25-03-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள்
மகாவீரர்கள் ஆகவே, நீங்கள் மாயையின் புயல்களுக்குப் பயப்படக்
கூடாது, ஒரு பாபாவைத் தவிர வேறு எதற்கும் கவலைப் படாமல்
கண்டிப்பாக தூய்மையாக வேண்டும்
கேள்வி:
குழந்தைகளிடம் எந்தவொரு தைரியம்
இருந்தது என்றால் மிகவும் உயர்ந்த பதவியை அடைய முடியும்?
பதில்:
ஸ்ரீமத்படி நடந்து தூய்மையாவதற்கு
தைரியம் வேண்டும். எவ்வளவு தான் கலகம், குழப்பம் வரட்டும்,
கொடுமைகளை பொறுத்துக் கொள்ள வேண்டியதாகவே இருக்கட்டும் ஆனாலும்
பாபா கொடுத்திருக்கும் தூய்மையாவதற்கான உயர்ந்த வழிப்படி
எப்போதும் சென்று கொண்டிருந்தீர்கள் என்றால் மிக உயர்ந்த பதவியை
அடையலாம். எந்த ஒரு விசயத்திலும் பயப்படக் கூடாது, என்ன
நடந்தாலும் - எதுவும் புதிதல்ல, அவ்வளவு தான்.
பாடல்:
கள்ளம் கபடமற்ற தன்மையினால்
தனிப்பட்டவர்..........
ஓம் சாந்தி.
இது பக்தி மார்க்கத்தவர்களின் பாடலாகும். ஞான மார்க்கத்தில்
பாட்டு போன்ற வற்றிற்கு அவசியம் இல்லை, ஏனென்றால் நமக்கு
எல்லையற்ற தந்தையிடம் இருந்து எல்லை யற்ற ஆஸ்தி கிடைக்க
வேண்டும் என்று பாடப்பட்டுள்ளது. பக்தி மார்க்கத்தின் பழக்க
வழக்கங் கள் இதில் வர முடியாது. குழந்தைகள் கவிதை போன்றவற்றை
படைக்கிறார்கள், அது மற்றவர் களுக்கு சொல்வதற்காக ஆகும்.
அதனுடைய அர்த்தத்தை கூட நீங்கள் புரிய வைக்காதவரை யாரும்
புரிந்து கொள்ள முடியாது. இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு
தந்தை கிடைத்திருக் கிறார் எனும்போது குஷியின் அளவு அதிகரிக்க
வேண்டும். பாபா 84 பிறவிகளின் சக்கரத்தின் ஞானத்தையும்
கூறியுள்ளார். நாம் இப்போது சுயதரிசன சக்கரதாரிகளாக ஆகியுள்ளோம்
என்று மகிழ்ச்சியடைய வேண்டும். தந்தையிடமிருந்து விஷ்ணுபுரியின்
ஆஸ்தியை அடைந்து கொண்டி ருக்கிறோம். நிச்சயபுத்தியுடையவர்கள்
தான் வெற்றி அடைவார்கள். யாருக்கு நிச்சயம் ஏற்படு கிறதோ,
அவர்கள் கண்டிப்பாக சத்யுகத்திற்குச் செல்லவே செல்வார்கள். எனவே
குழந்தைகளுக்கு எப்போதும் குஷி இருக்க வேண்டும் - தந்தையைப்
பின்பற்ற வேண்டும். நிராகார சிவதந்தை எப்போது இருவருக்குள்
பிரவேசித்தாரோ, அப்போதி லிருந்து கலகம், குழப்பங்கள் நடக்கிறது
என்பதை குழந்தைகள் தெரிந்துள்ளார்கள். குழந்தைகள் வளர்ந்து
விட்டார்கள் என்றால், விரைவாக திருமணம் செய்யுங்கள் என்று
சொல்வார்கள், திருமணம் இல்லாமல் காரியம் எப்படி நடக்கும்.
மனிதர்கள் கீதையை என்னவோ படிக்கிறார்கள், ஆனால் அதில் எதையும்
புரிந்து கொள்வ தில்லை. அதிகமாக பாபாவிற்கு கீதை படிக்கும்
பயிற்சி இருந்தது. ஒரு நாள் கூட கீதை படிப்பதை தவறவில்லை.
கீதையின் பகவான் சிவன் என்று தெரிந்த பிறகு, நாம் உலகத்திற்கு
எஜமானர்களாக ஆகப்போகிறோம் என்ற போதை ஏறிவிட்டது. இது
சிவபகவானுடைய மகாவாக்கியமாகும், பிறகு தூய்மைக்காகவும் பெரிய
அடிதடி நடந்தது. இதில் தைரியம் வேண்டும். நீங்கள்
மகாவீரர்கள்-மகாவீரனிகள் ஆவீர்கள். ஒருவரைத் தவிர வேறு எதைப்
பற்றியும் கவலையில்லை. ஆண் படைப்பவன், படைப்பவன் தானே
தூய்மையாகிறான் எனும்போது படைப்பையும் தூய்மை யாக்குகின்றான்.
இந்த விசயத்தின் மீது தான் சண்டை நடந்தது. பெரிய-பெரிய
வீடுகளிலிருந்து வந்து விட்டார்கள். எதைப்பற்றியும் கவலைப்
படவில்லை. யாருடைய அதிர்ஷ்டத்தில் இல்லையோ, அவர்கள் எப்படி
புரிந்து கொள்வார்கள். தூய்மையாக இருக்க வேண்டும் என்றால்
இருங்கள், இல்லையென்றால் சென்று தங்களுடைய ஏற்பாட்டை
செய்யுங்கள். அந்தளவிற்கு தைரியம் வேண்டும் அல்லவா. பாபாவிற்கு
முன்னால் எவ்வளவு கலகம் நடந்தது. பாபா எப்போதாவது துன்பப்பட்டு
பார்த்துள்ளீர்களா? அமெரிக்கா வரை நாளேடுகளில் வந்தன. எதுவும்
புதிதல்ல. இது கல்பத்திற்கு முன்போலவே நடக்கிறது, இதில்
பயப்படுவதற்கு என்ன விசயம் இருக்கிறது. நமக்கு நம்முடைய
தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைய வேண்டும். நம்முடைய படைப்பைக்
காக்க வேண்டும். அனைத்து படைப்புகளும் இந்த சமயத்தில்
தூய்மையற்றதாக இருக்கிறது என்பதை பாபா தெரிந்துள்ளார். நான்
தான் அனை வரையும் தூய்மையாக்க வேண்டும். பாபாவைத் தான் அனைவரும்
தூய்மை யற்றவர்களை தூய்மையாக்குபவர் என்று சொல்கிறார்கள்,
விடுவிப்பவரே வாருங்கள் என்று அழைக்கிறார்கள், எனும்போது
அவருக்கு இரக்கம் ஏற்படுகிறது. இரக்கமனமுடையவர் அல்லவா. எனவே
பாபா புரியவைக்கின்றார் - குழந்தைகளே எந்தவொரு விசயத்திலும்
பயப்படாதீர்கள். பயப்படுவதினால் அந்தளவிற்கு உயர்ந்த பதவியை
அடைய முடியாது. தாய்மார்களுக்குத் தான் கொடுமைகள் நடக்கின்றன.
திரௌபதியை துகிலுரிந்தார்கள் என்பது கூட அடையாளமாகும். பாபா 21
பிறவி களுக்கு துகிலுரிப்பதிலிருந்து காப்பாற்றுகிறார். உலகம்
இந்த விசயங்களை தெரிந்திருக்க வில்லை. தூய்மையற்ற தமோபிரதான
பழைய உலகமாகவும் ஆகத்தான் வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு பொருளும்
புதியதிலிருந்து பழையதாக ஆகத்தான் வேண்டும். பழைய வீட்டை விட
வேண்டியிருக்கிறது. புதிய உலகம் சத்யுகமாகும், பழைய உலகம்
கலியுகம்.... எப்போதும் இப்படி இருக்க முடியாது. இது
நாடகச்சக்கரம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள்.
தேவி-தேவதைகளின் இராஜ்யம் மீண்டும் ஸ்தாபனை ஆகிக் கொண்டி
ருக்கிறது. மீண்டும் உங்களுக்கு கீதை ஞானத்தை கூறுகின்றேன்
என்று பாபாவும் கூறு கின்றார். இங்கே இராவண ராஜ்யத்தில் துக்கம்
இருக்கிறது. எதை இராம இராஜ்யம் என்று சொல்லப்படுகிறது என்பதைக்
கூட யாரும் புரிந்து கொள்வதில்லை. நான் சொர்க்கம் அல்லது இராம
இராஜ்யத்தை ஸ்தாபனை செய்ய வந்திருக்கின்றேன் என்று பாபா
கூறுகின்றார். குழந்தை களாகிய நீங்கள் அனேக முறை இராஜ்யத்தை
அடைந்துள்ளீர்கள் மற்றும் இழந்துள்ளீர் கள். இது அனைவருடைய
புத்தியிலும் இருக்கிறது. 21 பிறவிகள் நாம் சத்யுகத்தில்
இருக்கிறோம், அதனை 21 தலைமுறை என்று சொல்லப்படுகிறது அதாவது
வயது முதிர்ந்த நிலை அடைந்த பிறகு சரீரத்தை விடுகிறார்கள்.
ஒருபோதும் அகால மரணம் நிகழ்வதில்லை. நீங்கள் இப்போது
திரிகாலதரிசி ஆகி விட்டீர்கள். சிவபாபா யார்? என்பதை நீங்கள்
தெரிந்துள்ளீர்கள். சிவனுடைய கோயில்கள் நிறைய உருவாக்கி
யுள்ளார்கள். மூர்த்தியை வீட்டிலும் கூட வைத்துக் கொள்ளலாம்
அல்லவா. ஆனால் பக்திமார்க்கம் கூட நாடகத்தில் பதிவாகியுள்ளது.
புத்தியின் மூலம் புரிந்து கொள்ள வேண்டும். கிருஷ்ணர் அல்லது
சிவனுடைய மூர்த்தியை வீட்டிலும் கூட வைத்துக் கொள்ளலாம். ஒரே
பொருள் தான். பிறகு இவ்வளவு தூரம்-தூரமாக ஏன் செல்கிறார்கள்?
அவர் களிடம் செல்வதின் மூலம் கிருஷ்ணபுரி ஆஸ்தி கிடைக்குமா
என்ன? நாம் பிறவி-பிறவிகளாக பக்தி செய்து வந்துள்ளோம் என்பதை
இப்போது நீங்கள் தெரிந்துள்ளீர் கள். இராவண இராஜ்யத்தின்
பகட்டைப் பாருங்கள் எவ்வளவு இருக்கிறது. இது கடைசி நேர
பகட்டாகும். இராம இராஜ்யம் சத்யுகத்தில் இருந்தது. அங்கே இந்த
விமானம் போன்ற அனைத்தும் இருந்தன பிறகு இவை யனைத்தும் மறைந்து
விட்டன. பிறகு இந்த சமயத்தில் இவை அனைத்தும் வந்திருக் கின்றன.
இப்போது இவையனைத்தையும் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள், யார்
கற்றுக் கொள் கிறார்களோ, அவர்கள் சம்ஸ்காரத்தை (திறமையை)
எடுத்துச் செல்வார்கள். அங்கே வந்து பிறகு விமானத்தை
உருவாக்குவார்கள். இது எதிர்காலத்தில் உங்களுக்கு சுகம்
கொடுக்கக் கூடிய பொருளாகும். இந்த அறிவியல் பிறகு உங்களுடைய
காரியத்திற்கு வரும். இப்போது இந்த அறிவியல் துக்கத்திற்
கானதாக இருக்கிறது பிறகு அங்கே சுகத்திற்கானதாக இருக்கும்.
இப்போது ஸ்தாபனை நடந்து கொண்டிருக்கிறது. பாபா புதிய
உலகத்திற்காக இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கின்றார் எனும்போது
குழந்தைகளாகிய நீங்கள் மகாவீரர்களாக ஆக வேண்டும். பகவான்
வந்திருக்கின்றார் என்பது உலகத்தில் யாராவது
தெரிந்திருக்கிறார்களா என்ன.
குடும்ப விவகாரங்களில் இருந்து கொண்டே தாமரை மலருக்குச் சமமாக
தூய்மையாக இருங்கள் என்று பாபா கூறுகின்றார், இதில்
பயப்படுவதற்கான விசயம் இல்லை. அதிகம் போனால் திட்டுவார் கள்.
இவருக்கு அதிக திட்டு கிடைத்திருக்கிறது. கிருஷ்ணர் திட்டு
வாங்கினார் என்று காட்டு கிறார்கள். கிருஷ்ணர் திட்டு வாங்க
முடியாது. கலியுகத்தில் தான் திட்டுகிறார்கள். இப்போது
இருக்கின்ற இந்த ரூபம் கல்பத்திற்குப் பிறகு இதே நேரத்தில் தான்
இப்படி இருக்கும். இடையில் ஒருபோதும் இப்படி இருக்க முடியாது.
பிறவிக்கு பிறவி முகத்தோற்றம் மாறிக் கொண்டே செல்கிறது, இப்படி
நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. 84 பிறவிகளில் எந்த
முகத்தோற்றமுடையவர் களாக பிறவி எடுத்துள்ளார்களோ அதையே
எடுப்பார்கள். இதே முகத்தோற்றம் மாறி அடுத்த பிறவியில் இந்த
லஷ்மி-நாராயணனுடைய முகமாக ஆகி விடும் என்பதை நீங்கள்
தெரிந்துள்ளீர் கள். உங்களுடைய புத்தியின் பூட்டு இப்போது
திறந்திருக்கிறது. இது புதிய விசய மாகும். பாபாவும் புதியவர்,
விசயங்களும் புதியதாகும். இந்த விசயங்கள் யாருக்கும் சட்டென்று
புரிவதில்லை. அதிர்ஷ்டத்தில் இருந்தால் தான் ஏதாவது புரிந்து
கொள்ள முடியும். மற்றபடி எவ்வளவு தான் புயல் வந்தாலும் யார்
அசையாமல் இருக்கிறார்களோ, அவர்களைத் தான் மகாவீர் என்று
சொல்லப்படுகிறது. இப்போது அந்த நிலை ஏற்பட முடியாது.
கண்டிப்பாக ஏற்படும். மகாவீரர்கள் எந்த புயலிலும் பயப்பட
மாட்டார்கள். அந்த நிலை கடைசியில் ஏற்படும் ஆகையினால்
அதீந்திரிய சுகத்தை பற்றி கோப-கோபியர்களிடம் கேளுங்கள் என்று
பாடப் பட்டுள்ளது. குழந்தைகளாகிய உங்களை சொர்க்கத்திற்கு
தகுதியானவர்களாக ஆக்குவதற்கு பாபா வந்துள்ளார். கல்பத்திற்கு
முன் போலவே நரகத்தின் வினாசம் நடக்கத்தான் வேண்டும்.
சத்யுகத்தில் ஒரு தர்மம் தான் இருக்கும். ஒற்றுமை வேண்டும்
என்று விரும்புகிறார்கள், ஒரு தர்மம் இருக்க வேண்டும். இராம
இராஜ்யம் மற்றும் இராவண இராஜ்யம் இரண்டும் தனித்தனி யானது
என்பது கூட யாருக்கும் தெரியவில்லை. இப்போது பாபா மீது முழு
நம்பிக்கை இருக்கிறது என்றால் ஸ்ரீமத்படி நடக்க வேண்டும்.
ஒவ்வொருவருடைய நாடியையும் பார்க்கப் படுகிறது. அதன்படி பிறகு
வழி காட்டப் படுகிறது. பாபா கூட குழந்தைக்கு கூறினார் - ஒருவேளை
திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் போய் செய்து கொள்.
நிறைய நண்பர்கள்- உறவினர்கள் இருக்கிறார்கள், அவருக்கு திருமணம்
செய்து வைத்து விடுவார்கள். பிறகு யாரோ சிலர் வந்தார்கள். எனவே
ஒவ்வொரு வருடைய நாடியையும் பார்க்கப்படுகிறது. பாபா இது தான்
நிலை, நாங்கள் தூய்மையாக இருக்க விரும்புகிறோம், எங்களுடைய
உறவினர்கள் வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார்கள், இப்போது
என்ன செய்வது? என்று கேட்கிறார்கள். அட இதையுமா கேட்கிறீர்கள்,
தூய்மையாக இருக்க வேண்டும், ஒருவேளை இருக்க முடியவில்லை என்றால்
சென்று திருமணம் செய்யுங்கள். யாருக்காவது நிச்சயதார்த்தம்
நடந்து விட்டது, ஒத்துக் கொள்ள வைக்க வேண்டும், கவலை யில்லை.
காப்பு கட்டும்போது, இந்த கணவன் தான் உன்னுடைய குரு என்று அந்த
சமயத்தில் கூறுகிறார்கள். நீங்கள் அவரிடம் எழுதி வாங்குங்கள்.
நான் உன்னுடைய குரு, ஈஸ்வர் என்று ஏற்றுக் கொள்கிறார் என்றால்
எழுது. இப்போது நான் கட்டளை இடுகின்றேன், தூய்மையாக இருக்க
வேண்டும். தைரியம் வேண்டும் அல்லவா. மிகப்பெரிய குறிக் கோளாகும்.
மிகப்பெரிய பலன் ஆகும். பலன் பற்றி அறியாதபோது தான் காமம் எனும்
தீ பிடிக்கிறது. இவ்வளவு பெரிய பலன் (இலாபம்) கிடைக்கிறது,
இந்த ஒரு பிறவி தூய்மையாக இருக்க வேண்டும் என்றால் என்ன பெரிய
விசயமா என்ன என்று பாபா கேட்கிறார். நான் உன்னுடைய கணவன்
ஈஸ்வரன். என்னுடைய கட்டளைப் படி தூய்மையாக இருக்க வேண்டும்.
பாபா யுக்திகளை கூறி விடுகின்றார். பாரதத்தில் இந்த விதி
இருக்கிறது - உன்னுடைய கணவன் ஈஸ்வரன் என்று மனைவிக்கு
கூறுவார்கள். அவருடைய சொல்படி நடக்க வேண்டும். கணவனுடைய கால்களை
பிடித்து விட வேண்டும் ஏனென்றால் லஷ்மி நாராயணனுடைய கால்களை
பிடித்து விட்டார் என்று புரிந்து கொள்கிறார்கள். இந்த வழக்கம்
எங்கிருந்து வந்தது? பக்தி மார்க்கத்தின் சித்திரங்களிலிருந்து
வந்தது. சத்யுகத் தில் இப்படிப்பட்ட விசயங்கள் நடப்ப தில்லை.
நாராயணன் களைப்படைந்து விடுகிறாரா என்ன லஷ்மி கால் பிடித்து
விடுவதற்கு! அங்கே களைப்பு என்ற விசயமே இருக்க முடியாது.
களைப்பு என்பது துக்கத்தின் விசயமாகி விடுகிறது. அங்கே துக்கம்
சரீரத்திற்கு வலி- எங்கிருந்து வந்தது. ஆகையினால் தான் பாபா
போட்டோவிலிருந்து லஷ்மியின் சித்திரத்தை எடுத்து விட்டார். போதை
ஏறுகிறது அல்லவா. சிறுவயதிலிருந்தே வைராக்கியம் இருந்தது
ஆகையினால் தான் அதிக பக்தி செய்தார். எனவே பாபா நிறைய யுக்திகளை
கூறுகின்றார். நாம் ஒரு தந்தையின் குழந்தைகள் என்றால்
சகோதர-சகோதரிகளாகி விட்டோம் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள்.
தாத்தாவிடம் இருந்து ஆஸ்தியை அடைகின்றோம். பாபாவை தூய்மையற்ற
உலகத்தில் தான் அழைக் கின்றோம். ஹே தூய்மையற்றவர்களை
தூய்மையாக்கும் அனைத்து சீதைகளுக்கும் இராமனே என்று
அழைக்கிறார்கள். பாபாவை சத்தியமானவர், உண்மையான கண்டத்தை
ஸ்தாபனை செய்பவர் என்று சொல்லப்படுகிறது. அவர் தான் முழு
உலகத்தின் முதல்-இடை-கடைசியின் சத்தியமான ஞானத்தை உங்களுக்கு
கொடுக்கின்றார். உங்களுடைய ஆத்மா இப்போது ஞானக் கடலாக ஆகிக்
கொண்டிருக்கிறது.
இனிமையான குழந்தைகள் தைரியம் கொள்ள வேண்டும், நாம் பாபாவினுடைய
ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். எல்லையற்ற தந்தை எல்லையற்ற
படைப்புகளை சொர்க்கத்தின் எஜமானர்களாக ஆக்குகின்றார். எனவே
முயற்சி செய்து முழுமையான ஆஸ்தியை அடைய வேண்டும். பலியாக
வேண்டும். நீங்கள் அவரை உங்களுடைய வாரிசாக ஆக்கினீர்கள் என்றால்
அவர் உங்களை 21 பிறவிகளுக்கு ஆஸ்தியை அளிப்பார். தந்தை
குழந்தைகளுக்கு பலி ஆகின்றார். பாபா இந்த உடல்-மனம்-பொருள்
அனைத்தும் உங்களுடையது என்று குழந்தைகள் கூறுகிறார்கள். நீங்கள்
தந்தை யாகவும் இருக்கிறீர்கள் என்றால் குழந்தையாகவும்
இருக்கிறீர்கள். நீங்கள் தாயும் தந்தையும் நீங்களே...... என்று
பாடுகிறார்கள். ஒருவருடைய மகிமை எவ்வளவு பெரியதாக இருக்கிறது.
அனைவருடைய துக்கத்தையும் போக்கி சுகத்தை வழங்குபவர் என்று அவரை
சொல்லப்படுகிறது. சத்யுகத்தில் 5 தத்துவங்கள் கூட சுகம்
கொடுப்பவைகளாக இருக்கின்றன. கலியுகத்தில் 5 தத்துவங் கள் கூட
தமோபிரதானமாக இருக்கின்ற காரணத்தினால் துக்கம் கொடுக்கின்றன.
அங்கு சுகம் தான் இருக்கிறது. இப்படி நாடகம்
உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே தான் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்பும் நடந்த சண்டையாகும். இப்போது சொர்க்கத்தின் ஸ்தாபனை
நடந்து கொண்டிருக்கிறது. எனவே குழந்தைகள் எப்போதும்
மகிழ்ச்சியில் இருக்க வேண்டும். பகவான் உங்களை தத்தெடுத்
திருக்கிறார் பிறகு குழந்தைகளாகிய உங்களை பாபா அலங்கரிக்கவும்
செய்கின்றார், படிப்பிக் கவும் செய்கின்றார். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) எப்போதும் பாபாவிற்கு சமமாக ஆவதற்கான தைரியம் வைக்க வேண்டும்.
பாபாவிற்கு முழுமையாக பலியாக வேண்டும்.
2) எந்தவொரு விசயத்திலும் பயப்படக் கூடாது. கண்டிப்பாக
தூய்மையாக வேண்டும்.
வரதானம்:
பிரச்சினைகளை உயரும் கலைக்கான சாதனமாக அனுபவம் செய்து சதா
திருப்தியாக இருக்கக் கூடிய சக்திசாலி ஆகுக.
சக்திசாலியாக இருக்கும் ஆத்மாக்கள், பிரச்சினைகளை அந்த மாதிரி
கடந்து செல்வார் கள் - ஒருவர் நேரான வழியை மிகவும் சகஜமாகக்
கடந்து செல்வது போல. பிரச்சினைகள் அவர்களுக்கு உயரும் கலைக்கான
சாதனங்கள் ஆகி விடுகின்றன. ஒவ்வொரு பிரச்சினையும் அறிமுகமான
ஒன்றாகவே அனுபவம் ஆகும். அவர்கள் ஒரு போதும் ஆச்சரியப் பட
மாட்டார்கள். ஆனால் சதா திருப்தியாக இருப்பார்கள். அவர்களின்
வாயிலிருந்து ஒரு போதும் காரணம் என்ற சொல் வெளிப்படாது. ஆனால்
அந்த நேரமே காரணத்தை நிவாரணமாக மாற்றி விடுவார்கள்.
சுலோகன்:
சுய ஸ்திதியில் நிலைத்திருந்து சர்வ பரிஸ்திதிகளையும் கடந்து
செல்வது தான் உயர்ந்த தன்மை (சிரேஷ்டதா) ஆகும்.
மாதேஷ்வரிஜியின் விலைமதிப்பற்ற மகாவாக்கியம் பரமார்த்தத்தினால்
விவகாரங்கள் தாமாகவே வெற்றி பெறும்
பகவான் சொல்கிறார் - நீங்கள் என் மூலமாகப் பரம அர்த்தை (உண்மையைத்
தேடும் அல்லது முக்தியை நாடும் வழிமுறையை) அறிந்து கொள்வதால்
எனது பரம பதத்தை அடைவீர்கள். அதாவது பரமார்த்தத்தை அறிந்து
கொள்வதன் மூலம் விவகாரங்கள் அனைத்தும் நிறைவேறு கின்றன.
பாருங்கள், தேவதைகளுக்கு முன்னால் இயற்கையோ சரணடைந்து விட்ட
தாசியாகவே இருக்கிறது. இந்த ஐந்து தத்துவங்கள் சுக-சொரூபம் ஆகி,
மனதிற்கிசைந்த சேவை செய்கின்றன. இச்சமயம் பாருங்கள், மனம்
விரும்பிய சுகம் கிடைக்காததால் மனிதர்களுக்கு துக்கம் அசாந்தி
ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது. சத்யுகத்திலோ, இந்த இயற்கை
மரியாதையுடன் நடந்து கொள்கிறது. பாருங்கள், தேவதை களின் ஜட
சித்திரங்கள் மீதும் கூட அவ்வளவு வைர-வைடூரியங் களைப்
பதிக்கிறார்கள். அப்படியானால் அவர்கள் சைதன்யத்தில்
பிரத்தியட்சமாகும் போது அந்தச் சமயத்தில் எவ்வளவு வைபவங்கள்
இருக்கும்! இச்சமயம் மனிதர்கள் பட்டினியால் சாகிறார்கள் மற்றும்
ஜட சித்திரங்கள் மீது கோடிக்கணக்கான பணம் செலவு செய்து கொண்டு
இருக்கிறார்கள். ஆக, இது என்ன வித்தியாசம்! நிச்சயமாக அவர்கள்
இந்த மாதிரி சிரேஷ்ட கர்மம் செய்திருக் கிறார்கள் - அதனால் தான்
அவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் உருவாகியுள்ளன. அவர் களுக்குப்
பூஜையும் கூட எவ்வளவு நடைபெறுகிறது! அவர்கள் நிர்விகாரி
நிலையில் (பிரவிருத்தி) இருந்த போதும் கூட மலருக்குச் சமமான
அவஸ்தாவில் இருந்தார்கள். ஆனால் இப்போது அவர்கள் நிர்விகாரி
பிரவிருத்திக்கு பதிலாக விகாரி பிரவிருத்தியில் சென்று
விட்டார்கள். இதன் காரணத்தால் அனைவரும் பரமார்த்தத்தை மறந்து (உலகாயத)
விவகாரங் களில் ஈடுபட்டுள்ளனர். எனவே ரிசல்ட் தலைகீழாகப்
போய்க்கொண்டிருக்கிறது. இப்போது தன்னை சுயம் பரமாத்மா வந்து
விகாரி பிரவிருத்தியிலிருந்து வெளியில் கொண்டு வந்து நிர்விகாரி
பிரவிருத்தியைக் கற்றுத் தருகிறார். இதன் மூலம் தனது வாழ்க்கை
சதா காலத்துக்கும் சுகமானதாக அமைகின்றது. எனவே முதலில்
வேண்டியது பரமார்த்தம். பிறகு தான் விவகாரங்கள்.
பரமார்த்தத்தில் இருப்பதால் விவகாரங்கள் தாமாகவே நிறைவேறி
விடும். ஓம் சாந்தி.
அவ்யக்த இஷாரா - நிச்சயத்தின் அஸ்திவாரத்தை உறுதியாக்கி, சதா
பயமற்றவராக, கவலையற்றவராக இருங்கள்
டாக்டர் எப்படி நோயாளிக்கு முதலில் நம்பிக்கை அளிக்கிறார்.
நோயாளிக்கு விசுவாசம் ஏற்பட்டு விடுகிறது - இந்த டாக்டர் மிக
நல்லவர். இங்கு எனக்கு ஆரோக்கியம் கிடைத்து விடும். அதே சமயம்
டாக்டர் எவ்வளவு தான் சிறந்த மருந்துகள் கொடுத்தாலும்,
நம்பிக்கை இல்லையென்றால் அந்த மருந்து பயனளிக்காது. அது போல்
ஆன்மிக மருத்துவத்திலும் கூட அந்த மாதிரி சக்திசாலி ஸ்டேஜ்
இருக்க வேண்டும் - அனைவருக்கும் நம்பிக்கை ஏற்பட வேண்டும் -
இங்கே வந்து சேர்ந்து விட்டால் ஏதேனும் பிராப்தி அவசியம்
கிடைக்கும்.