17-08-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! தந்தை மற்றும்
தாதாவின் கதையும் கூட ஆச்சரியமானது. தந்தை எப்போது தாதாவுக்குள்
பிரவேசமாகிறாரோ, அப்போது பிரம்மாகுமார்-குமாரிகளாகிய நீங்கள்
ஆஸ்திக்கு அதிகாரி ஆகிறீர்கள்.
கேள்வி:
நிச்சயிக்கப்பட்ட டிராமா பற்றி
அறிந்திருந்த போதிலும் குழந்தைகள் நீங்கள் எந்த ஒரு இலட்சியத்தை
அவசியம் மேற்கொள்ள வேண்டும்?
பதில்:
முயற்சி செய்து வேகமாக பாய்ந்தோடி
செல்வதற்கான இலட்சியம். அதாவது விநாசத் திற்கு முன் பாபாவின்
நினைவில் இருந்து, கர்மாதீத் ஆவதற்கான இலட்சியம் அவசியம்
மேற்கொள்ள வேண்டும். கர்மாதீத் என்றால் அயர்ன் ஏஜ்டில் இருந்து
கோல்டன் ஏஜ்டாக (இராவண புரியில் இருந்து தேவதைகள்
இராஜ்யத்தவராக) ஆவது. புருஷார்த்தம் செய்வதற்கு இன்னும் கொஞ்சம்
சமயமே உள்ளது. அதனால் விநாசத்திற்கு முன் தனது நிலைப்பாட்டை
ஆடாத, அசையாததாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
ஓம் சாந்தி.
ஓம் சாந்தி. இந்த இரண்டையும் யார் சொல்கிறார்கள்? ஒருவர் பாபா,
இன்னொருவர் தாதா. கதை சொல்கின்றனர் இல்லையா - ஒரு ராஜா
இருந்தார், ஒரு ராணி இருந்தார் என்று? இப்போது இது புதிய விஷயம்.
ஒரு பாபா, ஒரு தாதா என்று நீங்கள் சொல்வீர்கள். 5000 ஆண்டு
களுக்கு முன்பும் கூட சிவபாபாவும் இருந்தார், இன்னொருவர்
பிரம்மா தாதாவும் இருந்தார். இப்போது சிவனுடைய குழந்தைகளோ
அனைவரும் தான். அனைத்து ஆத்மாக்களும் ஒரு தந்தையின் குழந்தைகள்.
அவரோ இருக்கவே செய்கிறார். பிரம்மாவின் குழந்தைகள் பிராமணர்
களும் இருந்தனர். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள்
பிரம்மாகுமார்-குமாரிகள் இருந்தனர். அவர்களுக்கு யார் படிப்பு
சொல்லித் தந்தார்? சிவபாபா. பிரஜாபிதா பிரம்மாவுக்கு இந்த
பிரம்மா குமார்-குமாரிகளாகிய ஏராளமான குழந்தைகள் உள்ளனர்
இல்லையா? பிரம்மாகுமார்-குமாரிகள் நிச்சயமாக நாம் சிவபாபாவின்
குழந்தைகளாகவும் இருக்கிறோம், பேரக் குழந்தைகளாகவும்
இருக்கிறோம் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.. குழந்தைகளாகவோ
இருக்கத்தான் செய் கிறோம், இப்போது பேரக்குழந்தைகள்
ஆகியிருக்கிறோம். பிரம்மா மூலம் தாத்தாவிடமிருந்து ஆஸ்தி பெற
வேண்டும். இப்போது உங்களுக்குத் தாத்தாவிடம் இருந்து ஆஸ்தி
கிடைக்கின்றது. அவரை சிவபாபா எனச் சொல்கின்றனர். ஆனால் பிரம்மா
குமார்-குமாரிகளாக இருக்கும் காரணத்தால் அவரை நாம் தாத்தா எனச்
சொல்கிறோம். ஆஸ்தி தாத்தாவினுடையது. பிரம்மா தாதாவினுடையது
அல்ல. வைகுண்டவாசி ஆவதற்கான ஆஸ்தி அந்த தந்தையிடமிருந்து
கிடைக்கின்றது. அரைக்கல்பத்திற்கு ஆஸ்தி பெறுகிறீர்கள். பிறகு
உங்களுக்கு இராவணனிட மிருந்து சாபம் கிடைக்கிறது-. கீழே
இறங்கிக் கொண்டே வருகிறீர்கள். கிரகச்சாரி அமர்ந்து விட்டதாக
ஆகிறது. இப்போது குழந்தைகள் நீங்கள் புரிந்து கொண்டீர்கள் -
நமது கிரகச்சாரி ராகுவின் தசா முடிந்து விட்டது. ராகுவின் தசா
அனைத்திலும் தீயது. உயர்ந்ததிலும் உயர்ந்த பிரகஸ்பதியின் தசா (குருபார்வை),
பிறகு ராகுவின் தசா (பார்வை) அமர்ந்து விட்டதால் 5 விகாரங்களின்
காரணத்தால் நாம் கருப்பாகி விட்டோம். இப்போது பாபா சொல்கிறார்,
தானம் கொடுத்தால் கிரகணம் விட்டுப் போகும் என்று. இது
உங்களுடைய விஷயம் தான். அவர்கள் பிறகு சூரிய-சந்திரனின் கிரகணம்
எனப் புரிந்து கொண்டுள்ளனர். கிரகணம் பிடித்தால் தானம்
வேண்டுகின்றனர். இங்கே பாபா உங்களுக்குச் சொல்கின்றார், 5
விகாரங்களை தானம் கொடுத்தால் கிரகச்சாரம் இறங்கி விடும். இந்த
விகாரங்களினால் தான் நீங்கள் பாவாத்மா ஆகியிருக்கிறீர்கள்.
முக்கியமானது தேக அபிமானம். முதலில் அது போல் சதோபிரதானமாக
இருந்தீர்கள். பிறகு சதோ ரஜோ தமோ ஆகியிருக்கிறீர்கள். 84
பிறவிகள் எடுத்திருக்கிறீர்கள். இதுவோ பக்கா நிச்சயம், அதாவது
தேவதைகள் தாம் 84 பிறவிகளை எடுக்கின்றனர். முதலில் அவர்கள் தான்
தந்தையோடு சந்திக்க வேண்டும். பாடப்படவும்
செய்கிறது-ஆத்மாக்களும் பரமாத்மாவும் நீண்ட காலமாகப் பிரிந்து
இருந்து விட்டனர்........ பாபா சொல்கிறார், முதல்-முதலில்
உங்களை சத்யுகத்திற்கு அனுப்பியிருந்தேன். பிறகு இப்போது
நீங்கள் தான் வந்து சந்தித்திருக்கிறீர்கள். முன்போ வெறுமனே
பாடிக் கொண்டிருந்தீர்கள். அதனுடைய யதார்த்த அர்த்தத்தை இப்போது
பாபா அமர்ந்து புரிய வைக்கிறார். அனைத்து வேத-சாஸ்திரங்கள்,
ஜபம், தபம், சுலோகங்கள் முதலிய அனைத்தினுடைய சாரத்தை அமர்ந்து
புரிய வைக்கிறார். சக்கரத்தை புரிந்து கொள்வது முற்றிலும்
சுலபமானது. இப்போது கலியுகம் மற்றும் சத்யுகத் தின் சங்கமம்.
யுத்தமும் முன்னால் நின்று கொண்டுள்ளது. இதுவும் உங்களுக்கு
நிச்சயம் உள்ளது - சத்யுகத்தின் ஸ்தாபனை நடைபெறுகின்றது.
கலியுகத் தில் எவ்வளவு பேர் உள்ளனரோ, அவர்கள் அனைவரின்
சரீரங்களும் அழிந்து போகும். மற்றப்படி ஆத்மாக்கள் தூய்மையாகி
கணக்கு-வழக்கை முடித்து விட்டுச் செல்வார்கள். இது அனைவருடைய
கயாமத் (விசாரணை மற்றும் தீர்ப்பு) சமய மாகும். ஆத்மாக்கள்
சரீரத்தை விட்டுச் சென்று விடுவார்கள். இது உங்களுடைய
புத்தியில் இப்போது உள்ளது. எது வரை நாம் கர்மாதீத் நிலையை அடை
கிறோமோ, அது வரை சங்கமயுகத்தில் இருக்கிறோம். ஒரு பக்கம்
கோடிக்கணக்கான மனிதர் கள், மற்றொரு பக்கம் நீங்கள் கொஞ்சம் பேர்.
உங்களிலும் கூட எத்தனைப் பேர் நிச்சயபுத்தி உள்ளவர்களாக ஆகிக்
கொண்டே செல்கின்றனர்? நிச்சய புத்தி உள்ளவர்கள் வெற்றி அடைவார்
கள், பிறகு போய் விஷ்ணுவின் கழுத்து மாலை ஆவார்கள். ஒன்று
ருத்திராட்ச மாலை, மற்றது ருண்ட மாலை. அந்த ருண்ட மாலையில்
சின்னச் சின்ன உருவம் உள்ளது. இது அடையாள மாகும்.
ஆத்மாக்களாகிய நாம் தான் வந்து மீண்டும் பாபாவின் கழுத்து
மாலையின் மணிகளாக ஆவோம். பிறகு இங்கே நம்பர்வார் வருவோம். மாலை
8 மணிகளால் ஆனதும் உள்ளது, 108 மணிகளால் ஆனதும் உள்ளது, 16108
மணிகளால் ஆனதும் உள்ளது. இப்போது 16 ஆயிரமா அல்லது 5-10 ஆயிரமா
என்ற கணக்கு எதுவும் வெளிப்படுத்தப்படுவதில்லை. இந்த மாலைகள்
பாடப் படுகின்றன. பாபா சொல்கிறார், இதையெல்லாம் நீங்கள் ஏன்
சிந்தனை செய் கிறீர்கள்? எவ்வளவு ராஜாக்கள் கல்பத்துக்கு முன்
சத்யுக-திரேதாயுகத்தில் ஆகியிருந்தார்களோ, அவ்வளவு தான்
ஆவார்கள். 100 பேர் ஆவார்களா, அல்லது 2-3 நூறு ஆவார்களா என்று
கேட்கக் கூடாது.
பாபா சொல்கிறார் - நீங்கள் எவ்வளவு அருகில் வந்து கொண்டே
இருப்பீர்களோ, நேரத்திற் கேற்றவாறு இவை அனைத்தையும் புரிந்து
கொள்வீர்கள். இன்று நாம் இங்கே இருக்கிறோம். நாளை விநாசம் ஆகும்.
பிறகு சத்யுகத்தில் கொஞ்சம் தேவி-தேவதைகள் இருப்பார்கள். பிறகு
எண்ணிக்கை அதிகமாகும். சத்யுகத்தின் அறிகுறியும்
காணப்படுகின்றது. மற்றப்படி இலட்சக் கணக்கில் போய் இருப்பார்கள்.
பிறகு இலட்சம் பேர்களோ அல்லது 9-10 லட்சம் இருக்கலாம். மிகச்
சரியாகச் சொல்ல முடியாது. ஆம், நீங்கள் எப்போது சரியாக
சம்பூர்ணம் ஆவதற்குத் தகுதி உள்ளவர்களாக ஆகிறீர்களோ, அப்போது
உங்களுக்கு இன்னும் அதிகமாக சாட்சாத் காரங்கள் ஆகி விடும்.
இப்போதோ இன்னும் நிறைய புரிந்துக் கொள்ள சமயம் உள்ளது. அதிக
சாட்சாத்காரம் செய்து கொண்டே இருப்பீர்கள். யுத்தத்திற்கான
ஏற்பாடுகளும் அதிகமாக நடை பெற்றுக் கொண்டே இருக்கின்றன. எல்லாப்
பொருட்களும் விலை அதிகமாகிக் கொண்டே போகும். வெளிநாடுகளிலும்
வரிகள் முதலியவற்றை அதிகம் போட்டுக் கொண்டே இருப்பார் கள். மிக
அதிகமாக விலைவாசிகள் ஏறி, பிறகு ஒரேயடியாக மலிவாகி விடும்.
சத்யுகத்தில் எந்த ஒரு பொருளுக்கும் விலை இருக்காது.
சுரங்கங்கள் அனைத்தும் நிரம்பி விடும். புது உலகத்தில் மேன்மை
/ செழிப்பு அதிகம் இருக்கும். லட்சுமி-நாராயணரிடம் அதிக
செல்வங்கள் இருந்தன இல்லையா? ஸ்ரீநாத் கோவிலில் மூர்த்திகளுக்கு
முன்னிலையிலும் எவ்வளவு ஆடம்பரமாக போக் வைக்கின்றனர்! அங்கே
அதிகமான உணவுப் பொருள்கள் தயார் செய் கின்றனர், சாப்பிட்டுக்
கொண்டே இருக்கின்றனர். நாங்கள் தேவதைகளுக்கு போக் படைக் கிறோம்
எனச் சொல்வார்கள். தேவதைகளுக்கு போக் படைக்கவில்லை என்றால்
அவர்கள் கோபமடைவார்கள் என்றும் சொல்வார்கள். இப்போது இதில்
கோபம் கொள்வதற்கான விஷயமோ கிடையாது. நீங்கள் யார் மீதும் கோபம்
கொள்வது கிடையாது. டிராமாவின் அனுசாரம் இந்த விநாசம்
நடைபெற்றாக வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.
கலியுகத் திலிருந்து மாறி சத்யுகம் வரும். இந்த டிராமாவைப்
புரிந்து கொண்டிருக்கிறீர்கள் - அதாவது டிராமாவின் அனுசாரம்
இப்போது புதிய சக்கரம் தொடங்க வேண்டும். நீங்களும் கூட
டிராமாவின் வசமாகி இருக்கிறீர்கள். டிராமா அனுசாரம் பாபாவும்
வந்து விட்டார். டிராமாவில் ஒரு நிமிடம் கூட மேலே-கீழே
இருக்காது. எப்படி பாபா வந்தார், நீங்கள் பார்த்தீர்கள், கல்பத்
திற்குப் பிறகும் கூட அப்படியே நடைபெறும். சாஸ்திரங்களிலோ
கல்பத்தின் ஆயுள் மிக நீண்ட தாக எழுதி விட்டனர். இப்போது
குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது, நிச்சயமாக விநாசம்
முன்னால் நின்று கொண்டுள்ளது. இப்போது நீங்கள் வேகமாக
முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அறிவீர்கள்,
பாபாவை நினைவு செய்து நாம் கர்மாதீத் நிலையை அவசியம் அடைய
வேண்டும். அதாவது அயர்ன் ஏஜிலிருந்து (க-யுக நரகத்தி-ருந்து)
கோல்டன் ஏஜ் ஆக வேண்டும். இப்போது புருஷார்த்தம் செய்யவில்லை
என்றால் பதவி கீழானதாக ஆகி விடும். ஹே ஆத்மாக்களே, இப்போது
நீங்கள் தூய்மையற்றவராகி விட்டீர்கள். இதையும் அறிவீர்கள்,
அநேக விதமானவர்கள் வருவார்கள். வேறு தர்மத்தில் மாறிப்
போனவர்களும் வெளியேறி இங்கே வந்து கொண்டே இருப்பார்கள். வந்து
தங்களின் புருஷார்த்தத்தைச் செய்து கொண்டே இருப்பார்கள் -
தந்தையிடம் ஆஸ்தி பெறுவதற்காக. பிராமண தர்மத்தில் வந்து பிறகு
தேவதா தர்மத்தில் வருவார்கள். பிராமண தர்மத்தில் வர வில்லை
என்றால் பிறகு தேவதா தர்மத்தில் எப்படி வருவார்கள்? பிராமணர்கள்
நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போவார்கள். விநாசம் முன்னால்
வந்து விட்டது என்பதைப் பார்ப்பார்கள், இதையோ சரியாகவே
சொல்கிறார்கள். பிறகு பிராமணர்கள் அதிகமாகிக் கொண்டே
செல்வார்கள். பிராமணர்களின் மரம் வளர்ச்சி அடைந்து முழுமை
பெற்று விடும். பிறகு திரும்பிச் செல்வீர்கள். தேவதைகளின் மரம்
பெரியதாக ஆகும்.
இப்போது நீங்கள் சங்கமயுகத்தில் இராஜயோகம் கற்றுக்
கொண்டிருக்கிறீர்கள். இந்த சங்கமயுகம் கல்யாண்காரி யுகம் எனச்
சொல்லப் படுகின்றது. சங்கமயுகத்திற்குத் தான் பாடல் உள்ளது -
கங்கை மற்றும் கடலின் சந்திப்பைக் காட்டுகின்றனர். அவை
அனைத்தும் பக்தி மார்க்கத்தினுடையவை. இவர்கள் ஞானக் கடல்
மற்றும் ஞானக்கடலில் இருந்து வெளிப் பட்டுள்ள ஞான கங்கைகள்.
ஞானக்கடலில் இருந்து பதீத பாவன் என்ற சொல் வருகிறது. பதீத பாவனி
கங்கை என்று அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். பிறகு கங்கையில்
குளித்தே வந்துள்ளனர். இந்த உலகமோ சத்யுகத்தில் தொடங்கி நடந்து
வந்துள்ளது. தற்சமயமோ நதிகளும் கூட எங்கெங்கோ (நில பரப்பை)
மூழ்கடித்து விடுகின்றது. இயற்கையும் கூட தமோபிரதானம், கடலும்
தமோபிரதானம் ஆகி விட்டுள்ளது. கடல் கொஞ்சம் கொந்தளித்தால்
போதும், அனைத்தையும் அழித்து விடும். சத்யுகத்தில் நாம் கொஞ்சம்
பேர் மட்டுமே பாரதத்தில் இருப்போம் - யமுனை நதிக்கரையில்.
டெல்லி தேவதைகள் வசிப்பிடமாக இருந்தது. மீண்டும் ஆகப் போகிறது.
சத்யுகத்தில் கொஞ்சம் ஜீவாத்மாக்கள் இருப்பார்கள். பிறகு
கொஞ்சம் - கொஞ்சமாக வந்து கொண்டிருப்பார்கள். இப்போது
கலியுகத்தின் கடைசி. எவ்வளவு ஏராளமான மனிதர்கள் ஆகி விட்டனர்!
எல்லையற்ற நாடகம். இதை நல்லபடியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
சிலர் தங்களை நடிகர் எனப் புரிந்து கொண்டிருக்கவும்
செய்கின்றனர். ஆனால் கல்பம் 5000 ஆண்டுகளினுடையது. இது
யாருக்குமே தெரியாது. எங்கே 84 பிறவிகள், எங்கே 84 லட்சம்!
இப்போது நீங்கள் ஒளிப் பிரகாசத்தில் இருக்கிறீர்கள். உங்களுக்கு
பாபாவிடம் இருந்து ஆஸ்தி கிடைக்கின்றது. பாபா சொல்கிறார் -
மன்மனாபவ. தந்தையை நினைவு செய்ய வேண்டும். சிவபகவான் வாக்கு.
கிருஷ்ணர் ஞானக்கடல் அல்ல. பகவானின் மகிமைக்கும் தேவதைகளின்
மகிமைக்கும் இடையில் மிகுந்த வேறுபாடு உள்ளது. பாபா புதிய
படைப்பினைப் படைக்கிறார். அந்தப் படைப்பாகிய தேவதைகளின் மகிமை
- சர்வகுண சம்பன்ன...... என்பதாகும். இப்போது நீங்கள் அது போல்
ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். பாபா வின் மகிமைக்கும் அவர்களின்
மகிமைக்கும் இடையில் இரவு-பகலுக்குள்ள வேறுபாடு உள்ளது. இது
இராஜயோகம் அல்லவா? பாடவும் படுகிறது - பகவான் இராஜயோகம்
கற்பிக்கிறார். அவர் நிராகார், ஆகவே நிச்சயமாக நிராகாரில் (அசரீரியில்)
இருந்து சாகாரில் (சரீரத்தில்) வர வேண்டியுள்ளது. எவ்வளவு மகிமை
அவருக்கு, அவர் வந்தே ஆக வேண்டி யுள்ளது, அவருடைய பிறவி
தெய்வீகமானது, அலௌகிகமானது. ஆனால் அவரது திவ்ய ஜென்மம்
பாடப்படவில்லை. இதுவும் குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்
படுகிறது - ஒருவர் லௌகிகத் தந்தை, மற்றவர் பரலௌகிகத் தந்தை.
அவரைத் தான் பகவான் எனச் சொல்லி நினைவு செய்கின்றனர். மேலும்
மூன்றாமவர் அலௌகிகத் தந்தை. இவர் பிறகு அதிசயமான தந்தை. அந்தத்
தந்தை தத்தெடுக் கிறார் என்றால் இடையில் இந்த அலௌகிகத் தந்தை
வந்து விடுகிறார். பிரஜாபிதா பிரம்மா வுக்கு எவ்வளவு ஏராளமான
குழந்தைகள்! சிவபாபா வந்து பிரம்மா மூலம் உங்களைத் தம்முடைய
வர்களாக ஆக்குகிறார். லௌகிக் தந்தைக்கோ 8-10 குழந்தைகள்
இருக்கலாம். நல்லது, சிவபாபா பரலௌகிகத் தந்தையாகவும்
இருக்கிறார். அவருக்கோ அநேகக் குழந்தைகள். அனைத்து ஆத்மாக்களும்
சொல்கின்றனர் - நாம் அனைவரும் சகோதரர்கள். இப்போது
சங்கமயுகத்தில் பிறகு அலௌகிகத் தந்தை கிடைக்கிறார். இந்த ஞானம்
உங்களுக்கு அங்கே (சத்யுகத்தில்) இருக்காது. எப்போது தந்தை
வந்து புது சிருஷ்டியைப் படைக்கிறாரோ, அப்போது தான் பிரஜாபிதா
பிரம்மா தந்தை கிடைக்கிறார். ஆக, இது அலௌகிக ஜென்மம் ஆகிறது
இல்லையா? இதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. இவர் லௌகிக்,
அவர் பரலௌகிக் மற்றும் இவர் சங்கமயுக அலௌகிகத் தந்தை. லௌகிகத்
தந்தையரோ சத்யுகத்தில் தொடங்கி இருந்தே வந்துள்ளனர். பரலௌகிகத்
தந்தையை அங்கே யாரும் நினைவு செய்வதில்லை. அங்கே இருப்பது ஒரே
தந்தை. ஹே பகவானே, ஹே பரமாத்மா எனச் சொல்லி நினைவு செய்வ தில்லை.
பிறகு துவாபர யுகத்தில் பக்தி மார்க்கம் ஆரம்பமாகும் போது
இரண்டு தந்தையர் உள்ளனர். சங்கமயுகத்தில் மூன்று தந்தையர்.
பிரஜாபிதா பிரம்மாவும் இப்போது கிடைக்கிறார். இப்போது நீங்கள்
அவருடையவர்களாக ஆகியிருக்கிறீர்கள். நீங்கள் அறிவீர்கள், இவர்
அலௌகிகத் தந்தை. இப்போது நீங்கள் இந்த விஷயங்களை நன்றாக அறிந்து
கொண்டீர்கள். மேலும் நினைவு செய்கிறீர்கள். தன்னை ஆத்மா என
உணர்ந்து தந்தையை நினைவு செய்யுங் கள். சத்யுகத்தில் நினைவு
செய்வதற்கான அவசியமே இருக்காது. துக்கத்தில் பரலௌகிகத் தந்தையை
அனைவரும் நினைவு செய்கின்றனர். இதுவோ புரிந்துக் கொள்வதற்கு
முற்றிலும் சுலபமான விஷயம். சத்யுக-திரேதாவில் ஒரு தந்தை
இருக்கிறார். துவாபரயுகத்தில் இரண்டு தந்தையர் உள்ளனர்.
இச்சமயம் நீங்கள் அலௌகிகத் தந்தையின் குழந்தைகளாக ஆகியிருக்
கிறீர்கள். அவர் மூலம் நீங்கள் ஆஸ்தி பெறுகிறீர்கள். குழந்தைகள்
நீங்கள் தான் பிராமணர் ஆகிறீர்கள், பிறகு தேவதை ஆகிறீர்கள்.
விநாசமும் நீங்கள் தான் பார்க்கப் போகிறீர்கள். அதை இந்தக்
கண்களால் பார்ப்பீர்கள், வெடிகுண்டுகளைப் போடுவார்கள்.
மனிதர்களோ இறந்து விடுவார்கள் இல்லையா? ஜப்பானிலும் வெடிகுண்டு
போட்டார்கள். எப்படி மனிதர்கள் இறந்தார் கள் என்பதைப்
பார்த்தோம் இல்லையா? இப்போது இங்கே சண்டைகள் நடை பெற்றுக்
கொண்டே உள்ளன. அவர்களே சொல்கின்றனர், நாங்கள் சலிப்படைந்து
விட்டோம் என்று. 10-10 ஆண்டுகள் வரை கூட சண்டை நடைபெற்றுக்
கொண்டே இருக்கிறது. வெடி குண்டுகளாலோ ஒரு விநாடியிலேயே
அனைத்தும் அழிந்து போகும். தீப்பொறி எழுமானால் நகரமே அழிந்து
போகும். இவையோ வெடிகுண்டுகள். நெருப்பும் பற்றிக் கொள்ளப்
போகிறது.
குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள், பாபா வந்திருப்பதே ஸ்தாபனை
மற்றும் விநாசம் செய்விப்பதற்காக. ஆகவே நிச்சயமாக இவை அனைத்தும்
நடைபெறும். புருஷார்த்தம் செய் வதற்கு இது தான் சமயம். மாயா
அடிக்கடி உங்கள் புத்தியோகத்தைத் துண்டித்து விடுகின்றது.
இன்னும் நீங்கள் எதுவரை அசையாத, உறுதி யானவர்களாக
ஆகியிருக்கிறீர்கள்? மாயாவின் புயல்கள் அதிகம் வருவதாகச்
சொல்கின்றனர். சிலரோ நாள் முழுவதிலும் அரை மணி நேரம் கூட நினைவு
செய்வதில்லை. பாபா சொல்கிறார் - நீங்கள் கர்மயோகிகள். 8 மணி
நேரமோ இந்த சேவை செய்வீர்கள். 8 மணி நேரம் நினைவு செய்ய
முடிகின்ற அளவு புருஷார்த்தம் செய்ய வேண்டும். நினைவு செய்து
கொண்டே இருப்பதால் விகர்மங்கள் விநாசமாகிக் கொண்டே போகும். இது
தான் யோக அக்னி எனச் சொல்லப் படுகின்றது. இது தான் செய்ய
வேண்டிய முயற்சியாகும். இல்லற விவகாரங்களில் இருந்து கொண்டே
நினைவு மட்டும் செய்ய வேண்டும். இதையும் பாபா சொல்கிறார் - யார்
இல்லறத்தை விட்டு விட்டார்களோ, குழந்தை ஆகியிருக்கிறார்களோ,
அவர்கள் கூட இவ்வளவு நினைவு செய்வதில்லை. வீட்டில் வசிப்பவர்கள்
இன்னும் அதிகமாக நினைவு செய்கின்றனர். அர்ஜுனன் மற்றும் காட்டு
வாசி பற்றிய உதாரணமும் சொல்கின்றனர் இல்லையா? பாபாவை நினைவு
செய்வது மற்றும் சக்கரத்தைப் புரிந்து கொள்வதில் முயற்சி தேவைப்
படுகின்றது. மகாபாரத யுத்தமும் நிச்சயமாக நடைபெறும்.
சத்யுகத்தில் நடைபெறாது. ஆக, குழந்தைகளாகிய நீங்கள் பார்வை
யற்றவர்களுக்கு ஊன்றுகோலாகவும் ஆக வேண்டும். அனைவருக்கும் வழி
சொல்ல வேண்டும் - தந்தையை நினைவு செய்யுங்கள், சக்கரத்தை நினைவு
செய்யுங்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) குறைந்தது 8 மணி நேரமாவது நினைவில் இருப்பதற்கான
புருஷார்த்தம் செய்ய வேண்டும்.தனது நிலையை ஆடாத, அசையாததாக
வைத்திருப்பதற்காக நினைவின் அப்பியாசத்தை அதிகரிக்க வேண்டும்.
கவனக்குறைவாக இருந்துவிடக் கூடாது.
2) இந்த டிராமா முற்றிலும் மிகச்சரியாக உருவாக்கப் பட்டுள்ளது.
அதனால் யார் மீதும் கோபப்படக் கூடாது. நிச்சயபுத்தி உள்ளவராக
ஆக வேண்டும்.
வரதானம்:
விலக்குவது, வளைந்து கொடுப்பது மற்றும் சேர்வது இந்த மூன்று
வார்த்தைகளின் நினைவின் மூலமாக சதா வெற்றியாளர் ஆகுக!
முழு படிப்பின் சாரம் இந்த மூன்று வார்த்தைகளில் அடங்கியுள்ளது
1. கர்ம பந்தனங்களில் விலகி இருப்பது 2. தனது சுபாவத்தில்
வளைந்து கொடுப்பது 3. ஒரு தந்தையிடம் அனைத்து சம்மந்தங்களையும்
இணைப்பது. இந்த மூனறு வார்த்தைகள் சம்பூர்ண வெற்றியாளராக
ஆக்கிவிடும். இதற்காக சதா இம்மாதிரியான நினைவில் இருங்கள்,
அதாவது நான கண்கள் மூலமாக என்னென்ன பார்க்கின்றேனோ அவைகள்
அனைத்தும் விநாசம் ஆகக் கூடியவை, அவைகளை பார்த்துக்
கொண்டிருந்தாலும், தங்களது புதிய தொடர்பு புதிய சிருஷ்டியைப்
பார்த்துக் கொண்டே இருந்தால் ஒருபொழுதும் தோல்வி ஏற்படாது
சுலோகன்:
யோகியின் அடையாளம் சதா தூய்மை மற்றும் தெளிவு ஆகும்.
அவ்யக்த இஷாரா : தூய்மையற்ற விதையைக் கூட முடித்துவிட்டு
சம்பூர்ண தூய்மை (பவித்ரம்) ஆகுங்கள்.
ஒருவேளை பிராமண வாழ்க்கையில் சங்கல்பத்தில் கூட தூய்மையற்ற
மரியாதையற்ற தன்மை வருகிறதென்றால் சிம்மாசனத்தில் அமர்வதற்குப்
பதிலாக தாழ்ந்த நிலைக்குச் சென்று விடுவீர்கள். விகர்மங்கள்
செய்யவில்லை, ஆனால் தேவையில்லாத கர்மங்கள் செய்து விட்டால்,
பச்சா தாபத்திற்குப் பதிலாக உணர்ச்சிவசப்பட்ட நிலை ஏற்படுகிறது
அதாவது இது தவறு, இவ்வாறு நடந்திருக்கக் கூடாது, என முள்போல
மனதில் உருத்திக் கொண்டே இருக்கும். அதனால் வேண்டாத
கர்மங்களிலிருந்து முக்தி அடையுங்கள்