25.10.26    காலை முரளி            ஓம் சாந்தி 19.02.2012      பாப்தாதா,   மதுபன்


வீட்டின் கதவைத் திறப்பதற்கு எல்லையற்ற வைராக்கிய விருத்தியின் மூலம் தேக-அபிமானத்தின் நான் என்பதை தியாகம் செய்யுங்கள், பிறந்தநாளில் உறுதித்தன்மை மூலம் சொல்வதையும் செய்வதையும் ஒன்றாக்கி வெற்றி மூர்த்தியாக ஆகுங்கள்.

இன்று பாப்தாதா நாலாபுறமும் உள்ள குழந்தைகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றார்கள். நாலாபுறமிருந்தும் ஆஹா பாபா ஆஹா! என்ற உள்ளத்தின் இந்த ஒரே குரல் தான் வந்து கொண்டிருக்கிறது. மேலும், தந்தையின் உள்ளத்திலிருந்தும் ஆஹா குழந்தைகளே ஆஹா! என்ற இந்த ஒரே குரல் தான் வருகிறது. இன்று அனைவரும் ஊக்க உற்சாகத்துடன் தெய்வீகப் பிறவியின் மகிழ்ச்சியைக் கொண்டாடுகின்றீர்கள். இன்று மகிழ்ச்சியைக் கொண்டாடிக் கொண்டும் இருக்கிறீர்கள், அதே நேரத்தில் தந்தையும் குழந்தைகளின் மகிழ்ச்சியைக் கொண்டாடுகின்றார். இன்றைய தினமே இந்த விசித்திரமான ஜெயந்தி தினமாகும், இது தந்தை மற்றும் குழந்தைகளின் ஒன்றிணைந்த திவ்ய ஜென்ம தினமாகும். எனவே, நீங்கள் அனைவரும் வாழ்த்துகளைக் கொடுத்துக் கொண்டும் இருக்கின்றீர்கள், பெற்றுக்கொண்டும் இருக்கின்றீர்கள். ஏனெனில், தந்தை பிறவி எடுத்ததே யக்ஞத்தைப் படைப்பதற்காகத் தான். எனவே, யக்ஞத்தில் பிராமணக் குழந்தைகள் தான் தேவை. எனவே, இது ஒரே ஒரு ஜெயந்தி மட்டுமே தந்தை மற்றும் குழந்தைகளின் ஒன்றிணைந்த ஜெயந்தியாகும். அதனால் தான் இந்த சிவ ஜெயந்தியை வைரத்திற்கு இணையான ஜெயந்தி என்று கூறப்படுகிறது. எனவே, ஒவ்வொரு குழந்தையும் எவ்வளவு அன்போடு வாழ்த்து தெரிவிக்க வந்திருக்கின்றார்கள் என்று தந்தை பார்க்கின்றார், மேலும், தந்தையும் வாழ்த்து தெரிவிக்க வந்திருக்கின்றார். இந்த ஜெயந்தி மிகுந்த அன்பின் ஜெயந்தியாகும். அன்பான குழந்தைகள், அன்பான தந்தை மற்றும் அன்பான ஜெயந்தி.

பாப்தாதாவிடம் நாலாபுறமும் உள்ள உள்நாடு, வெளிநாட்டு குழந்தைகள் அனைவரின் அன்பும் வந்து சேருகிறது. தந்தை ஒவ்வொரு அன்பான குழந்தைக்கும் பல கோடி மடங்கு அன்பு நிறைந்த வாழ்த்துகளை கொடுத்துக் கொண்டிருக்கின்றார். இந்த அன்பு ஒவ்வொரு குழந்தை யையும் சுலபமாகக் கர்மயோகியாக ஆக்கக்கூடிய தாகும். இந்த அன்பு எப்போதும் சுலபமாக்கக் கூடியது, சக்திசாலியாக ஆக்கக்கூடியதாகும். பாப்தாதாவின் தனிப்பட்ட பிறந்த நாள் அல்ல, ஏனெனில், தந்தை எப்போதும் குழந்தைகளுடன் இணைந்து இருப்பவர். ஒன்றிணைந்து இருப்போம், ஒன்றிணைந்து நடப்போம், ஒன்றிணைந்து இராஜ்யம் செய்வோம். உங்கள் அனைவரின் வாக்குறுதியும் இதுதானே! இணைந்து இருப்பது, இணைந்து பறப்பது மற்றும் இணைந்து இராஜ்யம் செய்வது!

பாப்தாதாவுக்கு இன்று உங்கள் பக்தர்களும் விசேஷமாக நினைவுக்கு வருகின்றார்கள், ஏனெனில், உங்கள் பக்தர்கள் நீங்கள் செய்ததை மிக நன்றாக நகல் (காப்பி) செய்திருக் கின்றார்கள். ஏனெனில், துவாபரயுகத்தில் பரந்தாமத் திலிருந்து முதன்முதலில் வந்திருக் கின்றார்கள், எனவே, முதல் பிறவி எப்போதும் சதோபிரதானமாக இருக்கும், அதனால் அவர்கள் மிக நன்றாக நகல் செய்திருக்கின்றார்கள். எனவே, இன்றைய நாளில் குழந்தைகளுடன் சேர்த்து உங்கள் பக்தர்களும் நினைவுக்கு வருகின்றார்கள். வதனத்தில் இன்று அமிர்தவேளையில் இருந்தே பல குழந்தைகளின் வருகையால் களைகட்டி இருந்தது. ஒவ்வொரு குழந்தையும், நான் பாப்தாதாவுக்கு எனது வாழ்த்தைத் தர வேண்டும் என்று நினைத்தது, மேலும், பாப்தாதாவும் ஒவ்வொரு குழந்தையின் வாழ்த்தையும் மிகுந்த அன்போடு ஏற்றுக் கொண்டார் கள். எனவே, வதனத்தில் இன்று இந்தத் திருவிழா நடந்துகொண்டிருந்தது. ஒருபுறம் குழந்தை களாகிய நீங்கள் இருந்தீர்கள், மறுபுறம் அட்வான்ஸ் பார்ட்டிக்குச் சென்ற உங்கள் தோழர்கள் உடன் வந்திருந்தார்கள். உங்கள் தாதிகள் மற்றும் முக்கியமான சகோதரர்களின் பட்டியல் மிகப்பெரியதாக இருந்தது என்பதை பாப்தாதா பார்த்தார்கள். ஒவ்வொரு தாதியும் பாப்தாதாவுக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தார்கள், ஆனால், அதே சமயம் பாக்கிய வான் குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். எனவே, வதனத்தில் இன்று வாழ்த்துகளின் திருவிழாவாக இருந்தது. அட்வான்ஸ் பார்ட்டியின் அனைத்து விசேஷ தாதிகள் மற்றும் சகோதரர்கள், விசேஷமாக நிமித்தமாக உடன் இருக்கும் ஆத்மாக்களை நினைவுகூர்ந்து மிகுந்த உள்ளப்பூர்வமாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். எனவே, உங்கள் அனைவருக்கும் பாப்தாதா அனைவரின் சார்பாகவும் வாழ்த்துகளைக் கொடுக்கின்றார்கள். ஏற்றுக்கொண்டீர்களா?

இப்போது வீட்டின் கதவை எப்போது திறப்பீர்கள்! என்பதுவே அனைத்து விசேஷ சகோதரிகள் மற்றும் சகோதரர்களின் ஒரே குரலாக இருந்தது. எனவே, வீட்டிற்குச் செல்வதற்கு எந்தத் தேதியை நிர்ணயம் செய்திருக் கிறீர்கள்? என்பதை எங்கள் சார்பாக எங்கள் தோழிகளுக்கும், சகோதரர்களுக்கும் சொல்லுங்கள் என்று விசேஷமாக தீதி, தாதி சொல்லிக் கொண்டிருந்தார்கள். அனைவரும் ஒன்றாகத்தானே செல்வோம்! தனித்தனியாகவா செல்வோம்? கதவைத் திறப்பதற்கு அனைவரும் ஒன்றாகத் ஆஜராகிவிடுவார்கள். எனவே, அவர்கள் தேதியைக் கேட்கின்றார்கள். பாப்தாதா புன்னகைத்தார்கள், ஏனெனில், தந்தையும் விரும்புகின்றார் - இப்போது கதவைத் திறப்பதற்கு அனைத்துக் குழந்தைகளுக்கும் எல்லையற்ற வைராக்கிய விருத்தி வேண்டும், இதுவே கதவைத் திறப்பதற்கான சாவி. எல்லையற்ற வைராக்கியம் உடையவர் ஆகி வீணான எண்ணம் மற்றும் வீணான நேரம் ஆகிய இரண்டையும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தியாகம் செய்யுங்கள், அதாவது எல்லையற்ற வைராக்கியம் உடையவர் ஆக வேண்டும் என்று பாப்தாதா எப்போதும் சொல்லிக்கொண்டே இருக்கின்றார்கள். ஏனெனில், அனைத்தையும் விட மிகப்பெரிய விக்னம் (தடை) தேக-அபிமானம் ஆகும் என்பதை பாப்தாதா பார்த்திருக்கின்றார்கள். இந்த தேக-அபிமானத்தைத் தியாகம் செய்வது, போகும்போதும் வரும்போதும் ஆத்ம அபிமானியாக ஆகுவது, என்ற இதுவே எல்லையற்ற வைராக்கியமாகும்.

என்னுடைய பாபா, இனிமையான பாபா, அன்பான பாபா என்று அனைவரும் சொல்கின்றார்கள். உள்ளத்திலிருந்து என்னுடையவர் என்று சொல்லும்போது, இந்த தேக அபிமானம் நான் என்ற ரூபத்தில் வருகிறது. நான் செய்வதே சரி, நான் சொல்வதே சரி எனும் இந்த நான் என்ற உணர்வு வந்துவிடுகிறது என்று தந்தை எப்போதும் சொல்கின்றார். நான் ஆத்மா, இது என்னுடைய உடல் என்ற இந்த ஒரு நான் சாதாரணமானது. இரண்டாவது சூட்சுமமான நான் - நான் இதைச் செய்தேன், என்னால் இதைச் செய்ய முடியும், நான் தான் சரி... என்று ஏற்கனவே சொல்லப்பட்ட இந்த சூட்சுமமான நான் என்பதை முடிக்க வேண்டும். இந்த தேக அபிமானம் இந்த ரூபத்தில் வருகிறது. எனவே, இன்றைய நாளில் இந்த சூட்சுமமான நான், சில நேரங்களில் தந்தையின் சிறப்பம்சத்தைக் கூட என்னுடையது என்று கருதி நான் என்ற உணர்வைக் கொண்டிருக்கின்றார்கள், அதை முடிக்க வேண்டும். பாருங்கள், நினைவுச் சின்னங்களை உருவாக்கும்போதும் கூட பலியிடும்போது அவர்கள் சுயத்தை பலியிடுவதில்லை, மாறாக யாரைப் பலியிடுகின்றார்கள்? ஆட்டை. ஆட்டை ஏன் தேடினார்கள்? ஏனெனில், ஆடு மே-மே (நான்-நான்) என்று கத்துகிறது. பக்தர்கள் மிக நன்றாக நகல் செய்திருக்கின்றார்கள். எனவே, இன்றைய நாளில் இந்த தேக அபிமானத்தின் நான் என்பதை புருஷார்த்தம் செய்து சமாப்தி செய்ய முடியுமா? தந்தையின் பிறந்தநாளுக்கு வந்திருக்கின்றீர்கள் என்றால் ஏதேனும் பரிசு தருவீர்கள் அல்லவா! தந்தைக்கு வேறு பரிசு தேவையில்லை, இந்த சூட்சுமமான நான் எனும் தன்மையை இன்றைய பிறந்தநாளில் தந்தைக்குப் பரிசாகக் கொடுத்துவிடுங்கள், என்ற இதையே தந்தை சொல்கின்றார். கொடுக்க முடியுமா? கொடுக்க வேண்டுமா? தைரியம் இருக்கிறதா? தைரியம் இருக்கிறதா? கைகளை உயர்த்துங்கள். கைகளை உயர்த்தி மகிழ்ச்சிப்படுத்திவிட
்டீர்கள். கைகளை உயர்த்தினீர்கள் எனில் பரிசைக் கொடுத்துவிட்டீர்கள் அல்லவா! கொடுத்த பரிசை யாராவது திரும்ப எடுத்துக்கொள்வார்களா என்ன? பாபா, நாங்கள் விரும்புவதில்லை, ஆனால் வந்துவிடுகிறது" என்று சில குழந்தைகள் சொல்கின்றார்கள். காரணம் என்ன? காரணம் கேட்டால் பதில் மிக நன்றாகத் தருகின்றார்கள். தெரிந்தும் இருக்கிறது, ஒப்புக்கொண்டும் இருக்கிறோம், ஆனால் என்ன செய்வது, திரும்ப வந்துவிடுகிறது" என்று சொல்கின்றார்கள். யோசியுங்கள்! கொடுத்த பொருள் உங்களிடமே வைத்துக் கொள்வீர் களா? நீங்கள் உள்ளப்பூர்வமாகக் கொடுத்தீர்கள், ஒருவேளை திரும்ப வந்தாலும் கூட உங்களிடம் வைத்துக்கொள்வீர்களா? காரணம் என்ன? தந்தையிடம் அன்பு இருக்கிறது அல்லவா, எனவே, அன்பின் காரணமாக தந்தை சொல்வதை செய்ய விரும்புகின்றீர்கள், இது தந்தை யிடமும் முடிவாக (ரிசல்ட்) வருகிறது. ஆனால் இருப்பது என்னவென்றால், உறுதித்தன்மை குறைவாக உள்ளது, உறுதித்தன்மையைப் பயன்படுத்துங்கள். சங்கல்பம் செய்கிறீர்கள், ஆனால், ஒன்று சங்கல்பம் செய்வது, இரண்டாவது உறுதியான சங்கல்பம் செய்வது. எனவே, மீண்டும் மீண்டும் செய்யப்பட்ட சங்கல்பத்தில் உறுதியைக் கொண்டு வரவேண்டும் என்ற இந்த கவனம் குறைவாக உள்ளது. உறுதித்தன்மை தான் வெற்றியின் சாவியாகும். இன்று என்ன செய்வீர்கள்? சங்கல்பம் செய்வீர்களா அல்லது உறுதியான சங்கல்பம் செய்வீர்களா? ஒருவேளை உங்கள் சங்கல்பம் உறுதியானதாக உள்ளது என்றால் அதன் அடையாளம் - உறுதித்தன்மை வெற்றி யின் சாவியாகும். சாவியைப் போடுவதில் ஏதேனும் குறைபாடு வந்துவிடுகிறது, அதனால் தான் முழுமையான வெற்றி கிடைப்பதில்லை.

எனவே இன்று பாப்தாதாவுடன் சேர்த்து குழந்தைகளுக்கும் பிறந்தநாள், தந்தைக்கும் பிறந்தநாள். எனவே, இது விசேஷமான நாள் அல்லவா! முழு கல்பத்திலும் தந்தை மற்றும் குழந்தைக்கு ஒரே நேரத்தில் பிறவி ஏற்படுவது என்பது இந்த பிறந்தநாளின் சிறப்பம்சமாகும். இன்றைய நாளில் தந்தை விரும்புவது என்னவென்றால் - ஒவ்வொரு குழந்தையும் இன்று தங்கள் உள்ளத்தில் உறுதித்தன்மையைக் கொண்டுவந்து, நாம் வீணான எண்ணத்தை ஏழுப்பக் கூடாது, நேரத்தையும் வீணடிக்கக் கூடாது என்று இந்த உறுதியான சங்கல்பத்தைச் செய்ய வேண்டும். ஏனெனில், முழு நாளையும் கவனத்தோடு சோதனை செய்து பார்த்தால், இடை யிடையே நேரமும் எண்ணமும் வீணாகச் செல்கிறது. பாப்தாதா அனைவரின் பதிவேட்டையும் பார்க்கின்றார்கள் அல்லவா! அதை சேமிப்பது என்றால் சமாப்தி (முடிவு) நேரத்தைச் சமீபமாகக் கொண்டுவருவதாகும். தயாராக இருக்கின்றீர்களா? அல்லது வந்துவிடுகிறது, என்ன செய்வது? என்ற இப்போதும் சொல்வீர்களா? வீணானதன் வேலை வருவது, உங்கள் வேலை என்ன - அதை உட்கார வைப்பதா? உட்கார வைத்துவிடுகிறீர்கள், அதனால் தான் அதுவும் வீடு கட்டிவிட்டது. உறுதித்தன்மை இல்லை என்று அதுவும் புரிந்து கொண்டுவிடுகின்றது. ஆகையினால் இன்றைய அன்பின் நாளில் அனைவரின் உள்ளத்திலும் இப்போது என்ன இருக்கிறது? அமிர்த வேளையிலிருந்து இன்று உள்ளத்தில் மீண்டும் மீண்டும் என்ன வந்துகொண்டிருக்கிறது? என்னுடைய பாபா, என்னுடைய பாபா, என்னுடைய பாபா. தந்தைவின் உள்ளத்திலும் கூட என்னுடைய குழந்தைகளே, என்னுடைய குழந்தைகளே, என்னுடைய குழந்தைகளே.. என்பது இருக்கிறது. எனவே, பெரும்பாலானோர் தந்தைவின் நினைவில் இருக்கின்றார்கள். நாளின் பிரபாவம் உள்ளது என்பதை பாப்தாதா கவனித்தார்கள். அன்பின் நாளாக இருப்பதால் மீண்டும் மீண்டும் அனைவருக்கும் எனது பாபா, எனது பாபா என்பது நீண்ட நேரம் நினைவிருந்தது. அப்படித்தானே? இதில் கைகளை உயர்த்துங்கள். இன்றைய நாளின் விஷயம் இது. எனது பாபா என்பது நினைவிருந்ததா? வேறு ஏதேனும் நினைவிருந்ததா? இல்லை. இல்லை என்பது போல இப்படி இப்படி கை அசைக்கிறீர்கள், மிக நன்று. தினமும் அடிக்கடி சோதனை செய்யுங்கள். சங்கம யுகத்தின் ஒவ்வொரு தினமும் தந்தையின் அன்பிற்குரிய நாளாகும். இன்று விசேஷ நாளாக இருப்பதால் அதிகமாக நினைவிருந்தது அல்லவா! இது போல் எப்போதும் இந்த சங்கம யுகத்தின் ஒவ்வொரு நாளும் எவ்வளவு மகத்தானது என்பதை அமிர்தவேளையில் நினைவில் வையுங்கள். ஒரு சிறிய பிறவியில் 21 பிறவிகளுக்கான பிராப்தி உத்தரவாதமாக கிடைக் கின்றது. எனவே, ஒவ்வொரு நாளுக்கும் எவ்வளவு மகத்துவம் உள்ளது? 21 பிறவிகள் எங்கே, இந்த சிறிய ஒரே பிறவி எங்கே!

பாப்தாதா இன்று குழந்தைகளாகிய உங்களிடம் பிறந்தநாளின் இந்த பரிசாக இதைத்தான் விரும்புகின்றார்கள். தருவீர்களா பரிசு? தருவீர்களா? கைகளை உயர்த்துங்கள். உறுதியான நம்பிக்கையின் கை. பார்ப்போம், செய்வோம் என்பதில்லை... செய்தே தீர வேண்டும். எது நடந்தாலும் தியாகம் என்றால் தியாகம். இது தியாகம் அல்ல, மாறாக பாக்கியம். எனவே, இன்றைய நாள் ஒருவேளை சரியான கைகளை உயர்த்தியிருந்தீர்கள் என்றால், இது முக்கியத்துவமான நாள் ஆகிவிட்டது அல்லவா! இப்பொழுதிலிருந்தே உங்கள் முகத்தில் வீணானதன் சமாப்தி மற்றும் எப்போதும் நினைவு சொரூபத்தின் பிரகாசம் முகத்திலும் நடத்தையிலும் வர வேண்டும். மாயையின் வார்த்தைகள் என்ன, ஏன், எப்போது, எப்படி... ஆகிய இவை முடிந்து போகும்போது முகம் மற்றும் நடத்தை சேவை செய்யும். இப்போது நீங்கள் செய்யும் சொற்பொழிவுகளின் பிரபாவம் அதிகமாக உள்ளது. பாப்தாதா மகிழ்ச்சியடை கின்றார்கள், மிக நன்றாகச் சொற்பொழிவு செய்கின்றீர்கள், ஆனால், நாளுக்கு நாள் இப்போது இந்த சொற்பொழிவு மூலம், வார்த்தையின் மூலம் சேவையின் ஆர்வம் நன்றாக வைத்தீர்கள், வெற்றியும் பெற்றீர்கள். அதேபோல் இப்போது நேரத்திற்கு ஏற்ப உங்கள் சேவை அதிகமாக முகத்தினாலும் நடத்தையினாலும் நடைபெறும். அதற்கான பயிற்சி, சொற்பொழிவுகளின் பயிற்சி செய்து செய்து நிபுணராகிவிட்டீர்கள் அல்லவா! அதேபோல் இப்போது முகம் மற்றும் நடத்தையினால் யாருக்கேனும் மகிழ்ச்சியின் வரதானத்தைக் கொடுங்கள், இந்தப் பயிற்சியைச் செய்யுங்கள். ஏனெனில், நேரம் குறைவாகக் கிடைக்கும், அதனால் நேரம் மற்றும் எண்ணத்திற்கு மகத்துவம் கொடுத்து முன்னேறிச் செல்லுங்கள். எல்லாமே திடீரென்று நடக்கப்போகிறது, அதனால் பிறந்தநாள் நினைவிருக்கிறது அல்லவா! பிறந்தநாள் வரப்போகிறது, வரப்போகிறது என்று எவ்வளவு காலம் நினைவிருந்தது? பாப்தாதா வரப்போகின்றார்கள், வரப் போகின்றார்கள், சந்திக்க வேண்டும் என்பது எவ்வளவு காலத்திலிருந்து நினைவில் வைத்திருந்தீர்கள்? இப்போது உறுதியுடன் வீணான நேரம் மற்றும் எண்ணத்தைச் சமாப்தி செய்ய வேண்டும் என்ற சங்கல்பத்தைச் செய்யுங்கள். என்னுடை பாபா, என்னுடைய பாபா என்று பாபா உள்ளத்தில் நிறைத்து... சொல்வது வேறு விஷயம், ஆனால் உள்ளத்தில் நிறைத்துக் கொள்ள வேண்டும். உள்ளத்தின் விஷயம் ஒருபோதும் மறப்பதில்லை. வாயின் வார்த்தை மறக்கலாம், ஆனால் உள்ளத்தின் விஷயம் நல்லதோ, வீணானதோ இரண்டும் மறப்பதில்லை. எனவே, இன்று பாப்தாதாவிற்குப் பரிசைக் கொடுத்துவிட்டீர்கள் அல்லவா! இரண்டு கைகளையும் உயர்த்துங் கள். ஆஹா! இதை புகைப்படம் எடுங்கள். பாப்தாதா வெறும் கையைப் பார்ப்பதில்லை, பாப்தாதா உங்கள் உள்ளத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

இன்றைய நாளின் பரிசை தனக்கும் கொடுத்தீர்கள், தந்தைக்கும் கொடுத்தீர்கள். ஒருவேளை உங்கள் வீணான நேரமும் எண்ணமும் சேமிக்கப்பட்டால் உங்கள் நாள் எப்படி கழியும்? எப்போதும் பாக்கியசாலியாகவும் மகிழ்ச்சியானவராகவும் ஆகிவிடுவீர்கள். எனவே, இப்போது அமிர்தவேளையில் பாப்தாதாவுடன் சந்திப்பைக் கொண்டாடிய பிறகு இந்த சங்கல்பத்தை தினமும் நினைவில் கொண்டு வரவேண்டும், மேலும், நாள் முழுவதிலும் இடையிடையே சோதனை செய்யவேண்டும். பாப்தாதா நேரத்தை நிர்ணயம் செய்யவில்லை, ஆனால், நீங்கள் தங்கள் நேரத்தை நிர்ணயம் செய்யுங்கள். பாப்தாதாவிடம் பிறந்தநாளில் செய்த வாக்குறுதியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோமா? என்று இடையிடையே சோதனை செய்யுங்கள். தனக்குத் தானே சோதனை செய்யவேண்டும். அனைவரும் விரும்பத்தான் செய்கின்றார்கள். பாப்தாதா இன்று முகங்களைப் பார்க்கின்றார்கள் - ஆம் செய்வோம், செய்வோம், செய்வோம்... என்று விரும்புகின்றார்கள். ஆனால், இந்த வீணானது வந்துவிடுகிறது அல்லவா, அது தந்தையிடம் செய்த வாக்குறுதியையும் மறக்க வைத்துவிடுகிறது. எனவே, வீணானது அழிந்து விடவேண்டும். இப்போதும் கூட ஒரு நிமிடம் சக்திவாய்ந்த ஆத்மாவாகி வீணானதை அழித்தே ஆகவேண்டும் என்ற சங்கல்பம் செய்யுங்கள் (பாப்தாதா பயிற்சி/டிரில் செய்வித்தாரகள்). நல்லது.

பாப்தாதா ஒரு குழந்தையைக் கூட தனக்கு சமமாக ஆக்காமல் இருக்க விரும்பவில்லை. அன்பு இருக்கிறது அல்லவா! பாருங்கள், அன்பின் அடையாளம் இன்றைய நாளாகும். தந்தை மற்றும் குழந்தையின் பிறப்பு ஒரே நாளில் ஏற்படுவது என்ற இப்படிப்பட்ட நாள் முழு கல்பத்திலும் எந்த தந்தை மற்றும் குழந்தைக்கும் ஏற்பட்டதில்லை. தந்தைக்கு ஒவ்வொரு குழந்தையிடமும் உள்ளப்பூர்வமான அன்பு உள்ளது - என்னுடைய குழந்தை, பரமாத்மாவின் குழந்தை, எந்த சங்கல்பம் செய்தாலும் அந்த சங்கல்பம் வெற்றிகரமானதாக ஆகட்டும். ஒவ்வொரு சங்கல்பத் திலும் சக்தி இருக்க வேண்டும், சொல்வதும் செய்வதும் ஒன்றாக இருக்க வேண்டும். சொன்னது என்றால் நடந்துவிட்டது. தூய்மையான சங்கல்பமாக இருக்கவேண்டும். அப்போது வீணானது தானாகவே அழிந்துவிடும். ஏனெனில், அட்வான்ஸ் பார்ட்டி தேதியைக் கேட்கின்றார்கள். உங்களின் பெரிய பெரிய தாதிகள், பெரிய பெரிய சகோதரர்கள் யார் இருக் கின்றார்களோ, அவர்கள் மீது அன்பு இருக்கிறது அல்லவா. தாதியை, தீதியை, சந்திரமணி தாதியை எவ்வளவு நினைவு செய்கின்றீர்கள். அனைவரையும் பெயரையும் சொல்லிக்கொண்டே செல்லுங்கள். அனைவரையும் நினைவு செய்கின்றீர்கள். அவர்கள் விரும்புவதைச் செய்து காட்டுங்களேன். எனவே, இன்றைய சங்கல்பம் என்னவாக இருந்தது? சொல்வதும் செய்வதும் ஒன்றாக இருக்க வேண்டும். சரிதானே! இன்று நாலாபுறமும் உள்ள குழந்தைகளுக்கு பாப்தாதா பிறந்தநாளின் பரிசாக சொல்வதையும் செய்வதையும் ஒன்றாக்குங்கள்" என்பதையே தருகின்றார்கள். உறுதித் தன்மை என்ற பரிசை இன்றைய நாளில் பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும் தருகின்றார்கள். சுப காரியத்தை உறுதியுடன் வெற்றிகரமானதாக ஆக்குங்கள்.

மற்றபடி இன்று முதன்முறையாக வந்திருப்பவர்கள் எழுந்திருங்கள்... கைகளை அசைத்திடுங் கள். பாப்தாதா - வந்திருக்கும் குழந்தைகளை வந்துவிட்டீர்கள், என்னுடைய பாபா என்பதை அறிந்துகொண்டீர்கள், இதற்குப் பலக்கோடி வாழ்த்துகளைத் தருகின்றார்கள். பாப்தாதாவிற்கு மகிழ்ச்சியாக உள்ளது, குழப்பங்கள் ஏற்படுவதற்கு முன்பே வந்து சேர்ந்து விட்டீர்கள், இதற்கான வாழ்த்துகள். இப்போது வந்திருக்கும் ஒவ்வொரு குழந்தையும் இந்த உறுதியான சங்கல்பத் தைச் செய்யுங்கள், சாதாரண சங்கல்பம் அல்ல, உறுதியான சங்கல்பத்தைச் செய்யுங்கள் - தீவிர புருஷார்த்தியாக ஆகியே தீரவேண்டும். தீவிரம், சாதாரணமானவர் அல்ல. வரப்போகிற தங்கள் ராஜ்யத்தில் வந்துவிடுவார்கள், அதனால் சாதாரண சங்கல்பத்தின் நேரம் முடிந்துவிட்டது. இப்போது தீவிர புருஷார்த்தத்திற்கான நேரம், வாய்ப்பு உள்ளது, பிறகும் வாய்ப்பைப் பெறக் கூடிய சேன்ஸலர் ஆகிவிட்டீர்கள். எனவே, பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் பார்த்து மகிழ்ச்சியடைகின்றார்கள், மேலும், தீவிர புருஷார்த்தம் செய்தீர்கள் என்றால் உடன் செல்வீர் கள், உடன் இருப்பீர்கள்" என்று ஒவ்வொரு குழந்தையிடமும் சொல்கின்றார்கள். எனவே வாழ்த்துகள், வாழ்த்துகள், வாழ்த்துகள்.

ஒரு குழந்தை கூட பின்தங்கிவிடக் கூடாது என்று பாப்தாதா உள்ளத்திலிருந்து விரும்பு கின்றார்கள். உடன் செல்ல வேண்டும். பின்னால் வருவது நன்றாக இருப்பதில்லை. உடன் இருக்க வேண்டும், கை கோர்த்து வீட்டிற்கு செல்ல வேண்டும் அல்லவா. திரும்புவதற் கான பயணம். அதற்காக பிரம்மா பாபா ஃபரிஷ்தா ஆனது போல் ஃபாலோ ஃஃபாதர் (தந்தையைப் பின்பற்றுங்கள்). சாகாரத்தில் இருக்கும்போதே ஃபரிஷ்தா, யாரைப் பார்த்தாலும் ஃபரிஷ்தாவே ஃபரிஷ்தாவாகத் தெரியவேண்டும், அப்போது கதவு திறந்துவிடும். நல்லது. அனைத்து குழந்தை களுக்கும் எப்போதும் பாக்கியசாலி, மகிழ்ச்சியான சொரூபத்தின் அன்பு நினைவுகள்.

ஆசீர்வாதம்:
தனது ஏகாக்ர (ஒருமுகப்பட்ட) சொரூபத்தின் மூலம் சூட்சும சக்தியின் லீலைகளை அனுபவம் செய்யும் அந்தர்முகி (உள்நோக்குமுகம் கொண்டவர்) ஆகுக.

ஒருமுகப்பாட்டிற்கான ஆதாரம் உள்நோக்குமுகம் ஆகும். யார் உள்நோக்குமுகம் உடையவர்களாக இருக்கின்றார்களோ, அவர்கள் உள்ளுக்குள்ளேயே சூட்சும சக்தியின் லீலைகளை அனுபவம் செய்கின்றார்கள். ஆத்மாக்களை அழைப்பது (ஆவாஹனம் செய்வது), ஆத்மாக்களுடன் ஆத்மீக உரையாடல் செய்வது, ஆத்மாக்களின் சமஸ்காரம் மற்றும் சுபாவத்தை பரிவர்த்தனை (மாற்றம்) செய்வது, தந்தையுடன் இணைப்பை ஏற்படுத்துவது - இவ்வாறு ஆத்மீக உலகில் ஆத்மீக சேவை செய்வதற்காக ஒருமுகப்படும் சக்தியை அதிகரியுங் கள், இதனால் அனைத்து வகையான தடைகளும் தானாகவே முடிவடைந்துவிடும்.

சுலோகன்:
அனைத்து பிராப்திகளையும் தனக்குள் தாரணை செய்து உலக மேடையில் பிரத்யட்சம் (வெளிப்படுவது) ஆகுவதுதான் பிரத்யட்சதாவின் (வெளிப்படுதலின்) ஆதாரமாகும்.


அவ்யக்த இஷாரா : பரோபகாரி பாவனை மூலம் சம்பன்னமாகி

துக்கம் கொடுப்பவர்களுக்கும் (அபகாரி) உபகாரம் (உதவி) செய்யுங்கள்.

யாராவது தினமும் உங்களை நிந்தனை செய்தாலும், அவர் எப்போதும் நன்மையற்றதையே செய்தாலும், நீங்கள் அவரிடமிருந்து விலகுவதற்குப் பதிலாக அவருக்கும் நன்மை செய்து கொண்டே இருங்கள், இதுவே ஞான சொரூப ஆத்மாவாகிய உங்களின் கடமையாகும். தந்தை யின் மகிமையில் விசேஷமாக இரக்க குணம் பாடப்படுவது போல, தேசத்திலோ அல்லது வெளிநாட்டிலோ தந்தைவின் முன்னால் சென்றால் இரக்கமுள்ளவர், மெர்சிஃபுல் என்று சொல்வார்கள். எனவே, நீங்கள் அனைவரும் மாஸ்டர் இரக்கமுள்ளவர்கள் ஆவீர்கள். இப்படிப் பட்ட இரக்க முள்ளவராக ஆகி அனைவருக்கும் உபகாரம் செய்யுங்கள்.