்றனர். அல்ப காலத்திற்கு
ஏதோ கொஞ்சம் கிடைக்கின்றது. ஏதாவது தான புண்ணியம் செய்தார்கள்
என்றால், அவர்களுக்கு அல்ப காலத்திற்கு பலன் கிடைக்கிறது. ஏழை
பஞ்சாயத்து தலைவனுக்கு கூட இவ்வளவு குஷி இருக்கிறது என்றால்,
பணக்கார தலைவனுக்கு எவ்வளவு குஷி இருக்கும். ஏழைகள் கூட தாங்கள்
சுகமாக இருப்பதாக நினைக்கிறார்கள். பாம்பேயில் பாருங்கள், ஏழை
மக்கள் எப்படிப்பட்ட இடங்களில் எல்லாம் வசிக்கிறார்கள்.
கோடீஸ்வரனாக கூட இருக்கலாம். ஆனால் எவ்வளவு துக்கமுடையவர்களாக
இருக்கிறார்கள் என குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து
கொள்கிறீர்கள். எங்களைப் போன்று அதிர்ஷ்டசாலி வேறு யாரும் இல்லை
என்று கூறுவீர்கள். நாம் நேரடியாக பாபாவினுடையவர்களாக
ஆகியிருக்கின்றோம். இதன் மூலம் சத்கதியின் சொத்து கிடைக்கின்றது.
பெரிய பெரிய ஆட்கள் ஒரு போதும் உயர்ந்த பதவி பெற முடியாது.
ஏழைகளாக இருப்பவர்களே பணக்காரர்களாக மாறுகின்றார்கள். நீங்கள்
படித்தவர்கள். அவர்களோ படிக்காத வர்கள். ஏதோ சிறிது படித்தாலும்
கூட பாபாவின் நினைவில் இருக்க முடியாது. கடைசியில் உங்களுக்கு
பாபாவைத் தவிர வேறு எதுவும் நினைவு வரக்கூடாது. இது சுடுகாடு
ஆகப்போகிறது என்பதை அறிகிறீர்கள். நாம் செய்யக்கூடிய தொழில்
அனைத்தும் இன்னும் சிறிது காலத்திற்கே என்பது புத்தியில்
இருக்க வேண்டும். செல்வந்தர்கள் தர்மசாலைகளைக் கட்டுகின்றார்கள்.
அதை தொழிலுக்காக அவர்கள் உருவாக்கவில்லை. தீர்த்த ஸ்தலங்கள்
உள்ள இடங்களில் தர்மசாலை கள் இல்லை என்றால் எங்கே வசிப்பார்கள்?
ஆகையால் பணக்கார மக்கள் தர்ம சாலைகளைக் கட்டுகிறார்கள்.
வியாபாரிகள் வந்து வியாபாரம் செய்யட்டும் என்பதற்காக அல்ல.
தீர்த்த ஸ்தலங் களில் தர்மசாலைகள் கட்டப்படுகிறது. இப்போது
உங்களுடைய சென்டர் பெரியதிலும் பெரிய தீர்த்த ஸ்தலமாகும்.
உங்களுடைய சென்டர் எங்கெங்கே இருக்கின்றதோ அது மிகப்பெரிய
தீர்த்த ஸ்தலம் ஆகும்.அங்கிருந்து மனிதர்களுக்கு சுகம் சாந்தி
கிடைக்கின்றது. உங்களுடைய இந்த கீதா பாடசாலை மிகப்பெரிய தாகும்.
இதுவே வருமானத்திற்கு மூலதனம் ஆகும். இதன் மூலம் உங்களுக்கு
நிறைய வருமானம் கிடைக் கின்றது. குழந்தைகளாகிய உங்களுக்கு
இதுவும் தர்ம சாலையே ஆகும். மிகப்பெரியதிலும் பெரிய தீர்த்த
ஸ்தலம் ஆகும். நீங்கள் எல்லையற்ற தந்தை யிடமிருந்து எல்லையற்ற
சொத்தை அடைகிறீர்கள். இதைப்போன்று பெரியதிலும் பெரிய தீர்த்த
ஸ்தலம் வேறு எதுவும் இல்லை. அந்த தீர்த்த ஸ்தலங்களுக்குப்
போவதால் உங்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. இதையும் நீங்கள்
புரிந்து கொள்கிறீர்கள். பக்தர்கள் மிகவும் அன்போடு கோவில்
களில் பாத அபிஷேக நீலை அருந்துகின்றனர். அதனால் நம்முடைய இதயம்
தூய்மையாகும் என நினைக்கிறார்கள். ஆனால் அதுவோ தண்ணீராகும்.
என்னை நினைத்தால் சொத்து கிடைக்கும் என பாபா கூறுகின்றார்.
இப்போது எல்லையற்ற தந்தையிடமிருந்து உங்களுக்கு அழியாக ஞான
ரத்தினங்கள் என்ற பொக்கிஷம் கிடைக்கின்றது. பெரும்பாலும்
சங்கரிடம் செல்கிறார்கள். அமர்நாத் பார்வதிக்குக் கதையை
கூறினார் என நினைக்கிறார்கள். எனவே எங்கள் பையை நிரப்புங்கள்
என கூறுகிறார்கள்..... நீங்கள் அழிவற்ற ஞான ரத்தினங்களால் பையை
நிரப்புகிறீர்கள். மற்றபடி அமர்நாத் ஒருவருக்கு மட்டும்
அமர்ந்து கதையை சொல்லியிருக்க மாட்டார். நிச்சயம் நிறைய பேர்
இருந்திருப்பார்கள். அதுவும் மரண உலகத்தில் தான் இருப்பார்கள்.
சூட்சும உலகத்தில் கதையைச் சொல்வதற்கான அவசியம் இல்லை. பல
தீர்த்தங்கள் உருவாக்கி இருக்கிறார்கள். சாது சந்நியாசிகள்,
மகாத்மா என பலர் செல்கிறார்கள். அமர்நாத்திற்கு லட்சக்கணக்கான
மக்கள் செல்கிறார்கள். கும்பமேளாவில் கங்கா ஸ்நானம்
செய்வதற்காக அதிகம் பேர் போகிறார்கள். நாங்கள் தூய்மையாகி
விடுவோம் என நினைக்கிறார்கள். உண்மையில் இதுவே கும்பமேளா ஆகும்.
அந்த மேளாவிற்கு பல பிறவிகளாக சென்று வந்தீர்கள். இதனால் யாரும்
தங்களுடைய வீட்டிற்குத் திரும்பப் போகவில்லை என பாபா
கூறுகின்றார். ஆத்மா தூய்மையாகும் போது தான் போக முடியும்.
நீங்கள் அழுக்கானதின் காரணமான, அனைவரின் இறக்கையும்
உடைக்கப்பட்டிருக் கின்றது. ஆத்மாவிற்கு இறக்கை
கிடைத்திருக்கின்றது. யோகத்தில் இருப்பதால் ஆத்மா எல்லா
வற்றையும் விட வேகமாக பறக்கின்றது. சிலரின் கணக்கு வழக்கு
லண்டனிலோ, அமெரிக்காவிலோ இருந்தால் உடனே பறக்கும். அங்கே
நொடியில் சென்று சேர்ந்துவிடும். ஆனால் கர்மாதீத நிலையை அடையும்
போது தான் முக்தி தாமத்திற்குப் போக முடியும். அதுவரை இங்கேயே
பிறப்பு இறப்பில் வருகிறார்கள். நாடகம் டிக் டிக் என செல்கிறது.
ஆத்மாவும் இப்படியே ஒரு டிக் அடித்ததும் சென்று விடும். இதைப்
போன்று வேகமான பொருள் வேறு எதுவும் கிடையாது. மொத்த மொத்தமாக
அனைத்து ஆத்மாக்களும் மூலவதனத்திற்குச் செல்ல வேண்டும். ஆத்மா
எங்கு போகவேண்டும் என்றாலும் நேரம் ஆகாது. மனிதர்கள் இந்த
விஷயத்தைப் புரிந்து கொள்ளவில்லை. புதிய உலகில் நிச்சயம் ஒரு
சில ஆத்மாக்களே இருப்பார்கள். மேலும் அங்கே சுகமாக இருப்பார்கள்
என்பது குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் வருகிறது. அதே ஆத்மா
இப்போது 84 பிறவிகளை அனுபவித்து மிகவும் துக்கத்தில் இருக்கிறது.
உங்ளுக்கு முழு சக்கரத்தைப் பற்றியும் தெரியும். உங்களுடைய
புத்தி இதைப் பற்றி சிந்திக்கிறது. வேறு யாருடைய புத்தியிலும்
இந்த சிந்தனை இல்லை. பிரஜா பிதா பிரம்மா என பாடப்பட்டு
இருக்கின்றது. போன கல்பத்தில் கூட நீங்கள் இவ்வாறே பிரம்மா
குமாரி பிரம்மா குமாரி ஆனீர்கள். நாம் பிரஜாபிதா பிரம்மாவின்
குழந்தைகள் என நீங்கள் அறிகிறீர்கள். நம் மூலமாக பாபா
சொர்க்கத்தை ஸ்தாபனை செய்து கொண்டு இருக்கின்றார்.
வரிசைக்கிரமத்தில் முயற்சிக்கு ஏற்ப தகுதி அடைந்து விட்டால்
பழைய உலகம் அழிந்து போகும். திரிமூர்த்தி என்று கூட இங்கு தான்
பாடப்பட்டு இருக்கின்றது. திரிமூர்த்தி சித்திரமும்
வைக்கிறார்கள். அதில் சிவனை காண்பிப்பதில்லை. பிரம்மா மூலமாக
ஸ்தாபனை என்று கூறப்படுகிறது. யார் செய்விக்கிறார்? சிவபாபா.
விஷ்ணு மூலமாக பாலனை. பிராமணர்களாகிய நீங்கள் தேவதையாவதற்காக
தகுதியடைந்து கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் நடித்துக்
கொண்டு இருக்கிறீர்கள். மீண்டும் அடுத்த கல்பத்திலும்
நடிப்பீர்கள். நீங்கள் தூய்மையாகிறீர்கள். காமம் என்பது மகா
எதிரி. அதை வெற்றி அடையுங்கள், என்னை மட்டுமே நினையுங்கள்
என்பது பாபாவின் கட்டளையாகும் என கூறுகிறீர்கள். மிகவும்
எளிதாகும். பக்தி மார்க்கத்தில் குழந்தைகளாகிய நீங்கள் நிறைய
துக்கத்தைப் பார்த்துள்ளீர்கள். ஏதாவது சிறிது சுகம் இருந்தால்
கூட அல்ப காலத்திற்கே. பக்தியில் காட்சி கிடைக்கின்றது. அதுவும்
அல்ப காலத் திற்கே. உங்களின் ஆசை நிறைவேறுகின்றது. இந்த
சாட்சாத்காரம் கிடைக்கின்றது. அதுவும் நானே செய்விக்கிறேன்.
டிராமாவில் நிச்சயிக்கப்பட்டு இருக்கின்றது. எது முடிந்து
விட்டதோ ஒவ்வொரு நொடியும் நாடகத்தில் பதிவு செய்யப்பட்டு
இருக்கிறது. இப்போது பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்று
கூறமாட்டார்கள். இல்லை இது ஏற்கனவே உருவாக்கப்பட்ட அனாதி நாடகம்
ஆகும். எத்தனை நடிகர்கள் இருக்கிறார்களோ அனைவரின் நடிப்பும்
அழிவற்றது. யாரும் மோட்சத்தை அடைய முடியாது. நாங்கள் கலந்து
விடுவோம் என சந்நியாசிகளும் கூறுகின்றார்கள். நீங்கள் அழிவற்ற
ஆத்மா என்று பாபா புரிய வைக்கின்றார். ஆத்மா புள்ளியாக
இருக்கின்றது. எவ்வளவு சிறிய புள்ளியில் 84 பிறவிகளின் நடிப்பு
நிச்சயிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த சக்கரம் சுழன்று கொண்டே
இருக்கின்றது. யார் முதன் முதலில் நடிப்பதற்காக வருகின்றார்களோ
அவர்களே 84 பிறவிகள் எடுக்கிறார்கள். அனைவரும் எடுக்க முடியாது.
உங்களைத் தவிர வேறு யாருடைய புத்தியிலும் இந்த ஞானம் இல்லை.
ஞானக்கடல் ஒரே ஒரு தந்தையாவார். நாம் தந்தை யிடமிருந்து சொத்தை
அடைந்து கொண்டு இருக்கிறோம் என அறிகிறீர்கள். பாபா நம்மை அழுக்
கிலிருந்து தூய்மையாக்குகின்றார். சுகம் மற்றும் அமைதியின்
சொத்தை அளிக்கிறார். சத்யுகத் தில் துக்கத்தின் பெயர் அடையாளம்
இல்லை. நீண்ட ஆயுள் உடையவர் ஆகுக, செல்வந்தர் ஆகுக.......
துறவர மார்க்கத்தில் இருப்பவர்கள் இவ்வாறு ஆசீர்வாதங்களை
அளிக்க முடியாது என பாபா கூறுகின்றார். குழந்தைகளாகிய
உங்களுக்கு பாபாவிடமிருந்து சொத்து கிடைத்துக் கொண்டு
இருக்கின்றது. சத்யுகம் திரேதா சுகதாமம் ஆகும். பிறகு எப்படி
துக்கம் ஏற்படுகிறது. அதையாரும் அறிய வில்லை. தேவதைகள் வாம
மார்க்கத்தில் எப்படி போனார்கள். அந்த அடையாளங்கள் இருக்கின்றது.
ஜகன்நாத் புரியில் தேவதைகளின் சத்திரம், கிரிடம் போன்றவை
அணிந்தது போன்று காண்பிக்கிறார்கள். பிறகு அதிகமான
சித்திரங்களையும் உருவாக்கியிருக்கி
றார்கள். ஆகவே அவர் களின்
சிலைகளையும் கருப்பாக வைத்திருக்கிறார்கள். தேவதை கள் வாம
மார்க்கத்தில சென்றதால் கடைசியில் முற்றிலும் கருப்பாகிவிட்டனர்
என்பது இதிலிருந்து தெளிவாகிறது. பாரதம் எவ்வளவு அழகாக இருந்தது.
பிறகு நாடகத்தின் படி தமோபிரதானமாகத்தான் வேண்டும் என நீங்கள்
அறிகிறீர்கள். இப்போது சங்கமத்தில் உங்களுக்கு இந்த ஞானம்
இருக்கிறது. பாபா ஞானம் நிறைந்தவர் ஆவார். உங்களுக்கு ஒருவரே
தந்தை, ஆசிரியர், குரு மூன்றும் ஆவார். சிவபாபா நம்மை படிக்க
வைக்கிறார் என்பது எப்பொழுதும் புத்தியில் இருக்கட்டும். இது
எல்லை யற்ற படிப்பாகும். இதன் மூலம் நீங்கள் (நாலேட்ஜ்ஃபுல்)
ஞானம் நிறைந்தவர்களாக ஆகி விட்டீர்கள். நீங்கள் அனைத்தையும்
அறிகிறீர்கள். அவர்கள் சர்வ வியாபி என கூறுகின்றனர். நீங்கள்
அவர் பதீத பாவனர் என கூறுகின்றீர்கள். எவ்வளவு இரவு பகல்
வித்தியாசம் இருக்கிறது. இப்பொழுது நீங்கள் மாஸ்டர்
நாலேட்ஜ்ஃபுல்லாக வரிசைக்கிரமத்தில் ஆகியிருக்கிறீர்கள். பாபா
விடம் என்ன இருக்கிறதோ அதை உங்களுக்குக் கற்பிக்கிறார். நீங்கள்
பாபாவை நினைத்தால் 21 பிறவிகளுக்கு சொத்து கிடைக்கும் என்பதை
அனைவருக்கும் தெரிவிக்கிறீர்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தான் புத்துணர்வுடன் இருந்து மற்றவர்களைப் புத்துணர்வு
அடையச் செய்ய அப்பா மற்றும் ஆஸ்தியின் நினைவில் இருங்கள்.
மேலும் அனைவருக்கும் நினைவுபடுத்த வேண்டும்.
2. இந்த பழைய உலகின் மீது, இந்த சுடுகாட்டின் மீது மனதை
ஈடுபடுத்தக் கூடாது. சாந்தி தாமம், சுகதாமத்தை நினைக்க வேண்டும்.
தன்னை தேவதையாக மாற்றுவதற்குத் தகுதியை உருவாக்க வேண்டும்.
வரதானம்:
ஈஸ்வரிய அதாரிட்டி மூலம் சங்கல்பம் அல்லது
புத்தியை கட்டளைப் படி நடத்தக் கூடிய மாஸ்டர் சர்வசக்திவான்
ஆகுக.
ஸ்தூல கை, கால்களை எளிதாக எங்கு வேண்டுமோ, அங்கு அசைக்கிறீர்கள்
அல்லது காரியத்தில் பயன்படுத்துகிறீர்கள், அதே போன்று சங்கல்பம்
அல்லது புத்தியை எங்கு ஈடுபடுத்த விரும்புகிறீர் களோ, அங்கு
ஈடுபடுத்த வேண்டும் - இதைத் தான் ஈஸ்வரிய அதாரிட்டி என்று
கூறுகின்றோம். சப்தங்களில் வருவது எளிதாக இருப்பது போன்று
சப்தங் களைக் கடந்து செல்வதும் அந்த அளவிற்கு எளிதாக இருக்க
வேண்டும். இந்த பயிற்சி மூலம் தான் சாட்சாத்கார மூர்த்தி
ஆவீர்கள். எனவே இப்பொழுது இந்த பயிற்சியை எளிதாக மற்றும்
நிரந்தரமானதாக ஆக்குங்கள், அப்போது தான் மாஸ்டர் சர்வசக்திவான்
என்று கூற முடியும்.
சுலோகன்:
சுய ஸ்திதி சக்திசாலியாக இருந்தது எனில் பரஸ்திதி
(பிரச்சனைகள்) அதற்கு முன் ஒன்றுமே இல்லை.
அவ்யக்த இஷாரா - சதா ஆடாத, அசையாத, ஒரே சமநிலையின்
ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்
உங்களது ஏக்ரஸ், ஆடாத ஸ்திதிக்கான நினைவுச் சின்னம் தான் இந்த
அச்சல்கர் ஆகும். பாப்தாதா ஏக்ரஸ் ஆக இருப்பது போன்று
குழந்தைகளும் ஏக்ரஸ் ஆக இருக்க வேண்டும். ஒரே ஒருவரின் ரசனையில்
இருக்கும் போது தான் ஏக்ரஸ் நிலையில் இருப்பீர்கள். ஏன் என்ற
சப்தத்தின் அடை யாளம் கேள்விக் குறி, அனைத்தையும் விட கோணலாக
இருக்கும். ஏன், எதற்கு என்ற சப்தம் நீங்கி விடும் போது நாடகம்
என்பதில் ஏக்ரஸ் ஸ்திதியில் நிலைத்திருக்க முடியும்.