17.08.25    காலை முரளி            ஓம் சாந்தி  16.11.2006      பாப்தாதா,   மதுபன்


தனது சுயமரியாதையெனும் கௌரவத்தில் இருங்கள் மேலும் நேரத்தின் மகத்துவம் புரிந்து எவரெடி ஆகுங்கள்

இன்று பாப்தாதா நாலாபுறமும் உள்ள தனது பரமாத்மா அன்பிற்கு பாத்திரமான சுயமரியாதை யெனும் சீட்டில் அமர்ந்துள்ள குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார். அனைத்து குழந்தை களுமே சீட்டில் தான் அமர்ந்துள்ளார் கள். ஆனால் சிலர் (ஏகாக்கிரதா) ஒரு முக மனோ நிலையில் அமர்ந்துள்ளனர். சிலரோ எண்ணத்தால் தடுமாற்றம் அடைகின்றனர். பாப்தாதா நிகழ்காலத்தில் சமயத்திற்கேற்ப ஒவ்வொரு குழந்தையையும் ஏகாக்கிரதா மனோநிலையில் சுயமரியாதையின் சொரூபத்தில் பார்க்க விரும்புகின்றார். குழந்தைகள் அனைவரும் கூட ஏகாக்கிரதா நிலையிலேயே நிலைபெறவே விரும்புகின்றனர். தனது விதவிதமான சுயமரியதை தெரிந்த போதும், சிந்தித்த போதும் ஏகாக்கிரதா நிலையை தவற விடுகின்றனர். சதா ஏக்ரஸ் நிலை என்பது குறைவாகவே உள்ளது. அனுபவம் ஆகிறது. அந்நிலையில் நிலைபெற விரும்பியபோதும் அவ்வப்போது மட்டுமே ஏற்படுவது ஏன்? காரணம் கவனம் எப்போதும் இருப்பது குறைவாகின்றது. சுயமரியாதை யின் பட்டியல் போட்டால் எவ்வளவு பெரியதாகும். அனைத்திலும் முதன்மையான சுயமரியாதை, எந்த தந்தையின் நினைவில் சதா இருக்கின்றேனோ, அவரது நேரடி குழந்தையாகியுள்ளேன், நம்பர் ஒன் குழந்தை. பாப்தாதா குழந்தைகளான உங்களை எங்கிருந்தெல்லாம் கோடியில் ஒருவராக கண்டெடுத்துள்ளார். 5 கண்டங்களிலிருந்தும் தந்தையே தன் குழந்தைகளை கண்டெடுத்துள்ளார். எவ்வளவு பெரிய சுயமரியாதை இது. சிருஷ்டியை படைக்கும் படைப்பாளரின் முதல் படைப்பு நீங்கள். இந்த சுயமரியாதையை தெரிந்துள்ளீர்களா? பாப்தாதா தன்னுடனேயே குழந்தைகளான உங்களையும் உலக ஆத்மாக்களுக்கு மூதாதையராக வைத்துள்ளார். உலகிற்கே மூதாதையர் பூஜைக்குரியவர் நீங்கள். பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் ஆதார மூர்த்தி, உதாரண மூர்த்தி களாக வைத்துள்ளார். பெருமிதம் உள்ளதா? அவ்வப்போது சில சமயம் குறைந்து விடுகின்றது. சிந்தியுங்கள். அனைத்திலும் மேன்மையான முழு கல்பத்திலும் மேன்மையான ஆசனம் யாருக்குமே பிராப்தமாவதில்லை. அவர் நமக்கு பரமாத்மா ஆசனம், ஒளிக்கிரீடம், நினைவுத் திலகம் யாவும் கொடுத்துள்ளார். நான் யார்... என்பது நினைவு வருகின்றதா? எனது சுயமரியாதை என்ற போதை ஏறுகின்றதா? முழு கல்பத்திலும் சத்யுகத்தின் மிக உயர்ந்த ஆசனமேயாயினும் பரமாத்மாவின் உள்ளமெனும் ஆசனம் குழந்தைகளான உங்களுக்கு மட்டுமே பிராப்தமாகின்றது.

பாப்தாதா எப்போதும் இறுதி நம்பரில் உள்ள குழந்தையையும் பரிஸ்தாவிலிருந்து தேவதையாகும் குழந்தை யாகவே பார்க்கின்றார். இப்போதே பிராமணன் பிரமணரிலிருந்து பரிஸ்தா, பரிஸ்தா விலிருந்து தேவதை ஆகிய தீர வேண்டும். தனது சுயமரியாதை என்னவென்று தெரியுமா? ஏனெனில் பாப்தாதாவிற்குத் தெரியும். சுய மரியாதையை மற்கும் காரணத்தாலேயே தான் தேக உணர்வு, தேக அபிமானம் வருகின்றது. இன்னல் ஏற்படுகின்றது. பாப்தாதா பார்க்கின்றார், தேகபிமான மெனும் தேக உணர்வு ஏற்படும் பொழுது எவ்வளவு தொந்தரவு ஏற்படுகின்றது. அனை வரும் அனுபவி தானே! சுயமரியாதையெனும் பெருமிதத்தில் இருங்கள். பெருமிதமாக இருப்பது மற்றும் இன்னல் ஏற்படுவதன் அனுபவம் உள்ளது தானே. பாப்தாதா பார்க்கின்றார் – பெரும் பாலான குழந்தைகள் நன்கு ஞானம் நிறைந்தவர்களாகவே உள்ளனர். ஆனால் சக்தியில் நிரம்பிய வராக, பவர்ஃபுல் ஆக வில்லை. இதில் சதவிகிதமே உள்ளது.

பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் தனது அனைத்து பொக்கிஷங்களுக்கும் எஜமானராக மாற்றியுள்ளார். அனைவருக்கும் அனைத்தும் கொடுத்துள்ளார். அதிகமாகவோ குறைவாகவே தர வில்லை. ஏனெனில் எல்லையில்லா பொக்கிஷம் உள்ளது. எண்ணிலடங்கா கஜானா எனவே ஒவ்வொரு குழந்தையையும் பாலக் சோ மாலிக் ஆக மாற்றியுள்ளார். தந்தையும் எல்லை யில்லாதவர், பொக்கிஷமும் எல்லையில்லாதது. எனவே தன்னிடமும் எல்லையில்லாத பொக்கிஷம் உள்ளதா? என தன்னைத்தானே சோதனை செய்யுங்கள். எப்போதுமே உள்ளதா, அவ்வப்போது சிறிது களவு போகிறதா? தொலைந்து விடுகிறதா? பாபா ஏன் கவனம் வைக்கச் சொல்கின்றார்? தொந்தரவு அடையக்கூடாது, சுயமரியாதை எனும் ஆசனத்தில் அமருங்கள், தடுமாற்றம் கூடாது. 63 பிறவிகளாக தடுமாற்றத்தின் அனுபவம் செய்தாயிற்று. இப்போது மேலும் அதனையே செய்ய வேண்டுமா? களைத்துப் போகவில்லையே? இப்போது சுய மரியாதையில் இருப்பதெனில் தனது மிக உயர்ந்த கௌரவத்தில் இருப்பது ஏன்? எவ்வளவு காலம் கடந்து விட்டது. 70வது ஆண்டை (2006-ல் 70வது ஆண்டு) கொண்டாடுகிறீர்கள் அல்லவா? ஆக தன்னை அறிவ தென்பது சுயமரியாதையை அறிவது, சுயமரியாதையில் நிலைத்திருப்பதாகும். சமயத்திற்கேற்ப இப்போது சதா எனும் சொல்லை நடைமுறை வாழ்வில் கொண்டு வரவேண்டும். சதா எனும் சொல்லை மட்டும் கோடிட்டு குறிப்பதல்ல. ஆனால் நடைமுறை வாழ்வில் கோடிட்டு குறிக்க வேண்டும். செய்ய வேண்டும், இருப்போம், செய்து கொண்டு தான் இருக்கிறோம், செய்து விடுவோம். இவையாவும் எல்லைக்கப்பாற்பட்ட பாலகன் மற்றும் எஜமானின் வார்த்தையல்ல. இப்போது ஒவ்வொருவர் உள்ளத்திலிருந்தும் அடைய வேண்டியதை அடைந்து விட்டேன் என்று பாடல் இடையறாது ஒலிக்க வேண்டும். அடைந்து கொண்டிருக்கின்றோம், இது எல்லையில்லா பொக்கிசங்களின் எல்லையில்லாத தந்தையின் குழந்தைகள் சொல்ல முடியாது. அடைந்து விட்டீர்கள், பாப்தாதாவை அடைந்து விட்டீர்கள், என்னுடைய பாபா என சொல்லி விட்டீர்கள், ஏற்றுக் கொண்டீர்கள், தெரிந்துக் கொண்டீர்கள். இடையறராது ஒலியை அடைந்து விட்டீர்கள். ஏனெனில் பாப்தாதா தெரிந்துள்ளார் குழந்தைகள் சுயமரியாதையில் அவ்வப்போது இருப்பதால் நேரத்தின் மகத்துவம் நினைவில் குறைவாகவே உள்ளது. ஒன்று தனது சுயமரியாதை, மற்றொன்று நேரத்தின் மகிமை. நீங்கள் சாதாரணமானவர்கள் அல்ல, மூதாதையர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கு பின்னால் உள்ள உலக ஆத்மாக்களுக்கே ஆதாரமானவர்கள். சிந்தியுங்கள் நீங்களே பதட்டமடைந்தால் உலக ஆத்மாக்களின் நிலை என்னவாகும். மகாரதி என அழைக்கப்டுபவர்களே உலக ஆத்மாக்களுக்கு ஆதாரமானவர்கள் என்று நினைக்காதீர்கள். புதிய வர்களும், இன்று புதியவர்கள் அனேகம் பேர் வந்துள்ளீர்கள். (முதன் முறையாக உள்ளவர்கள் கை உயர்த்து கின்றனர்). புதியவர்கள், மனதார எனது பாபா என .ஏற்றுக் கொண்டீர்களா? புதியதாக வந்தவர்கள் ஏற்றுக் கொண்டீர்களா? தெரியவில்லை. ஏற்றுக் கொண்டோம், மேரா பாபா என்பவர்கள் கை உயர்த்துகின்றனர். நன்கு உயர்த்துங்கள். புதிய புதியவர்களும் கை உயர்த்து கின்றனர், பழையவர்கள் உறுதியானவர்களே! யாரெல்லாம் உளமாற மேரா பாபா என்கின்றீர்களோ பாபாவும் என்னுடைய குழந்தாய் (மேரா பச்சே) என ஏற்றுக் கொண்டார் எனில் அவர்கள் யாவரும் பொறுப்பானவர்களே. ஏன்? நான் பிரம்மா குமார், பிரம்மா குமாரி என்று எப்போது சொன்னீர்களோ, பிரம்மா குமார், குமாரியா அல்லது சிவகுமார், சிவகுமாரியா அல்லது இரண்டுமா? பிறகென்ன கட்டுப்பட்டவர்கள், பொறுப்பெனும் கிரீடம் அணியப்பட்டது, அணிந்து கொண்டீர்களா? பாண்டவர்கள் சொல்லுங்கள். பொறுப்பெனும் கிரீடம் அணிந்து கொண்டீர்களா? பாரமாக இல்லையே! இலேசாக உள்ளதல்லவா. ஒளியாலானது., ஒளி எவ்வளவு லேசானது. ஆக நேரத்தின் மகிமையையும் கவனத்தில் வையுங்கள். நேரம் கேட்டுக்கொண்டு வராது. அனேக குழந்தைகள் இப்போது சொல் கின்றனர். யோசிக்கின்றனர். சிறிதளவாவது மேலோட்டமாக தெரிய வேண்டும். 20 வருடமா, 10 வருடமா என சிறிதேனும் தெரிய வேண்டும். ஆனால் பாப்த்ôதா கேட்கிறார், இறுதி வினாசத்தை விடுங்கள், உங்களது உடலின் இறுதி வினாசம் தெரியுமா? யாருக்காவது நான் இந்த தேதியில் உடலை விடுவேன் என்று தெரியுமா? இப்போதெல்லாம் பிராமணர்கள் விடைபெறும் நாளுக்கான போக் (மர்ஜீவா போக்) அதிகம் வைக்கின்றனர். எதுவும் நம்பிக்கையில்லை, நிலையில்லை எனவே நேரத்தின் மதிப்பை உணருங்கள். இது ஆயுள் குறைவான சின்னஞ்சிறிய யுகம். ஆனால் மிக உயர்ந்த பிராப்திகளைத் தரும் யுகம். ஏனெனில் மிகப் பெரிய தந்தை இந்த சிறிய யுகத்தில் தான் வருகின்றார். பெரிய யுகங்களில் வருவதில்லை. இந்த சிறிய யுகம் முழு கல்பத்திற்குமான பலனைப் பெற விதை விதைக்கும் நேரமாகும். நீங்கள் உலக இராஜ்யம் பெற வேண்டுமாயினும், பூஜைக்குரியவராக வேண்டுமாயினும் முழு கல்பத்திற்குமான விதை விதைக்கும் நேரம் இதுவே. மேலும் இது இரட்டை பிராப்திகளைத் தரும் நேரம். பக்திக்கான பலனும், கைமேல் பலனும் இப்போதே கிடைக்கின்றது. செய்யும் செயலுக்கான பலன் உடனடியாக கிடைக்கின்றது. எதிர் காலமும் அமைகின்றது. முழு கல்பத்திலும் இது போன்ற யுகம் உள்ளதா பாருங்கள்? ஏனெனில் இப்போது மட்டுமே தந்தை ஒவ்வொரு குழந்தையின் உள்ளங்கையில் மிகப்பெரிய பரிசு தருகின்றார். உங்களது பரிசு நினைவுள்ளதா? சொர்க்கம் எனும் ராஜ்ய பாக்கியம். சொர்க்கமெனும் புத்துலக பரிசை ஒவ்வொரு குழந்தையின் உள்ளங்கையில் கொடுத்துள்ளார். இவ்வளவு பெரிய பரிசினை யாரும் கொடுப்பதில்லை. ஒருபோதும் தரமுடியாது. இப்போதே கிடைக்கின்றது. இப்போது தான் நீங்கள் மாஸ்டர் சர்வ சக்திவான் ஆகின்றீர்கள், வேறு எந்த யுகத்திலும் மாஸ்டர் சர்வ சக்திவான் என்ற பதவி கிடைக்காது. எனவே தனது சுயமரியாதையிலும் (ஏகாக்ரதா) ஒருமுக மாகுங்கள். நேரத்தின் மகத்துவத்தையும் உணருங்கள், தன்னையும், நேரத்தையும், தன்னைப் பற்றிய சுயமரியாதை, நேரத்தின் மகத்துவம். கவனக்குறைவு கூடாது. 70 ஆண்டுகள் நடந்தேறியது. இப்போதும் அலட்சியமாக இருந்துவிட்டால் அனேக பிராப்திகளை குறைத்துக் கொள்வீர்கள். ஏனெனில் போகப்போக மிக நன்றாக நடக்கின்றது, சென்றடைந்து விடுவோம், பார்த்துக் கொள்வோம், பின் தங்கிவிடமாட்டோம், ஆகிவிடும் என்ற அலட்சியம் வந்து விடும். கவனக் குறைவு மற்றும் அலட்சியம். எப்போது என்பது கவனக்குறைவு, இப்போது என்பதே உடன் தானம் மகா புண்ணியம். இப்போது இன்று முதல் முறை அல்லவா. எனவே பாப்தாதா கவனம் செய்விக் கின்றார். இந்த சீசனில் சுயமரியாதையிலிருந்து இறங்க வேண்டாம். நேரத்தின் மகிமையை மறக்க வேண்டாம், விழிப்புடன், புத்திசாலியாக, எச்சரிக்கையாக இருங்கள். அன்பானவர்கள் தானே! அன்பானவரிடம் சிறிதளவும் குற்றம் குறை பலவீனம் பார்க்க இயலாது. பாப்தாதாவிற்கு கடைசி குழந்தைகளிடமும் அன்பு இருக்கின்றது என்பதை கேட்டீர்கள் தானே! குழந்தை அல்லவா! இப்போது நடைபெறும் சீசனில் இந்தியர்களானாலும், இரட்டை அயல் நாட்டவரும் குறைந்தவரல்லவே! பாப்தாதா பார்க்கின்றார் இரட்டை அயல் நாட்டவர் இல்லாத குழு என்று ஒருபோதும் இல்லை. இது அவர்களின் விந்தை. இரட்டை அயல் நாட்டவர் இப்போது கை உயர்த்துங்கள், எத்தனை பேர் பாருங்கள். அவர்களுக்கே உரிய தனிக்குழு முடிந்து விட்டது. இருப்பினும் எத்தனை பேர் பாருங்கள். வாழ்த்துக்கள், வந்தீர்கள், நல்லது. மிக மிக வாழ்த்துக்கள்.

இப்போது என்ன செய்ய வேண்டும் கேட்டீர்களா? இந்த சீசனில் என்னென்ன செய்ய வேண்டும், வீட்டுப்பாடம் கொடுத்தாயிற்று, தன்னை உணருங்கள், தன்னை மட்டுமே உணருங்கள், பிறரை யல்ல. தூய தங்கம் ஆகுங்கள். ஏனெனில், மேரா பாபா என்று சொன்னவர்கள தன்னுடனேயே வரவேண்டும் என்று பாப்தாதா விரும்புகின்றார். ஊர்வலக் கூட்டத்தில் ஒருவராக அல்ல. பாப்தாதாவுடன் ஸ்ரீமத் எனும் கையை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டும், பிறகு பிரம்மா பாபாவுடன் முதலில் இராஜ்யத்தில் வரவேண்டும். புதிய வீட்டில் முதலில் வருவது ஆனந்தம். ஒரு மாதம் கழித்து வந்தாலும் பழையது தானே. புதிய வீடு, புதிய உலகம், புது வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் பிரம்மா பாபாவுடன் இராஜ்யத்தில் வரவேண்டும். பிரம்மா பாபாவுடன் எனக்கு அதிக அன்பு உள்ளது என்று அனைவரும் சொல்வீர்கள் தானே!. அன்பின் அடையாளம் என்ன? உடனிருப்பது, உடன் செல்வது, உடன் வருவது. இதுவே அன்பின் அடையாளம். பிடித்துள்ளதா? உடன் இருப்பது, உடன் செல்வது, உடன் வருவது பிடித்துள்ளதா? பிடித்துள்ளது என்றால் பிடித்த விசயத்தை யாரேனும் விடுவார்களா என்ன? தந்தைக்கு ஒவ்வொரு குழந்தையும் உடன் வர வேண்டும் பின்னால் அல்ல. இதுவே விருப்பம். ஒருவேளை சிலர் நின்று விட்டால் தர்மராஜாவின் தண்டனைக்காக நிற்க வேண்டும். கையோடு கை இணையாது. பின்னால் பின்னால் வருவது எதில் மகிழ்ச்சி? உடன் வருவதில் தானே! உறுதி மொழி உறுதியாக உள்ளதா? உடன் செல்வோம் என்பதா? பின்னால் பின்னால் வருவோம் என்பதா? பாருங்கள் கைகளை ஒன்றாகவே உயர்த்து கின்றீர்கள். கைகளைப் பார்த்து பாப்தாதாவும் மகிழ்கின்றார். ஆனால் ஸ்ரீமத் எனும் கையை உயர்த்துங்கள். சிவபாபாவிற்கு கையில்லை, ஆத்மாவிற்கும் கை இருக்காது. உங்களுக்கும் இந்த ஸ்தூல கை இருக்காது, ஸ்ரீமத் எனும் கையை பிடித்துக் கொண்டே செல்ல வேண்டும். செல்வோமா, தலையசையுங்கள், நன்றாக கை அசைக்கின்றீர்கள். பாப்தாதா விரும்புவது இது தான் ஒரு குழந்தைக் கூட பின்னால் இருந்துவிடக்கூடாது. அனைவருமே கூடவே வரவேண்டும். எவரெடியாக இருக்க வேண்டும். நல்லது.

இப்போது பாப்தாதா நாலாபுறமும் உள்ள குழந்தைகளின் பதிவேட்டை பார்த்துக் கொண்டிருக் கின்றார். வாக்கு கொடுத்தீர்கள், காப்பாற்றினீர்களா? பலன் அடைந்தீர்களா? வாக்கு கொடுப்பது மட்டும் போதாது பலனை அடைய வேண்டும் நல்லது. இப்போது அனைவரும் திட சங்கல்பம் செய்வோமா? திட சங்கல்பம் எனும் மனோ நிலையில் நிலை பெறுங்கள். செய்தே திருவேன், சென்றே ஆக வேண்டும். கூடவே செல்வேன் இப்போது இந்த திடசங்கல்பம் தனக்காக செய்யுங் கள். இந்த நிலையில் நிலைபெறுங்கள் செய்வோம், பார்ப்போம் என்பதில்லை. செய்தே தீருவேன். நல்லது.

அனைத்து தரப்பிலுள்ள இரட்டை சேவாதாரி குழந்தைகளுக்கு, நாலாபுறமும் சதா ஒருமுக மனோநிலையெனும் சீட்டில் அமர்ந்துள்ள பாப்தாதாவின் நெற்றி மணிகளுக்கு நாலாபுறமும் உள்ள நேரத்தின் மதிப்பை உணர்ந்து தீவிர முயற்சி செய்யும் குழந்தைகளுக்கு, நாலாபுறமும் சதா ஊக்கம், உற்சாகமெனும் சிறகுகளால் தானும் பறந்து, பிறரையும் பறக்கச் செய்யும் டபுள் லைட் பரிஸ்தா குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

தாதிமார்களுடன்: அனைவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து சென்று கொண்டிருக் கின்றீர்கள்., பாப்தாதாவிற்கு மகிழ்ச்சியே. அனைவரும் அவரவது சிறப்பம்சங்களின் விரல் கொடுக் கின்றீர்கள். (தாதியுடன்) அனைவருக்கும் ஆதி ரத்தினத்தை பார்த்து மகிழ்ச்சி ஏற்படுகின்றது. ஆதி முதல் சேவையில் தனது எலும்புகளை கொடுத்துள்ளீர்கள். எலும்பு தேய சேவை செய்துள்ளீர்கள். மிக நல்லது. எது நடந்தாலும் ஒரு விசயத்தைப் பாருங்கள், படுக்கையில் இருந்தாலும், எங்கிருந் தாலும் பாபாவை மறக்கக்கூடாது. பாபா உள்ளத்தில் உறைந்துள்ளார். அப்படித்தானே! எவ்வளவு நன்றாக புன்னகை செய்கிறார் பாருங்கள். வயது தான் அதிகம். தர்மராஜபுரியில் டாடா செய்து விட்டு செல்ல வேண்டும், தண்டனை கூடாது. தர்மராஜாவே தலை வணங்க வேண்டும். வரவேற்பு செய்ய வேண்டும். டாடா (பை பை) செய்ய வேண்டும். அதற்காகவே இங்கு சிலகாலம் பாபா நினைவில் கணக்குகளைக் முடித்துக் கொண்டிருக்கின்றார். மாறாக கடினம் ஏதுமில்லை, வியாதி இருக்கலாம், ஆனால் துக்கத்தின் அடையாளமே இல்லை. (பரதாதியுடன்) இவர் மிகவும் புன்னகை செய்கிறார். அனைவருக்கும் திருஷ்டி வழங்குங்கள். நல்லது.

ஆசீர்வாதம்:
வெளிமுகமான புத்திசாலி தன்மையிலிருந்து விடுபட்டு தந்தைக்குப் பிரியமான உண்மையான வியாபாரி ஆகுக.

பாப்தாதாவிற்கு உலகீய வெளிமுகமான புத்திசாலி தனம் பிடிக்காது. கள்ளமில்லாதவரின் கடவுள் என சொல்லப்படும். அதி புத்திசாலி தந்தைக்கு கள்ளமில்லா குழந்தைகளே பிரியமானவர்கள். பரமாத்மாவின் பெயர் பதிவேட்டில் கள்ளமில்லா குழந்தைகளே முக்கிய பிரமுகர்கள். யாருக்கு உலகின் மீது கண்கள் செல்வதில்லையோ அவர்களே தந்தையுடன் வியாபாரம் செய்து பரமாத்மாவின் கண்ணுக்குள் மணியாகின்றனர். கள்ளமில்லா குழந்தைகளே மேரா பாபா என்று உளமாற சொல்கின்றனர். இந்த ஒரு நொடியில் ஒரு சொல்லால் அளவற்ற பொக்கிசங்களின் வியாபாரம் செய்யக்கூடியவர்களே உண்மையான வியாபாரி ஆகின்றனர்.

சுலோகன்:
அனைவரது அன்பையும் பெற வேண்டுமெனில் எப்போதும் வாய் மூலமாக இனிமையாக பேசுங்கள்.


அவ்யக்த சமிக்ஞை : சகஜயோகி ஆகவேண்டும் என்றால், பரமாத்ம அன்பின் அனுபவி ஆகுங்கள்

யாரொருவர் சதா தந்தையின் அன்பு நினைவில் மூழ்கி லவ்லீன் ஆகி இருப்பாரோ அத்தகைய ஆத்மாக்களின் கண்களில் மற்றும் வாயிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு சொல்லிலும் தந்தை கலந்திருப்பதால் சக்தி சொரூபத்திற்கு பதிலாக சர்வ சக்திவானே கண்ணில் தென்படுவார். ஆரம்ப ஸ்தாபனை காலத்தில் பிரம்மாவின் வடிவத்தில் ஸ்ரீ கிருஷ்ணரே சதா தென்பட்டார். அவ்வாறே குழந்தைகளான உங்கள் மூலமாக சர்வ சக்திவான் தென்படுவார்.

குறிப்பு: இன்று மாதத்தின் மூன்றாவது ஞாயிறு. இராஜயோகிகளான அனைத்து தபஸ்வி சகோதர சகோதரிகளும் மாலை 6.30 முதல் 7.30 வரை விசேஷ யோக நேரத்தில் தனது பூர்வஜ் (மூதாதையர்) எனும் சுயமரியாதையில் நிலைத்திருந்து கல்ப மரத்தின் வேர் பகுதியில் அமர்ந்து முழு மரமும் சக்திசாலி ஆகும் வகையில் யோக தனாம் செய்து தனது வம்சாவளிக்கு தெய்வீக பாலனை செய்யுங்கள்.