18.10.26 காலை முரளி
ஓம் சாந்தி 02.02.2012 பாப்தாதா,
மதுபன்
இப்பொழுது நினைவு சொரூபத்தின் அனுபவத்தினுடைய ஆத்தாரிட்டி
ஆகுங்கள், ஜுவாலாமுகி யோகம் மூலமாக அனைவருக்கும் ஒளி மற்றும்
சக்தியின் கிரணங்களின் சகயோகத்தை அளியுங்கள்
இன்று பாப்தாதா தனது எதிரே உள்ள மற்றும் நாலாபுறமும் உள்ள
சிறிய குடும்பத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றார். ஏனென்றால்
இது சிறிய குடும்பமாக இருந்தாலும், மிக அன்பான தாகும், இந்தக்
குடும்பத்தின் ஒவ்வொரு ஆத்மாவும் சிரேஷ்ட ஆத்மா ஆவார். கோடியில்
ஒரு சில ஆத்மாக்களாவர். தந்தையின் ஆஸ்திக்கு அதிகாரியான
ஆத்மாக்கள். பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் பார்த்து
குஷியடைகிறார், அதாவது இந்த ஒவ்வொரு குழந்தையும் அரச பதவி
அடையும் குழந்தைகள், பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் சுய
இராஜ்ய அதிகாரி மற்றும் விஷ்வ இராஜ்ய அதிகாரியாக ஆக்கியுள்ளார்.
இந்த சமயத்தில் அனைவருமே சுய இராஜ்ய அதிகாரிகளாவர், மனம்,
புத்தி, சன்ஸ்கார், கர்ம இந்திரியங்களுக்கு இராஜா ஆவார்கள்.
கர்மேந்திரியங் களுக்கு வசப்பட்டு இல்லை. மனதிற்கு கூட
எஜமானர்கள். அதனால் நீங்கள் தங்களது மனதிற்கு எஜமானர் ஆன
குழந்தைகள் சம்ஸ்காரங்களுக்கும் கூட எஜமானர் என்று
புரிந்துள்ளீர்களா? எப்பொழுதாவது மனதிற்கு எஜமானராகவும் அல்லது
மனம் உங்களுக்கு எஜமானராகவும் இல்லைதானே ! ஏனென்றால் என்னுûடைய
மனம் என்று கூறுகிறீர்கள். நான் மனம் என்று கூறுவதில்லை. அதனால்
என்னுடையது என்பதில் எஜமானர் நீங்கள். மனம் ஒருபொழுதும் எஜமானர்
ஆவதில்லை தானே? ஏனென்றால் இந்த சமயத்தில் பாப்தாதா ஒவ்வொரு
குழந்தையையும், சுயராஜ்ய அதிகாரியின் இருக்கையில்
அமர்த்தியுள்ளார். இப்பொழுது நீங்கள் சுயராஜ்ய அதிகாரிகள்
மற்றும் எதிர்காலத்தினுடைய இராஜ்யமோ உங்களு டையதுதான். இரட்டை
இராஜ்ய அதிகாரிகள் நீங்கள். பாப்தாதா பார்க்கின்றார், ஒவ்வொரு
குழந்தையும் சுய இராஜ்ய அதிகாரியின் கூடவே சுவமான் தாரியாகவும்
உள்ளீர்கள். ஆகவே நான் சுவமான்தாரி ஆத்மா என்ற நினைவில்
அமரும்பொழுது பாருங்கள், எவ்வளவு சுயமரி யாதையின் பட்டியல்
முன்னால் வருகிறது. பலவிதமான சுவமானங்களின் மாலை உங்கள் முன்
வருகிறதல்லவா !
பாப்தாதா சுவமானங்களின் மாலையை ஒவ்வொரு குழந்தைக்கும்
அணிவிக்கிறார். சுவமானத் தைக் கேட்டுக் கொண்டே, உங்களுக்கு
முன்னால் சுவமானத்தின் நினைவு வந்து விடுகிறது. அனாதி
சொரூபத்தில் உங்களது சுவமானம் எவ்வளவு உயர்ந்ததாக இருக்கிறது
என்பதை நினைவு கூறுங்கள். அனாதி சொரூபத்தில் சென்று விட்டீர்களா?
ஒவ்வொருவருக்கும் அனாதி சொரூபம் ஒன்று தந்தையுடன் கூடவே
பிரகாசித்துக் கொண்டு இருக்கும் ஆத்மா. தந்தையின் துணையில்
இருப்பதின் காரணமாக விசேஷமாக பிரகாசித்துக் கொண்டிருப்பது
தென்படுகிறது. பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? எவ்வாறு
ஆகாசத்திலும் கூட ஒரு சில நட்சத்திரங்கள் பிரகாசித்துக்
கொண்டிருக்கிறதோ அவ்வாறே தந்தையின் கூடவே இருப்பதின்
காரணத்தினால் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் அனாதி
சொரூபம் நினைவிற்கு வருகிறதா? ஒரு நொடியில் உங்களது அனாதி
சொரூபத்தில் நிலைத்திருக்க முடிகிறதா? இப்பொழுது ஒரு நொடியில்
அந்த அனாதி சொரூபத்தில் ஒரு நொடி நேரம் நிலைத்து விடுங்கள்
எவ்வளவு போதை ஏற்படுகிறது. முன்னேறிச் செல்லுங்கள்,
சிருஷ்டியின் ஆதி நிலைக்கருகில் வந்து விட்டீர்கள். சத்யுக
ஆரம்பத்தின் உங்களது சுப சொரூபமாக இருக்கிறது. பயிற்சி
செய்யுங்கள். எவ்வளவு சர்வ பிராப்தி சொரூபமாக இருக்கிறது.
துக்கத்தின் பெயர், அடையாளம் இல்லை. இயற்கை எவ்வளவு அழகாக சதோ
குணியாக உள்ளது. உங்களது தேவதா சொரூபத்தை அனுபவம் செய்யுங்கள்.
உங்கள் சொரூபத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? எந்த ராஜா
ஆகட்டும் மகாத்மா ஆகட்டும், தலைவர் ஆகட்டும், இம்மாதிதிôயான
சர்வ பிராப்தி சொரூபம் ஆனவரைப் பார்த்துள்ளீர்களா? அதனால் ஒரு
நொடிக்காக உங்கள் தேவதா சொரூபத்தில் நிலைத்து விடுங்கள்.
உங்களது சுவமானத்தில் மகிழ்ச்சி வருகிறது தானே. நாம் தான் தேவதை
என்ற பயிற்சியை பாப்தாதா செய்வித்துக் கொண்டு இருக்கிறார்.
பிறகு கீழே வாருங்கள் எந்த யுகம் வந்து விட்டது?
துவாபரயுகத்திலும் கூட உங்களுடைய சுவமான் பூஜைக்குரிய சொரூப
மாக இருந்தது. உங்களது பூஜ்ய சொரூபத்தைப் பார்க்கின்றீர்களா?
எவ்வளவு அனைத்து பாவனைகளுடன், விதிப்பூர்வமாக பூஜை
செய்கிறார்கள். இவ்வாறு விதிபூர்வமான பூஜை வேறு எவருக்கும்
நடப்பதில்லை தர்ம பிதாக்கள் ஆகட்டும் குருமார்கள் ஆகட்டும்,
தலைவர்கள் ஆகட்டும், நடிகர்கள் ஆகட்டும், யாருக்கும் இவ்வாறான
பூஜை நடப்பதில்லை. அதனால் உங்களது சுவமானத்தைப் பார்த்தீர்களா?
அனுபவம் செய்தீர்களா? இப்பொழுது சங்கமயுகத்தில் வாருங்கள்
இவ்வாறு சுற்றி வருகிறீர்களா? பின்னால் இருப்பவர்களும் சுற்றி
வருகிறிர்களா? கையை உயர்த்துங்கள். பாருங்கள், உங்களது
சுவமானத்தை ஏனென்றால் நீங்கள் சுயராஜ்ய அதிகாரிகள்
சங்கமயுகத்தில் சுயம் பகவான் உங்களது வாழ்க்கையில் சுயம்
தலைவனாக இருப்பவர், குழந்தைகளாகிய உங்களுக்குள் தூய்மையின்
விசேஷத்தை நிரப்புகிறார் அனைத்து அழியாத சுகத்தினுடைய சுரங்கம்
தூய்மையாகும் மேலும் ஆக்குபவர் யார்? சுயம் பகவான் இப்பொழுதும்
கூட பிரத்யட்சமாக உங்களது தூய்மையின் சொத்து தந்தை யிடமிருந்து
பிராப்தி யாகிறது. இப்பொழுது சோதனை செய்யுங்கள். தூய்மை சர்வ
பிராப்திகளின் ஆதாரமாக இருக்கிறது. இதன் மூலம் நீங்கள் அனைவரும்
மாஸ்டர் சர்வசக்திவான் ஆகிவிட்டீர்கள். சர்வ சக்திகளின்
பிராப்தி இருக்கிறதா என சோதனை செய்யுங்கள். ஒரு சில குழந்தைகள்
கூறு கின்றார்கள், பாபாவோ அனைத்து சக்திகளையும் கொடுத்துள்ளார்,
ஆனால் சில நேரங்களில் எந்த சக்தியினுடைய அவசியம் உள்ளதோ, அது
சிறிது நேரத்திற்குப் பின் வருகிறது. விசயம் முழுதும்
முடிந்தபின் வருகிறது. இதனுடைய காரணம் என்ன? வரதான ரூபத்தில்
பாபா கொடுத்திருந்தும் கூட உரிய நேரத்தில் அது வராமல்
இருப்பதற்கான காரணம் என்ன? உங்களின் மாஸ்டர் சர்வ சக்திவான்
நினைவினுடைய இருக்கையில் இருக்கவில்லை. சரியான இருக்கையில்
இருப்பவருடைய கட்டளையை ஏற்றுக் கொள்கிறார்கள் அதனால்
எப்பொழுதெல்லாம் நீங்கள் ஏதோ ஒரு சக்திக்கான கட்டளை
இடுகிறீர்களோ, அப்பொழுது நினைவின் சீட்டில் இருக்கிறோமா என்று
முத-ல் பாருங்கள். சுவமானத்தின் இருக்கையில் உள்ளீர்களா?
நினைவில் இருக்கையில் உள்ளீர்களா? நிûவின் இருக்கையில்
நிலைத்திருக்கும் போது, சர்வ சக்திகள் உங்களிடம் சமயத்தில்
வருவதற்காக கட்டுப்பட்டுள்ளன, ஏனென்றால் சர்வ சக்திவான் பாபா
உங்களை மாஸ்டர் சர்வ சக்திவான் ஆக்கியுள்ளார், அதனால் இவ்வளவு
சக்தி நிறைந்த சுவமான்தாரியாகி நடந்து கொண்டு இருக்கிறீர்கள்
தானே, உங்களது சுவமானத்தைப் பார்த்தீர்களா? சங்கமயுகத் திற்குப்
பிறகு எங்ககே செல்வீர்கள்? திரும்பிச் செல்லும் பிரயாணம்
செய்வீர்கள் தானே. ஆகையால் பாப்தாதா ஒவ்வொருவரும் முழு நாளில்
இந்தப் பயிற்சி செய்து கொண்டிருக்க வேண்டும் என விரும்புகிறார்.
அடிக்கடி நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள், இந்த சுவமானத்தின்
மாலையை அணிந்து கொள்வதினால் அனுபவம் செய்வதினால், பாப்தாதா சுய
இராஜ்ய அதிகாரியாக ஆக்கியதால், சுவமான், உங்கள் கட்டளைப் படி
நடக்கவில்லை என்பது இருக்காது. இருக்கையில் மட்டும்
நிலைத்திருங்கள்.
அனைவரும் கவனம் வைத்துள்ளனர் என்பதை பாப்தாதா பார்க்கிறார்.
ஆனால் நியமப்படியான ரூபத்தில் தங்களது தினசரி நடவடிக்கைகளை
ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இடை இடையே உங்களது சுவமானத்தின்
நினைவு சொரூபத்தில் நிலைத்திருங்கள். எவ்வாறு டிராபிக்
கண்ட்ரோல் செய்கிறீர்களோ, அவ்வாறே சுவமானத்தின் நினைவு ஆதிகாலம்
முதல் திரும்பிச் செல்வதற்கானது. இடை இடையே நேரம் ஒதுக்குங்கள்.
இதை போகும் போதும், வரும்போதும் செய்ய முடியும், ஏனென்றால் மனதை
இருக்கையில் அமர வைத்துள்ளீர்கள். பாப்தாதா பார்த்தார், ஏற்கனவே
கூறியுள்ளார், அதாவது அனைவரும் யோகத்தில் ஈடுபடுகிறீர்கள்.
ஆனால் இப்பொழுது எதனுடைய அவசியம் தேவை? நேரத்தின் நிலைமையைப்
பார்த்து இப்பொழுது ஜுவாலாமுகி யோகத்தின் அவசியம் இருக்கிறது
என்று. இதன் மூலம் இரண்டு காரியம் ஏற்படும் ஒன்று, தங்களது
பழைய சம்ஸ்காரங்கள் விடுபட்டு விடும். இப்பொழுது பழைய
சம்ஸ்காரங்களை விட்டு விடுகிறீர்கள். ஆனால் எரிப்பதில்லை.
விட்டபிறகும் கூட மீண்டும் அவ்வப்பொழுது எழுகிறது. எவ்வாறு
இராவணனை எரித்தார்களோ அவ்வாறே நீங்களும் கூட பழைய சம்ஸ்காரங்களை
இடை இடையே தீவிர புருஷார்த்தத்தினால் குறைத்து விடுகிறீர்கள்.
இதற்காக ஜுவாலாமுகி யோகத்தின் அவசியம் இருக்கிறது ஜுவாலாமுகி
யோகம் மூலமாக தனக்காகவும், மற்றவர்களுக்கும் கூட ஒளி மற்றும்
சக்தி ருபம் ஆனதின் காரணமாக அவர் களுக்கும் கூட உங்கள்
கிரணங்கள் மூலமாக சகயோகம் அளிக்க முடியும். அதனால் இப்பொழுது
அனைவரும் ஜுவாலாமுகி யோகத்தில் பரிவர்த்தனை செய்துள்ளீர்களா?
இப்பொழுதுள்ள நேரத்தின்படி ஆத்மாக்களுக்கு உங்களுடைய சகயோகம்
தேவைப்படுகிறது. மற்றபடி பாப்தாதாவோ அமிர்தவேளையில் ஒவ்வொரு
குழந்தைக்கும் சிநேகம் அளிக்கிறார்.
பாப்தாதா பார்க்கிறார், லட்சியம் மிக நன்றாக வைக்கிறீர்கள்,
தைரியமும் வைக்கிறீர்கள். ஆனால் முழு நாளும் எவ்வாறு
அமிர்தவேளையில் வைக்கும் கவனம் குறைந்து விடுகிறது. காரணம்
என்ன? இதில் எந்தக் காரியத்திலும் கர்மயோகியாக இருந்து கர்மம்
செய்வதில் வித்தியாசம் ஏற்பட்டு விடுகிறது. நீங்கள் யோகத்தில்
ஈடுபடுபவர் மட்டுமல்ல, ஆனால் யோகி வாழ்க்கை வாழ்பவர்கள், அதனால்
வாழ்க்கை என்பது, அவ்வப்பொழுது இல்லாமல் சதா இருக்கின்றது.
அதனால் பாப்தாதா இப்பொழுது என்ன விரும்புகிறார்? அன்பில்
அனைவருமே தேர்ச்சி பெற்றுள்ளீôகள். அன்பின் பாடத்தின்
பெரும்பான்மை குழந்தைகள் தந்தையுடன் இணைந்து என்னுடைய பாபா
என்னுடைய பாபா என்று கூறிக் கொண்டு அன்பின் அனுபவம்
செய்கிறார்கள். இப்பொழுது எந்த விசயத்தில் தேர்ச்சியடைய
வேண்டும். பாப்சமான் ஆவதில் அனைவரும் எதை விரும்புகிறீர்கள்?
தந்தைக்குச் சமமாக ஆவதில் தானே. தந்தை தந்தை யாகவும்
இருக்கிறார். நீங்கள் அவருடைய குழந்தைகள். அதனால் பாப்சமானாக
ஆக வேண்டும். அன்பு என்றால் என்ன? அன்புள்ளவர் எதைக் கூறினாலும்
அதைச் செய்தே ஆக வேண்டும். அதனால் அனைவரும் தந்தையின் அன்புக்
குழந்தைகள். தந்தையின் அன்பு உங்களிடம் உள்ளதா? இதில் கையை
உயர்த்துங்கள். நல்லது அன்பு இருக்கிறது அதனால் இப்பொழுது
பாப்தாதா இதை விரும்புகிறார். அதாவது, எவ்வாறு அன்பு உள்ளதோ
அவ்வாறே நாமும் பாப்சமான் ஆகியே தீர வேண்டும் என்ற லட்சியம்
வையுங்கள். இதில் கையை உயர்த்துங்கள். நிச்சயம் வைப்பவர்கள்
கையை நன்றாக உயர்த்துகிறார்கள். பாப்தாதா பார்த்துக்
கொண்டிருக்கிறார்.
பாப்தாதா விரும்புகிறார், ஒவ்வொரு குழந்தையும் இவ்வாறு
அழகாகவும் அதிர்ஷ்டம் நிறைந்தவர்களாகவும் காட்சி அளிக்கிறார்கள்.
தற்கால நேரப்படி உங்களது முகமும், நடத்தை யும் மிகுந்த சேவை
செய்யும், அவசியம் ஏற்படுகிறது. இதற்காக பாப்தாதா
விரும்புகிறார், அதாவது இப்பொழுதி-ருந்தே லட்சியம் வையுங்கள்
75 ஆண்டும் ஆன காரணத்தினால் அனைவருக்கும் சேவை செய்வதில் ஊக்கம்
இருக்கிறது. இவ்வாறு முகம் மூலமாக சேவை செய்வதற்கான ஊக்கம்
இருக்க வேண்டும். ஏனென்றால் நாளுக்கு நாள் நேரம் ஆபத்தானதாக
ஆகிக் கொண்டு வருகிறது. அதனால் இம்மாதிரியான நேரத்தில் உங்களது
முகம் பல ஆத்மாக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.
பாப்தாதா இன்று அமிர்தவேளையில் சுற்றி வந்தார் எதைப் பார்த்தார்?
அனைவரும் மகிழ்ச்சி யாக இருந்தார்கள். ஆனால் அனைத்தையும் விட
உயர்ந்தது அனுபவத்தினுடையதாகும். அனைவரும் அனுபவத்தின்
அதிகாரியாக, நினைவில் அமர்கிறார்கள். ஆனால் நினைவு சொரூப மாக
ஆக வேண்டும். அனுபவத்தினுடைய ஆனந்தம் சில நேரம் ஏற்படுகிறது.
நான் பாப்தாதா வினுடைய இதய சிம்மாசனதாரியாவேன் என்று நினைக்
கிறார்கள். ஆனால் நினைவு சொரூபத்தின் அனுபவி மூர்த்தியாக
ஆகின்றார்கள். இதை மேலும் அதிகரிக்கச் செய்ய வேண்டும் ஏனென்றால்
அனுபவத்தின் அத்தாரிட்டி எல்லாவற்றையும் விட பெரியதாகும்.
நினைவு சொரூபத்தில் இருப்பது தான் அனுபவம் என்று கூறப்படுகிறது.
அதனால் அனுபவத்தில் மூழ்கி நினைவின் அனுபவத்தில் இருப்பது
மிகவும் அவசியமாக இருக்கிறது. ஏனென்றால் அனுபவம் ஒருபோதும்
மறக்கச் செய்யாது. எவருக்காவது நீங்கள் அனுபவம் மூலமாகச்
சொல்வதற்கு முயற்சி செய்யும்பொழுது அந்த அனுபவத் தின் பிரபாவம்
ஏற்படு கிறது. அதனால் சுயத்தில், நினைவு சொரூபத்தில்
இருக்கும்பொழுது அந்த அனுபவத்தில் மூழ்கிவிடுங்கள். அனுபவம்
உங்களது புருஷார்த்தத்தில் மிகுந்த உதவி செய்கிறது. அனுபவத்
தின் அத்தாரிட்டியில் வரிசைக் கிரமம் இருப்பதை பாப்தாதா
பார்த்தார். ஆகவே இந்த அனுபவத்தினுடைய அத்தாரிட்டியின் பயிற்சி
மீது மேலும் கவனம் வையுங்கள். அனுபவ சொரூபத்தின் ஸ்திதி
எப்பொழுதும் இணைந்தே இருக்கிறது. அதன் அடையாளம், நடவடிக்கை சேவை
செய்கிறது.
ஆகவே இன்று பாப்தாதா குழந்தைகளின் பதிவேட்டைப் பார்த்துக்
கொண்டிருந்தார். ஒன்று ஜுவாலாமுகி யோகத்தின் மீது மேலும் கவனம்
கொடுங்கள். இதன் மூலம் சுபாவம் சம்ஸ்கார பரிவர்த்தனையில்
சகயோகம் கிடைக்கும். உங்களின் இயற்கையான சுபாவம் எது என்று
கூறுகிறீர்களோ இப்பொழுது கூட உங்களின் காரியத்தின் நடுவே செய்து
கொண்டிருக்கிறது. மற்றபடி பாப்தாதா எந்த விசயத்தில்
மகிழ்ச்சியடைகிறார்? அது தெரியுமா? இன்றைய நாட்களில் முரளி
கேட்கும்பொழுதே தினசரி நடவடிக்கைகளில் கவனம் அதிகமாகச் செல்வதை
பாப்தாதா பார்த்தார். கவனம் அதிகமாகும்பொழுது, டென்ஷனான சுபாவம்
குறைந்து விடுகிறது. பாப்தாதா ஏற்கனவே கூறியுள்ளார்
எப்பொழுதெல்லாம் டென்ஷன் வருகிறதோ ஏ என்று எழுதி
(அட்டென்ஷன்) சேர்த்து எழுதிவிடுங்கள். இதன்படி அனைவருமே
செல்லவேண்டும் என்று உறுதியாக இ,ருக்க வேண்டும். கூடவே செல்வோம்,
வடவே இராஜ்ஜியம் செய்வோம். ஆகவே எப்பொழுதும் குஷியாக
இருக்கிறீர்களா? இல்லை அவ்வப்பொழுதா? யார் சதா நாங்கள் குஷியாக
இருக்கிறோம், அவ்வப்பொழுதல்ல என்று புரிந்துள்ளவர்கள், யோசித்து
கையை உயர்த்துங்கள். நல்லது. யோசனை செய்து கையை
உயர்த்துகிறீர்கள். குஷி என்பது உங்களது பொருளாகும். அது ஏன்
போக வேண்டும்? அதனால் இப்பொழுது என்ன செய்வீர்கள். முன்னேறிச்
சென்றே ஆக வேண்டும். அதனால் இப்பொழுது இனிமேல் என்ன செய்வீர்கள்?
ஒவ்வொரு சென்டரும் தடைகளற்றதாகவும், வீணான சங்கல்பங்கள்,
ஏற்படாமல் இருக்க முடியுமா? இதற்கு இன்னும் நேரம்
தேவைப்படுகிறதா? எங்களது சென்டர் தடைகளற்றதாக சதா இருக்கிறது
என்னும், உடன் இருப்பவர்கள் தடைகள் அற்றவர்களாகி இருக்கிறார்கள்
என்று, இதுவரை பாப்தாதாவிடம் அறிக்கை அளிக்க வில்லை. சுயம் தான்
மட்டுமல்ல, கூட இருப்பவர்களும் தடைகளற்றவர்களா இருக்க வேண்டும்.
அதற்கான நேரமும் வர வேண்டும். நடந்து விடும், ஏனென்றால்
குழந்தைகள் தான் செய்ய வேண்டும். மேலும் சிலர் எடுத்துக்
காட்டாக வருவார்கள், அவர்கள் தீவிர புருஷார்த்தம் செய்து
முன்னேறிச் செல்வார்கள். ஆனால் நீங்கள் தான் பெரும்பான்மையான
முன்னே செல்ல வேண்டும். பெரும்பான்மை யினருக்கு முரளியில் அன்பு
இருப்பதைப் பார்க்கிறார். ஆனால் எவ்வாறு ஜெகதம்பா நடைமுறை
வாழ்க்கையில் பாபா எதைக் கூறினாரோ அதைச் செய்தே ஆக வேண்டும் என
லட்சியம் வைத்து, மேலும் புருஷார்த்தத்திலும் கவனமும்
கொடுத்தார். உங்களுடைய தீதி, தாதிகள் அட்வான்ஸ் பார்ட்டியில்
சென்றவர்களும் கவனம் வைக்கிறார்கள். இப்பொழுது உங்களுக்காக
காத்துக் கொண்டிருக்கிறார்கள். நிறைவு அடையும் கதவு எப்பொழுது
என்று கேட்கிறார்கள். ஒருவரோ, இருவரோ திறக்க முடியாதல்லவா.
அதனால் இப்பொழுது புருஷார்த்தம் செய்து கதவு திறக்கக் கூடிய
நேரத்தை அருகில் கொண்டு வாருங்கள். சம்பன்னமாவது என்றால்
அருகில் கொண்டு வருவதாகும்.
நாலாபுறங்களிலும் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் பாப்தாதா
உள்ளத்தின் சிநேகத்தைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். இதன்
கூடவே பாப்தாதா இரண்டு மாதங்களுக்கான கொடுத்துள்ள காரியத்தை
நினைவூட்டிக் கொண்டிருக்கிறார் ஏன்? நிறைய முயற்சி செய்தும்
வீணான சங்கல்பம், தீவிர புருஷார்த்தம் செய்வதற்கு பதிலாக
சாதாரணமாக்கி விடுகிறது. ஆகையால் நாலாபுறமும் உள்ள
குழந்தைகளுக்கு பாப்தாதா அன்பு நினைவு களின் வடவே இந்த
நினைவையும் ஏற்படுத்துகிறார், அதாவது இந்த சங்கமயுகத்தின் நேரம்
எவ்வளவு சிரேஷ்ட சுகம் நிறைந்ததாக இருக்கிறது, இந்த சங்கமயுக
நேரந்தான் அனைத்து கஜானாக்களும் தந்தையின் மூலம்
பிராப்தியாகிறது. சங்கமயுகத்தின் ஒவ்வொரு நொடியும் மதிப்பு
மிக்கதாகும். ஆகையால் சங்கமயுகத்தின் மதிப்பை சதா உங்களது
புத்தியில் வைத்திருங்கள். சங்கம யுகத்தின் ஒருநொடி எவ்வளவு
பிராப்தியை உருவாக்கு கிறது. உங்களுக்கு என்ன கிடைத்
திருக்கிறது என்று யாராவது கேட்டால், என்ன பதில் கூறுவீர்கள்?
பிராமணர் களாகிய எங்களது உள்ளத்தில் அப்பிராப்தி என்று ஏதும்
இல்லை அடைய வேண்டும் என்பதை அடைந்து விட்டோம் என்று. அதை
இப்பொழுது செய-ல் கொண்டு வந்து, தீவிர புருஷார்த்தியாகி சமயத்தை
அருகில் கொண்டு வாருங்கள். நல்லது அனைவருக்கும் ஊக்கம் வருவதைப்
பாப்தாதா பார்க்கிறார், மேலும் இந்த ஊக்கம் அதிகரித்துக் கொண்டே
இருங்கள் நல்லது.
ஆசீர்வாதம்:
உங்களடைய சொரூபத்தின் மூலமாக பக்தர்களுக்கு ஒளிக் கிரீடத்தின்
சாட்சாத்காரம் செய்விக்கக் கூடிய இஷ்ட தேவதை ஆகுக !
எப்பொழுதிலிருந்து தந்தையின் குழந்தையாக ஆனிர்களோ, தூய்மையின்
உறுதிமொழியை கொடுத்தீர்களோ, அதற்குப் பதிலாக ஒளிக்கிரீடம்
பிராப்தியாகிறது. இந்த ஒளிக்கிரீடத்தின் முன்பு இரத்தினங்கள்
பதித்த கிரீடம் ஒன்றுமே இல்லை. எந்த அளவு சங்கல்பம், பேச்சு,
கர்மத்தில் தூய்மையின் தாரணையை செய்வீர்களோ, அந்த அளவு இந்த
ஒளிக்கிரீடம் தெளிவாகத் தென்படும். மேலும் இஷ்ட தேவதையின்
ரூபத்தில் பக்தர்களுக்கு முன்பாக பிரத்யட்சம் ஏற்பட்டுக் கொண்டே
இருக்கும்.
சுலோகன்:
சதா பாப்தாதாவின் குடை நிழலில் இருக்கும்போது,
விக்ன விநாசக் ஆகிவிடுவீர்கள்.
அவ்யக்த இஷாரா : பரோபகாரி பாவனை மூலம் சம்பன்னமாகி
துக்கம் கொடுப்பவர்களுக்கும் (அபகாரி) உபகாரம் (உதவி)
செய்யுங்கள்.
எவ்வாறு பாப்தாதா ஒவ்வொரு அடியிலும் குழந்தைகளின் கூடவே
சகயோகியாக இருக்கிறார். மேலும் இறுதிவரை இருப்பார். எவர் மீதும்
பாபாவிற்கு வெறுப்பு ஏற்படுவதில்லை. எப்பொழுதும்,
அபகாரிகளுக்கும் வட சுபசிந்தனையாளராக இருக்கிறார். இவ்வாறு
தந்தையைப் பின்பற்றுங்கள். ஒவ்வொரு ஆத்மா மீதும் சதா சுப
சிந்தனை வையுங்கள். இவர் ஏன் இப்படி செய்தார் என்று
நினைப்பதற்குப் பதிலாக இந்த ஆத்மாவிற்கு எவ்வாறு நன்மை ஏற்பட
வேண்டும் என எண்ணுங்கள். அப்பொழுதுதான் சுப சிந்தனையாளர்
மற்றும் விஷ்வ கல்யாண காரி ஆத்மா என்று கூறுவார்கள்.
விசேஷமான செய்தி : மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமைக்கான
செய்தி.
இன்று இம்மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை அனைத்து சகோதர
சகோதரிகளும் குழுவின் ரூபத்தில் ஒன்றாக அமர்ந்து மாலை 6.30 மணி
முதல் 7.30 மணிவரை தங்களது சாந்த சொரூபத்தில் நிலைத்திருங்கள்.
சாந்திக் கட-ன் ஆழத்தில் சென்று பரம சுகம் மற்றும்
குளிர்ச்சியின் அனுபவம் செய்யுங்கள். அதாவது அனைத்து
ஆத்மாக்களுக்கும், சாந்தியின் தானத்தைக் கொடுக்கக் கூடிய சேவை
செய்யுங்கள்.