15-09-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! உங்களுக்கு கர்மம்,
அகர்மம், விகர்மத்தின் ஆழமான ரகசியங்களைக் கூறுவதற்காக தந்தை
வந்திருக்கின்றார். எப்பொழுது ஆத்மா மற்றும் சரீரம் இரண்டும்
தூய்மையாக இருக்கிறதோ அப்பொழுது கர்மம் அகர்மமாக ஆகிறது,
தூய்மையற்றவர் ஆவதினால் விகர்மம் ஆகிவிடுகிறது.
கேள்வி:
ஆத்மாவில் கறை ஏற்படுவதற்கான
காரணம் என்ன? கறை ஏற்பட்டிருக்கிறது எனில் அதன் அடையாளம்
என்னவாக இருக்கும்?
பதில்:
கறை ஏற்படுவதற்கான காரணம்
விகாரமாகும். தூய்மை இழப்பதினால் தான் கறை ஏற்படுகிறது. ஒருவேளை
இப்பொழுது வரை கறை ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது எனில் அவர்
களுக்கு பழைய உலகின் கவர்ச்சி ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
புத்தி குற்ற செயல்களின் பக்கம் சென்று கொண்டே இருக்கும். பாபா
நினைவில் இருக்க முடியாது.
ஓம் சாந்தி.
குழந்தைகள் இதன் பொருளை புரிந்திருக்கிறீர்கள். ஓம் சாந்தி
என்ற கூறுவதன் மூலம் ஆத்மாக்களாகிய நாம் இங்கு வசிக்கக்
கூடியவர்கள் கிடையாது என்ற நிச்சயம் ஏற்பட்டு விடுகிறது. நாம்
சாந்திதாமத்தில் வசிக்கக் கூடியவர்கள். நமது சுயதர்மம்
அமைதியாகும். நாம் வீட்டில் தான் இருந்தோம், பிறகு இங்கு வந்து
நடிப்பு நடிக்கிறோம். ஏனெனில் சரீரத்தின் மூலம் காரியங்கள்
செய்ய வேண்டியிருக்கிறது. காரியங்கள் ஒன்று நல்ல காரியம்,
மற்றொன்று கெட்ட காரியமாகும். இராவண இராஜ்யத்தில் காரியங்கள்
கெட்டதாக ஆகிவிடுகிறது. இராவண இராஜ்யத்தில் அனைவரின்
காரியங்களும் விகர்மமாக ஆகிவிட்டது. விகர்மம் செய்யாத மனிதன்
ஒருவர் கூட கிடையாது. சாது, சந்நியாசிகள் விகர்மம் செய்ய
முடியாது என்று மனிதர்கள் நினைக் கின்றனர். ஏனெனில் அவர்கள்
தூய்மையாக இருக்கின்றனர். சந்நியாசம் செய்திருக்கின்றனர்.
உண்மையில் தூய்மையானவர்கள் என்று யாரை கூற முடியும்? இதை
முற்றிலும் அறியாமல் இருக்கின்றனர். நாம் பதீதமானவர்கள் என்றும்
கூறுகின்றனர். பதீத பாவனனை அழைக்கின்றனர். எதுவரை அவர் வர
வில்லையோ அதுவரை உலகம் பாவனம் ஆக முடியாது. இங்கு இது பதீதமான,
பழைய உலகமாகும். அதனால் தான் பாவன உலகை நினைவு செய்கின்றனர்.
பாவன உலகம் செல்லும் பொழுது பதீத உலகை நினைவு செய்ய மாட்டீர்கள்.
அந்த உலகமே தனிப் பட்டது. ஒவ்வொரு பொருளும் புதியதிலிருந்து
பழையதாக ஆகிறது அல்லவா! புது உலகில் பதீதமானவர் ஒருவர் கூட
இருக்க முடியாது. புது உலகை படைக்கக் கூடியவர் பரம்பிதா
பரமாத்மா ஆவார். அவர் தான் பதீத பாவனன் ஆவார், அவரது
படைப்புகளும் அவசியம் பாவனமாகத் தான் இருக்க வேண்டும்.
பதீத்திலிருந்து பாவனம், பாவன நிலையிலிருந்து பதீத நிலை என்ற
இந்த விசயம் உலகில் யாருடைய புத்தியிலும் இருக்கவே முடியாது.
கல்ப கல்பத்திற்கும் தந்தை வந்து தான் புரிய வைக்கின்றார்.
குழந்தைகளாகிய உங்களிலும் சிலர் நிச்சய புத்தியுடையவர்களாகி
பிறகு சந்தேக புத்தியுடையவர்களாக ஆகிவிடுகிறீர்கள். மாயை
ஒரேயடியாக விழுங்கி விடுகிறது. நீங்கள் மகாரதிகள் அல்லவா!
மகாரதிகளைத் தான் சொற்பொழி விற்கு அழைக்கின்றனர்.
மகாராஜாக்களுக்கும் புரிய வைக்க வேண்டும். நீங்கள் தான் முதலில்
பாவனமானவர்களாக, பூஜைக்குரியவர்களாக இருந்தீர்கள். இப்பொழுது
இது பதீத உலகமாகும். பாவன உலகில் பாரதவாசிகள் மட்டுமே இருந்தனர்.
ஆதி சநாதன தேவி தேவதா தர்மத்தைச் சார்ந்த பாரதவாசிகளாகிய
நீங்கள் தான் இரட்டை கிரீடதாரிகளாக, சம்பூர்ண நிர்விகாரிகளாக
இருந்தீர்கள். மகாரதிகள் இவ்வாறு புரிய வைக்க வேண்டும் அல்லவா!
இந்த போதையிலிருந்து கொண்டு புரிய வைக்க வேண்டும். பகவானின்
மகாவாக்கியம் - காமச் சிதையில் அமர்ந்து கருப்பாகி விட்டீர்கள்,
பிறகு ஞானச் சிதையில் அமரும் பொழுது தூய்மையாக ஆகிவிடுவீர்கள்.
இப்பொழுது யாரெல்லாம் புரிய வைக்கின்றார்களோ அவர்கள் காமச்
சிதையில் அமர முடியாது. ஆனால் மற்றவர்களுக்குப் புரிய வைத்து,
புரிய வைத்து சுயம் காமச் சிதையில் அமர்ந்து விடுபவர்களும்
இருக்கின்றனர். இன்று இவ்வாறு புரிய வைக்கின்றனர், நாளை
விகாரத்தில் விழுந்து விடுகின்றனர். மாயை மிகவும் திறமை
வாய்ந்தது. கேட்கவே கேட்காதீர்கள். மற்றவர் களுக்குப் புரிய
வைப்பவர்கள் சுயம் காமச் சிதையில் அமர்ந்து விடுகின்றனர். பிறகு
இவ்வாறு ஏன் நடந்தது? என்று பட்சாதப்படுகின்றனர். குத்துச்
சண்டை அல்லவா! மனைவியை பார்க்கின்றனர், கவர்ச்சி ஏற்படுகிறது,
முகத்தை கருப்பாக்கிக் கொள்கின்றனர். அமிர்தம் குடித்து விட்டு
வெளியில் சென்றதும் மற்றவர்களை தொந்தரவு செய்வர், அசுத்தம்
செய்கின்றனர் என்றும் பாடப்பட்டிருக்கிறது. இரண்டு கைகளின்
மூலம் தான் கை தட்டப்படுகிறது. ஒரு கையினால் தட்ட முடியாது.
இருவரும் கெட்டு விடுகின்றனர். பிறகு சிலர் செய்தி
கொடுக்கின்றனர், சிலர் வெட்கப்பட்டு செய்தி கொடுப்பதே கிடையாது.
பிராமண குலத்தின் பெயர் கெட்டு விடக் கூடாது என்று
நினைக்கின்றனர். யுத்தத்தில் சிலர் தோல்வி அடைந்து விடுகின்றனர்.
பிறகு அழுகின்றனர் அரே! இவ்வளவு பெரிய பலசா-யையும்
வீழ்ச்சியடையச் செய்து விட்டாய்! இவ்வாறு பல விபத்துகள் (நிகழ்வுகள்)
பல நடக்கிறது. மாயை அடித்து விடுகிறது, இலட்சியம் அல்லவா!
யார் சதோ பிரதானமாக, தூய்மையாக இருந்தார்களோ அவர்களே காமச்
சிதையில் அமர்ந்து அசுத்தமாக, தமோ பிரதானமாக ஆகிவிட்டனர் என்பதை
இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள்.
இராமரையும் கருப்பாக உருவாக்குகின்றனர். பலரது சித்திரங்களை
கருப்பாக உருவாக்குகின்றனர். ஆனால் முக்கியமானவர்களைப் பற்றி
புரிய வைக்கப்படுகிறது. இங்கும் இராமச் சந்திரனின் சிலை
கருப்பாக இருக்கிறது, ஏன் கருப்பாக காண்பிக்கிறீர்கள்? என்று
அவர்களிடத்தில் கேட்க வேண்டும். இது ஈஸ்வரனின் லீலை, இவ்வாறு (காலம்
காலமாக) நடைபெற்று வருகிறது. என்று கூறிவிடுவர். ஏன்
நடைபெறுகிறது? எதற்காக நடைபெறுகிறது? என்று எதுவும் தெரியாது.
காமச் சிதையில் அமருவதன் மூலம் பதீதமாக, துக்க மானவர்களாக, ஒரு
பைசாவிற்கும் கூட மதிப்பில்லாதவர்களாக ஆகிவிடுவீர்கள் என்பதை
இப்பொழுது தந்தை உங்களுக்குப் புரிய வைக்கின்றார். அது
விகாரமற்ற உலகமாகும். இது விகார உலகமாகும். ஆக இவ்வாரெல்லாம்
புரிய வைக்க வேண்டும். இவர்கள் சூரிய வம்சத்தினர்கள், இவர்கள்
சந்திர வம்சத்தினர்கள், பிறகு வைஷ்ய வம்சத்தினர்களாக ஆகியே தீர
வேண்டும். விகார மார்க்கத்தில் வருவதனால் அவர்களை தேவதை என்று
கூற முடியாது. ஜெகந்நாத் கோயிலில் (கோபுரத்தின் மீது)
தேவதைகளின் குலத்தை காண்பிக்கின்றனர். ஆடை தேவதைகளைப் போன்று
காண்பித்து, நடத்தைகள் மிகவும் அசத்தமானதாக காண்பித்து விட்டனர்.
தந்தை எந்த விசயத்தில் கவனம் ஈர்க்கின்றாரோ, அதில் சிந்தனை
செலுத்த வேண்டும். கோயில்களில் அதிக சேவை செய்ய முடியும்.
ஸ்ரீநாத் கோயிலிலும் புரிய வைக்க முடியும். இவரை ஏன் கருப்பாக
உருவாக்கி யிருக்கிறீர்கள்? என்று கேட்க வேண்டும். இதை புரிய
வைப்பது மிகவும் எளிது. அது தங்கயுகம், இது இரும்பு யுகமாகும்.
கறை ஏற்பட்டு விடுகிறது அல்லவா! இப்பொழுது உங்களது கறைகள்
நீங்கிக் கொண்டிருக்கிறது. யார் நினைவு செய்யவேயில்லையோ,
அவர்களது கறைகளும் நீங்காது. அதிக கறைகள் ஏற்பட்டிருக்கிறது
எனில் அவர்களுக்கு பழைய உலகின் கவர்ச்சி ஏற்பட்டுக் கொண்டே
இருக்கும். விகாரங்களின் மூலம் தான் மிக அதிக கறைகள்
ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணத்தினால் தான் பதீதமாகவும்
ஆகியிருக்கிறீர்கள். எனது புத்தி தீய செயல்களின் பக்கம் செல்வது
கிடையாது தானே? என்று தன்னை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
நல்ல நல்ல முதல்தரமான குழந்தைகளும் தோல்வியடைந்து விடுகின்றனர்.
இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த அறிவு
கிடைத்திருக்கிறது. முக்கியமானது தூய்மைக்கான விசயமாகும்.
ஆரம்பத்திலிருந்து இதற்காகத் தான் சண்டைகள் நடைபெற்று
வருகின்றன. தந்தை இந்த யுக்தி உருவாக்கியிருக்கின்றார் - நாம்
ஞான அமிர்தம் குடிக்கச் செல்கிறோம் என்று அனைவரும் கூறுகின்றனர்.
ஞான அமிர்தம் இருப்பது ஞானக் கடலிடம் தான். சாஸ்திரம்
படிப்பதனால் யாரும் பதீதத்திலிருந்து பாவனமாக ஆகிவிட முடியாது.
பாவனமாகி பிறகு பாவன உலகிற்குச் செல்ல வேண்டும். இங்கு பாவனம்
ஆகி பிறகு வேறு எங்கே செல்வீர்கள்? இன்னார் மோட்சம் அடைந்து
விட்டார் என்று மனிதர்கள் நினைக்கின்றனர். அவர்களுக்குத்
தெரியும்! ஒருவேளை மோட்சம் அடைந்து விட்டால் பிறகு அவருக்காக
திதி போன்ற காரியங்கள் செய்ய முடியாது. அவருக்கு எந்த கஷ்டமும்
ஏற்படக் கூடாது என்பதற்காக இங்கு தீபம் ஏற்றுகின்றனர். இருளில்
ஏமாற்றம் அடையக் கூடாது. ஆத்மா ஒரு சரீரத்தை விடுத்து மற்றொன்றை
எடுக்கிறது, ஒரு விநாடிக்கான விசயமாகும். பிறகு இருள்
எங்கிருந்து வந்தது? இந்த வழக்கம் நடைபெற்று வருகிறது,
நீங்களும் செய்துள்ளீர்கள் இப்பொழுது ஒன்றும் செய்வது கிடையாது.
சரீரம் மண்ணாகி விட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். அங்கு இந்த
மாதிரியான வழக்கங்கள் இருக்காது. இன்று மாயா ஜாலம் போன்ற
விசயங்கள் எதிலும் மற்றவர் மூலம் செய்ய வைக்கவில்லை.
யாருக்காவது இறக்கை வந்து விடுகிறது, பறக்க ஆரம்பித்து
விடுகின்றனர் என்று வைத்துக் கொள்ளுங்கள், சரி, பிறகு என்ன ஆனது?
அதனால் என்ன லாபம் கிடைத்தது? என்னை நினைவு செய்தால்
விகர்மங்கள் விநாசம் ஆகும் என்று தந்தை கூறுகின்றார். இது யோக
அக்னியாகும், இதன் மூலம் பதீதத்திலிருந்து பாவனமாக ஆவீர்கள்.
ஞானத்தின் மூலம் செல்வம் கிடைக்கும். யோகா மூலம் சதா ஆரோக்கியம்,
தூய்மையாக ஆவீர்கள். ஞானத்தின் மூலம் சதா செல்வந்தர்களாக
ஆவீர்கள். யோகியின் ஆயுள் எப்பொழுதும் நீண்டதாக இருக்கும்.
போகிக்கு குறைவாக இருக்கும். கிருஷ்ணரை யோகேஷ்வர் என்று
கூறுகின்றனர். ஈஸ்வரனின் நினைவின் மூலம் கிருஷ்ணராக ஆகிவிட்டார்.
அவரை சொர்க்கத்தில் யோகேஷ்வர் என்று கூறமாட்டார்கள். அவர்
இளவரசர். முன் பிறவியில் அப்படிப்பட்ட காரியம் செய்திருந்ததால்
தான் இவ்வாறு ஆகியிருக்கின்றார். கர்மம், அகர்மம், விகர்மத்தின்
ரகசியங்களையும் தந்தை புரிய வைத்திருக்கின்றார். அரைக் கல்பம்
இராம இராஜ்யம், அரைக் கல்பம் இராவண இராஜ்யம் ஆகும். விகாரத்தில்
செல்வது தான் அனைத்தையும் விட மிகப் பெரிய பாவமாகும். அனைவரும்
சகோதர, சகோதரிகள் அல்லவா! பகவானின் குழந்தை யாக ஆன பிறகு
தீமையான காரியம் எப்படி செய்ய முடியும்? பிரம்மா குமாரிகள்,
குமார்களாகிய நாம் விகாரத்தில் செல்ல முடியாது. இந்த யுக்தியின்
மூலம் தான் தூய்மையாக இருக்க முடியும். இப்பொழுது இராவண
இராஜ்யம் முடிவடைகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள், பிறகு
ஒவ்வொரு ஆத்மாவும் தூய்மையாகி விடுகிறது. அதற்குத்தான்
வீட்டிற்கு வீடு ஒளி நிறைந்திருக்கும் என்று கூறப்படுகிறது.
உங்களது தீபம் ஏற்றப்பட்டிருக்கிறது. ஞானம் என்ற மூன்றாவது கண்
கிடைத் திருக்கிறது. சத்யுகத்தில் அனைவரும் தூய்மையாகவே
இருப்பர். இதையும் இப்பொழுது நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள்.
மற்றவர்களுக்குப் புரிய வைப்பதற்கான சக்தி குழந்தைகளிடத்தில்
வரிசைக்கிரமமாக இருக்கிறது. வரிசைக்கிரமமாக நினைவில்
இருக்கிறீர்கள். இராஜ்யம் எப்படி ஸ்தாபனை ஆகிறது? என்பது
யாருடைய புத்தியிலும் இருக்க முடியாது. நீங்கள் போர் வீரர்கள்
அல்லவா! நினைவு பலத்தின் மூலம் தூய்மையாகி நாம் இராஜா, ராணியாகி
ஆகிக் கொண்டிருக் கிறோம் என்பதை அறிவீர்கள். பிறகு அடுத்த
பிறவியில் வாயில் தங்க ஸ்பூனுடன் பிறப்போம். பெரிய தேர்வில்
வெற்றி அடைபவர்கள் உயர்ந்த பதவி அடைவார்கள். வித்தியாசம்
இருக்கும் அல்லவா! எந்த அளவிற்கு படிப்போ அந்த அளவு சுகம்!
இங்கு பகவான் கற்பிக்கின்றார். இந்த போதை இருக்க வேண்டும்.
பழச்சாறு (சத்துணவு - பலன்) கிடைக்கிறது. (சக்தி என்ற செல்வம்,
அதிகாரம்) பகவானின்றி இவ்வாறு பகவான், பகவதிகளாக யார் ஆக்க
முடியும்? நீங்கள் இப்பொழுது பதீதத்திலிருந்து பாவனம் ஆகிக்
கொண்டிருக்கிறீர்கள், பிறகு பல பிறவிகளுக்கு சுகமானவர்களாக
ஆகிவிடுவீர்கள். உயர்ந்த பதவி அடைவீர்கள். படித்து படித்தே
பிறகு அசுத்தமானவர்களாக ஆகிவிடுகிறீர்கள். தேக அபிமானத்தில்
வருவதன் மூலம் ஞானம் என்ற மூன்றாவது கண் மூடப் பட்டு விடுகிறது.
மாயை மிகவும் சக்தி வாய்ந்தது. அதிக முயற்சியிருக்கிறது என்று
தந்தை சுயம் கூறுகின்றார். பிரம்மாவின் உடலில் வந்து நான்
எவ்வளவு முயற்சி செய்கிறேன்! ஆனாலும் புரிந்து கொண்ட பிறகும்
இவ்வாறு இருக்க முடியாது என்று கூறி விடுகிறீர்கள். சிவபாபா
வந்து படிப்பு கற்பிக்கின்றார் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள
முடியாது. இது தந்திரம் (கெட்டிக் காரத்தனம்) ஆகும். இவ்வாறும்
கூறிவிடுகின்றனர். இராஜ்யம் ஸ்தாபனை ஆகியே தீரும். சத்தியம்
என்ற படகு ஆடும், ஆனால் மூழ்காது என்று கூறுகின்றார் அல்லவா!
எவ்வளவு தடைகள் ஏற்படுகின்றன! நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) யோக அக்னியின் மூலம் விகாரங்களின் கறைகளை நீக்க வேண்டும்.
எனது புத்தி குற்ற செயல்களின் பக்கம் செல்வதில்லை தானே? என்று
தன்னை சோதித்துக் கொள்ள வேண்டும்.
2) நிச்சயபுத்தியுடையவர்களாக ஆன பின்பு ஒருபொழுதும் எந்த
விசயத்திலும் சந்தேகம் எழுப்பவே கூடாது. விகர்மத்திலிருந்து
பாதுகாப்பாக இருப்பதற்காக எந்த காரியமும் தனது சுயதர்மத்தில்
நிலைத்திருந்து தந்தையின் நினைவில் செய்ய வேண்டும்.
வரதானம்:
உன்னத பராமரிப்பெனும் விதி மூலமாக அபிவிருத்தி செய்து அனைவரின்
வாழ்த்துக்களுக்கும் பாத்திரமாகுக !
சங்கமயுகமே வாழ்த்துக்களாலேயே வளர்ச்சி பெறும் யுகமாகும். பாபா
மற்றும் பரிவாரத்தின் வாழ்த்துக்களாலேயே குழந்தைகள் பாபா
மற்றும் பரிவாரத்தின் வாழ்த்துக்களாலேயே குழந்தை கள் நீங்கள்
வளர்ந்து விடுகின்றீர்கள். வாழ்த்துக்களாலேயே தான் ஆடுவதும்,
பாடுவதும், வளர்வது மாக பறந்து செல்கின்றீர்கள். இந்த
வளர்ப்பினையே அதிசயமானது. குழந்தைகளான நீங்களும் பெரிய மனதுடன்
இரக்க முனதுடன் வள்ளலாகி ஒவ்வொரு நொடியும் ஒருவரையொருவர் மிக
நல்லது மிக நல்லது என்றே வாழ்த்துக்களை வழங்கி விடுகின்றீர்கள்.
இதுவே பாலனைக்கான உன்னத விதியாகும் இந்த விதியாலேயே அனைவரையும்
பராமரிப்பு செய்து கொண்டிருங்கள் அப்போதே வாழ்த்துக்களுக்கு
பாத்திரமாகி விடுவீர்கள்.
சுலோகன்:
தனது சுபாவத்தை சரளமாக்கி விடுங்கள் இது சமாதானத்திற்கான சகஜ
விதியாகும்.
மாதேஷ்வரி அவர்களின் விலை மதிப்பிட முடியாத மகாவாக்கியங்கள்.
புருஷார்த்தம் (முயற்சி) மற்றும் பிராப்தியினால்
அமைக்கப்பட்ட அனாதி நாடகம்.
மாதேஷ்வரி: புருஷார்த்தம் மற்றும் பிராலப்தம் இரண்டு விஷயங்கள்
ஆகும். புருஷார்த்தம் - முயற்சி மூலமாக விதி (பாக்கியம்)
அமைக்கப்படுகிறது. இந்த அனாதி சிருஷ்டியின் சக்கரம் சுற்றிக்
கொண்டே இருக்கிறது. யார் ஆதி சனாதன பாரதவாசிகள்
பூஜைக்குரியவர்களாக இருந்தார்களோ, அவர்களே மீண்டும் பூசாரி
ஆனார்கள். பிறகு அதே பூசாரிகள் புருஷார்த்தம் செய்து
பூஜைக்குரியவர்கள் ஆகி விடுவார்கள். இந்த இறங்குவது மற்றும்
ஏறுவது - அனாதி நாடகத்தின் விளையாட்டு அமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்: மாதேஷ்வரி, எனக்குக் கூட இந்த கேள்வி எழுகிறது - இந்த
நாடகம் இது போல அமைக்கப் பட்டுள்ளது என்றால், பிறகு ஒரு வேளை
ஏற வேண்டும் என்று இருந்தது என்றால் தாங்களாகவே ஏறி விடுவார்களே,
பிறகு புருஷார்த்தம் செய்வதற்கான பயன் என்ன தான் ஆகியது? யார்
ஏறுகிறார்களோ அவர்கள் பிறகும் விழத்தான் போகிறார்கள் என்றால்
பின் இவ்வளவு புருஷார்த்தம் தான் ஏன் செய்ய வேண்டும்? மாதேஷ்வரி,
இந்த நாடகம் மிகச் சரியாக ரிபீட் - திரும்பவும் அவ்வாறே
நடைபெறுகிறது என்று நீங்கள் கூறுகிறீர்கள். அப்படியானால்
ஆல்மைட்டி - சர்வசக்திவான் பரமாத்மா சதா இப்பேர்ப்பட்ட
விளையாட்டை பார்த்து சுயம் களைப்பொன்றும் அடைவது இல்லையே?
எப்படி 4 பருவ காலங்களில் குளிர் காலம், வெப்ப காலம்
ஆகியவையுனுடைய வித்தியாசம் இருக்குமோ, அதே போல இந்த நாடகத்தில்
வித்தியாசம் ஏற்படாதா?
மாதேஷ்வரி: அது தான் - மிகச் சரியாக ரிபீட் ஆகிறது என்பதே இந்த
நாடகத்தின் சிறப்பு ஆகும். மேலும், இந்த நாடகத்தில் இன்னும்
மற்ற சிறப்புக்கள் உள்ளன - ரிபீட் ஆகிக் கொண்டிருந்தாலும் கூட
தினமும் அது புதியதாகவே படுகிறது. முதலிலோ நமக்கு கூட இந்த
கல்வி இருக்கவில்லை. ஆனால் நாலேஜ் - ஞானம் கிடைத்த பிறகு எது
எது விநாடிக்கு விநாடி நடக்கிறதோ, மிகச் சரியாக முந்தைய
கல்பத்தினுடையதே போல நடக்கிறது என்றாலும் கூட நீங்கள் அதை (சாட்சி
நிலை) பார்வையாளராக இருந்து பார்க்கும் பொழுது நித்திய நயா -
தினமும் புதிது போலவே நினைப்பீர்கள். இப்பொழுது சுகம் துக்கம்
இரண்டினுடைய அறிமுகம் கிடைத்து விட்டது. எனவே எப்படி
இருந்தாலும் ஃபெயில் ஆகத் தான் போகிறோம் என்றால் எதற்காகப்
படிக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். இல்லை. பிறகோ இப்படிக்
கூட நினைக்கலாமே - உணவு கிடைக்க வேண்டும் என்றிருந்தால் தானாகவே
கிடைக்கும் பிறகு இவ்வளவு உழைப்பு செய்து எதற்காகத் தான்
சம்பாதிக்க வேண்டும்? அதே போல இப்பொழுது ஏறும் கலையின் நேரம்
வந்துள்ளது என்பதை நாமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதே
தேவதை குடும்பம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. பின் ஏன் நாம்
இப்பொழுதே அந்த சுகத்தைப் பெற்றுக் கொண்டு விடக் கூடாது? இப்படி
பாருங்கள், இப்பொழுது யாராவது நீதிபதி ஆக விரும்புகிறார்
என்றால், புருஷார்த்தம் செய்தால் தானே அந்த பட்டத்தை
பெறமுடியும் அல்லவா? அதில் ஃபெயில் - தோற்று விட்டார் என்றால்,
உழைப்பே வீணாகிப் போய் விடுகிறது. ஆனால் இந்த அவினாஷி ஞானத்தில்
பிறகு இது போல ஏற்படாது. இந்த அவினாஷி ஞானத்தின் அழிவு
சிறிதளவும் ஏற்படாது. சரி அப்படியே அந்த அளவிற்கு புருஷார்த்தம்
செய்யாமல், தெய்வீக இராயல் குடும்பத்தில் வரா விட்டாலும் கூட,
ஒரு வேளை குறைவான முயற்சி செய்திருந்தார்கள் என்றாலும் கூட,
அந்த சத்யுக தெய்வீக பிரஜையில் வர முடியும். ஆனால்
புருஷார்த்தம் செய்வது மிகவும் அவசியமாகும். ஏனெனில்
புருஷார்த்தத்தின் மூலமாகத் தான் பிராலப்தம் - விதி
அமைக்கப்படும். எனவே புருஷார்த் தத்திற்கு தான் நன்றி
பாடப்பட்டுள்ளது.
இந்த ஈசுவரிய நாலேஜ் - இறை ஞானம் அனைத்து மனித ஆத்மாகளுக்காக
இருக்கிறது.
முதன் முதலிலோ ஒரு முக்கிய பாயிண்ட் தங்களுடைய சிந்தனையில்
அவசியம் வைத்திருக்க வேண்டும் - இந்த மனித சிருஷ்டி என்ற
விருட்சத்தின் விதை ரூபமாக பரமாத்மா இருக்கிறார் என்றால், அந்த
பரமாத்மா மூலமாக பிராப்தி ஆகிக் கொண்டிருக்கும். நாலேஜ் (ஞானம்)
அனைத்து மனிதர்களுக்கும் அவசியமான ஒன்றாகும். அனைத்து
தர்மத்தினருக்கும் இந்த ஞானம் பெறுவதற்கான அதிகாரம் (உரிமை)
உள்ளது. ஒவ்வொரு தர்மத்தின் ஞானம் அவரவர்களுடைய தாக இருக்கிறது.
ஒவ்வொருவருடைய சாஸ்திரம் கூட தனித் தனியாக இருக்கிறது, ஒவ்வொரு
வருடைய வழியும் தனித் தனியாக இருக்கிறது, ஒவ்வொருவருடைய
சம்ஸ்காரம் தனித் தனியாக இருக்கிறது என்றாலும் கூட இந்த ஞானம்
அனைவருக்காக உள்ளது. அவர்களால் இந்த ஞானத்தை எடுக்க முடியவில்லை,
நமது குடும்பத்தில் வரவில்லை என்றாலும் கூட அனைவரின் தந்தையான
காரணத்தால், அவருடன் (யோகம்) நினைவின் மூலம் தொடர்பு கொள்வதால்,
பிறகு அவசியம் தூய்மையாக ஆகி விடுவார்கள். இந்த பவித்திரதாவின்
காரணமாக தங்களுடையதே பிரிவில் அவசியம் பதவி பெறுவார்கள்.
ஏனெனில் யோகத்தையோ அனைத்து மனிதர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள்.
எங்களுக்குக் கூட முக்தி வேண்டும் என்று நிறைய மனிதர்கள் கூறு
கிறார்கள். ஆனால் தண்டனைகளிலிருந்து விடுபடுவதற்கான சக்தி கூட
இந்த யோகத்தின் மூலமாக கிடைக்க முடியும். நல்லது - ஓம் சாந்தி.
அவ்யக்த சமிக்ஞை: இப்போது ஈடுபாடெனும் அக்னியை மூட்டி யோகத்தை
ஜூவாலா ரூபமாக்குங்கள்.
குழந்தைகளான உங்களிடம் உள்ள மகோன்னதமான சக்தி தூய்மை. இந்த
உன்னதமான சக்தியே அக்னியாக வேலை செய்கின்றது. ஒரு நொடியிள்
உலகின் குப்பை களை பஸ்பம் செய்து விடுகின்றது. ஆத்மாவானது
முழுமையான தூய்மை நிலையில் நிலை பெறும்பொழுதே அந்நிலை யின்
உயர்ந்த சங்கல்பத்தால் ஈடுபாடெனும் அக்னி கொழுந்து விட்டெறிந்து
குப்பைகளை பஸ்பம் செய்கின்றது. இதுவே யோக ஜூவாலை இப்போது
குழந்தைகளான நீங்கள் இந்த உயர்ந்த சக்தியை செயலில் கொண்டு
வாருங்கள்.