16-08-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! உங்களது குறிக்கோள்
மற்றும் லட்சியமானது அதிசயமான, வண்ண மயமான உலகமாகிய
சொர்க்கத்திற்கு அதிபதி ஆவது. எனவே சதா இதே குஷியில்
மகிழ்ச்சியாக இருங்கள், வாடிப்போனவராக இருக்கக்கூடாது.
கேள்வி:
அதிர்ஷ்டசாலி குழந்தைகளுக்கு
எந்த ஒரு ஊக்கம் சதா அமைந்திருக்கும்?
பதில்:
நமக்கு எல்லையில்லாத தந்தை புது
உலகத்திற்கு இளவரசர்-இளவரசி ஆக்குவதற்காக கற்பித்துக்
கொண்டிருக்கிறார். நீங்கள் இதே உற்சாகத்துடன் இந்த யுத்தத்தில்
சொர்க்கம் அடங்கி யுள்ளது என்பதை அனை வருக்கும் புரிய வைக்க
முடியும். இந்த போருக்குப் பின் சொர்க்கவாசல் திறக்க
வேண்டியுள்ளது. இதே குஷியில் இருக்க வேண்டும் மற்றும் குஷி
குஷியுடன் மற்றவர் களுக்கும் புரிய வைக்க வேண்டும்.
பாடல்:
உலகம் பல வண்ணமானது ... பாபா.......
ஓம் சாந்தி.
உலகம் பல வண்ணங்கள் நிறைந்தது என்று பாபாவிற்கு யார்
கூறினார்கள்? இப்பொழுது இதன் பொருளை வேறு யாரும் புரிந்து
கொள்ள முடியாது. இந்த நாடகம் வண்ண நிறங்களினுடையது என்று தந்தை
புரிய வைத்துள்ளார். ஏதாவது ஒரு திரைப்படம் பார்த்தீர்கள்
என்றால் அதிகமாக பல வண்ண காட்சிகள் போன்றவை இருக்கும் அல்லவா?
இப்பொழுது இந்த எல்லையில்லாத உலகத்தைப்பற்றி யாருக்கும் தெரியவே
தெரியாது. உங்களிலும் கூட நம்பர் பிரகாரம், முயற்சியின்படி முழு
உலகின் முதல் இடை-கடை-பற்றிய ஞானம் உள்ளது. சொர்க்கம் எவ்வளவு
வண்ண நிறங்களுடன் அழகாக இருக்கும் என்பதை நீங்கள்
புரிந்துள்ளீர்கள். இது பற்றி யாருக்குமே தெரியாது. யாருடைய
புத்தியிலும் இல்லை. அது அதிசயமான வண்ண நிற உலகமாகும்.
உலகத்தின் அதிசயம் என்று பாடப்படுகிறது. இது பற்றி நீங்கள்
மட்டும் அறிந்துள்ளீர் கள். நீங்கள் தான் அதிசயமான
உலகத்திற்காக அவரவர் அதிர்ஷ்டப்படி புருஷார்த்தம் செய்து
கொண்டிருக்கிறீர்கள். லட்சியமோ உள்ளது. அது தான் உலக அதிசயம்.
மிகவுமே வண்ண நிற உலகமாகும். அங்கு வைரம் வைடூரியங்களின்
அரண்மனைகள் இருக்கும். நீங்கள் ஒரு வினாடியில் அதிசயமான
வைகுண்டத்திற்குச் சென்று விடுகிறீர்கள். விளையாடுகிறீர்கள்,
நடனங் கள் ஆகியவை செய்கிறார்கள். உண்மையில் அதிசயமான உலகம் தானே?
இங்கு இருப்பது மாயை யின் இராஜ்யம். இதுவும் எவ்வளவு அதிசயமாக
உள்ளது. மனிதர்கள் என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
நாம் நாடகத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை உலகத்தில்
யாருமே புரிந்து கொள்வதில்லை. நாடகம் என்று புரிந்திருந்தால்
நாடகத்தின் முதல்-இடை-கடைப் பற்றிய ஞானமும் இருக்க வேண்டும்.
தந்தை கூட எவ்வளவு சாதாரணமாக இருக்கிறார் என்பதை குழந்தைகளாகிய
நீங்கள் அறிந்துள்ளீர்கள். மாயை முற்றிலுமே மறக்க வைத்து
விடுகிறது. மூக்கைப் பிடித்தோ அல்லது வேறு எந்த முறையிலாவது இதை
மறக்க வைத்துவிடும். அவ்வப் பொழுதுதான் நினைவில் இருக்கிறார்கள்
மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள், நாம் உலக அதிசய மான
சொர்க்கத்திற்கு அதிபதி ஆகிக் கொண்டிருக்கிறோம் என்று
நினைக்கும் போது. பிறகு மறந்து விடும்பொழுது வாடிப்போய்
விடுகிறார்கள். அந்த அளவு வாடிப்போய் விடுகிறார்கள். மலைவாழ்
மக்கள் (ஆதிவாசிகள்) கூட அவ்வாறு வாடிப்போக மாட்டார்கள். நாம்
சொர்க்கத்திற்கு செல்லப் போகிறோம் என்று சிறிது கூட புரிந்து
கொள்ளவே இல்லை என்பது போல இருப்பார்கள். நமக்கு எல்லையில்லாத
தந்தை கற்பித்துக் கொண்டிருக்கிறார். முற்றிலும் பிணம் போல ஆகி
விடு கிறார்கள். அந்த குஷி, போதையில் இருப்பதில்லை. இப்பொழுது
உலக அதிசயத்தின் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. உலக
அதிசயத்தின் இளவரசராக ஸ்ரீ கிருஷ்ணர் இருந்தார். அந்த சத்யுகம்
பின் எங்கே சென்றது? சத்யுகம் முதற்கொண்டு படிப்படியாக எப்படி
இறங்கினோம்? சத்யுகத்திலிருந்து கலியுகம் எப்படி ஆனது? இறங்கும்
கலை எவ்வாறு ஆனது? குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் தான் வரும்.
அந்த குஷியுடன் புரிய வைக்க வேண்டும். ஸ்ரீகிருஷ்ணர்
வரப்போகிறார். கிருஷ்ணருடைய இராஜ்யம் மீண்டும் ஸ்தாபனை ஆகிக்
கொண்டு இருக்கிறது. இதைக் கேட்டு பாரதவாசிகளுக்கு குஷி ஏற்பட
வேண்டும். ஆனால் யார் அதிர்ஷ்டசாலிகளோ அவர்களுக்கு இந்த ஊக்கம்
வரும். உலகின் மனிதர்களோ ரத்தினங்களை கற்கள் என்று நினைத்து
வீசி விடுவார்கள். இவை அழிவற்ற ஞான ரத்தினங்கள் ஆகும் அல்லவா?
இந்த ஞான ரத்தினங் களின் கடல் தந்தை ஆவார். இந்த
ரத்தினங்களுக்கு மிகுந்த மதிப்பு உள்ளது. இந்த ஞான ரத்தினங் களை
தாரணை செய்ய வேண்டும். இப்பொழுது நீங்கள் ஞானக்கடலிலிருந்து (பாபாவிடமிருந்து)
நேரிடையாகக் கேட்கிறீர்கள். எனவே வேறு எதையும் கேட்க வேண்டிய
அவசியமே இல்லை. சத்யுகத்தில் இவை இருக்காது. அங்கு வக்கீல், (எல்.எல்.பி)
மருத்துவர் (சர்ஜன்) ஆகியவர்களின் தேவையும் இருக்காது. அங்கு
இந்த ஞானமே இருக்காது. அங்கோ நீங்கள் பலனைத்தான்
அனுபவிக்கிறீர்கள். எனவே ஜன்மாஷ்டமியின் (கிருஷ்ண ஜெயந்தி)
பொழுது குழந்தைகள் நல்ல முறையில் புரிய வைக்க வேண்டும். அநேக
முறை முரளி கூட நடந்துள்ளது. குழந்தைகள் சிந்தனைக் கடலை கடைய
வேண்டும். அப்பொழுது தான் கருத்துகள் வெளிப்படும். சொற்பொழிவு
நிகழ்த்த வேண்டும் என்றால் அதிகாலை எழுந்து எழுத வேண்டும். பின்
படிக்க வேண்டும். மறந்து விட்ட குறிப்புகளை பிறகு மறுபடியும்
சேர்க்க வேண்டும். இதனால் நல்ல தாரணை ஆகும். அப்பொழுது கூட
எழுதியது போல அப்படியே பேச முடியாது. ஒரு சில குறிப்புகளை
மறந்து விடுவீர்கள். எனவே கிருஷ்ணர் யார் என்பதைப் புரிய வைக்க
வேண்டி உள்ளது. அவரோ உலக அதிசயமான சொர்க்கத்தின் அதிபதியாக
இருந்தார். பாரதம் தான் சொர்க்கமாக இருந்தது. அந்த
சொர்க்கத்தின் எஜமானர் ஸ்ரீ கிருஷ்ணராக இருந்தார். ஸ்ரீ
கிருஷ்ணர் வரப்போகிறார் என்ற செய்தியை நாங்கள் உங்களுக்குக்
கூறுகிறோம். இராஜயோகத்தை பகவான் தான் கற்பித்துள்ளார்.
இப்பொழுது கூட கற்பித்துக் கொண்டிருக்கிறார். தூய்மையாவதற்கும்
கூடமுயற்சி செய்வித்துக் கொண்டிருக்கிறார், டபுள் கிரீடம்
அணிந்த தேவதையாக ஆக்குவதற்காக. இவை எல்லாமே குழந்தைகளுக்கு
நினைவில் வரவேண்டும். யாருக்கு அப்பியாசம் இருக்குமோ அவர்களால்
நல்ல முறையில் புரிய வைக்க முடியும். கிருஷ்ணருடைய படத்தில்
கூட எழுத்துக்கள் மிகவும் முதல் தரமாக உள்ளது. இந்த போருக்குப்
பின்னால் சொர்க்க வாசல் திறக்க வேண்டியுள்ளது. இந்த யுத்தத்தில்
அதுபோன்ற சொர்க்கம் அடங்கியுள்ளது குழந்தைகள் கூட அதிகமான
குஷியில் இருக்க வேண்டும். ஜென்மாஷ்டமியின் பொழுது மனிதர்கள்
புதிய ஆடை அணிகிறார்கள். ஆனால் இப்பொழுது நாம் இந்த பழைய சரீரம்
விடுத்து புதிய தங்க சரீரம் எடுப்போம் என்பதை நீங்கள்
அறிந்துள்ளீர்கள். தங்க சரீரம் என்கிறார்கள் அல்லவா? ஆத்மாவும்
தூய்மை, சரீரமும் தூய்மை. இப்பொழுது தங்கம் போன்று கிடையாது.
நம்பர் பிரகாரம் ஆகிக் கொண்டிருக்கிறது. நினைவு யாத்திரை
மூலமாகவே தங்கம் போன்று ஆகும். நிறைய பேருக்கு நினைவு
செய்வதற்கான அறிவு கூட கிடையாது என்பதை பாபா அறிவார். நினைவில்
உழைப்பு செய்யும் பொழுதே பேச்சில் கூர்மை நிரம்பும். இப்பொழுது
அந்த சக்தி எங்கே உள்ளது? யோகம் (நினைவு) இல்லை. லட்சுமி
நாராயணர் ஆவதற்கான அறிவும் வேண்டும் அல்லவா? படிப்பு வேண்டும்.
கிருஷ்ண ஜென்மாஷ்டமி பற்றி புரிய வைப்பது மிகவும் சுலபம்.
கிருஷ்ணருக்கு ஷ்யாம்-சுந்தர் என்று கூறு கிறார்கள்.
கிருஷ்ணரையும் கறுப்பாக, நாராயணரையும் கறுப்பாக, இராமரையும்
கறுப்பாக ஆக்கி விட்டார்கள். சுயம் தந்தையே கூறுகிறார், ஞான
சிதையில் அமர்ந்து சொர்க்கத்தின் எஜமானராக ஆகிய எனது குழந்தைகள்
பின் எங்கே சென்று விட்டார்கள்? காமச் சிதையில் அமர்ந்து நம்பர்
பிரகாரம் இறங்கிய படியே வந்தார்கள். சிருஷ்டி கூட சதோபிரதானம்,
சதோ, ரஜோ, தமோ ஆகிறது. எனவே மனிதர்களின் நிலை கூட அவ்வாறே
ஆகிறது. காமச் சிதையில் அமர்ந்து எல்லோரும் ஷயாம் அதாவது
கறுப்பாக ஆகிவிட்டுள்ளனர். இப்பொழுது நான் அழகாக ஆக்க
வந்துள்ளேன். ஆத்மா அழகாக ஆக்கப்படுகிறது. மனம், சொல் செயலில்
எப்படி நடக்கிறார்கள் என்று பாபா ஒவ்வொருவருடைய நடத்தை மூலம்
புரிந்து கொள்கிறார். கர்மம் எப்படி செய்கிறார்கள், அதன் மூலம்
தெரிய வருகிறது. குழந்தைகளின் நடத்தையோ மிகவும் முதல் தரமானதாக
இருக்க வேண்டும். கிருஷ்ண ஜெயந்தியின் பொழுது புரிய வைப்பது
மிகவும் நல்லது. ஷயாம் மற்றும் சுந்தர் என்ற தலைப்பு
இருக்கட்டும். கிருஷ்ணரையும் கறுப்பாக பின் நாராயணரையும், பின்
ராதையும் கூட ஏன் கறுப்பாக செய்கிறார்கள்? சிவலிங்கத்தைக் கூட
கருப்பான கல்லால் செய் கிறார்கள். இப்பொழுது அவர் கருப்பாக
உள்ளாரா என்ன? சிவன் யார் ஆனால் அவரை எப்படி காட்டுகிறார்கள்?
இந்த விஷயங்களை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஏன்
கருப்பாக செய்கிறார்கள் - நீங்கள் இது பற்றி புரிய வைக்க
முடியும். குழந்தைகள் என்ன சேவை செய்கிறீர்கள் என்று இப்பொழுது
பார்ப்போம்! தந்தையோ கூறுகிறார் - இந்த ஞானம் எல்லா
தர்மத்தினருக்கும் ஆனது ஆகும். என்னை நினைவு செய்தீர்கள்,
என்றால் உங்களது பலபிறவிகளின் பாவங்கள் நீங்கி விடும் என்று
தந்தை கூறுகிறார் என்பதை அவர்களுக்கும் கூற வேண்டும்.
பவித்திரமாக (தூய்மை) ஆக வேண்டும். யாருக்கு வேண்டு மானாலும்
நீங்கள் ராக்கி கட்டலாம். ஜரோப்பியர்களுக்கும் கட்டலாம்.
யாராயிருந்தாலும் சரி, அவர்களுக்குக் கூற வேண்டும்- பகவான்
கூறுகிறார், அவசியம் ஏதாவது ஒரு சரீரம் மூலமாகத்தான் கூறுவார்
அல்லவா? என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று கூறுகிறார்.
தேகத்தின் எல்லா தர்மங் களையும் விடுத்து தன்னை ஆத்மா என்று
உணருங்கள். பாபா எவ்வளவு புரிய வைக்கிறார் ! பிறகும் புரிந்து
கொள்வதில்லை. பின் இவரது அதிர்ஷ்டத்தில் இல்லை என்று தந்தை
புரிந்து கொள்கிறார். சிவபாபா கற்பிக்கிறார் என்பதையோ
புரிந்திருக்கக்கூடும். ரதமின்றி கற்பிக்க முடியாது. சமிக்ஞை (சைகை)
அளிப்பதே போதுமானது. ஒருசில குழந்தைகளுக்குப் புரிய
வைப்பதற்கான அப்பியாசம் மிகவும் நன்றாக உள்ளது. பாபா-மம்மாவை
இவர்கள் உயர்ந்த பதவி அடையப் போகிறவர்கள் என்று
புரிந்துள்ளீர்கள். மம்மா கூட சேவை செய்து கொண்டிருந்தார்
அல்லவா? இந்த விஷயங்களைக் கூட புரிய வைக்க வேண்டியுள்ளது.
மாயையினுடையது ரூபங்கள் கூட பலவிதமாய் உள்ளன. நிறைய பேர்
எனக்குள் மம்மா வருகிறார், சிவபாபா வருகிறார் என்கிறார்கள்.
ஆனால் புதுப்புது குறிப்புக்களை ஏற்கனவே நியமிக்கப்பட்ட
சரீரத்தின் மூலமாகக் கூறுவாரா, இல்லை வேறு யார் மூலமாவது
கூறுவாரா? இவ்வாறு ஆக முடியாது. அப்படியும் சகோதரிகள் பல்வேறு
விதமாக தங்களது கருத்துகளையும் சேர்த்து கூறுகிறார்கள். மாத
இதழில் எத்தனை விஷயங்கள் வருகின்றன. அப்படியின்றி மம்மா, பாபா
அவர்களுக்குள் வருகிறார்கள் என்பதல்ல அவ்வாறு எழுத
வைக்கிறார்கள். தந்தையோ இங்கு நேரிடையாக வருகிறார். அதனால் தான்
இங்கு கேட்பதற்காக வருகிறீர்கள். மம்மா பாபா வேறு
யாருக்குள்ளாவது வருகிறார் என்றால் பின் அங்கேயே இருந்து கொண்டு
அவரிடமே படிக்கலாமே! அவ்வாறு கிடையாது. இங்கு வர வேண்டும் என்று
அனைவருக்குமே ஈர்ப்பு ஏற்படு கிறது. தூரத்தில் இருப்பவர்களுக்கு
இன்னும் அதிகமாக ஈர்ப்பு ஏற்படுகிறது. எனவே குழந்தைகள்
ஜென்மாஷ்டமியின் போது நிறைய சேவை செய்ய முடியும். கிருஷ்ணரின்
பிறப்பு எப்பொழுது ஏற்பட்டது என்பது கூட யாருக்கும் தெரியாது.
இப்பொழுது உங்கள் பை (புத்தி) நிரம்பிக் கொண்டிருக்கிறது .எனவே
குஷி இருக்க வேண்டும். ஆனால் ஒரு சிலருக்குள் முற்றிலும்
குஷியில்லை என்பதை பாபா பார்க்கிறார். ஸ்ரீமத்படி நடக்க
மாட்டேன் என்று சபதம் செய்திருப்பது போல நடந்து கொள்கிறார்கள்.
சேவை செய்யும் குழந்தைகளுக்கோ சேவையே சேவை மட்டுமே தோன்றிக்
கொண்டிருக்கும். பாபாவின் சேவை செய்ய வரவில்லை, எவரொருவருக்கும்
வழி கூறவில்லை என்றால் நாம் குருடராக இருக்கிறோம் என்று
நினைப்பார்கள். இது புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் அல்லவா?
பேட்ஜில் கூட கிருஷ்ணரின் படம் உள்ளது. இதன் மீது கூட நீங்கள்
புரிய வைக்க முடியும். இவர்களைக் கருப்பாக ஏன்
காண்பித்துள்ளார்கள் என்று யாரை வேண்டு மானாலும்
கேட்டுப்பாருங்கள். அவர்களால் கூறமுடியாது. இராமரின் சீதை
கடத்தப் பட்டார் என்று சாஸ்திரங்களில் எழுதியுள்ளனர் ஆனால்
அந்த மாதிரி எந்த விஷயமும் ஆவதில்லை.
பாரதவாசிகளாகிய நீங்கள் தான் பரிஸ்தானில் (சொர்க்கம்)
வாழ்பவர்களாக (தேவதைகளாக) இருந்தீர்கள். இப்பொழுது சுடுகாட்டில்
இருப்பவர்களாக ஆகியுள்ளீர்கள். மீண்டும் ஞானச் சிதை யில்
அமர்ந்து தெய்வீக குணங்களை தாரணை செய்து பரிஸ்தானில்
வாழ்பவர்களாக ஆகிறீர்கள். சேவையோ குழந்தைகள் செய்ய வேண்டி
உள்ளது. எல்லோருக்கும் செய்தி கொடுக்க வேண்டும். இதில் மிகுந்த
அறிவுவேண்டும். நமக்கு பகவான் கற்பிக்கிறார் என்ற அவ்வளவு போதை
வேண்டும். பகவான் கூடவே இருக்கிறோம், செய்கிறோம். விடுதியில்
இருக்கும் பொழுது வெளியில் இருப்பவர்களின் சகவாசம் பாதிக்காது.
இங்கும் பள்ளிக்கூடம் உள்ளது அல்லவா? கிறிஸ்தவர்களிடம் நல்ல
நடத்தை (மேனர்ஸ்) இருக்கும். இப்பொழுதோ பதீதமாக உள்ளார்கள்.
தேவதைகளுக்கு முன்னால் சென்று தலை வணங்குகிறார்கள். எவ்வளவு
அவர்களுக்கு மகிமை உள்ளது. சத்யுகத்தில் எல்லோருடையதும்
தெய்வீக நடத்தையாக இருந்தது. இப்பொழுது அசுர நடத்தை ஆகும்.
இதுபோல நீங்கள் சொற்பொழிவு ஆற்றினீர்கள் என்றால் கேட்டு மிகவும்
மகிழ்ச்சி அடைந்து விடுவார்கள். சிறிய வாய் பெரிய விஷயம் - இது
கிருஷ்ணரைப் பற்றி கூறுகிறார்கள். இப்பொழுது நீங்கள் எவ்வளவு
பெரிய விஷயங்களைக் கேட்கிறீர்கள், இவ்வளவு பெரியவர் ஆவதற்காக.
நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் ராக்கி கட்டலாம். இந்த
தந்தையின் செய்தியோ எல்லோருக்கும் கூறவேண்டும். இந்த போர்
சொர்க்கவாசலை திறக்கிறது. இப்பொழுது பதீத நிலையிலிருந்து பாவனம்
ஆக வேண்டும். தந்தையை நினைவு செய்ய வேண்டும். தேகதாரியை நினைவு
செய்யக்கூடாது. ஒரே ஒரு தந்தை அனைவருக்கும் சத்கதி அளிக்கிறார்.
இது இருப்பதே இரும்பு யுகத்தின் உலகமாக. குழந்தைகளாகிய உங்கள்
புத்தியில் கூட நம்பர் பிரகாரம் முயற்சி யின் படி தாரணை ஆகிறது.
பள்ளியில் கூட (ஸ்காலர்ஷிப்) உதவித் தொகை பெறுவதற்காக நிறைய
உழைக்கிறார்கள். இங்கு கூட எவ்வளவு பெரிய ஸ்காலர்ஷிப்
கிடைக்கும்! சேவை நிறைய உள்ளது.
தாய்மார்கள் கூட நிறைய சேவை செய்ய முடியும். படங்களைக் கூட
எடுத்துக் கொள்ளுங்கள். கிருஷ்ணரின் கருப்பான, நாராயணரின்
கருப்பான, இராம சந்திரனினுடையதும் கருப்பான படத்தை எடுத்துக்
கொள்ளுங்கள். சிவனினுடையதும் கறுப்பான.... பிறகு உட்கார்ந்து
புரிய வையுங்கள். தேவதைகளை எதற்காக கருப்பாக ஆக்கியுள்ளார்கள்.
ஷயாம் சுந்தர்-ஸ்ரீநாத், துவாரகா சென்றீர்கள் என்றால்
முற்றிலுமே கருப்பான படம் உள்ளது. எனவே இது போன்ற படங்களை
எல்லாம் ஒன்று சேர்க்க வேண்டும். இதன் பொருளைப் புரிய வைத்த
பின்னர் இவ்வாறு கூறுங்கள் - நீங்களும் இப்பொழுது ராக்கி கட்டி
காமச் சிதையிலிருந்து இறங்கி ஞான சிதையில் அமர்ந்தீர்கள்
என்றால், தூய்மை (வெண்மையாக) ஆகிவிடுவீர்கள். இங்கும் நீங்கள்
சேவை செய்ய முடியும். இவர்களை ஏன் கருப்பாகச் செய்துள்ளார்கள்
என்பது பற்றி நல்ல முறையில் சொற்பொழிவாற்ற முடியும்.
சிவலிங்கத்தைக் கூட ஏன் கருப்பாக ஆக்கியுள்ளார்கள்? சுந்தர்
மற்றும் ஷயாம் என்று ஏன் கூறுகிறார்கள்? நாங்கள் புரிய
வைக்கிறோம். இதில் யாருமே கோபப்பட மாட்டார்கள். சேவையோ மிகவும்
சுலபம் ஆகும். தந்தையோ புரிய வைத்துக் கொண்டேயிருக்கிறார் -
குழந்தைகளே! நல்ல குணங்களைத் தாரணை செய்யுங்கள், குலத்தின்
பெயரை விளங்கச் செய்யுங்கள். இப்பொழுது நாம் உயர்ந்ததிலும்
உயர்ந்த பிராமண குலத்தினர் ஆவோம் என்பதை நீங்கள்
அறிந்துள்ளீர்கள். பின் ராக்கி பந்தனத்தின் பொருளை எவருக்கும்
நீங்கள் புரிய வைக்க முடியும். வைசியர்களுக்கும் புரிய வைத்து
ராக்கி கட்டலாம். படங்களும் கூட இருக்கட்டும். என் ஒருவனை
நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார் - இந்த கட்டளையை
ஏற்பதால் நீங்கள் வெண்மையாக ஆகிவிடுவீர்கள். நிறைய யுக்திகள்
உள்ளன. யாருமே கோபப்பட மாட்டார்கள். அந்த ஒருவரைத் தவிர எந்த
ஒரு மனிதனும் யாருக்கும் சத்கதி கொடுக்க முடியாது. ரக்ஷ்ô
பந்தனத்தின் நாள் இல்லை என்றாலும் பரவாயில்லை, எப்பொழுது
வேண்டுமானாலும் ராக்கி கட்டலாம். பொருளைப் புரிந்து கொள்ள
வேண்டும் அவ்வளவே! ராக்கி எப்பொழுது வேண்டுமானாலும் கட்டலாம்.
உங்களுடைய தொழிலே இது தான். கூறுங்கள், தந்தைக்கு வாக்குறுதி
கொடுங்கள் என்று. என் ஒருவனை நினைவு செய்யுங் கள். அப்பொழுது
பவித்திரமாக ஆகிவிடுவீர்கள் என்று தந்தை கூறுகிறார்.
மசூதிக்குக் கூடசென்று நீங்கள் அவர்களுக்குப் புரிய வைக்க
முடியும். நாங்கள் ராக்கி கட்ட வந்துள்ளோம். இந்த விஷயத்தைப்
புரிந்து கொள்வதற்கு உங்களுக்கும் உரிமையுள்ளது. என்னை நினைவு
செய்தீர்கள் என்றால் பாவங்கள் நீங்கி விடும், பாவனமாக ஆகி பாவன
உலகிற்கு அதிபதி ஆகிவிடுவீர்கள் என்று தந்தை கூறுகிறார்.
இப்பொழுதோ பதீத உலகம் ஆகும் அல்லவா? தங்கயுகம் அவசியம் இருந்தது.
இப்பொழுது இரும்பு யுகம் ஆகும். உங்களுக்கு தங்க யுகத்தில்
குதாவிடம் (இறைவனிடம்) செல்ல வேண்டாமா? இவ்வாறு கூறினீர்கள்
என்றால் சட்டென்று வந்து கால்களில் விழுவார்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய்-தந்தை பாப்தாதாவின் அன்பு
நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
(1) ஞான ரத்தினங்களின் கடலிலிருந்து பலனாகப் பெறுகின்ற ஞான
ரத்தினங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். சிந்தனைக் கடலைக்
கடைந்து சுயம் தன்னிடம் அழிவற்ற ஞான இரத்தினங்களை தாரணை செய்ய
வேண்டும். வாயிலிருந்து எப்பொழுதும் ரத்தினங் களையே
வெளிப்படுத்த வேண்டும்.
(2) நினைவு யாத்திரையில் இருந்து சொற்களை (வாணி) கூர்மை
உடையதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். நினைவின் மூலமாகவே ஆத்மா
தங்கம் ஆகும். எனவே நினைவு செய்வதற்கான அறிவை உபயோகிக்க (கற்க)
வேண்டும்.
வரதானம்:
என்னுடையது என்பதன் சூட்சும சொரூபத்தைக் கூட தியாகம்
செய்யக்கூடிய சதா பயமற்றவர், கவலையற்ற சக்கரவர்த்தி ஆகுக.
இன்றைய உலகத்தில் பணமும் உள்ளது மற்றும் பயமும் உள்ளது. எந்தளவு
பணம் உள்ளதோ, அந்தளவு பயத்துடனேயே சாப்பிடுகின்றார்கள்,
பயத்துடனேயே தூங்குகின்றார்கள். எங்கே எனது என்பது உள்ளதோ,
அங்கே பயம் கண்டிப்பாக இருக்கும். ஒருவேளை, ஒரு பொன் மான் கூட
என்னுடையதாக இருந்ததென்றால், பயம் இருக்கும். ஆனால், ஒரு
சிவபாபா என்னுடையவராக இருந்தால் பயமற்றவர் ஆகி விடுவீர்கள்.
எனவே, எனது, எனது என்பதை சோதனை செய்து, அவற்றை சூட்சும
ரூபத்தில் இருந்தும் கூட தியாகம் செய்து விடுங்கள். அப்பொழுது
பயமற்றவராக, கவலையற்ற சக்கரவர்த்தியாக இருப்பதற்கான வரதானம்
கிடைத்து விடும்.
சுலோகன்:
பிறருடைய கருத்துக்களுக்கு மரியாதை கொடுங்கள், அப்பொழுது
உங்களுக்கு மரியாதை தானாகவே கிடைக்கும்.
அவ்யக்த சமிக்ஞை : சகஜயோகி ஆகவேண்டும் என்றால் பரமாத்ம அன்பின்
அனுபவி ஆகுங்கள்
ஒருபுறம் எல்லையற்ற வைராக்கியம் இருக்க வேண்டும், மறுபுறம்
தந்தைக்கு சமமாக தந்தையின் அன்பில் லவ்லீன் (அன்பில்
மூழ்கியிருத்தல்) ஆகியிருங்கள். ஒரு வினாடி மற்றும் ஒரு எண்ணம்
கூட இந்த லவ்லீன் நிலையில் இருந்து கீழே வராதீர்கள்.
அப்பேற்பட்ட லவ்லீன் குழந்தை களுடைய குழு தான் தந்தையை
பிரத்யட்சம் செய்யும். நிமித்த ஆத்மாக்களாகிய நீங்கள் தூய அன்பு
மற்றும் தன்னுடைய பிராப்திகள் மூலம் அனைவருக்கும் சிரேஷ்ட பாலனை
கொடுங்கள், யோக்கியமானவர் (தகுதியானவர்) ஆக்குங்கள் அதாவது யோகி
ஆக்குங்கள்.