20-10-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! உங்களுக்கு மிகுந்த சுவையுடன் கல்வியைக் கற்பிப்பதற்காக தந்தை வந்திருக்கின்றார். நீங்களும் சுவையுடன் படியுங்கள், நமக்கு கல்வி கற்பிப்பவர் சுயம் பகவான் என்ற போதை இருக்க வேண்டும்.

கேள்வி:
பிரம்மா குமார், குமாரிகளாகிய உங்களது இலட்சியம் அல்லது சுத்தமான பாவனை என்ன?

பதில்:
5 ஆயிரம் ஆண்டு முந்தைய கல்பத்தைப் போன்று மீண்டும் ஸ்ரீமத் மூலம் உலகில் சுகம், சாந்தி நிறைந்த இராஜ்யத்தை ஸ்தாபனை செய்வது தான் உங்களது இலட்சியமாகும். ஸ்ரீமத் மூலம் நாம் முழு உலகிற்கும் சத்கதி செய்வோம் என்பது தான் உங்களது சுத்தமான பாவனை யாகும். நாம் அனைவருக்கும் சத்கதி கொடுக்கக் கூடியவர்கள் என்று நீங்கள் போதையுடன் கூறுகிறீர்கள். உங்களுக்கு தந்தையிடமிருந்து அமைதிப் பரிசு கிடைக்கிறது. நரகவாசியிலிருந்து சொர்க்கவாசி ஆவது தான் பரிசு பெறுவதாகும்.

ஓம் சாந்தி.
மாணவர்கள் படிக்கின்ற பொழுது குஷியுடன் படிக்கின்றனர். ஆசிரியரும் மிகுந்த குஷியுடன், சுவையுடன் கற்பிக்கின்றார். ஆசிரியராக இருக்கும் எல்லையற்ற தந்தையும் நமக்கு மிகுந்த சுவையுடன் கல்வி கற்பிக்கின்றார் என்பதை ஆன்மீகக் குழந்தைகள் அறிவீர்கள். அந்த படிப்பில் தந்தை தனியாகவும், கறபிக்கும் ஆசிரியர் தனியாகவும் இருப்பார். சிலருக்கு தந்தையே ஆசிரியராக இருந்து கல்வி கற்பிக்கும் பொழுது மிகுந்த சுவையுடன் கற்பிப்பார். ஏனெனில் ரத்த உறவு இருக்கிறது அல்லவா! என்னுடையவர் என்பதைப் புரிந்து கொண்டு மிகுந்த சுவையுடன் கற்பிப்பார். இந்த தந்தை உங்களுக்கு எவ்வளவு சுவையுடன் கல்வி கற்பிக்கின்றார்! குழந்தை களும் மிகுந்த சுவையுடன் கல்வி கற்க வேண்டும். நேரடியாக தந்தை கற்பிக்கின்றார் மற்றும் ஒரே ஒரு முறை தான் வந்து கற்பிக்கின்றார். குழந்தைகளுக்கு மிகுந்த சுவை (ருசி) இருக்க வேண்டும். பகவான் பாபா நமக்கு கல்வி கற்பிக்கின்றார், மேலும் ஒவ்வொரு விசயத்தையும் நல்ல முறையில் புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். சில குழந்தைகள் படித்துக் கொண்டிருந்தாலும் இந்த நாடகம் வருவதும் போவதுமான சக்கரமாகும், ஆனால் இந்த நாடகத்தை ஏன் படைத்தார்? இதனால் என்ன பலன் இருக்கிறது? இப்படியே சக்கரத்தில் வந்து கொண்டிருப்போமா? இதிலிருந்து விடுபட்டு விட்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றனர். 84 பிறவிகளின் சக்கரத்தில் வந்து கொண்டே இருக்க வேண்டுமென்று நினைக்கின்ற பொழுது இப்படிப்பட்ட சிந்தனைகள் வரு கின்றன. பகவான் இப்படிப்பட்ட விளையாட்டை ஏன் படைத்தார்? வந்து செல்லக்கூடிய இந்த சக்கரத்திலிருந்து விடுபடவே முடியாதா? இதிலிருந்து விடுபட (மோட்சம்) வேண்டும். இப்படிப்பட்ட எண்ணங்கள் சில குழந்தைகளுக்கு வருகிறது. இந்த நடிப்பிலிருந்து, துக்கம், சுகத்திலிருந்து விடுபட்டு விட வேண்டும். இவ்வாறு ஒருபொழுதும் நடக்காது என்று தந்தை கூறுகின்றார். மோட்சம் அடைவதற்கான முயற்சி செய்வது வீணாகும். ஒரு ஆத்மா கூட நடிப்பில்லாமல் இருந்து விட முடியாது என்று தந்தை கூறுகின்றார். ஆத்மாவில் அழிவற்ற பாகம் பதிவாகி யிருக்கிறது. அது அநாதி, அழிவற்ற, முற்றிலும் சரியாக நடிக்கும் நடிகராகும். சிறிதும் ஏற்றத் தாழ்வு ஏற்படாது. குழந்தைகளாகிய உங்களிடத்தில் முழு ஞானமும் இருக்கிறது. இந்த நாடகத்தின் பாகத்திலிருந்து யாரும் விடுபட முடியாது. யாரும் மோட்சமும் அடைய முடியாது. அனைத்து தர்மத்தினரும் வரிசைக்கிரமமாக வந்தே ஆக வேண்டும். இது ஏற்கெனவே உருவாக்கப்பட்ட அழிவற்ற நாடகமாகும் என்று தந்தை புரிய வைக்கின்றார். பாபா, நாங்கள் எவ்வாறு 84 பிறவிச் சக்கரத்தில் வருகிறோம் என்பதை அறிந்து கொண்டோம் நீங்களும் கூறுகிறீர் கள். யார் முதலில் வருகிறார்களோ அவர்கள் தான் 84 பிறவிகள் எடுப்பர் என்பதையும் புரிந்திருக் கிறீர்கள். தாமதமாக வருபவர்கள் கண்டிப்பாக குறைவான பிறவிகள் தான் எடுப்பர். இங்கு முயற்சி செய்ய வேண்டும். பழைய உலகிலிருந்து புது உலகமாக அவசியம் ஆக வேண்டும். பாபா ஒவ்வொரு விசயத்தையும் அடிக்கடி புரிய வைத்துக் கொண்டே இருக்கின்றார். ஏனெனில் புதுப்புது குழந்தைகள் வந்து கொண்டே இருக்கின்றனர். முந்தைய படிப்பை (பாடங்கள்) அவர்களுக்கு யார் கற்றுக் கொடுப்பது? ஆக தந்தை புதியவர்களைப் பார்த்து பழைய கருத்துகளை திரும்பவும் கூறுகின்றார்.

உங்களது புத்தியில் முழு ஞானமும் இருக்கிறது. ஆரம்பதிலிருந்து நாம் எப்படியெல்லாம் நடிப்பை நடித்து வருகிறோம் என்பதை அறிவீர்கள். எவ்வாறு வரிசைக் கிரமமாக வருகிறோம்? எத்தனை பிறவிகள் எடுக்கிறோம்? என்பதை நீங்கள் யதார்த்த முறையில் அறிவீர்கள். இந்த நேரத்தில் தான் தந்தை வந்து ஞான விசயங்களைக் கூறு கின்றார். சத்யுகம் என்றாலே பலன் ஆகும். இந்த நேரத்தில் தான் உங்களுக்கு இது புரிய வைக்கப்படுகிறது. கீதை யிலும் ஆரம்பத்தில் மற்றும் கடைசியில் மன்மனாபவ என்ற விசயம் வருகிறது. பதவி அடைவதற்காகத் தான் கல்வி கற்பிக்கப் படுகிறது. நீங்கள் இராஜா ஆவதற்காக இப்பொழுது முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். மற்ற தர்மத்தினரும் புரிய வைக்கப்படுகின்றனர் அதாவது அவர்கள் வரிசைக்கிரமமாக வருகின்றனர், தர்ம ஸ்தாபகர் வந்த பின்பு அனைவரும் வந்தே ஆக வேண்டும். இராஜ்யத்திற்கான விசயம் கிடையாது. ஒரே ஒரு கீதை சாஸ்திரத்திற்குத் தான் அதிக மகிமை இருக்கிறது. பாரதத்தில் வந்து தான் தந்தை கூறுகின்றார், மேலும் அனை வருக்கும் சத்கதி கொடுக்கின்றார். தர்ம ஸ்தாபகர்களாக வருபவர்கள் இறந்த பின்பு பெரிய பெரிய தீர்த்த ஸ்தானமாக ஆக்கிவிடுகின்றனர். உண்மையில் அனைவரின் தீர்த்த ஸ்தானம் பாரதம் மட்டுமே, இங்கு தான் எல்லையற்ற தந்தை வருகின்றார். தந்தை பாரதத்தில் வந்து தான் அனைவருக்கும் சத்கதி கொடுக்கின்றார். என்னை விடுவிப்பவர் (லிபரேட்டர்), வழிகாட்டி என்றும் கூறுகிறீர்கள் அல்லவா! நான் உங்களை இந்த பழைய உலகம், துக்கமான உலகிலிருந்து விடுவித்து சாந்திதாமம், சுக தாமத்திற்கு அழைத்துச் செல்கிறேன். பாபா நம்மை சாந்திதாமம், சுகதாமத்திற்கு அழைத்துச் செல்வார் என்பதை குழந்தைகள் அறிவீர்கள். மற்ற அனைவரும் சாந்திதாமத்திற்குச் செல்வார் கள். தந்தை வந்து துக்கத்திலிருந்து விடுவிக் கின்றார். அவருக்கு பிறப்பு, இறப்பு கிடையாது. தந்தை வருவார், பிறகு சென்று விடுவார். அவர் இறந்து விட்டார் என்று ஒருபொழுதும் கூறுவது கிடையாது. சிவானந்தர் இறந்து விட்டால் அவருக்கு இறுதிச் சடங்கு செய்கின்றனர். இந்த தந்தை சென்று விட்டால் இவருக்கு இறுதிச் சடங்கு, விழா போன்ற எதுவும் செய்ய வேண்டியதில்லை. அவர் வருவதும் தெரிவது கிடையாது. ஆக இறுதி சடங்கிற்கான விசயமே கிடையாது. மற்ற அனைத்து மனிதர்களுக்கும் இறுதிச் சடங்கு செய்கின்றனர். தந்தைக்கு இறுதிச் சடங்கு கிடையவே கிடையாது. அவருக்கு சரீரமே கிடையாது. அனைத்து மனிதர்களும் கொசுக்களைப் போன்று கூட்டம் கூட்டமாக இறந்து விடுவார்கள். சத்யுகத்தில் இந்த ஞானம், பக்திக்கான விசயம் இருக்காது. இது இப்பொழுது தான் நடைபெறு கிறது. மற்ற அனைவரும் பக்தி தான் கற்றுக் கொடுக்கின்றனர். அரைக் கல்பம் பக்தி, அரைக் கல்பத்திற்குப் பிறகு தந்தை வந்து ஞானத்தின் ஆஸ்தியைக் கொடுக்கின்றார். அங்கு யாரும் ஞானத்தை எடுத்துச் செல்வது கிடையாது. அங்கு தந்தையை நினைவு செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. முக்தியில் இருக்கின்றனர். அங்கு நினைவு செய்ய வேண்டிய அவசியம் இருக்குமா என்ன? துக்கத்திற்கான கவலை அங்கு இருக்கவே இருக்காது. பக்தியும் முதலில் கலப்படமின்றி இருந்தது, பிறகு கலப்படமாகி விட்டது. இந்த நேரத்தில் மிக அதிகமான கலப்பட பக்தியாக இருக்கிறது. இது கொடூரமான நரகம் என்று கூறப்படு கிறது. முற்றிலும் மிக கடுமை யான நரகமாக இருக்கிறது, பிறகு தந்தை வந்து சுகமான சொர்க்கத்தை உருவாக்குகின்றார். இந்த நேரத்தில் 100 சதவிகிதம் துக்கம், பிறகு 100 சதவிகிதம் சுகம், அமைதி இருக்கும். ஆத்மா சென்று தனது வீட்டில் ஓய்வு எடுக்கும். புரிய வைப்பது மிகவும் எளிதாகும். எப்பொழுது புது உலக ஸ்தாபனை செய்து பழைய உலகை அழிக்க வேண்டுமோ அந்த நேரத்தில் தான் நான் வருகிறேன் என்று தந்தை கூறுகின்றார். இவ்வளவு பெரிய காரியம் ஒருவர் மட்டுமே செய்து விட முடியாது. உதவி யாளர்கள் பலர் தேவை. இந்த நேரத்தில் குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் உதவி யாளர்களாக ஆகியிருக்கிறீர்கள். குறிப்பாக பாரதத்திற்கு உண்மையான சேவை செய்கிறீர்கள். சத்தியமான தந்தை சத்திய சேவை செய்யக் கற்றுக் கொடுக்கின்றார். தனக்கும், பாரதத்திற்கும் மற்றும் உலகிற்கும் நன்மை செய்கிறீர்கள். ஆக எவ்வளவு ஆர்வத்துடன் (ருசியுடன்) செய்ய வேண்டும்! பாபா எவ்வளவு ஆர்வத்துடன் அனைவருக்கும் சத்கதி அளிக்கின்றார். இப்பொழுதும் அனைவருக்கும் சத்கதி அவசியம் ஏற்பட வேண்டும். இது சுத்தமான அகங்காரம், சுத்தமான பாவனையாகும்.

நீங்கள் உண்மையிலும் உண்மையான சேவை செய்கிறீர்கள், ஆனால் குப்தமாக (மறைவாக) இருக்கிறீர்கள். ஆத்மா சரீரத்தின் மூலம் செய்கிறது. பி.குகளாகிய உங்களது நோக்கம் என்ன? என்று பலர் உங்களிடம் கேட்கின்றனர். உலகில் சத்யுக சுகம், சாந்தியான சுயராஜ்யத்தை ஸ்தாபனை செய்வது தான் பி.கு-களின் நோக்கம் என்று கூறுங்கள். நாம் ஒவ்வொரு 5 ஆயிரம் ஆண்டிற்குப் பிறகு ஸ்ரீமத் மூலம் உலகில் அமைதி ஸ்தாபனை செய்து உலக அமைதிக்கான பரிசு அடைகிறோம். இராஜா ராணி எப்படியோ அவ்வாறே பிரஜைகளும் பரிசு அடைகின்றனர். நரக வாசியிலிருந்து சொர்க்கவாசி ஆவது குறைந்த பரிசா என்ன? அந்த அமைதிப் பரிசு அடைந்து குஷியடைகின்றனர், அடையப் போவது எதுவும் கிடையாது. உலக இராஜ்யத்திற்கான உண்மையிலும் உண்மையான பரிசு இப்பொழுது நாம் தந்தையிடமிருந்து அடைந்து கொண்டிருக் கிறோம். பாரதம் நமது உயர்ந்த தேசம் என்று கூறுகின்றனர் அல்லவா! எவ்வளவு மகிமை செய் கின்றனர்! நான் பாரதத்திற்கு எஜமான் என்று அனைவரும் நினைக்கின்றனர், ஆனால் எஜமானர் களாக இருக்கிறார்களா என்ன! இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் பாபாவின் ஸ்ரீமத் மூலம் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கிறீர்கள். ஆயுத பலம் எதுவும் கிடையாது. தெய்வீக குணங்களை தாரணை செய்கிறீர்கள், அதனால் தான் உங்களுக்கு மகிமை, பூஜை நடைபெறுகிறது. அம்பாவிற்கு (ஜெகதம்பா) எவ்வளவு பூஜை நடைபெறுகிறது என்பதைப் பாருங்கள்! ஆனால் அம்பாள் யார்? பிராமணனா? அல்லது தேவதையா? .... என்பது தெரியாது. அம்பா, காளி, துர்க்கை, சரஸ்வதி போன்றவர்கள்....... இவ்வாறு பல பெயர்கள் உள்ளன. இங்கும் கீழே அம்பாவின் கோயில் சிறிதாக இருக்கிறது. அம்பாவிற்கு அதிக கைகளை கொடுத்து விட்டனர். அவ்வாறு கிடையவே கிடையாது. இது தான் குருட்டு நம்பிக்கை என்று கூறப்படுகிறது. கிறிஸ்து, புத்தர் போன்றவர்கள் வந்தனர், அவர்கள் அவரவர்களது மதங்களை ஸ்தாபனை செய்தனர், தேதி, நாள் போன்ற அனைத்தையும் கூறுகின்றனர். அவர்களிடத்தில் குருட்டு நம்பிக்கைக்கான விசயம் எதுவுமில்லை. இங்கு பாரத வாசிகளுக்கு நமது தர்மம் எப்பொழுது மற்றும் யார் ஸ்தாபனை செய்தது என்று எதுவும் தெரிய வில்லை. அதனால் தான் குருட்டு நம்பிக்கை என்று கூறப்படுகிறது. இப்பொழுது நீங்கள் பூஜாரி களாக இருக்கிறீர்கள், பிறகு பூஜைக்குரியவர்களாக ஆகிறீர்கள். உங்களது ஆத்மாவும் பூஜைக் குரியது எனில் சரீரமும் பூஜைக்குரியதாகி விடுகிறது. உங்களது ஆத்மா விற்கும் பூஜை நடைபெறு கிறது, பிறகு தேவதைகளாக ஆகிவிடும் பொழுதும் பூஜை நடைபெறுகிறது. தந்தையோ நிராகாராக இருக்கின்றார். அவர் சதா பூஜைக்குரியவராக இருக்கின்றார். அவர் ஒருபொழுதும் பூஜாரியாக ஆவது கிடையாது. நீங்கள் தான் பூஜைக்குரியவர்களாக, பூஜாரிகளாக ஆகிறீர்கள் என்று குழந்தை களாகிய உங்களுக்குத் தான் கூறப்படுகிறது. தந்தை சதா பூஜைக்குரியவராக இருக்கின்றார், இங்கு வந்து தந்தை உண்மையான சேவை செய்கின்றார். அனைவருக்கும் சத்கதி கொடுக்கின்றார். இப்பொழுது என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். வேறு எந்த தேகதாரியையும் நினைவு செய்யக் கூடாது. இங்கிருக்கும் பெரிய பெரிய லட்சாதி பதிகள், கோடீஸ்வரர்கள் அல்லா அல்லா என்று கூறுகின்றனர். எவ்வளவு குருட்டு நம்பிக்கையுடன் இருக்கின்றனர்! நான் தான்..... என்பதன் பொருளை தந்தை புரிய வைத்திருக்கின்றார். நான் தான் சிவன் என்று அவர்கள் கூறிவிடு கின்றனர், ஆத்மா தான் பரமாத்மா. இப்பொழுது தந்தை சரி செய்து கூறுகின்றார். பக்தியில் கேட்பது சரியானதா? அல்லது நான் கூறுவது சரியானதா? என்று நீங்கள் முடிவெடுங்கள். நான் தான் ..... என்பதன் பொருளை மிகவும் நீளமாக எழுதி விட்டனர். நாம் தான் பிராமணர்கள், தேவதை கள், சத்ரியர்கள். இப்பொழுது நான் தான் .... எது சரியான அர்த்தம் ஆகும்? ஆத்மாக்களாகிய நாம் சக்கரத்தில் இவ்வாறு வருகின்றோம். விராட ரூபத்தின் சித்திரமும் இருக்கிறது, இதில் குடுமியுடைய பிராமணர்கள் மற்றும் தந்தையைக் காண்பிக்க வில்லை. தேவதைகள் எங்கிருந்து வந்தனர்? எப்படி பிறப்பெடுத்தனர்? கலியுகத்தில் இருப்பது சூத்திர வர்ணம். சத்யுகத்தில் உடனேயே தேவதை வர்ணம் எப்படி உருவானது? என்று எதுவும் புரிந்து கொள்வது கிடையாது. பக்தி மார்க்கத்தில் மனிதர்கள் எவ்வளவு மாட்டிக் கொண்டிருக் கின்றனர்? யாராவது கிரந்தத்தைப் படிக்கின்றனர், பிறகு அவர்களுக்கு கோயில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் வருகிறது, கட்டி விடுகின்றனர், அவ்வளவு தான், உடனே கிரந்தத்தைக் கூற ஆரம்பித்து விடுவர். மனிதர்கள் பலர் வந்து விடுவர், பலர் பின்பற்றக் கூடியவர் களாக ஆகிவிடு கின்றனர். எந்த லாபமும் ஏற்படுவது கிடையாது. இவ்வாறு பல கடைகள் திறக்கப்பட்டு விட்டன. இப்பொழுது இப்படிப்பட்ட கடைகள் அனைத்தும் அழிந்து விடும். இந்த கடைகள் அனைத்தும் பக்தி மார்க்கத்தினுடையதாகும். இதன் மூலம் அதிக செல்வம் சம்பாதிக்கின்றனர். நாம் பிரம்ம யோகிகள், தத்துவ யோகிகள் என்று சந்நியாசிகள் கூறகின்றனர். உண்மையில் பாரதவாசிகள் தேவி தேவதா தர்மத்தைச் சார்ந்தவர் கள் ஆவர், ஆனால் இந்து தர்மம் என்று கூறிக் கொள்கின்றனர். அதே போன்று பிரம்மம் என்பது தத்துவமாகும், அங்கு தான் ஆத்மாக்கள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் பிரம்ம ஞானி, தத்துவ ஞானி என்று பெயர் வைத்துக் கொள்கின்றனர். உண்மையில் பிரம்ம தத்துவம் என்பது வசிக்கும் இடமாகும். ஆக எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டனர் என்பதை தந்தை புரிய வைக்கின்றார். இவை அனைத்தும் பிரமை ஆகும். நான் வந்து அனைத்து பிரமைகளையும் தூரமாக்கி விடுகிறேன். பிரபுவே, உங்களது கதி, வழிமுறைகள் மிகவும் தனிப் பட்டது என்று பக்தி மார்க்கத்திலும் கூறுகின்றனர். நல்ல கதியை யாரும் வழங்க முடியாது. பல வழிமுறைகள் கிடைத்துக் கொண்டுதானிருக்கின்றன. இங்கு கூறப்படும் வழிமுறைகள் எவ்வளவு அதிசயங்களை செய்விக்கிறது !. முழு உலகையே மாற்றி விடுகிறது.

இவ்வளவு மதங்கள் எவ்வாறு உருவாகின்றன? என்பது இப்பொழுது குழந்தைகளாகிய உங்களது புத்தியில் இருக்கிறது. பிறகு ஆத்மாக்கள் எவ்வாறு அவரவர்களது செக்சனில் சென்று அமர் கின்றன! இவை அனைத்தும் நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. தெய்வீகப் பார்வை கொடுக்கக் கூடியவர் ஒரே ஒரு தந்தை தான் என்பதையும் குழந்தைகள் அறிவீர்கள். தெய்வீகப் பார்வைக்கான சாவியை எங்களுக்கு கொடுத்து விடுங்கள், நாங்கள் யாருக்கு வேண்டுமென்றாலும் சாட்சாத்காரம் செய்வித்து விடுவோம் என்று பாபாவிடம் கூறுகின்றனர். இந்த சாவி யாருக்கும் கிடைக்காது என்று பாபா கூறுகின்றார். அதற்குப் பதிலாக நான் உங்களுக்கு முழு உலக இராஜ்யத்தைக் கொடுக்கிறேன். நான் அடைவது கிடையாது. சாட்சாத்காரம் செய்விப்பது என்னுடைய பாகம் ஆகும். சாட்சாத்காரம் ஏற்படுவதன் மூலம் எவ்வளவு குஷியடைகின்றனர்! அடைவது எதுவும் கிடையாது. சாட்சாத்காரம் ஏற்படுவதன் மூலம் யாராவது நோயற்றவர்களாக ஆகிவிடுவர், செல்வம் கிடைத்து விடும் என்பது கியைடாது. மீராவிற்கு சாட்சாத்காரம் கிடைத்தது, ஆனால் முக்தி அடையவில்லை. அவர் வைகுண்டத்தில் தான் வசிக்கின்றார் என்று மனிதர்கள் நினைக் கின்றனர். ஆனால் வைகுண்டம் என்ற கிருஷ்ணபுரி எங்கு இருக்கிறது? இவை அனைத்தும் சாட்சாத்காரம் ஆகும். தந்தை வந்து அனைத்து விசயங்களையும் புரிய வைக்கின்றார். இவருக்கும் (பிரம்மா) முதன் முதலில் விஷ்ணுவின் சாட்சாத்காரம் ஏற்பட்டது, மிகவும் குஷியடைந்து விட்டார். அதுவும் நான் மகாராஜன் ஆகப் போகிறேன் என்பதையும் பார்த்தார். விநாசத்தையும் பார்த்தார், பிறகு இராஜ்யத்தையும் பார்த்தார், அப்பொழுது தான் நம்பிக்கை ஏற்பட்டது. ஆஹா, நான் உலகிற்கு எஜமானராக ஆகப் போகிறேன். பாபா பிரவேசமானார். பாபா, இவை அனைத்தையும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள், எமக்கு உலக இராஜ்யம் தேவை. நீங்களும் இந்த வியாபாரம் செய்ய வந்திருக்கிறீர்கள் அல்லவா! யார் ஞானத்தை அடை கிறார்களோ அவர்களுக்கு பக்தி விடுபட்டு விடுகிறது. நல்லது.

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தையான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) தெய்வீக குணங்களை தாரணை செய்து ஸ்ரீமத் படி நடந்து பாரதத்திற்கு உண்மையான சேவை செய்ய வேண்டும். தனக்கும், பாரதத்திற்கும் உலகிற்கும் மிகுந்த ஆர்வத்துடன் (சுவையுடன்) நன்மை செய்ய வேண்டும்.

2) நாடகத்தில் பதிவாகியிருக்கும் அழிவற்ற, அநாதி பாகத்தை யதார்த்த முறையில் புரிந்து கொண்டு நேரத்தை வீணாக்கும் முயற்சி செய்யக் கூடாது. வீண் எண்ணங்களும் எழுப்பக் கூடாது.

வரதானம்:
தீபராஜா தந்தை மூலமாக அமர ஜோதியெனும் வாழ்த்து பெற்று சதா அமர் ஆகுக!

உயிரோட்டமுள்ள உங்களது ஆத்ம தீபங்களின் நினைவாகவே பக்தர்கள் தீபாவளியெனும் தீபமாலையைக் கொண்டாடுகின்றனர். சுடர் விடும் தீபம் நீங்கள். குழந்தைகளாகி தீபங்களின் தலைவனுடன் மங்களகரமான சந்திப்பை கொண்டாடுகின்றீர்கள். பாப்தாதா குழந்தைகளான உங்களது நெற்றியில் சுடர் விடும் தீபத்தினை பார்க்கின்றார். அழியாத அமர தீபங்களை குழந்தை கள் நீங்கள் தீபராஜா தந்தை மூலமாக வாழ்த்துக்களை பெற்று சதா அமர்பவ எனும் வரதானத்தை அடைகின்றீர்கள் தீபராஜா தந்தை மற்றும் தீபராணிகளான குழந்தைகளின் சந்திப்பின் நினைவே தீபாவளி நன்னாளாகும்.

சுலோகன்:
நீங்களும் பாபாவும் இருவரும் மூன்றாவது ஒருவரால் பிரிக்க முடியாதவாறு இணைந்திருங்கள்.

அவ்யக்த சமிக்கை: தங்களுக்காகவும் மற்றும் அனைவருக்காகவும் மனதின் மூலமாக யோகத்தின் சக்திகளை பயன்படுத்துங்கள்.

நிகழ்காலத்தின் சமயத்திற்கேற்ப ஆத்மாக்கள் அனைவரும் கைமேல் பலனாக நடைமுறை வாழ்வின் பயனாக பார்க்க விரும்புகின்றார்கள். எனவே உடல், மனம், செயல் தொடர்பு, சம்மந்தம் யாவிலும் அமைதி சக்தியை பயன்படுத்திப் பாருங்கள். அமைதி சக்தியால் உங்களது எண்ண மானது கம்பியில்லாத தந்தியை விட வெகு விரைவில் எவ்வளவு தொலைவில் உள்ள ஆத்மா வையும் சென்றடையும். இந்த சக்தியின் விசேஷ யந்திரம் சுப சங்கல்பம் இந்த சங்கல்பம் எனும் எந்திரத்தால் விரும்பியவற்றை சித்தி சொரூபமாக பார்க்க முடியும்.