23.08.26 காலை முரளி
ஓம் சாந்தி 31.03.2011 பாப்தாதா,
மதுபன்
திடமான எண்ணத்தின் மூலம் டென்ஷன் இல்லாதவராகி அனைவருக்கும்
எடுத்துக்காட்டாக, ஆதார மூர்த்தி ஆகுங்கள். மன சக்தி மூலம்,
துக்கமான ஆத்மாக்களுக்கு குஷி என்ற வரதானத்தை வழங்குங்கள்.
இன்று மிக மிக உயர்ந்த தந்தை, தன்னுடைய கோடியில் ஒரு குழந்தையை,
அக்கோடியிலும் தனிப்பட்ட குழந்தையின் பாக்ய ரேகையைப் பார்த்துக்
கொண்டிருக்கிறார். ஒவ்வொருவரின் நெற்றியிலும், திவ்ய
நட்சத்திரத்தின் ஒளியானது ஒளிவீசிக் கொண்டிருப்பதைப் பார்த்துக்
கொண்டிருக்கிறார் கண்களில் சிநேகத்தின் ரேகையைப் பார்த்துக்
கொண்டிருக்கிறார், உள்ளத் தில் திலாராமின் ஆழமான அன்பின்
ரேகையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார், கைகளில் ஞான
கஜானாக்களின் ரேகையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். பாதங்களில்
பலமடங்கு பாக்ய ரேகையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு
குழந்தையும் இந்த ரேகைகளில் வரிசைக் கிரமாக முழுமை
அடைந்திருக்கிறார்கள். இம் மாதிரியான பாக்யம் உங்களைத் தவிர
வேறு யாருக்கும் இல்லை. உங்களுடைய இவ்வளவு சிரேஷ்ட பாக்யம்
பிரகாசித்துக் கொண்டிருப் பதைப் பார்க்க முடிகிறது. மேலும்
இந்த பாக்யம் அழியாததாக ஏன் ஆகிறது? ஏனென்றால் கொடுக்கக்
கூடியவர் அழியாதவர் ஆவார். இந்த சங்கமயுகத்தில் தான் இவ்வாறான
சிரேஷ்ட பாக்யம் பிராப்தியாகிறது. அது எதிர்காலத்திலும் கூட
நடைமுறையில் வந்து கொண்டே இருக்கிறது. இந்த சங்கமயுகம்
அனைத்துப் பிராப்தி களுக்கான யுகமாகும். இந்த பாக்யத்தை எந்த
அளவு சேமிக்கிறீர்களோ அந்த அளவிற்கு பல ஜென்மங்களுக்கு
பாக்யத்தின் பலன் பிராப்தியாகிக் கொண்டே இருக்கிறது. இந்த
சங்கமயுகத்தின் மகிமையை குழந்தைகளாகிய நீங்கள் தான் புரிந்து
கொண்டிருக்கிறீர்கள். சங்கமயுகத்தின் பிராப்திகளை முழு
கல்பத்திலும் உயர்ந்ததிலும் உயர்ந்த தாகும். ஒவ்வொரு
குழந்தையும் சங்கமயுகத்தின் பிராப்தியை அடை வதில் எந்த அளவு
முழுமை அடைந்திருக் கிறார்கள் என பார்த்துக் கொண்டு இருக்கிறார்.
நீங்கள் அனைவரும் அனைத்துப் பிராப்திகளின் அனுபவத்தில் சதா
இருந்து கொண்டே இருக் கிறீர்களா? இல்லை அவ்வப்பொழுதா? அழியாத
தந்தையினுடைய பிராப்திகள் கூட அழியாத தாகும். பாப்தாதா ஒவ்வொரு
குழந்தையையும் எந்த ரூபத்தில் பார்க்க விரும்புகிறார் என்பது
உங்களுக்கத் தெரியுமல்லவா? ஒவ்வொரு குழந்தையும் சுய ராஜ்ய
அதிகாரி ராஜாவாக வேண்டும் என பாப்தாதா விரும்புகின்றார்.
சுயத்தின் மீது என்றால் கர்ம இந்திரியங்கள் மீது மனம், புத்தி
சம்ஸ்காரங்களின் மீத ராஜாவாகி இராஜ்யம் செய்வதாகும்.
எதிர்காலத்தில் இராஜ்ய அதிகாரி ஆகத்தான் போகிறீர்கள், ஆனால்
இப்பொழுது சுயராஜ்ய அதிகாரி ராஜாவாக ஆக வேண்டும். அனைத்து எல்லா
கர்ம இந்திரியங்களும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்
ஏனென்றால் தந்தை மூலமாக அனைத்துப் பிராப்திகளின் கஜானா
பிராப்தியாகி யுள்ளது. ஆகையால் பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும்
சுயராஜ்ய அதிகாரி ராஜா ரூபத்தில் பார்க்க விரும்புகிறார். ஆகவே
நீங்கள் அனைவரும் சுயராஜ்ய அதிகாரி ஆகவிட்டீர் களா? மனம்
புத்தியின் மீது ஆட்சி செய்யும் சக்தி, கட்டுப்படுத்தும் சக்தி
வந்துவிட்டதா? அடிமை ஆகவில்லைதானே? நீங்கள் அதிகாரிகள்
எப்பொழுதெல்லாம் பாப்தாதாவின் துணையில் இருக்கிறீர்களோ, தனியாக
உணர்வதில்லையோ, தந்தையை சதா துணைவனாக்கி வைத்திருக் கிறீர்களோ,
அப்பொழுத மனம் புத்தியானது எனக்கு சக்தியில்லை,
கட்டுப்படுத்தும் சக்தி இல்லை எனக் கூற முடியாது. ஆகையால்
பாப்தாதாவின் சக்திகளாகிய நமக்கு கூறுகிறார். எந்த சொரூபத்தை
நினைவில் வைத்திருந்தால், எப்பொழுதுமே பாபாவின் கூடவே இருப்பதை
மறக்க முடியாது? அது சிவசக்தி சொரூபம் சிவனும் சக்தியும்
இணைந்தே இருக்கிறார்கள், இந்த நினைவு மாயையை வென்றவர்கள்,
இயற்கையை வென்றவர்களாக்கிவிடும். ஏனென்றால் பாப்தாதா கூறிக்
கொண்டிருக்கின்றார், நிகழ்காலத்தில் அனைவரும் இயற்கைக்கு
இடையூறு செய்து கொண்டிருக்கிறார்கள் அதனால் இயற்கையும் இடையூறு
செய்கிறது. இன்றைய நாட் களில் நீங்கள் பார்த்துக்
கொண்டிருக்கிறீர்கள். இயற்கை பல இடங்களில் தனது காரியத்தைச்
செய்து கொண்டிருக்கிறது ஆனால் நீங்கள் இயற்கையை வென்றவர்களாகி
அதையும் சதோபிரதானமாக மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். மனிதர்கள்
இயற்கையின் குழப்பங்களைப் பார்த்து, நாளை என்ன நடக்குமோ என
பயப்படுகிறார்கள், ஆனால் உங்களுக்கு தெரியும் எல்லாம்
நல்லபடியாக நடக்கும் என்பது ஏனென்றால் சிருஷ்டி சக்கரத்தின் படி
அமிர்தவேளை நடந்து கொண்டிருக்கிறது ஆகவே அமிர்தவேளைக்குப் பின்
என்ன ஏற்படும்? விடியற்காலை இருள்விலகி ஒளி வருகிறது. அதனால்
உங்களுக்கு குஷி இருக்கிறது. அதாவது இப்பொழுது சுகமயமான உலகம்
வந்தே விட்டது என்று. அங்கு இயற்கை கூட சுகமானதாக இருக்கும்
குஷியாக இருக்கிறது தானே. அந்த இராஜ்யத்தில் துக்கம்
அசாந்தியினுடைய பெயர் அடையாளம் கூட இருக்காது. ஏனென்றால்
இப்பொழுது சங்கமயுகத்தில் நீங்கள் இயற்கையை வென்றவர்களாக ஆகிக்
கொண்டிருக்கிறீர்கள் அனைவருக்கும் குஷிதானே? கூறுங்கள் எங்களது
இராஜ்ஜியம் வர இருக்கிறது இந்த குஷி இருக்கிறதா? இந்தக்
குஷியில் இருப்பவர்கள் கையை உயர்த்துங்கள் மிகவும் நல்லது.
குஷியாக இருப்பதற்கு வாழ்த்துக்கள், ஆனால் இந்த குஷி துக்கம்
அசாந்தியில் இருக்கக்கூடிய சகோதர, சகோதரிகளுக்கு தந்தையின்
மூலம் கிடைக்கப் பெற்ற குஷியின் கிரணங்கள் சென்றடைந்து விட்டனவா?
பாப்தாதா கூறியுள்ளார், அதாவது இம்மாதிரியான மனசா சேவை
செய்வதற்கான நேரத்தை ஒவ்வொருவரும் தங்களது தினசரி நடவடிக்கையில்
ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எவ்வாறு மற்ற காரியங்களுக்கு
நேரத்தை ஒதுக்குகிறீர்களோ அவ்வாறே உங்களது ஆத்மாக்களுக்கு
மனசக்தி மூலமாக அதிகமான வரதானங்களைக் கொடுத்து
குஷிப்படுத்துங்கள். மனசா úவைக்காக தங்களது நேரத்தை
ஒதுக்கியவர்கள் கையை உயர்த்துங்கள். நல்லது யார் இதைச்
செய்யவில்லையோ, அவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.
ஆனால் ஒவ்வொரு வரும் இதற்கான நேரத்தைக் கொடுக்க வேண்டும்.
ஏனென்றால் உங்களுடைய சகோதர, சகோதரிகள் அல்லவா. அதனால் இரக்கம்
ஏற்படுகிறது தானே! இறக்கமில்லாமல் போய்விடுவதில்லைதானே, இறக்கம்
ஏற்படுகிறது தானே! மேலும் பாப்தாதா எல்லோரிடமும் சங்கமயுகத்தின்
இரண்டு விசேஷங் களைப் பார்க்க விரும்புகிறார். அவை
விலைமதிப்புள்ளதாகவும் ஒன்று சங்கல்ப சக்தி, மற்றொன்று
சங்கமயுகத்தின் நேரம். ஏனென்றால் சங்கமயுக காலத்தில் ஒரு
பிறவியில் பல ஜென்மங்களுக்கான பலனை உருவாக்க வேண்டும். அதனால்
இன்றைய நாளில் பாப்தாதா பார்க்கிறார், அதாவது நிறைய பேருக்கு
சுத்தமான சங்கல்பங்கள் குறைவாக இருந்தாலும் வீணான சங்கல்பங்கள்
வந்து கொண்டே இருக்கின்றன. விலைமதிப்பில்லாத இந்த ஒரு
ஜென்மத்தில் வீணான சங்கல்பங்களை முடித்து விட வேண்டும். சங்கம
யுகத்தில் மகத்துவத் தின்படி ஒவ்வொரு நொடியும் மிக
விலைமதிப்பிள்ள்ளாத நேரமாக உள்ளது. ஆகவே ஒவ்வொருவரும் நேரம்
மற்றும் சங்கல்பங்களில் மதிப்பை உணர்ந்து நேரம் மற்றும்
சங்கல்பங் களை வெற்றியடையச் செய்யுங்கள். இவ்வாறு ஸ்தூல
செல்வத்தை சரியாகப் பயன்படுத்து வதன் மூலம் பல ஜென்மங்களுக்கு
சேமிப்பாகிறது என்று அறிந்து கொண்டிருக்கிறீர்கள். இவ்வாறே
இரண்டு விசயங்களிலும் கவனம் கொடுத்து வெற்றி மூர்த்தியாகுங்கள்.
பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும் இன்று விசேஷமான வரதானம்
கொடுத்துக் கொண்டி ருக்கிறார். ஒவ்வொரு குழந்தையும் இன்று முதல்
தன்னை டென்ஷன் இல்லாமல் ஆக்க முடியுமா? இன்றிலிருந்து அட்டன்ஷன்
வையுங்கள் டென்ஷன் இல்லாமல் பாப்தாதா எப்பொழு தெல்லாம்
குழந்தைகளை டென்ஷனில் பார்க்கிறாரோ, அப்பொழு நினைக்கிறார்,
இப்பொழுது இந்த குழந்தைகளின் போட்டோ எடுத்து வைக்க வேண்டுமென்று.
அதனால் தாங்களே புரிந்து கொள்வார்கள் நான் என்னவாக ஆகிவிட்டேன்
என்று. பாப்தாதா குழந்தைகள் மனதை வென்றவர்களாக, உலகை
வென்றவர்களாக ஆவதை விரும்புகிறார். டென்ஷன் மனதில் வருகிறது
தானே. நீங்களோ இராஜா, சுயராஜ்ஜிய அதிகாரிகள் அல்லவா. மனம்
உங்களுடையதா அல்லது மனம் உங்களுக்கு எஜமானரா? நீங்கள் என்ன
சொல்கிறீர்கள் ? முழு நாளும் என் மனம் என்று தானே சொல்கிறீர்கள்.
மனம் எஜமானர் இல்லை தானே. யார் தைரியம் வைக்கிறார்களே,
தந்தையின் வரதானம் சகஜமாகக் கிடைக்கிறது, ஆனால் சிறிது கவனம்
வைக்க வேண்டி உள்ளது. தந்தையின் வரதானத்தினுடைய உதவியை அனுபவம்
செய்து பாருங்கள். அனைவருடைய முகத்தைப் பார்க்கும்போது எவ்வாறு
காட்சியளிக்கிறது? டென்ஷன் ஏதுமின்றி, தாமரை மலருக்கு சமமாக
அல்லது மலர்ந்த ரோஜா மலருக்கு சமமாக உள்ளது. பாப்தாதா முதலில்
கொடுத்த வேலையை. எவ்வளவு சதவீதம் முடித்தீர்கள் என்று
பார்த்தார். எல்லா இடங்களிலிருந்தும் சிலபல செய்திகள்
வந்துள்ளன. இங்கு கூட முடிவுகள் தெரியவருகிறது. கவனம்
கொடுத்ததற்கு பாப்ததாதா வாழ்த்துக்களை கொடுத்துக் கொண்டி
ருக்கிறார். ஆனால் இப்பொழுது வாணி மூலமாக கேட்பதற்கான காலம்
குறைந்துள்ளது, ஆகையால், மனம் மற்றும் உங்களது முகம் மேலும்
நடவடிக்கை மூலமாக சேவை செய்யுங்கள். இப்பொழுது செய்யக் கூடிய
பயிற்சியானது வரக்கூடிய காலங்களில் காரியங் களில்
செயல்படுத்தப்படும். ஆகவே இன்றிலிருந்து டென்ஷன் இல்லாமல்
இருப்பதற்கான சங்கல்பம் செய்கிறீர்களா? செய்ய முடியும்
என்பவர்கள் கையை உயர்த்துங்கள். டென்ஷன் இல்லாமல் அனைவருடைய
புகைப்படத்தையும் எடுங்கள். மிக நல்லது. ஆகவே சூழ்நிலை யின்
காரணமாக பலர் டென்ஷனில் இருக்கிறார்கள். இன்றைய நாட்களில்
டென்ஷன் உலகத்தில் மிக அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஆகவே
உங்களது டென்ஷன் இல்லாத அனுபவம் நடவடிக்கை மேலும் முகமும்
அவர்களுக்கு முன்னால் ஆதார மூர்த்தியாக ஆக்கி விடும்.. ஒரு வேளை
இன்றைய உலகத்தில் சுற்றி வந்தாலோ அல்லது செய்திகளைக் கேட்டாலோ
என்ன காட்சியை பார்க்கிறீர்கள். தங்கள் குஷிக்காக தற்காலிகமான
சாதனங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். ஆகவே டென்ஷனில்
உள்ளவர்களுக்க முன்னுதாரண மாக வெளிப்படுத்தும்போது அவர்களுக்கு
நீங்கள் உதவி செய்பவர்களாக தென்படுகிறீர்கள். ஆகவே மனதில்
எண்ணங்களில் டென்ஷன் இல்லாமல் இருக்கும் சங்கல்பம் செய்வீர்களா?
திடமாகவா? அல்லது சாதாரணமாகவா? எங்கு உறுதி இருக்கிறதோ, அங்கு
வெற்றி அடங்கியுள்ளது. செய்வோம் என்பதல்ல, செய்தே ஆக வேண்டும்.
பிடித்துள்ளதா? இவ்வாறு இருப்பவர்கள் கையை உயர்த்துங்கள்.
பாப்தாதா ஒரு விசயத்தைப் பார்க்கிறார். கையை உயர்த்தி எனக்கு
சந்தோஷத்தை ஏற்படுத்துகிறார்கள். கையை உயர்த்துவதால் சந்தோஷம்
வருகிறது. ஆனால் இப்பொழுது என்ன செய்வீர்கள்? திட சங்கல்பம்,
சாதாரண சங்கல்பம் இரண்டிலும் பகல் இரவிற்கான வித்தி யாசம்
இருக்கிறது. செய்வீர்கள், ஆனால் செய்தே ஆக வேண்டும். இந்த
வருடத்தின் பாப்தாதா சந்திப்பின் கடைசி நாளாகும். அடுத்த
பாப்தாதா சந்திப்பில் ஒவ்வொரு சிறிய பெரிய சென்டரில் இடை இடையே
போதுமான நேரம் இருக்கிறது. காரணம் கூறாமல் நிவாரண சொரூபத்தைப்
பார்க்க விரும்புகிறார். ஆகவே எவ்வளவு ஊக்கம் உற்சாகம்
இருக்கிறது? பிராமண பரிவாரத்தில் டென்ஷனின் பெயர் அடையாளம் கூட
இருக்கக் கூடாது. முடியும் தானே ஒவ்வொருவரும் தனக்குத்தானே
கேளுங்கள் முடியுமா? என்று மகிழ்ச்சியான செய்தியை பாப்தாதா
கேட்க விரும்புகிறார்.
அனைவரும் விருப்பம் வைப்பதைப் பாப்தாதா பார்க்கிறார்,
செய்வீர்கள் ஆனால் எப்பொழு தெல்லாம் பிரச்சனை வருகிறதோ, அது
தன்னுடையதாக்கிக் கொள்கிறது. பிறகு இனிமையான வார்த்தைகளைக்
கூறுகிறீர்கள். , இவ்வாறு நடக்கத்தானே செய்யும் என்று.
பாப்தாதாவிடம் மிகவும் இனிமையாக இவ்வாறு கூறிக்
கொண்டிருக்கிறீர்கள். எல்லா காரணங்களுக்கும் நீங்கள்
ராஜாவாகிவிடுங்கள். சுயராஜ்ஜிய அதிகாரி ஆகிவிடுங்கள். ஆகவே
இன்று பாப்தாதா எதிரில் அமர்ந்திருக்கும் அனைத்துக்
குழந்தைகளுக்கும், தூரத்தில் அமர்ந்திருந்தாலும் உள்ளத் தில்
அமர்ந்திருக்கிறீர்கள். இங்கு நீங்கள் கண்களுக்கு முன்னால்
அமர்ந்துள்ளீர்கள். ஆனால் பாப்தாதா தூரத்தில் அமர்ந்துள்ள
குழந்தைகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
பாப்தாதாவிற்கு தெரிய வருகிறது மதுபன்னில் கூட இன்றைய நாட்களில்
சிறு சிறு கீதா பாடசாலைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.
வந்திருக்கக் கூடிய, தரையில் அமர்ந்திருக்கக் கூடிய
குழந்தைகளுக்கும் பல்வேறு இடங்களில் அமர்ந்திருக்கும்
குழந்தைகளுக்கு அனைத்திற்கும் முதன் முதலில் தன்னுடைய அன்பு
நினைவுகளைக் கொடுத்துக் கொண்டி ருக்கிறார். இன்று
சாந்திவனத்தில் 28000 த்திற்கும் அதிகமான சகோதர, சகோதரிகள்
வந்துள்ளீர்கள். பாப்தாதா குழந்தைகளுக்கு சிறு கஷ்டம் வருவதைப்
பார்க்கிறார். ஆனால் சந்தோஷத்தினால் இந்த கஷ்டம் அனுபவமாவதில்லை.
இருப்பினும் அமைதியாக தூங்குவதற்கு 3 அடி நிலம் கிடைத்துள்ளது
தானே பட்டத்து ராணியாகியுள்ள குழந்தைகளுக்கு பாப்தாதா விசேஷ
அன்பு நினைவுகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். நல்லது, இன்று
முதல் முறையாக பாப்தாதா சந்திப்பிற்கு மதுபன் வந்துள்ளவர்கள்
எழுந்திருங்கள். இன்று முதல் முறையாக பிராமண பரிவாரத்தில்
வந்துள்ள குழந்தைகளுக்கு பாப்தாதா தனது தரப்பிலிருந்தும்
பிராமண குடம்பம் சார்பிலிருந்தும் மிகுந்த வாழ்த்துக்களை
அளிக்கிறார். ஏனெனில் மிகவும் தாமதமாக வந்தாலும்
வந்துவிட்டீர்கள். பாப்தாதா மற்றும் குடும்பத்தைப்
பார்த்துவிட்டீர்கள். பாப்தாதா புரிந்து கொள்கிறார். நீங்கள்
விரும்பினால் இன்று வந்தவர் களுக்கு விசேஷ வரதானம் உள்ளது,
அதாவது உளப்பூர்வமாக விரும்பினால் கடைசியில் வந்தாலும் தீவிர
கதியில் முன்னேறிச் செல்ல முடியும். ஆத்மாக்களாகிய உங்கள்
அனைவரிட மும் பாப்தாதா மற்றும் பரிவாரத்தினுடைய அன்பு
இருக்கிறது, சகயோகியாக ஆவார்கள், சிநேகமும் கொடுத்து உங்களை
முன்னேறிச் செல்ல வைப்பார்கள். ஆகையால் இங்கு
வரக்கூடியவர்களுக்கு முன்னேறிச் செல்வதற்கான வாய்ப்பு,
டிராமாவில் மிக நல்ல முறையில் கிடைக்கிறது. இந்த முழு
பரிவாரமும் எங்கிருந்து வந்திருந்தாலும் உங்களுக்கு சகயோகி
யாவார்கள். நீங்கள சகஜயோகிகளாக ஆக வேண்டும் நல்லது.
சேவை இராஜஸ்தான் மற்றும் போபால் ஜோனுக்கானது: இராஜஸ்தான் பூமி
பிரம்மா பாபாவிற்கு மிகவும் பிடித்தது, அது இராஜஸ்தானில் மதுபன்
ஆகிவிட்டது. இராஜஸ்தானின் சேவையை பார்க்கிறார், ஒவ்வொரு
இடத்திலும் நல்ல முறையில் வளர்ச்சி ஏற்பட்டுக் கொண்டி ருக்கிறது.
புது புது ஆத்மாக்களுக்கும் தந்தையினுடைய செய்தியை
கொடுப்பதற்கான நிகழ்ச்சி களும் கூட நல்ல முறையில் நடந்து
கொண்டிருக்கின்றன. ஆனால் பாப்தாதா அனைவருக்கும் இவ்வாறு
கூறுகிறார், ஒவ்வொரு சேவை நிலையமும் யக்ஞ சிநேகி
வாரிசுகளுக்கான குழுவை உருவாக்க வேண்டும். அது தனக்கும் கூட
வளர்ச்சியை அதிகரிக்கும், மற்றவர்களையும் யக்ஞ சிநேகிகளாக
உருவாக்கும். சென்ற முறை பாப்தாதா இவ்வாறு கூறினார், யக்ஞ
சிநேகி, சேவாசிநேகி மற்றும் வெற்றி அடைவதில், முன்னேறக்
கூடியவர்களில் அதிகரித்துக் கொண்டி ருக்கிறது. நல்லது.
செய்திகள் கொடுக்கும் காரியத்தில் ஒவ்வொருவரும் ஊக்கம்
உற்சாகத்தில் இருக்கிறார்கள். இப்பொழுது பாப்தாதா பார்க்க
விரும்புவது என்னவென்றால், சுயம், சேவை இரண்டிலும் சமநிலை
வகிக்கக் கூடியவர்கள் ஒவ்வொரு சென்டரிலும் மிக அதிகமாக முன் வர
வேண்டும். வெறும் சேவை மட்டுமல்ல, இப்பொழுது சுயமாற்றத்திற்கான
நேரம் அதிக மில்லை. ஆகையால் சுயத்துடன் கூடிய சேவை இருக்க
வேண்டும். ஒவ்வொரு சேவா கேந்திரத்திலும் அனைவரும் தடைகளற்றவர்
களாகவும் டீச்சர் மட்டுமின்றி, முழு வகுப்புமே தடைகளற்றதாகும்
மற்றும் சுயமாற்றத்திற்கான கவனம் கொடுப்பவர் களாகவும் இருக்க
வேண்டும். ஆகவே இதை அதிகப்படுத்துங்கள். ஒவ்வொருவருடைய
வார்த்தைகளையும் கேளுங்கள், மேலும் அவர்களுக்கு ஊக்கம்,
உற்சாகத்தின் சிறகுகளை ஒருவாக்குங்கள். அப்பொழுது
பாப்தாதாவிற்கு தடைகளற்ற சென்டர்களின் செய்தியைக் கொடுக்க
முடியும். மற்றபடி பாப்தாதா பார்த்தார். இராஜஸ்தானும்
முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது, வளர்ச்சி அடைந்து கொண்டே
இருக்கும். ஒவ்வொரு குழந்தையும் முன்னேறிச் செல்வதற்கான
வாழ்த்துக்களை பாப்தாதா கொடுத்துக் கொண்டிருக்கிறார். நல்லது
போபால் ஜோன்: நல்லது இந்த ஜோன் கூட தங்களது மாற்றம் மற்றும்
சேவையினுடைய வளர்ச்சியில் நன்றாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.
பாப்தாதாவிற்கு சந்தோஷம் இருக்கிறது. அதாவது, ஒவ்வொரு
குழந்தையும் சுயத்திற்கான திட்டங்களை உருவாக்கிக் கொண்டிருக்
கிறார்கள். மேலும் நடைமுறையிலும் கூட கொண்டு வருகிறார்கள்.
பாபாவினுடைய சுப ஆசை என்னவென்றால் சதா முன்னேறிக் கொண்டே
இருக்க வேண்டும். ஒவ்வொரு ஜோனிலும் பார்க்கப்படுகிறது, அதாவது
இப்பொழுது உக்கம் உற்சாகம் இருக்கிறது ஆகையால் சேவையில்
அவரவருடைய இடங்களில் வளர்ச்சி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்,
பாப்தாதா முன் கூட்டியே வாழ்த்துக்களை கொடுத்துக்
கொண்டிருக்கிறார். வளர்ந்து கொண்டே இருங்கள், பறந்து கொண்டே
இருங்கள், பறக்க வைத்துக் ùகோண்டும் இருங்கள்.
இரட்டை அயல்நாட்டு சகோதர சகோதரிகளுடன் :
இரட்டை அயல்நாட்டினரிடம் சோதனைத் தாள் வருகின்றன, ஆனால் ஒரு
விசேஷம் என்னவென்றால் அவர்கள் உண்மையான உள்ளத்துடன் பேசிக்
கொண்டு இருக்கிறார்கள். உள்ளுக்குள் வைத்தக் கொள்வதில்லை மேலும்
அதற்கான உண்மையான உள்ளத்துடன் அதற்கு தீர்வும் செய்கிறார்கள்.
பாப்தாதா சந்தோஷ மடைகின்றார். அந்த உண்மையான உள்ளத்தை அப்படியே
ஏற்றுக் கொள்கிறார். நல்ல முடிவுகளைப் பார்த்து வாழ்த்துக்களை
அளித்துக் கொண்டிருக்கிறார், மேலும் வரதானமும் அளித்துக்
கொண்டிருக்கிறார். எப்பொழுதும் முன்னேறிக் கொண்டே இருக்கிறார்.
டீச்சர்களும் கூட நல்ல முறையில் முயற்சி செய்துக்
கொண்டிருக்கிறார்கள். பாப்தாதாவிற்கு எல்லோரை யும் விட
வெளிநாட்டவர்கள் மதுபன்னின் பலனை அதிகமாக எடுத்துக்
கொண்டிருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். பாப்தாதா
பார்க்கிறார், வெளிநாட்டில் சிறுசிறு இடங்களில் கூட உயர்ந்த
ஒலியை எழுப்புவதற்கான ஆரம்பம் உருவாக்கப்பட்டு விட்டது. ஆகவே
சேவைக்கான வாழ்த்துக்கள் சுய மாற்றத்திற்கான வாழ்த்துக்களும்
உரித்தாகுக. பறந்து செல்லுங்கள், பறக்க வைத்துக் கொண்டே
செல்லுங்கள் நல்லது.
நாலாபுறமும் உள்ள உள்நாடு, வெளிநாட்டுக் குழந்தைகளுக்கு
புருஷார்த்தத்தில் சகஜமாக முன்னேறவும் மற்றும் முன்னேற
வைக்கவும் வாழ்த்துக்களை அளித்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது
வரக்கூடிய நேரத்திற்காக பாப்தாதா வழிகாட்டியுள்ளார், அதாவது,
தீவிர புருஷார்த்தியாகி நொடியில் முற்றுப் புள்ளி வைப்பதற்கான
பயிற்சி மிக அவசியமாக இருக்கிறது. இந்த விசயத்தை மிகச்சாதாரணமா
எடுக்க வேண்டாம். திடீரென்று ஏதாவது ஏற்படும், அதற்காக பாபாவின்
சுப ஆசை என்னவென்றால் ஒவ்வொரு குழந்தையும் கூடவே இருந்து கூடவே
சென்று பிரம்மா பாபாவுடன் சேர்ந்து இராஜ்ஜியம் செய்ய வேண்டும்
என்பதாகும். சிவபாபா சாட்சியாளராகி விடுவார். துணைவர்களாக
ஆகவேண்டுமென்றால் பாப்தாதாவிற்கு சமமானவர் ஆக வேண்டும். நல்லது.
ஒவ்வொரு குழந்தைக்கும் பாப்தாதாவின் இவ்வருடத்திற்கான
வாழ்த்துக்கள் மற்றும் வரக்கூடிய ஆண்டிற்கும் வாழ்த்துக்கள்,
அதாவது, சதா தந்தைக்குச் சமமானவர் ஆகியே தீர வேண்டும் நல்லது.
ஆசீர்வாதம்:
மனன சக்தி மூலமாக சக்திசாலியாகி தடைகளின் வேகத்தை முடிக்கக்
கூடிய அனைத்து கவர்ச்சிகளிலிருந்தும் விடுபட்டவர் ஆகுக !
நிகழ்காலத்தில் மனன சக்தி மூலமாக ஆத்மாவின் அனைத்து
சக்திகளையும் நிரப்பக் கூடிய அவசியமுள்ளது. இதற்கு
அந்தர்முகியாகி ஒவ்வொரு ஞான கருத்துக்களையும் மனனம் செய்யும்
பொழுது வெண்ணை வெளிப்படும், மேலும் சக்திசாலியாகி விடுவீர்கள்.
இம்மாதிரியான சக்திசாலி ஆத்மாக்கள் அதீந்திரிய சுகத்தின்
பிராப்திக்கான அனுபவம் செய்கிறார்கள். அவர் களுக்கு
அல்பகாலத்திற்கான எந்தப் பொருளும் தன் பக்கம் கவர்ந்திழுக்க
முடியாது. அவர் களுக்கு மகன் ஸ்திதி மூலமாக ஆன்மீக சக்திசாலி
நிலை ஏற்படுகிறது, அதன் மூலம் தடைகளின் தீவிரம் முடிவடைகிறது.
சுலோகன்:
பிராமண குடும்பத்தில் அனைவரது மரியாதையையும்
பிராப்தி அடைபவர்கள் தான் சிம்மாசனதாரி ஆகிறார்கள்.
அவ்யக்த இஷாரா: தூய்மையற்ற விதையைக் கூட முடித்துவிட்டு
சம்பூர்ண தூய்மை (பவித்ரம்) ஆகுங்கள்.
தூய்மையற்ற விதையைக் கூட முடித்து சம்பூர்ண பவித்ரமானவர்
ஆகுங்கள், பிரம்மா பாபா மற்றும் சிவபாபாவினுடைய தூமையின்
நல்விளக்கம் மிகவும் உயர்ந்ததும், ஆழமானதாகும். எங்கு தூய்மை
இருக்கிறதோ அங்கு, நிச்சயம், உண்மை வந்துவிடுகின்றன. சம்பூர்ண
தூய்மையின் அர்த்தம் இதுதான். கனவிலும் கூட தூய்மையற்ற தன்மை,
மனனம் மற்றும் புத்தியில் வரக்கூடாது, இதற்குத்தான் உண்மையான
வைஷ்ணவர் என்று கூறப்படுகிறது.