22.03.26 காலை முரளி
ஓம் சாந்தி 07.04.2009 பாப்தாதா,
மதுபன்
"காரணம்" என்ற சப்தத்திலிருந்து விடுபட்டு இருந்து, முகம்
மற்றும் நடத்தையின் மூலம் முக்தி கொடுக்கக்கூடிய முக்தி வள்ளல்
ஆகுங்கள்; சேவையின் ஆர்வம்-உற்சாகத்துடன் கூடவே சதா எல்லையற்ற
வைராக்கிய உணர்வில் இருங்கள்.
இன்று பாப்தாதா நாலா பக்கங்களிலும் உள்ள "இரட்டை எஜமானர்களாக"
இருக்கும் குழந்தைகள் ஒவ்வொருவரையும் பார்த்துக்
கொண்டிருக்கிறார். ஒன்று, தந்தையின் அனைத்து பொக்கிஷங்
களுக்கும் நீங்கள் எஜமானர்கள், இரண்டாவது, சுயராஜ்யத்தின்
எஜமானர்கள். ஒவ்வொரு குழந்தைக் கும் தந்தையிடமிருந்து இந்த
இரண்டு வகையான எஜமானர் உரிமைகளும் கிடைத்துள்ளது. நீங்கள்
குழந்தையாகவும் இருக்கிறீர்கள், எஜமானராகவும் இருக்கிறீர்கள்.
"எனது பாபா" என்று நீங்கள் சொல்லும்போதும், தந்தை "எனது குழந்தை"
என்று சொல்லும் போதும், நீங்கள் குழந்தை மற்றும் எஜமானர் ஆகிய
இரு உணர்வையும் அனுபவம் செய்கின்றீர்கள்.
இன்று நிறைய குழந்தைகள் வந்துள்ளனர்; இது இந்த ஆண்டின் கடைசி
முறை. எனவே இன்று பாப்தாதா ஒவ்வொருவரின் முயற்சியையும் (புருஷார்த்தம்)
சரிபார்த்தார். சொல்லுங்கள், அவர் என்ன பார்த்திருப்பார்?
ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ளுங்கள்: எனது
புருஷார்த்தம் என்ன? பாப்தாதா அனைத்து குழந்தைகளையும் பார்த்து
குஷி கூட அடைந்தார், ஆனால் தந்தைக்கு ஒரு ஆசை உள்ளது; அது என்ன
என்று சொல்லுங்கள்? தந்தையின் ஆசையை நிறைவேற்றுவீர்கள் தானே!
ஒரே ஒரு ஆசை தான், சொல்லுங்கள்! ஆசையை நிறைவேற்று பவர்கள் கைகளை
உயர்த்துங்கள்! மிகவும் நல்லது. அது ஒரு சிறிய ஆசை:
இன்றிலிருந்து ஒரு வார்த்தையை மட்டும் மாற்றுங்கள். எந்த
வார்த்தை? உங்களை மீண்டும் மீண்டும் கீழே விழச் செய்யும் அந்த
வார்த்தை-"காரணம்". இந்த "காரணம்" என்ற வார்த்தையை மாற்றி,
எப்போதும் "நிவாரணம்" (தீர்வு) என்ற வார்த்தையை கடைபிடியுங்கள்.
ஏன்? ஏனெனில் இப்போது உங்கள் சேவை என்ன? உலக ஆத்மாக்களின்
அனைத்துப் பிரச்சினைகளுக்கும்- காரணமானவற்றைத் தீர்ப்பதே உங்கள்
சேவை. தீர்வை வழங்குவதன் மூலம் அவர்களை முக்தி நிலைக்கு (நிர்வாண்
தாமம்) அழைத்துச் செல்ல வேண்டும், ஏனெனில் நீங்கள் அனைவரும்
முக்தி அளிப்பவர்கள். நீங்கள் மற்றவர்களுக்கு முக்தி அளிக்கப்
போகிறீர்கள் என்றால், முதலில் உங்கள் சொந்த "காரணங்களை" நீக்க
வேண்டும்; அப்போதுதான் மற்றவர்களுக்கு முக்தி அளித்து அவர் களை
அமைதி நிலைக்கு அனுப்ப முடியும். எனவே, இந்த ஒரு வார்த்தையை
மாற்றுவது கடினமா அல்லது எளிதா? யோசியுங்கள்.
இன்று வந்திருப்பவர்கள் மற்றும் தத்தமது இடங்களில் இருந்து
பார்த்துக் கொண்டிருப்பவர்கள், கேட்டுக் கொண்டிருப்பவர்கள் என
அனைவரிடமிருந்தும் - பாப்தாதா ஒரே ஒரு வார்த்தையின் மாற்றத்தை
விரும்புகிறார்; ஏனெனில் "காரணம்" (சாக்குப்போக்கு) என்பதுதான்
ஒருவரை கீழே விழச்செய்கிறது. அரை கல்பமாக நீங்கள் "காரணங்களிலேயே"
இருந்து விட்டீர்கள்; இப்போது "நிவாரணம்" (தீர்வு) காண வேண்டிய
நேரம். நிவாரணம் என்பது நிர்வாணம் மற்றும் முக்திக்கு
வழிவகுக்கும். எனவே, இன்று தந்தைக்கு இதை வழங்கும் துணிச்சல்
உங்களுக்கு இருக்கிறதா? இது கடைசி முறை, அனைவரும் மிகுந்த
உற்சாகத் துடன் வந்துள்ளீர்கள், பாப்தாதா ஒவ்வொரு வருக்கும்
வாழ்த்துகளைத் தெரிவிக்கிறார்.
தங்குவதற்கும் உண்பதற்கும் சிரமங்கள் இருக்கலாம், ஆனால்
அனைவரும் அன்பினால் ஈர்க்கப்பட்டு வந்துள்ளீர்கள்; "அன்பு
என்னும் விமானம்" உங்களை மதுபன் அழைத்து வந்துள்ளது.
ஒவ்வொருவரின் அன்பையும் கண்டு, பாப்தாதா கோடி மடங்கு
இதயப்பூர்வமான அன்பைத் திரும்பத் தருகிறார். ஆனால் அன்பில்
நீங்கள் என்ன செய்வீர்கள்? நாம் யாருடைய அன்பைப் பெறுகிறோமோ,
அவர்களுக்கு ஒரு பரிசை வழங்குவோம். எனவே இன்று, பாப்தாதா இந்த
"காரணம்" என்ற வார்த்தையைப் பரிசாகப் பெற விரும்புகிறார்.
பாப்தாதாவின் இந்த ஆசையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் தானே!
மீண்டும் கைகளை உயர்த்துங்கள்; இந்த வார்த்தையை இங்கேயே
விட்டுச் செல்ல வேண்டும். நீங்கள் வாயிலை விட்டு வெளியேறும்போது,
"காரணம்" என்ற வார்த்தை முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.
தவறுதலாக அந்த எண்ணம் வந்தாலும், அது தந்தையிடம்
ஒப்படைக்கப்பட்ட ஒரு "அடைக்கலம்" என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அடைக் கலமாகத் தந்த பொருளை யாராவது திரும்பப் பெறுவார்களா? எனவே,
அனைவரும் உறுதியான சங்கல்பம் செய்துவிட்டீர்களா? மீண்டும் கைகளை
உயர்த்துங்கள். பின்னால் அமர்ந்துள்ளவர்கள் கைகளை அசையுங்கள்.
(குறிப்பு: சாந்திவனத்தில் சுமார் 28-29 ஆயிரம் சகோதர சகோதரிகள்
உள்ளேயும் வெளியேயும் அமர்ந்து முரளியைக் கேட்டுக்கொண்டி
ருக்கிறார்கள், அனைவரும் கைகளை அசைக்கிறார்கள்). நல்லது,
மிகவும் நல்லது, ஏனெனில் காலத்தின் தேவைக்கேற்ப, மக்கள்
விரைவில் உங்கள் முன் - வரிசையில் நிற்பார்கள். ஏன் வரிசையில்
நிற்பார்கள்? "ஓ முக்தி அளிப்பவர்களே, எங்களுக்கு முக்தி
கொடுங்கள்!" என்று கேட்பதற்காக. முக்தி அளிப்பவராக மாற, முதலில்
நீங்கள் இந்த ஒரு வார்த்தை யிலிருந்து (காரணம் என்ற
வார்த்தையிலிருந்து) விடுபட வேண்டும்; அப்போதுதான்
மற்றவர்களுக்கு முக்தி அளிக்க முடியும்.
"நான் முக்தியடைந்து மற்றவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும்"
என்பதே இந்த ஆண்டின் வீட்டுப்பாடமாக இருக்க வேண்டும் என்று
பாப்தாதா விரும்புகிறார், ஏனெனில் பிரச்சினைகள் நாளுக்கு நாள்
பெருகப்போகின்றன. எனவே, அந்தப் பிரச்சினை ஒரு தீர்வாக மாற
வேண்டும். உங்கள் உழைப்பும், நேரமும் - பிரச்சினைகளைத்
தீர்ப்பதிலேயே செலவாகக் கூடாது. உங்கள் பக்தர்களின் கதறலும்,
காலத்தின் அழைப்பும் உங்களுக்குக் கேட்கவில்லையா? எனவே,
காலத்திற்கு ஏற்ப என்ன மாற்றம் அவசியம்? எனவே, தற்போதைய
காலத்திற்கு ஏற்ப என்ன மாற்றம் அவசியமாக(கட்டாயமாக)
இருக்கின்றது? ஏனெனில் இப்போது ஒவ்வொருவரும் ஒரு 'அனுபவ
மூர்த்தியாக' மாறி, மற்றவர்களுக்கு ஏதேனும் ஒரு அனுபவத்தை
வழங்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, உங்கள் முகம் மற்றும்
நடத்தையின் மூலம், நீங்கள் முக்தி அளிப்பவரின் குழந்தைகள்,
மற்றவர் களுக்கு முக்தி அளிப்பவர்கள் என்பது தெளிவாகத் தெரிய
வேண்டும் என்று பாபா இப்போது விரும்புகிறார். உங்கள் நெற்றியில்
ஜொலிக்கும் நட்சத்திரத்தின் அனுபவம் மற்றவர் களுக்கு ஏற்பட
வேண்டும். வெறும் பேச்சால் மட்டும் இல்லாமல், உங்கள் முகத்தின்
மூலமே அனுபவம் கிடைக்க வேண்டும், ஏனெனில் அனுபவம் ஒருவரை
நெருக்க மாக்குகிறது. எனவே, இந்த அனுபவத்தை உங்கள் முகம்
மற்றும் நடத்தையின் மூலம் காட்டுங்கள். உதாரணமாக, அறிவியலின்
சாதனங்கள் அனுபவத்தைத் தருகின்றன அல்லவா, இப்போது கோடை காலம்
என்றால் வெப்பத்தையும், குளிர்காலம் என்றால் குளிர்ச்சியையும்
அனுபவம் செய்ய வைக்கின்றன. அறிவியலின் சாதனங்களே அனுபவத்தைச்
செய்ய வைக்கும்போது, 'சைலன்ஸ்' (அமைதி) என்னும் சக்தியால் அந்த
அனுபவத்தை வழங்க முடியாதா என்ன? பாப்தாதா இப்போது குழந்தைகளிடம்
விரும்புவது இதையே: அனுபவ நிலையில் நிலைத்திருந்து, உங்கள்
கண்கள் மற்றும் நெற்றியின் மூலம் ஏதேனும் ஒரு சக்தியின்
அனுபவத்தை மற்றவர்களுக்கு ஏற்படுத்துங்கள். கேள்விப்பட்ட
விஷயங்கள், கேட்கும் போது நன்றாக இருக்கும், ஆனால் ஏதேனும் ஒரு
பிரச்சனை வரும்போது மறந்துவிடும். ஆனால் அனுபவம் என்பது
வாழ்க்கை முழுவதும் மறக்காது.
பாப்தாதா ஒரு காரணத்தைப் பார்த்தார். முடிவுகளையும் (ரிசல்ட்)
பார்த்தார்; ஒரு முடிவைப் பார்த்து மிகுந்த வாழ்த்துகளைத்
தெரிவித்தார். அது என்ன முடிவு? இன்றுவரை சேவையின் ஆர்வம்
மற்றும் உற்சாகம் நன்றாக உள்ளது. அதற்காக பாப்தாதா
வாழ்த்துகளையும் வழங்குகிறார்; சேவையை வளர்க்கிறீர்கள் மற்றும்
நல்ல திட்டங்களையும் தீட்டுகிறீர்கள்; அவரவர் சக்திக்கு ஏற்ப
முடிவுகளும் (ரிசல்ட்) கிடைக்கின்றன. ஆனால் ஒரு விஷயத்தில்
அனுபவம் ஏற்படுத்துவதற்கு நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
உங்கள் சேவை இப்போது புகழ்பெற்றதாகிக் கொண்டே போகிறது; மக்கள்
மகிழ்ச்சியடைகிறார்கள் மற்றும் தற்போது அதன் மீதான ஆர்வமும்
அதிகரித்து வருகிறது. இப்போது மற்றவர்களுக்கு அனுபவம்
ஏற்படுத்துவதற்கான முறை என்ன? ஆர்வம் மற்றும் உற்சாகத்துடன்,
எவ்வளவு ஆர்வம் இருக்கிறதோ - அந்த அளவிற்கு காலத்தின்
தேவைக்கேற்ப, இப்போது எல்லையற்ற வைராக்கிய உணர்வும் வேண்டும் (இதுவே
அனுபவம் ஏற்படுத்துவதற்கான முறை). புருஷார்த்தத்தில் ஏதேனும்
ஒரு பிரச்சனை உருவாகிறது என்றால், அதற்கு எல்லையற்ற வைராக்கிய
உணர்வு குறைவாக இருக்கிறது என்பதே காரணமாகும். இப்போது
எல்லையற்ற வைராக்கியம் தேவை. இந்த எல்லையற்ற வைராக்கியம்
எப்போதும் நிலைத்திருக்கக் கூடியது.
நேரத்தின் அனுசாரம் (அதாவது காலத்தின் கட்டாயத்தில்) நீங்கள்
வைராக்கியம் அடைந்தால், அப்போது 'நேரம்' முதலிடத்தைப்
பிடித்துவிடும், நீங்கள் இரண்டாம் இடத்திற்குத்
தள்ளப்படுவீர்கள். நேரம் உங்களுக்கு வைராக்கியத்தை உணர வைத்தது
என்று ஆகிவிடும். எல்லையற்ற வைராக்கியம் என்பது எப்போதும்
இருக்க வேண்டும். ஒரு பக்கம் ஆர்வம்-உற்சாகம் மற்றும் மகிழ்ச்சி
இருக்க வேண்டும், மறுபக்கம் எல்லையற்ற வைராக்கியம் இருக்க
வேண்டும். இந்த எல்லையற்ற வைராக்கியம் எப்போதும் நிலைக்காமல்
இருப்பதற்குக் காரணம் என்ன? பாப்தாதா பார்த்ததில், அதற்குக்
காரணம் தேக-அபிமானம் ஆகும். 'தேகம்' என்ற சொல் அனைத்து
விஷயங்களிலும் வருகிறது - தேகத்தின் உறவுகள், தேகத்தின்
பொருட்கள், தேகத்தின் சமஸ்காரங் கள் என 'தேகம்' என்ற சொல் எல்லா
வற்றிலும் வருகிறது. குறிப்பாக, ஆத்ம-அபிமான நிலை யிலிருந்து
உங்களை தேக- அபிமானத்திற்கு இழுத்து வரும் விஷயம் எது என்று
பாப்தாதா சோதித்துப் பார்த்தார். பழைய சமஸ்காரங்களே உங்களை கீழே
இழுத்து வருகின்றன என்பதுதான் அடிப்படை காரணமாக இருக்கிறது.
பழைய சமஸ்காரங்களை நீங்கள் அழித்துவிட்டீர்கள், இருப்பினும்
ஏதேனும் ஒரு சமஸ்காரமானது 'சுபாவம்' என்ற ரூபத்தில் இன்னும்
வேலை செய்கிறது. தேக-அபிமானம் என்பது ஒரு இயல்பான சுபாவமாக
மாறிவிட்டது, ஆனால் ஆத்ம-அபிமான நிலை என்பது இன்னும் அத்தகைய
இயல்பான சுபாவமாக மாறவில்லை.
பழைய சமஸ்காரங்களை அழித்துவிட்டதாகக் கூறினாலும், அவற்றை வேரோடு
(விதையோடு) இன்னும் எரிக்கவில்லை. எனவே, நேரம் வரும்போது அந்த
தேக-அபிமான சமஸ்காரங்கள் மீண்டும் வெளிப்படுகின்றன. ஆகவே,
இப்போது இந்த தேக-அபிமான சுபாவத்தை, சக்திவாய்ந்த ஆத்ம-அபிமான
சக்தியால் அதன் வம்சத்தோடு (வேரோடு) அழிப்பது அவசியமாகும். "நாங்கள்
விரும்புவதில்லை, ஆனால் எப்போதாவது வெளிப் படுகிறது" என்று
குழந்தைகள் கூறுகிறார்கள். ஏன் வெளிப்படுகிறது. ஒரு சிறு அம்சம்
இருந்தாலும் கூட, அது வம்சமாகப் பெருகி வெளிப்பட்டு விடுகிறது.
எனவே, இப்போது சக்தி ஸ்வரூபமாக மாற வேண்டியது அவசியம்.
உங்களிடம் ஏதேனும் ஒரு ரூபத்தில் பழைய தேக-அபிமான சமஸ்காரத்தின்
சிறு அம்சம் மீதம் உள்ளதா என்று உங்களை நீங்களே சோதித்துப்
பாருங்கள். இது 'எல்லையற்ற வைராக்கிய உணர்வால்' மட்டுமே அழியும்.
உங்கள் சேவையைப் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சியடைகிறார், ஆனால்
இப்போது தந்தையின் விருப்பம் என்னவென்றால், சேவையின் பிரகாசம்
மக்களுக்குத் தெரிவது போல, உங்கள் எல்லை யற்ற வைராக்கிய
உணர்வின் தாக்கமும் அவர்களுக்குத் தெரிய வேண்டும்.
வருங்காலத்தில், சேவையின் மூலம் உங்கள் புகழ் அதிகரிக்கும்,
இயற்கை உங்களுக்குத் தாசியாகும், வசதி வாய்ப்புகள் பெருகும்;
ஆனால் எல்லையற்ற வைராக்கிய உணர்வு இருந்தால் மட்டுமே
வசதிகளுக்கும் ஆன்மீக முயற்சிக்கும் இடையே சமநிலையை பராமரிக்க
முடியும். இல்லறத்தில் இருப்பவர்களுக்குத் தாமரை மலர் போல,
கர்மயோகியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் உதாரணம் கூறுவது
போல, சேவை செய்யும் போது உங்களுக்கு வசதிகள் கிடைத்தாலும்,
அந்த வசதிகளுக்கும் ஆன்மீக சாதனைக்கும் இடையே சமநிலை இருக்க
வேண்டும். எனவே, தற்போதைய சேவைத் திட்டங்களுடன் எல்லையற்ற
வைராக்கிய உணர்வும் அவசியமாகும். நடமாடும் போது கூட, நீங்கள்
ஒரு விசேஷமான ஆத்மாக்கள் என்பதை மற்றவர்கள் அனுபவம் செய்ய
வேண்டும். யோகா வில் அமரும் போது அல்லது உரை நிகழ்த்தும் போது
மட்டுமல்ல, சாதாரணமான நேரங்களில் நடமாடும் போது கூட உங்கள்
நெற்றியின் மூலம் அமைதி, சக்தி மற்றும் மகிழ்ச்சியின் அனுபவம்
மற்றவர்களுக்குக் கிடைக்க வேண்டும், ஏனெனில் காலம் வேகமாக
மாறிக் கொண்டிருக்கிறது. பாப்தாதா அவ்வப்போது எச்சரிக்கைகளை
அளித்து வருகிறார், ஆனால் இன்று விசேஷமாக எல்லையற்ற
வைராக்கியத்தை நோக்கி சிக்னல் கொடுக்கிறார். இதற்காக, இப்போது
உங்களை நீங்களே சோதித்து, ஆத்ம-அபிமானியாக மாறுவதற்குத் தடையாக
இருக்கும், பலவிதமான தேக-அபிமானத்தை; அநேக விதமான தேக அபிமான
அனுபவத்தை கண்டறிந்து, அதை மாற்றுங்கள். இரண்டாவதாக, 'நீண்ட
காலப் பயிற்சி' பற்றி சிந்தியுங்கள். நீண்ட காலப் பயிற்சி தேவை.
நீண்ட காலப் புருஷார்த்தம் செய்தால், நீண்ட காலத்திற்கான பலன்
கிடைக்கும். இப்போது நீண்ட காலத்திற்கான கவனத்தைக் குறைவாகக்
கொடுத்தால், இறுதிக் காலத்தில் உங்களால் அதிகக் கணக்கைச்
சேமிக்க முடியாது; 'காலம் கடந்து விட்டது' (டூ லேட்) என்ற
போர்டு மாட்டப்பட்டுவிடும். எனவே பாப்தாதா அடுத்த ஆண்டிற்கான
வீட்டுப்பாடத்தை (ஹோம்வொர்க்) இப்போதே கொடுக் கிறார். இந்த
தேக-அபிமானம் தான் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணமாகிறது.
குழந்தைகள் மிகவும் ரமணீகமானவர்கள் (மகிழ்ச்சியானவர்கள்),
அவர்கள் பாபாவிடம் "நேரம் வரும்போது நாங்கள் சரியாகிவிடுவோம்"
என்று சமாதானம் கூறுகிறார்கள். அதற்கு பாப்தாதா கேட்கிறார்: "நேரம்
தான் உங்கள் ஆசிரியரா?"
நேரத்தின் அனுசாரம் சரியாகி விடுவோம் என்றால், உங்கள் ஆசிரியர்
யார்? உங்களுடைய படைப்பான, நேரம் - உங்களுக்கு ஆசிரியர் ஆகுவது
என்பது நன்றாக இருக்குமா? எனவே நேரத்தை நீங்கள் அருகில் கொண்டு
வர வேண்டும். நீங்கள் நேரத்தை அருகில் கொண்டு வருபவர்கள்,
நேரத்திற்காகக் காத்திருப்பவர்கள் அல்ல. நேரத்தை உங்கள்
ஆசிரியராக ஆக்காதீர்கள்.
பாப்தாதா இன்று மீண்டும் மீண்டும் சிக்னல் கொடுக்கிறார்-உங்களை
நீங்களே சோதியுங் கள், மீண்டும் மீண்டும் சோதித்து மாற்றம்
காணுங்கள். நீண்ட கால மாற்றம் உங்களை நீண்ட காலப் பலனுக்கு
அதிகாரியாக்கும். எந்த ஒரு குழந்தையாவது இதுவரை தளர்வான
புருஷார்த்தியாக இருந்தாலும், கடைசி வரிசையில் இருந்தாலும் கூட,
அவர்கள் மீது பாபாவிற்கு அன்பு இருக்கிறது. அன்பு இருப்பதால்
தான் அவர்கள் பாபாவுடையவர்களாக இருக்கிறார்கள், பாபாவை அடையாளம்
கண்டு "எனது பாபா" என்று சொல்கிறார்கள். எனவே எதையும் நேரத்தின்
மீது விட்டுவிடாதீர்கள். 'நேரம்' என்பது வராது, முழுமைபெறும்
நேரத்தை நாம்தான் அருகில் கொண்டு வர வேண்டும். உலக
மாற்றத்திற்கான பாப்தாதாவின் காரியத்தில் நீங்கள் அனைவரும்
துணையானவர்கள். தனி ஒருவராக பாபா இந்தக் காரியத்தைச் செய்ய
முடியாது, குழந்தைகளின் துணை அவருக்குத் தேவை. பாபா கூறுகிறார்:
"முதலில் குழந்தைகள், பிறகுதான் தந்தை". எனவே, இப்போது அடுத்த
ஆண்டில் நீங்கள் நுழையும் போது, இந்த வீட்டுப்பாடத்தை (ஹோம்வொர்க்)
முடித்துவிட்டுத்தான் வருவீர்கள் அல்லவா? செய்வீர்கள் தானே? ஆம்
என்றால் கைகளை உயர்த்துங்கள். மிகவும் நல்லது! பின்னால்
இருப்பவர்களும் கைகளை உயர்த்துகிறார்கள்.
பாருங்கள், இன்று எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. எனவே, பாப்தாதா
ஒரு குழந்தை யிடம் சிக்னல் கொடுத்து, "சுற்றிப் பார்த்துவிட்டு
வா (குழந்தைகளுக்கு மதுபனில் செய்யப் பட்டுள்ள வசதிகளை),
குழந்தைகள் எங்கெல்லாம் தூங்குகிறார்கள், எப்படி வரிசையில்
நின்று உண்கிறார்கள்" என்று பார்க்கச் சொன்னார். மிக நீண்ட
வரிசைகள் உள்ளன. இருப்பினும், அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி
தெரிகிறது - காரணம் அவர்கள் மதுபனத்தில் இருக்கிறார்கள். ஆனால்,
இந்த மதுபனத்தின் மகிழ்ச்சியை இங்கேயே விட்டுச் சென்று
விடாதீர்கள், உங்களுடனேயே எடுத்துச் செல்லுங்கள். மதுபனத்தில்
நீங்கள் உறங்கு வதையும், உணவுக்காக வரிசையில் நிற்பதையும்
பாப்தாதா மேலிருந்து (வதனத்தில் இருந்து) பார்த்துக்
கொண்டிருந்தார். பாப்தாதாவிற்கு ஒரு சங்கல்பம் (எண்ணம்)
தோன்றியது: இப்போதே போர்வைகள் மற்றும் மெத்தைகளின் மழை பொழிய
வேண்டும் என்று. இருந்தாலும், இதுவும் ஒரு கொண்டாட்டம் (திருவிழா)
தான். பாப்தாதா உங்களை நன்றாகக் கவனித்தார்; எங்கே இடம்
கிடைத்திருந்தாலும், எப்படி கிடைத்திருந்தாலும் - பெரும்பான்மை
யானவர்கள் இந்தத் தேர்வில் நன்றாகத் தேர்ச்சி பெற்றுவிட்டீர்கள்.
கைதட்டுங்கள்! ஆனால், கொடுக்கப்பட்ட வீட்டுப்பாடத்தை மட்டும்
மறந்துவிடாதீர்கள், அதற்கு கைதட்ட வேண்டிய அவசியமில்லை.
பாப்தாதாவும், விசேஷமாக பிரம்மா பாபாவும் குழந்தைகளை எப்போதும்
மதுபனத்தின் "அலங்காரம்" என்றுதான் கூறுகிறார்கள். நீங்கள்
அனைவரும் மதுபனத்திற்கு வந்திருக்கிறீர்கள், இவ்வளவு பெரிய
குடும்பத்தைப் பார்த்து பாப்தாதாவும், சாகார ரூபத்தில்
மகிழ்ச்சியடைகிறார்கள். இங்கே தங்குவதில் சில சகிப்புத்தன்மை
தேவைப்பட்டிருக்கலாம், ஆனால் இந்தச் சகிப்புத்தன்மை உங்களின்
சகிப்புத்திறனை என்றென்றும் அதிகரிக்கச் செய்யும். அனை வரும்
குஷியாக இருக்கிறீர்கள் தானே! உங்களுக்கு எந்தத் சிரமமும்
இல்லையே?. பாருங்கள், இவ்வளவு பெரிய கூட்டத்திலும்,
அனைவருக்கும் தண்ணீர் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஒருவேளை
தண்ணீர் சற்று குறைவாக இருந்தால் கவனித்துப் பயன்படுத்திக்
கொள்ளுங்கள், ஏனெனில் இன்று கிராமங்களில் குடிப்பதற்கே தண்ணீர்
கிடைப்பதில்லை, ஆனால் இங்கே உங்களுக்குத் துணி துவைப்பதற்குக்
கூடத் தண்ணீர் கிடைக்கிறது. இவ்வளவு பெரிய குடும்பத்தைப்
பார்ப்பதே மகிழ்ச்சியாக இருக்கிறது. கல்பம் முழுவதிலும் இவ்வளவு
பெரிய குடும்பம் வேறு யாருக்கும் இல்லை என்று பாப்தாதா பெருமை
கொள்கிறார்.
இன்று பாப்தாதா ஆசிரியர்களுக்கு ஒரு விசேஷமான சேவையை
நினைவூட்டுகிறார்; இது உங்களுக்கான வீட்டுப்பாடம்.
ஆசிரியர்களுக்கான வீட்டுப்பாடம் என்னவென்றால்: "ஆசிரியர்கள்
எப்போதும் தங்களைப் பாப்தாதாவின் உண்மையான துணையாகவும்,
நெருக்க மான துணை யாகவும் கருதி, தங்களின் மூலம் தந்தையை
வெளிப்படுத்த வேண்டும்". உங்களைப் பார்ப்பவர்கள், "இவர்களை
உருவாக்கியவர் யார்? இவர்களுடைய தந்தை, ஆசிரியர் மற்றும்
சத்குரு யார்?" என்று கேட்கும் அளவிற்கு உங்கள் நிலை இருக்க
வேண்டும். அவர்கள் உங்களைப் பார்க்கக் கூடாது, உங்கள் மூலம்
தந்தையைப் பார்க்க வேண்டும். இந்தச் சுயமரியாதையில்
நிலைத்திருந்து, வரவிருக்கும் 6-7 மாதங்கள் இந்த வீட்டுப்
பாடத்தைச் செய்யுங்கள். பிறகு பாப்தாதா வந்து ஒவ்வொருவரிடமும்,
"எத்தனை சதவீதம் இந்த வீட்டுப்பாடத்தை முடித்தீர்கள்?" என்று
கேட்பார். அவர் அதிக செய்திகளைக் கேட்க மாட்டார், சதவீதத்தை
மட்டுமே கேட்பார். நீங்கள் மறைந்து, தந்தை மட்டும் தெரிய
வேண்டும்; இதில் அனைத்து நற்குணங்களும் (தாரணைகளும்) அடங்கி
விடும்.
மதுபன் வாசிகளுக்கு பாப்தாதா தனது அன்பு நினைவுகளைத்
தெரிவித்துக் கொள்கிறார். மதுபனத்தில் இருப்பவர்கள் தங்களைச்
சுற்றிலும் உள்ளவர்களுக்கு ஒரு விசேஷ ரத்தினமாகத் திகழ்ந்து,
தந்தையை வெளிப்படுத்துவதற்கான கருவியாக இருக்க வேண்டும். மதுபன்
வாசிகள் எப்போதும் மனசா சேவை, கர்மணா சேவை செய்து, மற்றவர்களைத்
தந்தைக்குச் சமமாக மாற்றுவதில் முன்னுதாரணமாக விளங்க வேண்டும்.
மதுபன் வாசிகள் (பாப்தாதாவிற்கு) கொடுக்க வேண்டிய
முடிவு(ரிசல்ட்) இதுதான்: "தந்தைக்குச் சமமாக மாறிய
வரைபடத்தை(மேப்) உங்கள் மூலம் காட்டினீர்களா? என்பதாகும்.".
ஒவ்வொருவரின் வாயிலிருந்தும் "வாஹ், பாபாவின் குழந்தைகளே, வாஹ்!"
(அற்புதமான குழந்தைகள்) என்ற வார்த்தை வர வேண்டும். நீங்கள்
அனைவரும் என்ன செய்வீர்கள்? நீங்கள் வரிசைக்கிரமமாக (நம்பர்
வார்) இல்லாமல், முதலிடம் (நம்பர் ஒன்) பெறுவதற்கு முயற்சி
செய்வீர்கள் தானே?. நீங்கள் வரிசைக்கிரமமாக (நம்பர் வார்)
இல்லாமல், முதலிடம்(நம்பர் ஒன்) பெறுவதற்கான -
எடுத்துக்காட்டாக ஆக வேண்டும். நம்பர்வார் ஆகுவதில் - மஜா
என்பது இல்லை, நம்பர் 1 ஆக வேண்டும். நம்பர் வார் ஆகுவது என்பது
பெரிய விஷயமா என்ன? எனவே அனைவரும் முதலிடம் பெற்று, அந்த முடிவை
அறிவியுங்கள். நல்லது.
எல்லா திசைகளிலும் உள்ள பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தில்
அமர்ந்திருப்பவர்கள், புருவ மத்தியின் சிம்மாசனத்தில்
அமர்ந்திருப்பவர்கள் மற்றும் எதிர்கால ராஜ்ய சிம்மாசனத் திற்கு
உரியவர்கள் என பாப்தாதாவிற்கு மிகவும் அன்பானவர்கள், கோடி
மடங்கு பாக்கியசாலி குழந்தை கள் அனைவருக்கும் - எப்போதும்
தங்கள் கண்களின் மூலம் ஆன்மீக அனுபவத்தை அளிப்பவர் களுக்கும்,
முகத்தின் மூலம் எப்போதும் மகிழ்ச்சியான விதியை
காட்டுபவர்களுக்கும், மனதின் மகிழ்ச்சியில் எப்போதும்
ஆடுபவர்களுக்கும் எனது வாழ்த்துக் கள். உங்கள் முன்னால் யார்
வந்தாலும், "இத்தகைய மகிழ்ச்சி வேறு எங்கும் இல்லை" என்று
அவர்கள் அனுபவம் செய்ய வேண்டும் மற்றும் உங்களிடமிருந்து ஒரு
பாடத்தைக் கற்றுச் செல்ல வேண்டும். ஒவ்வொரு தந்தையின்
குழந்தைகளும் - தங்கள் மூலமாகத் தந்தையையும், தங்கள் முகத்தின்
மூலம் தந்தையின் அறிமுகத்தையும் அளிக்கிறீர்கள். உங்கள்
கண்களின் மூலமும் முகத்தின் மூலமும் தந்தையின் தரிசனத்தை
மற்றவர்களுக்கு ஏற்படுத்துகிறீர்கள். கடிதம் எழுதியவர்கள்,
ஈமெயில் அனுப்பியவர்கள் என நான்கு திசைகளிலும் உள்ள அனைத்துக்
குழந்தைகளின் சங்கல்பங்களும், அந்த விநாடியே பாப்தாதாவை
வந்தடைந்துவிட்டன. எனவே உங்கள் அனைவருக்கும் பாபாவின் வாழ்த்து
கள். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனைத்துக்
குழந்தைகளின் அன்பிற்கு பாப்தாதா பதில் அளிக்கிறார். நான்கு
திசைகளிலும் உள்ள குழந்தைகளுக்கு பாப்தாதா கோடி மடங்கு
இதயப்பூர்வமான அன்பையும் அரவணைப்பையும் வழங்கி, அனைவருக்கும்
நமஸ்தே கூறுகிறார்.
ஆசீர்வாதம்:
கர்மம் செய்து கொண்டே கர்ம பந்தனத்திலிருந்து விடுபட்டு
விளங்கும் சகஜயோகி மற்றும் இயற்கையான யோகி ஆகுக.
யார் மகாவீர் குழந்தைகளோ, அவர்களை - இந்தச் சாகார உலகத்தின்
எந்த ஒரு கவர்ச்சியும், தன் பக்கம் ஈர்க்க முடியாது. அவர்கள்
தங்களை ஒரே விநாடியில் உலகிலிருந்து விலகியவராகவும் மற்றும்
தந்தைக்குப் பிரியமானவராகவும் ஆக்கிக் கொள்வார்கள்.
வழிகாட்டுதல் (டைரக்ஷன்) கிடைத்தவுடனேயே - தேக உணர்விலிருந்து
விடுபட்டு அசாரீரி (உடலை கடந்த நிலை), ஆத்ம-அபிமானி, பந்தனமற்ற
மற்றும் யோகயுக்த நிலையை அனுபவம் செய்பவர்கள் தான் - சகஜயோகி,
இயற்கையான யோகி, நிரந்தர யோகி, கர்மயோகி மற்றும் சிரேஷ்ட யோகி
ஆவர். அவர்கள் எப்போது விரும்புகிறார்களோ, எவ்வளவு நேரம்
விரும்புகிறார்களோ, அவ்வளவு நேரம் தங்கள் சங்கல்பம் மற்றும்
சுவாசத்தை, ஒரே பிராணேஸ்வரராகிய - தந்தையின் நினைவில் நிலை
நிறுத்த முடியும்.
சுலோகன்:
ஏக்ரஸ் (ஒரே சீரான) நிலை என்ற சிறந்த ஆசனத்தில் வீற்றிருப்பதே
தபஸ்வி ஆத்மாவின் அடையாளமாகும்.
அவ்யக்த சமிக்கை: நிச்சயம் என்னும் அஸ்திவாரத்தை வலுப்படுத்தி
சதா பயமற்றவராகவும், கவலையற்றவராகவும் இருங்கள்
அநேக முறை - நாம் தந்தையுடையவர்களாக ஆகியிருக்கிறோம் மற்றும்
மாயாஜீத்தாக (மாயையை வென்றவர்கள்) ஆகியிருக்கிறோம் - என்ற
நிச்சயத்தையும், நினைவையும் , சக்திசாலி யான நிலையையும்
வைத்துக் கொள்ளுங்கள்; எனவே இப்பொழுது ஆகுவது (மாயாஜீத்தாக)
கடினமா என்ன? சிரேஷ்ட ஆத்மாவாகிய நான் - வெற்றியாளர் ஆகுவதற்
கான நடிப்பை பல முறை நடித்துள்ளேன் என்ற நினைவு உங்களுக்கு
தெளிவாக இல்லையா? ஒருவேளை இந்த நினைவு தெளிவாக இல்லை என்றால்,
நீங்கள் தந்தையின் முன்னிலையில் - உங்களைத் தெளிவாக
வெளிப்படுத்தவில்லை என்பது இதிலிருந்து உறுதியாகிறது.