20-03-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! புண்ணிய ஆத்மா ஆக
வேண்டுமானால் ஒரு தந்தையை நினைவு செய்யுங்கள். நினைவின் மூலம்
தான் கறை நீங்கும். ஆத்மா தூய்மையாகும்.
கேள்வி:
எந்த ஒரு நினைவு இருக்குமானால்
ஒருபோதும் எந்த ஒரு விஷயத்திலும் குழப்பமடைய முடியாது?
பதில்:
டிராமாவின் நினைவு. எது நடக்கிறதோ,
அது நாடகத்தில் ஏற்கனவே உருவாக்கப் பட்டது. இப்போது (புதிதாக)
எதுவும் உருவாக்கப்பட வேண்டியதில்லை. இந்த (அனாதி) ஆரம்பம்-முடி
வில்லாத டிராமா தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கிறது.
இதில் எந்த ஒரு விஷயத்திலும் குழப்பமடையத் தேவையில்லை. அநேகக்
குழந்தைகள், இது எனது கடைசி 84-வது பிறவி தானா, இல்லையா எனத்
தெரியவில்லை என்று குழம்பிப் போகின்றனர். பாபா சொல்கிறார்,
குழப்பமடைய வேண்டாம். மனிதரில் இருந்து தேவதை ஆவதற்கான
புருஷார்த்தம் செய்யுங்கள்.
ஓம் சாந்தி.
குழந்தைகளுக்கு ஓம் சாந்தி என்பதன் அர்த்தமோ தெரியும் - நான்
ஆத்மா, ஆத்மாவாகிய எனது சுயதர்மம் சாந்தி. நான் ஆத்மா சாந்த
சொரூபம், சாந்திதாம நிவாசி. இந்தப் பாடத்தைப் பக்கா ஆக்கிக்
கொண்டே செல்லுங்கள். இதை யார் புரிய வைக்கிறார்? சிவபாபா.
சிவபாபாவைத் தான் நினைவு செய்யவும் வேண்டும். அவருக்குத்
தம்முடைய ரதம் என்பது கிடையாது. அதனால் அவருக்கு நந்தியை (வாகனமாகக்)
கொடுத்து விட்டார்கள். கோவிலிலும் நந்தியை வைத்துள்ளனர். இது
முழு அஞ்ஞானம் எனச் சொல்லப்படுகின்றது. குழந்தைகளுக்கு அதாவது
ஆத்மாக்களுக்கு பாபா புரிய வைக்கிறார். இவர் ஆத்மாக்களின் தந்தை
சிவன். இவருக்குப் பெயர்களோ அநேகம் உள்ளன. ஆனால் அநேகப்
பெயர்களால் குழம்பிப் போகின்றனர். உண்மையில் இவருடைய பெயர்
சிவன். சிவஜெயந்தியும் பாரதத்தில் கொண்டாடப்படுகின்றது. அவர்
நிராகார் பாபா, வந்து பதீதர்களைப் பாவனமாக்குகிறார். சிலர்
பாகீரதம் என்றும் சிலர் நந்திகணம் என்றும் சொல்லிவிட்டுள்ளனர்.
தான் எப்படிப்பட்ட பாக்கியசாலி இரதத்தில் வருகிறார் என்பதை
பாபாவே சொல்கிறார். நான் பிரம்மாவின் உடலில் பிரவேசமாகிறேன்.
பிரம்மா மூலமாக பாரதத்தை சொர்க்கமாக்குகிறேன். பாரதவாசிகளாகிய
நீங்கள் அனைவரும் அறிவீர்கள் இல்லையா, இலட்சுமி-நாராயணரின்
இராஜ்யம் இருந்தது என்று? பாரதவாசிக் குழந்தை கள் நீங்கள்
அனைவரும் தேவி-தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தீர்கள்.
சொர்க்கவாசியாக இருந்தீர் கள். 5000 ஆண்டுகளுக்கு முன் நான்
வந்த போது சதோபிரதான சொர்க்கத்தின் எஜமானர்களாக ஆக்கியிருந்தேன்.
பிறகு புனர்ஜென்மம் அவசியம் எடுக்க வேண்டியிருந்தது. பாபா
எவ்வளவு தெளிவாகச் சொல்கிறார்! இப்போது ஜெயந்தி
கொண்டாடுகிறீர்கள் (இந்த 2026-இல் 90-வது சிவஜெயந்தி என்று
எழுதுவீர்கள்). பாபா வந்து இப்போது 85 ஆண்டுகள் ஆகிவிட்டன.
பிறகு அதனுடன் கூடவே பிரம்மா விஷ்ணு சங்கரின் வருகையும் உள்ளது.
திரிமூர்த்தி பிரம்மாவின் ஜெயந்தி என்று யாரும் வெளிப்
படுத்துவதில்லை. வெளிப்படுத்த வேண்டியது அவசியம் ஏனென்றால் பாபா
சொல்கிறார், நான் பிரம்மா மூலம் ஸ்தாபனை மீண்டும் செய்கிறேன்.
பிராமணர் களை உருவாக்கிக் கொண்டே செல்கிறேன். ஆக, பிரம்மா
மற்றும் பிராமண வம்சிகளின் ஜென்மமும் நடை பெற்றது. பிறகு
நீங்கள் தான் விஷ்ணுபுரியின் எஜமானர்களாக ஆவீர்கள் என
வெளிப்படுத்துகிறேன். பாபாவின் நினைவு மூலம் தான் உங்களுடைய கறை
நீங்கும். பாரதத்தின் புராதன யோகம் புகழ் பெற்றதாக உள்ளது.
ஆனால் அதை யார் கற்றுத் தந்தார். இதை யாரும் அறிந்திருக்கவில்லை.
தாமே சொல்கிறார், ஹே குழந்தைகளே, நீங்கள் தங்களின் தந்தையை
நினைவு செய்யுங்கள். உங்களுக்கு ஆஸ்தி என்னிடமிருந்து
கிடைக்கின்றது. நான் உங்களுடைய தந்தை. நான் கல்ப-கல்பமாக
வருகிறேன். வந்து உங்களை மனிதரி லிருந்து தேவதை ஆக்குகிறேன்.
ஏனென்றால் நீங்கள் தேவி-தேவதாவாக இருந்தீர்கள். பிறகு 84
பிறவிகள் எடுத்து-எடுத்தே வந்து தூய்மையற்றவர்களாக
ஆகியிருக்கிறீர்கள். இராவணனின் வழிப்படி சென்றுக்
கொண்டிருக்கிறீர்கள். ஈஸ்வரிய வழிமுறையினால் நீங்கள்
சொர்க்கத்தின் எஜமானர்கள் ஆகிறீர்கள்.
பாபா சொல்கிறார், நான் கல்பத்திற்கு முன்பும் கூட வந்திருந்தேன்.
எதெல்லாம் கடந்து சென்றுள்ளதோ, அவை கல்ப-கல்பமாக நடந்துக்
கொண்டே இருக்கும். பாபா மறுபடியும் வந்து இவருக்குள்
பிரவேசமாவார். இந்த தாதாவை (பிரம்மாவை) விடுவிப்பார். பிறகு
இவர் அனைவரை யும் பராமரிப்பார். நீங்கள் அறிவீர்கள், நாம் தான்
சத்யுகத்தில் இருந்தோம். பாரதவாசிகளாகிய நாம் தான் 84 பிறவிகள்
எடுக்க வேண்டியிருந்தது. முதல்- முதலில் நீங்கள் சர்வகுண
சம்பன்னம், 16 கலை சம்பூர்ணமாக இருந்தீர்கள். ராஜா-ராணி
எப்படியோ, அப்படியே பிரஜைகளும் வரிசைக் கிரமமாக இருந்தனர்.
அனைவருமே இராஜா ஆகிவிட முடியாது. ஆக, பாபா புரிய வைக்கிறார்,
சத்யுகத்தில் உங்களுக்கு 8 பிறவிகள், திரேதாவில் 12 பிறவிகள்.........
இப்படி தங்களைப் புரிந்துக் கொள்ளுங்கள், நாம் இந்த பாகத்தை
நடித்தோம். முதலில் சூரியவம்சி இராஜதானியில் பாகத்தை நடித்தோம்.
பிறகு சந்திரவம்சியில், பிறகு கீழே இறங்கி வாமமார்க்கத்தில்
வந்தோம். பிறகு நாம் 63 பிறவிகள் எடுத்தோம். பாரதவாசிகள் தான்
முழுமையாக 84 பிறவிகள் எடுத்தனர். வேறு எந்த ஒரு தர்மத்தைச்
சேர்ந்தவர்களும் இத்தனைப் பிறவிகள் எடுப்பதில்லை. குருநானக்
வந்து 500 ஆண்டுகள் ஆகின்றன. அவருக்கு ஏறத்தாழ 12-14 பிறவிகள்
இருக்கும். இப்படி கணக்கிடப்படுகிறது. கிறிஸ்தவர்கள் 2000
ஆண்டுகளில் 60 முறை புனர்ஜென்மம் எடுத்திருப்பார்கள். வளர்ச்சி
ஆகிக் கொண்டே போகிறது. புனர்ஜென்மம் எடுத்துக் கொண்டே
போகின்றனர். புத்தியில் இதைச் சிந்தனை செய்வீர்களானால் நாம்
தான் 84 பிறவிகளை எடுத்துள்ளோம், மீண்டும் சதோபிரதானம் ஆக
வேண்டும். என்னென்ன நடந்து முடிந்துள்ளதோ, அது டிராமா. எந்த
டிராமா உருவாக்கப் பட்டுள்ளதோ, அது பிறகு மீண்டும் நடைபெறும்.
முடிவில்லா சரித்திரத்தில் உங்களை அழைத்துச் செல்கிறார் (நினைவூட்டுகிறார்).
நீங்கள் புனர்ஜென்மம் எடுத்தே வந்திருக்கிறீர்கள். இப்போது
நீங்கள் 84 பிறவிகளை முடித்துவிட்டீர்கள். இப்போது மீண்டும்
பாபா நினைவுப்படுத்தியுள்ளார், உங்களுடைய வீடு சாந்திதாமம்.
ஆத்மாவின் வடிவம் என்ன? பிந்தி (புள்ளி). அங்கே புள்ளிகளின்
மரம் போல உள்ளது. ஆத்மாக் களுடையதும் வரிசைக்கிரமமாக மரம்
உள்ளது, வரிசைப்படி கீழே வருகிறது, பரமாத்மாவும் புள்ளி
வடிவமானவர். இவ்வளவு பெரிய லிங்கம் என்பதெல்லாம் கிடையாது. பாபா
சொல் கிறார், நீங்கள் என்னுடைய குழந்தைகள் ஆகிறீர்கள் எனவே நான்
உங்களை சொர்க்கத்தின் எஜமானர்களாக ஆக்குகிறேன். முதலில் நீங்கள்
என்னுடையவர்களாக ஆனீர்கள். பிறகு நான் உங்களுக்குப் படிப்பு
சொல்லித் தருகிறேன். நீங்கள் சொல்கிறீர்கள், பாபா, நாங்கள்
உங்களுடையவர்கள். அத்துடன் கூடவே படிக்கவும் வேண்டும்.
என்னுடையவர்களாக ஆனீர்கள், உங்களுடைய படிப்பு ஆரம்ப மாகிவிட்டது.
பாபா சொல்கிறார், இது உங்களுடைய கடைசி ஜென்மம். தாமரை
மலருக்குச் சமமாகப் பவித்திர மாகுங்கள். குழந்தைகள் உறுதிமொழி
எடுத்துக் கொள்கின்றனர் - பாபா, நாங்கள் உங்களிடம் ஆஸ்தி
பெறுவதற்கு உள்ளோம். ஒருபோதும் தூய்மை இழக்கமாட்டோம் என்று. 63
பிறவிகளில் தூய்மையற்றவர்களாகிவிட்டோம். இது 84 பிறவிகளின் கதை.
பாபா வந்து எளிமையாக விளக்கிச் சொல்கிறார். எப்படி லௌகிகத்
தந்தை சொல்கிறார் இல்லையா? அதுபோல. ஆக, இவர் எல்லையற்ற தந்தை.
அவர் வந்து ஆத்மாக்களோடு குழந்தைகளே, குழந்தைகளே என அழைத்து
உரையாடுகிறார். சிவராத்திரியும் கொண்டாடு கின்றனர் இல்லையா? இது
அரைக் கல்பத்தின் பகல் மற்றும் அரைக்கல்பத்தின் இரவு. இப்போது
இரவு முடியும் நேரம். மற்றும் பகலின் ஆரம்பத் திற்கான சமயம்.
பாரதம் சத்யுகத்திலிருந்த போது பகலாக இருந்தது.
சத்யுக-திரேதாயுகம் பிரம்மா வின் பகல் எனச் சொல்லப்படுகின்றது.
நீங்கள் பிராமணர்கள் இல்லையா? பிராமணர்கள் நீங்கள் அறிவீர்கள்,
இப்போது நமக்கு இராத்திரி. தமோபிரதான பக்தியின் நேரம். ஒவ்வொரு
வீட்டிலும் அடி வாங்கிக் கொண்டே உள்ளனர். அனைவருக்கும் பூஜை
செய்துக் கொண்டே இருக்கின்றனர். முச்சந்திக்கும் கூடப் பூஜை
செய்கின்றனர். மனிதர்களின் சரீரத்திற்கும் கூடப் பூஜை செய்
கின்றனர். சந்நியாசிகள் தங்களை சிவோஹம் (நானே சிவன்) எனச்
சொல்லி அமர்ந்து விடு கின்றனர். பிறகு மாதாக்கள் போய்
அவர்களுக்குப் பூஜை செய்கின்றனர். (பிரம்மா) பாபா இதில் அதிக
அனுபவம் உள்ளவர். பாபா சொல்கிறார், நானும் கூட நிறைய பூஜைகள்
செய்திருக்கிறேன். ஆனால் அந்தச் சமயத்தில் ஞானமோ கிடையாது.
மனிதர்கள் மீது பழங்களை அர்ச்சனை செய்தனர், குவளையில் நீரை
எடுத்து அர்ச்சனை செய்தனர். இதுவும் ஏமாற்றுதல் ஆகிறது இல்லையா?
ஆனால் இவை அனைத்தும் மீண்டும் நடை பெறும். பக்தர்களைக் காப்பவர்
பகவான். ஏனென்றால் அனைவரும் துக்கத்தில் உள்ளனர் இல்லையா? பாபா
புரிய வைக்கிறார், துவாபரயுகத்தில் இருந்து தங்களுக்காக குருவை
ஏற்பாடு செய்துக் கொண்டே வந்திருக்கிறீர்கள். மேலும் பக்தி
மார்க்கத்தில் கீழே இறங்கியே வந்திருக்கிறீர்கள். இது வரையிலும்
கூட சாதுக்கள் சாதனை செய்கின்றனர். பாபா சொல்கிறார்,
அவர்களையும் கூட நான் உயர்த்துகிறேன். சங்கமயுகத்தில்
உங்களுக்கு சத்கதி கிடைத்துவிடுகின்றது. பிறகு நீங்கள் 84
பிறவிகளை எடுக் கிறீர்கள். பாபா, ஞானக்கடல் என்றும் மனித
சிருஷ்டியின் விதை வடிவமானவர் என்றும் சொல்லப்படுகின்றார். சத்,
சித், ஆனந்த சொரூப மானவர். அவர் ஒருபோதும் அழிவதில்லை (மரணமற்றவர்).
அவரிடம் ஞானம் உள்ளது. ஞானக்கடலாக, அன்பின் கடலாக இருக்கிறார்.
நிச்சயமாக அவரிடமிருந்து ஆஸ்தி கிடைக்க வேண்டும். இப்போது
குழந்தைகள் உங்களுக்கு ஆஸ்தி கிடைத்துக் கொண்டிருக்கிறது.
சிவபாபா அல்லவா? அவரும் பாபா, இவரும் உங்கள் தந்தை. பிறகு
சிவபாபா பிரம்மா மூலம் உங்களுக்குக் கல்வி கற்றுத் தந்துக்
கொண்டிருக்கிறார். அதனால் பிரஜாபிதா பிரம்மாகுமார்-குமாரிகள்
எனச் சொல்லப்படுகிறது. எவ்வளவு ஏராளமான பி.கே.க் கள்! அவர்கள்
சொல்கிறார்கள், எங்களுக்குத் தாத்தாவிடமிருந்து ஆஸ்தி
கிடைக்கின்றது. பாபா நம்மை நரகவாசியிலிருந்து சொர்க்கவாசியாக
ஆக்குகிறார். பாபா சொல்கிறார் - குழந்தை களே, என்னை மட்டுமே
நினைவு செய்யுங்கள். அப்போது உங்கள் தலை மீதுள்ள பாவச் சுமைகள்
பஸ்மமாகிவிடும். பிறகு நீங்கள் சதோபிரதான் ஆகிவிடுவீர்கள்.
நீங்கள் உண்மை யான தங்கமாக, உண்மையான ஆபரணமாக இருந்தீர்கள்.
ஆத்மா, சரீரம் இரண்டுமே சதோபிரதானமாக இருந்தன. ஆத்மா பிறகு சதோ,
ரஜோ, தமோ ஆகின்றது. அப்போது சரீரமும் கூட அதுபோல் தமோகுணி யாகக்
கிடைக்கின்றது. பாபா உங்களுக்கு அறிவுரை தருகிறார். குழந்தைகளே,
என்னை நினைவு செய்யுங்கள். என்னை அழைக்கிறீர்கள் இல்லையா, ஹே
பதித-பாவனா வாருங்கள் என்று? பாரதத்தின் புராதன யோகம் புகழ்
பெற்றதாகும். அதை இப்போது உங்களுக்குக் கற்றுத் தந்துக் கொண்டு
இருக்கிறேன் - என்னோடு யோகம் (நினைவின் தொடர்பு)
வைப்பீர்களானால் உங்கள் கறை எரிந்து சாம்பலாகும். எவ்வளவு
நினைவு செய்கிறீர்களோ, அவ்வளவு கறை நீங்கிக் கொண்டே போகும்.
நினைவினுடையது தான் முக்கிய விஷயமாகும். ஞானத்தையோ பாபா
கொடுத்துள்ளார் - சத்யுகத்தில் ராஜா-ராணி எப்படியோ, அப்படியே
அனைவரும் பவித்திர மாக இருந்தனர். இப்போது அனைவரும் பதீதமாக
உள்ளனர். பாபா சொல்கிறார், இவருடைய அநேக ஜென்மங்களின் கடைசி
ஜென்மத்தில் நான் பிரவேசமாகிறேன். இவர் பாக்கியசாலி ரதம் எனச்
சொல்லப்படுகிறார். இவர் படித்துப் பிறகு முதல் நம்பரில்
செல்கிறார். வரிசைக் கிரமமாகவோ ஆகின்றனர் இல்லையா? முக்கியமாக
ஒரு பெயர் உள்ளது. பாபா குழந்தை களுக்கு 84 பிறவிகளின்
இரகசியத்தை நல்லபடியாகப் புரிய வைத்துள்ளார். நீங்கள் ஆதி
சனாதன தேவி-தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள். இந்து தர்மத்தினர்
அல்ல. நீங்கள் உயர்ந்த கர்மம் மற்றும் உயர்ந்த தர்மத்தைக்
கொண்டவர்களாக இருந்தீர்கள். பிறகு இராவணனின் பிரவேசம்
நடைபெறுவதால் தர்மம் கர்மம் இரண்டிலும் தாழ்ந்தவர்களாக
ஆகிவிட்டிருக்கிறீர்கள். தங்களை தேவி-தேவதா எனச் சொல்லிக்
கொள்வதில் வெட்கம் வருகிறது. அதனால் இந்து என்ற பெயர்
வைக்கப்பட்டுள்ளது. உண்மையில் ஆதி சநாதன தேவி-தேவதா தர்மத்தைச்
சேர்ந்தவர்களாக இருந்தீர்கள். நீங்கள் 84 பிறவிகளை
எடுத்திருக்கிறீர்கள். பிறகு தூய்மை இழந்து விட்டிருக்கிறீர்கள்.
84 பிறவிகளின் சக்கரம் பாரதவாசிகளுக்கானது. அனைவருமே திரும்பிச்
சென்றாக வேண்டும். முதலில் நீங்கள் செல்வீர்கள். எப்படி திருமண
ஊர்வலம் செல்கிறது அல்லவா அதுபோல. சிவபாபாவை மணமகன் என்றும்
சொல்கின்றனர். மணமகள்களாகிய நீங்கள் இச்சமயம் அசுத்தமாக,
தமோபிரதானமாக ஆகியிருக்கிறீர்கள். அப்படிப்பட்டவர்களை மணம்
நிறைந்த அழகிய மலர்களாக ஆக்கி உடன் அழைத்துச் செல்வார்.
ஆத்மாக்களைப் தூய்மையாக்கி அழைத்துச் செல்வார். இவர் லிபரேட்டர்,
கைடு என்று சொல்லப்படுகிறார். எல்லையற்ற தந்தை அழைத்துச்
செல்கிறார். அவருடைய பெயர் என்ன? சிவபாபா. பெயர் சரீரத்திற்கு
வைக்கப் படுகின்றது. ஆனால் பரமாத்மாவுக்கு சிவன் என்பது தான்
பெயர். பிரம்மா, விஷ்ணு, சங்கர் ஆகியோருக்கு சூட்சும சரீரம்
உள்ளது. சிவபாபாவுக்கோ எந்த ஒரு சரீரமும் கிடையாது. அவரை
சிவபாபா என்று தான் சொல் கின்றனர். குழந்தைகள் சொல்கின்றனர் -
ஹே தாய்-தந்தையாக இருப்பவரே, நாங்கள் உங்கள் குழந்தைகளாக
ஆகியிருக் கிறோம். மற்றவர்களோ (அஞ்ஞானிகள்) அழைத்துக் கொண்டே
இருக்கின்றனர். ஏனென்றால் அவர் களுக்குத் தெரியாது.
அனைவருக்குமே தெரிந்துவிடுமானால் என்னவாகும் என்று தெரியாது.
தெய்விக மரத்தின் கன்று இப்போது நடப்படுகின்றது.
வைரத்திலிருந்து சோழி ஆவதற்கு 84 பிறவிகள் ஆகின்றது. பிறகு
புதிதாக ஆரம்பமாகும். உலகத்தின் சரித்திர-பூகோளம் அப்படியே
திரும்பவும் நடைபெறும். பாபா புரிய வைக்கிறார், நீங்கள் 84
பிறவிகள் எடுத்திருக் கிறீர்கள். 84 லட்சம் என்பதோ இருக்க
முடியாது. இது பெரிய தவறாகும். 84 லட்சம் பிறவிகள் எனப்
புரிந்து கொண்டதால் கல்பத்தின் ஆயுள் இலட்சக்கணக்கான ஆண்டுகள்
எனச் சொல்லிவிட்டனர். அது முற்றிலும் பொய்யாகும். பாரதம்
இப்போது பொய்யான கண்டமாக உள்ளது. உண்மையான கண்டத்தில் நீங்கள்
சதா சுகமாக இருந்தீர்கள். இச்சமயம் நீங்கள் 21 பிறவிகளுக்கான
ஆஸ்தி பெறுகிறீர்கள். அனைத்தும் உங்கள் முயற்சியில் தான் உள்ளது.
இராஜதானியில் என்ன பதவி விரும்புகிறீர்களோ, அதைப் பெற்றுக்
கொள்ளுங்கள். இதில் மாயமந்திரம் முதலியவற்றின் விஷயம் எதுவும்
கிடையாது. ஆம், மனிதரில் இருந்து தேவதையாக அவசியம் ஆகிறீர்கள்.
இதுவோ நல்ல மாயாஜாலம் இல்லையா? நீங்கள் ஒரு விநாடியில்
அறிந்துக் கொள்கிறீர்கள், நாம் பாபாவின் குழந்தைகளாக
ஆகியிருக்கிறோம். கல்ப-கல்பமாக பாபா நம்மை சொர்க்கத்தின்
எஜமானர் ஆக்குகிறார். அரைக்கல்பமாக அலைந்து வந்திருக்கிறீர்கள்.
சொர்க்கவாசியாகவோ யாருமே ஆகவில்லை. பாபா வந்து குழந்தைகளாகிய
உங்களைத் தகுதியுள்ளவர்களாக ஆக்கு கிறார். நிச்சயமாக இங்கே
மகாபாரத யுத்தம் நடைபெற்றிருந்தது. மேலும் இராஜயோகம் கற்பிக்கப்
பட்டது. சிவபாபா சொல்கிறார், நான் தான் வந்து உங்களுக்குக்
கற்பிக்கிறேன். கிறிஸ்து அல்ல. இப்போது உங்களுடைய அநேக
ஜென்மங்களின் கடைசி ஜென்மம். குழப்பமடையாதீர்கள். நீங்கள்
பாரதவாசிகள். உங்கள் தர்மம் மிகுந்த சுகம் தரக்கூடியது. மற்ற
தர்மங்களைச் சேர்ந்தவர்களோ, வைகுண்டத்திற்கு வர முடியாது. இந்த
டிராமாவும் துவக்கம் மற்றும் முடிவின்றி நடை பெற்றுக் கொண்டே
இருக்கிறது. எப்போது உருவாயிற்று என்று சொல்ல இயலாது. இதற்கு
முடிவே கிடையாது. உலகத்தின் சரித்திர-பூகோளம் மீண்டும் மீண்டும்
நடக்கின்றது. இது சங்கமயுகம்-சிறிய யுகம். குடுமி (உயர்ந்த நிலை)
பிராமணர்களுக்குரியது. பாபா, பிராமணர் களாகிய உங்களை தேவதை
ஆக்கிக் கொண்டிருக்கிறார். ஆகவே பிரம்மாவின் குழந்தை களாக
அவசியம் ஆக வேண்டும். தாத்தாவிடமிருந்து உங்களுக்கு ஆஸ்தி
கிடைக்கிறது. எதுவரை தங்களை பி.கே. எனப் புரிந்து கொள்ளவில்லையோ,
அதுவரை ஆஸ்தி எப்படிக் கிடைக்கும்? பிறகும் கூட யாராவது
கொஞ்சமாவது ஞானத்தைக் கேட்பார்களானால் சாதாரணப் பிரஜையில்
வந்துவிடுவார்கள். வருவதோ நிச்சயம். சிவபாபா பிரம்மா மூலம்
பிராமண, தேவதா, சத்திரிய தர்மத்தின் ஸ்தாபனை செய்கிறார். கீதை
தவிர வேறு எந்த ஒரு சாஸ்திரமும் கிடையாது. கீதை சர்வோத்தம
தெய்வீக தர்மத்தின் சாஸ்திரம். அதிலிருந்து மூன்று தர்மங்கள்
ஸ்தாபனை ஆகின்றன. பிராமணராகவும் இங்கே ஆக வேண்டும்.
தேவதையாகவும் இங்கே தான் ஆவீர்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) ஒவ்வொருவரின் நடிப்பின் பங்கு நிச்சயிக்கப்பட்டது என
அறிந்துக் கொண்டு சதா கவலையற்று இருக்க வேண்டும். நடப்பவை
அனைத்தும் டிராமாவில் ஏற்கனவே உருவாக்கப்பட்டது.........
டிராமாவின் மீது அசையாத நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.
2) இந்தச் சிறிய சங்கமயுகத்தில் பாபாவிடமிருந்து முழு ஆஸ்தியைப்
பெற்றுக் கொள்ள வேண்டும். நினைவு பலத்தின் மூலம் கறையை நீக்கி
தன்னை சோழியில் இருந்து வைரம் போல் ஆக்கிக் கொள்ள வேண்டும்.
இனிய மரத்தின் நாற்றாக செல்வதற்காக தகுதியுள்ளவர் ஆக வேண்டும்.
வரதானம்:
ஒரு தந்தையின் நினைவில் சதா மூழ்கியிருந்து ஏக்ரஸ் ஸ்திதி
உருவாக்கக் கூடிய சாட்சி பார்வையாளர் ஆகுக.
இப்பொழுது அப்படிப்பட்ட சோதனைகள் வரயிருக்கிறது - சங்கல்பம்,
கனவிலும் வந்திருக்காது. ஆனால் உங்களது பயிற்சி அப்படியிருக்க
வேண்டும் - எவ்வாறு எல்லைக்குட் பட்ட நாடகம் சாட்சியாக
பார்க்கிறீர்களோ - அது கடுமையாக காட்சியாக இருக்கலாம் அல்லது
மகிழ்ச்சியானதாக இருக்கலாம், வித்தியாசம் இருக்காது. அதே போன்று
ஒருவரது பாகம் நகைச்சுவையானதாக இருக்கலாம், அல்லது அன்பான
ஆத்மாவின் கம்பீர பாகமாக இருக்கலாம். ஒவ்வொருவரின் பாகத்தை
சாட்சியாக இருந்து பாருங்கள், ஏக்ரஸ் ஆக இருக்க வேண்டும். ஆனால்
சதா ஒரு தந்தையின் நினைவில் மூழ்கியிருக்கும் போது தான்
அப்படிப்பட்ட நிலை ஏற்படும்.
சுலோகன்:
திடமான நிச்சயத்தின் மூலம் தனது பாக்கியத்தை உறுதிப்படுத்திக்
கொண்டால் சதா கவலையற்று இருப்பீர்கள்.
அவ்யக்த இஷாரே: நிச்சயம் என்ற அஸ்திவாரத்தை உறுதியானதாக ஆக்கி
சதா பயமற்றவர் மற்றும் கவலையற்று இருங்கள்
காரியம் செய்வதற்கு முன் இந்த நம்பிக்கை வையுங்கள் - எனக்கு
வெற்றி கிடைத்தே விட்டது. அநேக கல்பத்தில் வெற்றியாளர்
ஆகியிருக்கிறேன். அநேக கல்பம், அநேக முறை வெற்றியாளன் ஆகி
வெற்றி மாலையில், பூஜைக்குரியவனாக ஆகியிருக்கிறேன் எனில்
இப்பொழுது அதையே திரும்பவும் செய்ய வேண்டும். ஏற்கெனவே செய்த
காரியத்தை திரும்பவும் செய்ய வேண்டும். அதனால் தான் ஏற்கெனவே
உருவாக்கப்பட்டது என்று கூறப்பட்டிருக்கிறது. உருவாக்கப்பட்டு
விட்டது, ஆனால் இப்பொழுது திரும்பவும் ஏற்கெனவே
உருவாக்கப்பட்டது என்பதை பூர்த்தி செய்ய வேண்டும்.