18-09-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! பதித பாவன
தந்தையின் வழிப்படி நீங்கள் தூய்மை அடைகிறீர்கள், ஆகையால்
உங்களுக்கு தூய்மையான உலகின் இராஜ்யம் கிடைக்கிறது, தனது
வழிப்படி தூய்மை அடைபவர்களுக்கு எந்த பலனும் கிடையாது.
கேள்வி:
குழந்தைகள் சேவையில் முக்கியமாக
எந்த விசயத்தின் மீது கவனம் இருக்க வேண்டும்?
பதில்:
சேவையில் ஈடுபடும்போது ஒருபோதும்
அற்ப விசயங்களில் ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்ளாதீர்கள்.
தமக்குள் உப்பு நீர் போல ஆனீர்கள் என்றாலோ, பேசிக் கொள்ள வில்லை
என்றாலோ டிஸ்-சர்வீஸ் (எதிர்மாறான சேவை)க்கு பொறுப்பாகி
விடுவீர்கள். பல குழந்தைகள் தந்தையிடமே கோபித்துக் கொள்கின்றனர்.
தலைகீழ் காரியம் செய்யத் தொடங்கி விடுகின்றனர். பிறகு
அப்படிப்பட்ட குழந்தைகளை தத்தெடுத்ததையே நீக்கப்பட்டுவிடும்.
ஓம் சாந்தி.
தூய்மையற்றவரை தூய்மையாக்கும் தந்தை தூய்மையாகக் கூடிய குழந்தை
களுக்குப் புரிய வைக்கிறார். தூய்மையற்ற குழந்தைகள் தான்
தூய்மையாக்கக் கூடிய தந்தையை அழைக்கின்றனர். நாடகத்தின் திட்டம்
என்றும் சொல்கிறார், இராவண இராஜ்யம் ஆகியிருக்கும் காரணத்தால்
அனைத்து மனிதர்களும் தூய்மையற்றவராக இருக்கின்றனர். விகாரத்தில்
செல்பவர்கள் தூய்மையற்றவர்கள் என சொல்லப்படுகின்றனர்.
விகாரத்தில் செல்லாதவர்களும் பலர் இருக்கின்றனர்.
பிரம்மச்சாரிகளாக இருக்கின்றனர். பாதிரிமார்கள், முல்லா
காஜிக்கள் (முகமதிய அறிஞர்கள்) பௌத்தர்கள் முதலானோர் தூய்மையாய்
இருப்பது போல நாம் விகாரமற்றவர்கள் என புரிந்து கொள்கின்றனர்.
அவர்களை யார் தூய்மையாக ஆக்கியது? அவர்கள் தாமாகவே ஆனார்கள்.
உலகில் பலர் இப்படிப்பட்ட தர்மங்களில் இருப்பவர்கள் விகாரத்தில்
செல்வதில்லை. ஆனால் அவர்களை பதித பாவன தந்தையால்
தூய்மையாக்கப்படுவதில்லை, ஆகையால் அவர்கள் உலகின் எஜமானாக ஆக
முடியாது. தூய்மையான உலகிற்குச் செல்ல முடியாது. சன்னியாசிகளும்
கூட 5 விகாரங்களை விட்டு விடுகின்றனர். ஆனால் அவர்களை யார்
சன்னியாசம் செய்வித்தது? பதித பாவனரான பரமபிதா பரமாத்மா
சன்னியாசம் செய்விக்கவில்லை அல்லவா. தூய்மையற்றவரை
தூய்மையாக்கும் (பதித பாவனர்) தந்தையின்றி (இலட்சியத்தில்)
வெற்றி அடைய முடியாது. தூய்மையான உலகமாகிய சாந்திதாமத்திற்குச்
செல்ல முடியாது. இங்கே தந்தை வந்து உங்களுக்கு தூய்மை
அடைவதற்கான ஸ்ரீமத் (உயர்ந்த வழி) கொடுக் கிறார். சத்யுகம்,
நிர்விகாரி உலகம் என சொல்லப்படுகிறது. சத்யுகத்தில் வருபவர்கள்
கண்டிப்பாக தூய்மையானவர்களாக இருப்பார்கள் என்பது இதிலிருந்து
நிரூபணமாகிறது. சத்யுகத்திலும் தூய்மையாய் இருந்தனர், சாந்தி
தாமத்தில் கூட ஆத்மாக்கள் தூய்மையாய் இருக்கின்றனர். இந்த
இராவண இராஜ்யத்தில் அனைவருமே தூய்மையற்றவர்களாக இருக் கின்றனர்.
மறுபிறவிகளை எடுக்கவே வேண்டி யுள்ளது. சத்யுகத்திலும் கூட
மறுபிறவிகள் எடுக்கின்றனர், ஆனால் விகாரத்தின் மூலம் அல்ல. அது
(சத்யுகம்) சம்பூரண நிர்விகாரி உலகமாக உள்ளது. திரேதாவில்
இரண்டு கலை கள் குறையலாம், ஆனால் விகாரிகள் என சொல்ல மாட்டோம்.
பகவான் ஸ்ரீராமன், பகவதி ஸ்ரீசீதை என சொல்கின்றனர் அல்லவா. 16
கலைகள் பிறகு 14 கலைகள் என சொல்லப்படுகிறது. சந்திரனுக்கும்
கூட இப்படி (தேய் பிறை என) ஆகின்றது அல்லவா. ஆக, பதித பாவன
தந்தை வந்து எதுவரை தூய்மையான வராக ஆக்குவதில்லையோ அதுவரை
யாரும் முக்தி-ஜீவன் முக்தியில் செல்ல முடியாது என இதிலிருந்து
நிரூபண மாகிறது. தந்தைதான் வழிகாட்டியாக உள்ளார். இந்த உலகில்
தூய்மையானவர்கள் பலர் இருக்கின்றனர். சன்னியாசிக்கும் கூட
தூய்மையாய் இருப்பதன் காரணத்தால் மரியாதை கிடைக்கிறது. ஆனால்
தந்தையின் மூலம் தூய்மையாய் ஆவதில்லை. நம்மை தூய்மையாக்குபவர்
நிராகாரமான பரமபிதா பரமாத்மா என்று இப்போது குழந்தைகளாகிய
நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். அவர்கள் தம் வழியில் தாமே
தூய்மையடைகின்றனர். நீங்கள் தந்தையின் மூலம் தூய்மையடைகிறீர்கள்.
தூய்மையற்றவர் களை தூய்மையாக்கக் கூடிய (பதித பாவன) தந்தையின்
மூலமே தூய்மையான உலகின் ஆஸ்தி கிடைக்கிறது. தந்தை சொல்கிறார் -
ஓ குழந்தைகளே, காமம் உங்களின் மிகப் பெரிய எதிரியாகும், இதன்
மீது வெற்றி அடையுங்கள், வீழ்ச்சி அடைவதும் இதில் தான் ஆகும்.
நாங்கள் கோபம் அடைந்தோம், அதனால் முகத்தைக் கருப்பாக்கிக்
கொண்டோம் என ஒருபோதும் எழுதுவதில்லை. காமத்தைக் குறித்து
நாங்கள் முகத்தைக் கருப்பாக்கிக் கொண்டோம், விழுந்து விட்டோம்
என எழுதுகின்றனர். இந்த விசயங்களை குழந்தைகளாகிய நீங்கள் தான்
அறிவீர்கள், உலகத்திற்குத் தெரியாது. நாடகத்தின்படி யார் வந்து
பிராமணர் ஆக வேண்டுமோ அவர்கள் வந்தபடி இருப்பார்கள். மற்ற
சத்சங்கங்களில் இலட்சியம், குறிக்கோள் எதுவும் கிடையாது.
சிவானந்தர் முதலானவர்களுக்கு நிறைய சீடர்கள் உள்ளனர், ஆயினும்
அவர்களில் ஒரு சிலர் சன்னியாசத்தை எடுக்கின்றனர். இல்லறவாசிகளோ
எடுப்பதே இல்லை. மற்றபடி வீடு வாசலை துறப்பவர்கள் மிகச் சிலரே
இருக்கின்றனர். சன்னியாசிகள் ஆகின்றனர் என்றாலும் கூட மறுபிறவி
எடுக்க வேண்டியுள்ளது. ஜோதியோடு ஜோதியாய் ஐக்கியமாகி விட்டார்
என சிவானந்தர் குறித்து சொல்ல முடியாது. அனைவருக்கும் சத்கதி
வழங்கும் வள்ளல் தந்தை தான் ஆவார், அவர்தான் வழிகாட்டி ஆவார்
என நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். வழி காட்டி இல்லாமல்
யாரும் செல்ல முடியாது. நமது தந்தை, தந்தையாகவும் இருக்கிறார்,
ஞானம் நிறைந்தவாராகவும் இருக்கிறார் என குழந்தைகளாகிய நீங்கள்
அறிவீர்கள். மனித சிருஷ்டியின் விதை ரூபமாவார். முழு மனித
சிருஷ்டியின் முதல் இடை கடைசியின் ஞானம் விதையில்தான் இருக்கும்
அல்லவா. தந்தை என அனைவருமே சொல்கின்றனர் அல்லவா. நம்முடைய
இறைத்தந்தை ஒருவரே ஆவார் என குழந்தைகள் அறிவார்கள் எனும்போது
அந்த தந்தைக்குத்தான் அனைவரின் மீதும் இரக்கம் ஏற்படும் அல்லவா.
எவ்வளவு கணக்கற்ற மனிதர்கள் இருக்கின்றனர், எவ்வளவு ஜீவ
ஜந்துக்கள் இருக்கின்றன. அங்கே மனிதர்கள் குறைவானவர்களே
இருப்பார்கள், ஆக ஜீவ ஜந்துக்களும் குறைவாகவே இருக்கும்.
சத்யுகத்தில் இப்படிப்பட்ட குப்பை இருக்காது. இங்கே பலவிதமான
நோய் நொடிகள் முதலானவைகள் எவ்வளவு ஏற்படுகின்றன. அதற்கென புதிய
மருந்துகள் வெளிவந்தபடி இருக்கின்றன. நாடகத்தின் திட்டத்தின்
படி பல விதமான திறமைகளை வெளிப்படுத்தியபடி இருக்கின்றனர்.
இவையனைத்தும் மனிதர்களின் கலைத் திறமை ஆகும். பரலௌகிக தந்தையின்
கலை எது? பதித பாவனா வந்து எங்கள் ஆத்மாக்களை தூய்மை
யாக்குங்கள், சரீரங்களையும் தூய்மை யாக்குங்கள் என தந்தையைக்
குறித்து சொல்கின்றனர். பதித பாவனா, துக்கத்தை நீக்கி சுகத்தைக்
கொடுப்பவரே என ஒருவரைத்தான் அழைக்கின்றனர் அல்லவா.
அவரவர்களுடைய மொழிகளில் கண்டிப்பாக நினைவு செய்கின்றனர்.
மனிதர்கள் இறக்கும் தறுவாயில் இருந்தாலும் பகவானை நினைவு
செய்கின்றனர், வேறு யாரும் உதவ முடியாது என புரிந்து
கொள்கின்றனர், ஆகையால் இறைத் தந்தையை நினைவு செய் என
சொல்கின்றனர். இறைத் தந்தையை நினைவு செய் என கிறிஸ்தவர்களும்
கூட சொல்கின்றனர். கிறிஸ்துவை நினைவு செய்யுங்கள் என சொல்ல
மாட்டார்கள். கிறிஸ்துவுக்கும் மேல் இறைவன் இருக்கிறார் என
தெரிந்து கொண்டுள்ளனர். அனைவரின் இறைவன் ஒருவர்தான் இருப்பார்
அல்லவா. மரண லோகம் என்பது என்ன, அமர லோகம் என்பது என்ன என்பதை
குழந்தைகளாகிய நீங்கள் இப்போது அறிவீர்கள். உலகில் யாருக்கும்
தெரியாது. சொர்க்கம், நரகம் அனைத்தும் இங்கே தான் உள்ளது என
வேண்டு மானால் சொல்கின்றனர். சத்யுகம் இருந்தது, தேவதைகளின்
இராஜ்யம் இருந்தது என ஒரு சிலர் புரிந்து கொள் கின்றனர்.
இப்போது வரை கூட எவ்வளவு புதிய புதிய கோவில்கள் உருவாகிக்
கொண்டிருக்கின்றன. ஒரு தந்தையைத் தவிர வேறு யாரும் நம்மை
தூய்மையாக்கி நம்முடைய வீட்டுக்குத் திரும்பி அழைத்துச் செல்ல
முடியாது என குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நாம் நம்முடைய
இனிமையான வீட்டுக்கு (ஸ்வீட் ஹோம்) சென்று கொண்டிருக்கிறோம்
என்பது உங்கள் புத்தியில் உள்ளது. தந்தை நம்மை திரும்ப
அழைத்துச் செல்வதற்காக தூய்மையாக்குகிறார். இந்த நினைவில்
இருக்க வேண்டும்.
குழந்தைகளே ! நீங்கள் இத்தனை பிறவிகள் எடுத்துள்ளீர்கள் என
தந்தை புரிய வைக்கிறார். இப்போது சூத்திரனி-ருந்து
பிராமணனாகியுள்ளோம். பிறகு பிராமணரிலிருந்து தேவதையாக ஆக
வேண்டும், சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும். இப்போது சங்கம
யுகமாக உள்ளது. விராட ரூபத்தில் பிராமணரின் குடுமி புகழ்
வாய்ந்ததாக உள்ளது. இந்துக்களுக்கும் கூட உச்சிக் குடுமி
அடையாளமாகும். மனிதர்கள் மனிதர்கள் தான். சீக்கியர்கள்,
முஸ்லிம் முதலானவர்கள் யார் என (தாடி முத-யவற்றால்) நீங்கள்
தெரிந்து கொள்ள முடியாதபடி ஆகி விடுகின்றனர். மற்றபடி சீனர்கள்,
ஆப்பிரிக்கர்கள் இவர்களை தெரிந்து கொண்டு விட முடிகிறது.
அவர்களின் முகமே தனியானது. கிறிஸ்தவர்களுக்கு பாரதத்துடன்
தொடர்பு இருப்பதால் இதனைக் கின்றனர். எத்தனை விதமான தர்மங்கள்
உள்ளன. அவர்களின் பழக்க வழக்கங்கள், உடைகள் முதலானவை அனைத்தும்
தனிப் பட்டவை ஆகும். இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானம்
கிடைத்திருக்கிறது. நாம் சத்யுகத்தை ஸ்தாபனை செய்து
கொண்டிருக்கிறோம். அங்கே வேறு எந்த தர்மமும் இருக்க வில்லை.
இப்போது அனைத்து வித விதமான தர்மங்கள் இருக்கின்றன. இறுதி
சமயமான இப்போது வேறு எந்த தர்மத்தை ஸ்தாபனை செய்வார்கள்? ஆம்,
புதிய ஆத்மாக்கள் தூய்மையாய் இருப்பார்கள், ஆகையால் புதிய
ஆத்மாக்களின் ஏதாவது ஒரு மகிமை இருந்தபடி இருக்கும். கடைசியில்
வரக்கூடியவர்களுக்கு முதலில் கண்டிப்பாக சுகம் கிடைக்கும் என
புத்தி உணர்த்துகிறது. மகிமை ஏற்படும், பிறகு துக்கமும்
ஏற்படும். ஒரே ஒரு பிறவி தான். நீங்கள் எப்படி சுகதாமத்தில்
அதிகமான சமயம் இருக்கிறீர்களோ அது போல அவர்கள் சாந்திதாமத்தில்
அதிக சமயம் இருப்பார்கள். இறுதி வரை வளர்ச்சி அதிகம் ஏற்படு
கிறது. மரம் பெரியது அல்லவா. இந்த சமயத்தில் மனிதர்களின்
எண்ணிக்கை மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது, ஆகையால்
அதனை நிறுத்துவதற்காக நிறைய உபாயங்கள் (திட்டங்கள்) உருவாக்கிக்
கொண்டிருக்கின்றனர். ஆனால் இதன் மூலம் எதுவும் நடப்பதில்லை.
நாடகத்தின் திட்டப்படி கண்டிப்பாக வளர்ச்சி அடைந்தே தீரும் என
நீங்கள் அறிவீர்கள். புதிய இலைகள் வந்தபடி இருக்கும், பிறகு
கிளைகள் முதலானவைகள் வளர்ந்தபடி இருக்கும். எவ்வளவு வித
விதமானதாக உள்ளன. நாம் வேறு எந்த தொடர்பிலும் இல்லை என்பதை
குழந்தைகள் இப்போது அறிவார்கள். தந்தை தான் நம்மை
தூய்மையாக்குகிறார் மற்றும் சிருஷ்டியின் முதல்-இடை-கடைசியின்
செய்தியைச் சொல்கிறார். ஓ பதித பாவனா வந்து எங்களை
தூய்மையாக்குங்கள் என்று. நீங்களும் கூட அவரைத்தான்
அழைக்கிறீர்கள் எனும் போது கண்டிப்பாக தூய்மையற்ற உலகம்
வினாசத்தை அடையும். இதுவும் கணக்காகும். சத்யுகத்தில் கொஞ்சம்
மனிதர்கள் தான் இருப்பார்கள். கலியுகத்தில் எவ்வளவு அளவற்ற
மனிதர்கள் இருக்கின்றனர், குழந்தைகளாகிய நீங்கள் விழிப்புணர்வு
கொடுக்க வேண்டும். தந்தை நமக்கு கற்பிக்கிறார் இந்த பழைய உலகின்
வினாசம் இப்போது ஏற்படுகிறது. தந்தைதான் ஸ்தாபனை செய்வார்.
பகவானுடைய மகா வாக்கியம் - நான் ஸ்தாபனை செய்விக்கிறேன்.
நாடகத்தின்படி வினாசம் ஏற்படுகிறது. பாரதத்தில்தான் நினைவுச்
சின்னங் களும் உள்ளன. பிரம்மாவின் மூலம் பிராமணர்கள், பிரம்மா
முக வம்சாவளியை பாருங்கள் எவ்வளவு உள்ளனர். அவர்கள் விகாரத்தின்
வழி வம்சாவளி பிராமணர்கள். அவர்கள் தந்தையை அறிவதே இல்லை.
உங்களுக்கு இப்போது தைரியம் பிறந்துள்ளது. இப்போது கலியுகம்
அழிந்து சத்யுகம் வர வேண்டியுள்ளது என நீங்கள் அறிவீர்கள். இது
இராஜஸ்வ அஸ்வமேத அவினாசி ருத்ர ஞான யக்ஞமாகும். இதில் பழைய
உலகத்தின் ஆஹூதி (அர்ப்பணப்பொருள்) செய்ய வேண்டியுள்ளது. மற்ற
எந்த ஆகுதியும் கிடையாது. நான் முழு சிருஷ்டியின் மீது இந்த
இராஜஸ்வ அஸ்வமேத யக்ஞத்தை படைத்திருக்கிறேன் என தந்தை
சொல்கிறார். முழு பூமியின் மீது படைத்துள்ளேன். யக்ஞ குண்டங்கள்
இருக்கின்றன அல்லவா. இதில் முழு உலகமும் ஸ்வாஹா ஆகி விடும்.
யக்ஞ குண்டத்தை உருவாக்குகின்றனர். இந்த முழு சிருஷ்டியும்
யக்ஞ குண்டமாக ஆகியுள்ளது. இந்த யக்ஞ குண்டத்தில் என்ன நடக்கும்?
அனைத்தும் இதில் முடிந்து (அழிந்து) போய்விடும். இந்த குண்டம்
தூய்மையாக புதியதாக ஆகிவிடும். இதில் பிறகு தேவதைகள் வருவார்கள்.
நாலாபுறமும் கடல் இருக்கவே செய்கிறது, முழு உலகமும் புதியதாக
ஆகிவிடும். குழப்பங்கள் நிறைய நடக்கும். யாரும் உரிமை கோராத ஒரு
இடம் கூட இல்லை. இது என்னுடையது என அனைவரும் சொல் கின்றனர்.
இப்போது என்னுடையது, என்னுடையது என சொல்லும் மனிதர்கள் அனைவரும்
அழிந்து போய் விடுவார்கள். மற்றபடி நான் யாரை
தூய்மையாக்குகிறேனோ அவர்கள் கொஞ்சம் பேர் மட்டுமே முழு உலகில்
இருப்பார்கள். முதன் முதலாக ஆதி சனாதன தேவி தேவதா தர்மம்
இருக்கும். யமுனை நதிக்கரையில் அவர்களின் இராஜ்யம் இருக்கும்.
இந்த அனைத்து விசயங்களையும் உங்கள் புத்தியில் பதிய வைக்க
வேண்டும், குஷி இருக்க வேண்டும். மனிதர்கள் ஒருவர் மற்றவருக்கு
அமர்ந்து கதை சொன்னபடி இருக் கின்றனர் அல்லவா. இதுவும் கூட
சத்ய நாராயணரின் கதையாகும், இது எல்லைக் கப்பாற்பட்டதாகும்.
உங்களுடைய புத்தியில் தான் இந்த விசயங்கள் உள்ளன. அதிலும் யார்
நல்ல நல்ல சேவை செய்யக்கூடியவர்கள் இருக் கின்றனரோ அவர்களின்
புத்தியில் தாரணை ஆகும், பை (புத்தி) நிரம்பும், தானம்
கொடுத்தபடி இருப்பார்கள், ஆகையால் செல்வத்தை கொடுத்தால் செல்வம்
குறையாது என சொல்கின்றனர். தானம் கொடுப்பதன் மூலம் லாபம்
பெருகும் என புரிந்து கொள்கின்றனர். உங்களுடைய செல்வம்
அழிவற்றது. இப்போது செல்வத்தை கொடுத்தால் செல்வம் குறையாது,
எவ்வளவு தானம் கொடுப்பீர்களோ அவ்வளவு குஷி இருக்கும்.
கேட்கும்போது ஒரு சிலருடைய தலை ஆடிக் கொண்டிருக்கும். சிலரோ
தோசைக்கல் போல அமர்ந்திருப்பார்கள். தந்தை இவ்வளவு நல்ல நல்ல
கருத்துகளை சொன்னபடி இருக்கிறார். எனவே கேட்கும்போது தலை தானாக
ஆடும். இங்கே குழந்தைகள் வருவதே நேரில் தந்தையின் மூலம்
புத்துணர்ச்சி அடைவதற் காக. தந்தை எப்படி அமர்ந்து யுக்தியுடன்
கருத்துகளை சொல்கிறார். பாரதத்தில் தேவி தேவதை களின் இராஜ்யம்
இருந்தது என நீங்கள் அறிவீர்கள். பாரதம் சொர்க்கம் எனப்படுகிறது.
இப்போது நரகமாக உள்ளது. நரகம் மாறி சொர்க்கம் ஆகும். மற்றபடி
அனைத்தும் வினாசமாகி விடும். உங்களைப் பொறுத்தவரை சொர்க்கம்
என்பது நேற்றைய விசயமாகும். நேற்று இராஜ்யம் செய்து
கொண்டிருந்தோம், இப்படி வேறு யாரும் சொல்ல முடியாது.
கிறிஸ்துவுக்கு இவ்வளவு வருடங்களுக்கு முன்பு சொர்க்கம்
இருந்தது, அப்போது வேறு எந்த தர்மமும் இருக்கவில்லை என
சொல்கின்றனர். துவாபரத்திலிருந்து அனைத்து தர்மங்களும்
வருகின்றன. மிகவும் சகஜமான விசயமாகும். ஆனால் மனிதர்களின்
புத்தி புரிந்து கொள்ளும் அளவிற்கு இந்த விசயத்தின் மீது கவனம்
இல்லை. பதீத பாவனா வாருங்கள் என அழைக்கவும் செய்கின்றனர்
எனும்போது வந்து கண்டிப்பாக தூய்மையற்ற வரிலிருந்து தூய்மை
யானவாராக ஆக்குவார் அல்லவா. இங்கே யாரும் தூய்மையானவர் இருக்க
முடியாது. சத்யுகம் நிர்விகாரி உலகம் எனப்படுகிறது. இப்போது
விஷம் (விகாரம்) நிறைந்த உலகமாக உள்ளது. தூய்மையின் விஷயம்
முக்கியமானது. இதற்காக நீங்கள் எவ்வளவு உழைக்க வேண்டியுள்ளது.
இன்றைய தினம் வரை என்னவெல்லாம் நடந்ததோ அதெல்லாம் நாடகத்தின்படி
நடந்தது என்றே சொல்லலாம் என நீங்கள் அறிவீர்கள். இதில் நாம்
யாரையும் கெட்டவர்கள், நல்லவர்கள் என சொல்ல முடியாது.
நடப்பதனைத்தும் நாடகத்தில் பதிவாகியுள்ளது. தந்தை இனி வரும்
காலத் திற்காகப் புரிய வைக்கிறார் - சேவையில் இப்படிப்பட்ட
தவறான கர்மங்கள் செய்யாதீர்கள். இல்லாவிட்டால் டிஸ்-சர்வீஸ் (எதிர்
மறையான சேவை) ஆகிவிடும். இப்படி தந்தைதான் சொல்வார் அல்லவா.
நீங்கள் தங்களுக்குள் உப்பு நீராகி விட்டீர்கள். நாம் உப்பு
நீராக (வெறுக்கத்தக்கவராக) உள்ளோம் என புரிந்து கொள்கின்றனர்,
ஒருவர் மற்றவரை சந்தித்தாலும் பேசுவதில்லை, பிறகு யாரையாவது
ஏதாவது சொல்லிவிட்டால் ஒரேயடியாக கோபித்துக் கொள்வார்கள்.
சிவபாபாவை மறந்து விடுகின்றனர், ஆகையால் எப்போதும் சிவபாபாவை
நினைவு செய்யுங்கள் என புரிய வைக்கப்படுகிறது. தந்தை
குழந்தைகளுக்கு எச்சரிக்கை கொடுக்கிறார். இப்படி இப்படியான
காரியங்கள் செய்வதால் துர்க்கதி ஏற்பட்டு விடுகிறது. ஆனால்
அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால் புரிந்து கொள்வதே இல்லை.
யாரிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறதோ அந்த சிவபாபாவின் மீதே
கோபித்துக் கொள்கின்றனர். பிராமணி மீதும் கோபித்துக்
கொள்கின்றனர், இவர் (பிரம்மாவின்) மீதும் கோபித்துக்
கொள்கின்றனர். பிறகு ஒருபோதும் வகுப்புக்கு வருவதில்லை.
சிவபாபாவின் மீது ஒருபோதும் கோபித்துக் கொள்ளக் கூடாது அல்லவா.
அவருடைய முரளியைப் படிக்க வேண்டும். நினைவும் கூட அவரைத்தான்
செய்ய வேண்டும். பாபா சொல்கிறார் அல்லவா - குழந்தைகளே தன்னை
ஆத்மா என புரிந்து கொண்டு என்னை நினைவு செய்தீர்கள் என்றால்
சத்கதி ஏற்படும். தேக அபிமானம் ஏற்படுவதன் மூலம் தேகதாரிகளின்
மீது கோபித்துக் கொள் கின்றனர். ஆஸ்தியோ தாத்தாவிட மிருந்து
கிடைக்கும். தந்தையுடையவராக ஆகும்போது தாத்தாவின் ஆஸ்தி
கிடைக்கும். தந்தைக்கே டிவோர்ஸ் (மணமுறிவு) கொடுத்து விட்டால்
ஆஸ்தி எப்படி கிடைக்கும்? பிராமண குலத்திலிருந்து வெளியேறி
சூத்திர குலத்திற்குச் சென்றுவிட்டால் ஆஸ்தி காலியாகிவிடும்.
தத்து எடுத்தது நீக்கப்பட்டு விட்டது. பிறகும் கூட புரிந்து
கொள்வதில்லை. மாயை ஒரேயடியாக தோசைக்கல்லாக ஆக்கிவிடக் கூடியதாக
உள்ளது. தந்தையை எவ்வளவு அன்புடன் நினைவு செய்ய வேண்டும், ஆனால்
நினைவே செய்வது கிடையாது. சிவபாபாவின் குழந்தையாக உள்ளேன், அவர்
என்னை உலகின் எஜமானாக ஆக்குகிறார். கண்டிப்பாக பாரதத்தில்தான்
பிறப்பு எடுக்கிறார். சிவ ஜெயந்தி கொண்டாடுகின்றனர் அல்லவா.
உலகின் வரலாறு புவியியல் மீண்டும் நடக்கும் எனும்போது முதன்
முதலாக சிவபாபாதான் வந்து சொர்க்கத்தைப் படைப்பார். நமக்கு
சொர்க்கத்தின் இராஜ்யம் கிடைத்துக் கொண்டிருக்கிறது என நீங்கள்
அறிவீர்கள். தந்தைதான் வந்து சொர்க்கவாசியாக ஆக்குகிறார்.
புதிய உலகிற்காக இராஜயோகம் கற்பிக்கிறார். நீங்கள் சென்று
புதிய உலகத்தில் இராஜ்யம் நடத்துவீர்கள். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. புத்தி எனும் பையில் அழிவற்ற ஞான ரத்தினங்களை
நிரப்பிக்கொண்டு பிறகு தானம் செய்ய வேண்டும். தானம் கொடுப்பதன்
மூலம்தான் குஷி இருக்கும். ஞானச் செல்வம் அதிகரித்தபடி
இருக்கும்.
2. ஒருபோதும் தமக்குள் கோபித்துக் கொண்டு உப்பு நீராக ஆகக்
கூடாது. மிகவும் அன்புடன் தந்தையை நினைவு செய்ய வேண்டும்
மற்றும் முரளியை கேட்க வேண்டும். தோசைக்கல் ஆகிவிடக் கூடாது.
வரதானம்:
ஒரு தந்தையிடம் தொடர்பு வைத்து அனைவரின் உதவியையும்
பலனாக அடையக் கூடிய உண்மையான யோகி மற்றும் சகயோகி ஆகுக.
யார் எந்த அளவிற்கு யோகியாக இருக்கிறார்களோ, அந்த அளவிற்கு
அவருக்கு அனைவரின் சகயோகம் அவசியம் கிடைக்கும். யோகியின்
தொடர்பு அதாவது அன்பு விதையுடன் இருக் கின்ற காரணத்தினால்
அன்பிற்கு கைமாறாக அனைவரின் சகயோகம் கிடைத்து விடுகிறது. எனவே
விதையுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள், விதைக்கு அன்பு என்ற நீர்
கொடுக்கக் கூடியவருக்கு அனைத்து ஆத்மாக்களின் மூலம் சகயோகம்
என்ற பலன் கிடைத்து விடுகிறது. ஏனெனில் விதையுடன் தொடர்பு
இருக்கின்ற காரணத்தினால் முழு மரத்துடன் தொடர்பு ஏற்பட்டு
விடுகிறது.
சுலோகன்:
பழைய சன்ஸ்காரங்களை எனது என்று கூறுவது என்றால்
முயற்சியை தளர்வடையச் செய்கிறோம்.
அவ்யக்த இஷாரே: இப்பொழுது தனது வள்ளல் சொரூபத்தை
வெளிப்படுத்துங்கள்
ஒருவருக்கு எந்த விதத்திலாவது உதவி தேவைப்படுகிறது எனில் வள்ள-ன்
குழந்தைகள் அவர்களுக்கு உதவி செய்யுங்கள். ஆனால் அனைவருக்கும்
உதவியாளராக ஆக வேண்டு மெனில் அனைவருக்கும் பிரியமான வராக ஆக
வேண்டும். பிரியமானவராக இல்லையெனில் அனைவருக்கும்
உதவியாளராகவும் ஆக முடியாது. ஆகையால் எண்ணம், சொல், செயல்
மற்றும் சம்பந்தத்திலும் கூட உதவியாளர் மற்றும் வெற்றி மூர்த்தி
ஆகுங்கள்.