22-07-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! இப்போது நீங்கள்
புதிய உலகத்திற்கு செல்ல வேண்டும். இந்த துக்கத்தின் நாட்கள்
நிறைவடைந்துக் கொண்டிருக்கிறது. ஆகையால் பழைய முடிந்து போன
விஷயங்களை மறந்து விடுங்கள்.
கேள்வி:
கர்ம யோகி குழந்தைகளாகிய நீங்கள்
எந்த பயிற்சியை நிரந்தரமாக செய்ய வேண்டும்?
பதில்:
இப்போது சரீர நிர்வாகத்திற்காக
தேகத்தில் வரலாம். அவ்வப்போது ஆத்ம உணர்வு டைய வராக வேண்டும்.
தேகத்தின் நினைவில்லாமல் கர்மம் செய்ய முடியாது. ஆகையால் தேக
உணர்வில் வந்து கர்மம் செய்தீர்கள். பிறகு ஆத்ம அபிமானி ஆவதற்கு
பயிற்சி செய்யுங்கள். இப்படிப்பட்ட பயிற்சியை குழந்தைகளாகிய
உங்களைத் தவிர வேறு யாரும் செய்ய முடியாது.
பாடல்:
விழித்தெழுங்கள் மணப்பெண்களே
விழித்தெழுங்கள்......
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆத்மாக்கள் அல்லது குழந்தைகள் இந்த பாடலை
கேட்டீர்கள் என ஆன்மீகத் தந்தை கூறுகின்றார். இதற்கு ஞானத்தின்
பாடல் என கூறப்படுகிறது. இந்த பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது.
ஆத்மாக்களாகிய நீங்கள் இப்போது விழித்தெழுந்து விட்டீர்கள்.
நாடகத்தின் ரகசியத்தைக் கூட புரிந்துக் கொண்டீர்கள். பக்தி
மார்க்கத்தின் வேடிக்கை பார்த்து முடித்து விட்டீர்கள் அல்லவா?
எது முடிந்து விட்டதோ அது உங்கள் புத்தியில் இருக்கிறது.
நீங்கள் உங்களுடைய முடிந்து போன 84 பிறவிகளின் வரலாற்றை
அறிகிறீர்கள். பாபா 84 பிறவிகளின் கதையைக் கூறியிருக்கிறார்.
அது புது உலகத்திற்கான புது விஷயங்களாகும். பாபா மூலமாக நீங்கள்
புது விஷயங்களைக் கேட்கிறீர்கள். பாபா குழந்தை களுக்கு தைரியம்
அளிக்கின்றார். குழந்தைகளே, இப்போது புது உலகத்திற்குச் செல்ல
வேண்டும் என்றால் பழைய விஷயங்களை மறந்து விடுங்கள். இந்த வேத
சாஸ்திரங்கள் போன்ற பக்தி மார்க்கத்தின் விஷயங்கள் அனைத்தும்
அழியப் போகின்றன. அங்கே பக்தி மார்க்கத்தின் அடையாளம் எதுவும்
இருக்காது. இங்கேயோ பக்தி மார்க்கத்தின் பலன் கிடைக் கிறது.
குழந்தைகளுக்கு தந்தை வந்து பலனை அளிக்கிறார். தந்தை எப்படி
வந்து பக்தியின் பலனை அளிக்கிறார் என குழந்தைகள் அறிகிறீர்கள்.
யார் அதிகமாக பக்தியை செய்தார்களோ அவர்களுக்கு நிச்சயம் அதிகப்
பலன் கிடைக்கும். ஞானத்தின் முயற்சி கூட அவர்கள் நிறைய
செய்வார்கள். ஆத்மாக்களாகிய நாம் அதிகமாக பக்தி
செய்திருக்கிறோம் என நீங்கள் அறிகிறீர்கள். நிச்சயம் ஞானத்தில்
கூட அவர்கள் வேக மாகச் செல்வார்கள். அப்போது இந்த லஷ்மி
நாராயணரைப் போல உயர்ந்த பதவி பெறுவார்கள். இப்போது ஞானம்
மற்றும் யோகத் திற்காக நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். ஆத்ம
உணர்வுடையவராக இருக்க வேண்டும். பிறகு தேகதாரியாகவும் இருக்க
வேண்டும். கர்மம் செய்தாலும் தந்தையை நினைக்க வேண்டும். தேகம்
இல்லாமல் நாம் கர்மம் செய்ய முடியாது. பாபாவை நினைக்க வேண்டும்.
இது சரியே, ஆனால் தன்னை ஆத்மா என்று புரிந்துக் கொள்ள வேண்டும்.
தேகத்தை மறந்து விட்டால் வேலை செய்ய முடியாது. வேலை செய்யத்தான்
வேண்டும். தந்தையின் நினைவில் நிறைய ஆனந்தம் இருக்கிறது.
உட்கார்ந்தாலும் எழுந்தாலும் நடந்தாலும், போனாலும், வந்தாலும்
தந்தையை நினையுங்கள். இருப்பினும் வயிற்றுக்கு உணவு வேண்டும்.
ஆத்ம உணர்வுடைய வராக இருக்க வேண்டும். குழந்தைகளாகிய உங்களைத்
தவிர வேறு யாரும் இந்த நேரத்தில் ஆத்ம உணர்வுடையவர்களாக இல்லை.
தன்னை ஆத்மா என்று ஒரு வேளை புரிந்துக் கொள்ளலாம். ஆனாலும்
பரமாத்மாவின் அறிமுகம் கிடையாது. நாம் ஆத்மா அழிவற்றவர்கள்,
இந்த உடல் அழியக் கூடியது என்று கூட புரிந்திருக்கலாம். ஆனால்
இதைப் புரிந்திருப்பதால் விகர்மம் அழியாது. புண்ணிய ஆத்மா பதீத
ஆத்மா என்று கூட கூறுகிறார்கள். நான் ஆத்மா இது என்னுடைய உடல்.
இதுவோ பொதுவான விஷயமாகும். முக்கியமான விஷயம் என்னை நினையுங்கள்
என பாபா புரிய வைக்கிறார். சரீர நிர்வாகத்திற்காக தேக உணர்வில்
வர வேண்டும். தேகத்திற்கு உணவு கொடுக்க வேண்டும். தேகம்
இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. ஒவ்வொரு பிறவியிலும் தங்களின்
சரீர நிர்வாகத்திற்கான காரியத்தைச் செய்து வருகிறீர்கள். கர்மம்
செய்தாலும் தன்னுடைய மணவாளனை நினைக்க வேண்டும். அந்த மணவாளனைப்
பற்றி யாருக்கும் தெரியாது. அந்த மணவாளன் அல்லது
தந்தையிடமிருந்து நமக்கு சொத்து கிடைக்கிறது. மேலும் அவருடைய
நினைவில் பாவங்கள் அழியும். இதை யாரும் புரிய வைக்கவில்லை.
குழந்தைகளாகிய நீங்கள் புது விஷயங்களைக் கேட்கிறீர்கள்.
வீட்டிற்குச் செல்வதற்கு நமக்கு வழி கிடைத்து விட்டது என்று
புரிந்துக் கொள்கிறீர்கள். நம்முடைய வீட்டிற்குச் சென்று பிறகு
ராஜாங்கத்திற்கு வருவீர்கள். அப்பா புதிய கட்டிடம் கட்டுகிறார்
என்றால் நிச்சயமாக அங்கு சென்று தங்குவோம் என்று இருக்கும்
அல்லவா? இப்போது உங்களுக்கு வழி கிடைத்து விட்டது. இதை வேறு
யாரும் அறியவில்லை. எவ்வளவு தான் யாகம், தவம் போன்றவைகள்
செய்தாலும், தலையை உடைத்துக் கொண்டாலும் யாரும் சத்கதியைப் பெற
முடியாது. இந்த உலகத்திலிருந்து அந்த உலகத்திற்குச் செல்ல
முடியாது. இதையும் புரிந்துக் கொள்ள வேண்டும். சாஸ்திரங்களில்
லட்சக்கணக்கான வருடங்கள் என எழுதி விட்டனர். ஆகையால்
மனிதர்களின் புத்தி வேலை செய்வதில்லை. நேற்றைய விஷயம் என்பதை
நீங்கள் நன்கு புரிந்துக் கொள்ள முடியும். பாரதம் சொர்க்கமாக
இருந்தது. நாம் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தினராக இருந்தோம்.
தேவி தேவதா தர்மம் மிகவும் சுகத்தைக் கொடுக்கக் கூடியதாகும்.
பாரதத்தைப் போன்று சுகம் வேறு யாரும் பெற முடியாது. சொர்கத்தில்
வேறு தர்மத்தைச் சார்ந்தவர்கள் போக முடியாது. உங்களைப் போன்று
சுகம் வேறு யாருக்கும் கிடைக்காது. எவ்வளவு வேண்டுமானாலும்
முயற்சி செய்யட்டும். பணத்தை செலவு செய்யட்டும். இருப்பினும்
சொர்க்கத்தில் கிடைத்த சுகம் அவர்களுக்குக் கிடைக்காது.
சிலருக்கு ஆரோக்கியம் நன்றாக இருக்கும் செல்வம் இருக்காது.
சிலருக்கோ செல்வம் நிறைய இருக்கும். ஆரோக்கியம் இருக்காது.
இதுவே துக்க உலகம் ஆகும். ஆகவே பாபா கூறுகின்றார்- ஓ,
ஆத்மாக்களே ! விழித்தெழுங்கள்...... இப்போது உங்களுக்கு
ஞானத்தின் மூன்றாவது கண் கிடைத்திருக்கிறது. எவ்வளவு
விழிப்புணர்வு வந்திருக்கிறது. நீங்கள் முழு உலகின் வரலாறு
புவியியலை அறிகிறீர்கள். பாபா எல்லாம் அறிந்தவர் அல்லவா?
இதனுடைய பொருள் அனைவரின் மனதையும் அறிந்திருக்கிறார் என்பதல்ல.
இவர் யார் எவ்வளவு புரிய வைக் கின்றார். எவ்வளவு தூய்யைமாக
இருக்கிறார், எவ்வளவு பாபாவை நினைவு செய்கிறார். இப்படி
ஒவ்வொருவரைப் பற்றியும் நான் ஏன் சிந்திக்க வேண்டும்....
ஆத்மாக்களாகிய நீங்கள் தங்களுடைய பரம்பிதா பரமாத்மாவை நினைக்க
வேண்டும் என்று வழியைக் காண்பிக்கிறேன். இந்த சிருஷ்டி
சக்கரத்தைப் புத்தியில் வைக்க வேண்டும். ஆத்ம உணர்வுடையவராக
நிச்சயம் ஆக வேண்டும். தேக உணர்வுடைய காரணத்தால் உங்களுக்கு
இந்த துர்கதி ஏற்பட்டிருக்கிறது. இப்போது நீங்கள் பாபாவை
நினைக்க வேண்டும். வீட்டிலிருந்தாலும் தாமரை மலருக்குச் சமமாக
மாற வேண்டும். நீங்கள் சுய தரிசன சக்கரதாரியாகவும்
இருக்கிறீர்கள். தேவதை களுக்கு சங்கு போன்ற வைகள் கிடையாது.
இந்த ஞான சங்கு பிராமணர்களாகிய உங்களுக்குத் தான் !
சீக்கியர்கள் சங்கு ஊதுகிறார்கள். மிகப் பெரிய ஒலி
எழுப்புகிறார்கள். நீங்கள் கூட இந்த ஞானத்தைக் கொடுக்கிறீர்கள்
என்றால், மிகப் பெரிய அவையில் ஒலி பெருக்கி வைக்கிறீர்கள்.
இங்கே நீங்கள் ஒலி பெருக்கி வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆசிரியர் படிக்க வைக்கிறார் என்றால், ஒலி பெருக்கி வைப்பார்களா
என்ன? இங்கே சிவபாபாவை மட்டும் நினைவு செய்தீர்கள் என்றால்,
பாவங்கள் அழியும். நான் சர்வ சக்திவான் அல்லவா? நீங்கள் ஒலி
பெருக்கி வைக்கிறீர்கள் என்றால் அதாவது நீண்ட தொலைவிற்கு ஒலியை
கேட்கலாம். இன்னும் போகப்போக அதுவும் பயன்படும்.. மரணம்
எதிரிலேயே இருக்கிறது என்பதை நீங்கள் சொல்ல வேண்டும். இப்போது
அனைவரும் திரும்பப் போக வேண்டும். மகாபாரத போர் கூட எதிரில்
நிற்கிறது. மகாபாரத போர் நடந்தது, அழிவு ஏற்பட்டது என்று கூட
கீதையில் எழுதப் பட்டிருக்கிறது. சரி, பிறகு என்ன நடந்தது.
பாண்டவர்களும் கரைந்து, மறைந்தனர். முதலில் வினாசம்
நடந்திருந்தால் பாரத கண்டமே காலியாகி இருக்கும், பாரதமோ
அழிவற்ற கண்டம், காலியாகாது என பாபா புரிய வைக்கிறார். பிரளயம்
ஏற்படாது என நீங்கள் அறிகிறீர்கள். பாபா அழி வற்றவர் என்றால்
அவருடைய பிறப்பிடமும் அழிவற்ற தாகும். பாபா அனைவருக்கும் சக்ததி
வழங்கும் வள்ளல், சுகம் சாந்தியின் வள்ளல் என்றால்,
குழந்தைகளுக்கு மகிழ்ச்சி இருக்க வேண்டும். யார் வந்தாலும்
அமைதி வேண்டும் என்கிறார்கள், ஆத்மாவிற்கு இவ்வளவு அமைதி ஏன்
நினைவிற்கு வருகிறது. சாந்தி தாமம் ஆத்மாக்களின் வீடு அல்லவா?
வீடு யாருக்கும் நினைவிருக்காதா? வெளி நாட்டில் யாராவது இறந்து
போகிறார்கள் என்றால் அவர்களை அவர்களுடைய பிறந்த பூமிக்கு
எடுத்துச் செல்ல வேண்டும் என விரும்பு கிறார்கள். பாரதம்
அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளலான துக்கத்தில் இருந்து
முக்தி அளிக்கக் கூடிய சிவபாபாவின் பிறப்பிடம் என்பது
அனைவருக்கும் தெரிந்திருந்தால் அதற்கு நிறைய மதிப்பு
கொடுப்பார்கள். ஒரே சிவனின் மீது வந்து மலர்களைப் போடுகிறார்கள்.
ஒரே ஒரு சிவபாபாவிற்கு மட்டும் தான் அர்ச்சனை செய்ய வேண்டும்.
இப்போதோ எத்தனை பேர் மீது மலர்களைப் போட்டு கொண்டிருக்கிறார்கள்.
யார் அனைவருக் கும் சுகம், சாந்தி வழங்கு கிறார்கரோ, அவரின்
பெயர் அடையாளத்தை மறந்து விட்டனர். யார் பாபாவை நன்கு
அறிந்திருக்கிறார்களோ அவர்களே சொத்து அடைவதற்கு முயற்சி
செய்கிறார்கள். என்னுடைய பெயரே துக்கத்தை நீக்கி சுகம்
அளிப்பவர் ஆகும். துக்கத்திலிருந்து விடுவித்து என்ன செய்வார்?
சாந்தி தாமத்தில் அமைதியாக இருக்கிறார்கள், சுகதாமத்தில்
சுகமாக இருக்கிறார்கள். என்னை நீங்கள் அறிகிறீர்கள்.
சாந்திதாமத்தின் இடம் வேறு.. சுக தாமத்தின் இடம் தனியாகும்.
இதுவோ துக்க உலகம் ஆகும். அனைவருக்கும் இந்த சமயம் துக்கமே
துக்கமாகும். இப்போது நாம் இவ்வாறு சுகத்திற்குச் செல்கிறோம்.
அங்கே 21 பிறவிகளுக்கு எந்த விதமான துக்கமும் இருக்காது என
நீங்கள் அறிகிறீர்கள். பெயரே சுக உலகம் ஆகும். எவ்வளவு
இனிமையான பெயர். உங்களுக்கு எந்த துன்பத்தையும் கொடுக்கவில்லை
என பாபா கூறுகின்றார். அப்பாவை மற்றும் ஆஸ்தியை நினைக்க
வேண்டும். தன்னை ஆத்மா என உணர வேண்டும். இந்த ஞானத்தை பாபா
உங்களுக்கு கற்பித்துக் கொண்டிருக்கின்றார். சத்யுகத்தில்
ஆத்மாவின் ஞானம் இருக்கிறது. ஆத்மாக்களாகிய நாம் இந்த உடலை
விட்டு விட்டு இன்னொரு உடலை எடுப்போம். இதற்கு ஆத்ம உணர்வு
என்று பெயர். இது ஆன்மீக ஞானம் ஆகும். இதை வேறு யாரும் கொடுக்க
முடியாது. ஆத்ம தந்தை வந்து ஆத்மாவிற்கு ஞானத்தை அளிக்கிறார்.
ஒவ்வொரு 5000 வருடத்திற்குப் பிறகும் கொடுக்கிறார். மனிதர்கள்
முற்றிலும் காரிருளில் இருக் கிறார்கள். இப்போது உங்களுக்கு
வெளிச்சம் கிடைத்திருக்கிறது. நீங்கள் அறியாமையின்
தூக்கத்திலிருந்து விழித்துள்ளீர்கள். அனைத்து
மணப்பெண்களுக்கும் மணவாளன் ஒரு பாபா ஆவார். நான் உங்களுடைய
தந்தை, மணவாளன், குருவிற்கெல்லாம் குரு, சுப்ரீம் டீச்சர் என
பாபா கூறுகின்றார். அனைத்து குருக்களுக்கும் சத்கதி அளிக்கும்
வள்ளல் ஒரேயொரு சத்குரு ஆவார். குழந்தைகளே நான் அனைவருக்கும்
சத்கதி அளிக்கிறேன் என கூறுகின்றார். முக்திக்கு (கதி) பிறகு
சத்கதி கிடைக்கிறது.
ஒவ்வொரு ஆத்மாவும் திரும்பப் போக வேண்டும் என பாபா புரிய
வைக்கிறார். ஆத்மா தான் சதோபிரதானமாக, சதோ, ரஜோ, தமோ ஆகிறது.
ஒரு சிலருக்கு மிகவும் குறைந்த நடிப்பே ஆகும். வந்தனர்,
சென்றனர். கொசு கூட்டத்தைப் போன்று பிறக்கின்றனர். இறக்கின்றனர்
பாபாவிடமிருந்து ஆஸ்தியை அடைவ தில்லை. பாபாவிடமிருந்து தூய்மை,
சுகம், சாந்தி என்ற சொத்து எடுக்கப்படுகிறது. பாபா
ஆத்மாக்களாகிய உங்களுக்குப் புரிய வைக்கின்றார். பாபா நிராகாரர்
ஆவார். அவரும் இந்த வாய் மூலமாக வந்து புரிய வைக்கின்றார்.
சிவபாபாவின் கோவில்கள் கூட மிகவும் உயர்ந்ததிலும் உயந்ததாகக்
கட்டுகிறார்கள். தீர்த்த யாத்திரைகள், மேளாவில் கலந்துக் கொள்ள
எவ்வளவு தொலைவு செல்கிறார்கள். மேலே குடிப்பதற்காக யாராவது ஞான
அமிர்தத்தை வைத்திருக்கிறார்களா? எவ்வளவு செலவு செய்கிறார்கள்.
அரசாங்கம் கூட அவர்களுக்காக எவ்வளவு ஏற்பாடுகளை செய்ய
வேண்டியிருக்கிறது. தொல்லைகள் ஏற்படுகிறது. தீர்த்த
யாத்திரைகளுக்கு சிறிய குழந்தைகளை எப்படி அழைத்து செல்வார்கள்.
குழந்தைகளை யாரிடமாவது பார்த்துக் கொள்ளும் படி விட்டு விட்டுச்
செல்கிறார் கள். உடன் அழைத்துப் செல்வதில்லை. இரண்டு மூன்று
மாதங்கள் யாத்திரை செய் கிறார்கள். இங்கே நீங்கள் வருகிறீர்கள்,
நீங்கள் உட்கார்ந்து கேட்க வேண்டும் படிக்க வேண்டும். சிறிய
குழந்தைகள் கேட்க மாட்டார்கள். இங்கே நீங்கள் யோகம் மற்றும்
ஞானத்தைக் கற்றுக் கொள்ள வந்துள்ளீர்கள். பாபா வந்து ஞானத்தைக்
கூறுகிறார் என்றால், எந்த ஒரு சத்தமும் வரக் கூடாது. இல்லை
என்றால் கவனம் சிதறும். அமைதியாக அமர்ந்து கவனம் கொடுத்து
கேட்க வேண்டும். யோகா மிகவும் எளிதாகும். ஏதேனும் வேலையை
செய்துக் கொண்டே இருங்கள். புத்தியின் தொடர்பு இருக்கட்டும்.
பாபாவின் நினைவிருப்பதால் மிகுந்த வருமானம் கட்டாயம்
கிடைக்கிறது. நாம் மிகவும் ஆரோக்கியமாக மாறுவோம் என நீங்கள்
அறிகிறீர்கள். தனக்குத் தானே பேசிக் கொள்ள வேண்டும். பாபாவின்
நினைவிலிருந்து தங்களின் கையினால் உணவை சமைக்க வேண்டும்.
கைகளினால் வேலை செய்யுங்கள், கூடவே தங்களின் பாபாவையும்
நினையுங்கள். உங்களுக்கும் நன்மை நடக்கும். மேலும் நினைவில்
இருப்பதால் பொருளும் நன்றாக உருவாகும். உங்களுக்கு உலகத்தின்
இராஜ்ய பதவி கிடைக்கிறது. நீங்கள் இங்கே இலஷ்மி நாராயணன்
ஆவதற்காக வந்திருக்கிறீர்கள். அனைவரும் நாங்கள் சூரிய வம்சத்தி
னராவோம் என கூறுகிறார்கள்.
நம்முடைய மம்மா பாபா இந்த நேரத்தில் பிரம்மா சரஸ்வதி என நீங்கள்
அறிகிறீர்கள். அடுத்த பிறவி யில் இலஷ்மி நாராயணன் ஆவார்கள்.
எதிர் காலத்தில் யார் என்ன ஆவர்கள் இப்படி யாருடைய பிறவி
பற்றியும் அறியவில்லை. நேரு என்ன ஆவார் என யாருக்குத் தெரியும்.
சரி, சிறிது தானம் செய்திருந்தால் இங்கே நல்ல குலத்தில் பிறவி
எடுப்பார். இப்போது உங்களுக்கு முழுமையாகத் தெரிகிறது. இப்போது
இவர் களுடைய பெயர் ஆதி தேவ் பிரம்மா, ஆதி தேவி சரஸ்வதி. அவர்களே
சொர்க்கத்திற்கு அதிபதி ஆவார்கள். சரி, இவர்களின் குழந்தை களும்
உடன் இருக்கிறார்கள். அவர்களும் நாங்கள் சொர்கத்திற்கு அதிபதி
ஆவோம் என கூறுவார்கள். இதுவே உறுதியாகும். சூட்சும வதனத்தில்
கூட நீங்கள் பார்க்கிறீர்கள். தேவி களின் கோவில்களில் கூட
நிறைய திருவிழாக்கள் நடைபெறுகின்றது. இப்போது ஜகதம்பாவோ ஒருவரே
ஆவார். அவருடைய தோற்றமும் ஒன்றே இருக்க வேண்டும். மம்மாவையும்
கூட நீங்கள் பார்க்கிறீர்கள். குழந்தைகாளகிய உங்களின் தோற்றமும்
இருக்கிறது பிறகு அதர் குமாரி என பெயர் வைத்துவிட்டனர். இதுவும்
நாமே மாறுகிறோம் என நீங்கள் அறிகிறீர்கள். நாம் அனைவரும்
பிரம்மா குமார்-குமாரி ஆவோம். திருமணம் ஆனவர்களும் நாங்கள்
பிரம்மா குமார்-குமாரி, ஒரு தந்தையின் குழந்தைகள் என
கூறுகிறார்கள். உங்களுடைய நினைவு சின்னமே ஆகும். நீங்கள்
அமர்ந்து இந்த முழு ஞானத்தை அளிக்கிறீர்கள், இந்த தில்வாடா
கோவில் மிக அர்த்தத்துடன் இருக்கிறது. ஆனால் இதை நீங்கள் தான்
புரிய வைக்க முடியும். நாம் ஸ்தாபனை செய்துக் கொண்டிருக்கிறோம்,
இராஜ யோகத்தால் ஸ்ரீமத்படி பாரதத்தை சொர்க்கமாக மாற்றிக்
கொண்டிருக்கிறோம் என நீங்கள் அறிகிறீர்கள்.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ஞானம் மற்றும் யோகத்தின் மீது முழு கவனம் வைக்க வேண்டும்.
கேட்கும் போது மிகவும் சாந்தமாக ஒரு முகத்துடன் அமர வேண்டும்.
கர்மயோகியாகவும் ஆக வேண்டும்.
2. பாபா வீட்டிற்கு வழியை காண்பித்திருக்கிறார் அதை
அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும்.சுய தரிசன சக்கரதாரி ஆவதன்
கூடவே ஞான சங்கையும் ஊத வேண்டும்.
வரதானம்:
மகான் மற்றும் மேகமான் (விருந்தாளி) இந்த இரண்டு ஸ்மிருதிகள்
மூலம் அனைத்துக் கவர்ச்சிகளில் இருந்தும் விடுபட்டு
இருக்கக்கூடிய, அனைத்தையும் கடந்து அப்பால் இருக்கும் சாட்சி
ஆகுக.
அனைத்தையும் கடந்த (விடுபட்ட) சாட்சி நிலையின் அவஸ்தாவை
அமைத்துக் கொள்வதற் காக இரண்டு விஷயங்கள் நினைவில் இருக்க
வேண்டும் - 1. நான் ஆத்மா, மகான் ஆத்மா. 2. நான் ஆத்மா. இப்போது
இந்தப் பழைய உலகில் மற்றும் இந்தப்பழைய சரீரத்தில் விருந்தாளி
யாக இருக்கிறேன். இந்த ஸ்மிருதியில் இருப்பதன் மூலம் தானாகவே
மற்றும் சகஜமாகவே அனைத்து பலவீனங்கள் மற்றும் பற்றுதல்களின்
கவர்ச்சி முடிந்து போகும். மகான் எனப் புரிந்து கொள்வதன் மூலம்
யார் சாதாரண கர்மம் அல்லது சங்கல்பம் சம்ஸ்காரங்களின் வசமாகிச்
செல்கிறார்களோ, அவர்கள் மாற்றமடைந்து விடுவார்கள். மகான்
மற்றும் மேகமான் எனப் புரிந்து கொண்டு நடப்பதால் மகிமைக்குத்
தகுதி உள்ளவராகவும் ஆகி விடுவீர்கள்.
சுலோகன்:
அனைவரின் சுப பாவனை மற்றும் சகயோகத்தின் துளிகள் மூலம்
பெரிய காரியமும் கூட சகஜமாகி விடும்.
அவ்யக்த இஷாரா : ஜுவாலா சொரூப ஸ்திதியில் இருந்து கொண்டு,
சக்திசாலி நினைவின் அனுபவம் செய்யுங்கள்
சக்திசாலி மனதின் அடையாளம் - ஒரு விநாடியில் எங்கே
விரும்புகிறீர்களோ, அங்கே சென்று சேர்ந்து விட வேண்டும்.
மனதுக்கு எப்போது பறக்க வருகிறதோ, பயிற்சி ஆகி விட்டால்,
விநாடியில் எங்கே விரும்புகிறீர்களோ, அங்கே சென்று சேர முடியும்.
அவ்வப்போது சாகார வதனத்தில், அவ்வப்போது பரந்தாமத்தில், ஒரு
விநாடியின் வேகம் - இப்போது இந்த அப்பியா சத்தையே அதிகப்
படுத்துங்கள். அப்போது நினைவு சக்திசாலி ஆகி விடும்.