19-08-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள் இப்பொழுது
ஆன்மீக வியாபாரம் (தொழில்) செய்ய வேண்டும். ஆத்மா என்று
புரிந்து கொண்டு ஒவ்வொரு காரியமும் செய்வதன் மூலம் ஆத்மா
விகாரமற்றதாக ஆகிவிடுகிறது.
கேள்வி:
சொர்க்கத்தின் ஆஸ்தி அடைவதற்கும்
மற்றும் சொர்க்கத்தில் உயர்ந்த பதவி அடைவதற்கு ஆதாரம் என்ன?
பதில்:
பிரம்மா குமார்-பிரம்மா
குமாரியாக ஆகிவிட்டால் சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைத்து விடும்.
ஆனால் உயர்ந்த பதவிக்கு ஆதாரம் படிப்பு. ஒருவேளை
தந்தையினுடையவராக ஆகி நல்ல முறையில் படிப்பு படித்துக் கொண்டே
இருந்து முழு தூய்மையாக ஆகும் போது இராஜ்ய பதவி கிடைக்கும்.
ஒருவர் முழுமையாக படிப்பு படிக்கவில்லை, கர்ம பந்தனம்
இருக்கிறது, முழு தூய்மையாக ஆகவில்லை மற்றும் சரீரம் விட்டு
விட்டால் பிரஜைகளில் சாதாரண பதவி அடைவார்.
ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை புரிய வைத்துக்
கொண்டிருக் கின்றார். இங்கு ஆன்மீக தொழில் நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது. மற்றபடி உலகம் முழுவதும் பௌதீக காரியங்கள்
நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உண்மையில் ஆத்மாக்களின் காரியங்
கள் தான் நடைபெறுகிறது. ஆத்மா தான் இந்த சரீரத்தின் மூலம்
படிக்கிறது, நடக்கிறது, பாவ காரியம் செய்கிறது. அதனால் தான்
பதீத ஆத்மா, பரிசுத்த ஆத்மா என்று கூறப்படுகிறது. ஆத்மா தான்
அனைத்தையும் செய்கிறது. இந்த நேரத்தில் அனைத்து மனிதர்களும்
தேக அபிமானத்தில் இருக்கின்றனர், நான் ஆத்மா என்று புரிந்து
கொள்வதற்குப் பதிலாக நான் இன்னாராக இருக்கின்றேன், இந்த
வியாபாரம் செய்கின்றேன் என்று நினைக்கின்றனர். இன்னார்
காமத்துடன், கோபப்படுபவராக இருக்கின்றார். சரீரத்தின் பெயரைத்
தான் பயன்படுத்துகின்றனர். இதைத் தான் தேக அபிமான உலகம் என்று
கூறப்படுகிறது, வீழ்ச்சிக் கலையில் செல்லும் உலகம்.
சத்யுகத்தில் இவ்வாறு இருக்காது. அங்கு ஆத்ம அபிமானிகளாக
இருப்பர். நீங்கள் ஆத்ம அபிமானிகளாக ஆக்கப்படுகிறீர்கள். தன்னை
ஆத்மா என்று நிச்சயம் செய்யுங்கள். நான் ஆத்மா, இந்த சரீரம்
என்ற ஆடையை அணிந்து நடிப்பு நடிக்கின்றேன். அந்த நடிகர்களும்
விதவிதமான ஆடைகளை மாற்றி நடிப்பு நடிக்கின்றனர். தந்தை
கூறுகின்றார் – ஆத்மாக் களாகிய நீங்கள் முதலில் சாந்திதாமத்தில்
இருந்தீர்கள். உங்களது வீடு சாந்திதாமம் ஆகும். அந்த
எல்லைக்குட்பட்ட நாடகம் போன்று இது எல்லையற்ற நாடகமாகும்.
அனைத்து ஆத்மாக்களும் பரந்தாமத்திலிருந்து வந்து சரீரத்தை தாரணை
செய்து நடிப்பு நடிக்கிறது. ஆத்மாக்களின் உண்மையான வீடு
பரந்தாமம் ஆகும். அந்த நடிகர்களின் வீடு இங்கு தான் இருக்கிறது.
ஆடைகளை மட்டும் மாற்றிக் கொண்டு வந்து நடிப்பு நடிக்கின்றனர்.
ஆக தந்தை அமர்ந்து புரிய வைக்கின்றார் - நீங்கள் ஆத்மாக்கள்.
தந்தை குழந்தைகளே, குழந்தை களே என்று தான் கூறுவார்.
சந்நியாசிகள் குழந்தைகளே, குழந்தைகளே என்று கூற மாட்டார்கள்.
தந்தை கூறுகின்றார் - பதீத பாவனாகிய நான் அனைத்து
ஆத்மாக்களாகிய உங்களது தந்தையாக இருக் கின்றேன், என்னைத் தான்
பரம்பிதா என்று கூறுகிறீர்கள். பரம்பிதா நிராகாராக
இருக்கின்றார். பிரம்மா, விஷ்ணு, சங்கரையும் பரம்பிதா என்று
கூறமாட்டார்கள். அவர்களிடத்திலும் ஆத்மா இருக்கிறது. ஆனால்
அவர்களை பிரம்ம தேவதா நமஹ, விஷ்ணு தேவதா நமஹ. தேவதைகள் என்ன
செய்வார்கள்? என்பது யாருக்கும் தெரியாது. தந்தை வந்து தான்
புரிய வைக்கின்றார் - நீங்கள் எப்படி நாடகப்படி நடிப்பு
நடிக்கிறீர்கள் அதுபோலவே உலகம் ஒன்று தான். கீழே பாதாளம்
இருக்கிறது, மேலே உலகம் இருக்கிறது என்று கிடையாது. உலகம் ஒன்று
தான், அந்தச் சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. சந்திர
மண்டலத்தில் பிளாட் வாங்க வேண்டும் என்று மனிதர்கள்
கூறிவிடுகின்றனர். தந்தை புரிய வைக்கின்றார் - குழந்தைகளே!
எவ்வளவு ஏழைகளாக ஆகிவிட்டீர்கள்! பாரதவாசிகளுக்குத் தான்
கூறுகின்றார், நீங்கள் எவ்வளவு செல்வந்தர்களாக, புத்திசாலிகளாக
இருந்தீர்கள்! இந்த லெட்சுமி- நாராயணனின் இராஜ்யம் முழு
உலகிலும் இருந்தது. அதை யாரும் அபகரிக்க முடியாது. அங்கு எந்த
விதமான பிரிவினையும் கிடையாது. இங்கு எவ்வளவு பிரிவினைகள்
இருக்கின்றன. சிறு சிறு இடத்திற்காக தங்களுக்குள் சண்டையிட்டுக்
கொண்டிருக்கின்றனர். நீங்கள் முழு உலகிற்கும் எஜமானர்களாக
இருந்தீர்கள். முழு ஆகாயம், பூமி, சமுத்திரம் அனைத்தும்
உங்களுடையதாக இருந்தது. நீங்கள் அதற்கு எஜமானர்களாக
இருந்தீர்கள். இப்பொழுது பிரிவினையாகி விட்டது. பாரதம் தான்
உலகிற்கு எஜமானாக இருந்தது என்பது யாருக்கும் தெரியாது.
தந்தை புரிய வைக்கின்றார் - ஆத்மாவிற்கு என்ன பாகம்
கிடைத்திருக்கிறதோ, அது ஒருபோதும் அழிவது கிடையாது, நடைபெற்றுக்
கொண்டே இருக்கும். இப்பொழுது நீங்கள் மீண்டும் மனிதனி லிருந்து
தேவதையாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். மீண்டும் 84 பிறவிகள்
எடுப்பீர்கள். உங்களது நடிப்பு நடைபெற்றுக் கொண்டே இருக்கும்,
ஒருபோதும் நின்று விடாது. யாரும் மோட்சம் அடைவது கிடையாது.
எவ்வளவு குருக்கள், எவ்வளவு சாஸ்திரங்கள் இருக்கிறதோ, அவ்வளவு
வழிகளும் உள்ளன. மனிதர்களிடத்தில் எவ்வளவு அசாந்தி உள்ளன! எங்கு
சென்றாலும் மன அமைதி எப்படி அடைவது? என்று கேட்கின்றனர். தேக
அபிமானத்தில் வந்து இவ்வாறு கூறுகின்றனர். தந்தை புரிய
வைக்கின்றார் - மனம் மற்றும் புத்தி - இவை ஆத்மா வின்
கர்மேந்திரியங்களாகும். மற்ற அனைத்தும் சரீரத்தின்
கர்மேந்திரியங் களாகும். என் மனதிற்கு அமைதி எப்படி கிடைக்கும்?
என்று ஆத்மா கேட்கிறது. உண்மையில் இவ்வாறு கேட்பது தவறாகும்.
நீங்கள் ஆத்மாக்கள், உங்களது சுய தர்மம் சாந்தியாகும்.
ஆத்மாவாகிய எனக்கு எப்படி சாந்தி கிடைக்கும்? என்று கேட்க
வேண்டும். காரியங்கள் என்பது செய்தே ஆக வேண்டும். இந்த
விசயங்களை தந்தை அமர்ந்து புரிய வைக்கின்றார். உலகில் இந்த
ஞானம் யாரிடத்திலும் இல்லை. அங்கு பக்திமார்க்கம் இருக்கிறது.
அவர்களுக்கு ஞானம் பற்றி தெரியாது. ஞானம் ஒரே ஒரு தந்தை தான்
கொடுக்கின்றார். தந்தை சுயம் கூறுகின்றார் - நான் கல்ப
கல்பத்திற்கு, கல்பத்தின் சங்கமயுகத்தில் வருகின்றேன்.
கலியுகத்தின் கடைசியில் அனை வரும் பதீதமாக இருக்கின்றனர். இது
இராவண இராஜ்யமாகும். பாரதவாசிகள் தான் இராவணனை எரிக்கவும்
செய்கின்றனர். பதீத பாவனாகிய தந்தையின் பிறப்பும் இங்கு தான்
ஏற்படுகிறது. இராவணனின் பிறப்பும் இங்கு தான் ஏற்படுகிறது.
இராவணன் அனைவரையும் பதீதமாக ஆக்குவதால் அவரை எரிக்கின்றனர்.
இந்த விசயம் யாருடைய புத்தியிலும் கிடையாது.
இப்போது பாரதத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுகின்றனர்.
கிருஷ்ணரின் லீலை, பஜனை போன்றவைகள் செய்கின்றனர். இப்போது தந்தை
கூறுகின்றார் - உண்மையில் கிருஷ்ண லீலை என்பது ஒன்றுமே இல்லை.
கிருஷ்ணர் என்ன செய்தார்? கம்சபுரியில் பிறந்தார் என்று
கூறுகின்றனர். கம்சன் அசுரன் என்று கூறப்படுகின்றார்.
சத்யுகத்தில் அசுரன் எங்கிருந்து வந்தான்? சத்யுகத்தில் இருந்த
கிருஷ்ணரின் ஆத்மா 84 பிறவிகள் எடுத்து இந்த நேரத்தில்
பதீதத்திலிருந்து பாவனமாக ஆகிக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள்
அறிவீர்கள். தனது பதவியை மீண்டும் அடைந்து கொண்டிருக்கிறது. அதே
போன்று நீங்கள் கிருஷ்ண புரியில் வசிப்பவர்களாக இருந்தீர்கள்.
84 பிறவிகள் எடுத்து இப்போது மீண்டும் தங்களது பதவியை அடைந்து
கொண்டிருக்கிறீர்கள். உண்மையில் சிவபாபா விற்குத் தான் ஜெயந்தி
கொண்டாடப் பட வேண்டும். சிவபாபா அனைவரையும் நரகத்திலிருந்து
சொர்கத்திற்கு அழைத்துச் செல்கின்றார், ஆனால் அவருக்கு எந்த
லீலையும் கிடையாது. ஹே, பதீத பாவன் பாபா வாருங்கள், வந்து நம்மை
நரகத்திலிருந்து சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று
கூறுகின்றனர். நீங்கள் நமக்குத் தந்தையாக இருக்கிறீர்கள் எனில்
நாம் சொர்க்கத்தில் இருக்க வேண்டும், நாம் ஏன் விகார உலகில்
இருக்கின்றோம்? அதனால் தான் ஹே பரம்பிதா, நம்மை இந்த துக்க
உலகிலிருந்து விடுதலை செய்யுங்கள் என்று அழைக்கின்றனர். இதுவும்
நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. தந்தை கூறுகின்றார் - இந்த
நாடகத்தை யாரும் அறியவில்லை. சாஸ்திரங்களில் நாடகத்தின் ஆயுளை
அதிகமாக எழுதி வைத்து விட்டனர். புது உலகம் பழைய உலகமாக ஆகியே
தீர வேண்டும். சதோ, ரஜோ, தமோவிற்கு வந்தே ஆக வேண்டும். இது
எல்லையற்ற விசயமாகும். இப்போது நீங்கள் மீண்டும் உலகிற்கு
எஜமானர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். எந்த பாரதவாசிகள் புது
உலகில் இருந்தார்களோ, அவர்களே 84 பிறவி களின் நடிப்பு
நடிப்பார்கள். இப்போது நீங்கள் தூய்மையாக ஆகிறீர்கள். பாக்கி
அனைத்து மனிதர் களும் பதீதமாக இருக்கின்றனர், அதனால் தான்
பாவனமானவர்கள் முன் சென்று நமஸ்கரிக் கின்றனர். பாவனமானவர்கள்
பாவனமானவர்களை எதற்காக வணங்குவர்? சந்நியாசிகள் பாவனமாக
இருக்கின்றனர். அதனால் தான் பதீத மனிதர்கள் அவர்கள் முன் தலை
வணங்கு கின்றனர். கன்னியா தூய்மையாக இருப்பதால் அனைவரும் அவர்
முன் தலை வணங்கு கின்றனர். அதே கன்னியா திருமணம் செய்து கொண்டு
மாமியார் வீட்டிற்குச் சென்று விட்டால் தலை வணங்க
வேண்டியிருக்கும். இப்போது அனைவரைûயும் பாவனம் ஆக்குவதற்காக
எல்லையற்ற தந்தை வந்திருக்கின்றார். அவர்கள் அனைவரும்
கலியுகத்தில் இருக்கின்றனர். நீங்கள் இப்போது சங்கமத்தில்
இருக்கிறீர்கள். இப்போது நீங்கள் பதீத உலகிற்குச் செல்லக்
கூடாது. இது கல்யாணகாரி யுகம். தந்தை வந்து அனைவருக்கும் நன்மை
செய்கின்றார். நீங்கள் இப்போது கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவீர்கள்,
இல்லை யெனில் இவர்கள் நாஸ்திகர்கள் என்று மனிதர்கள் நினைத்து
விடுவார்கள். உண்மையில் யார் தனது தந்தை மற்றும் படைப்பின்
முதல், இடை, கடையை அறியவில்லையோ அவர்கள் தான் நாஸ்திகர்கள்
என்று கூறப்படு கின்றனர். இந்த நேரத்தில் அனைவரும் செல்வமற்ற
அனாதைகளாக ஆகிவிட்டனர். வீட்டிற்கு வீடு சண்டைகள் இருக்கின்றன,
ஒருவருக்கொருவர் அடிப்பதற்கு தயங்க கிடையாது. அதனால் தான் இதை
நாஸ்திகர்களின் உலகம் என்று கூறப்படுகிறது, தந்தையை அறிந்து
கொள்ளாத வர்கள். நீங்கள் அறிந்து கொண்டவர்கள். நாம் கல்புத்தி
உடையவர்களாக இருந்தோம், தந்தை நம்மை தங்கப்புத்தி உடையவர்களாக
ஆகிக் கொண்டிருக்கின்றார் என்பதை நீங்கள் புரிந்திருக்
கிறீர்கள். வேறு எந்த கஷ்டமான விசயமும் கிடையாது. ஒரு மணி நேரம்
படியுங்கள் என்று மட்டுமே தந்தை கூறுகின்றார். தன்னை ஆத்மா
என்று புரிந்து கொண்டு தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள்.
சரீரத்தை நினைவு செய்தீர்கள் எனில் லௌகீக சம்பந்தங்களின் நினைவு
வரும். ஆத்ம அபிமானியாக இருந்தீர்கள் எனில் தந்தையாகிய
என்னுடைய நினைவு வரும். இதுவோ விகார உலகமாகும். விஷக் கடலில்
ஏமாற்றம் அடைந்து கொண்டு இருக்கின்றனர். விஷ்ணுவை பாற்கடலில்
காண்பிக்கின்றனர். அங்கு நெய்யாறு ஓடியதாக கூறுகின்றனர். இங்கு
புல் கூட கிடைப்பது கிடையாது. வித்தியாசம் இருக்கிறது அல்லவா!
ஆக குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு குஷி ஏற்பட வேண்டும்!
தந்தை படகோட்டி அல்லவா! படகோட்டியே! எங்களது படகை கரை சேர்த்து
விடுங்கள் என்று பாடவும் செய்கின்றனர். இவை அனைத்தும் படகுகள்,
ஒரே ஒரு தந்தை தான் படகோட்டி ஆவார். இந்த சரீரத்தை இங்கேயே
விட்டு விடுவீர்கள். மற்றபடி ஆத்மாக்களை அக்கரைக்கு
சாந்திதாமத்திற்கு அழைத்துச் செல்வார். அங்கிருந்து பிறகு
சுகதாமத்திற்கு அனுப்பி விடுவார். பரம்பிதா பரமாத்மாவைத் தான்
படகோட்டி என்று கூறப்படுகிறது. தந்தையின் மகிமையைத் தான் பல
விதமாகப் பாடுகின்றனர். இப்போது நீங்கள் தூய்மையாக ஆகி
தூய்மையான உலகிற்கு எஜமானர்களாக ஆகிறீர்கள். சிரேஷ்ட
மானவர்களாக ஆக்குவதற்காக ஸ்ரீ ஸ்ரீ சிவபாபா வந்திருக்கின்றார்.
சுயம் பகவான் கூறுகின்றார் - இது கீழான உலகமாகும். இப்போது
நீங்கள் பரம்பிதா பரமாத்மாவின் ஸ்ரீமத் படி நடந்து
சிரேஷ்டமானவர்களாக ஆகின்றீர்கள். இது எவ்வளவு குப்தமான,
ரமணீகரமான விசயமாகும். இதைக் குழந்தைகளாகிய நீங்கள் தான்
புரிந்து கொள்ள முடியும். மற்றவர்கள் புரிந்து கொள்ளவே முடியாது.
இப்போது தேவி தேவதைகளின் நாற்று நடப்பட்டுக் கொண்டிருப் பதை
நீங்கள் அறிவீர்கள். தேவி தேவதா தர்மத்திலிருந்து மற்ற
தர்மத்திற்கு மாற்றல் ஆகிச் சென்றவர்களே மீண்டும் வந்து
பிராமணர்களாக ஆவார்கள். பிரம்மா குமார், குமாரி ஆகாமல்
தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைய முடியாது. இப்போது பிரம்மா குமார்,
குமாரிகளாகிய நீங்கள் சொர்கத்தின் ஆஸ்தி அடைந்து
கொண்டிருக்கிறீர்கள். எவ்வளவு முயற்சி செய்வீர்களோ,
செய்விப்பீர்களோ அந்த அளவிற்கு உயர்ந்த பதவி அடைவீர்கள்.
அனைவரும் அந்த அளவிற்கு செய்து விட முடியாது. முழுமையாக
படிக்கவில்லையெனில் அதன் விளைவு என்னவாக இருக்கும்? ஒருவேளை
சரீரம் விட்டு விட்டால் சொர்க்கத்திற்கு வருவார்கள். ஆனால்
பிரஜை களில் முற்றிலும் சாதாரண நிலை அடைவார்கள்.
தந்தையினுடையவராக ஆகி நன்றாக படிக்க வில்லையெனில் இராஜ்ய பதவி
அடைய முடியாது. படிக்கவில்லை எனில் அவர்களுக்கு அதிஷ்டம்
இல்லையென்று புரிந்து கொள்ளுங்கள். தூய்மையாக இருக்கிறீர்கள்,
படிக்கின்றீர்கள் எனில் உயர்ந்த பதவி அடைவீர்கள். அபவித்திரம்
ஆவதனால் தந்தையை நினைவு செய்ய முடியாது. இப்படியும் பலர்
இருக்கின்றனர் - கர்மபந்தனங்களின் கணக்கு முடிவடைய வேண்டும்.
வண்டியில் இரு சக்கரமும் தூய்மையாக இருந்தால் நன்றாக ஓடும்.
இருவரும் தூய்மையாக இருக்கும் போது ஞானச் சிதையில் அமர்ந்து
விடுவர், இல்லை யெனில் குழப்பம் ஏற்படும்.
பாபா, ஸ்ரீகிருஷ்ணர் சத்யுகத்தின் முதல் இளவரசர் என்பது
எங்களுக்குத் தெரியும். பிறகு ஏன் நாம் கொண்டாடக் கூடாது என்று
சில குழந்தைகள் கேட்கின்றனர். நாம் கிருஷ்ணரின் ஆத்மாவை
அழைக்கவும் முடியும். வந்து விளையாடுவார், நடனம் புரிவார், வேறு
என்ன செய்வார்! கோப, கோபிகள் இங்கு தான் இருக்கிறார்கள். அங்கு
இளவரசர், இளவரசிகள் தங்களுக்குள் சந்தித்துக் கொள்ளும் போது
நடனம் புரிவர். தங்கப் புல்லாங்குழல் வாசிப்பர். இந்த அனைத்து
விளையாட்டுக்களையும் நீங்கள் பின்நாட்களில் பார்ப்பீர்கள்.
இந்த அனைத்து நடிப்பும் நடைபெறும். ஆரம்பத்தில்
காண்பிக்கப்பட்டது. பிறகு நீங்கள் முயற்சியில் ஈடுபட்டு
விட்டீர்கள். இப்போது மீண்டும் கடைசியில் சாட்சாத்காரம்
கிடைப்பது ஆரம்பமாகி விடும். யார்-யார் என்ன பதவி அடைவார்கள்?
என்பதை நீங்கள் அறிவீர்கள். தந்தை அமர்ந்து இந்த அனைத்து
இரகசியங்களையும் புரிய வைக்கின்றார். வேதம், சாஸ்திரங் களை
நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? என்று உங்களிடம் கேட்கின்றனர்.
ஆம், நாம் ஏன் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று கூறுங்கள். இவை
அனைத்தும் பக்தி மார்க்கத்தின் பொருட்கள் ஆகும், இதில் எந்த
ஞானமும் இல்லை. ஞானம் கொடுக்கக் கூடியவர் ஒருவர். ஞானம்
கிடைக்கும் போது பக்தி தானாகவே விடுபட்டு விடுகிறது. நீங்கள்
கோயிலுக்குச் சென்றாலும் இந்த லெட்சுமி-நாராயணன் மீண்டும் புது
உலகில் இராஜ்யம் செய்வார் என்பது புத்தியில் இருக்கும்.
தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார், இரண்டு பக்கமும்
இருக்க வேண்டும். இல்லறத்தில் இருந்து கொண்டு தூய்மையாக ஆக
வேண்டும். ஸ்ரீமத் கூறுகிறது - முழு தூய்மையாக ஆகுங்கள், முழு
வைஷ்ணவர்களாக ஆகுங்கள் மற்றும் விஷ்ணுபுரி இராஜ்யத்தை
அடையுங்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) யோகத்தின் மூலம் கர்ம பந்தனத்தின் கணக்கு வழக்குகளை முடித்து
பாவனம் ஆக வேண்டும். ஞானச் சிதையில் அமர வேண்டும். முழுமையிலும்
முழுமையான வைஷ்ணவராக அதாவது தூய்மையாக ஆக வேண்டும்.
2) தனது அமைதி என்ற சுய தர்மத்தில் நிலைத்திருக்க வேண்டும்.
அனைவருக்கும் சாந்தி தாமத்தின் நினைவை ஏற்படுத்த வேண்டும்.
ஒருபோதும் அசாந்தி ஆகக் கூடாது.
வரதானம்:
சப்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் நிலைத்திருந்து சர்வ
குணங்களின் அனுபவம் செய்யக்கூடிய மாஸ்டர் விதைவடிவம் ஆகுக.
எப்படி விதையில் முழு மரமும் அடங்கியுள்ளதோ, அது போலவே
சப்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில், சங்கம யுகத்தின் அனைத்து
விசேˆ குணங்களும் அனுபவத்தில் வரும். மாஸ்டர் விதை வடிவம் ஆவது
என்றால், சாந்தி மட்டும் இல்லை, ஆனால் சாந்தியுடன் கூடவே ஞானம்,
அதிந்திரிய சுகம், அன்பு, ஆனந்தம், சக்தி முதலான அனைத்து
முக்கிய குணங்களையும் அனுபவம் செய்ய வேண்டும். இந்த அனுபவம்
தனக்கு மட்டும் ஆவதில்லை, ஆனால் மற்ற ஆத்மாக்களும் கூட அவர்களது
முகத்தின் மூலம் சர்வ குணங்களையும் அனுபவம் செய்வார்கள். ஒரு
குணத்தில் சர்வ குணங்களும் அடங்கியிருக்கும்.
சுலோகன்:
நல்லதை தாரணை செய்யுங்கள், ஆனால்
நல்லதில் பிரபாவம் ஆகி விடாதீர்கள்.
அவ்யக்த இஷாரா: தூய்மையற்ற விதையைக் கூட முடித்துவிட்டு
சம்பூர்ண தூய்மை (பவித்ரம்) ஆகுங்கள்.
பவித்திரதா என்பது பிராமண ஆத்மாக்களாகிய உங்கள் ஆதி, அநாதி
சம்ஸ்காரம். இந்த இயல்பான சம்ஸ்காரத்தின் மூலம் கனவிலோ,
சங்கல்பத்திலோ கூட அபவிததிரதா இமர்ஜ் ஆகக்கூடாது. சங்கல்பம்
வந்தால் அதை வெற்றி கொள்ளுங்கள். இதற்கும் மேலாக, இயல்பான
சம்ஸ்காரத்தை உருவாக்குங்கள். அப்போது இந்தப் பாடத்தில்
புருˆôர்த்தம் செய்வதற்கான அவசியம் இருக்காது.