24-11-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! உங்களுடைய இந்த
நேரம் மிகவும் மதிப்புடையதாகும். எனவே இதை வீணாக இழக்காதீர்கள்.
பாத்திரம் அறிந்து தானம் கொடுங்கள்.
கேள்வி:
குணங்களின் தாரணையும் ஆகிக்
கொண்டே இருக்க வேண்டும் மற்றும் நடத்தையும் திருந்திக் கொண்டே
இருக்க வேண்டும் என்றால் அதற்கான சுலபமான விதி என்ன?
பதில்:
பாபா புரிய வைப்பதை
மற்றவர்களுக்குப் புரிய வையுங்கள். ஞான செல்வத்தை தானம்
செய்யுங்கள். அப்பொழுது குணங்களின் தாரணை கூட இயல்பாக்கிக்
கொண்டே செல்லும் பழக்கமாகி விடும். நடத்தையும் திருந்திக்
கொண்டே யிருக்கும். யாருடைய புத்தியில் இந்த ஞானம்
இருப்பதில்லையோ, ஞான தானம் செய்வ தில்லையோ அவர்கள் கருமிகள்
ஆவார்கள். அவர்கள் இலவசமாக தங்களுக்கு தாங்களே ஏற்படுத்திக்
கொள்கிறார்கள்.
பாடல்:
குழந்தைப் பருவத்தின் நாட்களை
மறந்து விடாதீர்கள்.. .. ..
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகள் பாட்டு கேட்டீர்கள்.
அர்த்தத்தையோ நல்ல முறையில் புரிந்து கொண்டீர்கள். நாம்
ஆத்மாக்கள் ஆவோம். மேலும் எல்லையில்லாத தந்தை யின் குழந்தைகள்!
இதை மறந்து விடாதீர்கள். அப்பொழுது தான் தந்தையின் நினைவில்
மகிழ்ச்சி யாக இருப்பீர்கள். அவ்வப்போது நினைவு மறந்தவுடன்
துக்கப்பட்டு விடுகிறீர்கள். இப்பொழுது உயிருடனிருக்கிறீர்கள்.
உடனே இறந்தும் விடுகிறீர்கள். அதாவது எல்லையில்லாத தந்தை
யினுடையவராக ஆகிறீர்கள். உடனே உலகீய குடும்பத்தின் பக்கம்
சென்று விடு கிறீர்கள். எனவே இன்று சிரிக்கிறீர்கள், நாளைக்கு
அழுது கொண்டிருக் காதீர்கள் என்று தந்தை கூறுகிறார். இது தான்
பாடலின் பொருளாகிறது.
பெரும்பாலும் மனிதர்கள் அமைதிக்காகத் தான் மோதிக்
கொண்டிருக்கிறார்கள் என்பதை குழந்தைகளாகிய நீங்கள்
அறிந்துள்ளீர்கள். தீர்த்த யாத்திரையில் செல்கிறார்கள். இது
போல அடி வாங்குவதால் ஒன்றும் அமைதி கிடைக்கும் என்பதல்ல. இது
ஒரே ஒரு சங்கமயுகமாகும். இப்பொழுது தான் தந்தை வந்து புரிய
வைக்கிறார். முதன் முதலில் தன்னை கண்டறிந்து கொள்ளுங்கள். ஆத்மா
இருப்பதோ அமைதியின் வடிவமாக. இருப்பதற்கான இடம் கூட சாந்தி
தாமமாகும். இங்கு வரும் பொழுது கர்மம் அவசியம் செய்ய
வேண்டியுள்ளது. தங்களுடைய சாந்தி தாமத்தில் இருக்கும் பொழுது
அமைதி இருக்கும். சத்யுகத்தில் கூட அமைதி இருக்கும். சுகமும்
இருக்கும், சாந்தியும் இருக்கும். சாந்தி தாமத்தை சுகதாமம்
என்று கூற மாட்டார்கள். எங்கு சுகம் இருக்கிறதோ அதை சுக தாமம்
என்றும் எங்கு துக்கம் இருக்கிறதோ அதை துக்கதாமம் என்றும்
கூறுவார்கள். இந்த எல்லா விஷயங்களையும் நீங்கள் புரிந்து
கொண்டிருக்கிறீர்கள். இவை அனைத்தும் ஒருவருக்கு நேரிடையாகத்
தான் புரிய வைக்கப்படுகிறது. கண்காட்சியில் உள்ளே நுழையும்
பொழுது முதன் முதலில் தந்தை யினுடைய அறிமுகத்தைத் தான் கொடுக்க
வேண்டும். ஆத்மாக்களின் தந்தை ஒரே ஒருவர் தான் என்று புரிய
வைக்கப் படுகிறது. அவரே கீதையின் பகவான். மற்றது இவர்கள்
எல்லோரும் ஆத்மாக்கள். ஆத்மா சரீரத்தை விடுகிறது மற்றும்
எடுக்கிறது. சரீரத்தினுடைய பெயர் தான் மாறுகிறது. ஆத்மாவினுடைய
பெயர் மாறுவ தில்லை. எனவே எல்லையில்லாத தந்தையிடமிருந்து தான்
சுகத்தின் ஆஸ்தி கிடைக்கிறது என்பதை குழந்தைகளாகிய நீங்கள்
புரிய வைக்க முடியும். தந்தை சுகத்தின் சிருஷ்டியை ஸ்தாபனை
செய்துக் கொண்டிருக்கிறார். தந்தை துக்கத்தின் சிருஷ்டியை
படைப்பார் என்பது நடக்க முடியாது. பாரதத்தில் லட்சுமி
நாராயணரின் இராஜ்யம் இருந்தது அல்லவா? படம் கூட இருக்கிறது -
இந்த சுகத்தின் ஆஸ்தி கிடைக்கிறது என்று கூறுங்கள். ஒரு வேளை
அவர்கள் இதுவோ உங்களுடைய கற்பனை என்று கூறினார்கள் என்றால்
ஒரேயடியாக விட்டு விட வேண்டும். கற்பனை என்று நினைப்பவர்
ஒன்றும் புரிந்து கொள்ள மாட்டார். உங்களுடைய இந்த நேரமோ மிகவும்
மதிப்பு வாய்ந்ததாகும். இந்த முழு உலகத்தில் உங்களுடையதைப் போல
மதிப்பு வாய்ந்த நேரம் வேறு யாருடையதும் கிடையாது. மிகப் பெரிய
மனிதர்களுடைய நேரம் மதிப்பு வாய்ந்தது. தந்தையினுடைய நேரம்
எவ்வளவு மதிப்பு வாய்ந்தது. தந்தை புரிய வைத்து எப்படி இருந்த
நம்மை எப்படியாக ஆக்குகிறார். எனவே நீங்கள் உங்களுடைய மதிப்பு
வாய்ந்த நேரத்தை இழக்காதீர்கள் என்று தந்தை குழந்தைகளாகிய
உங்களுக்குத் தான் கூறுகிறார். ஞானத்தைத் தகுந்த
பாத்திரத்திற்கு தான் கொடுக்க வேண்டும். பாத்திரமறிந்து புரிய
வைக்க வேண்டும் - எல்லா குழந்தைகளும் புரிந்து கொள்ள முடியாது.
புரிந்து கொள்ளும் அளவிற்கு புத்தியில்லை. முதன் முதலில்
தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். ஆத்மாக்களாகிய நமது
தந்தை சிவன் என்பதைப் புரிந்து கொள்ளாத வரை மேற்கொண்டு எதுவும்
புரிந்து கொள்ள முடியாது. மிகவும் அன்புடன், பணிவுடன் புரிய
வைத்து அனுப்பி விட வேண்டும். ஏனெனில் அசுர சம்பிரதாயத்தினர்
சண்டை போடுவதற்குத் தாமதிக்க மாட்டார்கள். அரசாங்கம்
மாணவர்களுக்கு எவ்வளவு மகிமை செய்கிறது. அவர்களுக்காக எவ்வளவு
ஏற்பாடுகள் செய்கிறது. கல்லூரி மாணவர்கள் தான் முதன் முதலில்
கல்லால் அடிக்க ஆரம்பிக்கிறார்கள். ஆவேசம் இருக்கிறது அல்லவா?
முதியோர்கள் அல்லது தாய்மார் கள் அவ்வளவு பலத்துடன் கல்லால்
அடிக்க முடியாது. பெரும்பாலும் மாணவர்களுடைய கூச்சல் தான்
இருக்கும். அவர்களைத் தான் யுத்தத்திற் காகத் தயார்
செய்கிறார்கள். நீங்கள் இப்பொழுது தலைகீழாகி விட்டுள்ளீர்கள்
என்று தந்தை ஆத்மாக் களுக்குப் புரிய வைக்கிறார். தன்னை ஆத்மா
என்பதற்குப் பதிலாக சரீரம் என்று நினைத்துக் கொண்டு
விடுகிறீர்கள். இப்பொழுது தந்தை உங்களை நேரானவர்களாக மாற்றிக்
கொண்டி ருக்கிறார். எவ்வளவு இரவு பகலுக்கிடையேயான வித்தியாசமாகி
விடுகிறது. நேரானவராகி விடும் பொழுது நீங்கள் உலகிற்கு
அதிபதியாகி விடுகிறீர்கள். நாம் அரைகல்பம் தலைகீழாக இருந்தோம்
என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். இப்பொழுது தந்தை
அரைக் கல்பத்திற்கு நேரான வராக ஆக்குகிறார். நீங்கள் அல்லாவின்
குழந்தைகள். எனவே உலக அரசாட்சியின் ஆஸ்தி கிடைக்கிறது. இராவணன்
தலைகீழாக ஆக்கி விடும் பொழுது கலைகள் எல்லாம் இல்லாமல் போய்
விடுகின்றன. பிறகு விழுந்து கொண்டே இருப்பார்கள். இராம இராஜ்யம்
மற்றும் இராவண இராஜ்யம் பற்றி குழந்தைகள் அறிந்துள்ளீர்கள்.
நீங்கள் தந்தையின் நினைவில் இருக்க வேண்டும். சரீர
நிர்வாகத்திற்காக கர்மங்கள் செய்ய வேண்டும் தான். பிறகும் நேரமோ
நிறைய கிடைக்கிறது. யாருமே ஞானம் கேட்கும் ஆர்வத்துடன் வரவில்லை.
எனவே சேவை இல்லை என்றால் தந்தை யின் நினைவில் அமர்ந்து விட
வேண்டும். அது குறுகிய காலத்திற் கான சம்பாத்தியம். மேலும் இது
உங்களுடையது சதா காலத்திற்கான சம்பாத்தியம். இதில் அதிகமாக
கவனம் கொடுக்க வேண்டியுள்ளது. மாயை அடிக்கடி வேறு பக்கம்
சிந்தனையைத் திருப்பி விடுகிறது. இப்படி ஆகிக்கொண்டு
தானிருக்கும். மாயை மறக்க வைத்துக் கொண்டி ருக்கும். இது பற்றி
ஒரு நாடகம் கூட காண்பிக்கிறார்கள் - பிரபு இப்படி கூறுகிறார்.
மாயை இப்படி கூறுகிறது. என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று
தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். இதில் தான் தடைகள்
ஏற்படுகின்றன. வேறு எந்த விஷயத்திலும் இவ்வளவு தடைகள்
ஏற்படுவதில்லை. தூய்மை காரணமாக எவ்வளவு அடி வாங்குகிறார்கள்.
பாகவதத்தில் இந்த நேரத்தினுடைய பாடல் தான் உள்ளது. பூதனாக்கள்,
சூர்ப்பனைகள் கூட இருக்கிறார்கள். இவை எல்லாமே தந்தை வந்து
தூய்மை யாக்கக் கூடிய இந்த நேரத்தின் விஷயங்கள். உற்சவங்கள்
கொண்டாடுகிறார்கள். எது நடந்து முடிந்தவையோ அவற்றிற்கு பிறகு
பண்டிகைகள் கொண்டாடிக் கொண்டே வருகிறார்கள். நடந்து
முடிந்தவைக்கு மகிமை செய்து கொண்டே வருகிறார்கள். இராம
இராஜ்யத்திற்கு மகிமை பாடுகிறார்கள். ஏனெனில் நடந்து முடிந்து
விட்டுள்ளது. எப்படி கிறிஸ்து ஆகியோர் வந்தார்கள். தர்ம ஸ்தாபனை
செய்து விட்டு சென்றுள்ளார்கள். திதி, தேதி கூட எழுதி விடு
கிறார்கள். பிறகு அவர்களுக்குப் பிறந்த நாள் கொண்டாடிக் கொண்டே
வருகிறார்கள். பக்தி மார்க்கத்தில் கூட இந்த தொழில் அரைக்
கல்பம் நடக்கிறது. சத்யுகத்தில் இது இருப்பதில்லை. இந்த உலகமே
முடியப் போகிறது. இந்த விஷயங்கள் உங்களிலும் கூட மிக குறைவானோர்
தான் புரிந்துள்ளார்கள். அனைத்து ஆத்மாக்களும் கடைசியில்
திரும்பிச் செல்ல வேண்டும் என்பதை தந்தை புரிய வைத்துள்ளார்.
எல்லா ஆத்மாக்களும் சரீரத்தை விட்டு விடுவார்கள். இன்னும்
குறைவான நாட்களே மீதி உள்ளன என்பது குழந்தைகளாகிய உங்களுடைய
புத்தியில் உள்ளது. இப்பொழுது மீண்டும் இவை எல்லாமே அழியப்
போகிறது. சத்யுகத்தில் நாம் மட்டுமே வருவோம். எல்லா
ஆத்மாக்களும் ஒன்றும் வரமாட்டார்கள். யார் முந்தைய கல்பத்தில்
வந்திருந்தார்களோ அவர்களே வரிசைக் கிரமமாக வருவார்கள். அவர்களே
நல்ல முறையில் கற்று மேலும் கற்பித்துக் கொண்டும் இருப்பார்கள்.
யார் நன்றாகப் படிக்கிறார்களோ அவர்கள் தான் வரிசைக்கிரமத்தில்
மாற்றமடைகிறார்கள் நீங்களும் மாற்றமாகின்றீர்கள். அனைவரும்
வரிசைக்கிரமமாக அங்கு சாந்தி தாமத்திற்குச் சென்று அமருவார்கள்.
பிறகு வரிசைக்கிரமமாக வந்து கொண்டே இருப்பார் கள். முக்கியமான
விஷயமாவது தந்தையின் அறிமுகத்தை அளிப்பது என்று தந்தை
கூறுகிறார். தந்தையின் பெயர் எப்பொழுதும் வாயில் இருக்கட்டும்.
ஆத்மா என்றால் என்ன? பரமாத்மா என்றால் என்ன? என்பது உலகத்தில்
யாருக்கும் தெரியாது. புருவ மத்தியில் பிரகாசிக்கும் அதிசயமான
நட்சத்திரம் என்று பாடுகிறார்கள் தான். அவ்வளவே. அதிகமாக
எதையும் புரியாமல் உள்ளார்கள். அதுவும் இந்த ஞானம் மிகவும்
குறைவானோரின் புத்தியில் உள்ளது. அடிக்கடி மறந்து விடுகிறார்கள்.
தந்தை தான் பதீத பாவனர் ஆவார் என்பதை முதன் முதலில் புரிய
வைக்க வேண்டும். ஆஸ்தியும் அளிக்கிறார். சக்கரவர்த்தியாக
ஆக்குகிறார். கடைசியில் அந்த நாளும் வந்தது என்ற பாடல் கூட
உங்களிடம் உள்ளது. அவரை அடைவதற் கான வழிக்காக பக்தி
மார்க்கத்தில் மிகவும் உழைத்தீர்கள். துவாபர முதல் பக்தி
ஆரம்பமாகிறது. பிறகு கடைசியில் தந்தை வந்து வழியைக் கூறுகிறார்.
தீர்ப்பிற் கான நேரம் என்று கூட இதற்குக் கூறப்படுகிறது. அசுர
பந்தனத்தின் அனைத்து கணக்கு வழக்கையும் முடித்து விட்டு பிறகு
திரும்பச் சென்று விடுகிறார்கள். 84 பிறவிகளின் பாகத்தை நீங்கள்
தான் அறிந்துள்ளீர்கள். இந்த பாகம் நடிக்கப்பட்டு கொண்டே
இருக்கிறது. சிவஜெயந்தி கொண்டாடு கிறார்கள் என்றால் அவசியம்
சிவன் வந்திருக் கக்கூடும். அவசியம் ஏதாவது செய்திருக்கக்
கூடும். அவரே புதிய உலகத்தை அமைக்கிறார். இந்த லட்சுமி நாராயணர்
அதிபதியாக இருந்தார் கள். இப்பொழுது இல்லை. மீண்டும் தந்தை
இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். இந்த இராஜயோகத்தைக்
கற்பித்திருந்தார். உங்களைத் தவிர வேறு யாருடைய வாயிலிருந்தும்
வர முடியாது. நீங்கள் தான் புரிய வைக்க முடியும். சிவபாபா
நமக்கு இராஜயோகம் கற்பித்துக் கொண்டிருக்கிறார். அவர்கள்
உச்சரிக்கும் சிவோகம் என்ற வார்த்தை கூட தவறாகும். நீங்கள் தான்
சக்கரம் சுற்றி வந்து பிரமாண குலத்திலிருந்து தேவதை குலத்தில்
வருகிறீர்கள் என்பதை இப்பொழுது தந்தை புரிய வைத்துள்ளார். நாமே
அது, அதுவே நாம் (சோ ஹம், ஹம் சோ) என்பதன் பொருள் கூட நீங்கள்
தான் புரிய வைக்க முடியும். இப்பொழுது நாம் பிராமணர்கள்! இது
84ன் சக்கரம் ஆகும். இது ஒன்றும் மந்திரம் ஜபிப்பதற் கானதல்ல.
புத்தியில் அர்த்தம் இருக்க வேண்டும். அது கூட ஒரு நொடியின்
விஷயம் ஆகும். எப்படி விதை மற்றும் விருட்சம் ஒரு நொடியில் முழு
கவனத்தில் வந்து விடுகிறது. அதே போல ஹம் சோ (நாமே அது) என்பதன்
ரகசியம் கூட ஒரு நொடியில் வந்து விடுகிறது. நாம் இது போல
சக்கரம் சுற்றி வருகிறோம். அதற்கு சுயதரிசன சக்கரம் என்றும்
கூறப்படுகிறது. நீங்கள் யாரிட மாவது நாங்கள் சுயதரிசன சக்கரதாரி
ஆவோம் என்று கூறினீர்கள் என்றால் யாருமே ஏற்றுக் கொள்ள
மாட்டார்கள். இவர்களோ எல்லாமே தங்கள் மீது பட்டத்தை வைத்துக்
கொள்கிறார்கள் என்பார்கள். பிறகு நீங்கள் நாம் எப்படி 84
பிறவிகள் எடுக்கிறோம் என்பதைப் புரிய வைப்பீர்கள். இந்த சக்கரம்
சுற்றுகிறது. ஆத்மாவிற்கு தனது 84 பிறவிகளின் தரிசனம் ஆகிறது.
இதற்குத் தான் சுய தரிசன சக்கரதாரி என்று கூறப்படுகிறது.
முதலில் கேட்டு வியப்படைவார்கள். பிறகு இது என்ன பொய்
கூறுகிறார்கள் என்பார்கள்! நீங்கள் தந்தையின் அறிமுகத்தை
அளித்தீர்கள் என்றால், அவர்களுக்குப் பொய் என்று தோன்றாது.
தந்தையை நினைவு செய்கிறார்கள். பாபா நீங்கள் வந்தீர்கள் என்றால்
நாங்கள் சமர்ப்பணம் ஆகிடுவோம் என்றும் பாடுகிறார்கள். உங்களையே
நினைவு செய்வோம். நீங்கள் கூறிக் கொண்டிருந்தீர்கள் அல்லவா?
இப்பொழுது மீண்டும் உங்களுக்கு நினைவூட்டுகிறேன் என்று தந்தை
கூறுகிறார். நஷ்டோ மோகா (மோகத்தை நீக்கிய வர்களாக) ஆகி
விடுங்கள். இந்த தேகத்திலிருந்தும் நஷ்டோ மோகா ஆகி விடுங்கள்.
தன்னை ஆத்மா என்று உணர்ந்து என்னையே நினைவு செய்தீர்கள் என்றால்
உங்களது பாவங்கள் அழிந்து விடும். இந்த இனிமையான விஷயம்
எல்லோருக்கும் பிடித்துப் போய் விடும். தந்தையின் அறிமுகம்
இல்லை என்றால் பின் ஏதாவதொரு விஷயத்தில் சந்தேகம் எழுப்பிக்
கொண்டே இருப்பார்கள். எனவே முதலில் 2-3 படங்களை முன்னால் வைத்து
விடுங்கள். அதில் தந்தையின் அறிமுகம் இருக்க வேண்டும்.
தந்தையின் அறிமுகம் கிடைத்து விடுவதால் ஆஸ்தி கூட கிடைத்து
விடும்.
நான் உங்களை ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவாக ஆக்குகிறேன் என்று
தந்தை கூறுகிறார். இந்த படத்தை தயாரியுங்கள். இரட்டை கீரிடம்
அணிந்த ராஜாக்களுக்கு முன்னால் ஒற்றை கிரீடம் அணிந்தவர்கள் தலை
வணங்கு கிறார்கள். நீங்களே பூஜைக்குரியவர்கள். நீங்களே பூசாரி
என்பது பற்றிய ரகசியம் கூட புரிந்து கொண்டு விட வேண்டும்.
முதலில் தந்தையின் பூஜை செய்கிறார்கள். பிறகு தங்களுடைய
படங்களுக்கு முன் அமர்ந்து பூஜை செய்கிறார்கள். யார் தூய்மையாக
வாழ்ந்து சென்றுள்ளார்களோ அவர்களுடைய படங்களை வைத்து
பூஜிக்கிறார்கள். இதுவும் உங்களுக்கு இப்பொழுது ஞானம்
கிடைத்துள்ளது. இதற்கு முன்பு நீங்களே பூஜைக்குரியவர் ! நீங்களே
பூசாரி ! என்று பகவானுக்குக் கூறிக் கொண்டிருந்தீர்கள். நீங்கள்
தான் இந்த சக்கரத்தில் வருகிறீர்கள் என்று இப்பொழுது
உங்களுக்குப் புரிய வைக்கப் பட்டுள்ளது. புத்தியில் இந்த ஞானம்
எப்பொழுதும் இருக்கிறது. பின்னர் புரிய வைக்கவும் வேண்டும்.
செல்வம் (தானம்) அளிக்க அளிக்க செல்வம் குறையாது..... யார்
செல்வத்தை தானம் செய்வதில்லையோ அவர்களுக்கு கருமி என்று
கூறுவார்கள். தந்தை புரிய வைத்ததை பிறகு மற்றவர்களுக்குப்
புரிய வைக்க வேண்டும். புரிய வைக்கவில்லை என்றால் வீணாக
தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். குணங் களும்
தாரணை ஆகாது. நடத்தையே அவ்வாறு ஆகி விடும். ஒவ்வொருவரும்
தங்களைப் புரிந்து கொள்ள முடியும் அல்லவா? உங்களுக்கு இப்பொழுது
அறிவு கிடைத்துள்ளது. மற்றவர்கள் எல்லோருமே அறிவற்றவர்களாக
இருக்கிறார்கள். நீங்கள் அனைத்தையும் அறிந்துள்ளீர்கள். இந்த
பக்கம் இருப்பது தெய்வீக சம்பிரதாயம். அந்தப் பக்கம் இருப்பது
அசுர சம்பிரதாயம் என்று தந்தை கூறுகிறார். இப்பொழுது நாம்
சங்கம யுகத்தில் இருக்கிறோம் என்பதை புத்தி மூலம் நீங்கள்
அறிந்துள்ளீர்கள். ஒரே வீட்டில் ஒருவர் சங்கமயுகத்தினர்,
மற்றொருவர் கலியுகத்தினர். இருவரும் சேர்ந்து இருக்கிறார்கள்.
பிறகு அன்னமாக ஆகத் தகுதி இல்லை என்று பார்க்கப்படும் பொழுது
யுக்திகள் (வழிமுறைகள்) கையாளப்படுகிறது. இல்லை என்றால் தடைகள்
ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்கள். தனக்குச் சமானமாக
ஆக்குவதற்கான முயற்சி செய்ய வேண்டும். இல்லை என்றால்
தொல்லைப்படுத்தி கொண்டே இருப்பார்கள். பிறகு யுக்தியுடன்
ஒதுக்க வேண்டி யிருக்கும். தடைகளோ ஏற்படும். இப்பேர்ப்பட்ட
ஞானம் நீங்கள் தான் அளிக்கிறீர்கள். மிகவும் இனிமையாகவும் ஆக
வேண்டி உள்ளது. நஷ்டமோகா (மோகத்தை அழித்தவராக) கூட ஆக வேண்டி
உள்ளது. ஒரு விகாரத்தை விட்டார்கள் என்றால் மற்ற விகாரங்கள்
குழப்பத்தை உண்டு பண்ணுகின்றன. எதுவெல்லாம் நடக்கிறதோ அது
முந்தைய கல்பத்தைப் போல என்று புரியப் படுகிறது. இவ்வாறு
நினைத்து அமைதியாக இருக்க வேண்டி உள்ளது. விதிக்கப்பட்டது என்று
புரியப்படுகிறது. நல்ல நல்ல புரிய வைக்கக் கூடிய குழந்தைகள்
கூட விழுந்து விடுகிறார்கள். மிகவும் பலத்த அடி வாங்கி
விடுகிறார்கள். பிறகு முந்தைய கல்பத்திலும் அடி வாங்கி இருக்க
கூடும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொருவரும் அவரவருக் குள்
புரிந்து கொள்ள முடியும். பாபா நான் கோபத்தில் வந்து விட்டேன்.
இன்னாரை அடித்து விட்டேன். இந்த தவறு ஆகிவிட்டது என்று எழுதவும்
செய்கிறார்கள். கூடுமானவரை கட்டுப்படுத்துங்கள் என்று தந்தை
புரிய வைக்கிறார். எப்படி எப்படியெல்லாம் மனிதர்கள்
இருக்கிறார்கள். அபலைகள் மீது எவ்வளவு கொடுமை செய் கிறார்கள்.
ஆண்கள் பலசாலியாக இருக்கிறார்கள். பெண்கள் (அபலைகள்)
பலமற்றவர்களாக இருப்பார்கள். தந்தை பிறகு உங்களுக்கு இந்த
மறைமுகமான யுத்தத்தைக் கற்பிக்கிறார். அதன் மூலம் நீங்கள்
இராவணன் மீது வெற்றி அடைகிறீர்கள். இந்த யுத்தம் யாருடைய
புத்தியிலும் இல்லை. உங்களிலும் கூட புரிந்து கொள்ளக்
கூடியவர்கள் வரிசைக்கிரமமாக இருக்கிறீர்கள். இது முற்றிலுமே
புதிய விஷயம் ஆகும். இப்பொழுது நீங்கள் சுகதாமத்திற்காகக்
கற்றுக் கொண்டி ருக்கிறீர்கள். இது கூட இப்பொழுது நினைவு
இருக்கிறது. பிறகு மறந்து போய் விடும். முக்கிய மான விஷயமே
நினைவு யாத்திரைதான்! நினைவினால் நாம் தூள்மை ஆகி விடுவோம்.
நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. எதெல்லாம் நடக்கிறதோ அது விதிக்கப்பட்டது என்று உணர்ந்து
அமைதியாக இருக்க வேண்டும் கோபப்படக் கூடாது. கூடுமானவரை
தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் யுக்திகளைக்
கையாண்டு தனக்குச் சமமாக ஆக்கும் முயற்சி செய்ய வேண்டும்.
2. மிகவும் அன்புடனும் பணிவுடனும் அனைவருக்கும் தந்தையின்
அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். தன்னை ஆத்மா என்று உணர்ந்து
என்னை நினைவு செய்யுங்கள். இந்த தேகத் திலிருந்து நஷ்டோ மோகா (மோகத்தை
நீக்கியவராக) ஆகி விடுங்கள் என்று தந்தை கூறுகிறார் என்ற இதே
இனிமையிலும் இனிமையான விஷயங்களை அனைவருக்கும் கூறுங்கள்.
வரதானம்:
ஒவ்வொரு ஆத்மாவையும் அலைவதிலிருந்தும் ஏழ்மையிலிருந்தும்
காப்பாற்ற கைமாறு கருதாமல் இரக்கம் கொள்பவராகுக !
கைமாறு கருதாமல் இரக்க மனம் கொள்ளும் குழந்தைகளின் இரக்கம்
கொண்ட எண்ணத்தால் பிற ஆத்மாக்களுக்கு அவர்களுடைய ஆன்மீக
வடிவமும், ஆத்மாவின் இலக்கும் ஒரு நொடியில் நினைவில் வந்து
விடும். அவர்களது இரக்கமான எண்ணத்தால் ஏழைகளுக்கு அனைத்து
பொக்கிஷங்களின் பொலிவு தென்படும் அலைந்து கொண்டிருக்கும்
ஆத்மாக்களுக்கு முக்தி, ஜீவன் முக்திக்கான இலக்கு எதிரில்
தென்படும். அவர்கள் அனைவரது துயரத்தையும் களைந்து சுகம்
தருபவராக நடந்து கொள்வார்கள். துக்கப்படுபவர்களை சுகமாக
மாற்றும் யுக்தி எப்போதும் அவர்களிடம் மந்திரச் சாவியாக
வைத்திருப்பார்கள்.
சுலோகன்:
சேவாதாரியாகி தன்னலமின்றி சேவை செய்க அப்போது சேவைக்கான பலன்
கிடைத்தே தீரும்.
அவியக்த சமிக்ஞை : அசரீரி அல்லது விதேகி நிலையின் பயிற்சியை
அதிகரியுங்கள்
இறுதி நேரத்தில் தத்துவங்கள் ஐந்தும் மிக நன்றாகவே அசைக்க
முற்படும் ஆனால் விதேகி நிலையின் பயிற்சி பெற்ற ஆத்மாக்கள்
முற்றிலும் ஆடாது அசையாது மதிப்புடன் தேர்ச்சி பெறுவார்கள்.
விசயங்கள் யாவும் கடந்து செல்லும் ஆயினும் பிரம்மா பாப்சமான்
மதிப்புடன் தேர்ச்சி பெற்று உதாரணமாவார்கள், இதற்காக நேரம்
ஒதுக்கி 5 தத்துவங்களுக்கும் சேவை செய்த சுபபாவனை எனும் ஒளி
தாருங்கள்.