20.09.26 காலை முரளி
ஓம் சாந்தி 30.11.2011 பாப்தாதா,
மதுபன்
அமிர்தவேளையில் விசேஷமாக அனைத்து சக்திகளையும் அனுபவி சொரூபமாகி
யோகத்தின் சக்தியை வாயு மண்டலத்தில் பரவச் செய்யுங்கள். மனதை
சுறுசுறுப்பாக வைத்திருங்கள். நேரத்தினுடைய கூக்குரலை உணருங்கள்.
தீவிர புருஷார்த்தி ஆகுங்கள்!
இன்று பாப்தாதா நாலாபுறமும் உள்ள குழந்தைகளின் நெற்றியில்
பிரகாசித்துக் கொண்டி ருக்கும் பாக்ய நட்சத்திரத்தைப்
பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒன்று இந்த ஒரு பிறவிக்கானது
இரண்டாவது சம்மந்தத்திற்கானது மூன்றாவது பிராப்திகளுக்கானது.
மூன்று பாக்யங்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார்.
பிறவியினுடைய பாக்யமோ உங்களுக்குத் தெரியும். அதாவது உங்கள்
அனைவருக்கும் இந்த திவ்ய பிராமணப் பிறவியை அளிக்கக் கூடியவர்,
சுயம் பாக்யவிதாதா ஆவார். ஆகவே நினைத்துப் பாருங்கள். எவ்வளவு
பெரிய பாக்யம் என்று கூடவே சம்மந்தம் இதனுடைய விசேஷத்தை
புரிந்துள்ளீர்கள், அதாவது தந்தை, ஆசிரியர், சத்குரு இந்த
மூன்று சம்மந்தங்களும் தந்தையிடமிருந்து கிடைக்கிறது. ஒருவரிடமே
மூன்று சம்மந்தங்கள், பிராப்திகளையும் அறிந்துள்ளீர்கள், எங்கு
தந்தை இருக்கிறாரோ, அங்கு அனைத்துப் பிராப்திகளும்
எல்லையற்றதாக இருக்கிறது. ஒருவரிடத்தில் மூன்று சம்மந்தங்கள்
அதே போன்று வாழ்க்கையில் மூன்று சம்மந்தங்கள் அவசியமாகிறது
ஆனால் உலகத் தாருக்கோ ஒவ்வொரு சம்மந்தமும் தனித்தனியாக
இருக்கிறது ஆனால் உங்களுக்கு மூன்று சம்மந்தங்களும் ஒருவரிடம்
உள்ளது. ஒருவரிடத்தில் மூன்று சம்மந்தங்களும் ஏற்பட்ட
காரணத்தினால் நினைவும் அனுபவமும் கூட சகஜமாக இருக்கிறது.
அனைவரும் மூன்று சம்மந்தங்களிலும் அனுபவிகள் தானே. தந்தை மூலம்
என்ன கிடைக்கிறது ஆஸ்தி, ஆஸ்தி கூட எவ்வளவு உயர்ந்ததாக
இருக்கிறது, எவ்வளவு காலம் கிடைக் கிறது, ஏனென்றால் பரமாத்ம
தந்தை என்கின்ற பிராப்தி ஏற்படுகிறது. இரண்டாவது சம்மந்தம்
ஆசிரியருக்கானது. இந்த கல்வி ஆன்மீக வருமானத்திற்கான வழியாகும்.
அதனால் உங்கள் அனைவருக்கும் தந்தை மூலமாக எவ்வளவு உயர்ந்த
பிராப்தி கிடைக்கிறது என தெரிந்துள்ளீர்கள் தானே. இந்த உயர்ந்த
பிராப்தி பரமாத்மா தந்தையிடம் கிடைககிறது மற்றும் வேறு
எவரிடமிருந்துமில்லை. கல்வி மூலமாக பதவியின் பிராப்தி
ஏற்படுகிறது. உங்கள் அனைவருக்கும் அனைத்தையும் விட உயர்ந்த
பிராப்தி என்பது இராஜ்ய பதவிற்கானது என கூறப் படுகிறது. அதனால்
உங்களுக்கு ஆசிரியர் மூலமாக இராஜ்ஜிய பதவியின் பிராப்தி உள்ளது.
இப்பொழுதும் கூட சுய ராஜ்ஜியத்தின் ராஜா நீங்கள், ஏன்? ஆத்மா
இராஜயோகியாக ஆனதின் காரணமாக சுயராஜ்ஜிய அதிகாரி ஆகிறது.
சுயத்தின் மீது இராஜ்ஜியம் செய்கிறது. கர்ம இந்திரியங்களுக்கு
வசமாகாமல், ஆத்மா தலைவனாகி இராஜாவா ஆகிறது. அதனால் இப்பொழுது
இராஜ்ஜிய அதிகாரி எதிர்காலத்தில் இராஜ்ஜிய பாக்யம் பிராப்தி
ஆகிறது. ஆகவே இப்பொழுதும் எதிர் காலத்திலும் இரட்டை
இராஜ்யத்தின் பதவி பிராப்தி ஆகிறது. மேலும் மூன்றவது சம்மந்தம்
சத்குருவிற்கானது. மீன்று சம்மந்தங்களின் பிராப்தி இருக்கிறது
தானே? தந்தை ஆசிரியர், மூன்றாவது சத்குருவிற்கானது சத்குருவின்
மூலமாக குருவினுடைய ஸ்ரீமத் கிடைக்கிறது. எவ்வளவு சிரேஷ்டமான
வழி கிடைத்துள்ளது? ஆகவே தங்களை சோதனை செய்யுங்கள். சதா
ஸ்ரீமத்படி நடந்துக் கொண்டிருக்கின்றோமா? அல்லது எப்பொழுதாவது
மனவழி, மற்றவர் வழியில் புத்தி செல்வதில்லைதானே? சோதனை
செய்தீர்களா? யார் சதா சத்குரு மூலமாக கிடைத்த ஸ்ரீமத் வழியில்
சென்று கொண்டிருப்பவர்கள், மனவழி அல்லது பிறருடைய வழியில்
ஒருபோதும் கனவிலும் கூட செல்வதில்லையோ அவர்கள் கையை
உயர்த்துங்கள். சதா ஸ்ரீமத்படி செல்பவர்கள் கையை உயர்த்துங்கள்.
பாருங்கள் மாதாக்கள் கையை உயர்த்தி யுள்ளார்கள். சிறிது
சிறிதாக உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். அவ்வப்பொழுது மனவழி,
பிறர்வழி செல்லும் பொழுது அது ஏமாற்றம் அளிக்கிறது. மேலும்
விசேஷமான ஸ்ரீமத் என்ன? தங்களை ஆத்மா என புரிந்து தந்தையாகிய
என்னை நினைவு செய்யுங்கள். இது சகஜமா? அல்லது கஷ்டமா?
அவ்வப்பொழுது கஷ்டமாகிவிடுகிறது. ஆனால் பாபா இதை விரும்புகிறார்
எப்பொழுதுமே இந்த மூன்று சம்மந்தங்களில் ஒவ்வொரு குழந்தையும்
முன்னேறிச் செல்ல வேண்டுமென்று விரும்புகிறார். ஆகவே பாப்தாதா
கேட்கிறார். அதாவது யார் கையை உயர்த்த வில்லையோ அவர்கள்
இப்பொழுதி-ருந்து மன வழியையும், பிறர் வழியையும் தியாகம் செய்ய
முடியுமா? செய்ய முடியும் என்பவர்கள் கையை உயர்த்துங்கள்.
நல்லது ஏனென்றால் பாப்தாதா நேரத்தினுடைய சமிக்ஞையை கொடுத்துக்
கொண்டிருக்கிறார். இப்பொழுது சங்கமயுகத்தின் நேரம் மிகவும் விலை
மதிப்புள்ளதாகும். மேலும் பாப்தாதா சமிக்ஷை கொடுத்திருக்கிறார்.
நிகழ்கால நேரப்படி எல்லாமே திடீரென நடக்கும். ஆகவே எப்பொழுதும்
எவரெடியாக இருக்க வேண்டும். அனைவரும் கூடவே வருவீர்கள் தானே,
பின்னால் வரமாட்டீர்கள் தானே? பாப்தாதாவின் கூடவே தங்களது
வீட்டிற்குச் செல்ல வேண்டும். தயாராக இருக்கிறீர்கள் தானே?
எவரெடி ஆகவே பாப்தாதா சமயத்தினுடைய சமிக்ஞையை கொடுத்துக் கொண்டே
இருக்கிறார். இந்த ஒரு ஜென்மத்தில் 21 பிறவிகளுக்கான பலனை
உருவாக்க வேண்டும். ஆகவே எவ்வளவு கவனம் கொடுக்க வேண்டும் என்று
சிந்தியுங்கள். பாபாவிற்கு ஒவ்வொரு குழந்தையும் தந்தையின் கூடவே
சென்று மேலும் இராஜ்ஜிய அதிகாரியாக ஆகவேண்டுமென்று விரும்பு
கிறார். ஆகவே நீங்கள் தந்தைக்குச் சமமாக சம்பூர்ணம் மற்றும்
சம்பன்னமாக ஆகும்பொழுது கூடவே செல்வீர்கள் தானே. இந்த நேரம்
இந்த சிறிய பிறவியில் 21 பிறவிகளுக்கான பிராப்தி
நிச்சயிக்கப்பட்டிருக்
கிறது. அதனால் சங்கமயுகத்தின் இந்த சிறு
பிறவியினுடைய ஒவ்வொரு நிமிடமும் எவ்வளவு மகான் தன்மையுடையது என
நினைத்துப் பாருங்கள். கணக்கிடுங்கள், இந்த ஒரு பிறவியில் 21
ஜென்மத்திற்கான இராஜ்ஜிய பாக்யம் எடுக்க முடியும் என்றால்
சங்கமயுகத்தின் ஒவ்வொரு நிமிடமும் கூட எவ்வளவு விலை
மதிப்புள்ளது ஆகவே இந்த மதிப்பைப் புரிந்து கொண்டு என்ன செய்ய
வேண்டியுள்ளது?
பாப்தாதா ஏற்கனவே கூறியுள்ளார். இரண்டு விசயங்களில் விசேஷ கவனம்
கொடுங்கள். இரண்டு விசயங்கள் என்ன? நினைவிருக்கிறதா? ஒன்று
நேரம் மற்றொன்று சங்கல்பம். சங்கல்பம் வீணாகக் கூடாது. நேரமும்
வீணாகி விடக்கூடாது. ஒவ்வொரு நொடியில் வெற்றி ஏற்படட்டும் ஆகவே
இவ்வளவு கவனம் தர வேண்டு மல்லவா. பாப்தாதாவிற்கு அனைத்து
குழந்தைகளிடமும் அன்பு இருக்கிறது. ஒரு குழந்தை கூட தனித்து
நின்று விடக் கூடாது என்பதை பாப்தாதா விரும்புகிறார். கூடவே
இருப்போம், கூடவே செல்வோம், கூடவே இராஜ்ஜிய அதிகாரியாகி சதா
வாழ்க்கையில் சுகம் சாந்தியின் அனுபவம் செய்வீர்கள். அதனால்
கூடவே செல்வோம் என்று கூற முடியுமா? விடுபட்டு விடமாட்டீர்களே?
பாருங்கள் மூன்று பாக்யமும் ஒவ்வொரு குழந்தையின் நெற்றியிலும்
பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. உங்களது நெற்றியில் இந்த மூன்று
பாக்யமும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. சங்கமயுகம் தான்
பாக்யவான் யுகமாகும். யார் எந்தளவ பாக்யத்தை உருவாக்க
விரும்புகிறீர்களோ, அந்த அளவு உருவாக்க முடியும். ஆனால் நீண்ட
காலத்திற்கான கவனம் தேவை. ஆகவே அனைத்துக் குழந்தைகளும் தங்களது
புருஷார்த்தத்தில் தீவிரம் கொண்டு வாருங்கள். புருஷார்த்திகளாக
இருக்கிறீர்கள். பாப்தாதாவும் பார்க்கிறார். ஆனால் அனைவருடைய
தீவிர புருஷார்த்தம் இப்பொழுது ஏற்பட வேண்டும். பாப்தாதா
ஒவ்வொரு குழந்தையையும் குழந்தையி-ருந்து எஜமானராவதைப் பார்க்க
விரும்புகிறார். எதற்கு எஜமானர்? அனைத்து பொக்கிஷங்களுக்கும்
அதிகாரி. அவ்வப்பொழுது சில குழந்தைகள் பாப்தாதாவிடம்
கூறுகிறார்கள். பாபா நீங்களோ சர்வ சக்திகளைக்
கொடுத்திருக்கிறீர்கள். நாங்களும் கூட எங்களை மாஸ்டர்
சர்வசக்திவான் என்று ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்று. ஆனால்
சில குழந்தைகள் முறையிடுகிறார்கள். அவ்வப்பொழுது எந்த நேரத்தில்
எந்த சக்தி அவசியமோ அது அந்த நேரதில் வருவதில்லை என்று. ஆனால்
இதன் காரணம் என்ன? பாபாவோ ஒவ்வொரு குழந்தைக்கும் அனைத்து
சக்திகளையும் கொடுத்துள்ளார். சிலருக்கு குறைவாகவோ, சிலருக்கு
அதிகமாகவோ கொடுத்துள்ளார்? சர்வசக்திகள் கிடைத்துள்ளன
என்பவர்கள் கையை உயர்த்துங்கள். எல்லோருக்கும் கிடைத்துள்ளது
ஆனால் சமயத்தில் ஏன் செய-ல் வருவதில்லை? இதன் காரணம் என்ன?
காரணத்தையும் கூட புரிந்துள்ளிர்கள், ஆனால் அந்த நேரத்தில்
மறந்து விடுகிறீர்கள். சர்வ சக்திகளின் கஜானா ஒவ்வொரு
குழந்தைக்கும் வரதான ரூபத்தில் கிடைத்துள்ளது. பாபா
அனைவருக்கும் வரதான ரூபத்தில் கிடைத்துள்ளது. பாபா அனை
வருக்கும் சர்வசக்திகளின் வரம் அளித்துள்ளார். சிலருக்கு
குறைவாகவோ சிலருக்கு அதிகமாகவோ கொடுப்பதில்லை. சர்வசக்திகளும்
கொடுத்துள்ளார், ஆனால் சமயத்தில் ஏன் வருவதில்லை? சிந்தியுங்கள்
நீங்கள் சுவமான என் சீட்டில் அமரவில்லையென்றால் உங்கள் கட்டளை
எவராவது ஏற்றுக் கொள்வார்களா? எந்த நேரத்தில் சக்தி வரவில்லையோ
அதன் காரணம் என்னவென்றால் நீங்கள் உங்களது மாஸ்டர்
சர்வசக்திவான் என்று சீட்டில் இருப்பதில்லை. ஆகையால் உங்கள்
கட்டளையை எவரும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆகவே எப்பொழுதும் தங்களது
சீட்டில் செட்டாகி இருங்கள். எப்பொழுது வீணான எண்ணங்கள்
வருகின்றதோ அல்லது டென்ஷனில் வருகின்றீர்களோ அப்பொழுது சுவமான
சீட்டி-ருந்து விடுபட்டு விடுகிறீர்கள். பாப்தாதா
ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சுவமான் கொடுத்திருக் கிறார். எவ்வளவு
பெரிய சுவமான் கொடுத்திருக்கிறார் என்பதை கணக்கிட்டுப்
பாருங்கள். சுவமான் என் சீட்டில் இல்லாதபொழுது அங்கு என்ன
ஏற்படுகிறது? தெரியுமல்லவா. தேக அபிமானம் வருகிறது. சுவமான்
இருக்கிறதா? அல்லது தேகபான் இருக்கிறதா? தேக அபிமானத் தின்
சீட்டில் இருந்து கொண்டு கட்டளை இடும்பொழுது அதை சக்திசா- நிலை
என்று ஏற்க முடியாது. மாஸ்டர் சர்வசக்திவானின் சக்தி என்று
ஏற்றுக் கொள்ள முடியாது. சீட்டில் செட்டாவது என்பதற்கான
பயிற்சியை சதா செய்யுங்கள். தங்களது மன சிந்தனையிலோ உங்களது
சீட்டில் செட்டாகி இருக்கும்பொழுது சர்வசக்திகளும் ஆஜராகி
விடுகின்றன.
இன்று பாப்தாதா பார்த்தார். அமிர்தவேளையில், நாலாபுறமும்
உள்நாடு மற்றும் வெளிநாட்டிலும் சுற்றி வந்தார் சுற்றி
வருவதற்கு பாப்தாதாவிற்கு நேரம் எடுப்பதில்லை. அதனால் என்ன
பார்த்தார்? கூறுங்கள். அனைவரும் அவரவர் இடத்தில்
உட்கார்ந்திருந்தீர்கள். புருஷார்த்தமும் செய்தீர்கள் முழு
நேரமும் சர்வ அனுபவி மூர்த்தியாகி உட்கார்ந்து இருந்தீர்கள்.
ஆனால் என்ன பார்த்தார்? ஒரு சிலர் அனுபவி மூர்த்தியாக
இருந்தார்கள். ஏனென்றால் எல்லாவற்றையும் விட பெரிய சக்தி,
அனுபவத்தின் உடையதாகும். அனுபவி சொரூபம் சர்வசக்திகளுடைய அனுபவி
சொரூபம், மாஸ்டர் ஞானம் நிறைந்தவர் மாஸ்டர் சர்சக்தி சொரூபம்
அதனால் அனுபவி சொரூபமாக ஆவதில் சிறிது குறை வெளிப்பட்டது
புருஷார்த்தம் செய்கிறீர்கள், பாப்தாதாவும் வாழ்த்து கூறுகிறார்.
யாரெல்லாம் புருஷார்த்தம் செய்து பெரும்பான்மையாக வந்து
அமர்கிறீர்கள் என்று ஆனால் பாப்தாதா லைட் மைட் சொரூபத்தின்
அனுபவி மூர்த்தியாகி அமரவேண்டும் என விரும்புகிறார், ஏனென்றால்
அமிர்தவேளை யோகத்தின் சக்தி முழு வாயுமண்டலத்திலும் பரவிக்
கொண்டிருக்கிறது இந்த அனுபவத்தை மேலும் அதிகமாக்குங்கள்.
எவ்வாறு பிரம்மபாபாவை பார்த்தீர்களோ எவ்வளவு சக்திசா-யான
பரிஷ்தா சொரூபத்தில் இருந்தார் என்று. இவ்வாறாக அமிர்தவேளையில்
இப்பொழுது தத்தமது ரூபத்தினுடைய கவனம் மற்றும் களைப்பற்றவராகி
இருக்க வேண்டும் பாப்தாதா பார்க்கிறார் சில குழந்தைகள் லைட்
மைட் ரூபத்தில் கூட அமர்கிறார்கள், இருந்தாலும் இந்த நேரத்தின்
புருஷார்த்தத்தில், மேலும் கவனம் கொடுக்க வேண்டி இருக்கிறது.
பாப்தாதா ஏற்கனவே சமிக்ஞை கொடுத்திருக்கிறார், அதாவது தங்களது
மனதை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்திருங்கள். மன
சேவையாகட்டும் வாய் மூலம் கூறுவதாகட்டும், மனன சக்தி
ஆகியவற்றில் சுறுசுறுப்பாக இருங்கள். மனன சக்தி மனதை
ஒருமுகப்படுத்துகிறது. சில சில குழந்தைகள் மனனம் நன்றாக
செய்கிறார்கள், ஆனால் மனன சக்தியைக் கூட முழு நாளிலும்
அதிகரியுங்கள். ஏனென்றால் பாப்தாதாவிற்கு கடைசியாக வந்த குழந்தை
மீதும் அன்பு இருக்கிறது. கடைசியாக வந்த குழந்தையும் கூட
தனித்து விடப்படாமல் கூடவே செல்ல வேண்டும் என்று பாப்தாதா
விரும்புகிறார். பின் தங்கிவிடக் கூடாது. அதனால் என்ன
செய்வீர்கள்? கவனம் தேவை.
இன்று பாப்தாதா சபையைப் பார்த்து புரிந்து கொள்கிறார், அதாவது
குழந்தைகள் அதிகரிக்க வேண்டும் என்று. 75 வருட ஜூப்ளி
கொண்டாடினீர்கள் அதற்காக குழந்தைகளுக்கு பாப்தாதா வாழ்த்துக்கள்
அளித்துக் கொண்டிருக்கிறார். சேவையினுடைய ஈடுபாட்டையும்
பாப்தாதா பார்த்தார். ஒவ்வொரு இடத்திலும் ஊக்கம் இருக்கிறது,
மேலும் சேவையின் பலமும் வெளிப் பட்டுக் கொண்டு இருக்கிறது
விசேஷமாக பாப்தாதா என்ன பார்த்தார் என்றால், எங்கெல்லாம்
குழந்தைகள் சேவை செய்தார்களோ அங்கிருந்து இந்த முறை
அரசாங்கத்தின் நிமித்த ஆத்மாக்க அதிகம் வந்துள்ளார்கள். இந்த
நேரத்தின் படி எப்பொழுதெல்லாம் துக்கம் மற்றும் அசாந்தி
அதிகாரித்துக் கொண்டிருக்கிறதோ இந்தத் தலைப்பு அப்பொழுது
அவசியமாகிறது. ஏனென்றால் எந்த அளவு சாந்தியை விரும்புகிறீர்களோ
அந்தளவு அசாந்தியும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஏதாவது ஒரு
விசயத்தில் அசாந்தி வந்து விடுகிறது இதனால் நாலாபுறமும் டென்ஷன்
அதிகரித்துக் கொண்டே இருக்கிறது மேலும் அரசாங்கமும் பாரம்
டென்ஷன் இல்லாமல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. அதனால்
இந்த சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அனைத்துக்
குழந்தைகளுக்கும் பாப்தாதா வாழ்த்து அளித்துக் கொண்டி
ருக்கிறார். மேலும் தொடர்ந்து புதிதாக செய்யக்
கூடியவர்களுக்கும் அட்வான்ஸ் வாழ்த்த ளிக்கிறார்.
பாப்தாதா இப்பொழுது விரும்புவது என்னவென்றால் ஒவ்வொரு
குழந்தையும் தந்தையைப் பின்பற்றி பாப்சமான் சம்பன்னமாக அவசியம்
ஆகவேண்டும் அனைத்துக் குழந்தைகளும் புருஷார்த்தம் செய்வதைக்
கூட பாப்தாதா பார்த்தார். புருஷார்த்தம் செய்வதில் ஈடுபாடு
உள்ளது. உறுதிமொழியும் பலர் அளிக்கிறார்கள் இப்பொது செய்ய
முடியாது என்று கூறுவதின் காரணம் என்ன? காரணம் என்னவென்றால்
புருஷார்த்தத்தில் திடத்தன்மை குறைவாக இருக்கிறது. இடையிடையே
கவனக் குறைவு வந்து விடுகிறது. நடந்து விடும், ஆகிவிடுவோம்
என்பது புருஷார்த்தத்தில் கவனக்குறைவை ஏற்படுத்திவிடுகிறது.
அதனால் இப்பொழுது என்ன செய்வீர்கள்? இப்பொழுது விசேஷ கவனம்
கொடுங்கள் தங்களுக்குத் தாங்களே நிகழ்ச்சி நிரலை உருவாக்குங்கள்,
அதில் முழுநாளும் மனம் ஈடுபட்டு இருக்க வேண்டும். உங்களது
திட்டத்தை நீங்களே தயாரியுங்கள். மனதை சுறுசுறுப்பாக
வைத்திருப்பதற்கு நிகழ்ச்சி நிரலை தயார் செய்யுங்கள். மனனம்
செய்யுங்கள். சேவையும் செய்யுங்கள். ஒவ்வொருவருடைய கவனத்தையும்
கவருங்கள். ஆனால் சுறுசுறுப்பாக இருங்கள். மனதில்
சுறுசுறுப்பாக இருங்கள் மனதை சுறுசுறுப்பாக வைப்பதில் முதல்
தரமான வியாபாரியாகுங்கள் இதை செய்ய முடியும் தானே? செய்வீர்களா?
செய்வீர்களா? ஏனென்றால் உங்களுக்குத் தெரியும், பிரம்மா பாபா
கூட உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். மேலும் அட்வான்ஸ்
பார்ட்டி கூட உங்களிடம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
எப்பொழுது நேரத்தை அருகில் கொண்டு வருவீர்கள் என்பதின் பொறுப்பு
உங்களுடையதாகும். உங்களை சம்பன்னமாக ஆக்குவதுதான், சமயத்தை
அருகில் கொண்டு வருவதாகும்.
ஆகவே பாப்தாதா விசேஷமாக ஒரு மாதம் அளித்திருக்கிறார். இந்த ஒரு
மாதத்தில் ஒவ்வொருவரும் தீவிர புருஷார்த்தி ஆகியே தீர வேண்டும்
சம்மதமா? கையை உயர்த்துங்கள். நல்லது. வாழ்த்துக்கள். இப்பொழுது
ஒவ்வொருவரும் திட சங்கல்பம் செய்து தினசரி பாப்தாதாவிற்கு
ரிசல்ட்டை எவ்வாறு கொடுக்க வேண்டும்? தீவிர
புருஷார்த்தத்தினுடைய ரிசல்ட் தர வேண்டும் இதற்கு தயாராக
இருக்கிறீர்களா? இரண்டு கரங்களையும் உயர்த்துங்கள். மிக நல்லது.
இப்பொழுது பாப்தாதா திடீரென நடக்கும் நிகழ்வுகளிலும் முடிவை
எதிர்பார்க் கிறார் தேதியை கூறுவதில்லை. ஒரு மாதத்திற்குள் ஒரு
நாளில் முடிவுகளை எதிர்பார்ப்பார் செய்தே ஆக வேண்டும்
தங்களுக்குத் தாங்களே வாக்குறுதி கொடுத்துக் கொள்ளுங்கள்.
பாப்தாதா செய்ய வைப்பார்அவரும் செய்து கொண்டு தான் இருக்கிறார்.
ஆனால் உங்களுக்கு நீங்களே சங்கல்பம் செய்து மேலும் நடைமுறையில்
செய்து காட்டுங்கள். செய்தே ஆக வேண்டும் செய்வோம், செய்வோம்
என்பது கூடாது . நேரம் தீவிரமாகச் சென்று கொண்டிருக்கிறது,
அதனால் இந்த நேரத்தில் மாற்றம் செய்யக் கூடிய முன்னோர்களான
நீங்கள் உங்களது துக்கமான பரிவாரத்தின் மீது கருணை வரவில்லையா
கருணை மனம் உடைய வராகுங்கள். துக்கத்திலுள்ள ஆத்மாக்களுக்கு
மனம் மூலமாகவோ பேச்சின் மூலமாகவோ, தொடர்பின் மூலமாகவோ
சுகத்திற்கான வழியைக் கூறுங்கள். உங்களது பரிவாரம் தானே. அதனால்
பரிவாரத்தினுடைய துக்கத்தை அழிக்க வேண்டும். கருணை மனம்
கொண்டவரா குங்கள். நல்லது.
இப்பொழுது எங்கெல்லாம் அமர்ந்துள்ளீர்களோ அவர்கள் அனைவருக்கும்,
தொலைகாட்சியில் பார்க்கும் ஒவ்வொரு குழந்தைக்கும், பாப்தாதா
இன்று தீவிர புருஷார்த்தத்திற்கான பட்டம் அளித்துக்
கொண்டிருக்கிறார். இப்பொழுது இதை சதா நினைவில் வையுங்கள்.
யாராவது நீங்கள் யாரென்று கேட்டால் தீவிர புருஷார்த்தி என்று
கூற வேண்டும். அனைவருக்கும் சம்மதம் தானே? இப்பொழுது கீழான
புருஷார்த்தம் செல்லுபடியாகாது நேரமோ ஓடிக் கொண்டே இருக்கிறது.
ஆகையால் இப்பொழுது தீவிர புருஷார்த்தி ஆகியே தீர வேண்டும்.
காலத்தினுடைய அழைப்பு தீவிர புருஷார்த்தி ஆகுக அதனால் அனைத்து
குழந்தைகளுக்கும் பாப்தாதாவினுடைய மிகுந்த அன்பு நினைவுகளும்
மற்றும் தீவிர புருஷார்த்திற்கான பரிசும் அளித்துக்
கொண்டிருக்கிறார் நல்லது ஓம்சாந்தி.
ஆசீர்வாதம்:
மாயையினுடைய ஞானத்தை அறியாதவர்களாகவும் மற்றும் ஞானத்தில்
அறிந்தவர்களாகவும் ஆகக் கூடிய சம்பூர்ணத் தூய்மையானவராகுக !
எவ்வாறு சத்யுக ஆத்மாக்கள் விகாரங்களின் விசயத்தில் அறியாமல்
இருக்கிறார்களோ, அந்த சம்ஸ்காரத்தைத் தெளிவாக நினைவில் வைத்துக்
கொண்டிருக்கும்போது, மாயாவினடைய ஞானத்தில் அறியாதவர்கள்
ஆகிவிடுவீர்கள். ஆனால் எதிர்கால சம்ஸ்காரத்தின் நினைவு
எப்பொழுது தெளிவாக இருக்குமென்றால் ஆத்மீக சொரூபத்தினுடைய
நினைவு சதா காலத்திற்கும் தெளிவாக இருக்கும்பொழுது எவ்வாறு
தேகம் தெளிவாகப் புரிகிறதோ, அவ்வாறே உங்களது ஆத்மீக சொரூபம்
தெளிவாகத் தெரிய வேண்டும், அதாவது அனுபவத்தில் வரும்பொழுது
மாயையிடம் அறியாதவர்களாகி மற்றும் ஞானத்தில் சம்பூர்ண தூய்மை
யானவர்கள் என்று கூறுவார்கள்.
சுலோகன்:
உள்ளே இருக்கும் அசுத்தம் தான்
சம்பூர்ண சுத்தமாவதில் தடையை ஏற்படுத்துகிறது.
அவ்யக்த இஷாரே: இப்பொழுது தனது வள்ளல் சொரூபத்தை
வெளிப்படுத்துங்கள்
நீங்கள் ஈஸ்வரிய சேவாதாரியாகி சேவை செய்யக் கூடியவர்கள் சேவையை
எடுக்கக் கூடியவர்கள் அல்ல. ஒருவேளை சேவையை எடுக்கக்
கூடியவர்களா இருந்தால் பெயருக்குத் தகுந்தாற்போல் காரியம்
செய்வதில்லை என பொருள் இறை சேவாதாரிகள் சேவையை எடுப்பதில்லை.
கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஏனென்றால் வள்ள-ன்
குழந்தைகள் எவ்வாறு பாபா ஒன்றையும் சுவீகாரம் செய்யாமல்
கொடுத்துக் கொண்டே இருக்கிறாரோ அவ்வாறே நீங்களும் கூட கொடுக்கக்
கூடியவர் ஆகுங்கள். ஒருவேளை எப்பொழுதாவது பிரச்சனை ரூபத்தில்
வந்தால் சேவையை எடுக்கிறீர்கள். எந்தவிதமான முறையிலும் கூட
சேவையை எடுக்கக் கூடியவர்களுக்கு நாம் வள்ளல் வரதாதாவின்
குழந்தை என்ற போதை இருக்காது.
விசேஷ செய்தி : மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையின் யோகப்
பயிற்சி
இன்று மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை ஆகும் அனைத்து
சகோதர, சகோதரிகளும் ஒரே குழுவாகி மாலை 6.30 மணி முதல் 7.30 மணி
வரை தங்களது ஞான சொரூப ஸ்திதியில் நிலைத்திருங்கள். ஞானத்தின்
ஒளி மற்றும் யோகத்தின் சக்தியை அனைத்து ஆத்மாக்களுக்கும்
கொடுத்து உண்மையான வழியை காண்பிக்கக் கூடிய அல்லது அதன் வழியில்
நடப்பதற்கான சக்தியை ஒவ்வொரு ஆத்மாவிற்கும் சென்றடையுமாறு சுப
சங்கல்பங்களினால் உலக நன்மைக்கான சேவை செய்யுங்கள்.