18-08-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! கேள்விப்படுகின்ற
விஷயங்களை நம்பவேண்டாம், யாராவது தவறாகப் பேசினால் ஒரு காதில்
கேட்டு இன்னொரு காதின் வழியே விட்டு விடுங்கள்.
கேள்வி:
ஞானத்தின் குஷியில் எந்தக்
குழந்தைகள் இருப்பார்கள், அவர்களின் அடையாளம் என்ன?
பதில்:
அவர்கள் பழைய கர்மத்தின் கணக்கை
அதே குஷியில் இணைத்துக் கொண்டே செல்வார்கள். ஞானத் தின்
குஷியில் துக்கத்தின், வேதனை, கவலைகள் என்ற உலகத்தையே மறந்து
விடுவார்கள். புத்தியில் இப்பொழுது மகிழ்ச்சியான உலகத்திற்குப்
போய்க் கொண்டிருக் கின்றோம் என்ற எண்ணம் மட்டுமே இருக்கும்.
இராவணன் சாபத்தால் துக்கம் கொடுத்தார். துக்கமான கவலையான
உலகத்திலிருந்து நீக்கி மகிழ்ச்சியான உலகத்திற்கு அழைத்துச்
செல்ல இப்பொழுது பாபா வந்துள்ளார். .
பாடல்:
உன்னை அடைந்து நாங்கள்………
ஓம் சாந்தி.
இனிமையிலும்-இனிமையான குழந்தைகள் பாட்டைக் கேட்டனர்,
குழந்தைகளுக்கு அவசியம் மெய்சிலிர்ப்பு ஏற்பட்டு இருக்க
வேண்டும். ஏனென்றால் குஷியைப் போன்ற சத்துணவு வேறு எதுவும்
இல்லை என்று பாடப்படுகின்றது. இப்பொழுது அனைத்து ஆன்மீகக்
குழந்தைகளுக்கும் எல்லையற்ற தந்தை கிடைத்து விட்டார்.
எல்லையற்ற தந்தை என்பவர் ஒருவர் தான் இருக்க முடியும்! மேலும்
குழந்தைகள் அறிவீர்கள் எப்பொழுது மற்றவர்களும் குழந்தைகளாக
ஆகின்றார்களோ, அவர்களுக்கும் கூட மெய் சிலிர்ப்பு ஏற்படும்.
நம்முடைய இராஜ்யம் இருந்தது, பின்பு இராஜ்யத்தை இழந்து விட்டோம்
என்று நீங்கள் அறிவீர்கள். பாரத வாசிகளுக்கு இது சந்தோஷமான
செய்திதானே ! ஆனால் எப்பொழுது இதை நன்றாகக் கேட்டு, புரிந்து
கொள்கின்றார்களோ அப்பொழுது முற்றிலும் இது சந்தோஷமான விஷயமாகும்,
கல்ப-கல்பமாக பாபா வருகின்றார். பாபாவின் ஜென்மம் கூட இங்கே
தான் ஏற்பட்டதாகக் கூறு கின்றார்கள். நாம் கொண்டாடுகின்ற இந்த
பண்டிகைகளெல்லாம் இந்த நேரத்தின் நினைவுச் சின்னம் தான். பாபா
வந்து மிகவும் எளிதான வழியினைக் கூறுகின்றார். இன்று
மனிதர்களுக்கு அநேக விதமான கவலைகள் உள்ளன. இங்கே ஞானம்
கேட்டதின் மகிழ்ச்சியில், அந்த கவலை, துக்கம் எல்லாம் மறைந்து
விடுகின்றது. நோயாளி களுக்கு எப்படி நோய் குணம் ஆகிவிட்டால்
மகிழ்ச்சி ஏற்படுகின்றது ! நோய் வந்தால் மற்ற விஷயங்கள் எல்லாம்
மறந்து விடுகின்றது. தாய்வீடு, மாமியார் வீடு, நண்பர்கள்,
உறவினர்கள் இவையெல்லாம் மகிழ்ச்சியில் வருகின்றது. நாம்
அனைவரும் உலகத்திற்கு எஜமானனாக இருந்தோம் பின்பு இராவணன் சாபம்
கொடுத்து விட்டான் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இது
கவலை துக்கம் கொண்ட உலகம். பிறகு நாளைக்கு குஷியான உலகம் வரு
கின்றது. குஷியான உலகத்தை நினைவு செய்தால் கவலை, துக்கம்
அனைத்தும் மறந்துவிடும். இது தமோபிரதானமான உலகம்,
பல்வேறு-விதமான கர்மவினை உள்ளது. பெண்களுக்குக் கூட எத்தனை
கொடுமைகள் நடக்கின்றன. அநேக விதமான தடைகள் வருகின்றன. இது
தடைகள், கர்மத்தின் கணக்கு அனுபவிக்க வேண்டியுள்ளது. இன்னும்
சில நாட்கள் தான் உள்ளன என்று பாபா தைரியம் கொடுக்கின்றார்.
கல்பத்திற்கு முன்னால் கூட இவ்வாறு நடந்தது. கர்மத்தின்
கணக்கு-வழக்குகளை முடிக்க வேண்டும். இவைகளை மகிழ்ச்சியோடு
முடித்துக் கொண்டே இருங்கள். பாபா மற்றும் ஆஸ்தியை மட்டும்
நினைத்துக்கொண்டே இருங்கள். எந்த தவறான காரியமும் செய்யாதீர்கள்.
இல்லையென்றால் மேலும் தண்டனை ஏற்படும், பதவியும் குறைந்து
விடும். பாபா ஒருவரை மட்டும் நினைவு செய்வது தான் குழந்தைகளின்
கடமையாகும். பாபாவை நினைவு செய்தால் உங்கள் பாவகர்மம் வினாசம்
ஆகும் என்று பாபா கூறுகின்றார். கணக்கு-வழக்கு முடிந்து விடும்.
இன்னும் குறைந்த நேரம் தான் உள்ளது, கணக்கு-வழக்கு முடித்துக்
கொண்டே செல்லுங்கள், ஏனென்றால் நீங்கள் குருடர்களுக்கு
வழிகாட்டியாக உள்ளீர்கள். நீங்களும் நினைவு செய்யுங்கள் மேலும்
மற்றவர் களுக்கும் கூட வழி சொல்லுங்கள். தடைகள் அநேகம் வரும்.
பாபாவை நினைவு செய்யுங்கள் என்று எவ்வளவு முடிகின்றதோ இதை
மற்றவர் களுக்குப் புரிய வையுங்கள். மன்மனாபவ என்ற வார்த்தையே
மிகவும் புகழ்பெற்றது. மன்மனாபவ என்றால் ஹே ஆத்மாக்களே !
நிரந்தரமாக என்னை நினைவு செய்தால் உங்களுடைய பழைய பாவகர்மங்கள்
பஸ்பம் ஆகி விடும். இதில் குழப்பம் அடைவதற்கான விஷயமேயில்லை.
பாபாவை மட்டும் நினைத்தால் போதும் தமோபிரதானத்திலிருந்து
சதோபிர தானம் ஆகி விடுவோம். நாம் 84 ஜென்ம சக்கரம் சுற்றி வந்து
விட்டோம் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள். சக்கரம்
சுற்றிக் கொண்டே வந்து விட்டது, மேலும் சுற்றும். இது பழைய
உலகம், பழைய உடல் இதை மறந்து விடுங்கள். இது ஆத்மாக்களுக்கு
எல்லையற்ற சன்னியாசம் ஆகும். அவர்கள் எல்லைக்குற்பட்டதை
சன்னியாசம் செய்கின்றார்கள். வீடு, வாசலை விட்டுச்
செல்கின்றார்கள். நாடகத்தில் அவர்களின் நடிப்பு அது. மீண்டும்
இவ்வாறே நடக்கும். ஒவ்வொரு-வினாடியும் எது கடந்ததோ அது மீண்டும்
நாடகத்தில் நடக்கும். சாஸ்த்திரங்கள் எல்லாம் பக்திமார்க்க
புத்தகங்கள். பக்திக்குப் பின்னர் தான் ஞானம். இந்த ஏணிப்படி
படத்தை வைத்து மற்றவர்களுக்கு தெளிவாக, எளிதாக புரிய வைக்க
முடியும். முக்கியமான படங்களை நீங்கள் உங்கள் வீட்டில் கூட
வைத்துக் கொள்ளலாம். மும்மூர்த்தி படம் மிகவும் தெளிவானது. மேலே
சிவனும் கூட இருக்கின்றார். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் கூட
இருக்கின்றார். சூட்சும வதனவாசிகள் மற்றும் உயர்ந்ததிலும்,
உயர்ந்த பகவான் இருக் கின்றார். பாபா எங்கே இருக்கின்றாரோ அங்கே
தான் ஆத்மாக்களாகிய நம்முடைய இடம் என்பதை நீங்கள் புரிந்து
கொண்டீர்கள். அதை நிர்வாண் தாமம் என்று சொன்னாலும் சரி,
சாந்திதாமம் என்று சொன்னாலும் சரி, இரண்டும் ஒன்று தான்.
சாந்திதாமம் என்றால் சரிதான் அதாவது நிர்வாண்தாமம் என்றால்,
சப்தத்திற்கு அப்பாற் பட்ட இடம் என்பதாகும், அது சாந்திதாமம்
ஆகிவிட்டது அல்லவா? அது சாந்திதாமம் மற்றும் சுக தாமம் மேலும்
சாந்தி செல்வ செழிப்பான இடமாகும். பிறகு துக்கம் மேலும்
அசாந்திதாமம் ஆகிவிடுகின்றது. சுகதாமம் என்றால் எல்லையற்ற
பொக்கிஷங்கள் நிறைந்திருக்கும். இன்று என்னவாக உள்ளது, நாளை
என்னவாகும். இன்று கலியுகத்தின் முடிவில் உள்ளது. நாளை
சத்யுகத்தின் ஆரம்பமாகும். இரவு பகல் வித்தியாசம் உள்ளது அல்லவா?
பிரம்மா, பிரம்மாவின் வாய் மூலமாக வந்த பிராமணர்களின் பகல்
மேலும் பிறகு இரவு என்று கூறப்படுகின்றது. பகலில் தேவதைகள்
இருந்தார்கள், இரவில் சூத்திரர்கள் இருந்தார்கள், நடுவில்
நீங்கள் பிராமணர்கள் இருக்கின்றீர்கள். இந்த சங்கமயுகத்தைப்
பற்றி யாருக்கும் தெரியாது. மனிதர்கள் முற்றிலும் ஆழ்ந்த
இருளிலில் உள்ளார்கள். அவர்களை ஆழ்ந்த ஒளியில் கொண்டு வருவது
உங்கள் கடமை ஆகும். இப்பொழுது உங்கள் மகாபாரத யுத்தம் நடக்க
இருக்கின்றது. பாடப்பட்டு இருக்கின்றது- வினாச காலத்தில்
விபரீத புத்தியாக இருப்பார்கள். வினாச காலத்தில் அன்பு புத்தி
உள்ளவர்கள் வெற்றி அடைகின்றார்கள் என்று கூறப்படுகின்றது. பாபா
மீண்டும் நமக்கு இராஜ்யத்தைக் கொடுக்க வந்துள்ளார் என்று
நீங்கள் அறிந்துள்ளீர்கள். அந்த இராஜ்யத்தை யாராலும் பரிக்க (திருட)
முடியாது. இராவணனின் பிரவேசம் துவாபரயுகத்தில் ஏற்படுகின்றது.
இராவணன் தான் நம்முடைய இராஜ்யத்தைப் அபகரித்து விட்டார். அவர்
தான் நம்முடைய எதிரி என்பது புரிந்தது, ஏனென்றால், எதிரியின்
உருவத்தைத் தான் எரிப்பார்கள். இவர் தான் மிகப் பழைய எதிரி!
இராவண இராஜ்யம் என்று கூறுகின்றார்கள், ஆனால் யார் புத்தியிலும்
இதைப் புரிந்து கொள்ளவில்லை. இதை ஆழ்ந்த இருள் என்று சொல்லலாம்
அல்லவா ! எல்லையற்ற தந்தை தான் ஞானக்கடலாக இருக்கின்றார்.
அவரைத் தான் ஞானத்தின் வள்ளல், தெய்வீகக் கண்ணை வழங்கும் வள்ளல்
என்று கூறப்படுகின்றது. இப்பொழுது உங்களுக்கு மூன்றாவது கண்
கிடைத்துள்ளது. முன்னால் நீங்கள் ஒன்றுமே அறியவில்லை. ஆனால்
இப்பொழுது நீங்கள் அனைத்தையுமே அறிந்து கொண்டீர்கள். பாபா
ஞானக்கடல் என்றால், ஞானத்தைத் தானே புரிய வைப்பார். ஞானம்
கூறாமல் வெற்றி எப்படி கிடைக்கும்? பாபா ஞானம் கூறுவதை நீங்கள்
பார்க்கின்றீர்கள், இந்த ஞானத்தால் தான் அரைக் கல்பம் சத்கதி
கிடைக்கின்றது. பக்தி மார்க்கம் தான் அரைகல்பம் நடக்கின்றது.
ஞானத்தால் சத்கதி சங்கமயுகத்தில் தான் கிடைக்கின்றது. எந்த
விஷயத்தையும் குழந்தைகள் நீங்கள் மறைக்க முடியாது. பாபா
கூறுகின்றார்- எந்த தவறு செய்தாலும் பாபாவுக்குக் கூறிவிடுங்கள்
என்கிறார். சிலர் தீய கர்மங்களைச் செய்கின்றார்கள் என்பதை பாபா
அறிவார். இராவண இராஜ்யம் தானே! மாயா அறை கொடுத்து விடுகின்றது,
ஆனால் அதிகமாக மறைக்கின்றார்கள். ஏதாவது தவறு ஏற்பட்டால் உடனே
கூறிவிடுங்கள், அப்பொழுது தான் உங்களுக்கு எதிர் காலத்திற்கான
வழி கிடைக்கும். இல்லை என்றால் அது வளர்ந்து கொண்டே போகும்.
காமம் மகா எதிரி. பாபா விற்குக் கடிதம் எழுதுகின்றார்கள்- பாபா
மாயா மிகவும் எதிர்ப்பு செய்கின்றது. மாயாவிடம் இருந்து
தப்பிக்குமளவு எவரது யோகம் நிரந்தரமாக உள்ளது! தேக அபிமானம்
அதிகமாக வருகின்றது. மாயாவிடம் அதிக பேர் அறை வாங்குகின்றார்கள்.
பாபாவிற்கு அனைத்து இடத்தில் இருந்தும் செய்திகள் வருகின்றன
அல்லவா! செய்தித்தாளில் கூட தவறாக எத்தனை எழுதுகின்றார்கள்.
தற்பொழுது மனிதர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் விஷயங்களை
உருவாக்கலாம். ஏனென்றால், தமோபிரதானம் அல்லவா ! வியாசர்
ரஜோகுணத்தில் இருக்கும் போதே என்ன-என்ன விஷயங்களை உட்கார்ந்து
எழுதி விட்டார். அதனால் பாபா புரிய வைக்கின்றார் கேள்விப்பட்ட
விஷயங்கள் மீது நம்பிக்கை வைத்து கெட்டுப் போகாதீர்கள். இவர்
இப்படி செய்தார், அவர் அப்படி செய்தார் என்றால், புத்தி
அங்குதான் போகுமல்லவா? இது தமோபிரதான உலகம் என்று புரிந்து
கொள்வதே இல்லை. மாயை உங்களை விழ வைப்பதற்கு முயற்சி செய்யும்.
யாராவது பொய்யான விஷயங்களைக் கூறினால், ஒரு காதில் வாங்கி
இன்னொரு காதில் விட்டு விடுங்கள். இந்த செய்தியினை
மற்றவர்களுக்கும் கூறுங்கள். நான் செய்தியைக் கொண்டு
வருகின்றேன் என்று பாபா கூறு கின்றார். இப்பொழுது ஹே-
ஆத்மாக்களே ! ஸ்ரீமத்படி செ என்னுடைய செய்தியைக் கேளுங்கள்.
நிரந்தரமாக என்னை மட்டும் நினையுங்கள். யார் நினைவு
செய்கின்றார்களோ, அவர்கள் தான் தங்களுக்கு நன்மை செய்து
கொள்கின்றார்கள். நினைவு ஆத்மா செய்கின்றது, தவறையும் ஆத்மா
தான் செய்கின்றது. இப்பொழுது பாபாவிடம் இருந்து ஸ்ரீமத்
கிடைக்கின்றது, இதில் ஆசீர்வாதம், கருணை இவைகளை ஒன்றும் கேட்க
வேண்டியதில்லை. பாபாவை மட்டும் நினைக்க வேண்டும். வேறு எந்த
விஷயத்தையும் கேட்க வேண்டிய அவசிமில்லை. சிருஷ்டிச் சக்கரம்
எப்படி சுழல்கின்றது-என்பதை அறிந்து கொண்டீர்கள். இதில்
குழப்பமான விஷயம் எதுவுமில்லை. ஆழ்ந்த இருளிலில் தான் பாபா
வருகின்றார், ஆகையால் தான் சிவராத்திரி கொண்டாடு கின்றார்கள்.
கிருஷ்ணருக்குக் கூட பிறந்த நேரத்தை இரவில் தான் கொண்டாடு
கின்றார்கள். பூரி-பால்பாயாசம் இவைகளை கோவில்களில் இரவில் தான்
செய்கின்றார்கள். இப்பொழுது சிவனுக்காக நாம் என்ன செய்ய
முடியும்? அவரோ நிராகாரமாக இருக்கின்றார் ! யாருக்கும்
தெரியவும் தெரியாது, பாபா எந்த நேரத்தில் வருகின்றார் மற்றும்
எப்படி செல் கின்றார். எப்பொழுதும் நிரந்தரமாக இருப்பதில்லை.
வருவார் பிறகு போய்விடுவார். இப்பொழுது நாம் அனைவரும்
சிவபாபாவின் பேரன்,பேத்திகள் என்பதையும் தெரிந்து கொண்டோம்.
ஆஸ்தி அவரிடம் தான் கிடைக்கின்றது. பிரம்மாவுக்கும் கூட ஆஸ்தி
அவரிட மிருந்து தான் கிடைக்கின்றது. இவரும் கூட மனிதர் தானே!
சத்கதியில் முதல் நெம்பர் ஸ்ரீகிருஷ்ணரே ஆவார். இவர்
அனைவருக்கும் மிகவும் அன்பானவர், ஏனென்றால் சதோபிர தான குழந்தை
அல்லவா? கொஞ்சம் பெரியவர் ஆனதும் சதோ என்று கூறப்படுகின்றது,
பின்பு ரஜோ, தமோ நிலை அடைகின்றார். ஸ்ரீகிருஷ்ணர்- இராதை தான்
பெரியவர் ஆனதும் இலட்சுமி-நாராயணன் ஆகின்றார்கள், பாபா (முன்பு)
யாருக்கெல்லாம் ஞானம் கொடுத்தாரோ, அவர் களுக்குத் தான்
கொடுக்கின்றார். பாரதத்தில் தான் தேவி-தேவதைகள் வாழ்ந்தார்கள்
அதனால் தான் பாரதத்தில் கோவில்கள் அதிகமாக உள்ளன. கிருஸ்தவ
சர்ச்சில் ஏசுகிறிஸ்துவை மட்டும் தான் பார்க்கின்றார்கள்.
தேவதைகளுக்கு எத்தனை ஆயிரம் கோவில்கள் உள்ளன. பாபா வந்துள்ளார்
மனிதர்களை தேவதை ஆக்குகின்றார் அதாவது பாரதத்தை சொர்க்கமாக
ஆக்குகின்றார். நாமும் பாபாவுடன் வந்துள்ளோம்.
பக்திமார்க்கத்தில் தேவதைகளின் கோவிலில் மூர்த்திகளுக்கு என்று
எவ்வளவு செலவு செய்கின்றார்கள். உற்பத்தி செய்து, அதை பாலனை
செய்து, பின்பு அதை அழிக்கவும் செய்கின்றார்கள். 9
நாட்களுக்குள் அதை தண்ணீரில் மூழ்கச் செய்துவிடுகின்றார்கள்.
அதில் மிகவும் அன்பு வைக்கின்றார்கள். நவராத்திரி நாட்களில்
கல்கத்தாவில் மிகவும் கோலாகலமாக கொண்டாடுகின்றார்கள். இந்த
விஷயங்கள் அனைத்தும் இப்பொழுது அற்புதமாகத் தோன்றுகின்றது. நாம்
கூட முன்னால் இவ்வாறு செய்து இருக் கின்றோம். கோடிக் கணக்கான
பணம் செலவு செய்து இருக்கின்றோம். எத்தனை மூட நம்பிக்கைகள்
உள்ளன. இராமாயணத்தை எவ்வளவு நேசிக்கின்றார்கள். விஷயங்களைக்
கேட்டு கண்ணீர் விடுகின்றார்கள். இவை அனைத்தும்
பக்திமார்க்கத்தின் விஷயங்கள், இதனால் எந்த பலனும் இல்லை. பாபா
இப்பொழுது நம்மை எவ்வளவு புத்திசாலி ஆக ஆக்குகின்றார். அதனால்
கேட்டவை அனைத்தையும் இங்கேயே மறந்து விடாதீர்கள். அனைத்து
விஷயங் களை நினையுங்கள். முழுமையாகப் புத்துணர்ச்சியுடன்
செல்லுங்கள். தன்னை ஆத்மா என்று நினைத்து தேகம், தேக
சம்மந்தப்பட்ட அனைத்தையும் எதை யெல்லாம் பார்க்கின்றீர்களோ
அனைத்னையும் மறந்து விடுங்கள். இது அனைத்தும் சுடுகாடாக உள்ளது.
டெல்லியில் பிர்லா கோவிலில் பாரதம் ஃபரிஸ்தானமாக (சொர்க்கமாக)
இருந்தது, அதை தர்மராஜர் ஸ்தாபனை செய்தார் என்று
எழுதப்பட்டுள்ளது. இப்பொழுது இந்த உலகம் சுடுகாடாக ஆகப்
போகின்றது என்று நீங்கள் குழந்தைகள் புரிந்து கொண்டீர்கள்.
நீங்கள் அனைவரும் காமம் என்ற சிதையில் அமர்ந்து எரிந்து
போய்விட்டீர்கள் என்று பாபா கூறுகின்றார். கோபத்தை சிதை என்று
சொல்வதில்லை. காமத்தைதான் சிதை என்று சொல்லப் படுகின்றது. அதில்
கூட அதிகமான போதை, குறைந்த போதை என்று உள்ளது. குழந்தைகளுக்கு
பாபா வந்து புரிய வைக்கின்றார். வீட்டில் யாராவது சொல்படி
கேட்காத குழந்தைகள் இருக்கின்றார்கள் என்றால், சொல்வார்கள்
இல்லையா- இவன் என்ன தந்தையின் கவுரவத்தை கெடுக்க வந்துள்ளானே
என்பார்கள். பாபாவின் கௌவரம் போய் விடுகின்றது அல்லவா?
எல்லையற்ற தந்தைக் கூட கூறுகின்றார்- நீங்கள் கருப்பு முகம்
ஆனால் பிராமண குலம் தேவதை ஆகக் கூடியவர்களின் பெயரை களங்கப்
படுத்துகின்றீர்கள். நாம் துôய்மையின் சக்தியால் தான் பாரதத்தை
மீண்டும் சிரேஷ்டாச்சாரி தேவதையை உருவாக்குகின்றோம் என்று
நீங்கள் அறிந்து கொண்டீர்கள். உங்களுக்கு இது பொதுவான விஷயம்
ஆகும். மகாபாரத யுத்தம் கூட முன்னால் நின்றிருப்பதை
பார்க்கின்றீர்கள், இதற்குப் பிறகு தான் சொர்க்கத்தின் கதவு
திறக்கும். சாஸ்த்திரத்தில் கூட மகாபாரத யுத்தம்
காட்டப்பட்டுள்ளது. அதன் பிறகு என்ன ஆகும் என்று காட்டவில்லை.
பிரளயம் ஏற்பட்டது என்று கூறுகின்றார்கள். இப்பொழுது கிருஷ்ணரை
ஒரு பக்கம் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததாகக் காட்டுகின்றார்கள்,
இன்னொரு பக்கம் ஆலிலையில் கட்டை விரலை சூப்பிக் கொண்டே
எழுந்தருளியதாகக் காட்டுகின்றார்கள், ஒன்றுமே புரிந்து
கொள்வதில்லை. அவர் அங்கே கர்ப்ப மாளிகையில் மிகவும் ஓய்வாக
இருக்கின்றார். மற்றபடி அவர் ஆலிலையில் வர முடியுமா, இது இயலாத
காரியம் ஆகும். இவை அனைத்தும் நாடகத்தில் உருவாக்கப்பட்டுள்ளதை,
நீங்கள் அறிவீர்கள். கல்ப-கல்பமாக இப்படித் தான் நடக்கின்றது.
இப்பொழுது குழந்தைகள் நீங்கள் தனக்கு நன்மை செய்ய வேண்டும்
மேலும் மற்றவர்களுக்கும் கூட நன்மை செய்ய வேண்டும். இது தான்
முக்கியமான விஷயம் ஆவார். பாபா தான் சொர்க்கத்தின் படைப்பாளர்
ஆகும். அவரைத் தான் சொர்க்கத்தைப் படைக்கும் தந்தை கடவுள் என்று
கூறுகின்றார்கள். அதனால் நாம் குழந்தைகள் சொர்க்கத்தின் எஜமானன்
ஆக வேண்டுமல்லவா? சிவ ஜெயந்தி கூட பாரதத்தில் தானே கொண்டாடு
கின்றார்கள் என்றால், அவசியம் பாரதத்திற்கு ஏதோ
கொடுத்திருக்கின்றார் என்று அர்த்த மாகின்றது. இப்பொழுது
உங்களுக்கு சொர்க்கத்தின் இராஜ்யத்தை வழங்குகின்றார் அல்லவா !
பாபா தான் சத்கதி தாதாவாக (வள்ளல்) இருக்கின்றார். ஞானக்கடல்,
பாபா தான் வந்து கொடுக்கின்றார். இப்பொழுது பாபா உங்களுக்கு
ஞானம் கொடுத்துக் கொண்டிருக் கின்றார். ஐயாயிர வருடத்திற்குப்
பிறகு இங்கு தான் வருவார். யாரெல்லாம் இந்த பிராமணகுலத்தில்
இருக்கின்றார்களோ அவர்கள் தான் அங்கே வருவார்கள் என்பது
குழந்தைகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நல்லது- ஓம்சாந்தி.
இனிமையிலும் இனிமையான செல்லமான குழந்தைகளுக்கு, தாய்-தந்தை
பாப்தாதாவின் அன்பு-நினைவுகள் மேலும் காலை வணக்கங்கள். ஆன்மீகத்
தந்தையின் ஆன்மீக குழந்தைகளுக்கு நமஸ்தே !
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) ஸ்ரீமத்படி தனக்கும், பிறருக்கும் நன்மை செய்ய வேண்டும்.
மற்றவர்கள் தவறான விஷயங்கள் கூறினால் கேட்டும்-கேட்காமல்
இருக்க வேண்டும். அதில் தன்னை கெடுத்துக் கொள்ளக் கூடாது.
2) தேவதை ஆகக் கூடியவர்கள் பிராமண குலத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு
போதும் அவப்பெயரை உண்டாக்கக் கூடாது- இதில் கவனம் இருக்க
வேண்டும். ஒருபோதும் தவறான காரியம் செய்யக் கூடாது. பழைய
கணக்கு-வழக்கை முடிக்க வேண்டும்.
வரதானம்:
போதை மற்றும் குறிக்கோளின் நினைவினால் அனைத்து
கர்மேந்திரியங்களையும் கட்டளைப்படி இயக்கும் கிரீடம் மற்றும்
சிம்மாசனதாரி ஆகுக
சங்கமயுகத்தில் பாப்தாதா மூலம் அனைத்து குழந்தைகளுக்கும்
கிரீடமும் சிம்மாசனமும் கிடைக்கிறது. தூய்மையின் கிரீடமும்
இருக்கிறது, பொறுப்புகளின் கிரீடமும் இருக்கிறது; அழிவற்ற
சிம்மாசனமும் இருக்கிறது, உள்ளம் என்ற சிம்மாசனதாரி ஆகவும்
இருக்கிறீர்கள். எப்பொழுது இப்படிப்பட்ட இரட்டைக் கிரீடம்
மற்றும் சிம்மாசனதாரி ஆகிறீர்களோ, அப்போது போதையும்
குறிக்கோளும் தானாகவே நினைவிருக்கும். பிறகு இந்த
கர்மேந்திரியங்கள் கட்டளைக்குக் கீழ்ப்படியும். யார்
கிரீடத்தையும் சிம்மாசனத்தையும் விட்டுவிடுகிறார்களோ,
அவர்களுடைய கட்டளையை எந்தவொரு பணியாளரும் ஏற்பதில்லை.
சுலோகன்:
பலவீனமான எண்ணங்களே மகிழ்ச்சியாக (பிரசன்ன சித்) இருப்பதற்குப்
பதிலாக கேள்விக்குறியாக (பிரஷ்னசித்) ஆக்கி விடுகின்றன.
அவ்யக்த இஷாரா: தூய்மையற்ற விதையைக் கூட முடித்துவிட்டு
சம்பூர்ண தூய்மை (பவித்ரம்) ஆகுங்கள்.
ஈஸ்வரிய சேவையின் மிகப் பெரிய புண்ணியம் - தூய்மையைத் தானமாக
வழங்குவதாகும். தூய்மையானவராவது மற்றும் ஆக்குவதே புண்ணிய
ஆத்மாவாவது ஆகும், ஏனென்றால் ஏதேனும் ஓர் ஆத்மாவை தன்னை
அழித்துக் கொள்ளும் மகா பாவத்திலிருந்து விடுவிக் கிறீர்கள்.
அசுத்தம் என்பது தன்னை அழித்துக் கொள்வது ஆகும். தூய்மை என்பது
உயிர் தானம் ஆகும்.
|
|
|
|