15-08-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! நான் இவ்வளவு
சிறிய ஆத்மா எவ்வளவு பெரிய சரீரத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன்,
ஆத்மாவாகிய எனக்குள் அழியாத பாகம் பொருந்தி உள்ளது என்ற இதே
சிந்தனையை அதிகாலையில் எழுந்து செய்யுங்கள்.
கேள்வி:
சிவபாபாவிற்கு எந்த ஒரு பயிற்சி
உள்ளது, எந்த ஒரு பயிற்சி (பிராக்டிஸ்) இல்லை?
பதில்:
ஆத்மாவை ஞான ரத்தினங்களால்
அலங்கரிக்கும் பிராக்டிஸ் சிவபாபாவிற்கு இருக்கிறது மற்றபடி
சரீரத்தை அலங்கரிக்கும் பிராக்டிஸ் அவருக்கு இல்லை. ஏனெனில்
எனக்கோ சரீரம் இல்லை என்று பாபா கூறுகிறார். நான் இவருடைய
சரீரத்தை வாடகைக்கு எடுக்கிறேன் தான். இருந்தாலும் இந்த
சரீரத்தின் அலங்காரம் இந்த ஆத்மா சுயம் அவரே செய்து கொள்கிறார்.
நான் செய்வதில்லை. நானோ சதா அசரீரியாக உள்ளேன்.
பாடல்:
உலகம் மாறினாலும் நாம் மாற
மாட்டோம்.....
ஓம் சாந்தி.
குழந்தைகள் இந்த பாடலைக் கேட்டீர்கள். யார் கேட்டார்கள்? ஆத்மா
இந்த சரீரத்தின் காதுகள் மூலமாக கேட்டது. ஆத்மா எவ்வளவு
சிறியதாக உள்ளது என்பது குழந்தைகளுக்கும் தெரிய வந்துள்ளது.
அந்த ஆத்மா இந்த சரீரத்தில் இல்லை என்றால் சரீரம் எதற்கும்
பயனில்லாமல் போய் விடும். எவ்வளவு சிறிய ஆத்மாவின் ஆதாரத்தில்
இந்த எவ்வளவு பெரிய சரீரம் இயங்குகிறது. இந்த ரதத்தில்
வீற்றிருக்கும் ஆத்மா என்பது என்ன பொருள் என்று உலகத்தில்
யாருக்குமே தெரியாது. அகால மூர்த்தி (அழியாத) ஆத்மாவின் பீடம்
இதுவாகும். குழந்தைகளுக்கும் இந்த ஞானம் கிடைக்கிறது. எவ்வளவு
இரமணீ கரமான (ஆச்சரியம் அளிக்கும்) ரகசியங்களுடன் கூடியதாக
உள்ளது. இப்பேர்ப்பட்ட ஏதாவது ரகசியங்களுடன் கூடிய விஷயம்
கூறப்படும் பொழுது சிந்தனை எழுகிறது. குழந்தைகளாகிய
உங்களுக்குக் கூட இதே சிந்தனை ஓடுகிறது - இவ்வளவு சிறிய ஆத்மா
இவ்வளவு பெரிய சரீரத்தில் உள்ளது. ஆத்மாவில் 84 பிறவிகளின்
பாகம் பொருந்தி உள்ளது. சரீரமோ அழிந்து போய் விடுகிறது. மற்றது
ஆத்மா இருக்கிறது. இது மிகவுமே சிந்திக்க வேண்டிய விஷயம் ஆகும்.
அதிகாலை எழுந்து இந்த சிந்தனை செய்ய வேண்டும். ஆத்மா எவ்வளவு
சிறியது ஆகும். அதற்கு அழியாத பாகம் கிடைத்துள்ளது என்ற நினைவு
குழந்தைகளுக்கு வந்துள்ளது. நான் ஆத்மா எவ்வளவு அதிசய மானவன்
ஆவேன். இது புதிய ஞானம் ஆகும். இந்த ஞானம் உலகத்தில் யாருக்குமே
கிடையாது. தந்தை தான் வந்து கூறுகிறார். அதை நினைவு செய்ய
வேண்டி உள்ளது. நாம் எவ்வளவு சிறிய ஆத்மா ஆவோம்? எப்படி பாகம்
ஏற்று நடிக்கிறோம். சரீரம் 5 தத்துவங்களால் அமைகிறது.
சிவபாபாவின் ஆத்மா எப்படி வருகிறார் மற்றும் போகிறார் என்பது
பாபாவிற்குத் தெரியுமா என்ன? எப்பொழுதுமே இவருக்குள்
இருக்கிறார் என்பதும் கிடையாது. எனவே, இதே சிந்தனை செய்ய
வேண்டும். குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தை எப்பேர்ப்பட்ட ஞானம்
அளிக்கிறார் என்றால் இது ஒரு பொழுதும் யாருக்கும் கிடைக்க
முடியாது. உண்மையில் இந்த ஞானம் இவருடைய ஆத்மாவில் இருக்கவில்லை
என்பதை நீங்கள் அறிந்துள்ளீர் கள். மற்ற சத்சங்கங்களில் இது
போன்ற விஷயங்கள் பற்றி யாருடைய சிந்தனையிலும் இருப்பதில்லை.
ஆத்மா மற்றும் பரமாத்மா பற்றிய ஞானம் சிறிதளவும் இல்லை. நான்
ஆத்மா சரீரத்தின் மூலமாக இவருக்கு மந்திரம் கொடுக்கிறேன் என்று
எந்த ஒரு சாது சந்நியாசி ஆகியோர் நினைப்பார்களா என்ன? ஆத்மா
சரீரத்தின் மூலமாக சாஸ்திரம் படிக்கிறார். ஒரே ஒரு மனிதன் கூட
(ஆத்ம அபிமானி) ஆத்ம உணர்வுடையவராக இல்லை. ஆத்மாவின் ஞானம்
யாருக்குமே கிடையாது. பின் தந்தையின் ஞானம் எப்படி இருக்க
முடியும்?
ஆத்மாக்களாகிய நமக்கு இனிமையிலும் இனிமையான குழந்தைகளே என்று
தந்தை கூறுகிறார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள்
அறிந்துள்ளீர்கள். இந்த சரீரத்தில் இருக்கும் ஆத்மாவிற்கு
பரமபிதா பரமாத்மா வந்து கற்பிக்கிறார் என்று எந்த ஒரு மனிதரும்
புரிந்து கொள்ளவில்லை. எவ்வளவு புரிந்து கொள்ள வேண்டிய
விஷயங்கள் ஆகும் இது. ஆனால் பிறகும் வேலை, தொழில் ஆகியவற்றில்
சென்று விடும் பொழுது மறந்து விடுகிறார்கள். முதலிலோ தந்தை
ஆத்மா பற்றிய ஞானம் அளிக்கிறார். இந்த ஞானம் எந்த ஒரு
மனிதரிடமும் கிடையாது. ஆத்மாக்கள் பரமாத்மா வெகுகாலமாக
பிரிந்திருந்தார்கள் என்ற பாடலும் உள்ளது அல்லவா? கணக்கு
இருக்கிறது அல்லவா? ஆத்மா தான் சரீரத்தின் மூலமாக பேசுகிறது
என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஆத்மா தான்
சரீரத்தின் மூலமாக நல்லதோ அல்லது கெட்டதோ காரியம் செய்கிறது.
தந்தை வந்து ஆத்மாக்களை எவ்வளவு அழகாக ஆக்குகிறார். முதன்
முதலிலோ ஆத்மா என்றால் என்ன?. ஆத்மா இந்த சரீரம் மூலமாக
கேட்கிறது என்று அதிகாலை எழுந்து இதே (பிராக்டிஸ்) பயிற்சி
செய்யுங்கள் அல்லது சிந்தனை செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார்.
ஆத்மாவின் தந்தை பரமபிதா பரமாத்மா ஆவார். அவரை பதீதபாவனர் ஞானக்
கடல் என்று கூறுகிறார்கள். பிறகு எந்த ஒரு மனிதனையும் சுகக்கடல்,
சாந்திக்கடல் என்று எப்படி கூற முடியும்? லட்சுமி நாராயணருக்கு
எப்பொழுதுமே தூய்மையின் கடல் ஆவார்கள் என்று கூறுவார்களா என்ன?
இல்லை. ஒரு தந்தை தான் என்றைக்குமே தூய்மையின் கடல் ஆவார்.
மனிதர்களோ பக்தி மார்க்கத்தின் சாஸ்திரங்களை மட்டுமே வந்து
வர்ணனை செய்கிறார்கள். பிராக்டிகல் (நடைமுறை) அனுபவம் இல்லை.
நாம் ஆத்மாக்கள் இந்த சரீரத்தின் மூலமாக தந்தைக்கு மகிமை
செய்கிறோம் என்று புரிந்திருக்க மாட்டார்கள். அவர் நம்முடைய
மிகவும் இனிமையான பாபா ஆவார். அவரே சுகம் அளிக்கக் கூடியவர்
ஆவார். ஹே ஆத்மாக்களே, இப்பொழுது என்னுடைய வழிப்படி நடவுங்கள்
என்று தந்தை கூறுகிறார். இது அவினாஷி ஆத்மாவிற்கு அவினாஷி (அழியாத)
தந்தை மூலமாக அவினாஷி வழி கிடைக்கிறது. அந்த (வினாஷி) அழியக்
கூடிய சரீரதாரிகளுக்கு அழியக் கூடிய சரீரதாரிகளின் வழி தான்
கிடைக்கிறது. சத்யுகத்திலோ நீங்கள் இங்கிருந்து (பலனை)
பிராப்தியைப் பெறுகிறீர்கள். அங்கு ஒரு பொழுதும் தவறான வழி
கிடைப்பதே இல்லை. இப்பொழுதைய ஸ்ரீமத் தான் அவினாஷியாக
ஆகிவிடுகிறது. அது அரைக்கல்பம் நடக்கிறது. இது புதிய ஞானம்
ஆகும். இதை கிரகித்துக் கொள்வதற்கு எவ்வளவு புத்தி வேண்டும்.
மேலும் செயலில் வர வேண்டும். யாரெல்லாம் ஆரம்ப முதல் நிறைய
பக்தி செய்திருப்பார்களோ அவர்களால் தான் நல்ல முறையில் தாரணை
செய்ய முடியும். ஒரு வேளை நம்முடைய புத்தியில் சரியான முறையில்
தாரணை ஆவது இல்லை என்றால் அவசியம் ஆரம்பத்திலிருந்து நாம் பக்தி
செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எதுவுமே
புரியவில்லை என்றால் தந்தையிடம் கேளுங்கள் என்று தந்தை
கூறுகிறார். ஏனெனில் தந்தை அவினாஷி (சர்ஜன்) வைத்தியர் ஆவார்.
அவருக்கு சுப்ரீம் ஸோல் என்றும் கூறப்படுகிறது. ஆத்மா
தூய்மையாக ஆகிவிடும் பொழுது அவருக்கு மகிமை ஏற்படுகிறது.
ஆத்மாவிற்கு மகிமை இருக்கும் பொழுது சரீரத்திற்கும் மகிமை
உண்டாகிறது. ஆத்மா தமோபிரதானமாக இருக்கும் பொழுது
சரீரத்திற்கும் மகிமை இல்லை. இச்சமயத்தில் குழந்தைகளாகிய
உங்களுக்கு மிகவும் ஆழமான புத்தி கிடைக்கிறது. ஆத்மாவிற்குத்
தான் கிடைக்கிறது. ஆத்மா எவ்வளவு இனிமை யானவராக ஆக வேண்டும்.
அனைவருக்கும் சுகம் அளிக்க வேண்டும். பாபா எவ்வளவு இனிமை யாக
இருக்கிறார். ஆத்மாக்களையும் இனிமையானவராக ஆக்குகிறார். ஆத்மா
எந்த ஒரு சரியில்லாத காரியம் கூட செய்யக் கூடாது என்ற
பிராக்டிஸ் (பயிற்சி) செய்ய வேண்டும். என் மூலமாக எந்த ஒரு
முறையற்ற செயலும் ஆவதில்லையே என்று சோதனை செய்ய வேண்டும்.
சிவபாபா எப்பொழுதாவது முறையற்ற செயல் செய்வாரா? இல்லை. அவர்
வருவதே உத்தமத்திலும் உத்தமமான மங்களகரமான காரியத்தைச்
செய்வதற்கு. அனைவருக்கும் சத்கதி அளிக்கிறார். எனவே தந்தை என்ன
காரியம் செய்கிறாரோ குழந்தைகள் கூட அதே போன்ற காரியம் செய்ய
வேண்டும். யார் ஆரம்ப முதல் நிறைய பக்தி செய்துள்ளார்களோ அவர்
களுடைய புத்தியில் தான் இந்த ஞானம் நிலைக்கும் என்பதையும்
புரிய வைத்துள்ளார். இப்பொழுது கூட தேவதைகளுக்கு ஏராளமான
பக்தர்கள் இருக்கிறார்கள். தங்களுடைய தலையைக் கொடுக்கக் கூட
தயாராக இருக்கிறார்கள். நிறைய பக்தி செய்பவர்களுக்குப் பின்னால்
குறைவாக பக்தி செய்பவர்கள் தொங்கிக் கொண்டே
இருப்பார்கள்.அவர்களுக்கு மகிமை பாடுகிறார்கள். அவர் களுடையதோ
ஸ்தூலத்தில் எல்லாமே தெரிய வருகிறது. இங்கு நீங்கள் மறைமுகமாக
உள்ளீர்கள். உங்களுடைய புத்தியில் சிருஷ்டியின் முதல் இடை கடை
பற்றிய முழு ஞானம் உள்ளது. பாபா நமக்கு கற்பிக்க வந்துள்ளார்
என்பதும் குழந்தைகளுக்குத் தெரியும். இப்பொழுது மீண்டும் நாம்
வீட்டிற்குச் செல்வோம். எங்கிருந்து எல்லா ஆத்மாக்களும்
வருகிறார்களோ அது நம்முடைய வீடு ஆகும். அங்கு சரீரமே இல்லை.
பின் சப்தம் எப்படி இருக்க முடியும்? ஆத்மா இல்லை என்றால்
சரீரம் ஜடமாகி விடுகிறது. மனிதர்களுக்கு சரீரத்தின் மீது
எவ்வளவு மோகம் இருக்கிறது. ஆத்மா சரீரத்திலிருந்து வெளியேறி
விட்டால் மீதம் இருப்பது 5 தத்துவங்கள். அதன் மீது கூட எவ்வளவு
அன்பு இருக்கிறது? மனைவி கணவனின் சிதை மீது ஏறுவதற்கு தயாராகி
விடுகிறார். சரீரத்தின் மீது எவ்வளவு மோகம் இருக்கிறது.
இப்பொழுது முழு உலகத்திலிருந்து நஷ்டோ மோகா (மோகத்தை வென்றவர்)
ஆக வேண்டும் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். இந்த சரீரமோ
அழிந்து விடப்போகிறது. எனவே அதிலிருந்து மோகம் நீங்கி விட
வேண்டும் அல்லவா? ஆனால் நிறைய மோகம் இருக்கிறது.
பிராமணர்களுக்கு உணவூட்டுகிறார்கள். இன்னாருடைய சிரார்த்தம்
ஆகும் என்று நினைவு செய்கிறார்கள் அல்லவா? இப்பொழுது அவர் (இறந்து
போனவர்) உணவை உட்கொள்ள முடியுமா என்ன? குழந்தைகளாகிய நீங்களோ
இப்பொழுது இந்த விஷயங் களிலிருந்து விடுபட்டவர் ஆகி விட
வேண்டும். நாடகத்தில் ஒவ்வொருவரும் தங்களது பாகத்தை
நடிக்கிறார்கள். இச்சமயத்தில் உங்களுக்கு ஞானம் உள்ளது. நாம்
நஷ்டோ மோகா ஆக வேண்டும். மோகத்தை வென்ற (மோகஜீத்) ராஜாவினுடைய
கதையும் உள்ளது அல்லவா? வேறு யாரும் மோகஜீத் ராஜாவாக இருப்ப
தில்லை. இதுவோ கதைகள் நிறைய உருவாக்கி இருக்கிறார்கள் ! அங்கு
அகால மரணம் ஏற்படுவது இல்லை. எனவே கேட்க வேண்டிய விஷயம் கூட
இருப்பதில்லை. இச்சமயம் உங்களை மோகத்தை வென்றவராக (மோகஜீத்)
ஆக்குகிறார். சொர்க்கத்தில் மோகஜீத் ராஜாக்கள் இருந்தார்கள்.
இராஜா, இராணி எப்படியோ அப்படியே பிரஜைகள் இருப்பார்கள். அது
இருப்பதே நஷ்டோமோகா ராஜதானியாக. இராவண இராஜ்யத்தில் மோகம்
இருக்கிறது. அங்கோ விகாரம் இருப்பதில்லை. இராவண ராஜ்யமே இல்லை.
இராவண இராஜ்யம் போய் விடுகிறது. இராம இராஜ்யத்தில் என்ன ஆகிறது,
எதுவும் தெரியாது. தந்தையைத் தவிர வேறு யாரும் இந்த விஷயங்களைக்
கூற முடியாது. தந்தை இந்த சரீரத்தில் இருக்கும் பொழுது கூட (தேஹீ
அபிமானி) ஆத்ம உணர்வுடையவராக இருக்கிறார். கடனாக அல்லது
வாடகைக்கு வீடு எடுத்தாலும் கூட அதிலும் கூட மோகம் இருக்கும்.
வீட்டை நல்ல முறையில் (ஃபர்னிஷ்) வீட்டு சாமான்களால் நிரப்பி
விடுவார்கள். இவருக்கோ ஃபர்னிஷ் செய்ய வேண்டியது இல்லை. ஏனெனில்
தந்தையோ அசரீரி ஆவார் அல்லவா? இவருக்கு எந்த ஒரு அலங்காரம்
ஆகியவை செய்யக் கூடிய (பிராக்டிஸ்) பயிற்சியே இல்லை. இவருக்கோ
அழிவற்ற ஞான ரத்தினங்களால் குழந்தைகளை அலங்கரிக்கும் பிராக்டிஸ்
தான் உள்ளது. படைப்பினுடைய முதல் இடை கடை பற்றிய ரகசியத்தைப்
புரிய வைக்கிறார். சரீரமோ அபவித்திரமாக (தூய்மையற்ற) இருக்கவே
இருக்கிறது. இவருக்கு மற்றொரு புதிய சரீரம் கிடைக்கும் பொழுது
அது தூய்மையாக இருக்கும். இச்சமயத்திலோ இது பழைய உலகமாகும். இது
முடியப் போகிறது. இதுவும் உலகத்தில் யாருக்கும் தெரியவே
தெரியாது.மெல்ல மெல்ல தெரிய வரும். புதிய உலகத்தின் ஸ்தாபனை
மற்றும் பழைய உலகத்தின் விநாசம் - இதுவோ தந்தை யினுடையதே
காரியம் ஆகும். தந்தை தான் வந்து பிரம்மா மூலமாக பிரஜைகளைப்
படைத்து புது உலகத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். நீங்கள்
புதிய உலகத்தில் இருக்கிறீர்களா? இல்லை. புதிய உலகத்தின்
ஸ்தாபனை நடக்கிறது. எனவே பிராமணர் களின் குடுமி கூட உயரத்தில்
(தலைக்கு மேலே) உள்ளது. பாபாவிடம் நேரிடையாக வரும் பொழுது
நாங்கள் இறைவனான தந்தைக்கு முன்னால் செல்கிறோம் என்பதை முதலில்
நினைவு செய்ய வேண்டும் என்பதை பாபா புரிய வைத்துள்ளார்.
சிவபாபாவோ நிராகாரமானவர் ஆவார். அவருக்கு முன்னால் எப்படி
செல்வது? எனவே அந்த தந்தையை நினைவு செய்த பிறகு தந்தைக்கு
முன்னால் வர வேண்டும். அவர் இவருக்குள் அமர்ந்துள்ளார் என்பதை
நீங்கள் அறிந்துள்ளீர்கள். இந்த சரீரமோ பதீதமானது (தூய்மையற்றது)
ஆகும். சிவபாபாவின் நினைவில் இல்லாமலிருந்து ஏதாவது காரியம்
செய்கிறீர்கள் என்றால் பாவம் ஏற்பட்டு விடுகிறது. நாம்
சிவபாபாவிடம் செல்கிறோம். பிறகு அடுத்த பிறவியில் வேறு
தொடர்புகள் (உறவுகள்) இருப்பார்கள். அங்கு தேவதைகளின் மடியில்
செல்வீர்கள். இந்த ஈஸ்வரிய மடி ஒரே ஒரு முறை கிடைக்கிறது. பாபா
நான் உங்களுடையவனாக ஆகி விட்டேன் என்று வாயால் கூறுகிறார்கள்.
நிறைய பேர் ஒரு பொழுதும் பார்க்கக் கூட இல்லை. வெளியில்
இருக்கிறார்கள், சிவபாபா நாங்கள் உங்களுடைய மடியின் குழந்தை ஆகி
விட்டுள்ளோம் என்று எழுதுகிறார்கள். புத்தியில் ஞானம் உள்ளது.
நாம் சிவபாபா வினுடையவர் ஆகி விட்டோம் என்று ஆத்மா
கூறுகிறது.இதற்கு முன்பு நாம் பதீதமானவரின் (தூய்மையற்றவரின்)
மடியில் இருந்தோம். வருங்காலத்தில் தூய்மையான தேவதையின் மடியில்
செல்வோம். இந்த பிறவி கிடைத்தற்கரியது ஆகும். வைரம் போல நீங்கள்
இங்கு சங்கமயுகத்தில் ஆகிறீர்கள். சங்கமயுகம் என்பது அந்த
தண்ணீரின் கடல் மற்றும் நதிகளுடையதாகக் கூறப்படுவதில்லை. இரவு
பகலுக்கான வித்தியாசம் உள்ளது. பிரம்மபுத்திரா பெரியதிலும்
பெரிய நதி ஆகும். அது கடலில் போய் கலக்கிறது. நதிகள் போய்
கடலில் சேருகிறது. நீங்கள் கூட கடலிலிருந்து வெளிப்பட்ட ஞான
நதிகள் ஆவீர்கள். ஞானக் கடல் சிவபாபா ஆவார். பெரியதிலும் பெரிய
நதி பிரம்மபுத்திரா ஆகும். இவருடைய பெயர் பிரம்மா என்பதாகும்.
கடலுடன் இவருக்கு எவ்வளவு பொருத்தம் உள்ளது. நதிகள் எங்கிருந்து
வெளிப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியும். கடலிலிருந்து
தான் வெளிப்படுகிறது. பிறகு கடலில் போய் சேருகிறது.
கடலிலிருந்து இனிமையான தண்ணீர் எடுக்கிறார்கள். கடலின்
குழந்தைகள் பின் கடலில் போய் சேருகிறார்கள். நீங்கள் கூட ஞானக்
கடலிலிருந்து வெளிப் பட்டுள்ளீர்கள். பிறகு எல்லோருமே அங்கு
சென்று விடுவார்கள். எங்கு அவர் இருக்கிறாரோ அங்கு
ஆத்மாக்களாகிய நீங்கள் கூட இருக்கிறீர்கள். ஞானக் கடல் வந்து
உங்களைத் தூய்மையாக இனிமையானவராக ஆக்குகிறார். உவர்ப்பாக (உப்பின்
தன்மை) ஆகி இருக்கும் ஆத்மாவை இனிமையாக ஆக்குகிறார். 5
விகாரங்கள் என்ற சீ சீ உவர்ப்பு உங்களிடமிருந்து நீங்கிப் போய்
விடுகிறது. ஆக நீங்கள் தமோபிரதான நிலையிலிருந்து சதோபிரதானமாக
ஆகி விடுகிறீர்கள். தந்தை புருஷார்த்தம் (முயற்சி) நிறைய
செய்விக்கிறார். நீங்கள் எவ்வளவு சதோபிரதானமாக இருந்தீர்கள்.
சொர்க்கத்தில் இருந்தீர்கள். நீங்கள் முற்றிலுமே சீ சீ ஆகி
விட்டுள்ளீர்கள். இராவணன் உங்களை என்னவாக ஆக்கியுள்ளான்.
பாரதத்தில் தான் வைரம் போன்ற விலைமதிக்க இயலாத பிறவி என்று
பாடப்படுகிறது.
நீங்கள் சோழிகளுக்குப் பின்னால் ஏன் குழம்பிப் போகிறீர்கள்
என்று பாபா கூறிக் கொண்டே இருக்கிறார். சோழிகள் (பணம்) கூட
அதிகமாக வேண்டுமா என்ன? ஏழைகள் சட்டென்று புரிந்து கொண்டு
விடுகிறார்கள். செல்வந்தர்களோ இப்பொழுது எங்களைப் பொறுத்தவரை
இங்கேயே சொர்க்கம் இருக்கிறது என்கிறார்கள். யாரெல்லாம்
மனிதர்கள் இருக்கிறார்களோ அவர்கள் எல்லோருக்குமே இப்பொழுது சோழி
பேன்ற பிறவி ஆகும் என்பதை குழந்தைகளாகிய நீங்கள்
அறிந்துள்ளீர்கள். நாமும் அது போலத் தான் இருந்தோம். இப்பொழுது
பாபா நம்மை என்னவாக ஆக்குகிறார். லட்சியம் நோக்கமோ (ஏம்
ஆப்ஜெக்ட்) இருக்கிறது அல்லவா? நாம் நரனிலிருந்து நாராயணராக
ஆகிறோம். பாரதம் இப்பொழுது சோழி போல ஏழையாக உள்ளது அல்லவா?
சுயம் பாரதவாசிகள் அறிந்துள்ளார்களா என்ன? இங்கு நீங்கள்
எவ்வளவு சாதாரண அபலைகளாக இருக்கிறீர்கள். யாராவது பெரிய
மனிதராக இருக்கிறார் என்றால் அவருக்கு இங்கு அமருவதற்கு மனம்
விரும்பாது. எங்கு பெரிய பெரிய மனிதர்கள், சந்நியாசி, குரு
ஆகியோர்கள் இருப்பார்களோ அங்கிருக்கும் பெரிய பெரிய சபைகளுக்கு
செல்வார்கள். நான் ஏழைப் பங்காளன் ஆவேன் என்று தந்தையும்
கூறுகிறார். பகவான் ஏழைகளை பாதுகாக்கிறார் என்று கூறுகிறார்.
நாம் எவ்வளவு செல்வந்தராக இருந்தோம் என்பதை நீங்கள் இப்பொழுது
அறிந்துள்ளீர்கள். இப்பொழுது மீண்டும் ஆகிறோம். நீங்கள் கோடான
கோடீசுவரர் ஆகிறீர்கள் என்று பாபா எழுதவும் செய்கிறார். அங்கு
அடிதடி எதுவும் ஆவதில்லை. இங்கோ பாருங்கள், பைசாவிற்குப்
பின்னால் எவ்வளவு அடிதடி நடக்கிறது. எவ்வளவு லஞ்சம் கிடைக்கிறது.
பைசாவோ மனிதர்களுக்கு வேண்டும் அல்லவா? பாபா நம்முடைய
பொக்கிஷத்தை நிரம்பியதாக ஆக்கிவிடுகிறார் என்பதை குழந்தைகளாகிய
நீங்கள் அறிந்துள்ளீர்கள். அரைக் கல்பத்திற்கு எவ்வளவு செல்வம்
வேண்டுமோ அவ்வளவு பெற்று கொள்ளுங்கள். ஆனால் புருஷார்த்தம் (முயற்சி)
முழுமையாக செய்யுங்கள். கவனக்குறைவாக இருக்காதீர்கள். ஃபாலோ ஃபாதர்
(தந்தையை பின்பற்றுங்கள்) என்று கூறப்படுகிறது அல்லவா?
தந்தையைப் பின்பற்றுங்கள். அப்பொழுது இது போல ஆவீர்கள்.
நரனிலிருந்து நாராயணர், நாரியிலிருந்து லட்சுமி மிகவும் பெரிய
தேர்வு ஆகும். இதில் சிறிதளவு கூட அலட்சியமாக இருக்கக் கூடாது.
தந்தை ஸ்ரீமத் அளிக்கிறார். எனவே அதன்படி நடக்க வேண்டும்.
சட்டங்கள் நியமங்கள் ஆகியவற்றை மீறக் கூடாது. ஸ்ரீமத் மூலமாகத்
தான் நீங்கள் ஸ்ரீ சிறந்தவர்களாக ஆகிறீர்கள். குறிக்கோள்
மிகவும் பெரியது ஆகும். தங்களுடைய தினசரி கணக்கை வையுங்கள்.
சம்பாதித்தேனா இல்லை நஷ்டம் ஏற்படுத்திக் கொண்டேனா? தந்தையை
எவ்வளவு நினைவு செய்தேன்? எத்தனை பேருக்கு வழி கூறினேன்?
குருடர்களின் கைத்தடி நீங்கள் ஆவீர்கள் அல்லவா? உங்களுக்கு
ஞானத்தின் மூன்றாவது கண் கிடைக்கிறது. நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய் தந்தை பாப்தாதாவின்
அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு,
ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. எப்படி தந்தை இனிமையாக இருக்கிறாரோ அதே போல இனிமையானவராக ஆகி
அனைவருக்கும் சுகம் கொடுக்க வேண்டும். எந்த ஒரு முறையற்ற
செயலையும் செய்யக் கூடாது. உத்தமத்திலும் உத்தமமான நன்மையின்
காரியமே செய்ய வேண்டும்.
2. சோழிகளுக்கு பின்னால் குழம்பிப் போய் விடக் (துக்கமடைய)
கூடாது. புருஷார்த்தம் செய்து தங்கள் வாழ்க்கையை வைரம் போல
ஆக்க வேண்டும். கவனக் குறைவாக இருக்கக் கூடாது.
வரதானம்:
நிச்சயம் என்ற கால் உறுதியாக வைக்கக் கூடிய சதா நிச்சய புத்தி
கவலையற்றவர் ஆகுக.
அனைத்தையும் விட மிகப் பெரிய நோய் கவலையாகும். இதற்கான மருந்து
மருத்துவர்களிடம் இல்லை. கவலையானவர்கள் எவ்வளவு தான்
பிராப்திகளின் பின்னால் ஓடினாலும் பிராப்தியானது முன்னால் ஓடிக்
கொண்டே இருக்கும். ஆகையால் நிச்சயம் என்ற கால் சதா உறுதியாக
இருக்க வேண்டும். சதா ஒரே பலம் ஒரே நம்பிக்கை என்ற கால்
உறுதியாக இருந்தால் வெற்றி உறுதி. உறுதியான வெற்றியாளர்கள் சதா
கவலையற்று இருப்பார்கள். மாயை நிச்சயம் என்ற கால்களை
அசைப்பதற்காகவே விதவிதமான ரூபத்தில் வருகிறது. ஆனால் மாயை
அசைந்து விட வேண்டும், உங்களது நிச்சயம் என்ற கால் அசையவில்லை
எனில் கவலையற்றவர் என்ற வரதானம் கிடைத்து விடும்.
சுலோகன்:
ஒவ்வொருவரின் விசேஷதாவைப் பார்த்துக் கொண்டே சென்றால் விசேஷ
ஆத்மா ஆகிவிடுவீர்கள்.
அவ்யக்த சமிக்கை: சகஜயோகி ஆக வேண்டும் என்றால் பரமாத்ம அன்பின்
அனுபவி ஆகுங்கள்
கோப கோபியர்களாகிய உங்களது சரித்திரத்தில் - சர்வ சம்பந்தத்தின்
சுகம் தந்தையிடமிருந்து அடைபவர்கள் மற்றும் மூழ்கி இருப்பவர்கள்
அதாவது சர்வ சம்பந்தத்தின் அன்பில் மூழ்கி இருப்பவர்கள் என்று
பாடப் பட்டிருக்கிறது. மிக அன்பானவர்களை சந்திக்கும் பொழுது
அந்த அன்புச் சந்திப்பில் இந்த வார்த்தை தான் இருக்கும் -
ஒருவருக்கொருவர் கலந்து விட்டனர் அல்லது இருவரும் ஒன்றாகி
விட்டனர் என்று கூறுவர். ஆக தந்தையின் அன்பில் மூழ்கி விட்டீர்
கள் அதாவது தந்தையின் சொரூபமாக ஆகிவிட்டீர்கள்.