21-07-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! இதுவரை நீங்கள்
கேட்ட கேள்விப்பட்ட விஷயங்கள்படி நடந்து வந்தீர்கள், இப்பொழுது
பாபா உங்களுக்கு நேரடியாக வந்து ஞானம் கொடுத்து தனக்குச் சமமாக
ஞானம் நிறைந்தவர்களாக ஆக்குகின்றார்.
கேள்வி:
நல்ல புருஷார்த்தி குழந்தைகளின்
அடையாளம் அதாவது அவர்களின் நிலையின் புகழ் என்ன?
பதில்:
நல்ல புருஷார்த்தி குழந்தைகளே-
தாய்-தந்தையை முழுமையாகப் பின்பற்றுவார்கள், தன்னுடைய
வாழ்க்கையின் மீது இரக்கப்படுவார்கள். முழுமையாக கவனம்
செலுத்துவார்கள். சிறிது நேரம் ஒதுக்கி பாபாவை அவசியம் நினைவு
செய்வார்கள். அவர்கள் நிலையின் புகழ் தான்- ஆடாத, அசையாத,
நிலையானது என்படும். அவர்கள் தான் மஹாவீரர் என்று
அழைக்கப்படுகின்றனர்.
பாடல்:
போலாநாத் தனிப்பட்டவர்…….
ஓம் சாந்தி.
பக்திமார்க்க உலகத்தில் (புகழ்) பாட மட்டும் செய்கின்றார்கள்.
பக்திமார்க்கத்தில் நாம் கூட பாடி னோம் என்று குழந்தைகள்
இப்பொழுது புரிந்து கொண்டீர்கள். இப்பொழுது அதே போலாநாத் நம்
முன்னால் இருக்கின்றார், போலாநாத் என்ற வார்த்தை பக்தி
மார்க்கத் தினுடையது. ஞானமார்கத்தில் அவரை சிவபாபா என்கின்றோம்.
நீங்கள் புரிந்து கொண்டீர்கள்- ஆரம்பமும் முடிவும் இல்லாமல்
உருவாக்கப்பட்ட நாடகம்-நாடகத் திட்டப்படி சங்கமயுகத்தில் பாபா
வந்து நம்மூலமாக முயற்சி செய்விக்கின்றார். கல்ப-கல்பமாக
புருஷார்த்தம் செய்விக் கின்றார். எத்தனை காலம் குழந்தைகள்
நீங்கள் பக்தி செய்தீர்கள். இதைக் கூட தெளிவாக சொல்கின்றார்.
யார் முதன்-முதலில் பக்தி செய்தார்களோ அவர்களே வந்து ஞானம்
கேட்பார் கள். மேலும் அவர்களே சூர்யவம்சி ஆகின்றார்கள். சத்திய
யுகத்தில் இலட்சுமி-நாராயணன் மட்டும் வருவதில்லை. அவர்களுடைய
வம்சமும் இருக்குமல்லவா. அதனை தெய்வீக வர்ணம் என்று
கூறப்படுகின்றது. பாரதத்தில் தான் தெய்வீக வர்ணம் (வம்சம்)
இருந்தது. இப்பொழுது அசுர வர்ணமாக உள்ளது. இது சங்கமயுகம்.
இப்பொழுது அசுரரிலிருந்து தெய்வீக வர்ணத் திற்குப் போக வேண்டும்.
உண்மையில் இந்த மகாபாரதயுத்தத்தைத் தான் இதிகாசங்களில்
சொல்லப்படுகின்றது. சிவனின் பெயருக்குப் பதிலாக கிருஷ்ணரின்
பெயரைப் போட்டு விட்டார் கள். கீதை சாஸ்திரத்தை இப்படி
தவறாகியதால் மற்ற அனைத்து சாஸ்திரங்களும் கண்டனத் திற்கு
ஆகிவிட்டன. முக்கியமான விஷயம் கீதைதான். கீதை பாடசாலை அதாவது
கீதா பவனம் எவ்வளவு உள்ளது! கீதை ஞானம் கேட்பதற்கான பாடசாலை
உள்ளன.. யார் சொற்பொழிவாளர்களாக உள்ளாரோ அவர்களை பின்பு
பாராட்டுகின்றார்கள். குழந்தை களுக்கு பாபா தினந்தோறும் மிகவும்
அன்போடு புரிய வைக்கின்றார். பாபா அன்புக்கடல் என்று
குழந்தைகளுக்குத் தெரியும். அனைவருக்கும் மிக அன்போடு புரிய
வைக்கின்றார். பாபா ஒரு போதும் கோபம் கொள்வதே இல்லை,
எப்பொழுதும் அன்போடு புரிய வைக்கின்றார். குழந்தை களே ! நீங்கள்
சதோபிரதானமாக இருந்தீர்கள். பிறகு புனர் ஜென்மம் எடுத்துக்
கொண்டே வந்து விட்டீர்கள். நீங்கள் பாரதவாசிகள் தான் உண்மையில்
தேவி- தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள். இதையும் கூட பாபா
கூறுகின்றார். முதன்-முதலில் ஆஸ்தியை பெற்றுக் கொள்ள யார்
வருவார்கள்? யார் கல்பத்திற்கு முன்னால் பெற்றார்களோ, அவர்களே
தான் பாபா ! உங்களைத் தவிர எங்களுக்கு உதவியாளர் வேறு யாரும்
இல்லை என்று சொல்வார்கள். பாபா சங்கமயுகத்தில் தான்
மன்னிக்கின்றார். இராம இராஜ்யம் மேலும் இராவண இராஜ்யம் இங்கு
தான் இருந்தது என்று குழந்தைகள் அறிந்து கொண்டீர்கள். இராவண
இராஜ்யம் இப்பொழுது இருப்பதால் தான் அனைவரும் இராம இராஜ்யம்
வேண்டும் என்று விரும்பு கின்றார்கள். நீங்கள் எப்பொழுது
சிவபாபா என்று சொல்கின்றீர்களோ அப்பொழுது உங்கள் புத்தி
நிராகாரம் (பரந்தாமம்) பக்கம் செல்கின்றது, நிராகாரின் நினைவு
வருகின்றது. ஆத்மா தான் பாபாவை அழைக்கின்றது. பரமாத்மா என்று
ஒருவர் உட்கார்ந்து கேட்கின்றார், அப்படி கிடையாது. நாடகத்தின்
அனுசாரமாக பதீதர்களை பாவனம் ஆக்குவதற் காக நான் உடலில்
வருகின்றேன், என்று பாபா புரியவைக்கின்றார். உங்கள் கூக்குரலைக்
கேட்டு வருகின்றேன் என்று இல்லை. பக்தி எப்பொழுது பூர்த்தி
ஆகின்றதோ அப்பொழுது நான் வந்தே ஆக வேண்டும். இது புரிந்துக்
கொள்ள வேண்டிய விஷயம். சமயம் வரும் பொழுது, குழந்தைகள் அழைக்க
ஆரம்பிக்கின்றீர்கள். அவர் எப்பொழுது வருகின்றார் என்ற விபரம்
எந்த சாஸ்திரங் களிலும் எழுதி வைக்கவில்லை. அவர்கள் கல்பத்தின்
ஆயுளை தவறாக எழுதி வைத்து விட்டார்கள். இந்த படம் ஒவ்வொரு
வீட்டிலும் இருக்க வேண்டும். அதை தினந்தோறும் பார்க்கும் போதும்
இது பாபா, இது தாதா, இது ஆஸ்தி என்று நினைவு வரும். குழந்தைகளே
சதோபிரதானம் ஆவதற்காக என்னை நினைவு செய்தால் கறை நீங்கும்.
இந்த வழியினை பாபா தான் புரிய வைக்கின்றார். இந்த பிரம்மா கூட
நானும் கூட புருஷார்த்தம் செய்கின்றேன் என்று சொல்கின்றார்.
குழந்தைகளே! ஒருவருக்கொருவர் எச்சரிக்கை கொடுத்து முன்னேற்றம்
அடையச் செய்ய வேண்டும். இந்த சித்திரங்களை வைத்து புரிய வைப்பது
மிகவும் சுலபம். சிவபாபா பிரம்மா மூலமாக ஸ்தாபனை செய்து கொண்டு
இருக்கின்றார். உங்கள் முன்னால் மஹாபாரத யுத்தம் நின்று கொண்டு
இருக்கின்றது. இவ்வளவு அநேக தர்மங்கள் அழிந்து விடும், அதற்காக
யுத்தம் அவசியம் தேவை. இந்த விஷயங்களை குழந்தைகள் மறக்கக்
கூடாது. முற்றிலும் இப்பொழுது கலியுகம் ஆழ்ந்த இருளிலில் உள்ளது.
எவ்வளவு அநேக மனிதர்கள் உள்ளனர். அவசியம் வினாசம் ஆகியே தீரும்.
சத்தியயுகத்தில் ஒரு தர்மம் இருக்கும். நிச்சயமாக அவர்கள் 84
பிறவிகளின் சக்கரத்தில் சுற்றி வந்தவகளாக தான் இருப்பார் கள்,
இது தான் இயற்கை. மற்றப்படி மற்ற அனைத்து தர்மங்களூம்
அழிந்துவிடும். பிறகு மீண்டும் ஒரு தர்மம் ஸ்தாபனை ஆகிக்
கொண்டிருக்கிறது. அனைவருக்கும் சத்கதி தாதா (வள்ளல்) ஒரு பாபா
தான். பாபாவிடமிருந்து தான் குழந்தை களுக்கு ஆஸ்தி
கிடைக்கின்றது. நாம் படிக்கும் இந்த படிப்பு எதிர்காலத்திற்கு
21 ஜென்மத்திற்காக படிக்கின்றோம். பகவானின் மஹாவாக்கியம்- நான்
உங்களுக்கு கற்பித்துக் 21 ஜென்மத்திற்காக சொர்க்கத்தின்
எஜமானன் ஆக்குகின்றேன். சூர்யவம்சம், சந்திரவம்ச குலம் நிச்சயம்
ஸ்தாபனை ஆகின்றது. யார் எவ்வளவு புருஷார்த்தம் செய்கின்றார்களோ,
அவர்கள் அந்தளவு உயர்ந்த பதவியை அடை கின்றார்கள், அதனால்
தாய்-தந்தையைப் பின்பற்றுங்கள் என்று சிவபாபா கூறுகின்றார்.
இவர் களை சூட்சுமவதனத்தில், வைகுண்டத்தில் கூட
பார்க்கின்றீர்கள். தன்னைத் தான் பாருங்கள், நாம் கூட மஹாராஜா,
மஹாராணி ஆகின்றோம். வைகுண்டத்தின் சாட்சாத்காரம் கூட ஆகின்றது.
அவசியம் பாரதத்தில் வைகுண்டம் ஸ்ரீ கிருஷ்ணபுரி இருந்தது என்று
ஏற்றுக் கொள் கின்றார்கள். இன்று கம்சபுரி, நாளை கிருஷ்ணபுரி
ஆக இருக்கும். இரவு மாறி பகல் வரும். இங்கே அரைக் கல்பம்
எல்லையற்ற பகல், மேலும் அரைக் கல்பம் எல்லையற்ற இரவு இருக்கும்.
இரவில் அலைந்து திரிந்து ஏமாற்ற மடைகிறார்கள். பிரம்மாவின் இரவு
என்றால், பிராமணர்களின் இரவு ஆகும். பிறகு நீங்கள்
பிராமணர்களிலிருந்து தேவதைகளாக ஆகின்றீர் கள். சத்திய யுகத்தில்
பிராமணர்கள் இருப்பதில்லை, தேவதைகள் தான் இருப்பார்கள்.
பாரதம் துôய்மையான இராஜஸ்தானாக இருந்தது. பிறகு துôய்மையற்ற
இராஜஸ்தான் ஆகி விட்டது என்று குழந்தைகள் தெரிந்துக்
கொண்டீர்கள். பாரதம் எப்பொழுதும் இராஜஸ்தானாகத் தான் இருக்கும்.
இராஜ்யங்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றது, தர்மத்தைச்
சேர்ந்தவர்கள் ஆரம்பத்திலிருந்தே இராஜ்யம் செய்வதில்லை. பகவான்
தான் இராஜ்யம் ஸ்தாபனை செய் கின்றார். பகவான் தான் வந்து
இராஜயோகம் கற்றுக் கொடுக்கின்றார். அவர் தான் நிராகார்
ஞானக்கடல், சுகக் கடல் பாபாவிடமிருந்து நமக்கு ஆஸ்தி
கிடைக்கின்றது என்று நீங்கள் அறிந்து கொண்டீர்கள். அவசியம்
நம்முடைய முயற்சியில் தான் நேரமாகின்றது. யார் எவ்வளவு முயற்சி
செய்கின்றார் களோ, எவ்வளவு பாதை காட்டுகின்றார்களோ. கால தாமதம்
ஆகாது, பாபா சொல்கின்றார்- என்னை நினைவு செய்தால் நீங்கள் பதீத
நிலையிலிருந்து பாவன நிலையை அவசியம் அடைவீர்கள், எவ்வளவு
எளிதான விஷயம். லௌகீகத்தில் தாய்-தந்தை ஞானத்தில்
இருக்கின்றார்கள் என்றால், குழந்தை களையும் அவர்கள் சமம் ஆக்க
வேண்டும். தாய் தந்தை உண்மையான வருமானம் செய்கின்றீர்கள்
என்றால், குழந்தைகளையும் உண்மை யான வருமானம் அடையச் செய்விக்க
வேண்டும். சில குழந்தைகள் நல்ல குழந்தை களாக இருக்கின்றார்கள்.
நாங்கள் ஆன்மீகப் படிப்பை படித்துவிட்டு ஒவ்வொரு வீட்டிற்கும்
போய் செய்தியை சொல்வோம் என்று சொல்கின்றார்கள். நான் கூட
செய்தியைக் கொடுப்பவன் தான் என்று பாபா கூறுகின்றார். இப்பொழுது
வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்ற செய்தி யைக்
கூறுகின்றேன். இந்த உலகம் இப்பொழுது இருப்பதற்குத் தகுதி இல்லை.
என்னை நினைவு செய்யுங்கள் துôய்மை அடைந்து விடலாம். நீங்கள்
பாவனமாக இருந்தீர்கள், இராவணன் வந்து தூய்மை இழக்க
வைத்துவிட்டார், நான் மீண்டும் பாவனம் ஆக்க வந்துள்ளேன். சிறிது
காலத்திற்குப் பிறகு அணுகுண்டு எல்லாம் போடும் போது இது தான்
உண்மையான மஹாபாரத யுத்தம் என்று அறிந்து கொள்வார்கள். அப்பொழுது
அவசியம் பகவானும் இருப்பார். ஆனால் மற்றவர்கள் கீதையின் பகவான்
ஸ்ரீகிருஷ்ணர் தான் என்று நினைக்கின்றார்கள். எவ்வளவு குழப்பம்
அடைகின்றார்கள். குழப்பம் அடையவில்லை என்றால், கடவுள் வர
வேண்டியதின் அவசியம் தான் என்ன? பக்திமார்க்கத்தைத் தான் மறந்து
மறக்க வைக்கும் விளையாட்டு என்று சொல்லப்படுகின்றது. இப்பொழுது
என்னை நினைப்பதால் அனைத்து தவறுகளும் சரியாகிவிடும் என்று பாபா
சொல்கின்றார். முன்னால் தன்னை இந்த உடல் என்று நினைத்தீர்கள்.
இப்பொழுது தன்னை ஆத்மா என்று நினைக்கின்றீர்கள். குழந்தை களே!
ஆத்ம அபிமானி ஆகுங்கள் என்று இந்த எச்சரிக்கையை பாபா தான்
கொடுக்கின்றார். இங்கே நீங்கள் பாபாவிற்கு முன்பு
அமர்ந்துள்ளீர்கள். இங்கே சென்டர்களில் சிவபாபா இப்படிச்
கூறுகின்றார் என்று குழந்தைகள் புரிய வைக்கின்றார் கள். இங்கே
நேரடியாக நான் ஆத்மாக்களிடம் அமர்ந்து பேசுகின்றேன் என்று பாபா
கூறுகின்றார். பாபா இவர் மூலமாக நமக்கு புரிய வைக்கின்றார்
என்று நீங்கள் புரிந்து கொண்டீர்கள். இது தான் உண்மையான
கல்யாணகாரி திருவிழா ஆகும். பாபா நிரந்தரமாக என்னை நினைவு
செய்யுங்கள் என்று சொல்கின்றார். பாபாவிடமிருந்து நாம்
சொர்க்கத்தின் ஆஸ்தியை அடைய வேண்டும். பாபா மற்றும் சொர்க்கம்
இரண்டையும் நினைவு செய்ய வேண்டும். எந்த ஒரு விகர்மமும் செய்ய
வேண்டாம். நீங்கள் இப்பொழுது விகர்மம் செய்தீர்கள் என்றால்
நுôறு மடங்கு தண்டனை கிடைக்கும். விகர்மம் செய்ய வைப்பது மாயா,
அதன் மீது வெற்றி அடைய வேண்டும். ஆகையால் தான் மஹாவீர் ஹனுமான்
கதை உள்ளது. நீங்கள் ஹனுமான் மஹாவீர் அல்லவா? நாம்
பாபாவினுடையவர்களாக ஆகி விட்டோம். மாயாவிடம் தோல்வி அடைய
முடியாது. அதனால் பாபாவை நினைத்து-நினைத்து சதோபிரதான்,
விகர்மாஜீத் ஆகி விடுவீர் கள். ஆகவில்லை என்றால் பதவி குறைந்து
விடும். புருஷார்த்தி குழந்தைகள் தன்னுடைய வாழ்க்கையின் மீது
இரக்கப்படுவார்கள். என்ன ஆனாலும் சரி, நினைவு யாத்திரையில்
இருப்பார்கள், ஆடாது, அசையாது, நிலையாக இருப்பார்கள். வினாசம்
ஆகியே தீரும். எல்லோருடைய பெரியப்பா, சித்தப்பா, மாமா, குரு,
அனைவரும் அழிந்து விடுவார்கள். நான் உங்களை என்னுடன் அழைத்துச்
செல்கின்றேன் என்று சத்குரு சொல்கின்றார். மனிதர்கள் முற்றிலும்
இருட்டில் உள்ளார்கள், பாபா நம்மை தன்னுடன் அழைத்துச் செல்வார்
என்று நீங்கள் அறிந்து கொண்டீர்கள். காலன் சாப்பிட்டுவிட்டான்-
என்று சொல்கின்றார்கள் அல்லவா? ஆனால் நான் உங்களை சாந்திதாமம்
அழைத்துச் செல்கின்றேன். ஆத்மா இந்த சரீரத்தை விட்டுப்
போய்விடும். காலன் யாரும் கொண்டு போவதில்லை, ஆத்மா தான் இந்த
உடலை விட்டு வெளியில் போக வேண்டி உள்ளது. இப்பொழுது நான் சுயம்
வந்துள்ளேன்- உங்களைக் கூடவே அழைத்துச் செல்கின்றேன். பாபா
மரணத்தைக் கொடுப்பதற்காகவா வந்துள்ளார்? இல்லை. நீங்கள் பழைய
சரீரத்தை விட வேண்டும். ஆத்மா தமோபிரதானத்திலிருந்து சதோபிர
தானம் ஆக வேண்டும். இப்பொழுது 5 தத்துவம் கூட தமோபிரதானமாக
உள்ளது, ஆகையால் உடல் கூட அப்படி கிடைக் கின்றது. அங்கே
தத்துவம் சதோபிரதானமாக இருக்கும். அதனால் உடல் கூட வெள்ளையாக
இருக்கும். நான் மீண்டும் ஆதி சனாதன தேவி-தேவதா தர்மத்தை
ஸ்தாபனை செய்கின்றேன் என்று பாபா சொல்கின்றார். நீங்கள் தான்
84 பிறவிகளை அனுபவிக்கின்றீர்கள். நீங்கள் உங்கள் தர்மத்தை
மறந்து விட்டீர்கள். மேலும் மற்றவர்கள் தங்களது தர்மத்தை
மறப்பதில்லை. நீங்கள் இப்பொழுது அறிந்து கொண்டீர்கள் நாம் உண்மை
யில் தேவி-தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள் என்று. பாபா கல்ப-
கல்பமாக உங்களுக்குத் தான் புரிய வைக்கின்றார். நீங்கள்
மற்றவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். இப்பொழுது 84 முழு
சக்கரம் பூர்த்தி ஆகின்றது, வினாசம் முன்னால் நிற்கின்றது.
சொர்க்கத்தின் எஜமானன் ஆவதற்காக நீங்கள் தன்னை தகுதி ஆக்கிக்
கொள்ள வேண்டும். இது பாபாவின் நினைவால் தான் ஆக முடியும்.
அதிகாலையில் எழுந்து பாபாவை நினைக்க வேண்டும். பாபா அற்புதம்-
நீங்கள் எப்படி வருகின்றீர்கள். கீதையில் கிருஷ்ணருடைய பெயரைப்
போட்டு விட்டார்கள். ஆனால் நீங்கள் முன்னால் அமர்ந்து பேசிக்
கொண்டு இருக்கின்றீர்கள், இதை இப்பொழுது நீங்கள் மட்டும் தான்
அறிவீர்கள். அவை அனைத்தும் பக்தி மார்க்கத்தில் கேட்கப்பட்ட
விஷயங்கள். இப்பொழுது ஆத்மாக்களாகிய நமக்கு பாபா கிடைத்துள்ளார்,
ஆத்மாக்களின் தந்தை வந்து சந்திக்கின்றார் என்றால், அன்பினால்
தான் வந்து சந்திக்கின்றார். குழந்தைகள் பாபாவுடன் மிகவும்
அன்போடு சந்திக்கின்றீர்கள். இங்கே அவர் நிராகாரகாரமாக தந்தை
உள்ளார். அதனால் தான் இவரை சந்திக்கும் போதெல்லாம் சிவபாபாவை
நினைத்து சந்தியுங் கள் என்று பாபா எப்பொழுதும் சொல்கின்றார்.
மனிதர்கள் ஒன்றுமே அறிவதே இல்லை. உங்களில் கூட ஒரு சிலர் தான்
அறிகின்றார்கள், என்னுடையவர் ஆகிவிட்டு பின்பு மறந்து
விடுகிறார்கள். தேக அபிமானத்தில் வந்து விடுகின்றார்கள். பாபா
நான் உங்களுடையவன் ஆகி விட்டேன் என்று உறுதிமொழி கூட
கொடுக்கின்றார்கள். ஆண் ஆனாலும், பெண் ஆனாலும் சரி, ஆத்மா தான்
சொல்கின்றது. ஆண் உடலில் இருந்தால் ஆண் நான் உங்களுடையவன் ஆகி
விட்டேன் என்று சொல்கின்றார். பெண்ணாகிய நான் கூட உங்களுடையவள்
ஆகி விட்டேன் என்று சொல்கின்றார். பாபா நாங்கள் உங்களிடமிருந்து
முழுமையாக ஆஸ்தியை அடைவோம் முழுவதுமாக உங்களை நினைப்போம்,
பாபாவை நினைக்காமல் பாவங்கள் நீங்காது, தமோபிர தானத்தில்
இருந்து சதோபிரதானம் ஆக முடியாது. சத்தியயுகத்தில் உங்களுக்கு
அகண்ட உறுதியான, சுகம்-சாந்தி, செல்வம் நிறைந்த 21
ஜென்மத்திற்கான இராஜ்யம் கிடைக்கின்றது. சொர்க்கத்தைப்
படைக்கும் பாபா அவசியம் நமக்கு ஆஸ்தியைக் கொடுப்பார்.
பரபிரம்மத்தில் வசிப்பவர் பரமாத்மா என்று புகழ் பாடப்படுகின்றது.
அவர் ஒரு முறை தான் வருகின்றார். இது கூட புரிந்து கொள்ள
வேண்டிய விஷயம் அல்லவா? சிலர் புரிந்து கொள்வதே இல்லை, சிறிது
நாள் போனால் கண்கள் திறக்கும். மிகப் பெரிய சண்டை நடக்கும்?
உண்மையில் யக்ஞம் படைக்கப்பட்டுள்ளது. இதில் யுத்தம் கூட
நடக்கும். இந்த யக்ஞத்தைப் பற்றி யாருக்கும் தெரியாது. இந்த
ருத்ர ஞான யக்ஞத்தைப் படைத்தார் என்றால் வினாசம் ஆகும். அவர்கள்
யக்ஞம் படைக்கின்றார்கள் வினாசம் ஆகக் கூடாது என்று.
சாந்திக்காக செய்கின்றார்கள். இந்த யக்ஞத்தை மீண்டும் படைப்பார்.
அவர்களுக்கு வினாசம் ஆகுமா? பின்பு என்ன ஆகும் இது பற்றி
தெரியாது. இப்பொழுது குழந்தைகளான நீங்களும் முழு உலகத்தின்
ஆதி-மத்தியம்-முடிவின் அனைத்து விஷயங்களையும் அறிந்துள்ளீர்கள்.
அனைவரின் எல்லையற்ற ஜென்மக் கதையையும் அறிந்துள்ளீர்கள்.
பரமபிதா பரமாத்மாவின் வாழ்க்கை வரலாறு சொல்ல முடியும் என்று
சொல்ல முடியாது. பரமாத்மாவைத் தான் அனைவரும் அழைக்கின்றார்கள்
அல்லவா? அடிக்கடி நினைக்கின்றார்கள். சொல்கின்றார்கள் அல்லவா !
குழந்தையை பகவான் தான் கொடுத்தார், இது செய்தார் அது செய்தார்...
யாருடைய பொருளோ (குழந்தை இறந்து விட்டால்) அவரே எடுத்துக்
கொண்டார் என்று சிலர் நினைக்கின்றார்கள். அப்படியும் சில
புத்திசாலிகள் இருக்கின்றார்கள். அநேகவிதமான மனிதர்கள்
இருக்கின்றார்கள். இப்பொழுது உங்களுக்கு பாபா கிடைத்துள்ளார்
என்றால், பாபாவைத் தான் நினைக்க வேண்டும். பாபாவின் நினைவில்
தான் வருமானம் உள்ளது. நீங்கள் விஷ்ணுபுரிக்கு எஜமானன்
ஆகிவிடுவீர்கள். நீங்கள் சத்திய யுகத்தில் இருந்து கலியுகம் வரை
முழு சக்கரத்தையும் அறிந்துள்ளீர்கள். பாபாவின் புத்தியில்
உள்ளது போலவே, உங்களுடைய புத்தியிலும் உள்ளது . அதனால் தான்
அவரை ஞானக்கடல், ஞானம் நிறைந்தவர் என்று சொல்லப் படுகின்றது.
இப்பொழுது நீங்கள் பாபாவிடமிருந்து ஆஸ்தியை அடைந்து கொண்டு
இருக்கின்றீர்கள். நீங்கள் குழந்தைகள் உறுதியாக, நிலையாக
இருக்க வேண்டும். மாயா வந்து அடிக்கடி அசைத்துப் பார்த்தாலும்.
தொட்டால் சினுங்கி போல் இருக்கக் கூடாது. சமயம் நெருங்கி வந்து
கொண்டு இருக்கின்றது, பிறகு நீங்கள் நம்முடைய புருஷார்த்தம்
முடிந்து விட்டது என்று பார்ப்பீர்கள். கடைசி நேரம்
வந்துவிட்டது. நல்லது.
இனிமையிலும் இனிமையான குழந்தைகளே தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் ! மேலும் காலை வணக்கங்கள். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) ஆன்மீகக் கல்வியைக் கற்று, உண்மையான வருமானம் செய்து, மேலும்
செய்விக்கவும் வேண்டும். வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற
செய்தியை அனைவருக்கும் கொடுக்க வேண்டும். இப்பொழுது எந்த
விகர்மமும் செய்யக் கூடாது.
2) அதிகாலையில் எழுந்து பாபாவை மிகவும் அன்போடு நினைக்க
வேண்டும். சின்ன-சின்ன விஷயங்களுக்கு எல்லாம் தொட்டால் சினுங்கி
ஆகக் கூடாது. உங்கள் நிலை ஆடாது-அசையாது இருக்க வேண்டும்.
வரதானம்:
ஞானத்தின் வெளிச்சம் மற்றும் சக்தி மூலமாக தனது
அதிகாரத்தை எழுப்பி விடக்கூடிய சதா வெற்றியின் மூர்த்தி
ஆவீர்களாக.
எந்த குழந்தைகள் ஞானத்தின் பிரகாசம் மற்றும் சக்தி மூலமாக முதல்
இடை கடையை அறிந்து முயற்சி செய்கிறார்களோ அவர்களுக்கு அவசியம்
வெற்றி கிடைக்கிறது. வெற்றி கிடைப்பது கூட அதிர்ஷ்டத்தின்
அறிகுறி ஆகும். ஞானத்தில் நிறைந்தவர் ஆவதுதான் அதிர்ஷ்டத்தை
எழுப்புவதற்கான சாதனம் ஆகும். ஞானம் என்பது படைப்பவர் மற்றும்
படைப்பு பற்றியது மட்டுமல்ல.ஆனால் ஞானம் நிரம்பியவர் என்றால்
ஒவ்வொரு எண்ணம், ஒவ்வொரு வார்த்தை மற்றும் ஒவ்வொரு செயலிலும்
ஞான சொரூபமாக இருக்க வேண்டும். அப்பொழுது வெற்றியின் மூர்த்தி
ஆகி விடுவீர்கள். ஒருவேளை முயற்சி சரியாக இருந்தும் கூட வெற்றி
தென்படவில்லை என்றால் இது தோல்வி அல்ல, ஆனால் பரிபக்குவ நிலை
அடைவதற்கான சாதனம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
சுலோகன்:
விலகியவராக இருந்து கர்ம இந்திரியங்கள் மூலமாக கர்மம்
செய்வித்தீர்கள் என்றால் கர்மாதீத நிலையின் அனுபவத்தை எளிதாக
செய்ய கூடியவர்களாக இருப்பீர்கள்.
அவ்யக்த சமிக்ஞை: ஜ்வாலா சொரூப நிலையில் நிலைத்து இருந்து
சக்திசாலி நிலையின் அனுபவம் செய்யுங்கள்.
யோகத்தில் அமரும் பொழுது உள்ளடக்கும் சக்தியை ஒரு நொடியில்
பயன்படுத்துங்கள். சேவையின் சங்கல்பம் கூட உள்ளடங்கி போய் விட
வேண்டும். ஸ்டாப் நிறுத்து என்று கூறிய உடனேயே நின்று விட
வேண்டும் ஃபுல் பிரேக் முழுமையாக நின்று விட வேண்டும். தளர்ந்த
பிரேக் அல்ல. ஒரு நொடிக்கு பதிலாக அதிக நேரம் பிடித்து
விடுகிறது என்றால் உள்ளடக்கும் சக்தி பலவீனமாக இருக்கிறது என்றே
கூறுவார்கள்.