17-09-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! நினைவினால்
சதோபிரதானம் ஆவதன் கூடவே படிப்பினால் வருமானத்தை சேமிக்க
வேண்டும். படிக்கும் நேரத்தில் புத்தி இங்கும் அங்கும் அலையக்
கூடாது.
கேள்வி:
டபுள் அகிம்சையாளர் மற்றும்
மறைமுகமான போர் வீரர்களாகிய உங்களின் எந்த வெற்றி
நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஏன்?
பதில்:
குழந்தைகளாகிய நீங்கள் மாயையை
வெற்றி அடைவதற்கான முயற்சி செய்துக் கொண்டி ருக்கிறீர்கள்.
நாங்கள் இராவணனிடமிருந்து எங்களின் இராஜ்யத்தை அடைந்தே தீருவோம்......
என்பது உங்களின் லட்சியம். இதுவும் நாடகத்தில் யுக்தி
படைக்கப்பட்டுள்ளது. உங்களின் வெற்றி
நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் உங்களுடன் சாட்சாத்
பரம்பிதா பரமாத்மா இருக்கிறார். நீங்கள் யோக பலத்தால் வெற்றி
அடைகிறீர்கள். மன்மனாபவ என்ற மகா மந்திரத்தினால் உங்களுக்கு
வெற்றி கிடைக்கிறது. நீங்கள் அரைக் கல்பத்திற்கு இராஜ்யம்
செய்வீர்கள்.
பாடல்:
முகத்தைப் பார்த்துக் கொள் மனிதா.....
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகள் எதிரில் அமரும் போது நம்முடைய
ஆசிரியர் நிச்சயமாக இந்த உலகீய ஆசிரியர் கிடையாது. நம்மை
படிக்க வைப்பவர் ஞானக்கடல் தந்தை என புரிந்துக் கொள்கிறீர்கள்.
அவர் நமக்கு தந்தையாக இருக்கிறார் என்பதில் உறுதியான நிச்சயம்
இருக்கிறது. படிக்கும் போது படிப்பில் கவனம் இருக்கிறது.
மாணவர்கள் தங்களுடைய பள்ளியில் அமாந்திருக்கும் போது ஆசிரியரின்
நினைவு வரும். தந்தையின் நினைவு வராது. ஏனென்றால் பள்ளிக்
கூடத்தில் அமர்ந்திருக்கிறார்கள். பாபா ஆசிரியராகவும்
இருக்கிறார் என உங்களுக்குத் தெரியும். பெயரைப் பிடித்துக் (கவனத்தில்)
கொள்ளக் கூடாது. நாம் ஆத்மா தந்தை யிடம் கேட்டுக்
கொண்டிருக்கிறோம் என்பது கவனத்தில் இருக்க வேண்டும். இவ்வாறு
ஒரு போதும் நடப்பதில்லை. சத்யுகத்திலும் இல்லை, கலியுகத்திலும்
இல்லை. ஒரேயொரு முறை சங்கமத்தில் தான் நடக்கிறது. நீங்கள்
உங்களை ஆத்மா என உணருங்கள். நம்முடைய தந்தை இச்சமயம் ஆசிரியராக
இருக்கிறார். ஏனென்றால் படிக்க வைக்கிறார். இருவரின் வேலையும்
செய்ய வேண்டியிருக்கிறது. ஆத்மா சிவ தந்தையிடம் படிக்கிறது.
இதுவே யோகா மற்றும் கல்வி யாகி விடுகிறது. ஆத்மா கற்கிறது.
பரமாத்மா கற்க வைக்கின்றார். இதில் நீங்கள் நேரில் இருக்கும்
போது இன்னும் அதிகம் நன்மை நடக்கிறது. நிறைய குழந்தைகள் நன்கு
நினைவில் இருக்கிறார் கள். கர்மாதீத் நிலையை அடைந்தார்கள்
என்றால் தூய்மையின் சக்தி கிடைக்கிறது. சிவ பாபா நம்மை கற்க
வைக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். இது உங்களுடைய
யோகமும் ஆகும். வருமானமும் ஆகும். ஆத்மாவைத் தான் சதோபிரதானம்
ஆக்க வேண்டும். நீங்கள் சதோதபிரதான மாகவும் மாறிக்
கொண்டிருக்கிறீர்கள். செல்வமும் அடைந்துக் கொண்டிருக்கிறீர்கள்.
தன்னை ஆத்மா என்று புரிந்துக் கொள்ள வேண்டும். புத்தி ஓடக்
கூடாது. இங்கே அமரும் போது புத்தியில் சிவபாபா படிக்க
வைப்பதற்காக ஆசிரியரின் ரூபத்தில் வந்திருக்கிறார் என்பது
இருக்க வேண்டும். அவரே ஞானம் நிறைந்தவர். நம்மை கற்க வைத்துக்
கொண்டிருக்கிறார். தந்தையை நினைக்க வேண்டும் நாமே சுய தரிசன
சக்கரதாரி லைட் ஹவுஸாகக் கூட இருக்கிறோம். ஒரு கண்ணில்
சாந்திதாமம், ஒரு கண்ணில் ஜீவன் முக்தி தாமம் இருக்கிறது. இந்த
கண்களைப் பற்றிய விஷயம் கிடையாது. ஆத்மாவிற்கு மூன்றாவது கண்
என்று பெயர். இப்போது ஆத்மாக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறது.
சரீரத்தை விடும் போது ஆத்மாவில் உள்ள சம்ஸ்காரம் மட்டும்
இருக்கும். இப்போது நீங்கள் தந்தையிடம் யோகத்தை (புத்தியின்
தொடர்பை) இணைக்கிறீர்கள். சத்யுகத்தில் இருந்து நீங்கள்
பிரிந்திருந்தீர்கள். அதாவது பாபாவுடன் தொடர்பு இல்லை. இப்போது
நீங்கள் தந்தைக்குச் சமமாக யோகியாகிறீர்கள். யோகத்தைக்
கற்பிப்பவர் ஈஸ்வர். ஆகவே அவருக்கு யோகேஷ்வர் என கூறப்படுகிறது.
நீங்களும் யோகேஷ்வரரின் குழந்தைகள். அவர் யோகா செய்வ தில்லை.
ஆனால் யோகத்தைக் கற்பிக்கக் கூடிய ஈஸ்வர். தான் கற்றுக்
கொள்வதில்லை, நமக்கு கற்பிக்கின்றார். கிருஷ்ணருடைய ஆத்மா கூட
கடைசி பிறவியில் யோகத்தைக் கற்று மீண்டும் கிருஷ்ணன் ஆகிறது.
ஆகவே கிருஷ்ணரையும் கூட யோகேஷ்வர் என கூறுகிறார்கள். ஏனென்றால்
அவருடைய ஆத்மா இப்போது கற்றுக் கொண்டிருக்கிறது.
யோகஷ்வரரிடமிருந்து யோகத்தைக் கற்று கிருஷ்ணருடையப் பதவியை
பெறுகிறது. பிறகு இவருடைய பெயரை தந்தை பிரம்மா என
வைத்திருக்கிறார். முதலில் லௌகீக பெயர் இருந்தது. பிறகு
மறுபிறவி எடுத்திருக் கிறார். ஆத்மா தான் பாபா வினுடையவராக
வேண்டும். பாபாவினுடையவராகி விட்டீர்கள் என்றால் இறந்து
விட்டீர்கள் அல்லவா? நீங்கள் கூட பாபா மூலமாக யோகத்தைக்
கற்கிறீர்கள். இந்த சம்ஸ்காரங்களுடன் தான் நீங்கள்
சாந்திதாமத்திற்குச் செல்வீர்கள். பிறகு புதிய பாகம்,
ஆஸ்தியினுடையது வெளிப்படுகிறது. அங்கே இந்த விஷயங்கள் எதுவும்
இருக்காது. இதை இப்போது பாபா புரிய வைக்கிறார். இப்போது நடிப்பு
முடியப் போகிறது. எப்படி (சிவ) பாபாவிற்கு நான் போக வேண்டும்
என்ற சங்கல்பம் வந்தது, பாபா நான் வருகிறேன் என்கிறார். மேலும்
நான் பேசுவது ஆரம்பம் ஆகிறது. அவ்வாறே மீண்டும் புதிய தலைமுறை
ஆரம்பம் ஆகும். அங்கே அமைதியில் இருக்கின்றனர். பிறகு
நாடகத்தின் படி அவருடைய பாகம் ஆரம்பம் ஆகிறது, வர வேண்டும்
என்ற எண்ணம் எழுகிறது. பிறகு இங்கே வந்து நடிப்பை
நடிக்கிறார்கள். உங்களுடைய ஆத்மா கூட கேட்கிறது. வரிசைக்
கிரமத்தில் முயற்சிக்கு ஏற்ப போன கல்பத்தைப் போன்று நடக்கிறது.
ஒவ்வொரு நாளும் வளர்ச்சி அடைந்துக் கொண்டே போகும். ஒரு நாள்
உங்களுக்கு பெரிய ராயலான ஹால் கிடைக்கும். இதில் பெரிய பெரிய
மனிதர் கள் வருவார்கள். அனைவரும் ஒன்றாக அமர்ந்து கேட்பார்கள்.
நாளுக்கு நாள் பணக்காரர் கூட ஏழை ஆவார்கள் வயிறு ஒட்டிக்
கொள்ளும். இது போன்ற ஆபத்துக்கள் வரும். அடை மழை பொழியும், மழை
பொழிந்தால் அனைத்து நிலங்களும் தண்ணீரில் மூழ்கி போகும். இயற்கை
சீற்றங்களும் நடக்கும். அழிய வேண்டும். இதற்கு இயற்கையின்
ஆபத்துகள் என்று பெயர். வினாசம் நிச்சயம் நடக்கும் என புத்தி
கூறுகிறது. அந்த பக்கம் அணுகுண்டுகளும் தயாராக இருக்கிறது.
பிறகு இங்கே இயற்கை சீற்றங் களும் இருக்கிறது. அதில் மிகவும்
தைரியம் வேண்டும். அங்கதனின் எடுத்துகாட்டு கூட இருக் கிறது
அல்லவா? அவரை யாரும் அசைக்க முடியவில்லை. நான் ஆத்மா.
சரீரத்தின் உணர்வு விலகிக் கொண்டே போக வேண்டும். இந்த நிலை
உறுதியாக வேண்டும் சத்யுகத்தில் தானாகவே நேரம் முடியும் போது
சாட்சாத் காரம் கிடைக்கிறது. இப்போது நாம் இந்த உடலை விட்டுச்
சென்று குழந்தையாக வேண்டும், ஒரு உடலை விட்டு இன்னொன்றில்
பிரவேசம் ஆகிறார்கள். அங்கே தண்டனை போன்ற எதுவும் இல்லை.
ஒவ்வொரு நாளும் நீங்கள் நெருங்கி வந்துக் கொண்டே இருக்கிறீர்கள்.
எனக்குள் என்ன பார்ட் நிரம்பி இருக்கிறதோ அதுவே வெளியே வந்துக்
கொண்டே இருக்கும் என பாபா கூறுகிறார். குழந்தைகளுக்குத்
தெரிவித்துக் கொண்டே இருப்பார். பிறகு பாபாவின் பாகம் முடியும்
போது உங்களுடையதும் முடிந்து போகும். பிறகு உங்களுடைய பாகம்
சத்யுத்தில் ஆரம்பம் ஆகும். இப்போது நீங்கள் உங்களுடைய
இராஜ்யத்தை அடைய வேண்டும். இந்த நாடகம் மிகவும் யுக்தியோடு
உருவாக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் மாயையை வெற்றி அடை கிறீர்கள்.
இதில் நேரம் ஆகிறது. அந்த மக்கள் நாங்கள் சொர்க்கத்தில்
அமர்ந்திருக்கிறோம். இதுவே சுகதாமம் ஆகிவிட்டது என ஒரு புறம்
நினைக்கிறார்கள். இன்னொரு புறம் பாட்டில் கூட பாரதத்தின்
நிலையைக் கூறுகிறார்கள். உங்களுக்குத் தெரியும். இது இன்னும்
தமோபிரதானம் ஆகிவிட்டது. நாடகத்தின் படி மிகவும் வேகமாக
தமோபிரதானம் ஆகின்றது. இப்போது நீங்கள் சதோபிரதானம் ஆகிக்
கொண்டிருக்கிறீர்கள். இப்போது நெருங்கிக் கொண்டே வந்துக் கொண்டி
ருக்கிறீர்கள். கடைசியில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். ஐயோ!
ஐயோவிற்குப் பிறகு வெற்றி முழக்கம் ஏற்படும். நெய்யாறு ஓடும்.
அங்கே நெய் போன்றவைகளை வாங்க வேண்டியதில்லை. அனைவரிடமும்
அவரவருக்கென நல்ல நல்ல பசுக்கள் இருக்கும். நீங்கள் எவ்வளவு
உயர்ந்தவர் ஆகிறீர்கள். இந்த உலகின் வரலாறு புவியில் திரும்ப
நடக்கிறது என உங்களுக்குத் தெரியும். தந்தை வந்து உலகத்தின்
வரலாறு புவியியலை ரிபீட் செய்கிறார் (கூறுகிறார்).. ஆகவே இந்த
உலகின் வரலாறு புவியியல் எப்படி ரிபீட் ஆகிறது வந்து புரிந்துக்
கொள்ளுங்கள் என கூட எழுதுங் கள். புத்திசாலியாக இருப்பவர்கள்
இப்போது கலியுகம் ஆக இருக்கிறது, நிச்சயம் பொற்காலம் திரும்ப
வரும் என கூறுவார்கள். ஒரு சிலர் சிருஷ்டி சக்கரம்
லட்சக்கணக்கான வருடங்கள், அது எப்படி ரிபீட் ஆகும் என்பார்கள்.
இங்கே சூரிய வம்சம் சந்திர வம்சத்தினரின் வரலாறு இல்லை. கடைசி
வரை இந்த சக்கரம் எப்படி ரிபீட் ஆகிறது. இவர்களின் இராஜ்யம்
பிறகு எப்படி நடக்கும் என்பது கூட தெரியாது. இராம இராஜ்யத்தைப்
பற்றியும் அறியவில்லை. இப்போது உங்களுடன் தந்தை இருக்கிறார்.
யாருடன் சாட்சாத் பரம்பிதா பரமாத்மா இருக்கின்றாரோ நிச்சயம்
அவர் களுக்கு வெற்றி கிடைக்கும். பாபா யாருக்கும் இம்சை
கொடுக்க மாட்டார். யாரையாவது அடித்தல் என்பது இம்சை அல்லவா?
அனைத்தையும் விட பெரிய இம்சை காம விகாரத்தில் ஈடுபடுதல் ஆகும்.
இப்போது நீங்கள் டபுள் அகிம்சையாளர் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள்.
அங்கே பரம் அகிம்சா பரமோ தேவி தேவதா தர்மத்தினராக இருப்பீர்கள்.
அங்கே சண்டையிட்டுக் கொள்வதும் இல்லை. விகாரத்தில்
ஈடுபடுவதில்லை. இப்போது உங்களுடையது யோக பலம் ஆகும். ஆனால்
இதைப் புரிந்து கொள்ளாத காரணத்தால் சாஸ்திரங்களில் அசுரர்கள்
மற்றும் தேவதைகள் போரிட்டனர் என எழுதி இருக்கின்றனர். அகிம்சையை
யாரும் அறியவில்லை. இதை நீங்கள் அறிகிறீர்கள். நீங்கள்
குப்தமான (மறைமுகமான) போர் வீரர்கள். தெரியாதவர், ஆனால் நன்கு
தெரிந்தவர். உங்களை யாராவது போர் வீரர்கள் என நினைப்பார்களா?
உங்களின் மூலமாக மன்மனா பவ என்ற செய்தி கிடைக்கும். இதுவே மகா
மந்திரம் ஆகும். மனிதர்கள் இந்த விஷயங்களைப் புரிந்துக்
கொள்ளவில்லை. சத்யுகம் திரேதாவில்இது நடப்பதில்லை.
மந்திரத்தினால் நீங்கள் இராஜ்யத்தைப் பெறுகிறீர்கள். பிறகு
அவசியம் இல்லை. நாம் எப்படி சக்கரத்தில் சுழன்று வந்தோம் என
நீங்கள் அறிகிறீர்கள். இப்போது மீண்டும் மகா மந்திரத்தை
அளிக்கிறார், பிறகு அரைக் கல்பத்தை இராஜ்யம் செய்வீர்கள்.
இப்போது நீங்கள் தெய்வீக குணம் தாரணை செய்து மற்றவர்களையும்
செய்விக்க வேண்டும். தங்களுடைய சார்ட்டில் எழுதுவதால் மிகவும்
ஆனந்தம் வரும் என பாபா தெரிவிக்கிறார். பதிவேட்டில் நன்று, மிக
நன்று, மிக மிக நன்று என இருக்கிறது அல்லவா? தாங்களே
உணர்வீர்கள். சிலர் நன்கு படிக்கிறார்கள். சிலருக்கு கவனம்
இல்லை என்றால் தோல்வி அடைகிறார்கள். இது எல்லைற்ற படிப்பாகும்.
அப்பா ஆசிரியராகவும் இருக்கிறார். குருவாகவும் இருக்கிறார்.
இணைந்து செல்கிறார்கள். இந்த ஒரே ஒரு தந்தை தான் இறந்து
வாழுங்கள் (மர்ஜீவா) என்கிறார். நீங்கள் தன்னை ஆத்மா என
புரிந்துக் கொண்டு தந்தையை நினையுங்கள். நான் உங்களுடைய தந்தை
என பாபா புரிய வைக்கிறார். பிரம்மா மூலமாக இராஜ்யம்
கொடுக்கிறேன். இவர் இடையில் தரகராக இருக்கிறார். இவரை நினைக்கக்
கூடாது இப்போது உங்களுடைய புத்தி அந்த கணவருக் கெல்லாம் கணவர்
உங்களுடைய சிவ மணவாளனுடன் இருக்கிறது. இவர் மூலமாக அவர் உங்களை
தன்னுடையவராக்குகிறார். தன்னை ஆத்மா என புரிந்துக் கொண்டு என்னை
நினையுங்கள் என்கிறார். ஆத்மாக் களாகிய நாம் பாகத்தை முடித்து
விட்டு இப்போது பாபாவிடம் வீட்டிற்குப் போக வேண்டும். இப்போது
முழு சிருஷ்டியும் தமோ பிரதானமாக இருக்கிறது. 5 தத்துவங்கள்
கூட தமோபிரதானமாக இருக்கிறது. அங்கே அனைத்தும் புதியதாக
இருக்கும். இங்கே பாருங்கள் வைரம் வைடூரியங்கள் எதுவும் இல்லை.
பிறகு சத்யுகத்தில் எங்கிருந்து வரும். சுரங்கங்கள் இப்போது
காலியாகிவிட்டது. அவை அனைத்தும் மீண்டும் இப்போது நிரம்பும்.
சுரங்கங்களைத் தோண்டி எடுத்து வருகிறார்கள். சிந்தியுங்கள்.
அனைத்தும் புதிய பொருட்களாக இருக்கும் அல்லவா? விளக்கு
போன்றவைகள் கூட இயற்கையாக இருக்கும். விஞ்ஞானத்தின் மூலமாக
இங்கே கற்றுக் கொண்டே இருக்கிறார்கள். அங்கே இதுவும் பயன்படும்.
ஹெலிகாப்டர் நிற்கும். பட்டனை அழுத்தியதும் பறக்கும். எந்த
துன்பமும் இல்லை. அங்கே அனைத்தும் பாதுகாப்பானதாக இருக்கும்.
ஒருபோதும் எந்த எந்திரமும் கெட்டுப் போகாது. வீட்டில் இருந்து
அமர்ந்ததும் ஒரு நொடியில் பள்ளிக் கூடத்திற்கு அல்லது சுற்றி
பார்க்கும் இடத்தையோ சென்றடைவார்கள். பிரஜைகளுக்கு அவர்களை விட
குறைவாக இருக்கும். உங்களுக்கு அங்கே அனைத்து சுகமும்
கிடைக்கும். அகால மரணம் கிடையாது. எனவே குழந்தைகளாகிய நீங்கள்
எவ்வளவு கவனம் வைக்க வேண்டும். மாயாவின் வேகமும் அதிகமாக
இருக்கிறது. இது மாயா வின் கடைசி பகட்டு ஆகும். போர்களில்
எவ்வளவு பேர் இறக்கிறார்கள் பாருங்கள், போர் முடிவ தில்லை.
இவ்வளவு பெரிய உலகம் எங்கே? ஒரேயொரு சொர்க்கம் எங்கே? அங்கே
கங்கை பதீத் பாவனி என்று கூறுவது கிடையாது. பக்தி மார்க்கத்தின்
எந்த விஷயமும் அங்கே கிடையாது. இங்கே கங்கையைப் பாருங்கள்.
நகரத்தின் அனைத்து குப்பையும் இருக்கிறது. மும்பையில் அனைத்து
குப்பைகளும் கடலில் கலக்கிறது.
பக்தியில் நீங்கள் பெரிய பெரிய கோயில்களைக் கட்டுகிறீர்கள்.
வைர வைடூரியங்களின் சுகம் இருக்கிறது அல்லவா? முக்கால் பங்கு
சுகம். மற்றபடி கால் பங்கு தான் துக்கம். பாதி பாதியாக
இருந்தால் பிறகு ஆனந்தம் இருக்காது. பக்தி மார்க்கத்தில் கூட
நீங்கள் மிகவும் சுகமாக இருக்கிறீர் கள். கடைசியில் கோவில்
போன்றவைகளில் கொள்ளை அடித்துவிட்டார்கள். சத்யுகத்தின் நீங்கள்
பெரிய பணக்காரராக இருந்தீர்கள் என்றால் குழந்தைகளாகிய நீங்கள்
எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். குறிக்கோள் எதிரிலேயே
இருக்கிறது. தாய் தந்தையினுடையது நிச்சயம். குஷியைப் போன்ற
சத்துணவு வேறு ஏதுமில்லை என்று பாடப்பட்டிருக்கிறது.
யோகத்தினால் ஆயுள் கூடுகிறது.
இப்போது ஆத்மாவிற்கு சுய தரிசனம் கிடைத்திருக்கிறது. அதாவது
நாம் 84 பிறவிகளில் வருகிறோம். இவ்வளவு நடிக்கின்றோம். அனைத்து
ஆத்மாக்களாகிய நடிகர்கள் கீழே வந்து விட்ட பிறகு பாபா
அனைவரையும் அழைத்துப் போவார். சிவனின் ஊர்வலம் என்கிறார்கள்
அல்லவா? வரிசைக்கிரமத்தில் முயற்சிக்கு ஏற்ப இது அனைத்தும்
உங்களுக்குத் தெரியும். எவ்வளவு நினைவில் இருப்பீர்களோ அவ்வளவு
குஷி இருக்கும். ஒவ்வொரு நாளும் உணர்ந்துக் கொண்டே இருப்பீர்கள்.
ஏனென்றால் கற்றுத் தருபவர் தந்தை அல்லவா? இதையும் கற்றுக்
கொடுத்துக் கொண்டே இருக்கிறார். இவரை (பிரம்மாவை) கேட்க
வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் தான் கேட்கிறீர்கள். இவரோ
காதால் கேட்டுக் கொண்டே இருக்கிறார். பாபா பதில் அளித்துக்
கொண்டே இருக்கிறார். மேலும் இவர் கேட்டுக் கொண்டே இருக்கிறார்.
இவருடைய செயல் எவ்வளவு அதிசய மாக இருக்கிறது. இவரும் நினைவில்
இருக்கிறார். பிறகு குழந்தைகளுக்கு வர்ணனை செய்து கூறுகின்றார்.
பாபா எனக்கு ஊட்டுகின்றார். நான் அவருக்கு என்னுடைய ரதத்தைக்
கொடுக்கிறேன். சவாரி செய்கிறார் என்றால் ஏன் உணவளிக்க மாட்டார்.
இவர் மனிதக் குதிரை ஆவார். சிவபாபாவின் ரதமாக இருக்கிறேன்.
இந்த நினைவிருக்கும் போது சிவபாபாவின் நினைவும் வருகிறது.
நினைவில் தான் நன்மை இருக்கிறது. பண்டாராவில் சமைக்கும் போது
நாம் சிவபாபாவின் குழந்தைகளுக்காகச் செய்கிறோம் என நினையுங்கள்.
தானும் சிவபாபாவின் குழந்தை என நினைப்பதால் நன்மை ஏற்படும்.
யார் நினைவில் இருந்து கர்மாதீத் நிலையை அடைகிறார்களோ, சேவை
செய்கிறார்களோ அவர்களுக்கு அனைவரையும் விட உயர்ந்த பதவி
கிடைக்கும். இந்த பாபாவும் நிறைய சேவை செய்கிறார் அல்லவா?
இவருடையது எல்லையற்ற சேவையாகும். நீங்கள் எல்லைக்குட்பட்ட சேவை
செய்கிறீர்கள். சேவையினால் தான் இவருக்கும் பதவி கிடைக்கிறது.
இவ்வாறு செய்யுங்கள் என்று சிவபாபா கூறுகின்றார். இவருக்கும்
ஆலோசனை வழங்குகிறார். குழந்தைகளுக்கு புயல் வருகிறது.
நினைவின்றி கர்மேந்திரியங்களை வசப்படுத்துவது கடினமாகும்.
நினைவினால் தான் படகு கரை சேரும். இதை சிவபாபா கூறுகின்றாரா?
அல்லது பிரம்மா பாபா கூறுகின்றாரா? என்பதை புரிந்துக் கொள்வது
கடினமாகும். இதற்கு மிகவும் கூர்மையான புத்தி வேண்டும். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. இச்சமயம் முழுமையாக இறந்து வாழ வேண்டும். படிப்பை நன்கு
படிக்க வேண்டும். தன்னுடைய சார்ட் அல்லது ரிஜிஸ்டர் வைக்க
வேண்டும். நினைவிலிருந்து கர்மாதீத் நிலையை அடைய வேண்டும்.
2. கடைசியில் அழிவின் காட்சிகளைப் பார்ப்பதற்கு தைரியசாலியாக
வேண்டும். நான் ஆத்மா, இந்த பயிற்சியினால் சரீர உணர்வு விலகிப்
போகும்.
வரதானம்:
தேக உணர்வினைத் தியாகம் செய்து கோபமற்றவராக ஆகக்கூடிய
பணிவுள்ளம் கொண்டவர் ஆகுக.
எந்தக் குழந்தைகள் தேக உணர்வைத் தியாகம் செய்கிறார்களோ,
அவர்களுக்கு ஒரு போதும் கோபம் வரவே முடியாது. ஏனென்றால் கோபம்
வருவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று - யாராவது பொய்யான
விஷயத்தைப் பேசும் போது மற்றும் இரண்டாவது - யாராவது நிந்தனை
செய்யும் போது. இந்த இரண்டு விஷயங்கள் தாம் கோபத்தைப்
பிறப்பிக்கின்றன. அத்தகைய பரிஸ்திதியில் பணிவுள்ளத்தின்
வரதானத்தின் மூலம் அபகாரிக்கும் கூட உபகாரம் செய்யுங்கள். வசவு
செய்பவர்களைத் தழுவிக் கொள்ளுங்கள். இகழ்பவர்களை உண்மையான
நண்பர் என ஏற்றுக் கொள்ளுங்கள். அப்போது அற்புதம் எனச்
சொல்வார்கள். எப்போது அத்தகைய மாற்றத்தைக் காண்பிக்கிறீர்களோ,
அப்போது உலகத்தின் முன்னால் புகழ் பெறுவீர்கள்.
சுலோகன்:
மகிழ்ச்சியின் அனுபவம் செய்வதற்கு மாயாவின் அடிமைத் தன்த்தை
விட்டு சுதந்திரம் ஆகுங்கள்.
அவ்யக்த சமிக்ஞை: இப்போது ஈடுபாடெனும் அக்னியை மூட்டி யோகத்தை
ஜூவாலா ரூபமாக்குங்கள்.
இப்போது ஜுவாலாமுகி ஆகி, அசுர சம்ஸ்காரம், அசுர சுபாவம்
அனைத்தையும் பஸ்மமாக்கி விடுங்கள். எப்படி தேவிகளின்
நினைவார்த்தமாகக் காட்டுகிறார்கள் - ஜுவாலையில் அசுரர்களை
சம்ஹாரம் செய்தார்கள். அசுரர் என்பது மனிதர் யாரும் கிடையாது.
ஆனால் அசுர சக்திகளை அழித்தனர். இது இப்போது உங்களது
ஜுவாலா-சொரூப ஸ்திதியின் நினைவார்த்தம் ஆகும். இப்போது அத்தகைய
யோகத்தின் ஜுவாலையைக் கொழுந்து விட்டு எரியச் செய்யுங்கள் -
அதில் இந்தக் கலியுக உலகம் எரிந்து பஸ்மம் ஆகிவிட வேண்டும்.