19-09-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள் இறை
தந்தையின் மாணவர்களாக உள்ளீர்கள், நீங்கள் உண்மையிலும்
உண்மையான ஞான மழை பொழிபவர்களாகி தன்னுடைய வாயிலிருந்து
எப்பொழுதும் ஞான இரத்தினங்களைத் தான் வெளிப்படுத்த வேண்டும்.
கேள்வி:
தந்தை குழந்தைகளை உயிர்த்தெழுமாறு
(தன்னை தான் உணரச்) செய்வதற்காக எந்தவொரு சஞ்ஜீவினி மூலிகை
கொடுக்கிறார்?
பதில்:
மன்மனாபவ அதாவது தந்தையை நினைவு
செய்யுங்கள். பரமாத்மா மூலமாக நாங்கள் தேவதை ஆவதற்காக, அதாவது
இராஜ்ய பதவியை பெறுவதற்காக, இந்த படிப்பை படித்துக்
கொண்டிருக்கிறோம் என்ற போதை இருக்க வேண்டும். இந்த நினைவு தான்
உயிர்த்தெழுமாறு செய்யக் கூடிய சஞ்ஜீவினி மூலிகை ஆகும்.
அவர்களுடைய நிலை ஒரு பொழுதும் வாடி போய் விடாது. அவர்கள்
எப்பொழுதும் தங்களை சோதனை செய்தபடியே மற்றவர்களையும்
எச்சரித்துக் கொண்டே இருப்பார்கள்.
ஓம் சாந்தி.
இது காலேஜ் அல்லவா? பள்ளியில் மாணவர்கள் அமரும்பொழுது, நாம்
ஆசிரியருக்கு முன்னால் அமர்ந்திருக்கிறோம் என்று
புரிந்திருப்பார்கள். என்ன தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக
அமர்ந்திருக் கிறோம் என்பதும் புத்தியில் இருக்கிறது. வேத
சாஸ்திரங்கள் முதலியவற்றை சொல்லக்கூடிய சத்சங்கத்தில் எந்த
இலட்சியமும் இருக்காது. அந்த சாஸ்திரம் முதலியவை உங்களுடைய
புத்தியிலிருந்து விலகி விட்டன. எதிர்கால 21 பிறவி களுக்கு நாம்
மனிதனிலிருந்து தேவதை ஆகிக்கொண்டு இருக்கின்றோம் என்று நீங்கள்
அறிந்திருக்கிறீர்கள். மாணவன் வீட்டில் இருந்தாலும் அல்லது
எங்கிருந்தாலும், நான் இன்ன பரிட்சையில் தேர்ச்சி பெறப்
போகிறேன் என்பது புத்தியில் இருக்கும். குழந்தைகளாகிய நீங்கள்
வகுப்பில் அமர்ந்து இருக்கும் போது நாம் தேவதை
ஆகிக்கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறீர்கள். நீங்களும்
தன்னை மாணவன் என்று புரிந்திருக்கிறீர்கள் அல்லவா? நாம்
ஆத்மாக்கள், இந்த சரீரத்தின் மூலமாக நாம் படித்துக் கொண்டு
இருக்கிறோம். இந்த சரீரத்தை விட்டுவிட்டு எதிர்காலத்தில் நாம்
புதிய சரீரம் எடுப்போம் என்று ஆத்மா அறிந்திருக்கிறது. அவர்களை
தேவதை என்று அழைக்கப்படுகின்றது. இதுவோ விகாரி பதீத சரீரம்
ஆகும். பின்னர் நமக்கு புதிய சரீரம் கிடைக்கும். இந்த அறிவு
இப்பொழுது கிடைத்துள்ளது. நான் ஆத்மா படித்துக் கொண்டு
இருக்கின்றேன், ஞானக்கடல் கற்பித்துக் கொண்டு இருக்கின்றார்.
தேவதைகள் சொர்க்கத்தில் இருக் கின்றனர். இதை அடிக்கடி சிந்தனை
செய்தால் குழந்தை களுக்கு குஷி ஏற்படும். மேலும் முயற்சியும்
செய்வார்கள். எண்ணம், சொல், செயலில் துôய்மை யாகவும்
இருப்பார்கள். அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியைச் சொல்லிக்
கொண்டே இருப்பார்கள். பிரம்மாகுமாரர்கள் அனேகர் இருக்கின்றனர்
அல்லவா? அனைவரும் மாணவ வாழ்க்கையில் இருக்கின்றார்கள்.
தொழிலுக்குச் செல்வதால் இந்த வாழ்க்கை மறந்துவிடும் என்பதல்ல.
எவ்வாறு இந்த மிட்டாய் வியாபாரி இருக்கிறார், நான் மாணவன் என்று
இவர் புரிந்திருப்பார் அல்லவா? மாணவன் எப்போதாவது மிட்டாய்
தயாரிக்க வேண்டியிருக்குமா என்ன? இங்கோ, உங்களுடைய விஷயமே
தனிப்பட்டது ! சரீர நிர்வாகத்திற்காக தொழிலும் செய்ய வேண்டும்.
கூடவே, நாம் பரமபிதா பரமாத்மா மூலமாக படித்துக் கொண்டு இருக்
கிறோம் என்ற நினைவு புத்தியில் இருக்க வேண்டும். இந்த சமயம்
முழு உலகமும் நரகவாசி யாக உள்ளது என்பது உங்களுடைய புத்தியில்
இருக்கிறது. ஆனால், பாரதவாசிகளாகிய நாம் நரகவாசிகளாக
இருக்கிறோம், பாரதவாசி களாகிய நாம் சொர்க்கவாசிகளாக இருந்தோம்
என்று எவரும் புரிந்திருக்கவில்லை. குழந்தைகளாகிய உங்களுக்கும்
கூட முழுநாளும் இந்தக் குஷி இருப்ப தில்லை. அடிக்கடி மறந்துவிடு
கிறது. நீங்கள் பி.கே.யாக இருக்கிறீர்கள், டீச்சராக இருக்
கிறீர்கள், கற்பிக்கின்றீர்கள், மனிதரை தேவதையாக, நரகவாசியை
சொர்க்கவாசியாக ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள், ஆனாலும்
மறந்துவிடுகிறது. இந்த சமயம் முழு உலகமும் அசுர சம்பிரதாயமாக
உள்ளது என்று நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். ஆத்மா பதீதமாக
உள்ளதால் சரீரமும் பதீதமாக உள்ளது. இப்பொழுது குழந்தைகளாகிய
உங்களுக்கு இந்த விகாரங்கள் மீது வெறுப்பு வருகிறது. காமம்,
கோபம் முதலிய அனைத்தும் வெறுப்பதற்கான விஷயங்கள். அனைத்தையும்
விட வெறுப்பதற்கான பொருள் விகாரம் ஆகும். சந்நியாசிகளிடத்தில்
கூட கொஞ்சம் கோபம் இருக்கிறது. ஏனென்றால், அன்னம் எப்படியோ,
அப்படியே எண்ணம் இருக்கும், கிரஹஸ்திகளுடையதைத் தான் சாப்பிடு
கிறார்கள். தானியம் எதுவும் சாப்பிடுவ தில்லை, ஆனால் பணம்
வாங்குகிறார்கள் அல்லவா? பதீதமானவர் களுடைய பிரபாவம் அதன் மீது
உள்ளது அல்லவா? பதீதமானவர்களின் உணவு பதீதமாகத்தான் ஆக்கும்.
இப்பொழுது நீங்கள் துôய்மைப் புரட்சி செய்கின்றீர்கள். இது
அதிகரிக்கும். அனைவரும் நாம் துôய்மை ஆக வேண்டும் என்று
விரும்புவார்கள். இந்த விசயம் உள்ளத்தில் பதிந்துவிடும்.
துôய்மை ஆகாமல் சொர்க்கத்தின் எஜமானர் ஆக இயலாது. யார்
சொர்க்கவாசி ஆகவேண்டுமோ அவர்களே ஆவார்கள் என்பது கொஞ்சம்
கொஞ்சமாக அனைவருடைய புத்தியிலும் வந்துவிடும். நாங்கள் துôய்மை
ஆகி துôய்மையான உலகத்தின் எஜமானராக அவசியம் ஆவோம் என்று
கூறுவார்கள். இது கல்யாணகாரி சங்கமயுகம் ஆகும். இதில் பதீத
உலகம் பாவனம் ஆகின்றது. ஆகையினால்,இதை புருஷோத்தம யுகம் என்று
கூறப்படுகின்றது. இது கல்யாணகாரியானது. மனித சிருஷ்டியினுடைய
நன்மை ஏற்படுகிறது. தந்தை கல்யாணகாரியாக இருக்கிறார். எனவே,
குழந்தைகளையும் கூட ஆக்குவார். வந்து யோகம் கற்பித்து
மனிதனிலிருந்து தேவதை ஆக்குகின்றார்.
இது நம்முடைய தலைமை பள்ளிக் கூடம் (ஹெட் ஸ்கூல்) என்று நீங்கள்
தெரிந்திருக் கிறீர்கள். இங்கு யாருக்கும் எவ்வித சிக்கலான
வேலையும் கிடையாது. வெளியில் சென்ற வுடன் தொழிலில்
ஈடுபட்டுவிடுவதால் நான் மாணவன் என்பது நினைவிருப்பதில்லை. நாம்
நரகவாசியிலிருந்து சொர்க்கவாசி ஆகிக்கொண்டு இருக்கிறோம்.
எப்பொழுது நேரம் கிடைக் கிறதோ அப்பொழுதே இந்தச் சிந்தனை
புத்தியில் வரும். முயற்சி செய்து நேரத்தை ஒதுக்க வேண்டும்.
நாம் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானம் ஆகிக்கொண்டு இருக்
கின்றோம் என்பது புத்தியில் நினைவு இருக்க வேண்டும். ஒரு
தந்தையைத்தான் நினைவு செய்ய வேண்டும். தொழிலிலும் கூட ஓய்வு
நேரம் கிடைக்கிறது. நாம் இறைதந்தையின் மாணவர்கள் என்ற நினைவை
முயற்சி செய்து புத்தியில் கொண்டு வர வேண்டும். வருமானத்
திற்காக இந்தத் தொழில் முதலியவை செய்கின்றனர். அது மாயாவி
தொழில் ஆகும். இதுவும் உங்களுடைய வருமானம் ஆகும். இது
எதிர்காலத்திற்காக, உண்மையான வருமானம் ஆகும். இதில் மிக நல்ல
புத்தி தேவை. தன்னை ஆத்மா எனப் புரிந்து பரமபிதா பரமாத்மாவை
நினைவு செய்ய வேண்டும். இப்பொழுது ஆத்மாக்களாகிய நாம்
வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதை புரிய வைக்க வேண்டும். பாபா
நம்மை அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கின்றார். முழு நாளும்
புத்தியில் ஞானத்தின் ஆழ்ந்த சிந்தனை (விசார் சாகர மந்தன்)
செய்ய வேண்டும். எவ்வாறு பசு உணவை உண்டபின் அசைபோடு கிறதோ,
அவ்வாறு அசைபோட வேண்டும். குழந்தைகளுக்கு அழிவற்ற பொக்கிஷம்
கிடைக்கின்றது. இது ஆத்மாக் களுக்கான உணவு ஆகும். தேவதை
ஆவதற்காக அல்லது இராஜ்ய பதவியை அடைவதற்காக நாம் பரமபிதா
பரமாத்மா மூலமாக படித்துக் கொண்டிருக் கிறோம் என்பது நினைவு வர
வேண்டும். இதை நினைவு செய்ய வேண்டும். அடிக்கடி
மறந்துவிடுகின்றனர். பின்னர் குஷிக்குப் பதிலாக மனோநிலை (அவஸ்தா)
வாடிவிடுகிறது. இது சஞ்சீவினி மூலிகை ஆகும். இதை தன்னிடம்
வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், பிறர் விழிப்படைவதற்காக
பிறருக்கும் கூட கொடுக்க வேண்டும். சாஸ்திரங்களிலோ நீளமான
கதைகளை எழுதிவிட்டனர். பாபா இவை அனைத் தினுடைய இரகசியத்தைக்
கூறுகின்றார். மன்மனாபவ அதாவது தந்தையை நினைவு செய்தீர்கள்
என்றால் நீங்கள் சொர்க்கத்தின் எஜமானர் ஆகிவிடுவீர்கள்.
தன்னுடைய உள்ளத்திடம் கேட்டுக் கொண்டே இருங்கள், சோதனை செய்து
கொண்டே இருங்கள், ஒருவருக்கொருவர் எச்சரிக்கை செய்து கொண்டே
இருங்கள். ஏதாவது (குழுவில் விரோதம், கருத்து வேறுபாடு)
மனஸ்தாபம் ஏற்பட்டால் புத்தி அதில் ஈடுபடும் காரணத்தினால் பிறர்
சொல்வது இனிமையாகத் தோன்றாது. மாயா பக்கம் புத்தி ஈடுபடுவதால்
பிறகு அதே கவலை இருக்கும். குழந்தைகளாகிய உங்களுக்கோ குஷி
இருக்க வேண்டும். தந்தையை நினைவு செய்யுங்கள். ஆனால், தன்னுடைய
குழப்பத்திலேயே இருந்தீர்கள் என்றால் அந்த மருந்து வேலை
செய்யாது. நஷ்டத்தை அடைந்து கொண்டே இருப்பீர்கள். அவ்வாறு
செய்யக் கூடாது. மாணவர் படிப்பதை விட்டுவிட்டுச் செல்வதில்லை.
நம்முடைய இந்தப் படிப்பு எதிர்காலத் திற்கானது, இதில் தான்
நம்முடைய நன்மை உள்ளது என்பதை குழந்தைகளாகிய நீங்கள்
அறிந்திருக்கிறீர்கள். தொழில் முதலியவை செய்துகொண்டு இருக்கும்
போதிலும் கல்வியைக் கற்க வேண்டும். இந்த சிருஷ்டிச் சக்கரம்
எவ்வாறு சுழல்கிறது. இந்த ஞானத்தையும் புத்தியில் வைக்க
வேண்டும். நினைவு என்பது சஞ்சீவினி மூலிகை ஆகும். ஒருவருக்கு
ஒருவர் நினைவை ஏற்படுத்த வேண்டும். கணவன், மனைவி ஒருவருக்கு
ஒருவர் நினைவை ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். சிவபாபா
பிரம்மா மூலமாக இதைக் கற்பித்துக் கொண்டிருக்கிறார்.
சிவபாபாவின் இரதத்தினுடைய அலங்காரம் செய்து கொண்டு இருக்
கின்றீர்கள் என்றால் சிவபாபாவின் நினைவு இருக்க வேண்டும்.
முழுநாளும் நினைவு இருப்பது என்பது கடினம். இந்த நிலை இறுதியில்
தான் ஏற்படும். எதுவரை கர்மாதீத் நிலை ஏற்படுமோ, அதுவரை
பலவானுடன் மாயா யுத்தம் புரிந்து கொண்டே இருக்கும்.
ஒருவருக்கொருவர் எச்சரிக்கை செய்து முன்னேற்றத்தை அடையுங்கள்
என்று பாடப்பட்டுள்ளது. எனக்கு இந்த விசயங்களை ஞாபகப்படுத்த
வேண்டும் என்று அதிகாரிகள் வேலைக்காரரிடம் கூட சொல்வார்கள்.
நீங்களும் கூட ஒருவருக்கு ஒருவர் நினைவு படுத்துங்கள்.
இலட்சியம் மிக உயர்ந்ததாகும். என்னை நினைவு செய்வதால் பாவனம்
ஆகிவிடுவீர்கள் என்று தந்தை கூறுகின்றார். தந்தை புதிய விஷயம்
எதுவும் சொல்வதில்லை. நீங்கள் இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான
முறை இந்த ஞானத்தைக் கேட்டிருக் கிறீர்கள்,பின்னரும் இதைக்
கேட்பீர்கள். நாங்கள் கல்ப கல்பமாக கேட்டிருக்கின்றோம் என்று
சொல்பவர்கள் வேறு எந்த சத்சங்கத்திலும் இருக்க மாட்டார்கள்.
இப்பொழுது கேட்டுக் கொண்டு இருக்கிறோம், பிறகும் கேட்போம்.
கல்ப கல்பமாகக் கேட்டு வந்திருக் கிறோம். இவ்வாறு எவரும் கூற
இயலாது. நீங்கள் அரைக்கல்பம் பக்தி செய்திருக்கிறீர்கள் என்று
தந்தை புரிய வைக்கின்றார். பின்னர் இப்பொழுது உங்களுக்கு ஞானம்
கிடைத்துள்ளது. இதன் மூலம் சத்கதி கிடைக்கிறது. தந்தையை நினைவு
செய்வதால் பாவம் நீங்கிவிடும். இது புரிந்து கொள்வதற்கான விஷயம்
அல்லவா. முயற்சி செய்ய வேண்டும். நீதிபதி அல்லது பெரிய மனிதரின்
மகன் ஏதாவது தவறான செயல் செய்தால், பெயர் அவப்பெயர் ஆகிவிடும்.
இங்கு நீங்களும் கூட தந்தை யினுடையவர் ஆகி இருக்கிறீர்கள். எனவே,
அத்தகைய எந்தக் காரியமும் செய்யக்கூடாது. இல்லையெனில்,
தந்தைக்கு நிந்தனை ஏற்படும்.சத்குருவிற்கு நிந்தனை
ஏற்படுத்தியவர்கள் உயர்ந்த பதவியை அடைய முடியாது. ஈஸ்வரனுடைய
குழந்தை ஆன பின்னர் அசுர கர்மத்தைச் செய்ய பயப்பட வேண்டும்.
ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். தன்னுடைய வழிப்படி நடப்பதால்
ஏமாற்றத்தை அடைவீர்கள், பதவி குறைந்து விடும். தன்னுடைய
வழிப்படி சரியான முறையில் நடந்து கொண்டு இருக்கின்றேனா?, என்று
தன்னைத் தானே கேட்கவும் செய்யலாம். தந்தையை நினைவு செய்யுங்கள்
என்பதே தந்தையின் முதன் முதலான வழிமுறை ஆகும். எந்த விகர்மமும்
செய்யாதீர்கள். பாபா என்ன விகர்மம் செய்கின்றேன் என்று
உங்களுக்கு ஏதாவது தெரிந்திருந்தால் சொல்லுங்கள். இந்த இந்தத்
தவறுகள் உங்களால் ஏற்படுகின்றன என்று தெரிய வந்தால், அது
விகர்மம் என்று கூறப்படுகின்றது. காம விகாரம் அனைத்தையும் விட
பெரிய விகர்மம் ஆகும். அதற்காகவே அதிக சண்டை நடக்கிறது.
குழந்தைகளுக்கு தைரியம் வர வேண்டும். சிந்தனை செய்ய வேண்டும்.
குமாரி களின் குழு உருவாக வேண்டும். நாங்கள் திருமணம் செய்து
கொள்ளப் போவதில்லை. இப்பொழுது கல்பத்தின் சங்கமயுகம் ஆகும்.
இதில் புருஷோத்தமர் (உத்தமமான ஆத்மா) ஆக வேண்டும். இந்த
இலட்சுமி நாராயணரை புருஷோத்தமர்கள் என்று கூறப்படுகின்றது.
விகாரியை புருஷோத்தமர் என்று சொல்வதில்லை. இப்பொழுது நீங்கள்
புருஷோத்தமர்கள் ஆகிக்கொண்டு இருக்கின்றீர்கள். ஆவதற்கான உரிமை
அனைவருக்கும் உள்ளது. புருஷோத்தம மாதத்தில் நீங்கள் எவ்வளவு
சேவை செய்ய முடியும்! மிகவும் ஆடம்பரமாகச் செய்ய வேண்டும்.
இந்த புருஷோத்தம யுகம் தான் உத்தமமான யுகம் ஆகும். இதில்
மனிதர்கள் நரகவாசியிலிருந்து சொர்க்கவாசி ஆகின்றனர். இது
பொதுவான விஷயம் ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் நல்ல முறையில்
புரிய வைக்க வேண்டும். புருஷோத்தமர்கள் சத்யுகத்தில்
இருக்கின்றனர். கலியுகத்தில் எந்த உத்தமமான ஆத்மாவும் இருப்பதே
இல்லை. இதுவே பதீத உலகமாகும். அங்கேயோ துôய்மையே துôய்மையாக
இருக்கும். பிறருக்கு புரிய வைப்பதற்காக,இந்த அனைத்து விஷயங்
களையும், தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார்.
சந்தர்ப்பம் பார்த்து புரிய வைக்க வேண்டும். நீங்கள் இங்கு
அமர்ந்திருக் கிறீர்கள். நமக்கு நிராகார பாபா பரமபிதா பரமாத்மா
இராஜயோகத்தைக் கற்பித்துக் கொண்டி ருக்கின்றார்; நாம் மாணவர்கள்;
இந்தப் படிப்பின் மூலம் சொர்க்கத்தின் தேவி தேவதை ஆகிக் கொண்டு
இருக்கின்றோம் என்பதைப் புரிந்திருக்கிறீர்கள். இராஜ்யத்தை
பிராப்தியாக அடைவதற்கான இந்தத் தேர்வு அனைத்துத்
தேர்வுகளையும்விட பெரிய தேர்வு ஆகும். இதை பரமாத்மாவைத் தவிர
வேறு எவரும் கற்பிக்க இயலாது,. பாபா சுயம் பரோபகாரியாக
இருக்கின்றார். அவர் சொர்க்கத்தின் எஜமானர் ஆவதில்லை.
ஸ்ரீகிருஷ்ணர் தான் சொர்க்கத் தின் இளவரசர் ஆகின்றார். பாபா
சுயநலமற்ற சேவை செய்கின்றார். நான் இராஜா ஆவதில்லை. உங்களை
இராஜாகளுக்கெல்லாம் இராஜா ஆக்கு கின்றேன், என்று கூறு கின்றார்.
இந்த விஷயங்கள் எவருடைய புத்தியிலும் இல்லை. இங்கே
செல்வந்தர்களாக இருப்பவர்கள் அங்கே ஏழை ஆகிவிடுவர் மற்றும்
இப்பொழுது ஏழையாக இருப்பவர்கள். அங்கே மிகுந்த செல்வந்தர்
ஆகிவிடுவர். இத்தகையோôர் அனேகர் உள்ளனர். விஷ்வத்தின் எஜமானர்
ஆகுவது என்பது எல்லைக்கப்பாற்பட்ட விஷயம் அல்லவா. நான் உங்களை
இராஜாக் களுக்கெல்லாம் இராஜா ஆக்குகின்றேன் என்று
பாடப்பட்டிருக்கிறது. சொர்க்கத் தின் எஜமானராகத் தான் ஆக்குவார்.
நாம் சொர்க்கத்தின் எஜமானர் ஆகிக் கொண்டு இருக்கிறோம் என்பதை
நீங்கள் அறிந்திருக் கின்றீர்கள் என்றால் எவ்வளவு கர்வம்
இருக்க வேண்டும். நமக்குக் கற்பிக்கக்கூடியவர் பரமபிதா பரமாத்மா
ஆவார். நாம் இப்பொழுது நரக வாசியிலிருந்து சொர்க்கவாசி தேவதை
ஆகின்றோம் என்பது நினைவில் இருந்தால் கூட குஷியானது, கரை கடந்து
இருக்கும். மாணவ வாழ்க்கையே சிறந்தது. முயற்சி செய்து இராஜா
இராணி ஆக வேண்டும் அல்லவா? நாம் இராஜா ஆகி பின்னர் பரம ஏழை
ஆகிவிடுவோம் என்று சொல்லக் கூடாது. இது சொல்லப்படுவதில்லை.
என்னவாக ஆக விரும்புகின்றீர்கள்? என்று கேட்க வேண்டும். நாங்கள்
விஷ்வத்தின் எஜமானர் ஆவோம் என்று அனைவரும் கூறுவார்கள். அவ்வாறு
பகவான் தந்தைதான் ஆக்க இயலும். என் ஒருவரை மட்டும் நினைவு
செய்யுங்கள், தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானம் ஆகிவிடுவீர்கள்,
எவ்வளவு எளிதான விஷயம் என்று கூறுகின்றார். யார் வேண்டுமானாலும்
ஆக முடியும். எவ்வளவு ஏழ்மை யானவர்களாகவும் இருக்கலாம், இதில்
பணத்திற்கான விஷயம் கிடையாது. ஆகையினாலேயே தந்தையை ஏழைப்
பங்காளர் என்று கூறுகின்றனர்.
தந்தையை நினைவு செய்து பாவங்களின் பானையை காலி செய்ய வேண்டும்.
யார், எந்தளவு உழைப்பார் களோ! அந்தளவே அடைவார்கள். எவ்வளவு மேலே
ஏறு கின்றார்கள் என்பதை ஏணிப்படி மூலம் பார்க்கின்றீர்கள்.
ஏறினால் இராஜ்யத்தின் ஆனந்தத்தை சுவைக்கலாம் விழுந்தால் துôள்
துôளாக நேரிடும். விகாரத்தில் விழுந்து, விவாவகரத்து
செய்துவிட்டால், முற்றிலுமாக கீழே விழுந்துவிட்டார்கள் என்று
பாபா கூறுகின்றார். நல்ல குழந்தைகளோ, முயற்சி செய்து தன்னுடைய
பிறப்பை வைரம் போல் ஆக்குவார்கள். குழந்தைகள், முயற்சியை,
அதிகமாகச் செய்ய வேண்டும். இப்பொழுது யார் செய்வார்களோ.
அனைவருக்கும் கூறுகின்றார், தாய், தந்தையைப் பின்பற்றுங்கள்,
தனக்குச் சமமாக ஆக்குங்கள். எவ்வளவுக் கெவ்வளவு கருணை உள்ளம்
உடையவர் ஆவீர்களோ அவ்வளவு உங்களுக்குத்தான் இலாபம் இருக்கிறது.
நேரத்தை வீணாக்கக் கூடாது. பிறருக்கு யுக்தி சொல்லிக் கொண்டே
இருக்க வேண்டும். இல்லை என்றால் உயர்ந்த பதவியை அடைய இயலாது.
இறுதியில் உங்களுக்கு அதிகக் காட்சி கிடைக்கும். பின்னர் அந்த
நேரத்தில் நீங்கள் எதுவும் செய்ய இயலாது. தேர்வில் தோற்றால்
தோற்றது தான். இறுதியில் பச்சாதாபப்படும்படியான நிலை
ஏற்பட்டுவிடக்கூடாது. பின்னர் முயற்சி செய்ய இயலாது. ஆகையினால்,
தனக்கும் பிறருக்கும் எவ்வளவு நன்மை செய்ய வேண்டுமோ அவ்வளவு
செய்து விடுங்கள். கண் இழந்தவர்களின் ஊன்றுகோல் ஆகுங்கள். கல்ப
கல்பமாக சொர்க்கத்தின் ஸ்தாபனை செய்திருக் கிறோம், அவசியம் செய்
வோம். நாடகத்தில் பதிவாகி உள்ளது. இப்பொழுது யார் செய்வார்களோ
அவர்களே அடைவார் கள். பாபாவினுடைய அன்பிற்குரியவர்கள்
மறைந்திருக்க இயலாது ! ஞானம் யோகம் நிறைந்தவர் வாயிலிருந்து
இரத்தினங்கள் தான் வெளிவர வேண்டும். விசயங்களைப் பெரிய
தாக்குபவர் ஆகக்கூடாது. பிறருக்கு நஷ்டம் விளைவிக்கக் கூடாது.
உங்களிடம் எவராவது தலைகீழான விசயம் சொன்னால்,அவர் புறம்
பேசுபவர் எனப் புரிந்து கொள்ளுங்கள். தன்னுடைய
எல்லைக்கப்பாற்பட்ட ஆஸ்தியை தந்தையிடமிருந்து பெறுவதில்
முழுமையாக ஈடுபட்டுக் கொண்டே இருங்கள்.நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாய்,தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிக
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தனக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும்.
குருடர்களுக்கு கைத்தடி ஆக வேண்டும். ஒரு பொழுதும் யாராவது
தவறான விஷயங்களை கூறுகிறார்கள் என்றால் அவர்களிடம்
எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
2. மனம் சொல் செயலில் தூய்மையானவர் ஆக வேண்டும். நாம் மாணவர்கள்
ஆவோம். பகவான் நமக்கு தேவதை ஆவதற்கான படிப்பைப் படிப்பித்துக்
கொண்டிருக்கிறார் என்ற இதே மகிழ்ச்சியில் இருக்க வேண்டும்.
வரதானம்:
துணை மற்றும் சாட்சி நிலையின் நினைவின் மூலம் அனைத்து
பந்தனங்களிலிருந்தும் விடுபடக்கூடிய சர்வ சக்தி சம்பன்னம் (அனைத்து
சக்திகளும் நிறைந்தவர்) ஆகுக
அனைத்து சக்திகளாலும் நிறைந்தவராகி, அடிமைத்தனத்தில் இருந்து
விடுபடுவதற்காக இரண்டு சொற்கள் எப்போதும் நினைவில் இருக்க
வேண்டும் - ஒன்று சாட்சி, இரண்டாவது துணை. இதன் மூலம் பந்தன்
முக்த் நிலை விரைவில் உருவாகும். சர்வசக்திவான் தந்தையின் துணை
இருக்கும்போது அனைத்து சக்திகளும் தானாகவே பிராப்தியாகிவிடும்.
மேலும், சாட்சியாக இருந்து செயல்படுவதால் எந்தவொரு
பந்தனத்திலும் சிக்க மாட்டீர்கள். நிமித்தமாத்திரமாக இந்த
சரீரத்தில் இருந்து கடமையைச் செய்தீர்கள், பிறகு சாட்சியாக
ஆகிவிட்டீர்கள் - இதன் பயிற்சியை விசேˆமாக அதிகரியுங்கள்.
சுலோகன்:
அசுத்தத்திற்கும் சுத்தத்திற்கும் இடையே யுத்தம் நடக்கிறது
என்றால் நீங்கள் பிராமணருக்குப் பதிலாக சத்திரியராக
இருக்கிறீர்கள்.
அவ்யக்த இஷாரே: இப்பொழுது தனது வள்ளல் சொரூபத்தை
வெளிப்படுத்துங்கள்
துடிக்கும் அல்லது யாசகம் கேட்கும் தாகமுள்ள ஆத்மாக்களின்
தாகத்தைத் தணிப்பதற்கு, தங்களை அதீந்திரிய சுகம் மற்றும் சர்வ
சக்திகளால் நிறைத்துக் கொள்ளுங்கள். எந்தளவிற்கு சர்வ
சக்திகளின் பொக்கிˆம், அதீந்திரிய சுகத்தின் பொக்கிˆம்
சேகரிக்கப்படுகிறதோ, அந்தளவிற்கு உங்களது ஸ்திதி நிலையாக
இருக்கும்; மேலும், மற்ற ஆத்மாக்களையும் சம்பன்னம் ஆக்க
முடியும். நீங்கள் அனைவரின் மடியையும் நிரப்பும் வள்ளலின்
குழந்தைகள் ஆவீர்கள், நீங்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும்.
இந்த வழங்கும் காட்சி மிக விரைவில் வெளிப்படும்.