18-07-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! தன் மீது தானே
இரக்கம் கொள்ளுங்கள். பாபா தரும் ஸ்ரீமத் படி நடந்து சென்று
கொண்டே இருங்கள். பாபாவின் ஸ்ரீமத் - குழந்தைகளே, நேரத்தை
வீணாக்காதீர்கள். நேர்மறையான (ஆக்கப்பூர்வமான) காரியங்களைச்
செய்யுங்கள்.
கேள்வி:
யார் அதிர்ஷ்டசாலிக் குழந்தைகளோ,
அவர்களின் முக்கிய தாரணை என்னவாக இருக்கும்?
பதில்:
அதிர்ஷ்டசாலிக் குழந்தைகள்
அதிகாலையில் எழுந்து மிகுந்த அன்போடு பாபாவை நினைவு செய்வார்கள்.
பாபாவோடு இனிமையிலும் இனிமையான உரையாடல் செய்வார்கள். ஒரு
போதும் தன் மீதே கூட இரக்கம் இல்லாதவர்களாக ஆக மாட்டார்கள்.
அவர்கள் பாஸ் வித் ஆனர் ஆவதற்கான புருஷார்த்தம் செய்து தன்னை
ராஜபதவிக்கு தகுதியானவர்களாக ஆக்கிக் கொள்வார்கள்.
ஓம் சாந்தி.
குழந்தைகள் பாபாவுக்கு முன்பாக அமர்ந்துள்ளனர் என்றால் அவரே
தான் நம்முடைய எல்லையற்ற தந்தையாக உள்ளார் என்பதை அறிந்துள்ளனர்.
அவர் நமக்கு சுகம் தருவதற்காக ஸ்ரீமத் கொடுத்துக்
கொண்டிருக்கிறார். அதற்காக மகிமை பாடப்படுகின்றது - கருணை
உள்ளம் கொண்டவர், துன்பங்களில் இருந்து விடுவிப்பவர்..........
என்று அதிக மகிமை செய்கின்றனர். பாபா சொல்கிறார், வெறுமனே
மகிமையின் விஷயம் மட்டுமல்ல. தந்தைக்கோ குழந்தைகளுக்கு வழிமுறை
தரவேண்டிய கடமை உள்ளது. எல்லையற்ற தந்தையும் வழிமுறை தருகிறார்.
உயர்ந்தவரிலும் உயர்ந்த தந்தை என்றால் நிச்சயமாக அவருடைய
வழிமுறையும் கூட உயர்ந்த திலும் உயர்ந்ததாகவே இருக்கும்.
வழிமுறையைப் பெற்றுக் கொள்வது ஆத்மா. நல்ல அல்லது கெட்ட
காரியத்தை ஆத்மா தான் செய்கிறது. இச்சமயம் உலகத்திற்குக்
கிடைப்பது இராவணனின் வழிமுறை. குழந்தைகள் உங்களுக்குக்
கிடைக்கிறது இராமரின் வழிமுறை. இராவணனின் வழிமுறையால்
இரக்கமற்றவராகி தலைகீழான காரியம் செய்கின்றனர். பாபா அறிவுரை
தருகிறார், நேர்மையான நல்ல காரியம் செய்யுங்கள் என்று.
அனைத்திலும் நல்ல காரியம் தன் மீது தானே இரக்கம் கொள்ளுங்கள்.
நீங்கள் அறிவீர்கள், நாம் ஆத்மா சதோபிரதானமாக இருந்தோம்.
மிகவும் சுகமாக இருந்தோம். பிறகு இராவணனின் வழி கிடைத்ததால்
நீங்கள் தமோபிரதானமாக ஆகி விட்டிருக்கிறீர்கள். இப்போது பாபா
மீண்டும் வழிமுறை தருகிறார், ஒன்று பாபாவின் நினைவில் இருங்கள்.
இப்போது தன் மீது இரக்கம் வையுங்கள், இந்த வழிமுறை தருகிறார்.
பாபா கருணை காட்டுவதில்லை. பாபாவோ ஸ்ரீமத் தருகிறார்,
இப்படி-இப்படி செய்யுங் கள் என்று. தன் மீது தானே இரக்கம்
கொள்ளுங்கள். தன்னை ஆத்மா என உணர்ந்து, தன்னுடைய பதித-பாவனர் (தூய்மை
ஆக்கும்) தந்தையை நினைவு செய்யுங்கள். அப்போது நீங்கள் பாவனமாகி
விடுவீர்கள். பாபா அறிவுரை தருகிறார், நீங்கள் எப்படிப்
தூய்மையாவது என்று. பாபா தான் தூய்மையற்றவர் தூய்மையாக்குபவர்.
அவர் ஸ்ரீமத் தருகிறார். அவருடைய வழிமுறைப்படி நடக்க வில்லை
என்றால் தன் மீது இரக்கம் வைக்காதவராக ஆகிறீர்கள். பாபா ஸ்ரீமத்
தருகிறார், குழந்தை களே, நேரத்தை வீணடிக்காதீர்கள். இந்தப்
பாடத்தைப் பக்காவாக ஆக்கிக் கொள்ளுங்கள்- நாம் ஆத்மா என்று.
சரீர நிர்வாகத்திற்காக தொழில் முதலியவற்றைச் செய்யுங்கள்.
பிறகும் நேரம் ஒதுக்கி யுக்தியை உருவாக்குங்கள். காரியம் செய்து
கொண்டிருந்தாலும் ஆத்மாவின் புத்தி பாபாவிடம் இருக்க வேண்டும்.
எப்படி நாயகன்-நாயகி காரியங்களையும் செய்கின்றனர் இல்லையா?
இருவரும் ஒருவர் மற்றவரிடம் பிரியம் வைக்கின்றனர். இங்கே
அதுபோல் இல்லை. நீங்கள் பக்தி மார்க்கத்திலும் கூட நினைவு
செய்கிறீர்கள். அநேகர் கேட்கின்றனர், எப்படி நினைவு செய்வது
என்று ஆத்மாவின், பரமாத்மாவின் வடிவம் என்ன நினைவு செய்வதற்கு?
ஏனென்றால் பக்தி மார்க்கத்தில் பாடப்படுகின்றது - பரமாத்மா
பெயர்-வடிவத்திற்கு அப்பாற்பட்டவர் என்று. ஆனால் அப்படி இல்லை.
சொல்லவும் செய்கின்றனர், புருவ மத்தியில் ஆத்மா நட்சத்திரத்தைப்
போல் உள்ளது என்று. பிறகு ஏன் சொல்கின்றனர், ஆத்மா என்பது என்ன?
என்று அதைப் பார்க்க முடியாது. அதுவோ அறிந்து கொள்ளக் கூடிய
பொருள் தான். ஆத்மாவை அறிந்து உணர்ந்திட கொள்ளப் படுகின்றது.
பரமாத்மாயையும் அறிந்து உணர்ந்த கொள்ளப்படுகிறது. அது மிகவும்
சூட்சுமமான பொருளாகும். மின்மினிப் பூச்சியை விடவும் மிக
நுட்பமானது. சரீரத்திலிருந்து எப்படி வெளியேறி விடுகிறது என்பது
தெரிவதில்லை. ஆத்மா உள்ளது என சாட்க்ஷாத்காரம் ஆகின்றது.
ஆத்மாவின் காட்சி கிடைத்தது என்றால் என்ன? அதுவோ நட்சத்திரம்
போல் சூட்சுமமானது. தன்னை ஆத்மா என உணர்ந்து பாபாவை நினைவு
செய்யுங்கள். எப்படி ஆத்மாவோ, அதுபோல் பரமாத்மாவும் கூட ஸோல் (ஆத்மா)
தான். ஆனால் பரமாத்மாவுக்கு சுப்ரீம் ஸோல் (அதி மேன்மையான) எனச்
சொல்லப்படுகிறது. அவர் பிறப்பு-இறப்பில் வருவதில்லை. ஆத்மா
சுப்ரீம் எனச் சொல்லப்படுவது பிறப்பு-இறப்பு இல்லாமல்
இருப்பதால் தான். மற்றப்படி முக்திதாமத் திற்கோ அனைவரும்
தூய்மையாகித் தான் செல்ல வேண்டும். இதிலும் ஹீரோ-ஹீரோயின்
பார்ட் நம்பர்வார் உள்ளது. ஆத்மாக்கள் வரிசைக் கிரமமாகவோ
உள்ளனர் இல்லையா? நாடகத்திலும் சிலர் அதிக சம்பளம் வாங்குபவராக,
சிலர் குறைவாக வாங்குபவராக உள்ளனர். லட்சுமி-நாராயணரின் ஆத்மாவை
மனித ஆத்மாக்களுக்குள் மிக மேலானதாகச் சொல்வார்கள். தூய்மை
யாகவோ அனைவருமே ஆகின்றனர். பிறகும் கூட நம்பர்வார் பார்ட்
உள்ளது. சிலர் மகாராஜா, சிலர் வேலைக்காரர்கள், சிலர் பிரஜை.
நீங்கள் நடிகர்கள். நீங்கள் அறிவீர்கள், இந்த தேவதைகள் அனைவரும்
நம்பர்வாராக உள்ளனர் என்று. நல்ல புருஷார்த்தம் செய்வார்களானால்
உயர்ந்த ஆத்மா ஆவார்கள், உயர்ந்த பதவி பெறுவார்கள். உங்களுக்கு
நினைவு வந்து விட்டது, நாம் 84 பிறவிகளை எப்படி எடுத்தோம் என்று.
இப்போது பாபாவிடம் செல்ல வேண்டும். குழந்தைகளுக்கு இந்தக்
குஷியும் உள்ளது என்றால் நஷாவும் உள்ளது. அனைவரும் சொல்கின்றனர்,
நான் நரனிலிருந்து நாராயணனாக. உலகத்தின் எஜமானராக ஆவேன் என்று.
அப்படியானால் அத்தகைய புருஷார்த்தம் செய்ய வேண்டும்.
புருஷார்த்தத்தின் அனுசாரம் நம்பர்வார் பதவி பெறுகின்றனர்.
அனைவருக்கும் நம்பர்வார் பார்ட் கிடைத்துள்ளது. இந்த டிராமா
ஏற்கனவே உருவாக்கப் பட்டுள்ளது.
இப்போது பாபா உங்களுக்கு சிரேஷ்ட வழிமுறை கொடுத்துக்
கொண்டிருக்கிறார். ஏதாவது ஒரு வழி முறைப்படி பாபாவை நினைவு
செய்வீர்களானால் விகர்மங்கள் விநாசமாகும்.அப்போது நீங்கள்
தமோபிர தானத் திலிருந்து சதோபிரதானமாக ஆகி விடுவீர்கள்.
பாவங்களின் சுமையோ தலை மீது நிறைய உள்ளது. அவற்றை எப்படியாவது
இங்கேயே போக்கி விட வேண்டும். அப்போது தான் ஆத்மா தூய்மையாகும்.
தமோபிரதானமாகவும் ஆத்மாவாகிய நீங்கள் ஆகியிருக் கிறீர்கள்
என்றால் சதோபிரதானமாகவும் ஆத்மா ஆக வேண்டும். இச்சமயம் அதிக
ஏழ்மை நிலையில் பாரதம் உள்ளது. இந்த விளையாட்டே பாரதத்தில் தான்
உள்ளது. மற்றப்படி அவர்களோ தர்ம ஸ்தாபனை செய்வதற்காக
வருகின்றனர். புனர் ஜென்மம் எடுத்து-எடுத்தே கடைசியில் அனைவரும்
தமோபிரதானமாக ஆகின்றனர். சொர்க்கத்தின் எஜமானர்களாக நீங்கள்
ஆகிறீர்கள். நீங்கள் அறிவீர்கள், பாரதம் மிகவும் உயர்ந்த
தேசமாக இருந்தது. இப்போது எவ்வளவு ஏழையாக உள்ளது! ஏழைக்குத்
தான் அனைவரும் உதவி செய்கின்றனர். ஒவ்வொரு விசயத்திலும் பிச்சை
எடுத்துக் கொண்டே இருக்கின்றனர். முன்போ அதிக தானியங்கள்
இங்கிருந்து சென்றன. இப்போது ஏழையாகி விட்டதால் பிறகு
வாங்கியதைத் திரும்பக் கொடுக்கும் சேவை நடைபெற்றுக் கொண்டி
ருக்கிறது. எதை எடுத்துச் சென்றனரோ, அது கடனாகக் கிடைத்துக்
கொண்டிருக்கிறது. கிருஷ்ணர் மற்றும் கிறிஸ்தவர்க்கு ராசி ஒன்று
தான். கிறிஸ்தவர்கள் தான் பாரதத்தை விழுங்கியிருந்தனர். இப்போது
மீண்டும் டிராமாவின் அனுசாரம் அவர்கள் தங்களுக்குள் அடித்துக்
கொள்கின்றனர். வெண்ணெய் குழந்தைகளாகிய உங்களுக்குக்
கிடைக்கின்றது. கிருஷ்ணரின் வாயில் வெண்ணெய் இருந்தது
என்பதெல்லாம் கிடையாது. இதுவோ சாஸ்திரங்களில் எழுதப்பட்டுள்ளது.
முழு உலகமும் கிருஷ்ணரின் கையில் வருகின்றது. முழு
உலகத்திற்கும் நீங்கள் மாலிக் ஆகிறீர்கள் என்றால் உங்களுக்கு
எவ்வளவு குஷி இருக்க வேண்டும்! உங்களுடைய ஒவ்வோர் அடியிலும் பல
மடங்கு வருமானம். ஒரு லட்சுமி-நாராயணரின் இராஜ்யம் மட்டும்
இல்லை. இராஜ குலமே இருந்தது இல்லையா? இராஜா-ராணி எப்படியோ,
அப்படியே பிரஜைகளும் இருந்தனர் - அனைவரின் காலடியிலும் பல
மடங்கு வருமானம். அங்கோ அளவற்ற செல்வம் இருக்கும். பணத்திற்காக
எந்த ஒரு பாவமும் செய்ய மாட்டார்கள். அளவற்ற செல்வம் இருக்கும்.
அலாவுதீனின் அற்புத விளக்கு விளையாட்டைக் காட்டுகின்றனர்
இல்லையா? அல்லா அலவுதீன் என்றால் அவர் தேவி-தேவதா தர்மத்தை
ஸ்தாபனை செய்கிறார். ஒரு விநாடியில் ஜீவன்முக்தி தருகிறார். ஒரு
விநாடியில் சாட்சாத்காரம் ஆகி விடுகின்றது. அளவற்ற கஜானாவைக்
காட்டுகின்றனர். மீரா சாட்சாத்காரத்தில் கிருஷ்ணரோடு
நடனமாடினார். அது பக்தி மார்க்கம். இங்கே பக்தி மார்க்கத்தின்
விசயம் கிடையாது. நீங்களோ சொர்க்கத்தில் போய் நடைமுறையில்
இராஜ்ய பாக்கியத்தை அடைவீர்கள். பக்தி மார்க்கத்தில் வெறுமனே
சாட்சாத்காரம் கிடைக்கிறது. இச்சமயம் குழந்தைகளாகிய உங்களுக்கு
நோக்கம்-குறிக்கோளினுடைய சாட்சாத்காரம் கிடைக்கிறது, இதுபோல்
ஆகப் போகிறோம் என்பதை அறிவீர்கள். குழந்தைகள் மறந்து
விடுகின்றனர். அதனால் இந்த பேட்ஜ் தரப் படுகின்றது. இப்போது
நாம் எல்லையற்ற தந்தையின் குழந்தைகளாக ஆகியிருக்கிறோம். எவ்வளவு
குஷி இருக்க வேண்டும்! இதையோ அடிக்கடி உறுதி செய்து கொள்ள
வேண்டும். ஆனால் மாயா எதிர்த்தரப்பில் உள்ளது. அதனால் குஷியும்
விடுபட்டு விடுகின்றது. பாபாவை நினைவு செய்து கொண்டே
இருப்பீர்களானால் நஷா இருக்கும் - பாபா நம்மை உலகத்தின் மாலிக்
ஆக்குகிறார் என்று. பிறகு மாயா மறக்கடித்து விடுகிறது என்றால்
பிறகு ஏதாவது விகர்மங்கள் ஆகி விடுகின்றன. குழந்தைகள்
உங்களுக்கு நினைவு வந்து விட்டது-நாம் 84 பிறவிகளை
எடுத்துள்ளோம், வேறு யாரும் 84 பிறவிகள் எடுப்பதில்லை. இதையும்
புரிந்து கொள்ள வேண்டும்-எவ்வளவு நாம் நினைவு செய்கிறோமோ,
அவ்வளவு உயர்ந்த பதவி பெறுவோம். பிறகு தம்மைப் போலவும்
மற்றவர்களை ஆக்க வேண்டும், பிரஜைகளை உருவாக்க வேண்டும். தர்ம
காரியம் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும்.தீர்த்த
ஸ்தலங்களுக்கும் முதலில் தாங்கள் செல்கின்றனர். பிறகு
உற்றார்-உறவினர் முதலானோரையும் ஒன்றாக அழைத்துச் செல்கின்றனர்.
ஆக, நீங்களும் கூட அனைவருக்கும் அன்போடு புரிய வையுங்கள்.
அனைவருமே புரிந்து கொள்ள மாட்டார்கள். ஒரே வீட்டில் தந்தை
புரிந்து கொள்வாரானால் பிள்ளைகள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
தாய்-தந்தையர் எவ்வளவு தான் குழந்தைகளுக்கு பழைய உலகத்தின் மீது
மனதை ஈடுபடுத்த வேண்டாம் எனச் சொன்னாலும் பிறகும் கேட்க
மாட்டார்கள். கஷ்டப்படுத்தி விடுகின்றனர். யார் இங்குள்ள
நாற்றாக (முளைவிடும் செடியாக) உள்ளனரோ, அவர்கள் தான் பிறகு
வந்து புரிந்து கொள்வார்கள். இந்த தர்மத்தின் ஸ்தாபனை பாருங்கள்,
எப்படி நடைபெறுகின்றது! மற்ற தர்மங் களின் (கன்று) நாற்று
நடப்படு வதில்லை. அவர்களோ மேலே இருந்து வருகின்றனர். அவர்களைப்
பின்பற்றுவோரும் வந்து கொண்டே இருக் கின்றனர். இவரோ ஸ்தாபனையும்
செய்கிறார், பிறகு அனைவரையும் பாவனமாக்கி அழைத்துச் செல்லவும்
செய்கிறார். அதனால் சத்குரு, லிபரேட்டர் (துன்ப உலகிலிருந்து
விடுவிப்பவர்) என்றும் சொல்லப் படுகிறார். உண்மையான குரு ஒரே
ஒருவர் தான். மனிதர்கள் ஒருபோதும் யாருக்கும் சத்கதி
அளிப்பதில்லை. சத்கதி அளிப்பவர் ஒருவர் தான். அவர் தான் சத்குரு
எனச் சொல்லப்படுகிறார். பாரதத்தை உண்மையான கண்டமாகவும் அவர்
தான் மாற்றுகிறார். இராவணன் பொய்யான கண்டமாக மாற்றி விடுகிறான்.
பாபாவைப் பற்றியும் பொய், தேவதை களைப் பற்றியும் பொய் சொல்லி
விட்டுள்ளனர். அதனால் பாபா சொல்கிறார், தீயதைக் கேட்காதீர்கள்.........
இது விஷம் நிறைந்த உலகம் எனச் சொல்லப்படுகின்றது. மனிதர்கள்
புரிந்து கொள்வதே இல்லை. அவர்களோ, தங்களின் வழிமுறைப்படியே
நடக்கின்றனர். எவ்வளவு சண்டை-சச்சரவுகள் நடைபெற்றுக் கொண்டே
உள்ளன! குழந்தைகள் தாயையும், கணவன் மனைவி யையும் கொல்வதற்குத்
தயங்குவதே இல்லை. ஒருவர் மற்றவரை வெட்டிக் கோண்டே இருக்
கின்றனர். பிள்ளை பார்க்கிறான், தந்தையிடம் அதிகப் பணம் உள்ளது,
கொடுப்பதில்லை என்றால் அவரைக் கொல்வதற்கும் தாமதிப்பதில்லை.
எவ்வளவு மோசமான (கொடுமையான) உலகம்! இப்போது நீங்கள் என்னவாக
ஆகிக் கொண்டிருக்கிறீர்கள்? இந்த உங்களுடைய நோக்கம்-குறிக்கோள்
(லட்சுமி-நாராயணர்) எதிரில் உள்ளது. நீங்களோ பதித-பாவனரே வந்து
எங்களைப் தூய்மைபடுத்துங்கள் என்று மட்டும் சொல்கிறீர்கள்.
உலகத்தின் மாலிக் ஆக்குங்கள் என்று சொல்லவில்லை. இறைவனாகிய
தந்தையோ சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கிறார் என்றால் நாம் ஏன்
சொர்க்கத்தில் இல்லை? பிறகு இராவணன் உங்களை நரகவாசி ஆக்குகிறான்.
கல்பத்தின் ஆயுள் லட்சக்கணக்கான வருடங்கள் எனச் சொல்லி
விட்டதால் மறந்து விட்டுள்ளனர். பாபா சொல்கிறார், நீங்கள்
சொர்க்கத்தின் மாலிக்காக இருந்தீர்கள். இப்போது மீண்டும்
சக்கரத்தைச் சுற்றி வந்து நரகத்தின் மாலிக் ஆகியிருக்கிறீர்கள்.
இப்போது மீண்டும் பாபா உங்களை சொர்க்கத்தின் மாலிக் ஆக்குகிறார்.
பாபா சொல்கிறார், இனிமையான ஆத்மாக்களே, குழந்தைகளே, தந்தையை
நினைவு செய்வீர்களானால் நீங்கள் தமோபிரதானத்திலிருந்து
சதோபிரதானமாக ஆகி விடுவீர்கள். தமோபிரதானமாக ஆவதற்கு
அரைக்கல்பம் ஆகிறது. ஆனால் முழுக் கல்பம் என்று தான் சொல்ல
வேண்டும், ஏனென்றால் கலைகளோ குறைந்து கொண்டே போகின்றன. இச்சமயம்
எந்த ஒரு கலையும் கிடையாது. சொல்கின்றனர், குணமற்ற என்னிடம்
எந்த ஒரு நற்குணமும் இல்லை என்று. இதனுடைய பொருள் எவ்வளவு
தெளிவாக உள்ளது! இங்கே பிறகு நிர்குண பாலகர்களின் குழு உள்ளது.
பாலகர்களிடம் எந்த ஒரு குணமும் கிடையாது. இல்லையென்றால் பாலகனை
மகாத்மாவை விடவும் உயர்வாகச் சொல்லப் படுகின்றது. அவர்களுக்கு
விகாரங்களைப் பற்றியும் தெரியாது. மகாத்மாக்களுக்கோ
விகாரங்களைப் பற்றித் தெரியும். அதனால் வார்த்தையும் கூட
எவ்வளவு தவறாகப் பேசுகின்றனர்! மாயா முற்றிலும்
நேர்மையற்றவர்களாக ஆக்கி விட்டுள்ளது. கீதை படிக்கவும் செய்
கின்றனர். சொல்லவும் செய்கின்றனர், பகவான் வாக்கு- காமம் மகா
சத்ரு, இது முதலிலிருந்து கடைசி வரை துக்கம் தருவது என்பதாக.
பிறகும் பவித்திரமாவதில் விக்னங் களை ஏற்படுத்துகின்றனர்.
பிள்ளைகள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் எவ்வளவு
சண்டையிடுகின்றனர்! பாபா சொல்கிறார், குழந்தைகளாகிய நீங்கள்
ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். யார் பூவாக மாறுவதற்கில்லையோ,
அவர்களுக்கு எவ்வளவு தான் புரிய வைத்தாலும் ஒரு போதும் ஏற்றுக்
கொள்ள மாட்டார்கள். எங்காவது குழந்தைகள் நாங்கள் திருமணம்
செய்து கொள்ள மாட்டோம் எனச் சொல்லி விட்டால் தாய்-தந்தையர்
எவ்வளவு கொடுமைப் படுத்து கின்றனர்!
பாபா சொல்கிறார், நான் ஞான யக்ஞத்தைப் படைக்கிறேன் அநேக விதமான
விக்னங்கள் ஏற்படுகின்றன. மூன்றடி நிலம் கூடத் தருவதில்லை.
நீங்கள் பாபாவின் வழிப்படி மட்டும் நினைவு செய்து
பவித்திரமாகிறீர்கள். வேறு எந்த ஒரு கஷ்டமும் கிடையாது. தன்னை
ஆத்மா என்று மட்டும் உணர்ந்து பாபாவை நினைவு செய்யுங்கள்.
எப்படி ஆத்மாக்கள் நீங்கள் இந்த சரீரத்தில்
அவதரித்திருக்கிறீர்களோ, அதுபோல் பாபாவும் அவதரித்திருக்கிறார்.
பிறகு கச்ச அவதாரம், மச்ச அவதாரம் என்று எப்படி இருக்க முடியும்?
எவ்வளவு நிந்தனை செய்கின்றனர்! ஒவ்வொரு கல்லிலும் கூட பகவான்
இருக்கிறார் எனச் சொல்கின்றனர். பாபா சொல்கிறார், எனக்கும்
தேவதை களுக்கும் நிந்தனை செய்கின்றனர். நான் வர வேண்டியுள்ளது,
வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு மீண்டும் ஆஸ்தி தருகிறேன். நான்
ஆஸ்தி தருகிறேன், இராவணன் சாபம் தருகிறான். இது விளையாட்டு.
யார் ஸ்ரீமத் படி நடப்பதில்லையோ, இவர்களுடைய அதிர்ஷ்டம் அவ்வளவு
உயர்ந்ததல்ல. என்று புரிந்து கொள்ளப்படுகிறது. அதிர்ஷ்டசாலிகள்
அதிகாலையில் எழுந்து நினைவு செய்வார்கள். பாபாவோடு ஆன்மிக
உரையாடல்கள் செய்வார்கள். தன்னை ஆத்மா என உணர்ந்து பாபாவை
நினைவு செய்வீர்களானால் விகர்மங்கள் விநாசமாகும். குஷியின்
அளவும் அதிகரிக்கும். யார் பாஸ் வித் ஆனர் ஆகின்றனரோ, அவர்கள்
தான் இராஜ்யத்திற்குத் தகுதி உள்ளவர்களாக ஆக முடியும். ஒரு
லட்சுமி-நாராயணர் மட்டுமே இராஜ்யம் செய்வதில்லை. இராஜ பரம்பரை
உள்ளது. இப்போது பாபா சொல்கிறார், நீங்கள் எவ்வளவு தூய்மையான
புத்தி உள்ளவர்களாக ஆகிறீர்கள்! இது சத்சங்கம் எனச் சொல்லப்
படுகின்றது. சத்சங்கம் ஒன்று தான் உள்ளது. அந்தத் தந்தை
உண்மையிலும் உண்மையான ஞானம் கொடுத்து உண்மையான கண்டத்தின்
அதிபதி ஆக்குகிறார். கல்பத்தின் சங்கமயுகத்தில் தான்
சத்தியத்தின் சங்கம் கிடைக் கின்றது. சொர்க்கத்தில் எந்த
விதமான சத்சங்கமும் இருக்காது.
இப்போது நீங்கள் ஆன்மிக சேல்வேஷன் ஆர்மி (மீட்டெடுக்கும் சேனை).
நீங்கள் உலகத்தினரின் துன்பத்தைப் போக்கி கரையேற்றுகின்றீர்கள்.
உங்களைத் துன்ப உலகிலிருந்து மீட்டெடுப்பவர், ஸ்ரீமத் தருபவர்
தந்தை ஆவார். உங்கள் மகிமை மிகப் பெரியது. தந்தையின் மகிமை,
பாரதத்தின் மகிமை அளவற்றது. குழந்தைகளாகிய உங்களின் மகிமையும்
அளவற்றது. நீங்கள் பிரம்மாண்டத் தின் மாலிக்காகவும், உலகத்தின்
மாலிக்காகவும் ஆகிறீர்கள். நானோ, பிரம்மாண்டத்தின் மாலிக்காக
மட்டுமே இருக்கிறேன். பூஜையும் உங்களுக்கு இரட்டைப் பூஜை
நடைபெறுகின்றது. டபுள் பூஜை பெறுவதற்கு நான் ஒன்றும் தேவதை
ஆவதில்லை. உங்களிலும் கூட நம்பர்வார் புரிந்து
கொண்டிருக்கிறீர்கள், குஷியில் வந்து புருஷார்த்தம்
செய்கிறார்கள். படிப்பில் வேறுபாடு எவ்வளவு உள்ளது.!
சத்யுகத்தில் லட்சுமி-நாராயணரின் ஆட்சி நடைபெறுகின்றது. அங்கே
மந்திரி இருப்ப தில்லை. லட்சுமி-நாராயணர், பகவான்-பகவதி எனச்
சொல்லப்படுபவர்கள், பிறகு மந்திரியின் அறிவுரை பெற்றுக்
கொள்வார்களா என்ன? எப்போது பதித் ராஜாக்களாக ஆகிறார்களோ,
அப்போது மந்திரி முதலானவர்களை வைத்துக் கொள்கின்றனர். இப்போதோ
பிரஜைகள் மீது பிரஜைகளின் இராஜ்யம். குழந்தைகளாகிய உங்களுக்கு
இந்தப் பழைய உலகின் மீது வைராக்கியம். ஞானத்தை ஆன்மிகத் தந்தை
ஒருவர் மட்டுமே கற்பிக்கிறார். வேறு யாரும் கற்பிக்க முடியாது.
தந்தை மட்டுமே பதித-பாவனர், அனைவருக்கும் சத்கதி அளிப்பவர்.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) பாபாவின் நினைவோடு கூடவே தன்னைப் போல் மற்றவர்களை
உருவாக்குகிற சேவையும் செய்ய வேண்டும். தர்மம் வீட்டிலிருந்து
தொடங்க வேண்டும்........ அனைவருக்கும் அன்போடு புரிய வைக்க
வேண்டும்.
2) இந்தப் பழைய உலகத்திலிருந்து எல்லையற்ற வைராக்கியம்
உள்ளவராக ஆக வேண்டும். தீயதைக் கேட்காதீர்கள், தீயதைப்
பார்க்காதீர்கள்......... அந்த எல்லையற்ற தந்தையின் குழந்தைகள்
நாம். அவர் நமக்கு அளவற்ற கஜானாவைத் தருகிறார். இதே குஷியில்
இருக்க வேண்டும்.
வரதானம்:
ஒவ்வொரு சங்கல்பம், வார்த்தை மற்றும் செயல் பலனுடையதாக ஆக்கக்
கூடிய ஆன்மிக பிரபாவத்தை ஏற்படுத்துபவர் ஆகுக.
ஒருவரின் சம்பந்தத்தில் வரும் பொழுது அவருக்காக மன உணர்வானது
அன்பு, சகயோகம் மற்றும் நன்மைக்கான பிரபாவமுடையதாக இருக்க
வேண்டும். ஒவ்வொரு வார்த்தையும் ஒருவருக்கு தைரியம், ஆர்வம்
கொடுக்கும் பிரபாவம் ஏற்படுத்த வேண்டும். சாதாரண உரையாடலில்
நேரம் சென்று விடக் கூடாது. அதே போன்று ஒவ்வொரு காரியமும்
பலனுடையதாக இருக்க வேண்டும் - தனக்காக, மற்றவர்களுக்காக!
தங்களுக்குள் ஒவ்வொரு ரூபத்திலும் பிரபாவமுடையவர்களாக ஆகுங்கள்.
சேவையில் ஆன்மிக பிரபாவமுடையவர் ஆகும் போது தந்தையை
வெளிப்படுத்து வதற்கு நிமித்தம் ஆக முடியும்.
சுலோகன்:
அந்த அளவிற்கு சுப சிந்தனை செய்யும் மணியாக ஆகுங்கள்-உங்களது
கிரணங்கள் உலகிற்கு வெளிச்சம் கொடுத்துக் கொண்டே இருக்க
வேண்டும்.
அவ்யக்த இஷாரே: சங்கல்ப சக்தியை சேமித்து சிரேஷ்ட சேவைக்கு
நிமித்தம் ஆகுங்கள்.
நேரத்தின் அனுசாரமாக சீதள (குளிர்ந்த) சக்தியின் மூலம் ஒவ்வொரு
பிரச்சனையிலும் தனது சங்கல்பங்களின் வேகத்தை, வார்த்தையை
சீதளமாக மற்றும் தைரியமானதாக ஆக்குங்கள். ஒருவேளை சங்கல்பத்தின்
வேகம் அதிகமாக இருந்தால் அதிக நேரம் வீணாகி விடும், கட்டுப்
படுத்த முடியாது. ஆகையால் சீதள சக்தியை தாரணை செய்தால்
வீணானவைகளிலிருந்து பாது காப்பாகி விடுவீர்கள். ஏன், எதற்கு,
ஏன், இப்படி கிடையாது அப்படி போன்ற வீணானவைகளின்
வேகத்திலிருந்து விடுபட்டு விடுவீர்கள்.