21-08-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! தந்தை இனிமையிலும்
இனிமையான சாக்ரீனாக இருக்கின்றார், ஆகையால் அனைத்து வீணான
விசயங்களையும் விட்டு விட்டு அந்த தந்தையை நினைவு செய்தால் (நீங்களும்)
இனிமையான சாக்ரீனாக ஆகி விடுவீர்கள்.
கேள்வி:
நீங்கள் தந்தையிடத்தில் ஸ்ரீமத்
பெற்று தனக்குள் எந்த சம்ஸ்காரத்தை நிறைத்துக்
கொண்டிருக்கிறீர்கள்?
பதில்:
எதிர்காலத்தில் அமைச்சர்களின்றி
முழு உலகையும் இராஜ்யம் செய்யும் சம்ஸ்காரம் (ஆளுமை திறன்).
நீங்கள் இங்கு வந்திருப்பதே எதிர்காலத்தில் இராஜ்யம்
நடத்துவதற்கான ஸ்ரீமத் பெறுவதற்காக! தந்தை உங்களுக்கு அரைக்
கல்பம் வரை யாரிடத்திலும் ஆலோசனை பெற வேண்டிய அவசியமேற்படாதவாறு
ஸ்ரீமத் கொடுக்கின்றார். யாருடைய புத்தி பலவீனமாக இருக்கிறதோ
அவர்கள் தான் ஆலோசனை பெற வேண்டியிருக்கும்.
பாடல்:
நீங்கள் தான் தாயாக .........
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் பாட்டு கேட்டீர்கள்.
இனிமை யிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளே! என்று கூறியது யார்?
கண்டிப்பாக ஆன்மீகத் தந்தை தான் அவ்வாறு கூற முடியும்.
இனிமையிலும் இனிமையான, ஆன்மீக குழந்தைகள் இப்போது எதிரில்
அமர்ந்திருக்கிறீர்கள். மேலும் மிக அன்பாக தந்தை புரிய வைத்துக்
கொண்டி ருக்கின்றார். அனைவருக்கும் சுகம், சாந்தி கொடுக்கக்
கூடியவர் அல்லது அனைவரையும் துக்கத்திலிருந்து விடுவிக்கக்
கூடியவர் உலகில் ஆன்மீக தந்தையைத் தவிர வேறு யாரு மில்லை என்பதை
இப்போது நீங்கள் அறிவீர்கள். அதனால் தான் துக்கத்தின் போது
தந்தையை எல்லோரும் நினைவு செய்து கொண்டிருக்கின்றனர்.
குழந்தைகளாகிய நீங்கள் எதிரில் அமர்ந்திருக்கிறீர்கள். பாபா
நம்மை சுகதாமத்திற்குத் தகுதியானவர்களாக ஆக்கிக் கொண்டி
ருக்கின்றார் என்பதை அறிவீர்கள். சதா காலத்திற்கும்
சுகதாமத்திற்கு எஜமானர்களாக ஆக்கக் கூடிய தந்தையின் எதிரில்
வந்திருக்கிறீர்கள். எதிரில் கேட்பதற்கும், தூரத்தில் இருந்து
கேட்பதற்கும் அதிக வித்தியாசம் இருப்பதை நீங்கள்
புரிந்திருக்கிறீர்கள். மதுவனத்தில் எதிரில் வருகிறீர்கள்,
மதுவனம் மிகவும் பிரபலமானது. மதுவனம், பிருந்தாவனத்தில் அவர்கள்
கிருஷ்ணரின் சித்திரத்தைக் காண்பித்திருக்கின்றனர். ஆனால்
கிருஷ்ணர் கிடையவே கிடையாது. இங்கு நிராகார தந்தை
குழந்தைகளாகிய உங்களை சந்திக்கின்றார். நீங்கள் உங்களை அடிக்கடி
ஆத்மா என்ற நிச்சயம் செய்து கொள்ள வேண்டும். நான் ஆத்மா, தந்தை
யிடமிருந்து ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கிறேன். முழு கல்பத்திலும்
இந்த ஒரே ஒரு சமயத்தில் தான் வருகின்றார். இது கல்பத்தின்
மங்களகரமான சங்கமயுகமாகும். இதற்கு புருஷோத்தம் என்று பெயர்
வைக்கப் பட்டிருக்கிறது. இந்த சங்கமயுகத்தில் தான் அனைத்து
மனிதர்களும் உத்தமமானவர்களாக ஆகின்றனர். இப்போது அனைத்து மனித
ஆத்மாக்களும் தமோ பிரதானமாக இருக்கின்றனர், பிறகு சதோ
பிரதானமாக ஆகின்றனர். சதோ பிரதானமாக இருக்கும் போது மனிதர்கள்
உத்தமமானவர்களாக இருக்கின்றனர். தமோ பிரதானமாக ஆவதனால்
மனிதர்கள் கீழானவர் களாக ஆகிவிடுகின்றனர். ஆக ஆத்மாக்களுக்கு
தந்தை எதிரில் அமர்ந்து புரிய வைக்கின்றார். முழு நடிப்பும்
ஆத்மா தான் நடிக்கிறதே தவிர சரீரம் அல்ல. ஆத்மா மற்றும் சரீரம்
இரண்டும் சேர்ந்து விடும் போது தான் நடிப்பு நடிக்கிறது.
ஆத்மாக் களாகிய நாம் உண்மையில் நிராகார உலகம் அல்லது
சாந்திதாமத்தில் வசிக்கக் கூடியவர்கள் என்பது உங்களது
புத்தியில் வந்து விட்டது, இது யாருக்கும் தெரியாது. சுயமும்
புரிந்து கொள்வது கிடையாது, புரிய வைக்கவும் முடியாது. உங்களது
புத்தி பூட்டு இப்போது திறக்கப்பட்டு விட்டது. உண்மையில்
ஆத்மாக்கள் பரந்தாமத்தில் வசித்தன என்பதை நீங்கள் புரிந்து
கொண்டீர்கள். அது நிராகார உலகமாகும். இது சாகார உலகமாகும்.
இங்கு நாம் அனைவரும் ஆத்மாக்கள், பாகத்தை ஏற்று நடிக்கும்
நடிகர்கள். முதன் முதலில் நாம் தான் நடிக்க வருகிறோம். பிறகு
வரிசைக்கிரமமாக வந்து கொண்டிருப்பர். அனைத்து நடிகர்களும்
ஒன்றாக வந்து விட மாட்டார்கள். வித விதமான நடிகர்கள் வந்து
கொண்டிருப்பர். எப்போது நாடகம் முடிவடைகிறதோ அப்போது தான்
அனைவரும் ஒன்றாகச் சேருவர். இப்போது உங்களுக்கு அறிமுகம்
கிடைத்து விட்டது, உண்மையில் ஆத்மா சாந்திதாமத்தில் வசிக்கக்
கூடியது, இங்கு நடிப்பதற்காக வருகிறது. தந்தை முழு நேரமும்
நடிக்க வருவது கிடையாது. நாம் தான் நடிப்பு நடித்து நடித்து தமோ
பிரதானமாக ஆகிவிடுகிறோம். இப்போது குழந்தை களாகிய உங்களுக்கு
எதிரில் இருந்து கேட்கும் போது மிகுந்த போதை ஏற்படுகிறது. இந்த
அளவு போதை முரளி படிக்கும் போது ஏற்படுவது கிடையாது. இங்கு
எதிரில் இருக்கிறீர்கள் அல்லவா! ஆக முதலில் ஆதி சநாதன தேவி
தேவதா தர்மத்தைச் சார்ந்தவர்கள் தான் வருகின்றனர். பாரதம் தேவ
தேவதைகள் வாழ்ந்த பூமியாக இருந்தது, இப்போது கிடையாது என்பதை
நீங்கள் அறிவீர்கள். சித்திரங்களைப் பார்க்கிறீர்கள் எனில்
அவசியம் இருந்திருக் கின்றனர். முதன் முதலில் நாம் தேவி
தேவதைகளாக இருந்தோம், தனது பாகத்தை நினைவு செய்வீர்களா? அல்லது
மறந்து விடுவீர்களா? தந்தை கூறுகின்றார் - நீங்கள் இந்த
பாகத்தில் நடித்திருந்தீர்கள், இது நாடகம் ஆகும். புது உலகம்
பிறகு பழையதாக ஆகிறது. முதன் முதலில் மேலிருந்து ஆத்மாக்கள்
வரும் போது அது தங்கயுகத்தில் தான் வருகிறது. இந்த அனைத்து
விசயங்களும் இப்போது உங்களது புத்தியில் இருக்கிறது. சத்யுக
ஆரம்பத்தில் நடிப்பு நடிப்பதற்காக நீங்கள் தான்
வந்திருந்தீர்கள். நீங்கள் உலகிற்கு எஜமானர் மகாராஜா, மகாராணி
களாக இருந்தீர்கள். உங்களது இராஜ்யம் இருந்தது. இப்போது
இராஜ்யம் கிடையாது. நாம் எப்படி இராஜ்யம் செய்வது? என்பதை
இப்போது கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அங்கு அமைச்சர் கள்
இருக்கமாட்டார்கள். ஆலோசனை கொடுப்பவர்கள் அவசியமில்லை. அவர்கள்
ஸ்ரீமத் மூலம் சிரேஷ்டத்திலும் சிரேஷ்டமானவர்களாக
ஆகிவிடுகின்றனர், பிறகு அவர்கள் மற்றவர் களிடமிருந்து ஆலோசனை
பெற வேண்டிய அவசியமிருக்காது. ஒருவேளை யாரிடத்திலாவது ஆலோசனை
பெற்றால் இவர்களது புத்தி பலவீனமாக இருக்கிறது என்பதை புரிந்து
கொள்ளுங்கள். இப்போது பெறக் கூடிய ஸ்ரீமத் சத்யுகத்திலும்
நிலைத்து இருக்கும். இப்போது உங்களது ஆத்மா புத்துணர்வு
அடைந்துக் கொண்டிருக்கிறது. இப்போது குழந்தைகளாகிய நீங்கள்
ஆத்ம அபிமானிகளாக ஆக வேண்டும். சாந்திதாமத்திலிருந்து வந்து
இங்கு நீங்கள் பேசுபவர்களாக ஆகிவிட்டீர்கள். பேசாமல் காரியம்
செய்ய முடியாது. இது மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும்.
எவ்வாறு தந்தையிடம் முழு ஞானம் இருக்கிறதோ, அதே போன்று இப்போது
உங்களது ஆத்மா விலும் ஞானம் இருக்கிறது. நாம் ஒரு சரீரத்தை
விடுத்து, சம்ஸ்காரத்தின் படி மறுபிறவி எடுக்கிறோம் என்று ஆத்மா
கூறுகிறது. மறுபிறப்பும் அவசியம் இருக்கிறது. ஆத்மாவிற்கு என்ன
பாகம் கிடைத்திருக்கிறதோ அது நடித்துக் கொண்டே இருக்கிறது,
சம்ஸ்காரத்தின் படி மற்றொன்றை எடுக்கிறது. ஆத்மாவின் தூய்மையின்
தரம் (அளவு) நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது.
தூய்மையின்மை என்ற வார்த்தை துவாபர யுகத்திற்குப் பிறகு
பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் சிறிது வித்தியாசம் அவசியம்
இருக்கவே செய்யும். நீங்கள் புது கட்டடம் கட்டுங்கள், ஒரு
மாதத்திற்குப் பிறகு அவசியம் சிறிதாவது வித்தியாசம் ஏற்படும்.
பாபா நமக்கு ஆஸ்தி கொடுக்கின்றார் என்பதை இப்போது நீங்கள்
புரிந்திருக்கிறீர்கள். நான் வந்திருப்பதே குழந்தைகளாகிய
உங்களுக்கு ஆஸ்தி கொடுப்பதற்காக என்று தந்தை கூறுகின்றார்.
எந்த அளவிற்கு யார் முயற்சி செய்கிறார்களோ அந்த அளவிற்கு பதவி
அடைவார்கள். தந்தையிடம் எந்த வேறுபாடும் கிடையாது. நான்
ஆத்மாக்களுக்கு கற்பிக் கிறேன் என்பதை தந்தை அறிவார். ஒவ்வொரு
ஆத்மாவும் அவரவர்களுக்காக முயற்சி செய்கின்றன. ஆண், பெண் என்ற
பார்வை இங்கு கிடையாது. குழந்தைகள் நீங்கள் அனைவரும் எல்லையற்ற
தந்தையிடம் ஆஸ்தியடைந்து கொண்டிருக்கிறீர்கள். அனைத்து
ஆத்மாக்களும் சகோதரர்கள், அவர்களுக்கு தந்தை கற்பிக்கின்றார்,
ஆஸ்தி கொடுக்கின்றார். தந்தை தான் ஆன்மீக குழந்தைகளிடத்தில்
உரையாடல் செய்கின்றார் - ஹே, செல்லமான, இனிமையான, அன்பான
குழந்தைகளே! நீங்கள் அதிக காலம் நடிப்பு நடித்து இப்போது ஆஸ்தி
அடைவதற் காக மீண்டும் வந்து சந்திக்கின்றீர்கள். இதுவும்
நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. ஆரம்பத் திலிருந்து (நடிப்பின்)
பாகம் பதிவாகியிருக்கிறது. நடிகர்களாகிய நீங்கள் நடிப்பு
நடித்துக் கொண்டே இருக்கிறீர்கள். ஆத்மா அழிவற்றது, இதில்
அழிவற்ற பாகம் பதிவாகியிருக்கிறது. சரீரம் மாறிக் கொண்டே
இருக்கும். மற்றபடி ஆத்மாவானது தூய்மையான நிலையிலிருந்து
அசுத்தமாக மாறுகிறது. சத்யுகத்தில் தூய்மையாக இருக்கிறது. இது
அசுத்தமான உலகம் என்று கூறப்படுகிறது. இப்போது சுகதாமம் ஸ்தாபனை
ஆகிறது. மற்ற அனைத்து ஆத்மாக்களும் முக்தி தாமத்தில் இருக்கும்.
இப்போது இந்த எல்லையற்ற நாடகம் முடிவடையும் நிலையில் இருக்கிறது.
அனைத்து ஆத்மாக்களும் கொசுக்களைப் போன்று செல்வார்கள். இந்த
நேரத்தில் தூய்மையே இல்லாத உலகில் எந்த ஆத்மா வந்தாலும் அதற்கு
என்ன மதிப்பு இருக்கும்! யார் முதன் முதலில் புது உலகில்
வருகிறார்களோ அவர்களுக்குத் தான் மதிப்பு இருக்கும். புது உலகம்
இருந்தது, அது இப்போது பழையதாக ஆகிவிட்டது. புது உலகில்
தேவதைகள் இருந்தனர், அங்கு துக்கத்தின் பெயர் கிடையாது. இங்கு
அளவற்ற துக்கம் இருக்கிறது. தந்தை வந்து துக்கம் நிறைந்த பழைய
உலகிலிருந்து விடுவிக்கின்றார். இந்த பழைய உலகம் அவசியம் மாற
வேண்டும். எவ்வாறு பகலுக்குப் பின் இரவு, இரவிற்குப் பின் பகல்
வருகிறதோ அது போன்று! நாம் சத்யுகத்திற்கு எஜமானர்களாக ஆவோம்
என்பதை நீங்கள் புரிந்திருக் கிறீர்கள், ஆக நாம் ஏன் ஆத்மா
என்று நிச்சம் செய்து தந்தையை நினைவு செய்யக் கூடாது! சிறிதாவது
முயற்சி செய்ய வேண்டும். இராஜ்யம் அடைவது எளிய விசயம் கிடையாது,
தந்தையை நினைவு செய்ய வேண்டும். மாயையின் அதிசயம் என்னவெனில்
அடிக்கடி உங்களை மறக்க வைத்து விடுகிறது. இதற்கு உபாயம்
உருவாக்க வேண்டும். என்னுடையவர் ஆவதன் மூலம் நினைவு நிலையாக
இருக்கும் என்பது கிடையாது. மற்றபடி என்ன முயற்சி செய்வீர்கள்?
எதுவரை வாழ்வீர்களோ அதுவரை முயற்சி செய்ய வேண்டும். ஞான
அமிர்தம் பருகிக் கொண்டே இருக்க வேண்டும். இது நமது கடைசிப்
பிறப்பு என்பதையும் புரிந்திருக்கிறீர்கள். இந்த சரீர உணர்வை
நீக்கி ஆத்ம அபிமானியாக ஆக வேண்டும். இல்லற விவகாரத்திலும்
இருக்க வேண்டும், அவசியம் முயற்சி செய்ய வேண்டும். தன்னை ஆத்மா
என்று நிச்சயம் செய்து தந்தையை நினைவு செய்தால் போதும். தாயும்
நீயே, தந்தையும் நீயே........ இவை அனைத்தும் பக்தி
மார்க்கத்தின் மகிமை ஆகும். நீங்கள் ஒரே ஒரு தந்தையை மட்டுமே
நினைவு செய்ய வேண்டும். நான் ஒருவன் தான் சாக்ரீனாக இருக்கிறேன்,
நீங்களும் மற்ற அனைத்து விசயங்களையும் விடுத்து மிக இனிமையான
சாக்ரீனாக ஆகிவிடுங்கள். இப்போது உங்களது ஆத்மா தமோபிரதானமாக
இருக்கிறது, அதை சதோபிரதானமாக ஆக்குவதற்கு நினைவு யாத்திரையில்
இருங்கள். தந்தையிடமிருந்து சுகத்தின் ஆஸ்தி அடையுங்கள் என்பதை
மட்டுமே அனைவருக்கும் கூறுங்கள். சத்யுகத்தில் தான் சுகம்
இருக்கும். சுக தாமத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவர் தந்தை,
தந்தையை நினைவு செய்வது மிகவும் எளிது. ஆனால் மாயையின்
எதிர்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆகையால் முயற்சி செய்து என்னை
நினைவு செய்தால் கறைகள் நீங்கி விடும். விநாடியில் ஜீவன்முக்தி
என்று பாடப் பட்டிருக்கிறது.
இந்த நாடகத்தில் ஒவ்வொருவரும் அவரவர்களது பாகத்தை திரும்பவும்
நடித்தே ஆக வேண்டும். இந்த நாடகத்தில் அனைவரையும் விட மிக அதிக
பாகம் நம்முடையது ஆகும். அனைவரையும் விட அதிக சுகம் நமக்குத்
தான் கிடைக்கும். உங்களது தேவி தேவதா தர்மம் அதிக சுகம்
கொடுக்கக் கூடியது என்று தந்தை கூறுகின்றார். மற்ற அனைவரும்
கணக்கு வழக்குகளை முடித்துக் கொண்டு சாந்திதாமத்திற்குச் சென்று
விடுவார்கள். விரிவான விளக்கத்தில் நாம் ஏன் செல்ல வேண்டும்?
அனைவரையும் திரும்பி அழைத்துச் செல்லத் தான் தந்தை
வந்திருக்கின்றார். கொசுக்களைப் போன்று அனைவரையும் அழைத்துச்
செல்வார். சரீரம் அழிந்து விடும். மற்றபடி ஆத்மா அழிவற்றது, அது
கணக்கு வழக்குகளை முடித்துக் கொண்டு சென்று விடும். ஆத்மாவை
நெருப்பில் போடுவதன் மூலம் தூய்மையாக ஆகிவிடும் என்பது கிடையாது.
ஆத்மா நினைவு என்ற யோகாவின் மூலம் தான் தூய்மையாக ஆக வேண்டும்.
இது யோக அக்னியாகும். சீதை நெருப்பிலிருந்து வெளி வந்தார் என்று
அவர்கள் நாடகத்தை உருவாக்கி விட்டனர். எந்த ஒருவரும்
நெருப்பிலிருந்து வெளிப்பட முடியாது. சீதைகளாகிய நீங்கள்
அனைவரும் இந்த நேரத்தில் தூய்மையின்றி இருக்கிறீர்கள், இராவண
இராஜ்யத்தில் இருக்கிறீர்கள் என்பதை தந்தை புரிய வைக்கின்றார்.
இப்போது ஒரு தந்தையின் நினைவின் மூலம் நீங்கள் தூய்மை ஆக
வேண்டும். இராமர் ஒரே ஒருவர் தான். அக்னி என்ற வார்த்தையைக்
கேட்டதும் நெருப்பிலிருந்து வெளிப்பட்டார் என்று நினைக்கின்றனர்.
யோக அக்னி எங்கு இருக்கிறது! அந்த நெருப்பு எங்கு இருக்கிறது!
ஆத்மா பரமாத்மாவிடம் யோகா வைத்துக் கொள்வதன் மூலம் தான்
தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாக ஆக முடியும். இரவு பகல்
வித்தியாசம் இருக்கிறது. ஆத்மாக்கள் அனைவரும் சீதைகள் ஆகும்.
இராவணனின் சிறையில் சோகவனத்தில் இருக்கின்றார்கள்.
இங்கிருக்கும் சுகம் காக்கை எச்சத்திற்குச் சமமானது.
சொர்கத்தின் சுகம் அளவற்றது. ஆக குழந்தைகள் ஞான
இரத்தினங்களினால் பையை நிறைத்துக் கொள்ள வேண்டும். எந்த வகையான
சந்தேகமும் வரக் கூடாது. தேக அபிமானம் வருவதன் மூலம் பிறகு பல
வகையான கேள்விகள் எழுகின்றன. பிறகு தந்தை என்ன காரியம்
கொடுக்கிறாரோ அதை செய்வது கிடையாது. மூல விசயம் நாம் தூய்மை
யின்மையிலிருந்து தூய்மையாக ஆவது. மற்ற எந்த சங்கல்பமும்
எழுப்ப வேண்டிய அவசியம் கிடையாது. இது பதீத உலகம், அது
தூய்மையான உலகமாகும். தூய்மை ஆவது தான் முக்கிய விசயம். யார்
தூய்மையாக ஆக்க முடியும்? என்று எதுவும் தெரியாது. நீங்கள்
தூய்மையற்றவர் களாக இருக்கிறீர்கள் என்று கூறினால் கோபித்துக்
கொள்வார்கள். தன்னை விகாரி என்று யாரும் புரிந்து கொள்வது
கிடையாது. இராமர்-சீதை, லெட்சுமி-நாராயணன் போன்றவர்களுக்கும்
குழந்தைகள் இருந்தனர் என்று கூறுவர். அங்கும் குழந்தைகள் பிறக்
கின்றனர், ஆனால் அது விகாரமற்ற உலகம் என்று கூறப்படுகிறது
என்பதை மறந்து விட்டனர். அது சிவாலயமாகும்.
தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு யுக்திகளைக் கூறிக்
கொண்டே இருக் கின்றார். இவர் தந்தை, ஆசிரியர், குருவாக
இருக்கின்றார், அனைவருக்கும் சத்கதி கொடுக்கின்றார். உலகில் ஒரு
குரு இறந்து விட்டால் பிறகு குழந்தைகளுக்கு சிம்மாசனம் கொடுத்து
விடுவர். அவர்கள் எப்படி சத்கதிக்கு கொண்டு செல்வார்கள்.?
அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் ஒரே ஒருவர் தான் ஆவார்.
இராவண இராஜ்யத்தில் துர்கதி இருக்கிறது, இராம இராஜ்யத்தில்
சத்கதி இருக்கிறது. தந்தை அனைவரையும் தூய்மையானவர்களாக ஆக்கி
அழைத்து செல்கிறார், பிறகு யாரும் உடனேயே பதீதமாக ஆகிவிடுவது
கிடையாது, வரிசைக் கிரமமாக இறங்குகின்றனர். சதோ
பிரதானத்திலிருந்து சதோ, ரஜோ, தமோ ........ உங்களது புத்தியில்
84 பிறவிச் சக்கரம் இருக்கிறது. நீங்கள் இப்போது கலங்கரை
விளக்குப் போன்று இருக்கிறீர்கள். இந்த சக்கரம் எப்படி
சுழல்கிறது? என்பதை ஞானத்தின் மூலம் நீங்கள் அறிந்து
கொண்டீர்கள். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் மற்ற அனைவருக்கும்
வழி கூற வேண்டும். நீங்கள் அனைவரும் சேனைகள். நீங்கள்
முன்சென்று வழி நடத்துபவர்கள், வழி கூறக் கூடியவர்கள். இப்போது
சாந்திதாமம், சுகதாமத்தை நினைவு செய்யுங்கள் என்று அனைவருக்கும்
கூறுங்கள். கலியுக துக்கதாமத்தை மறந்து விடுங்கள். நாம்
உங்களுங்கு மிக நல்ல வழி கூறுகின்றோம் - பதீத பாவன் ஒரே ஒரு
நிராகார தந்தையே ஆவார். அவரை நினைவு செய்வதன் மூலம் நீங்கள்
தூய்மையாகி விடுவீர்கள். உங்களது ஆத்மாவில் படிந்திருக்கும்
கறைகள் நீங்கி விடும். பகவானின் மகாவாக்கியம் மன்மனாபவ.
சிவபகவானின் மகா வாக்கியம் - விநாச காலத்தில் விபரீத
புத்தியுடையவர்கள் அழிந்து விடுவார்கள், மேலும் விநாச காலத்தில்
பரம்பிதா பரமாத்மாவின் மீது அன்பான புத்தியுடையவர்கள் வெற்றி
அடை வார்கள். நீங்கள் எந்த அளவு அன்பான புத்தியுடையவர்களாக
ஆகிறீர்களோ அந்த அளவு உயர்ந்த பதவி அடைவீர்கள். தேக
அபிமானத்தில் வருவதன் மூலம் அந்த அளவிற்கு உயர்ந்த பதவி அடைய
முடியாது. நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) ஞான இரத்தினங்களினால் தனது (புத்தி) பையை நிறைத்துக் கொள்ள
வேண்டும். எந்த வகையான சந்தேகமும் எழுப்பக் கூடாது. எவ்வளவு
முடியுமோ தந்தையை நினைவு செய்யும் முயற்சி செய்து
தூய்மையானவர்களாக ஆக வேண்டும். மற்றபடி கேள்வி களில் செல்லக்
கூடாது.
2) ஒரு தந்தையிடத்தில் உண்மையான அன்பு வைத்து தந்தைக்குச் சமம்
இனிமையான சாக்ரீனாக ஆக வேண்டும்.
வரதானம்:
சதா ஞான சூரியனின் எதிரில் இருக்கக் கூடிய
உள்நோக்கு முகமுடையவர், சுவமானதாரி ஆகுக.
சூரியனின் எதிரில் சூரியனைப் பார்த்ததும் சூரியனின் கிரணங்கள்
அவசியம் வரும். அதே போன்று எந்தக் குழந்தைகள் ஞான சூரியன்
தந்தையின் எதிரில் சதா இருக்கிறார்களோ, அவர்கள் ஞான சூரியனின்
அனைத்து குணங்களின் கிரணங்கள் தனக்குள் அனுபவம் செய்வர்.
அவர்களது தோற்றத்தில் உள்நோக்கு முகத்திற்கான ஜொலிப்பு மற்றும்
சங்கமயுகத்தின், எதிர்கால அனைத்து சுவமானத்தின் ஒளி தென்படும்.
இதற்கு இது கடைசி நேரம் என்ற நினைவில் சதா இருக்க வேண்டும்.
எந்த ஒரு நிமிடத்திலும் இந்த சரீரம் அழிந்து போகலாம். ஆகையால்
சதா அன்பான புத்தி உடையவராகி ஞான சூரியனின் எதிரில் இருந்து
உள்நோக்கு முகம் மற்றும் சுவமானத்தின் அனுபவத்தில் இருங்கள்.
சுலோகன்:
சதா பறக்கும் கலையில் பறப்பது தான்
சண்டை சச்சரவுகளின் மலையை கடப்பதாகும்.
அவ்யக்த இஷாரா: தூய்மையற்ற விதையைக் கூட முடித்துவிட்டு
சம்பூர்ண தூய்மை (பவித்ரம்) ஆகுங்கள்.
தூய்மை தான் உயர்ந்த நிலையாகும். இதுவே யோகி வாழ்க்கைக்கு
ஆதாரமாகும். துளியளவும் சங்கல்பத்திலும் எந்த விதமான அசுத்தம்
இருக்கிறது என்றால் எங்கு அசுத்தத்தின் அம்சம் இருக்கிறதோ,
அங்கு தூய்மையான தந்தையின் நினைவு, அவர் யார், எப்படிப்பட்டவர்
என்ற நினைவு வராது. ஆகையால் மனதளவிலும் கூட அசுத்தத்தின்
துளியையும் அழித்து சம்பூர்ன தூய்மையானவர் ஆகுங்கள். நான்
பூஜ்ய ஆத்மா, இந்த சரீரம் என்ற கோயிலில் வீற்றிருக்கிறேன் என்ற
நினைவு சதா இருக்க வேண்டும்.