24-08-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! சுகம் கொடுக்கக்
கூடிய பாபாவை மிக-மிக அன்போடு நினைவு செய்யுங்கள், நினைவு
செய்யாமல் அன்பு ஏற்பட கிடைக்காது.
கேள்வி:
பாபா குழந்தைகளுக்கு தினம்-தினம்
நினைவின் பயிற்சி செய்வதற்கு ஏன் சைகை (குறிப்பால் உணர்ந்து)
செய்கின்றார்?
பதில்:
ஏனென்றால் நினைவால் தான் ஆத்மா
பாவனம் ஆகும். நினைவால் தான் ஆத்மா முழு ஆஸ்தி அடைய முடியும்.
ஆத்மாவின் அனைத்து பந்தனங்களும் நீங்கிவிடும். விகர்மங்களிலி
ருந்து முக்தி அடைந்து விடுவீர்கள். தண்டனையிருந்து விடுபட்டு
விடுவீர்கள். எந்தளவு பாபாவை நினைக்கின்றீர்களோ அந்தளவு
மகிழ்ச்சி இருக்கும். இலட்சியம் (அடைய வேண்டிய நிலை) மிக
சமீபத்தில் அனுபவம் ஆகும். ஒருபோதும் களைத்துப் போக மாட்டீர்கள்,
எல்லையற்ற சுகம் அடைவீர்கள், எனவே நினைவின் பயிற்சி அவசியம்
செய்ய வேண்டும்.
பாடல்:
குழந்தைப் பருவத்தை மறந்து விடக்
கூடாது....
ஓம் சாந்தி.
இனிமையிலும்-இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் பாட்டின் வரியின்
பொருளைப் புரிந்து கொண்டீர்களா? நீங்கள் இப்பொழுது உயிருடன்
எல்லையற்ற பாபாவின் குழந்தைகள் ஆகி விட்டீர்கள். முழு
கல்பத்திலும் எல்லைக்கு உட்பட்ட தந்தையின் குழந்தை களாக
இருந்தீர்கள். சத்தியயுகத்தில் கூட எல்லைக்கு உட்பட்ட தந்தைக்கு
குழந்தையாக இருந்தீர்கள். இப்பொழுது பிராமண குழந்தைகள் நீங்கள்
மட்டும் எல்லையற்ற தந்தைக்கு உடையவர்களாக ஆகியுள்ளீர்கள்.
எல்லையற்ற தந்தையிடமிருந்து தான் எல்லையற்ற ஆஸ்தி கிடைத்துக்
கொண்டிருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். பாபாவை விட்டு
விட்டால் எல்லையற்ற ஆஸ்தி கிடைக்காது. நீங்கள் என்ன தான் புரிய
வைத்தாலும் எளிதில் யாரும் திருப்தி அடைவதில்லை. மனிதர்கள்
செல்வத்தை அதிகம் விரும்புகின்றார்கள். செல்வம் இல்லாமல் சுகம்
கிடைக்க முடியாது. செல்வமும் வேண்டும், அமைதியும் வேண்டும்,
நோயற்ற உடலும் வேண்டும்! குழந்தைகளாகிய நீங்கள் உலகத்தில் இன்று
என்ன நடக்கின்றது, நாளை என்ன ஆகப்போகின்றது என்பதை குழந்தைகள்
நீங்களே அறிவீர்கள். வினாசமோ எதிரிலேயே உள்ளது. வேறு எவரது
புத்தியிலும் இந்த விஷயம் இல்லை. வினாசம் எதிரிலேயே உள்ளது
என்பதை தெரிந்திருந்தாலும் என்ன செய்ய வேண்டும் என்பதை
அறியவில்லை. குழந்தைகள் நீங்கள் புரிந்து கொண்டீர்கள்,
எப்பொழுது வேண்டு மானாலும் போர் ஆரம்பம் ஆகலாம், சிறு தீப்பொறி,
பயங்கர சத்தத்தோடு வெடிக்கலாம். அதிக நேரம் பிடிக்காது.
முன்னால் கூட சின்ன விஷயத்திற்காக எவ்வளவு பெரிய சண்டை
ஏற்பட்டது. பழைய உலகம் அழிந்து கொண்டே இருக்கின்றது அதனால்
இப்பொழுது சீக்கிரமாக பாபாவிடமிருந்து ஆஸ்தியை அடைய வேண்டும்.
பாபாவை சதா நினைத்துக் கொண்டே இருந்தால் மிகவும்
புன்சிரிப்புடன் இருப்பீர் கள். தேக-அபிமானத்தில் வரும்போது
அந்த மகிழ்ச்சி மறைந்து போகிறது. ஆத்மா அபிமானி ஆகின்றீர்கள்
என்றால் பாபாவை நினைக்கின்றீர்கள்! தேக அபிமானத்தில் வருவதால்
பாபாவை மறந்து துக்கத்தில் வருகிறீர்கள். எந்தளவு பாபாவை நினைவு
செய்வீர்களோ, அந்தளவு எல்லையற்ற தந்தையிடமிருந்து சுகத்தை
அடைவீர்கள். இங்கே நீங்கள் இலட்சுமி-நாராயணன் ஆவதற்காகவே
வந்துள்ளீர்கள். இராஜா-இராணி மற்றும் பிரஜைகளின் வேலைக்காரர்கள்
என்றால் மிகுந்த வித்தியாசம் உள்ளதல்லவா? இப்பொழுது செய்யும்
புருஷார்த்தம் கல்ப-கல்பமாக நிரந்தரமாகி விடுகிறது. நாம்
எவ்வளவு புருஷார்த்தம் செய்து உள்ளோம் என்று- கடைசியில்
அனைவருக்கும் சாட்சாத்காரம் ஆகும். அதனால் தன்னுடைய நிலையை
இப்பொழுது கூட (சோதித்து) பாருங்கள் என்று பாபா கூறுகின்றார்.
இனிமையிலும், இனிமையான பாபா, அவரிடம் இருந்து தான்
சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்கின்றது, அவரை நாம் எவ்வளவு நினைவு
செய்கிறோம்! பாபாவின் நினைவு தான் உங்களின் ஆதாரமாகும். எந்தளவு
பாபாவை நினைக்கின்றீர்களோ அந்தளவு மகிழ்ச்சி ஏற்படும்.
இப்பொழுது மிகவும் சமீபத்தில் வந்துவிட்டோம் என்று புரிந்து
கொள்வீர்கள். சிலர் இலட்சியம் இன்னும் துôரம் உள்ளதோ
தெரியவில்லையே என களைத்துப் போய் விடுகின்றார்கள், இலக்கை
அடைந்தால் தான் முயற்சிக்கான வெற்றியும் கிடைக்கும். பகவான்
என்று யாரை அழைப்பது என்று இதைக்கூட உலகத்தில் உள்ளவர்கள்
அறியவில்லை. ஹே பகவான் என்று கூறுகின்றார்கள், பின்பு கல்லிலும்,
முள்ளிலும் இருக்கின்றார் என்றும் கூட கூறுகின்றார்கள்.
இப்பொழுது பாபா வுடையவராக ஆகி விட்டோம் என்று குழந்தைகள்
நீங்கள் அறிகிறீர்கள். இப்பொழுது பாபாவின் வழிப்படி நடக்க
வேண்டும். அயல்நாட்டில் இருந்தாலும் அங்கிருந்து கொண்டே பாபாவை
நினைக்க வேண்டும். உங்களுக்கு ஸ்ரீமத் கிடைத்துள்ளது. ஆத்மாவை
பாபாவின் நினைவைத் தவிர தமோபிர தானத்தில் இருந்து சதோபிரதானமாக
ஆக்க முடியுயாது. இதைத் தவிர வேறு வழியே கிடையாது. பாபா,
நாங்கள் உங்களிடம் இருந்து முழு ஆஸ்தியை அடைந்தே தீருவோம் என்று-
நீங்கள் கூறுகின்றீர்கள். நம்முடைய பிரம்மா பாபா எப்படி ஆஸ்தி
அடைந்தாரோ, அதுபோல நாம் கூட புருஷார்த்தம் செய்து அந்த
பீடத்தில் அவசியம் அமர வேண்டும். மம்மா பாபா இராஜ-இராஜேஸ்வர்,
இராஜ-இராஜேஸ்வரி ஆகின்றார்கள், அதுபோல் நாமும் கூட ஆக வேண்டும்.
பரீட்சை என்பது அனைவருக்கும் ஒன்று தான். உங்களுக்கு மிகவும்
குறைவாக கற்றுக் கொடுக்கப் படுகின்றது, பாபாவை மட்டும் நினைவு
செய்யுங்கள்! இதற்குத் தான் சகஜ இராஜயோக சக்தி என்று
சொல்லப்படுகின்றது. யோகத்தால் நிறைய சக்தி கிடைக்கின்றது என்று
நீங்கள் அறிவீர்கள். நாம் ஏதாவது பாவ கர்மம் செய்தால் தண்டனை
அதிகம் கிடைக்கும், பதவியும் குறைந்து விடும். நினைவில் தான்
மாயா தடை போடுகின்றது.
நாம் பாவன உலகத்திற்குப் போய் கொண்டு இருக்கின்றோம் என்று
தெரிந்து கொண்டீர் கள். பிராமணர்கள் யார் ஆகின்றார்களோ அவர்களே
நிமித்தமாகின்றார்கள். பிரம்மாவின் வாய் மூலமாக பிராமணர்கள்
ஆகாமல் நீங்கள் பாபாவிடம் ஆஸ்தியை அடைய முடியாது. பாபா
குழந்தைகளைப் படைப்பதே ஆஸ்தியைக் கொடுப்பதற்காக தான். நாம்
சிவபாபாவின் குழந்தைகள் ஆகி விட்டோம். அவர் குழந்தைகளைப்
படைத்ததே ஆஸ்தியைக் கொடுப்பதற் காகத் தான்! உடலில்
உள்ளவர்களுக்கே ஆஸ்தியை கொடுப்பார். ஆத்மாக்களோ மேலே
வசிக்கின்றன. அங்கே ஆஸ்தியின் பலன் என்ற பேச்சுக்கு இடமே இல்லை.
இப்பொழுது நீங்கள் முயற்சி செய்து பலனை அடைந்து கொண்டு
இருக்கின்றீர்கள், இது உலகத்திற்கு தெரியாது. இப்பொழுது நேரம்
நெருங்கி வந்து கொண்டு இருக்கின்றது. எச்சரிக்கை
விடுக்கிறார்கள், அவர்கள் அப்படி செய்தால், நாங்கள் ஒரேயடியாக
உயரே அனுப்பி விடுவோம் என்கின்றார்கள். அவ்வாறு உலகத்திலிருந்தே
மேலே அனுப்ப தயார் செய்து கொண்டு இருக்கின்றார்கள். தயாரித்த
அணுகுண்டுகளையெல்லாம் சும்மா வைத்துக் கொண்டு இருக்க
மாட்டார்கள். அதிகமாக தயார் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சியின் போது பாகிஸ்தான், இந்துஸ்தான்
என்று இருந்ததா என்ன? அரச பதவிக்கான யுத்தம் என்று தெளிவாக
எழுதப்பட்டுள்ளது. பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் சண்டை அல்ல.
வெளிநாட்டவர்கள் சமமாகப் போராடுகின்றார்கள். அணுகுண்டு தயராகி
விட்டன.. இப்பொழுது பாபா நமக்கு கட்டளையிடுகின்றார் என்னை
நினைவு செய்யுங்கள், இல்லை யென்றால், பின்னால் மிகவும் அழ
வேண்டியிருக்கும். பரீட்சையில் தோல்வி அடைந்து விட்டால்
கோபத்தில் போய் தற்கொலை செய்து கொள்கின்றார்கள். இங்கே
கோபப்படுவதற்கான விஷயமே இல்லை. சிறிது நாட்கள் கழித்து
உங்களுக்கு நிறைய சாட்சாத்காரம் ஆகும். என்ன-என்ன,
எப்படியெல்லாம் நாம் ஆகப் போகின்றோம் என்பதும் தெரிந்துவிடும்.
பாபாவின் கடமை நம்மை புருஷார்த்தம் செய்விப்பது! குழந்தைகளே!
காரியங்கள் செய்யும் போது பாபாவை மறந்து போய் விடுகின்றீர்கள்
அல்லது நேரம் கிடைக்கவில்லை என்றால் நன்கு அமர்ந்து செய்யுங்கள்.
நினைவில் ஸ்திரமாக அமர்ந்து, பாபாவை நினைவு செய்யுங்கள்.
உங்களிடையே நீங்கள் சந்திக்கும் போதும் நாம் பாபாவை நினைவு
செய்ய முயற்சி செய்யுங் கள். ஒன்று சேர்ந்து அமர்ந்தால் பாபவை
நன்றாக நினைக்க முடியும், உதவி கிடைக்கும். பாபாவை நினைப்பது
தான் முக்கியமான விஷயம் ஆகும். எங்கேயும் போகுவதற்கான அவசியம்
இல்லை. இங்கே வந்தாலும் சரி, வாராமல் போனாலும் சரி.
வெளிநாட்டிற்கு யாராவது போக வேண்டி வந்தால் இங்கே வர முடியாது.
அங்கேயும் கூட ஒரு பாபாவை நினைவு செய்யுங்கள். பாபாவின்
நினைவால் தான் நீங்கள் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானம் ஆக
முடியும். ஒரு பாபாவை மட்டும் நினைவு செய்யுங்கள்-பாபாவை நினைவு
செய்யுங்கள் என்று பாபா கூறுகின்றார். மன்மனாபவ என்று பாபா
கூறுகின்றார். என்னை நினைவு செய்தீர்களானால் உலகத்திற்கு
எஜமானன் ஆகலாம் என்கின்றார். நினைவு தான் முக்கியமான விஷயமாகும்.
எங்கேயும் செல்லத்தேவையில்லை, வீட்டில் இருந்தாலும் ஒரு பாபாவை
நினைவு செய்யுங்கள். துôய்மை ஆகவில்லை என்றால், பாபாவை நினைவு
செய்ய முடியாது. அனைவருமே வந்து வகுப்பிற்கு வந்து படிப்பார்களா
என்ன? மந்திரம் கிடைத்து விட்டது, எங்கே வேண்டு மானாலும் (வேலைக்கு)
போங்கள். சதோபிரதானம் ஆவதற்காக பாபா பாதை கூறி விட்டார்.
இன்னும் நீங்கள் சென்டருக்கு வந்தால் புதிய-புதிய விஷயங்களைக்
கேட்கலாம். சில நேரங்களில் ஏதாவது காரணத்தால் வர முடியவில்லை
மழை பொழிகின்றது, தடையுத்தரவு ஏற்படுகின்றது என்றால் பரவாயில்லை,
எவரும் வெளியிலேயே வர முடியவில்லை என்றால் என்ன செய்ய முடியும்?
பரவாயில்லை, என்று பாபா கூறுகின்றார். எங்கிருந்தாலும் என்னை
நினைவு செய்யுங்கள் என்று பாபா கூறுகின்றார், நடக்கும்
போதும்-வரும்போதும், போகும் போதும் என்னை நினைவு செய்யுங்கள்
என்று பாபா கூறுகின்றார். பாபாவை நினைவு செய்வதன் மூலம் பாவ
கர்மங்கள் அழியும் மேலும் தேவதை ஆகலாம் என்று மற்றவர் களுக்கும்
கூறுங்கள். இரண்டே வார்த்தை தான்.
குழந்தைப்பருவத்தை மறக்க வேண்டாம் என்று பாபா கூறுகின்றார்,
பாபாவை மறந்தால்- இன்று சிரிக்கலாம் நாளை அழ வேண்டி வரும்.
பாபாவிடமிருந்து முழு ஆஸ்தி அடைய வேண்டும். சொர்க்கத்திற்குப்
போவதற்கு யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கின்றதோ அவர்கள் அவசியம்
போவார்கள், என்று நிறைய பேர் கூறுகின்றார்கள். அதை
புருஷார்த்தம் (முயற்சி) என்றே கூற முடியாது. உயர்ந்த பதவி
அடைவதற்காக மனிதர்கள் முயற்சி செய் கின்றார்கள். இப்பொழுது
பாபாவிடமிருந்து உயர்ந்த பதவி கிடைக்கின்றது என்றால், நாம் ஏன்
தவறு செய்ய வேண்டும்? பள்ளியில் யார் படிக்கவில்லையோ அவர்கள்
எழுத-படித்தவர்கள் முன்னால் சுமை துôக்க வேண்டி வரும். பாபாவை
முழுமையாக நினைக்கவில்லை என்றால் பிரஜைகளுக்கு கூட
வேலைக்காரர்களாக ஆவீர்கள். இதில் மகிழ்ச்சி அடைய வேண்டுமா என்ன!
அதனால் பாபா புரிய வைக்கின்றார்- இனிமை யிலும்-இனிமையான
குழந்தைகள்! பாபா முன்னால் வந்து புத்துணர்ச்சி அடைந்து
செல்கின்றீர்கள். சில பந்தனத்தில் உள்ள பெண்கள்
இருக்கின்றார்கள், பரவாயில்லை, வீட்டில் அமர்ந்தே பாபாவை நினைவு
செய்து வாருங்கள். உங்களுக்கு எளிதாக புரிய வைக்கின்றார்! மரணம்
எதிரிலேயே நின்று கொண்டு இருக்கின்றது, திடீரென்று யுத்தம்
ஆரம்பம் ஆகிவிடும். சிறிது பிரச்சனை செய்தாலும் நாங்கள் அப்படி
(சண்டை) ஆரம்பித்து விடுவோம் என்று ஒருவருக்கொருவர் கூறிக்
கொள்கின்றார்கள். முதலிலேயே கூறிவிடு கிறார்கள், அணுகுண்டின்
கர்வம் அதிகமாக உள்ளது. பாபா புரிய வைக்கின்றார்- குழந்தைகள்
யோக பலத்தில் இன்னும் திறமை ஆகவில்லை ஆனால் போர் ஏற்பட்டு
விட்டது என்று அப்படி ஆகிவிடக்கூடாது. ஆனால் நாடகப்படி அவ்வாறு
ஆகாது. ஆகையால் குழந்தைகள் முழு ஆஸ்தி அடையவில்லை, எனவே போர்
ஆரம்பித்தாலும் நின்று போய்விடும். ஏனென்றால், இப்பொழுது
இன்னும் இராஜதானி ஸ்தாபனை ஆகவில்லை, சற்று நேரம் வேண்டும்.
புருஷார்த்தம் செய்வித்துக் கொண்டு இருக்கின்றார், எந்த நேரம்
வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்! பஸ் மோதி கீழே
விழுகின்றது, ஆகாயவிமானம், மூலமாக விபத்து, இரயில் வண்டிகள்
மோதிக் கொள்கின்றன, எத்தனை பேர் மரணம், மிகவும் எளிதாக
நடக்கின்றது, பூகம்பம் வருகின்றது. அனைத்தையும் விட அதிக வேலை
பூகம்பம் தான் செய்யும். ஆனால் வினாசத்திற்கு முன்னால்
பாபாவிடம் இருந்து முழு ஆஸ்தியை அடைய வேண்டும். ஆகையால் மிகவும்
அன்போடு பாபாவை நினைவு செய்ய வேண்டும். பாபா, உங்களைத் தவிர
வேறு யாரும் எங்களுக்கு இல்லை. பாபாவை மட்டும் நினைவு செய்து
வாருங்கள். சின்ன-சின்ன குழந்தைகளுக்கு புரிய வைப்பது போல்
எவ்வளவு எளிதாக புரிய வைக்கின்றார் மேலும் எந்த கஷ்டமும்
கொடுக்கவில்லை, என்னை மட்டும் நினைவு செய்யுங் கள் என்கின்றார்.
நீங்கள் காமச் சிதையில் அமர்ந்து எரிந்து விட்டீர்கள்,
இப்பொழுது ஞானச் சிதையில் அமர்ந்து துôய்மை ஆகுங்கள்! உங்களிடம்
கேட்பார்கள், உங்களுடைய நோக்கம் என்ன? என்று, நீங்கள் கூறுங்கள்,
அனைவருக்கும் தந்தையாக உள்ளவர் வந்து கூறுகின்றார், என்னை
நினைவு செய்யுங்கள் உங்களுடைய பாவ கர்மங்கள் எல்லாம் வினாசம்
ஆகும் மேலும் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானம் ஆகிவிடலாம்
என்று கூறுங்கள். அனைவருக்கும் ஒரே பாபா தான் சத்கதியைத்
தரக்கூடிய வள்ளல் ஒரே தந்தை தான் ஆவார். பாபாவை மட்டும் நினைவு
செய்யுங்கள்- உங்கள் ஆத்மாவில் உள்ள துரு நீங்கி விடும் என்று
பாபா கூறுகின்றார். இந்தளவு செய்தியை அனை வருக்கும் தர
முடியுமல்லவா? முதலில் நாம் நினைத்தால் தானே, பிறகு
மற்றவர்களுக்கு நினைவு செயிவிக்க முடியும். மற்றவர்களுக்கு
ஆர்வத்தோடு சொல்ல வேண்டும்,. இல்லை யென்றால் உள்ளத்திலிருந்து
எழாது. எங்கிருந்தாலும், எவ்வளவு முடிகின்றதோ அவ்வளவு பாபாவை
நினைவு செய்யுங்கள். உணவு-இருப்பிடம் சம்மந்தமான சிறிது கஷ்டம்
இருக்கலாம்! ஆனாலும் வீட்டில் தானே இருக்க வேண்டும். வீட்டில்
இருந்து கொண்டே பாபாவை நினைவு செய்யுங்கள். யாரை சந்தித்தாலும்,
மரணம் எதிரிலே உள்ளது எனும் ஞானத்தைக் கொடுங்கள்.
நீங்கள் அனைவரும் தமோபிரதானம் பதீதர்கள் ஆகிவிட்டீர்கள்,
இப்பொழுது என்னை நினைவு செய்யுங்கள் மேலும் துôய்மை ஆகுங்கள்.
ஆத்மா தான் பதீதமாகியுள்ளது, சத்தியயுகத்தில் ஆத்மா பாவனமாக
இருக்கும். பாபாவின் நினைவின் மூலமே ஆத்மா பாவனம் ஆக வேண்டும்,
வேறு வழி இல்லை! இந்த செய்தியை அனை வருக்கும் கொடுத்துக் கொண்டே
சென்றால் கூட நிறைய பேருக்கு நன்மை செய்வீர்கள். வேண்டும் வேறு
எந்த கஷ்டமும் பாபா கொடுக்கவில்லை. புருஷோத்தம மாதத்தில்
அனைவரிலும் புருúôத்தமர் யார்? என்று புரிய வைக்க வேண்டும்.
சத்யுகத்தில் தான் இலட்சுமி-நாராயணன் புருஷோத்த மராக
இருந்தார்கள். பாபா தான் இவர்களை புருஷோத்தமராக ஆக்கக் கூடியவர்,
அதாவது சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவர். அனைத்து ஆத்மாக்
களையும் பாவனம் ஆக்குவது பதீத-பாவனன் பாபா தான். பாபா தான் அனை
வரையும் விட உத்தமமான புருஷர்களாக ஆக்குபவர் தந்தை. பூஜிக்கத்
தகுதி வாய்ந்த நிலையில் யார் இருந்தார்களோ, அவர்கள் தான் பூஜாரி
ஆகவும் ஆகின்றார்கள். இராவண ராஜ்யத்தில் நாம் பூஜாரி
ஆகியுள்ளோர் இராம இராஜ்யத்தில் பூஜிக்கத் தக்கவர்களாக இருந்தோம்.
இப்பொழுது இராவண இராஜ்யத்தின் கடைசி நேரம். நாம்
பூஜாரியிலிருந்து பூஜிக்கத் தகுந்த நிலை அடைகின்றோம். பாபாவை
நினைப்பதற்கான வழியை மற்றவர்களுக்கும் கூறவேண்டும்.
வயோதிகர்களும் இந்த சேவையை செய்ய வேண்டும். நண்பர்கள்-உறவினர்
களுக்கும் கூட பாபாவின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும்.
கூறுங்கள், சிவபாபா கூறுகின்றார்: பாபாவை நினைவு செய்தீர்கள்
என்றால் நீங்கள் சொர்க்கத்திற்கு எஜமானன் ஆகிவிடுவீர்கள்.
நிராகார சிவபாபா அனைவருக் கும் சத்கதியை கொடுக்கக் கூடிய வள்ளல்
ஆவார், அனைத்து ஆத்மாக்களுக்கும் கூறுகின்றார் என்னை நினைவு
செய்வீர்கள் என்றால் சதோபிரதானம் ஆகிவிடலாம் என்கின்றார். இதை
புரிய வைப்பது எளிது தானே! வயோதிக தாய்மார்கள் கூட இந்த சேவை
செய்ய முடியும். இது தான் முக்கியமான விஷயம். கல்யாணம்,
காட்சிகள் எங்கு வேண்டுமானாலும் போங்கள், அவர்களின் காதுகளிலும்
இந்த விஷயத்தை கூறுங்கள். கீதையின் பகவான் கூறுகின்றார்- என்னை
நினைவு செய்யுங்கள் என்று, இந்த விஷயத்தை அனைவரும்
விரும்புவார்கள். அதிகம் பேசுவதற்கு தேவையில்லை. பாபா கூறு
கின்றார்-என்னை நினைவு செய்யுங்கள் என்ற இந்த செய்தியை மட்டும்
கூறுங்கள்.
நல்லது! பகவான் பிரேரணை கொடுக்கின்றார் என்று புரிந்து
கொள்ளுங்கள், கனவிலும் காட்சி தெரியும். அவர் பேசுவது
கேட்கின்றது- என்னை நினைவு செய்தால் சதோபிரதானம் ஆகலாம் என்று
பாபா கூறுகின்றார். நீங்களும் தனக்குத்தான் இதே சிந்தனை
செய்தீர்கள் என்றால் படகு அக்கரை சேர்ந்து விடும். நாம்
இப்பொழுது நடைமுறையில் பாபாவின் குழந்தைகள் ஆகி உள்ளோம், மேலும்
அவரிடமிருந்து 21 ஜென்மத்திற்கு ஆஸ்தியை அடைந்து கொண்டு
இருக்கின்றோம் என்றால், மகிழ்ச்சியாக இருக்க வேண்டு மல்லவா!
பாபாவை மறப்பதால் தான் கஷ்டங்கள் வருகின்றன. பாபா மிகவும்
எளிதாக எடுத்துக் கூறுகின்றார்- என்னை நினைவு செய்யுங்கள்
என்கின்றார். மற்றவர்களும் இவர்கள் பாதை முற்றிலும் சரியானது
என்று புரிந்து கொள்வார்கள். இந்த பாதையை யாராலும் சொல்ல
முடியாது. வீட்டிலிருந்து வெளியே கூட வர முடியாத நேரம் வரும்.
பாபாவை நினைத்துக் கொண்டே உடலை விட்டு விடுவீர்கள். கடைசி
நேரத்தில் பாபாவை யார் நினைக்கின்றார்களோ- அவர் நாராயணன்
ஆத்மாவின் உடலில் இறங்குகின்றது. அவர் தான் பின்பு இலட்சுமி-
நாராயணன் குலத்தில் வருவீர்கள். இராஜ பதவியை அடைவீர்கள். பாபாவை
மட்டும் அன்போடு நினைவு செய்யுங்கள். பாபாவின் நினைவு செய்யாமல்
அன்பு எப்படி செலுத்துவது? சுகம் கிடைத்தால் தான் நினைவு
செய்யப்படுகிறது! துக்கம் தருவோர் மீதுஅன்பு
செலுத்தப்படுவதில்லை. நான் உங்களை சொர்க்கத்திற்கு எஜமானன் ஆக
ஆக்குகின்றேன் ஆகையால் என்னை அன்போடு நினைவு செய்யுங்கள் என்று
பாபா கூறுகின்றார். பாபாவின் வழிப்படி நடக்க வேண்டுமல்லவா!
நல்லது-
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) படிப்பில் ஒரு போதும் தவறு செய்யக் கூடாது, யுத்தத்திற்கு
முன்னால் பாபாவிடமிருந்து முழு ஆஸ்தியை அடைய வேண்டும்.
2) ஸ்ரீமத்படி பாபாவை மிகவும் அன்போடு நினைவு செய்யவேண்டும்.
வரதானம்:
எண்ணம், உள்ளுணர்வு மற்றும் நினைவு இவற்றில் வீணானதை
முடிக்கக் கூடிய உண்மையான சம்பூர்ண பவித்ர பிராமணன் ஆகுக !
தங்களுடைய எண்ணம், உள்ளுணர்வு மற்றும் நினைவை சோதனை செய்யுங்கள்
சிறிது தவறு நடந்து விட்டது மன்னிப்புக் கேட்டேன், பச்சாதாபம்
அடைந்தேன், நடந்து முடிந்து விட்டது என்று கூறுவதில்லைதானே!
எவ்வளவு தான் மன்னிப்புக் கேட்டாலும், பாபம் வீணான கர்மம்
செய்து விட்டால் அதனுடைய அடையாளம் அழியாது. பதிவேடும் சுத்தமாக
இருக்காது. இம்மாதிரி யான வழிமுறைகளை தனதாக்கிக் கொள்ளாதீர்கள்,
ஆனால் நான் சம்பூர்ண பவித்ர பிராமணன் என்ற நினைவு இருக்கட்டும்.
தூய்மையற்ற தன்மை எண்ணம், உள்ளுணர்வு மற்றும் நினைவில் கூட தொட
முடியாது. இதற்காக ஒவ்வொரு அடியிலும் கவனமாக இருங்கள்.
சுலோகன்:
தந்தையின் துணையைப் பயன்படுத்தும் போது
ஒருபொழுதும் மனம் உடைந்து போக மாட்டீர்கள்.
அவ்யக்த இஷாரா: தூய்மையற்ற விதையைக் கூட முடித்துவிட்டு
சம்பூர்ண தூய்மை (பவித்ரம்) ஆகுங்கள்.
தூய்மையின் இரகசியத்தை நடைமுறையில் கொண்டு வருவதென்றால்
சங்கல்ப ரூபத்தில் கூட ஐந்து விகாரங்களின் மீது வெற்றி அடைவது
ஆகும். வீணான சங்கல்பம் கோபத்தை உற்பத்தி செய்கிறது, காம
விகாரத் தினால் மற்றவர்கள் மேல் வீணான பார்வை செல்கிறது,
என்றால் அச்சமயத்தில் தூய்மை என்று ஏற்றுக் கொள்ள இயலாது.
ஆகையால் இந்த வீணான சங்கல்பத்தை பாபாவின் அன்பிற்குள்
சமர்ப்பணம் செய்து விடுங்கள்