19.07.26 காலை முரளி
ஓம் சாந்தி 18.01.2011 பாப்தாதா,
மதுபன்
பிரம்மா பாபாவிற்கு சமமாக வாழ்ந்து கொண்டே ஜீவன்முக்தி நிலையின்
மகிழ்வை அனுபவம் செய்யுங்கள்; (பாபா மீது கொண்ட) அன்பின்
பரிசாக - மனதை வென்று உலகை வென்றவராக ஆகுங்கள்
இன்றைய நாள் குறிப்பாக பிரம்மா பாபாவின் அவ்யக்தமான (மறைந்த)
நாளின் நினைவு நாளாகும். அனைத்து குழந்தைகளின் கண்களிலும்
பிரம்மா பாபா மீது கொண்ட அன்பு நிறைந்துள்ளது. இன்று அதிகாலை 4
மணிக்கும் முன்பிருந்தே குழந்தைகளின் அன்பு வதனத் திற்கு
வந்தடைந்துவிட்டது. பிரம்மா பாபாவை சந்திப்பதற்கும், அன்பின்
அடையாளமாகத் தங்கள் இதயப்பூர்வமான அன்பின் மாலைகளும் பிரம்மா
பாபாவை வந்தடைந்தது. ஒவ்வொரு மாலையின் நறுமணத்திலும்
குழந்தைகளின் அன்பு கலந்திருந்தது. ஒவ்வொரு குழந்தையின்
கண்களும் புன்னகையும் - இதயத்தின் விஷயங்களைப் பேசிக் கொண்டு
இருந்தன. பிரம்மா பாபாவும் கூட ஒவ்வொரு குழந்தைக்கும்
அன்பிற்கான பதிலை வழங்கிக் கொண்டு இருந்தார். இப்போதும் ஒவ்வொரு
குழந்தையும் தங்கள் கண்களின் பாஷை மூலம் தங்களின் இதயப்
பூர்வமான அன்பைக் கொடுத்துக் கொண்டிருப்பதைத் தந்தை பார்த்துக்
கொண்டிருக்கிறார்; ஏனெனில் இந்த பரமாத்ம அன்பு ஒவ்வொரு
குழந்தையையும் எளிதாக தந்தைக்குரியவராக ஆக்கக்கூடியதாகும்.
இந்த அலௌகீக அன்பு - 'எனது பாபா' என்ற அனுபவத்தின் மூலமாக நம்மை
அவருக்குரியவராக ஆக்குகின்றது. இந்த அன்பு - தந்தையின்
பொக்கிஷங்களுக்கு நம்மை எஜமானராக ஆக்கக்கூடியது, ஏனெனில்
குழந்தைகள் 'எனது பாபா' என்று சொன்ன மாத்திரத்திலேயே, அனைத்து
பொக்கிஷங்களுக்கும் எஜமானராகி விடுகின்றார்கள். இந்த அன்பு -
உடல் உணர்வை ஒரு நொடியில் மறக்கச் செய்து, நம்மை ஆத்ம உணர்வு (தேஹி
அபிமானி) உடையவர்களாக ஆக்கி விடுகின்றது. தந்தையைத் தவிர வேறு
எதுவும் ஆத்மாவை ஈர்ப்பதில்லை. இந்த நாளுக்கு மிகப்பெரிய
முக்கியத்துவம் உண்டு. இது வெறும் நினைவு நாள் மட்டுமல்ல, இது
ஒரு சக்தி அளிக்கும் நாளாகும். ஏனெனில் இந்நாளில் தந்தை உலக
சேவைக் காகத் தான் 'செய்விப்பவராக' (கரவன்ஹார்) இருந்து,
குழந்தைகளைச் 'செய்பவர்களாக' (கரன்ஹார்) ஆக்குவதற்கான
திலகமிட்டார். தந்தையைப் பின்பற்றும் குழந்தைகளை –
செய்பவர்களாக, ஒரு கருவியாக ஆக்கினார். சேவையில் வெற்றி
அடைவதற்கான வழிமுறை என்பது-தான் செய்விப்பவராக மாறி,
குழந்தைகளைச் செய்பவராக ஆக்குவதாகும். ஏனெனில், "சேவையில்
வெற்றி அடைவதற்கான காரணம், நான் செய்பவன், செய்விப்பவர்
செய்வித்துக் கொண்டிருக்கிறார்" என்ற நினைவோ அல்லது நிலையோ
மிகவும் அவசியமானதாகும். ஏனெனில் 63 பிறவிகளின் நினைவினால் 'நான்'
என்ற எண்ணம் தேக அபிமானத்திற்குள் கொண்டு வந்துவிடுகின்றது. "செய்விப்பவர்
செய்வித்துக் கொண்டிருக்கின்றார், நான் செய்யக் கூடிய ஒரு கருவி
(நிமித்தம்) மட்டுமே" என்ற நினைவினால், தன்னையே கருவியாகப்
புரிந்து கொள்ளும் போது தேக அபிமானம் முடிவுக்கு
வந்துவிடுகின்றது. எனவேதான் குழந்தை களுக்குச் செய்யும்
பொறுப்பைக் கொடுத்து, அவர்களைச் செய்பவர்களாகவும், தான்
செய்விப் பவராகவும் மாறினார். செய்பவராக மாறுவதன் மூலம்
ஆத்மாக்கள் தானாகவே கருவியாகவும், பணிவுடையவர்களாகவும் (நிர்மான்)
மாறிவிடுகின்றார்கள். இப்போதும் கூட, குழந்தைகள் ஒரு கருவியாக
இருந்து சேவை செய்வதைப் பாப்தாதா பார்த்தார்; அவ்வாறு கருவியாக
இருந்து சேவை செய்யும் சேவாதாரிகளின் நெற்றியில் சேவையின்
பலனாகிய அதிர்ஷ்ட நட்சத்திரம் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது.
பெரும்பான்மையான குழந்தைகளின் சேவையைப் பார்த்து பாப்தாதா
மகிழ்ச்சியடைகின்றார்; எனவே இத்தகைய விசேஷ குழந்தைகளைப்
பார்த்து, "வாஹ் குழந்தைகளே வாஹ்!" (ஆஹா குழந்தைகளே ஆஹா) என்று
கூறி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்.
பிரம்மா பாபா குறிப்பாக மிகுந்த மகிழ்ச்சி அடைந்து
கொண்டிருக்கின்றார், மேலும் எதிர்காலத் திலும் ஒரு கருவியாக (நிமித்தமாக)
இருந்து சேவையை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்காக
வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார். இப்போதும்
கூட பிரம்மா பாபா, குழந்தை களைத் தமக்குச் சமமான பரிஷ்தா
நிலையில் நிலைத்திருப்பதற்கான சமிக்கைகளை வழங்கிக் கொண்டு
இருக்கின்றார். குழந்தைகள் தங்களின் கவனத்தை எப்போதும்
நிலைநிறுத்தி இருப்பதை பாப்தாதா பார்த்தார்; பிரம்மா பாபா
எப்படித் தன் வாழ்ந்து கொண்டே ஜீவன் முக்தராக (வாழ்விலிருந்து
விடுபட்ட நிலையில்) இருந்தாரோ, அவ்வளவு பொறுப்புகள் இருந்த
போதிலும் அவ்வளவு பெரிய குடும்பத்தைப் பராமரிப்பது, அனைவரையும்
யோகி வாழ்க்கை வாழச் செய்வது, இவ்வளவு சேவைப் பொறுப்புகளைக்
கையாள்வது, சேவையில் எப்போதும் முன்னோக்கி நகர்த்துவது என
அனைத்துப் பொறுப்புகள் இருந்தபோதிலும் அவர் ஜீவன்முக்தி
நிலையின் மகிழ்வை அனுபவித்தார்; இதனால்தான் பக்தி மார்க்கத்தில்
பிரம்மாவின் ஆசனத்தை தாமரை ஆசனமாகக் (கமல ஆசனம்)
காட்டுகின்றார்கள். அவர் ஜீவன் முக்தராக ஆகி இப்போதே (சங்கம
யுகத்திலேயே) ஜீவன் முக்தி நிலையின் மகிழ்வை அனுபவித்தார்,
மேலும் உங்கள் அனைவரையும் அவ்வாறே உருவாக்கினார். இப்போதும்
கூட குழந்தை களாகிய உங்களை பரிஷ்தாவாக ஆக்குவதற்கான பல்வேறு
யுக்திகளைக் கூறி, தமக்குச் சமமாக உருவாக்க விரும்புகின்றார்.
ஒவ்வொரு குழந்தையின் இலட்சியமும் மிக நன்றாக இருப்பதை பாப்தாதா
பார்த்தார். யாரிடம் கேட்டாலும், "உங்களுடைய இலட்சியம் என்ன?"
என்று கேட்டால் என்ன சொல்கின்றீர்கள்? நினைவு இருக்கின்றதா,
என்ன சொல்கின்றீர்கள்? "தந்தைக்குச் சமமாக ஆகியே தீர வேண்டும்
என்பதுதான்!" அப்படியென்றால் தந்தைக்குச் சமமாக என்னவாக
ஆகுவீர்கள்? இந்த வாழ்க்கை யிலேயே (வாழ்ந்து கொண்டே)
ஜீவன்முக்தி வாழ்க்கையின் முன்மாதிரியாக ஆகுவீர்கள்.
கொடுக்கப்படும் வீட்டுப்பாடங்களில் குழந்தைகள் கவனம் செலுத்து
வதையும், அதை அனுபவம் செய்வதையும் பாப்தாதா பார்க்கின்றார்;
ஆனால், அதை எப்போதும் (நிரந்தரமாக) செய்வ தில்லை. இப்போது கூட
கொடுக்கப்பட்டிருந்த காரியத்தின் அறிக்கையை (ரிப்போர்ட்) பல
குழந்தைகள் தங்களின் ஆன்மீக முயற்சியின் மூலம் ஒரு மாதம்
முழுமையாகக் கவனம் செலுத்தி வழங்கியுள்ளனர். பல மண்டலங்களின்
அறிக்கைகள் ஒரு மாதத்தின் முடிவாக மிக நன்றாக வந்துள்ளன. யார்
அறிக்கை அனுப்பியுள்ளார்களோ, எந்த மண்டலத்தைச் சேர்ந்தவர்கள்
அனுப்பியுள்ளார்களோ, அவர்களைப் பார்த்து பாப்தாதா "ஆஹா
குழந்தைகளே ஆஹா!" என்று கூறி வாழ்த்துக்களைத் தெரிவித்துக்
கொண்டிருக்கின்றார். ஆனால் இப்போது பாப்தாதா என்ன
விரும்புகின்றார்? இப்போது பாப்தாதா ஒவ்வொரு
குழந்தையிடமிருந்தும் இதைத்தான் விரும்பு கின்றார்-இப்போது
நீங்கள் "அவ்வபோது" நன்றாக இருக்கிறீர்கள், ஆனால் தந்தை "எப்போதும்"
(சதா) அவ்வாறு இருக்க வேண்டும் என விரும்புகின்றார். நீங்கள்
நல்ல யோகிகளாகவும் ஆகியுள்ளீர்கள், ஆனால் உங்களை 'நிரந்தர
யோகியாக' ஆக்க விரும்புகின்றார். தற்காலத்தில் பாப்தாதா
குழந்தைகளுக்கு ஒரு காரியத்தைக் கொடுத்திருந்தார்-எப்போதும்
அந்த நிலை யிலேயே இருப்பதற்காக, ஒவ்வொரு மணி நேரமும்
தங்களுக்குள் ஏதேனும் ஒரு யுக்தியை வைத்துக் கொள்ளுங்கள்; அதன்
மூலம் அந்த "அவ்வபோது" என்ற நிலை மாறி "எப்போதும்" (சதா) என்ற
வார்த்தை வந்துவிடும்.
இப்பொழுது பாப்தாதா இதையே விரும்புகின்றார் - அதாவது மனதை
வென்றவர்கள், உலகத்தை வென்றவர் களாக சொல்லப்படுகின்றது;
மனதிற்கு எந்த சங்கல்பத்தைக் கொடுக்கிறீர்களோ, அது அதையே செய்ய
வேண்டும். ஏன்? மற்ற கர்மேந்திரியங்கள், நீங்கள் எப்போது
விரும்புகின்றீர் களோ, எப்படி விரும்புகின்றீர்களோ அப்படிச்
செய்கின்றன அல்லவா! அதேபோல மனதிற்கும் நீங்கள் என்ன கட்டளை
இடுகின்றீர்களோ, அது அதையே செய்ய வேண்டும். நீங்கள் பயிற்சி
செய்கின்றீர்கள், ஆனால் அவ்வபோது செய்வதில்லை. பாப்தாதா இப்போது
என்ன விரும்பு கின்றார் என்றால், மனதை சக்திகள் என்ற
கடிவாளத்தின் மூலம் நீங்கள் எப்படி நடத்த விரும்பு கின்றீர்களோ
அப்படி நடத்துங்கள். "மனதை வென்றவர் உலகை வென்றவர்" என்ற மகிமை
யாருடையது? குழந்தைகளாகிய உங்களுடைய மகிமைதான் அது. ஒவ்வொரு
கல்பத்திலும் நீங்கள் இதைச் செய்திருக்கின்றீர்கள், அதனால்தான்
இந்த மகிமை உள்ளது. ஏனெனில், மற்ற கர்மேந்திரியங்களை 'என்னுடையது'
என்று சொல்வது போல, மனதையும் 'என்னுடையது' என்று
சொல்கின்றீர்கள். 'என்னுடையது' என்று சொல்வதன் அர்த்தம்-அதற்கு
எஜமானராக ஆகுவது என்பதாகும். மனதில் என்ன சங்கல்பம் செய்ய
விரும்புகின்றீர்களோ, எவ்வளவு நேரம் அந்த சங்கல்பத்தில்
நிலைத்திருக்க விரும்புகின்றீர்களோ, அது அதிலேயே கட்டுப்பட்டு
இருக்க வேண்டும்; ஏனெனில் அது உங்களுடையது. எனவே, பாப்தாதா
இந்த அன்பின் நாளில் இந்த வீட்டுப்பாடத்தை கொடுக்க
விரும்புகின்றார்-நீங்கள் என்ன சங்கல்பம் செய்ய விரும்பு
கின்றீர்களோ அதுவே நடக்க வேண்டும். நீங்கள் தூய்மையான சங்கல்பம்
(சுத்த சங்கல்பம்) செய்ய விரும்பினால், அந்த தூய்மையான
சங்கல்பம் வீணான சங்கல்பங்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.
நீங்கள் யோகா செய்ய விரும்பும் போது, பழைய சமஸ்காரங்களின்
காரணமாக வீணான சங்கல்பங்கள் ஓடினால், அங்கு யோகத்தின்
சித்தி(வெற்றி) கிடைக்காது; இதில் கட்டுப்பாடு இருக்க வேண்டும்.
நீங்கள் ஒரு மணி நேரம் யோகா செய்ய விரும்பினால், மனம் உங்களைக்
தொந்தரவு செய்யக் கூடாது. ஆத்மா தான் எஜமானன், மனம் எஜமானன்
அல்ல; மனம் என்பது ஆத்மாவின் ஒரு தோழன் (கூட்டாளி). எனவே,
தோழனுக்கு அன்போடு கட்டளையிடுங்கள், மனதை வென்றவராக (மன்ஜீத்)
ஆகுங்கள். ஏனெனில் பாப்தாதாவிற்கு பல குழந்தைகளிட மிருந்து
செய்திகள் வருகின்றன-"அப்போதைக்கப்போது வீணான சங்கல்பங்கள்
வந்துவிடு கின்றன, நாங்கள் விரும்பாவிட்டாலும் வருகின்றன" என்று.
அப்படியென்றால் இதை எஜமானர் நிலை என்று கூற முடியுமா?
உங்களுக்கு பிரம்மா பாபா மீது அன்பு இருக்கின்றது தானே, எனவே
தந்தை இன்று அன்பின் உரிமையோடு தன் இதயத்தின் விருப்பத்தைக்
கூறுகிறார்-இப்போது நீங்கள் மனதை வென்று உலகை வென்றவராக (மன்ஜீத்
ஜகத்ஜீத்) ஆகியே தீர வேண்டும். அப்படியென்றால் பிரம்மா
பாபாவிற்கு இந்த அன்பின் பரிசை கொடுப்பீர்கள் தானே! அன்பில்
என்ன கொடுக்கப்படும்? பரிசு கொடுக்கப்படும் தானே! எனவே இன்று
பிரம்மா பாபா குழந்தைகளிடம் இந்த பரிசைக் கேட்கின்றார். தயாராக
இருக்கின்றீர்களா? தயாராக இருக் கின்றீர்களா? கைகளை
உயர்த்துங்கள். அப்படியென்றால், இனி எப்போது கட்டளையிட்டாலும்,
இன்றைய நாளில் இருந்து வீணான சங்கல்பங்களை வரவிடக் கூடாது. இதை
உங்களால் செய்ய முடியுமா? இன்று இரண்டு மணி நேரம், நான்கு மணி
நேரம் யோகத்தின் நிலையில் இருந்துகொண்டே கர்மாவும் செய்யுங்கள்,
யோகத்திலும் இருங்கள். உங்களால் முடியுமா? உங்களால் முடியுமா,
செய்வீர்களா? இப்போது கடந்தவை கடந்ததாகவே இருக்கட்டும், ஆனால்
இன்றைய நாளில் இருந்து வீணான சங்கல்பங்களுக்கு முற்றுப்புள்ளி
வைக்க கட்டளை யிடுங்கள், அதைச் செய்தே தீர வேண்டும் தானே!
இன்றைய யோகத்தில் இதே இலட்சியத்தை வைத்து, அதற்கேற்ப நாள்
முழுவதும் ஆன்மீக முயற்சி (புருஷார்த்தம்) செய்ய வேண்டும் தானே!
தந்தை மீதான அன்பில், தந்தை என்ன சொல்கின்றாரோ அதைச் செய்ய
வேண்டும். வீணான சங்கல்பங்களை நிறுத்துவதற்கான யுக்தி
என்னவென்றால்-பிரம்மா பாபாவின் அன்பை இதயப்பூர்வமாக நினைவு
கூருங்கள். நீங்கள் அவரைச் சாகாரத்தில் (நேரில்)
பார்த்திருந்தாலும் சரி, பார்க்காவிட்டாலும் சரி, ஆனால்
புத்தியின் மூலம் அனைவரும் பார்த்திருக்கின்றீர்கள் தானே!
பார்த்திருக்கின்றீர்களா இல்லையா? யார் "நான் பாபாவின் அன்பைக்
கண்டிருக்கின்றேன், பிரம்மா பாபாவின் வளர்ப்பைக் கண்டிருக்
கின்றேன்" என்பதால் அதன் ஆதாரத்தின் மூலம் நான் சென்று கொண்டு
இருக்கின்றேன்... (என்பவர்கள்) கைகளை உயர்த்துங்கள். நல்லது,
கைகளை உயர்த்தி மகிழ்ச்சியை உண்டாக்கிவிட்டீர்கள்.
பாப்தாதாவிற்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது, நீங்கள் தைரியத்தை
வைத்திருக்கின்றீர்கள் தானே! ஆனால், எப்போது ஏதேனும் சக்தி
குறைவது போல் தோன்றுகின்றதோ, அப்போது சதா தந்தையோடு உள்ள
உறவுகளை நினைவு கூருங்கள். எத்தனை உறவுகள் உள்ளன! சில
நேரங்களில் தந்தை, சில நேரங்களில் குழந்தை எனப் பல வடிவங்கள்;
சில நேரங்களில் பாபா, சில நேரங்களில் தோழனாகவும் (சகா)
ஆகிவிடுகின்றார். எனவே அந்த உறவை நினைவு கூருங்கள் அல்லது
அடைந்த பொக்கிஷங்களை (பிராப்திகளை) நினைவு கூருங்கள்;
பொக்கிஷங்கள் மற்றும் உறவுகள். இன்று எப்படி இதயப்பூர்வமாக
நினைவு செய்து கொண்டிருக்கின்றீர்களோ, இப்படி நினைவு செய்வதால்
அன்பு தானாகவே பெருகும். இன்றும் அனைவரின் இதயத்திலும் பிரம்மா
பாபாவின் மீது அன்பு பொங்கிக் கொண்டி ருக்கின்றது தானே! எனவே
எப்போதெல்லாம் (மனநிலை) ஏற்றத்தாழ்வாக மாறுகின்றதோ, அப்போது
உறவுகளையும் பொக்கிஷங்களையும் நினைவு கூருங்கள். தந்தை ஒவ்வொரு
குழந்தைக்கும் ஒத்துழைப்பாளராக இருக்கின்றார், நீங்கள் (தங்களுக்கு
தாங்களே) நினைவூட்டி னால் மட்டும் போதும். அப்படியென்றால் இன்று
என்ன செய்ய வேண்டும் என்று புரிந்ததா? "மனதை வென்றவர் உலகை
வென்றவர்" என்ற மகிமைக்கு ஏற்ப, அந்த சொரூபத்தை தாரணை செய்ய
வேண்டும். மனதைக் கட்டளையின் படி நடத்துங்கள். இப்போது அதைச்
சற்றே சுதந்திரமாக விட்டுவிட்டீர்கள் தானே, அதனால்தான் அது தன்
இஷ்டப்படி செயல்படுகின்றது. இப்போது கவனம் செலுத்துங்கள். மனம்
என் கட்டளைப்படி செயல்பட வேண்டுமே தவிர, நான் மனதின்
கட்டளைப்படி செயல்படக் கூடாது. நீங்கள் ஞானத்தின் விஷயங்களைச்
சிந்திக்க விரும்புகின்றீர்கள், ஆனால் தேவையில்லாத விஷயங்கள்
வந்துவிடுகின்றன; அப்படி ஏன் நடக்க வேண்டும்? மனம் எஜமானனா
அல்லது நீங்கள் எஜமானனா? அனைவரும் இந்த வீட்டுப் பாடத்தைப்
புரிந்து கொண்டீர்கள் தானே! மனதை வென்றவராக (மன் ஜீத்) ஆக
வேண்டும். நீங்கள் என்ன கட்டளையிடுகின்றீர்களோ, அதை அது
நிச்சயம் கேட்கும், கேட்டே தீரும்; அதற்குச் சற்று கவனம்
செலுத்த வேண்டும் அவ்வளவுதான். தாய்மார்களே அல்லது ஆசிரியர் களே,
இது சாத்தியமா? முடியுமா? ஆசிரியர்கள் கைகளை உயர்த்துங்கள்.
ஆசிரியர்கள் கைகளை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இது
சாத்தியம் என்று நினைத்தால் கைகளை அசையுங்கள். முதல் வரியில்
இருப்பவர்கள் கைகளை அசையுங்கள். சகோதரர்கள் கைகளை அசையுங்கள்.
வாஹ்! (ஆஹா!) அப்படியென்றால் பிரம்மா தந்தைக்கு அன்பின் பரிசை
வழங்கி விட்டீர்கள்; இதற்கு வாழ்த்துக்கள், நல்வாழ்த்துக்கள்.
நல்லது, பாப்தாதாவிடம் உள்ள அன்பு மிகுந்த ஒத்துழைப்பைத்
தருகின்றது. "எனது பாபா" என்று இதயப்பூர்வமாகச் சொன்னால், "எனது
பாபா" என்று சொன்ன மாத்திரத்திலேயே நான் யார்? தந்தையின்
செல்லக் குழந்தை. அனைவரும் எத்தனை முறை "எனது பாபா, எனது பாபா"
என்று சொல்கின்றீர்கள், எத்தனை முறை சொல்கின்றீர்கள்? தந்தை
கேட்கின்றார் தானே, அனைத்தை யும் குறித்துக் கொள்கின்றார்.
இரட்டை வெளிநாட்டினரும் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள் தானே!
முழு பருவகாலத்திலும் இரட்டை வெளிநாட்டினர் மிக நன்றாக வருகை
தந்துள்ளனர் என்பதை பாப்தாதா பார்த்தார். மதுபனில் எப்போதும்
அவர்கள் வந்த வண்ணம் இருக் கின்றார்கள். இப்போதும் 350 பேர்
இருக்கிறார்கள். தங்களுடைய முறை வரும்போதும் வரு கின்றார்கள்,
ஆனால் ஒவ்வொரு முறையிலும் கூட எங்கிருந்தோ கொஞ்சம் கொஞ்சமாக
வந்துவிடுகின்றார்கள். அப்படியென்றால் இப்போதைய இந்த முடிவுகளை
பாப்தாதாவும் பார்த்துக் கொண்டிருப்பார்; நீங்களும் சாட்சியாக
(சாக்ஷி) இருந்து உங்களுடைய முடிவுகளைப் பார்த்துக் கொண்டே
இருங்கள்.
பாப்தாதாவிற்கு (தான்) எஜமானராக (மனதை வென்றவராக) ஆகுவதற்கான
வாக்குறுதியை கொடுத்துள்ளீர்கள் என்பதை எப்போதும் நினைவில்
வையுங்கள். பாப்தாதா இப்போது குழந்தை களுக்கு, குறைந்தபட்சம்
ஒவ்வொரு மண்டலத்திற்கும் இந்த காரியத்தைக் கொடுக்க
முடியும்-இந்த மண்டலம் இந்த வாரம் அல்லது 15 நாட்களில், "வீணான
சங்கல்பங்கள் வரவில்லை, மாறாக மனதிற்கு எந்த விஷயத்தைக்
கொடுத்தோமோ அதை அது செய்ததா இல்லையா?" என்ற முடிவை வழங்க
வேண்டும். ஆசிரியர்களே, இது உங்களுக்குச் சம்மதமா? சம்மதமா?
மண்டலங்களுக்கு இந்த காரியத்தைக் கொடுக்கலாமா? ஆசிரியர்கள்
கைகளை உயர்த்துங்கள்.
மகாராஷ்டிரா இருக்கின்றது தானே! அப்படியென்றால்
மகாராஷ்டிராவிற்கு மகா (மிகப்பெரிய) காரியத்தைக் கொடுப்போம்
தானே! பாப்தாதாவிற்கு ஒவ்வொரு மண்டலத்தின் மீதும் அன்பு
இருக்கின்றது, மேலும் "இந்தக் குழந்தைகள், தந்தை சொன்னார்
மற்றும் குழந்தைகள் அதைச் செய்தார்கள்" என்ற நிச்சயம் எப்போதும்
அவரிடம் இருக்கின்றது. அப்படித் தானே? மகாராஷ்டிரா, தந்தை
சொன்னதைச் செய்தது, அப்படித் தானே? மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்
கள் கைகளை உயர்த்துங்கள். நிறைய பேர் இருக்கின்றார்கள்.
முக்கால்வாசி வகுப்பு இருக் கின்றது. அப்படியென்றால் ஒவ்வொரு
மண்டலத்தினரும் தந்தையின் கட்டளைக்குக் கீழ்ப்படிப வர்களாக
இருக்கின்றார்கள், அனைவரும் தலை அசைத்துக்
கொண்டிருக்கின்றார்கள். என்னுடைய குழந்தைகள் நிச்சயபுத்தி
உடையவர்கள் தான் என்ற நிச்சயம் தந்தைக்கும் இருக்கின்றது.
ஒவ்வொரு நாளும் நீங்கள் கேட்கும் மகா வாக்கியங்கள் தான்
உங்களுக்கான வீட்டுப்பாடம்; அதைச் செய்ய வேண்டும் என்று
பாப்தாதா விரும்புகின்றார். தந்தை சொன்ன தினசரி முரளியைக்
குழந்தைகள் கடைப்பிடித்தால், அவர்கள் தந்தையின் செல்லக்
குழந்தைகள், கட்டளைக்குக் கீழ்ப்படியும் குழந்தைகள் என்று
அழைக்கப்படுகின்றார்கள். என்ன செய்ய வேண்டும் என்றால், தினசரி
முரளியைப் படியுங்கள்; ஏனெனில் பெரும்பான்மையான குழந்தை கள்
முரளியை நேசிக்கின்றார்கள் என்பதை பாப்தாதா பார்த்தார். ஒருவேளை
யாராவது அப்படி நேசிக்கவில்லை என்றால்... ஏதேனும் ஒரு குழந்தை
"பாபா, உங்கள் மீது எனக்கு மிகுந்த அன்பு இருக்கின்றது" என்று
கூறினால், தந்தையின் அன்பு எதன் மீது இருக்கிறது? முரளியின்
மீது தான்! முரளிக்காக எவ்வளவு தூரத்திலிருந்து வருகின்றார்கள்.
இவ்வளவு தூரத்திலிருந்து பாடம் நடத்துவதற்காக வரும் ஏதேனும் ஒரு
ஆசிரியர் இருப்பார்களா? அப்படியென்றால், தந்தையின் அன்பு
முரளியின் மீது இருக்கும் போது, "எனது பாபா" என்று
சொல்பவர்களின் முதல் அன்பு தந்தையின் முரளியின் மீது தான்
இருக்க வேண்டும்.
பாருங்கள், பிரம்மா பாபா ஒரு நாள் கூட முரளியைத் தவறவிட்டதில்லை.
அவர் பம்பாய்க்குச் சென்றிருந் தாலும் சரி, ஏதேனும் காரணங்கள்
இருப்பினும் கூட, அவர் முரளியை எழுதினார் மற்றும் மாதேஸ்வரி (மம்மா)
அந்த முரளியை வாசித்தார். கடைசி நாளில் உடல்நிலை சற்றே
நலிவுற்றிருந்தது, காலையில் வகுப்பு நடத்த வில்லை, ஆனால்
மாலையில் வகுப்பு நடத்திய பிறகுதான் அவ்யக்தமானார்.
அப்படியென்றால் பிரம்மா பாபாவின் அன்பு எதன் மீது இருந்தது?
முரளியின் மீது தான்! எனவே, "எனக்கு பாபாவிடம் அன்பு
இருக்கின்றது" என்று யார் புரிந்து கொள்கின்றார்களோ,
அவர்களுக்கு தந்தை எதை நேசிக்கின்றாரோ அதனுடன் தொடர்பு இருக்க
வேண்டும் தானே! எனவே, முரளியை தினமும் வகுப்பில் படியுங்கள்
அல்லது கேளுங்கள். ஏதேனும் சூழ்நிலை (கட்டாயம்) இருந்தால்,
சாக்குப்போக்கு சொல்லாமல், சரியான காரணம் இருந்தால் யாரிடமாவது
கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். "நான் முரளிக்கு இவ்வளவு
முக்கியத்துவம் கொடுப்பேன்" என்று நினைப்பவ ர்கள் கைகளை
உயர்த்துங்கள். நல்லது, இங்கு அனைவரும் தெரிகின்றார்கள், பாபா
உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களையும் பார்த்துக்
கொண்டிருக்கின்றார். நல்லது, மிகவும் நல்லது! "இன்று யார் முரளி
கேட்கவில்லை?" என்று தந்தை இடையிடையே தேர்வு வைப்பார், அதை
ஆசிரியர்கள் எழுதி அனுப்ப வேண்டும். இது உங்களுக்குப்
பிடித்திருக்கின்றதா? பிடித்திருக்கின்றது தானே! நல்லது. இன்று
பிரம்மா பாபா ஒவ்வொரு குழந்தையையும் சந்தித்து, மிகுந்த அன்போடு
தன் கண்களின் மூலம் ஒவ்வொரு குழந்தைக்கும் அன்பைக் கொடுத்துக்
கொண்டிருக்கின்றார். நல்லது.
இரட்டை வெளிநாட்டு சகோதர-சகோதரிகளுடன்:-
வெளிநாட்டினருக்குச் சேவை செய்வதற் கான ஊக்கமும் உற்சாகமும்
நன்றாக உள்ளது. பாப்தாதா அனைத்துக் குழந்தைகளிடமும் இதைத்தான்
கூறுகின்றார்-சேவையைச் சிறப்பாகச் செய்யுங்கள், ஏனெனில் காலம்
எப்போது வேண்டுமானாலும் மாறலாம். நீங்கள் சேவை செய்ய
விரும்பினாலும் செய்ய முடியாத ஒரு காலம் வரவிருக்கின்றது; எனவே
என்ன செய்ய வேண்டுமோ அதை இப்பொழுதே செய்யுங்கள். 'எப்போது'
அல்ல, 'இப்போது'. நாளைக்கு என்று எதையும் தள்ளிப் போடாதீர்கள்
என்று பாப்தாதா எப்போதும் கூறுகின்றார். இன்றைய நாளிலும் கூட
தள்ளிப் போட வேண்டாம், இப்பொழுதே செய்யுங்கள்; ஏனெனில் காலம்
என்ற ஐந்து தத்துவங்களும் தந்தையிடம் வந்து, "எங்களுக்குச்
சொல்லுங்கள், எவ்வளவு காலம் இந்தத் துக்கம் நீடிக்கும்!" என்று
கேட்கின்றன. அவர்களே துக்கப்படுகின்றார்கள் என்றால் என்ன
செய்வார்கள்? மனித ஆத்மாக்களையும் துக்கப்படுத்துவார்கள் தானே,
எனவே இங்கு வந்திருக்கும் அனைவரும் இந்தச் சங்கல்பத்தைச் செய்ய
வேண்டும்-பிராமண வாழ்க்கை எவ்வளவு அவசியமோ, அதேபோல தற்போதைய
காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொருவருக்கும் சேவையும் அவசியமாகும்.
நீங்கள் செய்யுங்கள் அல்லது செய்ய வையுங்கள் (கருவியாக இருங்கள்).
மற்றபடி பாப்தாதா கொடுத்த வீட்டுப்பாடம்-மனதை வென்று உலகை
வென்றவராக (மன்ஜீத் ஜகத்ஜீத்) ஆகியே தீர வேண்டும் என்பதாகும்.
இது உங்களுக்கே உரித்தான மகிமை, அதை நீங்கள் மீண்டும் செய்து
காட்ட வேண்டும். நல்லது.
நான்கு திசைகளிலிருந்தும் குழந்தைகளிடமிருந்து செய்திகள்
வந்துள்ளன. நான்கு திசைகளிலி ருந்தும் வந்த அன்பின் இனிமையான
உணர்வுகள் அல்லது வெவ்வேறு வார்த்தைகளின் நினைவுகள், நான்கு
திசைகளிலிருந்தும் வந்த பல்வேறு கடிதங்கள் என அனைத்திற்கும்
பாப்தாதா பதில் அளித்துக் கொண்டு இருக்கின்றார். ஒவ்வொரு
குழந்தையும் அன்போடு தந்தை யின் இதயத்தில் நிறைந்துள்ளனர்;
மேலும் இந்த அழியாத அன்பு எப்போதும் தந்தையுடையதும் மற்றும்
குழந்தைகளுடையதுமான அனாதி அழியாத அன்பாகும். முழு சங்கம யுகமும்
இந்த தந்தை-குழந்தைகளின் சந்திப்பிற்காகவே
நிச்சயிக்கப்பட்டுள்ளது. நல்லது.
இப்போது நேரில் அமர்ந்திருக்கும் அல்லது தூரத்தில் இருந்தபடியே
பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் என, இப்போது நான்கு
திசைகளிலும் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் சென்டர் களுக்குச் சென்று
பார்க்கின்றார்கள், கேட்கின்றார்கள்; இரவில் எவ்வளவு
நேரமானாலும் சரி பார்க்கின்றார்கள் என்று பாப்தாதா
கேள்விப்பட்டார்; இதுவும் அறிவியலின் சாதனங்கள் (கருவிகள்)
உங்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது மேலும் இதன் மூலம்
உங்களுக்கே லாபம் கிடைக்கிறது. ஒருவேளை அறிவியல் மூலம் விநாசம்
ஏற்படும் என்றாலும், அதுவும் உங்களுடைய ராஜ்யத்திற்காகத்தான்
செய்கின்றார்கள். எனவே, நான்கு திசைகளிலும் உள்ள அன்பு நிறைந்த
குழந்தைகளுக்கு விசேஷமாக பிரம்மா பாபாவின் நெஞ்சார்ந்த அன்பு
நினைவுகளும், இதயத்தின் அரவணைப்பும், தூய அன்பும் உரித்தாகுக.
ஆசீர்வாதம்:
உண்மை (சச்சாயி) மற்றும் தூய்மை (சஃபாயி) என்ற குணங்களின் தாரணை
மூலமாக நெருக்கத்தை அனுபவம் செய்யக்கூடிய 'சம்பூர்ணமூர்த்தி'
(முழுமையான சொரூபம்) ஆகுக.
அனைத்து தாரணைகளிலும் முக்கியமான தாரணை - உண்மையாக மற்றும்
தூய்மையாக இருத்தல் ஆகும். பரஸ்பரம் (இருதரப்பிலும்)
ஒருவருக்கொருவர் இதயத்தில் முழுமையான தூய்மை இருக்க வேண்டும்.
ஒரு தூய்மையான பொருளில் அனைத்தும் தெளிவாகத் தெரிவது போல,
ஒருவருக்கொருவர் உள்ள தூய எண்ணங்களும், குண நலன்களும் தெளிவாகத்
தெரிய வேண்டும். எங்கு உண்மையும் தூய்மையும் இருக்கின்றதோ,
அங்கு நெருக்கம் இருக்கும். பாப்தாதாவிற்கு நெருக்கமாக இருப்பது
போல, உங்களுக்குள்ளும் பரஸ்பரம் இதயத்தின் நெருக்கம் இருக்க
வேண்டும். குணங்களின் வேறுபாடுகள் முடிவுக்கு வர வேண்டும்.
இதற்காக மனதின் எண்ணங்களையும், குணங்களையும் ஒருமுகப்படுத்த
வேண்டும் (எண்ணங்களும்-குணங்களும் ஒன்றாக இருத்தல் வேண்டும்).
குணங்களில் எந்தவொரு வித்தியாசமும் தெரியாத போதுதான் 'சம்பூர்ணமூர்த்தி'
என்று கூற முடியும்.
சுலோகன்:
கெட்டுப்போன விஷயங்களைச் சீரமைப்பது அல்லது சரிசெய்வது-
இதுவே எல்லாவற்றையும் விடப் பெரிய சேவையாகும்.
அவ்யக்த சமிக்கை: ஜுவாலா (அக்னி) சொரூப நிலையில் இருந்து
சக்திவாய்ந்த நினைவை அனுபவம் செய்யுங்கள்
யோகத்தை ஜுவாலா (அக்னி) சொரூபமாக மாற்றுவதற்கு, ஒரு நொடியில்
புள்ளி வடிவம் (பிந்தி சொரூபம்) ஆகி, மனம் மற்றும் புத்தியை
ஒருமுகப்படுத்தும் பயிற்சியை மீண்டும் மீண்டும் செய்யுங்கள். 'ஸ்டாப்'
என்று சொன்ன மாத்திரத்தில், ஒரு நொடியில் வீணான தேக
உணர்விலிருந்து விடுபட்டு மனம் மற்றும் புத்தி ஒருமுகப்பட
வேண்டும். இத்தகைய கட்டுப்படுத்தும் ஆற்றலை நாள் முழுவதும்
பயன்படுத்துங்கள். சக்திவாய்ந்த பிரேக் மூலம் மனம் மற்றும்
புத்தியைக் கட்டுப்படுத்துங்கள்; எங்கு மனம் மற்றும் புத்தியை
நிலைநிறுத்த விரும்புகின்றீர்களோ, அங்கு அது ஒரு நொடியில்
நிலைபெற வேண்டும்.
விசேஷ அறிவிப்பு - மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை யோகப்
பயிற்சி:
இன்று மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை ஆகும். அனைத்து
சகோதர-சகோதரிகளும் ஒன்று கூடி, மாலை 6.30 மணி முதல் 7.30 மணி
வரை தங்களுடைய பரிஷ்தா சொரூபத்தின் மூலம் அலைந்து
கொண்டிருக்கும் துக்கமடைந்த, அமைதியற்ற ஆத்மாக்களுக்கு சுகம்
மற்றும் அமைதியின் தூய்மையான கதிர்களை வழங்கி, அவர்களுக்கு
ஆதரவளிக்கும் வள்ளலாகிய பரமாத்மா தந்தையை நினைவூட்டும் சேவையைச்
செய்யுங்கள்.