23.11.25    காலை முரளி            ஓம் சாந்தி  31.12.2007      பாப்தாதா,   மதுபன்


புது வருடத்தில் - முற்றிலும் வள்ளலாக, முற்றிலும் தடையற்றவராக (நிரிவிக்னமாக), முற்றிலும் யோகியாக மேலும் சதா வெற்றிமூர்த்தியாக ஆகுங்கள்.

இன்று பாப்தாதா தன் முன்னால் இரண்டு சபைகளை பார்த்துக் கொண்டு இருக்கின்றார். ஒன்று - சாகாரத்தில், முன்னால் அமர்ந்திருப்பவர்கள் மேலும் மற்றொன்று - தூரத்தில் அமர்ந்திருந்தாலும், உள்ளத்தின் நெருக்கத்தில் தென்பட்டுக்கொண்டு இருப்பவர்கள். இரண்டு சபைகளினுடைய சிரேஷ்ட (உயர்ந்த) ஆத்மாக்களின் நெற்றிகளில் ஆத்ம தீபம் பிரகாசித்துக் கொண்டு இருக்கின்றது. எவ்வளவு அழகான-ஜொலிக்கக் கூடிய காட்சியாக இருக்கின்றது. ஒரே எண்ணம், ஒரே மனோ நிலையில் நிலைத்திருந்து-இறை அன்பில் மூழ்கி இருக்கக்கூடிய - ஒருமுகப்பட்ட புத்தியின் மூலமாக தன்னை இறை அன்பில் மூழ்கடித்துக்கொண்ட நீங்கள் அனைவரும் எவ்வளவு அன்பானவர் களாக இருந்து கொண்டு இருக்கின்றீர்கள் நீங்கள் அனைவரும் கூட இன்று விசேஷமாக புது வருடத்தை கொண்டாடுவதற்காக வந்து சேர்ந்துள்ளீர்கள். பாப்தாதாவும் கூட அனைத்து குழந்தைகளின் ஊக்கம், உற்சாகத்தை பார்த்து, பிரகாசிக்கக்கூடிய ஆத்ம தீபத்தை பார்த்து மகிழ்ந்து கொண்டு இருக்கின்றார்.

இன்றைய நாள் சங்கமத்தினுடைய நாள் (பழைய மற்றும் புதிய வருடத்திற்கான சந்திப்பு நாள்) பழைய வருடத்திற்கான விடையும் மற்றும் புதிய வருடத்திற்கான வாழ்த்துக்களும் நடைபெறப் போகின்றது. புது வருடம் என்றால் புதிய ஊக்கம், உற்சாகம், (அதாவது) சுய மாற்றத்திற்கான ஊக்கம், அனைத்து பிராப்திகளையும் (பலன்களையும்) தன்னிடத்தில் பெற்று அதனை பார்க்கும் போது கிடைக்கும் உற்சாகம். உலகத்தில் உள்ளவர்கள் கூட இந்த உற்சவத்தை கொண்டாடு கின்றார்கள். அவர்களுக்கு அது ஒரு நாளுக்கான உற்சவம் மேலும் அதிர்ஷ்டசாலி யான அன்பான குழந்தைகளாகிய உங்களுக்கு சங்கமயுகத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவம் ஏனெனில் குஷியினுடைய உற்சாகம் இருக்கின்றது. உலகத்தில் உள்ளவர்களோ அணைந்திருக்கும் விளக்கை ஏற்றி புது வருடத்தை கொண்டாடு கின்றார்கள். மேலும் பாப்தாதாவும் மற்றும் நீங்களும் நாலா பக்கங்களிலும் உள்ள அனைத்து ஏற்றப்பட்ட தீபங்களுடன் (ஆத்ம தீபங்களுடன்) உற்சவத்தை கொண்டாட வந்திருக்கின்றோம். அவர்கள் வழக்கு முறைக்காக பெயரளவில் கொண்டாடு கின்றார்கள். ஆனால் நீங்கள் அனைவரும் ஏற்றப்பட்ட தீபங்கள். தன்னுடைய பிரகாசிக்கக்கூடிய தீபம் தென்படுகின்றது தானே? இது அழிவற்ற தீபம்.

புதிய வருடத்தில் நீங்கள் ஒவ்வொருவரும், தனக்காகவும், உலகத்தில் உள்ள ஆத்மாக் களுக்காகவும் தங்கள் உள்ளத்தில் புதிய திட்டங்கள் ஏதேனும் தீட்டியுள்ளீர்களா? 12 மணிக்கு மேல் புதிய வருடம் ஆரம்பம் ஆகிவிடும், எனவே இந்த புதிய வருடத்தை விசேஷமாக எந்த ரூபத்தில் கொண்டாடுவீர்கள்? எப்படி பழைய வருடம் விடை பெறுகிறதோ அப்படி நீங்கள் அனைவரும் உங்களுடைய பழைய சங்கல்பம், பழைய சன்ஸ்காரம் ஆகியவற்றுக்கு விடை கொடுக்க சங்கல்பம் செய்துள்ளீர்களா? வருடம் விடைபெறுவதன் கூடவே நீங்களும் உங்களுடைய பழைய வற்றிக்கு விடை கொடுத்து, புதிய ஊக்கம் உற்சாகத்துடன் கூடிய எண்ணங்களை நடைமுறையில் கொண்டு வருவீர்கள் தானே! எனவே, தங்களிடம் என்ன புதுமையை கொண்டு வரலாம்? என யோசியுங்கள். எப்படிப்பட்ட புதிய ஊக்கம் உற்சாகத்தின் அலைகளை பரவச் செய்யலாம்? எப்படிப்பட்ட விசேஷ சங்கல்பத்தின் அதிர்வலைகளை (வைப்ரேஷன்ஸ்) பரவச் செய்யலாம்? யோசித்தீர்களா? ஏனெனில் பிராமணர்களாகிய நீங்கள் அனைவரும் - விஷ்வத்தில் உள்ள அனைத்து ஆத்மாக்களுடைய மாற்றத்திற்கு நிமித்தமான (கருவியான) ஆத்மாக்கள். விஷ்வத்திற் கான அஸ்திவாரம் நீங்கள், பூர்வஜ் (மூதாதையர்கள்) மற்றும் பூஜைக்கு உரியவர்கள் நீங்கள். எனவே, இந்த வருடத்தில் தன்னுடைய சிரேஷ்ட(உயர்ந்த) உள்ளுணர்வு மூலமாக எந்தவொரு அதிர்வலைகளை பரவச் செய்வீர்கள்? எப்படி இயற்கையானது நாலா பக்கங்களிலும் - அவ்வபோது வெயில், மழை மற்றும் வசந்த காலத்தின் அதிர்வலை களை பரவச் செய்கின்றதோ- அப்படி - இயற்கைக்கு எஜமானர்களாகிய நீங்கள், இயற்கையை வென்ற (பிரக்ருதிஜீத்) நீங்கள் எப்படிப்பட்ட அதிர்வலைகளை பரப்ப வேண்டும்? அதன் மூலம் ஆத்மாக்களுக்கு சிறிது நேரமாவது அமைதி மற்றும் மகிழ்ச்சியின் அனுபவம் ஏற்பட வேண்டும். இதற்காக பாப்தாதா இந்த ஒரு சமிக்ஞையை கொடுத்துக் கொண்டு இருக்கின்றார் அதாவது-என்ன பொக்கிஷங்கள் உங்களுக்கு கிடைத் திருக்கின்றதோ அந்த பொக்கிஷங்களை வெற்றி உடையதாக ஆக்கி (சேவையில் பயண்படுத்தி) வெற்றியின் சொரூபமாக ஆகுங்கள்.

குறிப்பாக, நேரம் என்ற பொக்கிஷம் ஒருபோதும் வீணாகக் கூடாது. ஒரு நொடியாக இருந்தாலும் வீணாகாமல் காரியத்தில் ஈடுபடுத்துங்கள். நேரத்தை வெற்றியுடையதாக ஆக்குங்கள், ஒவ்வொரு மூச்சையும் வெற்றியுடையதாக ஆக்குங்கள், ஒவ்வொரு எண்ணத்தையும் வெற்றியுடையதாக ஆக்குங்கள், ஒவ்வொரு சக்தியையும் வெற்றியுடையதாக ஆக்குங்கள், ஒவ்வொரு குணத்தையும் வெற்றியுடையதாக ஆக்குங்கள். இந்த வருடத்தை குறிப்பாக-வெற்றிமூர்த்தி ஆகுவதற்கான வருடமாக கொண்டாடுங்கள், ஏனெனில் வெற்றி உங்களுடைய பிறப்பு உரிமை. அந்த அதிகாரத்தை தனது காரியத்தில் ஈடுபடுத்தி, வெற்றி மூர்த்தியாக ஆகுங்கள். ஏனெனில் இப்போது நீங்கள் பெறும் வெற்றி அனேக பிறவிகள் உங்கள் கூடவே இருக்கக் கூடியது. உங்களுடைய நேரம் என்ற பொக்கிஷம் அரை கல்பத்திற்கான பலனை முழுமையாக கொடுக்கக் கூடியது. நிகழ்காலத்தை வெற்றி உடையதாக ஆக்கும் போது - அது முழு காலத்திற்குமான வெற்றியின் பலனை பெற்றுத் தரும். மூச்சை வெற்றி உடையதாக ஆக்கும் போது, அதன் விளைவாக - எதிர்காலத்தில் அனைத்து ஆத்மாக்களும் முழு காலத்திற்கும் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். நோய் என்ற வார்த்தை கூட இருக்காது. மருத்துவர்களுடைய துறை என்பதே இருக்காது, ஏனெனில் மருத்துவர்கள் என்னவாக ஆகி விடுவார்கள்? ராஜாக்களாக ஆகி விடுவார்கள் இல்லையா. விஷ்வத்திற்கு மாலிக்-ஆக (உலகத்தின் எஜமானர்களாக) ஆகி விடுவார்கள். ஆனால், இந்த நேரம் உங்களுடைய மூச்சை வெற்றியுடையதாக ஆக்குங்கள் மேலும் அனைத்து ஆத்மாக்களும் ஆரோக்கியமாக இருப்பதற் கான பலனை பெறுவீர்கள். அதே போல் தான் ஞானத்தினுடைய பொக்கிஷம், அதனுடைய பலனின் ரூபமாக, சுவர்கத்தில் உங்களுடைய ராஜ்ஜியத்தில் நீங்கள் அத்தனை புத்திசாலியாக, சக்திசாலியாக ஆகி விடுவீர்கள் அதாவது அங்கே எந்த மந்திரியிடமும் அறிவுரை கேட்பதற்கான அவசியம் என்பது இருக்காது, தானே புத்திசாலியாகவும், சக்திசாலியாகவும் இருப்பீர்கள். சக்திகளை வெற்றியுடையதாக செய்வதன் மூலம் அதனுடைய பலனாக அங்கே அனைத்து சக்திகள், குறிப்பாக - தர்மத்தின் மீது அதிகாரம், ராஜ்ஜியத்தின் மீது அதிகாரம் என்ற இரண்டு அதிகாரங்களை பெறு கின்றீர்கள். குணங்கள் என்ற பொக்கிஷங்களை வெற்றியுடையதாக ஆக்கும் போது அதனுடைய பலனாக தேவதை என்ற பதவி அதாவது திவ்யகுணதாரியாக ஆகுகின்றீர்கள் மேலும் கூட கூடவே இப்பொழுது கடைசி பிறவியில் உங்களுடைய ஜட சித்திரங்களுக்கு பூஜை செய்யும் போது என்ன மகிமை செய்கின்றார்கள்? சர்வகுணங்களும் நிறைந்தவர்கள் என்று (மகிமை செய் கின்றார்கள்). எனவே இந்த நேரத்தை வெற்றியுடையதாக ஆக்குவதன் மூலம் - பலன் தானாகவே கிடைத்து விடுகின்றது. எனவே சோதனை செய்யுங்கள்-அதாவது பொக்கிஷங்கள் கிடைத்துள்ளது, அதனால் நிரம்பியுள்ளீர்கள் ஆனால் - அதை தனக்காகவும், உலகத்திற்காகவும் எவ்வளவு வெற்றி யுடையதாக ஆக்குகின்றேன் (பயன்படுத்துகின்றேன்)? பழைய வருடத்திற்கு விடை கொடுக்கும் போது- பழைய வருடத்தில் சேமிப்பு செய்து வைத்திருந்த பொக்கிஷங்களை வெற்றியுடையதாக ஆக்கினேனா, எவ்வளவு ஆக்கினேன்? இதை சோதனை செய்யுங்கள். மேலும் வரப்போகும் வருடத்தில் கூட இந்த பொக்கிஷங்களை வீணாக்குவதற்கு பதிலாக வெற்றி உடையதாக ஆக்கியே தீர வேண்டும். ஒரு நொடி கூட மேலும் எந்த ஒரு பொக்கிஷமும் கூட வீணாகக் கூடாது. முன்பே சொல்லப்பட்டது அதாவது சங்கமத்தின் ஒரு நொடி என்பது நொடி அல்ல - முற்றிலும் ஒரு வருடத்திற்கு சமம். ஒரு நொடி தானே, ஒரு வினாடி தானே வீணானது என்று புரிந்து கொள்ளாதீர்கள் - இதை தான் கவனக் குறைவு என்று சொல்லப்படுகின்றது. பிரம்மா பாபாவிற்கு சமமாக-சம்பன்ன (நிறைவு) மற்றும் சம்பூர்ணம் (முழுமை) ஆக வேண்டும் என்பது தான் உங்கள் அனைவருடைய லட்சியம். பிரம்மா பாபா அனைத்து பொக்கிஷங்களையும் ஆரம்பத் திலிருந்து முடிவு நாள் வரை வெற்றி உடையதாக ஆக்கினார், அதன் விளைவாக அவர் சம்பூர்ண பரிஸ்தா ஆகியதை நாம் கண்கூடாக பார்த்தோம். நம்முடைய அன்பான தாதியை கூட பார்த்தோம் - வெற்றி உடையதாக ஆக்கினார்கள் மேலும் மற்றவர்களையும் - வெற்றி உடையவர்களாக ஆக்குவதற்கு சதா ஊக்கம்- உற்சாகத்தை அதிகரித்தார்கள். எனவே டிராமா அனுசாரம்-குறிப்பாக, விஷ்வ சேவை செய்வதற்கு நிமித்தமாக அளெகீக பாத்திரத்தை பெற்றார்கள்.

எனவே இந்த வருடத்தில், நாளை முதல் ஒவ்வொரு நாளும் தன்னுடைய சார்ட்-ஐ வையுங்கள் - என்ன மற்றும் எவ்வளவு வெற்றி உடையதாக பயண்படுத்தப்பட்டது அல்லது எவ்வளவு வீணடிக்கப்பட்டது? வெற்றி- என்னுடைய பிறப்புரிமை என்ற நினைவின் சொரூபமாக ஆகுங்கள். வெற்றி என்னுடைய கழுத்து மாலை. வெற்றி சொரூபமாக ஆகுவது தான் சமமாக ஆகுவது ஆகும். பிரம்மா பாபா மீது அன்பு இருக்கின்றது தானே! பிரம்மா பாபாவிற்கு அனைத்தை காட்டிலும் எதன் மீது அதிகமாக அன்பு இருந்தது? தெரியும் தானே, எதன் மீது அன்பு இருந்தது? முரளியின் மீது. கடைசி நாள் கூட முரளியின் பாடத்தை அவர் தவறவிட வில்லை. சமமாக ஆகுவதில் சோதனை செய்யுங்கள் - பிரம்மா பாபாவிற்கு எதன் மீது அன்பு இருந்தது, பிரம்மா பாபாவின் அன்பிற்கு கைமாறு செய்வது எனில்-எதன் மீது தந்தையின் அன்பு இருந்ததோ அதன் மீது என்னுடைய அன்பு தானாகவே, இயல்பாகவே இருக்க வேண்டும். மேலும் பிரம்மா பாபாவின் விசேஷம் என்னவாக இருந்தது? சதா விழிப்புணர்வுடன் இருந்தார், கவனக்குறைவாக இருக்க வில்லை. கடைசி நாள் கூட எத்தனை விழிப்புணர்வுடன் தன்னுடைய சேவையின் கதா பாத்திரத்தை செய்து முடித்தார். சரீரம் பலஹீனமாக இருந்தது ஆனாலும் கூட எத்தனை விழிப்புணர்வுடன் - அமர்வதற்கு எந்த ஆதாரத்தை எடுத்துக் கொள்ளாமல் மேலும் மற்றவர் களுக்கு விழிப்புணர்வை கொடுத்து விட்டு சென்றார். மூன்று விஷயங்களுக்கான மந்திரங்களை கொடுத்துவிட்டு சென்றார். எல்லோருக்கும் நினைவு இருக்கின்றது தானே. எனவே எவ்வளவு விழிப்புணர்வுடன் இருப்பீர்களோ, அவரை பின்பற்றுவீர்களோ, அவ்வளவு கவனக்குறைவு முடிந்து போகும். கவனக்குறைவின் விசேஷமான பேச்சுக்களை பாப்தாதா நிறைய கேட்டுக் கொண்டே இருக்கின்றார். தெரியும் தானே! ஒருவேளை இந்த மூன்று சப்தங்களை (நிராகாரி, நிர்விகாரி மேலும் நிர்அகங்காரி) சதா தன்னுடைய மனதில் மீண்டும் மீண்டும் கொண்டு வந்து (ரிவைஸ்) மற்றும் உணர்ந்தீர்கள் (ரியலைசேஷன்) எனில் தானாகவே சகஜமாக மேலும் தானாகவே சமமாக ஆகி விடுவீர்கள். எனவே ஒரு விஷயத்தை வெற்றி உடையதாக ஆக்குங்கள், வெற்றிமூர்த்தியாக ஆகுங்கள்.

பாப்தாதா குழந்தைகளுடைய இந்த வருடத்திற்கான ரிசல்ட்-ஜ பார்த்தார். என்ன பார்த்தார்? மகாதானியாக ஆகியுள்ளீர்கள், ஆனால் முற்றிலும் மகாதானியாக, முற்றிலும் (முடிவற்று-தொடர்ச்சியாக) என்ற வார்த்தையை கோடிடுங்கள் - முற்றிலும் மகாதானி, முற்றிலும் யோகி, முற்றிலும் தடையற்றவராக ஆகவேண்டியது இப்பொழுது அவசியம். முற்றிலுமாக ஆகி விட்டீர்களா? ஆக முடியுமா? முதல் வரிசையில் அமர்ந்திருப்பவர்கள் சொல்லுங்கள்- முற்றிலுமாக ஆக முடியுமா? முடியுமெனில் கைகளை உயர்த்துங்கள். யாரால் செய்ய முடியும்? முடியுமா? மதுபன் நிவாசிகள் (மதுபனில் வசிப்பவர்கள்) கூட கைகளை உயர்த்துகின்றீர்கள். பாப்தாதா மதுபன் நிவாசிகளை முதலில் பார்க்கின்றார். மதுபன் மீது அன்பு உள்ளது. சாந்திவன் அல்லது பாண்டவ பவன் அல்லது யாரெல்லாம் தாதியின் கரங்களாக இருக்கின்றீர்களோ, அனைவரையும் கவனத்தடன் (பாப்தாதா) பார்க்கின்றார். ஒருவேளை 'முற்றிலும்' என்ற நிலையை அடைந்து விட்டீர்கள் எனில் - மனதின் மூலமாக சக்திகளை பரவச் செய்யும் சேவையில் தன்னை பிஸியாக வைத்துக்கொள்ளுங்கள், வார்த்தைகள் மூலம் ஞானத்தினுடைய சேவை மேலும் கர்மத்தின் மூலம் குணதானம் மற்றும் குணத்தின் மூலமாக சகயோகம் (உதவி) செய்யும் சேவையை செய்யுங்கள்.

இன்றைய காலகட்டத்தில்-அஞ்ஞானி (அறியாமையில் இருக்கும்) ஆத்மாக்களாக இருந்தாலும், பிராமண ஆத்மாக்களாக இருந்தாலும் அனைவருக்கும் குண தானம், குணத்தினால் சகயோகம் கொடுப்பது அவசியமாக இருக்கின்றது. ஒருவேளை நீங்கள் சகஜமாக - எளிமையான ரூபத்தில் முன்மாதிரியாக (எடுத்துக்காட்டாக) ஆகி இருப்பீர்கள் எனில் தானாகவே குணமூரத்தியினுடைய சகயோகம் (அவர்களுக்கு) கிடைத்துவிடும். இன்றைய கால கட்டத்தில் பிராமண ஆத்மாக்கள் கூட 'முன்மாதிரியாக' யாரையாவது பார்க்க விரும்புகின்றார்கள், கேட்பதற்கு விரும்பவில்லை. தங்களுக்குள் என்ன சொல்லிக் கொள்கின்றீர்கள்? யார் ஆகியிருக்கின்றார்கள்? எனவே கண்கூடாக குணமூர்த்தியை பார்க்க விரும்புகின்றார்கள். எனவே கர்மத்தின் மூலமாக-குறிப்பாக குணத் தினுடைய உதவியை, குணத்தினுடைய தானத்தை செய்வது அவசியமாக இருக்கின்றது. கேட்பதற்கு யாருமே விரும்பவில்லை, பார்ப்பதற்கு விரும்புகின்றார்கள். எனவே இப்போது இதை குறிப்பாக கவனத்தில் வையுங்கள்- அதாவது நான் ஞானத்தின் மூலமாக, வார்த்தைகளின் மூலமாக சேவை செய்து கொண்டு இருக்கின்றேன் மேலும் செய்து கொண்டு தான் இருக்க வேண்டும், விட்டுவிடக் கூடாது ஆனால் இப்பொழுது மனம் மற்றும் செயல், மனதின் மூலமாக அதிர்வலை களை பரவச் செய்யுங்கள், சக்திகளை பரவச் செய்யுங்கள். அதிர்வலைகள் மேலும் சக்திகள் தூரமாக அமர்ந்திருந்தாலும் கூட (அவர்களை) போய் சேர வைக்க முடியும். சுபபாவ்னா (சுபமான சிந்தனை) மற்றும் சுபகாம்னா (சுபமான ஆசைகள்) மூலம் எந்தவொரு ஆத்மாவிற்கும் மனதின் சேவை மூலமாக அதிர்வலைகளை, சக்திகளை கொடுக்க முடியும். எனவே இப்பொழுது-இந்த வருடம் மனதின் சக்திகள் மூலமாக அதிர்வலைகளை கொடுப்பது , சக்திகள் மூலமாக மனதிற்கான ஆற்றலை கொடுப்பது மேலும் கர்மத்தின் மூலமாக குணத்தினுடைய சகயோகத்தை கொடுப்பது மற்றும் அறியாமையில் இருப்பவர்களுக்கு குணதானம் கொடுப்பது என்பதை செய்யுங்கள்.

புது வருடத்தில் பரிசு கூட கொடுப்பீர்கள் இல்லையா! எனவே இந்த வருடத்தில் - தான் குணமூர்த்தியாக ஆகி குணங்களுடைய பரிசை கொடுங்கள். 'குணங்களுடைய' டோலியை ஊட்டி விடுங்கள். சந்திக்கும் போது டோலியை ஊட்டி விடுகின்றீர்கள் தானே. டோலியை ஊட்டிவிடும் போது குஷி ஏற்படுகின்றது தானே. எந்த ஆத்மாக்களாக இருந்தாலும், பாபாவின் கையை விட்டு போனவர்கள் கூட டோலியை நினைவு செய்கின்றார்கள். மற்ற விஷயங்களை மறந்து விடு கின்றார்கள் ஆனால் டோலி நினைவுக்கு வருகின்றது. எனவே, இந்த வருடம் எந்தவொரு டோலியை ஊட்டி விடுவீர்கள்? குணங்களுடைய டோலியை ஊட்டிவிடுங்கள். குணங்களுடைய பிக்னிக் செய்யுங்கள் ஏனெனில் நேரத்தின் நெருக்கத்தின் அனுசாரம் மேலும் தாதியின் சமிக்ஞை அனுசாரம் - நேரத்தின் முழுமை (நேரம் முடிவடைதல்) என்பது எப்பொழுது வேண்டுமானாலும் திடீரென நடைபெறலாம் எனவே தந்தைக்கு சமமாக ஆகுவது மேலும் தாதியின் அன்பிற்கு கைமாறு செய்யவேண்டும் எனில் - இதை செய்வது அவசியம் - அதாவது மனம் மற்றும் கர்மத்தின் மூலமாக சகயோகி ஆகுவது; யார் எப்படி வேண்டு மானாலும் இருக்கட்டும்-இவர்கள் ஆகினால், நானும் ஆகுவேன் என்று ஒரு போதும் யோசிக்காதீர்கள்.

நம்பர்-ஒன் ஆகவேண்டும் எனில் இவர் ஆகினால், நானும் ஆகுவேன் என்று ஒருபோதும் யோசிக் காதீர்கள். யார் ஆகுகின்றார்களோ அவர்கள் நம்பர்-ஒன் ஆகிவிடுவார்கள் பிறகு உங்கள் நம்பர் - இரண்டாவதாக ஆகிவிடும். என்ன நீங்கள் இரண்டாவதாக ஆகுவதற்கு விரும்புகின்றீர்களா அல்லது நம்பர் ஒன் ஆகுவதற்கு விரும்புகின்றீர்களா? யாரிடமாவது - நீங்கள் இரண்டாவது நம்பர் எடுத்துக் கொள்ளுங்கள் என்றால், எடுத்துக் கொள்வார்களா? எல்லோரும் நம்பர் ஒன் எடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். எனவே முதலில் நிமித்தம் (மாற்றத்திற்கான பொறுப்பாளராக) ஆகுங்கள். மற்றவர்களை ஏன் நிமித்தம் ஆக்குகின்றீர்கள், தங்களை நிமித்தம் ஆக்குங்களேன். பிரம்மா பாபா என்ன சொன்னார்? ஒவ்வொரு விஷயத்திலும் தான் நிமித்தமாக ஆகி மற்றவர்களை நிமித்தம் ஆக்கினார். தான் அர்ஜுனனாக ஆகி நடிப்பை நடித்தார். நான் நிமித்தமாக ஆக வேண்டும், நான் செய்ய வேண்டும். மற்றவர்கள் செய்வார்கள், என்னை பார்த்து பிறர் செய்வார்கள் என்று இருந்தார். மற்றவர்களை பார்த்து நான் செய்ய வேண்டும் என்று அவர் இருக்க வில்லை. என்னை பார்த்து மற்றவர்கள் செய்வார்கள். இது பிரம்மா பாபாவின் முதல் பாடமாக இருந்தது. எனவே என்ன செய்ய வேண்டும் என்று கேட்டீர்கள் தானே? வெற்றி மூர்த்தி, வெற்றி உடையதாக ஆக்கக் கூடிய வெற்றி மூர்த்தி, முற்றிலும் என்பது - இருப்பவர்களிடத்தில் மாயா வருவதற்கு தைரியம் என்பதே இருக்காது. எப்பொழுது முற்றிலும் மகாதானியாக ஆகி விடுகின்றீர்களோ அப்பொழுது நிரந்தர சேவாதாரியாக இருப்பீர்கள், பிஸியாக இருப்பீர்கள், மனம் மற்றும் புத்தி உங்களுடைய சேவாதாரியாக இருக்கும், எனவே மாயா எங்கிருந்து வரும்? எனவே இந்த வருடம் என்ன செய்ய வேண்டும்? எல்லோருடைய உள்ளத்திலிருந்தும்-இந்த ஒரு சப்தம் வர வேண்டும் என்று பாப்தாதா விரும்புகின்றார், அது என்ன சப்தம்? நோ பிராப்ளம், கம்ப்ளீட் (பிரச்சினை எதுவும் இல்லை, நாங்கள் முழுமையாக இருக்கின்றோம்.) பிரச்சினை எதுவுமில்லை ஆனால் முழுமையாக ஆகியே தீர வேண்டும். உறுதியான நிச்சயபுத்தி உடையவர்களாக, வெற்றி மாலையின் நெருக்கத்தில் மணியாக ஆகியே தீர வேண்டும். சரி தானே! ஆகத்தானே வேண்டும்! மதுபன் நிவாசிகள் ஆக வேண்டும். நோ கம்ப்ளெயிண்ட்? (எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை தானே?) எந்த குற்றச்சாட்டு களும் இல்லை. தைரியம் உடையவர்கள் கைகளை உயர்த்துங்கள். நோ பிராப்ளம் (எந்த பிரச்சினையும் இல்லை), வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.

பாருங்கள், நம்பிக்கையின் கண்கூடான அடையாளம்-ஆன்மீக போதை. ஒருவேளை ஆன்மீக போதை இல்லையெனில் நம்பிக்கை என்பது இல்லை. அதாவது முழுமையான நம்பிக்கை இல்லை அல்லது குறைவான நம்பிக்கை இருக்கின்றது என்பதாகும். எனவே போதையுடன் இருங்கள் (முழு நம்பிக்கையுடன் இருங்கள்). இது என்ன பெரிய விஷயமா. எத்தனையோ கல்பம் நீங்கள் தான் பாப்சமான் ஆக ஆகியிருக்கின்றீர்கள், நினைவிருக் கின்றதா? எண்ணிலடங்காத முறை ஆகியிருக்கின்றீர்கள். எனவே இந்த போதையுடன் இருங்கள்- நாம் தான் ஆகி இருக் கின்றோம் மேலும் நாம் தான் மீண்டும் மீண்டும் ஆகிக் கொண்டு இருப்போம். இந்த போதை - சதா உங்களுடைய செயலில் தென்படட்டும். எண்ணத்தில் அல்ல, பேச்சில் அல்ல ஆனால் செயலில், செயலில் காட்டுவது எனில் அர்த்தம் - நடத்தை மற்றும் முகத்தில் தென்பட வேண்டும். எனவே வீட்டுப் பாடம் (ஹோம் வொர்க்) கிடைத்து விட்டது. கிடைத்து விட்டது தானே? இப்பொழுது பார்க்கலாம்- நம்பர்வார் (வரிசைப்படி) வரப் போகின்றீர்களா அல்லது நம்பர் ஒன் வரப்போகின்றீர்களா? நல்லது.

பாப்தாதாவிடம் - உங்களுடைய அன்பு நினைவுகள் - கார்ட், கடிதம், இ-மெயில் மூலமாக வந்து சேர்ந்தது, கம்ப்யூட்டர் மூலமாக அதிகமாக வந்து இருக்கின்றது மேலும் பாப்தாதா - தூரமாக அமர்ந்திருந்தாலும் தன் உள்ளம் எனும் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் குழந்தைகளுக்கு, ஒவ்வொரு குழந்தையையும் பெயர் சகிதமாக, விஷேசதா சகிதமாக நினைவு கூர்ந்து அன்பு நினைவுகளையும் மேலும் உள்ளத்தின் ஆசிர்வாதங்களையும் - தம் முன்னால் (குழந்தைகளை) வெளிக்கொண்டு வந்து (எமர்ஜ் செய்து) கொடுத்துக் கொண்டு இருக்கின்றார். எல்லோருக்கும் (பாப்தாதாவின் மீது) அன்பு இருக்கத்தான் செய்கின்றது என்பது பாப்தாதாவிற்கு தெரியும் மேலும் பாப்தாதா சதா அமிர்தவேளை - குறிப்பாக பிராமண ஆத்மாக்களுக்கு - விசேஷமாக அன்பு நினைவுகள் ரூபத்தில் பதிலளிக்கின்றார். எனவே தான் என்னவெல்லாம் நல்ல நல்ல விதத்தில் செய்திருக்கின்றீர்களோ, (அன்பை வெளிப்படுத்துவதற்காக குழந்தைகள் செய்திருந்து-மேடையில் காட்சிக்காக வைக்கப்படுபவற்றை பாப்தாதா குறிப்பிடு கின்றார்) அவற்றை மேடையில் வைத் திருக்கின்றீர்கள். ஆனால் பாப்தாதாவிடம் - முன்பே (மேடையில் வைப்பதற்கு முன்பே) வதனத் திற்கு வந்து சேர்ந்து விடுகின்றது. நல்லது.

நாலா பக்கங்களிலும் - பிரகாசிக்கக் கூடிய ஆத்ம தீபமான குழந்தைகளுக்கு , சதா வெற்றி உடைய தாக ஆக்கக்கூடிய வெற்றி சுவரூபமான குழந்தைகளுக்கு, சதா முற்றிலும் மகாதானியாக, முற்றிலும் நிர்விக்னமாக, முற்றிலும் ஞானம் மற்றும் யோகம் நிறைந்து, சதா ஒரே நேரத்தில் மூன்று சேவைகளை செய்யக் கூடிய - மனதின் அதிர்வலைகள் மூலமாக, வாயுமண்டலத்தின் மூலமாக, பேசக்கூடிய வார்த்தைகள் மூலமாக, நடத்தை மேலும் முகத்தின் மூலமாக மற்றும் கர்மத்தின் மூலமாக மூன்று சேவைகளையும் ஒரே நேரத்தில் இணைத்து செய்யக் கூடிய (மூன்றும் இணைத்து செயல்படும்போதே-இது நன்றாக இருக்கின்றது என்ற பாதிப்பை பிறர் மீது ஏற்படுத்து வதற்கு பதிலாக-நல்லவர்களாக ஆகுவதற்கான பாதிப்பை ஏற்படுத்தும்) அப்படிப்பட்ட அனுபவி மூர்த்தி யாகி-அனுபவத்தை செய்விக்கக்கூடிய குழந்தைகளுக்கு பாப்தாதா புது வருடத் திற்காக பல கோடி மடங்கு அன்பு நினைவுகள், ஆசிர்வாதங்கள் உரித்தாகுகின்றது. உள்ள சிம்மாசனம். (பாப்தாதாவின்) உங்களை சிம்மாசனதாரியாக ஆக்கக் கூடியது, எனவே நாலா புறங்களிலும் உள்ள குழந்தைகள் - முன்னால் அமர்ந்திருந்தாலும்-தூரமாக இருந்து உள்ள சிம்மாசனத்தில் இருந்தாலும்-அனைவருக்கும் பெயர் மற்றும் விசேஷதா சகிதமாக அன்பு நினைவுகள் மேலும் நமஸ்தே.

நல்லது - யார் முதல் முறை வந்திருக்கின்றீர்களோ, அவர்கள் எழுந்து நில்லுங்கள். கைகளை அசையுங்கள். பாருங்கள்-வகுப்பில் பாதி பேர் முதல் முறையாக வந்திருக்கின்றீர்கள். பின்னால் இருப்பவர்கள் கைகளை அசையுங்கள். டி.வியில் பார்க்க முடிகின்றது. நிறைய பேர் இருக் கின்றீர்கள் (முதல் முறையாக வந்தவர்கள்). நல்லது, முதல் முறையாக வந்திருக்க கூடியவர் களுக்கு பாப்தாதாவினுடைய நிறைய நிறைய-உள்ளத்தின் வாழ்த்துக்களும், கூடவே உள்ளத்தின் அன்பு நினைவுகளும் உரித்தாகுகின்றது. இப்பொழுது வந்திருப்பதை போல் இனியும் வரக்கூடிய ஆத்மாக்களாக இருப்பதற்கான வரதானத்தை பாப்தாதா கொடுக்கின்றார் - "அமர பவ" (இந்த முறை வந்தது போல் பாபாவின் குழந்தையாக என்றும் இருந்து-ஒவ்வொரு வருடமும் சந்திக்க வரவேண்டும் என்ற பொருளில்-அமர பவ என்ற வரதானத்தை கொடுக்கின்றார்)

ஆசீர்வாதம்:
குற்றம் சொல்பவர்களுக்கும் (குறை சொல்பவர்களுக்கும்) கூட - குணமாலையை அணிவிக்கக் கூடிய இஷ்ட தேவதையாக, மகான் ஆத்மாவாக ஆகுக.

இன்றைய காலகட்டத்தில் - விசேஷ ஆத்மாக்களாகிய உங்களை வரவேற்கும் சமயத்தில் - கழுத்தில் ஸ்தூலமான மாலையை போடுகின்றார்கள் எனில் நீங்கள் மாலை போட வருபவர் கழுத்திலேயே அந்த மாலையை- அவருக்கே போட்டு விடுகின்றீர்கள். அதே போல், குற்றம் சொல்பவர்களுக்கும் கூட குணமாலையை அணிவியுங்கள் அப்பொழுது அவர்கள் தானாகவே குணமாலையை உங்களுக்கு திருப்பி அணிவிப்பார்கள் ஏனெனில் குற்றம் சொல்பவர்களுக்கு -நீங்கள் குணமாலையை அணிவிப்பதன் அர்த்தம் ஜென்ம ஜென்மத்திற்கு அவர்களை பக்தர்களாக உறுதி செய்து விடுவதாகும். இங்கே கொடுப்பது என்பது அனேக முறை எடுப்பதாக ஆகிவிடுகின்றது. இந்த விசேஷதா - இஷ்ட தேவதையாக, மகான் ஆத்மாவாக ஆக்கி விடுகின்றது.

சுலோகன்:
தன்னுடைய மனதின் உள்ளுணர்வை சதா (எப்பொழுதும்) - நல்ல சக்திசாலியாக ஆக்குங்கள் அப்பொழுது கெட்டது கூட நல்லதாக ஆகி விடும்


அவியக்த சமிக்ஞை : அசரீரி அல்லது விதேகி நிலையின் பயிற்சியை அதிகரியுங்கள்

எவ்வளவு தான் காரியங்களுடைய ஈர்ப்பு நாலாபக்கங்களிலும் ஈர்த்தாலும் கூட, புத்தியானது சேவையின் காரியத்தில் பிஸியாக இருந்தாலும் கூட - அப்படிப்பட்ட நேரத்தில் - அசரீரி ஆகுவதற் கான பயிற்சியை செய்து பாருங்கள். உண்மையான சேவை எனில் - ஒருபோதும் (சேவையோடு) பந்தனம் என்பது இருக்காது ஏனெனில் யோகம் நிறைந்த (பாபாவின் நினைவு நிறைந்த), யுக்தி நிறைந்த (வழிமுறைகளை கண்டறிந்த) சேவாதாரி - சதா சேவை செய்தாலும் கூட ஓய்வு நிலையில் இருப்பார்கள். சேவை அதிகமாக இருக்கின்றது அதனால் அசரீரி ஆக முடியவில்லை என்பது கிடையாது. இது என்னுடைய சேவை அல்ல, பாபா கொடுத்துள்ளார் என்பதை நினைவில் வையுங்கள் - அப்பொழுது பந்தனம் அற்றவர்களாக இருப்பீர்கள்.