19-09-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! இந்த எல்லையற்ற
நாடகத்தில் ஆத்மாக்களாகிய உங்களுக்கு அவரவருக்குரிய நடிப்பின்
பாகம் கிடைத்துள்ளது. இப்போது நீங்கள் இந்த சரீரம் என்ற ஆடையை
அகற்றி வீட்டுக்குச் செல்ல வேண்டும். பிறகு புது இராஜ்யத்தில்
வர வேண்டும்.
கேள்வி:
பாபா எந்த ஒரு காரியத்தையும்
பிரேரணை (தூண்டுதல்) மூலம் செய்வதில்லை. அவருடைய அவதாரம்
நிகழ்கின்றது. இது எந்த விசயத்தால் (நிரூபணம்) தெளிவாகின்றது?
பதில்:
பாபாவை செய்பவர்-செய்விப்பவர்
என்று தான் சொல்கின்றனர். பிரேரணையின் அர்த்த மாவது, சிந்தனை.
பிரேரணை மூலம் (துண்டுதல் மூலம்) புது உலகத்தின் ஸ்தாபனை
நடைபெறு வதில்லை. பாபா குழந்தைகள் மூலம் செய்விக்கிறார்.
கர்மேந்திரியங்கள் இல்லாமலோ எதையுமே செய்விக்க முடியாது. அதனால்
அவருக்கு சரீரத்தின் ஆதாரம் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
ஓம் சாந்தி.
ஆன்மிகக் குழந்தைகள் ஆன்மிகத் தந்தையின் முன்பாக அமர்ந்துள்ளனர்.
அதாவது ஆத்மாக்கள் தங்களின் தந்தையின் முன் அமர்ந்துள்ளனர்.
ஆத்மா நிச்சயமாக சரீரத்துடன் தான் அமர்ந்திருக்கும். பாபாவும்
எப்போது சரீரத்தை எடுத்துக் கொள்கிறாரோ, அப்போது தான் நமக்கு
முன்பாக இருக்கிறார். இதைத் தான் ஆத்மா, பரமாத்மா நீண்ட
காலமாகத் தனியாக இருந்து விட்டனர்...... எனச் சொல்கின்றனர்.
குழந்தைகள் நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், உயர்ந்த
வரிலும் உயர்ந்த தந்தைக்குத் தான் ஈஸ்வரன், பிரபு, பரமாத்மா என
வெவ்வேறு பெயர்கள் கொடுத்துள்ளனர். பரமபிதா என்று ஒருபோதும்
லௌகிக் தந்தைக்குச் சொல்லப் படுவதில்லை. பிறகு பரமபிதா என்று
மட்டுமே எழுதினாலும் தடையில்லை. பரமபிதா என்றால் அவர்
அனைவருக்குமான ஒரே தந்தை ஆவார். குழந்தைகள் அறிவார்கள், நாம்
பரமபிதாவுடன் அமர்ந்துள்ளோம். பரமபிதா பரமாத்மா மற்றும் நாம்
ஆத்மாக்கள் சாந்திதாமத்தில் வசிப்பவர்கள். இங்கே நமக்குரிய
பாகத்தில் நடிப்பதற்காக வருகிறோம். சத்யுகத்தில் தொடங்கி
கலியுகக் கடைசி வரை நடித்துள்ளோம். இது புதிய படைப் பாகின்றது.
படைப்பவராகிய தந்தை புரிய வைத்துள்ளார், குழந்தைகள் நீங்கள்
இதுபோல் உங்களின் நடிப்பின் பாகத்தில் நடித்திருக்கிறீர்கள்.
இதற்கு முன்பு தெரியாமல் இருந்தீர்கள், அதாவது நாம் 84
பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றியுள்ளோம் என்று. அனைவருமே 84
பிறவிகளை எடுக்க முடியாது. இதைப் புரிய வைக்க வேண்டும், அதாவது
84 பிறவிகளின் சக்கரம் எப்படிச் சுற்றுகிறது? மற்றப்படி இலட்சக்
கணக்கான ஆண்டுகளின் விசயமோ கிடையாது. குழந்தைகள் அறிவார்கள்,
நாம் ஒவ்வொரு 5000 ஆண்டுகளுக்குப் பிறகும் நம் பாகத்தை ஏற்று
நடிப்பதற்காக வருகிறோம். நாம் நடிகர்கள். உயர்ந்தவரிலும்
உயர்ந்தவரான பகவானுக்கும் விசித்திர (குப்தமான) நடிப்பின் பாகம்
உள்ளது. பிரம்மா மற்றும் விஷ்ணுவுக்கு விசித்திர குப்தமான
நடிப்பு எனச் சொல்ல மாட்டார்கள். இருவருமே 84 பிறவிகளின்
சக்கரத்தைச் சுற்றுகின்றனர். மற்றப்படி சங்கருக்கு நடிப்பின்
பங்கு என்பது இந்த உலகத்திலே கிடையாது. திரிமூர்த்தியில்
காட்டுகின்றனர்-படைத்தல், அழித்தல், காத்தல். சித்திரங்களை
வைத்துப் புரிய வைக்க வேண்டியுள்ளது. சித்திரங்களில் எதைக்
காண்பிக்கிறீர்களோ, அதைப் பற்றிப் புரிய வைக்க வேண்டும். சங்கம
யுகத்தில் பழைய உலகத்தின் விநாசமோ நடந்தாக வேண்டும். தூண்டுபவர்
என்ற வார்த்தையும் தவறானதாகும். எப்படி சிலர் சொல்கின்றனர்,
இன்று எனக்கு வெளியில் செல்வதற்கான பிரேரணை இல்லை என்கின்றனர்.
பிரேரணை என்றால் சிந்தனை. பிரேரணைக்கு வேறு எந்த அர்த்தமும்
கிடையாது. பரமாத்மபா ஒன்றும் பிரேரணையின் மூலம் காரியம் செய்வ
தில்லை. பிரேரணை மூலம் ஞானமும் கிடைக்க முடியாது. தந்தை வருவது
இந்தக் கர்மேந்தி ரியங்கள் மூலம் தனது நடிப்பை ஏற்று
நடிப்பதற்காக. செய்பவர்-செய்விப்பவர் இல்லையா? குழந்தைகள்
மூலமாகச் செய்விப்பார். சரீரம் இல்லாமலோ செய்ய முடியாது.
இவ்விசயங்களை யாருமே அறிந்திருக்கவில்லை. ஈஸ்வரனாகிய
தந்தையையும் அறிந்து கொள்ளவில்லை. ரிஷி-முனி முதலானவர்கள்
சொல்லி வந்தனர்-எங்களுக்கு ஈஸ்வரனைப் பற்றித் தெரியாது என்று.
ஆத்மாவைப் பற்றியோ, பரமாத்ம தந்தை பற்றியோ யாரிடமும் ஞானம்
கிடையாது. தந்தை முக்கிய படைப்பாளர், இயக்குநர், இயக்கவும்
செய்கிறார் (வழிகாட்டுதல் தருகிறார்). ஸ்ரீமத் தருகிறார்.
மனிதர்களின் புத்தியிலோ சர்வவியாபி என்ற ஞானம் உள்ளது. நீங்கள்
புரிந்து கொண்டிருக்கிறீர்கள், பாபா நம்முடைய தந்தைவாக உள்ளார்.
அந்த மனிதர்கள் சர்வ வியாபி எனச் சொல்லி விடுகின்றனர் என்றால்
தந்தை எனப் புரிந்து கொள்ளவே முடியாது. நீங்கள் புரிந்துக்
கொண்டிருக்கிறீர்கள், இது எல்லையற்ற தந்தையின் குடும்பம்.
சர்வவியாபி எனச் சொல்வதால் குடும்பத்தின் நறுமணம் வருவதில்லை.
அவர் நிராகாரி சிவபாபா எனச் சொல்லப்படுகிறார். நிராகாரி
ஆத்மாக்களின் பாபா. சரீரம் இருக்கும் போது தான் ஆத்மா சொல்கிறது,
பாபா என்று. சரீரம் இல்லாமலோ ஆத்மாவினால் பேச முடியாது. பக்தி
மார்க்கத்தில் அழைத்தே வந்திருக் கிறார்கள். அந்த பாபா
துக்கத்தைப் போக்கி சுகம் தருபவர் எனப் புரிந்துக் கொண்டுள்ளனர்.
சுகம் கிடைப்பது சுகதாமத்தில். சாந்தி கிடைப்பது
சாந்திதாமத்தில். இங்கே இருப்பது துக்கம். இந்த ஞானம்
உங்களுக்குக் கிடைப்பது சங்கமயுகத்தில். பழையது மற்றும் புதிய
உலகத்திற்கு இடையில் உள்ளது. எப்போது புதிய உலகத்தின் ஸ்தாபனை
மற்றும் பழைய உலகத்தின் விநாசம் நடைபெற வேண்டுமோ அப்போது தான்
பாபா வருகிறார். முதலில் எப்போதும் சொல்ல வேண்டியது, புது
உலகத்தின் ஸ்தாபனை பற்றி. முதலில் பழைய உலகத்தின் விநாசம் எனச்
சொல்வது தவறாகி விடுகின்றது. இப்போது உங்களுக்கு எல்லையற்ற
நாடகத்தின் ஞானம் கிடைக்கின்றது. எப்படி அந்த நாடகத்தில்
நடிகர்கள் வருகிறார்கள் என்றால் வீட்டிலிருந்து சாதாரண ஆடை
அணிந்து வருகின்றனர். பிறகு நாடகத்தில் வந்து ஆடையை மாற்றிக்
கொள் கின்றனர். பிறகு நாடகம் முடிவடைந்தது என்றால் அந்த ஆடையைக்
களைந்து விட்டு வீட்டுக்குச் செல்கின்றனர். இங்கே ஆத்மாக்கள்
நீங்கள் வீட்டிலிருந்து அசரீரியாக வர வேண்டியுள்ளது. இங்கே
வந்து இந்த சரீரமாகிய ஆடையை அணிந்து கொள்கிறீர்கள்.
ஒவ்வொருவருக்கும் அவரவருடைய பாகம் கிடைத்துள்ளது. இது
எல்லையற்ற நாடகம். இப்போது இந்த எல்லையற்ற உலகம் முழுவதும்
பழையதாக உள்ளது. பிறகு புதியதாக ஆகும். அது மிகச் சிறியது, ஒரே
தர்மம் இருக்கும். குழந்தைகள் நீங்கள் இந்தப் பழைய
உலகத்திலிருந்து வெளியேறிப் பிறகு எல்லைக் குட்பட்ட உலகத்தில்,
புது உலகத்தில் வர வேண்டும். ஏனென்றால் அங்கே இருப்பது ஒரே
தர்மம். அநேக தர்மங்கள், அநேக மனிதர்கள் இருக்கிற காரணத்தால்
எல்லையற்றதாக ஆகி விடுகிறது. அங்கிருப்பதோ ஒரு தர்மம், கொஞ்சம்
மனிதர்கள். ஒரு தர்மத்தின் ஸ்தாபனைக்காக வர வேண்டியுள்ளது.
குழந்தைகள் நீங்கள் இந்த எல்லையற்ற நாடகத்தின் இரகசியத்தைப்
புரிந்து கொண்டிருக்கிறீர்கள்-இந்தச் சக்கரம் எப்படிச்
சுற்றுகிறது என்று. இச்சமயம் என்னவெல்லாம் நடைமுறையில் உள்ளனவோ,
அவற்றுக்குத் தான் பிறகு பக்தி மார்க்கத்தில் பண்டிகைகள்
கொண்டாடுகின்றனர். நம்பர்வார் என்னென்ன பண்டிகைகள் உள்ளன
என்பதையும் குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள். உயர்ந்தவரிலும்
உயர்ந்த பகவான் சிவபாபாவின் ஜெயந்தி எனச் சொல்வார் கள். அவர்
எப்போது வந்தாரோ, அப்போது பிறகு மற்றப் பண்டிகைகள் உருவாகும்.
சிவபாபா முதல்-முதலில் வந்து கீதை சொல்கிறார். அதாவது
முதல்-இடை-கடை பற்றிய ஞானத்தைச் சொல்கிறார். யோகத்தையும் (நினைவு
யாத்திரை) கற்றுத் தருகிறார். மேலும் உங்களுக்குப் படிப்பும்
சொல்லித் தருகிறார். ஆக, முதல்-முதலில் தந்தை வந்தார்,
சிவஜெயந்தி வந்தது. பிறகு கீதா ஜெயந்தி எனச் சொல்வார்கள்.
ஆத்மாக் களுக்கு ஞானம் சொல்கிறார் என்றால் கீதா ஜெயந்தி ஆகி
விட்டது. குழந்தைகள் நீங்கள் சிந்தனை செய்து பண்டிகைகளை
நம்பர்வார் எழுதுங்கள். தங்களின் தர்மத்தைச் சேர்ந்தவர்கள் தான்
இவ்விசயங்களைப் புரிந்து கொள்வார்கள். ஒவ்வொரு வருக்கும்
தங்களின் தர்மம் பிரியமானதாக இருக்கும். மற்ற தர்மத்தினரின்
விசயமே கிடையாது. யாருக்காவது மற்ற தர்மம் பிரியமானதாக
இருக்கலாம். ஆனால் அதில் வர முடியாது. சொர்க்கத்தில் மற்ற
தர்மத்தைச் சேர்ந்தவர்கள் வர முடியாது. கல்பவிருட்சத்தில் மிகத்
தெளிவாக உள்ளது. எந்த எந்த தர்மங்கள் எந்தச் சமயத்தில்
வருகின்றனவோ, மீண்டும் அதே சமயத்தில் வரும். முதலில் பாபா
வருகிறார். அவர் தான் வந்து இராஜயோகம் கற்பிக்கிறார் என்றால்
சொல்வார்கள், சிவஜெயந்திக்குப் பிறகு கீதா ஜெயந்தி, பிறகு
நாராயண ஜெயந்தி. அதுவோ சத்யுகம் ஆகின்றது. அதையும் நம்பர்வார்
எழுத வேண்டும். இவை ஞான விசயங்களாகும். சிவஜெயந்தி எப்போது
நடந்தது என்பதும் கூடத் தெரியாது. ஞானம் சொன்னார், அது கீதை
எனச் சொல்லப் படுகின்றது. பிறகு விநாசமும் நடைபெறும். ஜெகத்
அம்பா முதலானவர்களின் ஜெயந்திக்கு எந்த ஒரு விடுமுறையும்
கிடையாது. மனிதர்கள் யாருடைய நாள் கிழமை முதலிய எதையும்
அறிந்திருக்கவில்லை. லட்சுமி-நாராயணர், இராம்-சீதாவின் இராஜ்யம்
பற்றியே அறிந்து கொள்ள வில்லை. 2500 ஆண்டுகளில் யார்
வந்துள்ளனரோ, அவர்களைப் பற்றி அறிந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு
முன்பு இருந்த ஆதி சநாதன தேவி-தேவதா தர்மத்தைப் பற்றி, அது
எவ்வளவு காலம் இருந்தது என்பது பற்றி எதுவும் தெரியாது. 5000
ஆண்டுகளைக் காட்டிலும் பெரிய கல்பம் என்று எதுவும் இருக்க
முடியாது. பாதிக் காலத்திலேயோ ஏராளமான ஜனத்தொகை வந்து விட்டது.
மற்ற அரைக்கல்பத்தில் இவர்களின் இராஜ்யம். பிறகு அதிக
ஆண்டுகளின் கல்பம் எப்படி இருக்க முடியும்? 84 லட்சம்
ஜென்மங்களும் இருக்க முடியாது. கலியுகத்தின் ஆயுள் லட்சக்
கணக்கான ஆண்டுகள் என அந்த மனிதர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
மனிதர்களை இருளுக்குள் விட்டு விட்டனர். முழு டிராமாவும் 5000
ஆண்டுகள் தான், கலியுகத்திற்காக மட்டுமே 40 ஆயிரம் ஆண்டு கள்
இன்னும் இருப்பதாகச் சொல்வது எப்படி? சண்டை வந்தால் பகவான்
வந்தாக வேண்டும் எனப் புரிந்து கொள்கின்றனர், ஆனால் பகவானோ
சங்கமயுகத்தில் தான் வர வேண்டும். மகாபாரதமோ சங்கமயுகத்தில்
தான் நடைபெறுகின்றது. பாபா சொல்கிறார், நானும் கூட
சங்கமயுகத்தில் தான் வருகிறேன். புது உலகத்தின் ஸ்தாபனை மற்றும்
பழைய உலகத்தின் விநாசம் செய்வதற்காக பாபா வருவார். புது உலகின்
ஸ்தாபனை நடக்குமானால் பழைய உலகின் விநாசம் நிச்சயமாக நடைபெறும்.
இதற்காகவே தான் இந்த யுத்தம். இதில் சங்கரின் பிரேரணை (தூண்டுதல்)
முதலியவற்றின் விசயமோ கிடையாது. பழைய உலகம் அழிந்து போகும்
என்பது புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. கட்டடங்கள் முதலானவையோ,
நில நடுக்கத்தில் அனைத்தும் அழிந்து போகும். ஏனென்றால் புதிய
உலகம் வேண்டும். புது உலகம் நிச்சயமாக இருந்தது. டெல்லி
பரிஸ்தானாக (தேவதைகளின் உலகமாக) இருந்தது. யமுனைக்கரையில்
இருந்தது. லட்சுமி-நாராயணரின் ஆட்சி இருந்தது. (நினைவுச்சின்னமாக)
சித்திரங் களும் உள்ளன. லட்சுமி-நாராயணரை சொர்க்கத்தில்
வசிப்பவர்கள் என்று தான் சொல்வார்கள். குழந்தைகள் நீங்கள்
சாட்சாத்காரமாகவும் பார்த்திருக்கிறீர்கள் - எப்படி சுயம்வரம்
அங்கே நடைபெறுகிறது என்று. இந்தப் கருத்துகள் அனைத்தையும் பாபா
ரிவைஸ் செய்ய வைக்கிறார். நல்லது, கருத்துக்கள் நினைவு வரவில்லை
என்றால் பாபாவை நினைவு செய்யுங்கள். தந்தை மறந்து போனால்
ஆசிரியரை நினைவு செய்யுங்கள். ஆசிரியர் என்ன கற்றுத் தருகிறாரோ,
அது அவசியம் நினைவு வரும் இல்லையா? ஆசிரியரும் நினைவிருக்கும்,
ஞானமும் நினைவிருக்கும். குறிக்கோளும் புத்தியில் உள்ளது.
நினைவு வைக்கத் தான் வேண்டும். ஏனென்றால் உங்களுக்கு இது மாணவ
வாழ்க்கை இல்லையா? இதையும் அறிவீர்கள், யார் நமக்குக்
கற்பிக்கிறாரோ, அவர் நம்முடைய தந்தையாகவும் இருக்கிறார். லௌகிக்
தந்தை ஒன்றும் மறைந்து போவதில்லை. லௌகிக், பரலௌகிக், இவர் (பிரம்மா)
பிறகு அலௌகிக். இவரை யாரும் நினைவு செய்வதில்லை. லௌகிக்
தந்தையிடமிருந்தோ ஆஸ்தி கிடைக்கின்றது. கடைசி வரை
நினைவிருக்கிறது. சரீரம் விட்டு விட்டால் பிறகு வேறு தந்தை
கிடைக் கிறார். ஒவ்வொரு பிறவியிலும் லௌகிக் தந்தை கிடைக்
கின்றனர். பரலௌகிக் தந்தையையும் துக்கம் மற்றும் சுகத்தில்
நினைவு செய்கின்றனர். குழந்தை கிடைத்து விட்டால் ஈஸ்வரன்
குழந்தை கொடுத்தார் எனச் சொல்வார்கள். மற்றப்படி பிரஜாபிதா
பிரம்மாவை எதற்காக நினைவு செய்வார்கள்? இவரிடமிருந்து எதுவுமே
கிடைப்பதில்லை. இவர் அலௌகிக் எனச் சொல்லப்படுகிறார்.
நீங்கள் அறிவீர்கள், நாம் பிரம்மா மூலம் சிவபாபாவிடமிருந்து
ஆஸ்தி பெற்றுக் கொண்டிருக் கிறோம். எப்படி நாம் படிக்கின்றோம்,
இந்த ரதமும் கூட நிமித்தமாக ஆகியுள்ளது. அநேக ஜென்மங் களின்
கடைசியில் இவருடைய சரீரம் தான் ரதமாக ஆகியுள்ளது. ரதத்திற்குப்
பெயரோ வைக்க வேண்டியுள்ளது இல்லையா? இது எல்லையற்ற சந்நியாசம்.
ரதம் நிரந்தரமாக உள்ளது, மாற்ற மில்லை. மற்றவர்களுக்கு இடம்
இல்லை. போகப்போக பிறகு விட்டுவிட்டுப் போய் விடுகிறார்கள்.
இந்த ரதமோ டிராமாவின் அனுசாரம் நிர்ணயிக்கப் பட்டது. ஆகவே தான்
இவர் பாக்கியசாலி ரதம் எனச் சொல்லப்படுகிறார். உங்கள்
அனைவரையும் பாக்கியசாலி ரதம் எனச் சொல்ல மாட்டார்கள்.
பாக்கியசாலி ரதம் என்று ஒருவர் தான் ஏற்றுக் கொள்ளப் படுகிறார்.
அவருக்குள் சிவபாபா வந்து ஞானம் தருகிறார். ஸ்தாபனையின்
காரியத்தைச் செய்விக்கிறார். நீங்கள் பாக்கியசாலி ரதம் ஆக
முடியாது. ஆத்மா நீங்கள் இந்த சரீரமாகிய ரதத்தில் அமர்ந்து
படிக்கிறீர்கள். ஆத்மா பவித்திரமாகி விடுகிறது. அதனால் மகிமை
இந்த (பிரம்மாவின் சரீரமாகிய) ரதத்திற்குத் தான். இதில்
அமர்ந்து கற்பிக்கிறார். இந்தக் கடைசிப் பிறவி மிகவும் மதிப்பு
வாய்ந்தது. பிறகு சரீரம் மாறி நாம் தேவதை ஆகி விடுவோம். இந்தப்
பழைய சரீரத்தின் மூலம் தான் நீங்கள் கல்வி பெறுகிறீர்கள்.
சிவபாபா வுடையவர்களாக ஆகிறீர்கள். நீங்கள் அறிவீர்கள், நமது
முந்தைய ஜென்மம் பைசா அளவிற்குக் கூட மதிப்பில்லாமல் இருந்தது.
இப்போது மதிப்பு மிக்கதாக ஆகிக்கொண்டுள்ளது. எவ்வளவு
படிக்கிறீர்களோ, அவ்வளவு உயர்ந்த பதவி பெறுவீர்கள். பாபா புரிய
வைத்துள்ளார், முக்கியமானது நினைவு யாத்திரை. இதைத் தான்
பாரதத்தின் புராதன யோகம் எனச் சொல்கின்றனர். இதன் மூலம் நீங்கள்
பதித்திலிருந்து பாவனமாகிறீர்கள். சொர்க்கவாசியாகவோ அனைவருமே
ஆகின்றனர். பிறகு படிப்பின் மீது ஆதாரம் உள்ளது. நீங்கள்
எல்லையற்ற பாடசாலையில் அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் தான்
பிறகு தேவதை ஆவீர்கள். யார் உயர்ந்த பதவி பெற முடியும் என்பதை
நீங்கள் புரிந்து கொள்ள முடியும். அவர்களின் தகுதி என்னவாக
இருக்க வேண்டும்? முதலில் நம்மிடமும் தகுதி இல்லாமல் இருந்தது.
அசுர வழியில் இருந்தோம். இப்போது ஈஸ்வரிய வழிமுறை கிடைக்கின்றது.
அசுர வழியினால் நாம் இறங்கும் கலையில் செல்கிறோம். ஈஸ்வரிய
வழிமுறையினால் உயரும் கலையில் செல்கிறோம். ஈஸ்வரிய வழிமுறை
தருபவர் ஒருவர். அசுர வழிமுறை தருபவர்கள் அநேகர். தாய்-தந்தை,
சகோதர-சகோதரி, ஆசிரியர்-குரு என்று எவ்வளவு பேரின் வழிமுறை
கிடைக்கின்றது! இப்போது உங்களுக்கு ஒருவரின் வழிமுறை
கிடைக்கின்றது. அது 21 பிறவிகளுக்குப் பயன் தருவது. ஆக,
அத்தகைய வழிமுறைப்படி நடக்க வேண்டும் இல்லையா? எந்தளவு அதன் படி
நடக்கிறீர்களோ, அவ்வளவு உயர்ந்த பதவி பெறுவீர்கள். குறைவாக
நடந்தால் குறைவான பதவி. மத் (அறிவுரை அல்லது வழிமுறை) என்பது
பகவானுடையது. உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் பகவான் தான். அவர் தான்
கிருஷ்ணரை உயர்ந்த வரிலும் உயர்ந்தவராக ஆக்கினார். பிறகு
தாழ்ந்தவரிலும் தாழ்ந்தவராக இராவணன் ஆக்கினான். பாபா வெள்ளையாக
(தூய்மையாக) ஆக்குகிறார், பிறகு இராவணன் கருப்பாக (தூய்மை
யற்றவராக) ஆக்குகிறான். தந்தை ஆஸ்தி தருகிறார். அவர்களோ
விகாரமற்றவர்கள். தேவதை களின் மகிமை பாடுகின்றனர், சர்வகுண
சம்பன்ன.......... சந்நியாசிகளை சம்பூர்ண நிர்விகாரி எனச்
சொல்ல மாட்டார்கள். சத்யுகத்தில் ஆத்மா, சரீரம் இரண்டுமே
பவித்திரமாக இருக்கும். தேவதை களை அனைவரும் அறிவார்கள். அவர்கள்
சம்பூர்ண நிர்விகாரியாக இருக்கும் காரணத்தால் சம்பூர்ண
உலகத்தின் எஜமானர் ஆகின்றனர். இப்போது இல்லை. பிறகு நீங்கள்
வரும் காலத்தில் ஆகிறீர்கள். பாபாவும் சங்கமயுகத்தில் தான்
வருகிறார். பிரம்மாவின் மூலமாக பிராமணர்கள் உருவாகின்றனர்.
பிரம்மாவின் குழந்தைகளாகவோ நீங்கள் அனைவரும் ஆகிறீர்கள். அவர்
கிரேட்-கிரேட் கிராண்ட் ஃபாதர். பிரஜாபிதா பிரம்மாவின் பெயரைக்
கேட்டதில்லையா எனக் கேளுங்கள். பரமபிதா பரமாத்மா பிரம்மாவின்
மூலமாகத் தான் சிருஷ்டியைப் படைப்பார் இல்லையா? பிராமண குலம்
உள்ளது. பிரம்மா முகவம்சாவளி சகோதர-சகோதரிகள் ஆகின்றனர். இங்கே
ராஜா-ராணியின் விசயம் கிடையாது. இந்த பிராமண குலமோ
சங்கமயுகத்தின் சிறிது காலம் மட்டும் நடைபெறுகின்றது. இராஜ்யம்
என்பது பாண்டவர்களுக்கும் கிடையாது, கௌரவர்களுக்கும் கிடையாது.
நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) 21 பிறவிகளுக்கு உயர்ந்த பதவிக்கு அதிகாரி ஆவதற்காக அனைத்து
அசுர வழிமுறை களையும் விட்டுவிட்டு ஓர் ஈஸ்வரிய வழிமுறைப்படி
நடக்க வேண்டும். சம்பூர்ண நிர்விகாரி ஆக வேண்டும்.
2) இந்தப் பழைய சரீரத்தில் இருந்து கொண்டு பாபாவின் போதனைகளை
தாரணை செய்து தேவதை ஆக வேண்டும். இது மிகவும் மதிப்பு வாய்ந்த
வாழ்க்கை. இதில் மிகமிக மதிப்பு வாய்ந்தவராக ஆக வேண்டும்.
வரதானம்:
அனைத்து ஆத்மாக்களுக்கும் யதார்த்தமான அழிவற்ற ஆதரவு கொடுக்கக்
கூடிய ஆதார மூர்த்தி, உத்தார மூர்த்தி ஆகுக.
நிகழ்காலத்தில் உலகில் நாலாப்புறங்களிலும் ஏதாவது குழப்பம்
இருக்கிறது, சில இடங்களில் மன உளைச்சலுக்கான குழப்பம், சில
இடங்களில் இயற்கை தமோ பிரதான வாயுமண்டலத்தின் காரணத்தினால்
குழப்பம், அல்ப கால சாதனங்கள் அனைவரையும் கவலை என்ற சிதைக்கு
கொண்டு சென்று கொண்டிருக்கிறது. ஆகையால் அல்ப கால ஆதாரம்,
பிராப்தி, விதியில் களைப் படைந்து உண்மையாக ஆதரவு தேடிக்
கொண்டிருக் கிறார்கள். எனவே ஆதார மூர்த்தி, உத்தார மூர்த்தி
ஆத்மாக்கள் அவர்களுக்கு சிரேஷ்ட அழிவற்ற பிராப்திகளின்
யதார்த்தமான, உண்மை யான, அழிவற்ற ஆதாரவின் அனுபவம்
செய்வியுங்கள்.
சுலோகன்:
நேரம் விலைமதிப்பற்ற பொக்கிஷமாகும். ஆகையால் இதை
வீணாக்குவதற்குப் பதிலாக உடனடியாக முடிவெடுத்து வெற்றி
ஆக்குங்கள்.
அவ்யக்த சமிக்ஞை: இப்போது ஈடுபாடெனும் அக்னியை மூட்டி யோகத்தை
ஜூவாலா ரூபமாக்குங்கள்.
எவ்வாறு சூரியன் கிரணங்களை பரப்புகின்றதோ, அதே போன்று மாஸ்டர்
சர்வசக்திவான் ஸ்திதியில் அல்லது விசேஷதா என்ற கிரணங்களை
நாலாப்புறங்களிலும் பரப்பும் அனுபவம் செய்யுங்கள். இதற்கு நான்
மாஸ்டர் சர்வசக்திவான், விக்ன விநாசக் ஆத்மா என்ற சுவமானத்தின்
நினைவு என்ற இருக்கையில் நிலைத்திருந்து காரியங்கள் செய்தீர்கள்
எனில் தடைகள் எதிரில் கூட வராது.
|
|
|