27-03-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! ஞானக் கடல்
தந்தையின் மூலம் நீங்கள் மாஸ்டர் ஞானக் கடல் ஆகியுள்ளீர்கள்,
உங்களுக்கு ஞானத்தின் மூன்றாம் கண் கிடைத்துள்ளது, ஆகையால்
நீங்கள் திரிநேத்ரி (மூன்று கண்களை உடையவர்), திரிகாலதரிசி (முக்காலங்களும்
அறிந்தவர்) மற்றும் திரிலோகநாத் (மூன்று உலகங்களின் தலைவர்)
ஆகியுள்ளீர்கள்.
கேள்வி:
உலகின் ஆன்மீகச் சேவை
குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு யாரும் செய்ய முடியாது, ஏன்?
பதில்:
ஏனென்றால் உங்களுக்குத்தான்
பரமாத்மாவின் (சிவபாபாவின்) சக்தி கிடைக்கிறது. முதலாவதாக
ஆத்மாக்களாகிய உங்களுக்கு பரமாத்மாவின் மூலமாக ஞானத்தின் ஊசி (இஞ்செக்ஷன்)
செலுத்தப்படுகிறது. அதன் மூலம் நீங்கள் 5 விகாரங்களின் மீது
தானும் வெற்றி அடைகிறீர்கள் மற்றும் பிறரையும் அடைய
வைக்கிறீர்கள். இப்படிப்பட்ட சேவை வேறு யாரும் செய்ய முடியாது.
ஒவ்வொரு கல்பமும் குழந்தைகளாகிய நீங்கள் தான் இந்த ஆன்மீகச்
சேவை செய்கிறீர்கள்.
ஓம் சாந்தி.
தந்தையின் நினைவில் அமர வேண்டும். வேறு எந்த தேகதாரியின்
நினைவிலும் அமரக்கூடாது. புதிது புதிதாக வரக்கூடியவர்கள்
தந்தையைத் தெரிந்து கொள்வதே இல்லை. அவரது பெயர் மிகவும்
சுலபமானது - சிவபாபா. குழந்தைகளுக்கு தந்தையைத் தெரியாது என்பது
எவ்வளவு அதிசயமாக உள்ளது. சிவபாபா உயர்ந்தவரிலும் உயர்ந்த,
அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் ஆவார். அனைத்து
தூய்மையற்றவர்களையும் தூய்மையாக்குபவர்,அனைவரின் துக்கத்தையும்
நீக்குபவர் எனவும் சொல்கின்றனர், ஆனால் அவர் யார் என்பது
பி.கு.க்களாகிய உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
நீங்கள் அவருடைய பேரன் பேத்திகளாவீர்கள். ஆக, கண்டிப்பாக தனது
தந்தை மற்றும் அவரின் படைப்பின் முதல் இடை கடைசியை அறிந்திருப்
பீர்கள். தந்தையின் மூலம் குழந்தைகள்தான் அனைத்தையும் அறிந்து
கொள்கின்றனர். இது தூய்மையற்ற உலகமேயாகும். அனைத்து
கலியுகத்தின் துôய்மையற்றவர்களை சத்யுகத்தின் தூய்மையானவர்களாக
எப்படி ஆக்குகிறார் என்பது பி.கு.க்களைத் தவிர உலகில்
யாருக்கும் தெரியாது. கலியுகத்தின் துர்கதியிலிருந்து வெளியில்
கொண்டு வரக்கூடியவர் சத்யுகத்தின் சத்கதி வழங்கும் வள்ளலாகிய
தந்தையே ஆவார். சிவ ஜெயந்தியும் கூட பாரதத்தில்தான் ஏற்படுகிறது.
கண்டிப்பாக அவர் வருகிறார், ஆனால் வந்து பாரதத்திற்கு என்ன
தருகிறார் என்பது பாரதவாசி களுக்குத் தெரியாது. ஒவ்வொரு
வருடமும் சிவ ஜெயந்தியைக் கொண்டாடு கின்றனர், ஆனால் ஞானத்தின்
மூன்றாம் கண் இல்லை, ஆகையால் தந்தையைத் தெரிந்துக் கொள்ளவில்லை.
பாடல்: கண்ணிழந்தவர்களுக்கு வழி காட்டுங்கள். . . .
நாங்கள் அனைவரும் கண்ணிழந்தவர்கள் என்ற இந்தப் பாடல்
மனிதர்களால் உருவாக்கப்பட்டதே யாகும். இந்த ஸ்தூலமான கண்கள்
அனைவருக்கும் உள்ளது, எனினும் தன்னை கண்ணற்றவர்கள் என ஏன் சொல்
கின்றனர்? அதனை தந்தை அமர்ந்து புரிய வைக்கிறார் - ஞானத்தின்
மூன்றாம் கண் யாருக்கும் இல்லை. தந்தையை அறியாமல் இருப்பது
என்பது அஞ்ஞானமாகும். தந்தையை தந்தையின் மூலம் அறிவது என்பது
ஞானமாகும். தந்தை ஞானத்தின் மூன்றாம் கண்ணைக் கொடுக்கிறார்,
அதன் மூலம் நீங்கள் முழு படைப்பின் முதல், இடை, கடைசியை
அறிகிறீர்கள். ஞானக்கடலின் குழந்தைகளாகிய நீங்கள் மாஸ்டர்
ஞானக்கடல் ஆகி விடுகிறீர்கள். மூன்றாம் கண் என்றாலே திரிநேத்ரி
(மூன்று கண் உடையவர்), திரிகாலதரிசி (முக்காலங்களும் அறிந்தவர்),
திரிலோகநாத் (மூன்று உலகங்களுக்கும் அதிபதி) ஆக ஆகி
விடுகிறீர்கள். சத்யுகத்தின் எஜமானர் களாக இருக்கும் இந்த
லட்சுமி நாராயணருக்கு இந்த ஆஸ்தி எப்படி கிடைத்தது என்பது பாரத
வாசிகளுக்குத் தெரியாது. அவர்கள் எப்போது வந்தனர்? பிறகு எங்கே
சென்றனர்? பிறகு எப்படி இராஜ்யத்தை அடைந்தனர்? எதுவும் தெரியாது.
இந்த தேவதைகள் தூய்மையானவர்கள் அல்லவா. கண்டிப்பாக தந்தைதான்
தூய்மையானவர் களாக ஆக்குவார். பாரதவாசிகளாகிய உங்களுக்கு தந்தை
அமர்ந்து புரிய வைக்கிறார். நீங்கள் தேவதைகளை, சிவனை ஏற்றுக்
கொள்கிறீர்கள். சிவனின் ஜென்மமும் கூட பாரதத்தில் ஏற்பட்டது.
உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் பகவான் ஆவார். சிவ ஜெயந்தியும் கூட
இங்கே கொண்டாடுகின்றனர். ஜெகதம்பா, ஜெகத்பிதா பிரம்மா மற்றும்
சரஸ்வதியின் ஜென்மமும் கூட இங்குதான் ஆகிறது. பாரதத்தில்தான்
கொண்டாடுகின்றனர். நல்லது, லட்சுமி நாராயணரின் ஜென்மமும் கூட
இங்குதான் ஆகிறது, அவர்கள்தான் ராதா கிருஷ்ணர் ஆவர். இதுவும்
கூட பாரதவாசிகளுக்குத் தெரியாது. தூய்மை ஆக்குபவரே வாருங்கள்
என சொல்கின்றனர், ஆக அனைவரும் தூய்மையற்றவர்களே ஆவர். சாது
சன்னியாசிகள், ரிஷி முனிவர்கள் முதலான அனைவருமே எங்களை
தூய்மையாக்க வாருங்கள் என கூப்பிடுகின்றனர். இன்னொரு பக்கம்
பாவத்தை நீக்கிக் கொள்ள கும்பமேளா முதலானவற்றிற்குச்
செல்கின்றனர். கங்கை பதீத பாவனி (தூய்மை படுத்தக் கூடியது) என
சொல்கின்றனர். தூய்மையற்றவரை தூய்மையாக்குபவரே என
கூப்பிடுகின்றனர் எனும்போது மனிதர்கள் எப்படி யாரை தூய்மையாக்க
முடியும்? நீங்கள் முதலில் தேவி தேவதா தர்மத்தவராக இருந்த போது
அனைவரும் தூய்மை யானவர்களாக இருந்தீர்கள், இப்போது
தூய்மையற்றவர்களாக இருக்கிறீர்கள் என தந்தை புரிய வைக்கிறார்.
வழி காட்டுங்கள் பிரபு என சொல்கின்றனர். எங்கு செல்வதற்கான வழி?
பாபா ஜீவன் முக்திக்கான வழி கூறுங்கள் என சொல்கின்றனர்.
எங்களுக்குள் 5 விகாரங்கள் உள்ளன. பாபா நாங்கள் அனைவரும்
சொர்க்கத்தில் இருந்த போது விகாரமற்றவர்களாக இருந்தோம். இப்போது
விகாரிகளாக, தூய்மையற்றவர்களாக ஆகிவிட்டோம். இதன் இரகசியத்தைப்
புரிய வையுங்க ளேன். இவை ஏதும் கட்டுக் கதைகள் அல்ல. ஸ்ரீமத்
பகவத் கீதை அல்லது பரமாத்மாவால் சொல்லப்பட்ட கீதையாகும் என
தந்தை புரிய வைக்கிறார். தூய்மையற்றவர்களை தூய்மை யாக்குபவர்
நிராகார பகவான் ஆவார். மனிதர்களை பகவான் என சொல்ல முடியாது.
இவ்வளவு பெரிய பெரிய குருமார்கள் இருந்த போதும் பாரதம் இவ்வளவு
தூய்மையற்று சோழிக்குச் சமமாக ஏன் ஆகி யுள்ளது என தந்தை
கேட்கிறார். பாரதம் சொர்க்கமாக இருந்தது என்பது நேற்றைய
விஷயமாகும். பாபா பாரதத்திற்கு சொர்க்கத்தின் பரிசை
வழங்கியிருந்தார். தூய்மையற்ற பாரதவாசிகளை வந்து இராஜயோகம்
கற்றுக் கொடுத்து தூய்மையாக்கி இருந்தார். இப்போது மீண்டும்
சேவாதாரியாகி குழந்தைகளிடம் வந்துள்ளார். தந்தை ஆன்மீக
சேவாதாரியாக உள்ளார். மற்றபடி உள்ள மனிதர்கள் அனைவரும்
ஸ்தூலமான சேவாதாரிகள் ஆவர். சன்னியாசிகளும் கூட ஸ்தூலமான
சேவாதாரிகளே. அவர்கள் அமர்ந்து புத்தகம் முதலானவற்றைப்
படித்துச் சொல்கின்றனர். நிராகாரமாகிய நான் சாகாரமான சாதாரண
முதியவரின் உடலில் பிரவேசம் செய்து வந்து குழந்தைகளுக்குப்
புரிய வைக்கிறேன் என தந்தை சொல்கிறார். ஓ பாரதவாசி குழந்தைகளே
! பாருங்கள், ஆன்மீகத் தந்தை வந்து ஆத்மாக்களுக்குப் புரிய
வைக்கிறார். இந்த பிரம்மா சொல்வதில்லை, ஆனால் அந்த நிராகார
தந்தை இந்த உடலை ஆதாரமாக எடுக்கிறார். சிவனுக்கோ தன்னுடையதென
சரீரம் கிடையாது. சாலிக்கிராம ஆத்மாக்களுக்கு தத்தமது உடல்கள்
இருக்கின்றன. மறுபிறவிகளில் வந்து வந்து தூய்மையற்றவராக ஆகி
விடுகின்றனர். இப்போது முழு உலகமும் தூய்மை யற்றிருக்கிறது.
ஒருவரும் கூட தூய்மையானவர் இல்லை. நீங்கள் சதோபிரதானமாக
இருந்தீர்கள், பிறகு துருப் பிடித்ததால் சதோவிலிருந்து ரஜோ,
தமோவில் வந்தீர்கள். பாரதவாசிகளான உங்களிடம் சிவபாபா வந்து
சரீரத்தை (தாரணை) தரித்துக் கொள்கிறார், அவரை (பாகீரதி)
பாக்கியரதம் என்றும் சொல்கின்றனர். கோவில்களில் சங்கரரின்
உருவத்தைக் காட்டுகின்றனர், ஏனென்றால் அவர்கள் சிவனையும்
சங்கரனையும் ஒன்று என புரிந்து கொள்கின்றனர். சிவன் நிராகாரி
என்றோ சங்கரன் ஆகாரி (ஒளி உடல் உடையவர்) என்றோ புரிந்து
கொள்வதில்லை. சிவனையும் சங்கரனையும் எப்படி ஒன்று என
சொல்கின்றனர். நல்லது, பிறகு காளை மாட்டின் மீது சவாரி செய்பவர்
யார்? சிவனா அல்லது சங்கரனா? சூட்சும வதனத்தில் காளை
எங்கிருந்து வந்தது? சிவன் மூல வதனத்தில் இருக்கிறார், சங்காரன்
சூட்சும வதனத்தில் இருக்கிறார். மூல வதனத்தில் அனைத்து
ஆத்மாக்களும் உள்ளனர். சூட்சும வதனத்தில் பிரம்மா, விஷ்ணு,
சங்கரன் மட்டும்தான் இருக்கின்றனர். அங்கே விலங்குகள்
இருப்பதில்லை. நான் சாதாரண முதியவரின் உடலில் பிரவேசமாகி புரிய
வைக்கிறேன் என தந்தை சொல்கிறார். குழந்தைகளாகிய உங்களுக்கு
உங்களுடைய பிறவிகள் பற்றி தெரியாது. சத்யுகத்திலிருந்து தொடங்கி
நீங்கள் எத்தனை பிறவிகள் எடுத்தீர்கள்? 84 பிறவிகள்
எடுத்தீர்கள். இப்போது இது கடைசி பிறவியாகும். அமர லோகமாக
தூய்மையாக இருந்த பாரதம் இப்போது மரணலோகமாக தூய்மையற்றதாக
உள்ளது. அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் ஒருவர் அல்லவா.
ருத்ர மாலை தான் பரமபிதா பரமாத்மா நிராகார சிவனுடையதாகும். 108
ருத்ரமாலை என சொல்லப் படுகிறது. அனைவரும் சிவனின் கழுத்து மாலை
ஆவர். தந்தை பதித பாவனர், அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல்,
அனைவருக்கும் ஆஸ்தி கொடுப்பவர் ஆவார். எல்லைக்குட்பட்ட தந்தை
எல்லைக்குட்பட்ட ஆஸ்தியை கொடுக்கிறார், அதனை காகத்தின்
எச்சத்தைப் போன்ற சுகம் என சன்னியாசிகள் புரிந்து கொள்கின்றனர்.
உங்களுடைய இந்த சுகம் காகத்தின் எச்சத்திற்கு ஒப்பானது என்பது
மிகச் சரியே என தந்தை சொல்கிறார். தந்தைதான் வந்து ஞானத்தின்
மூலம் தூய்மையற்றவர்களை தூய்மையானவர்களாக அல்லது முட்களை
மலர்களாக ஆக்குகிறார். இது கீதையின் ஞானமாகும். இந்த ஞானத்தை
எந்த மனிதரும் புரிய வைக்க முடியாது. ஞானக் கடலான பதித பாவன
தந்தைதான் புரிய வைக்க முடியும். தந்தையிடமிருந்துதான் ஆஸ்தி
கிடக்கிறது, அதனை நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
நீங்கள் மட்டும்தான் சத்கதியை நோக்கி சென்று
கொண்டிருக்கிறீர்கள். இப்போது சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள்,
அவர்கள் கலியுகத்தில் இருக்கின்றனர். இப்போது கலியுகத்தின்
கடைசி சமயமாக உள்ளது. மகாபாரதச் சண்டையும் கூட முன்னால் உள்ளது.
5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கூட நீங்கள் இராஜ யோகம் கற்றுக்
கொண்டிருக்கும்போது வைக்கோல் போரில் தீ மூண்டது. இப்போது
நீங்கள் இந்த லட்சுமி நாராயணனாக ஆவதற்காக இராஜயோகம் கற்றுக்
கொண்டிருக்கிறீர்கள். மற்றது எல்லாம் பக்தி மார்க்கமாகும்.
தந்தை வரும்போது சொர்க்கத்தின் வாசலைத் திறக்கிறார். இந்த சிவ
சக்தி பாரதமாதாக்கள் பாரதத்தை ஸ்ரீமத்படி சொர்க்கமாக
ஆக்குகின்றனர் என தந்தை சொல்கிறார். சிவ சக்தி பாரத
மாதாக்களாகிய நீங்கள் பாரதத்தை சொர்க்கமாக ஆக்குகிறீர்கள்.
நீங்கள் ஈஸ்வரனின் வாரிசுகள், அவரை மட்டுமே நினைவு
செய்கிறீர்கள். சிவனிடமிருந்து சக்தி எடுத்து 5 விகாரங்கள்
எனும் எதிரிகளை வெற்றி கொள்கிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் 5
ஆயிரம் வருடங்களுக்கு முன்பும் கூட பாரதத்தின் ஆன்மீக சேவை
செய்திருக்கிறீர்கள். அந்த சமூக சேவகர்கள் ஸ்தூலமான சேவை
செய்கின்றனர். இது ஆன்மீக சேவை. பரம ஆத்மா வந்து ஆத்மாவுக்கு
இஞ்செக்ஷன் (ஊசி) போடுகிறார், படிப்பிக்கிறார். ஆத்மாதான்
கேட்கிறது. நீங்கள் ஆத்மாக்கள் ஆவீர்கள். நீங்கள்தான் 84
பிறவிகள் எடுக்கிறீர்கள். ஒரு சரீரத்தை விடுத்து மற்றொன்றை
எடுக்கிறீர்கள். 84 பிறவிகள் எடுத்து 84 தாய் தந்தையரை
அடைந்தீர்கள். சத்யுகம், திரேதாவில் நீங்கள்
எல்லைக்கப்பாற்பட்ட சுகத்தை அடைந்தீர்கள், இப்போது மீண்டும்
எலைக்கப்பாற்பட்ட தந்தை மூலம் சுகத்தின் ஆஸ்தி அடைந்து
கொண்டிருக்கிறீர்கள். பாரதத்திற்கு இந்த ஆஸ்தி கிடைத்திருந்தது.
பாரதத்தில் இந்த லட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தது. அங்கே
அசுரர்கள் முதலான யாரும் இருக்கவில்லை. இப்போது இந்த பழைய
உலகத்திற்கு தீ பற்றப் போகிறது என நீங்கள் அறிவீர்கள். நான்
வந்து ஞான யக்ஞத்தை படைக்கிறேன். நீங்கள் அனைவரும் தூய்மையான
தேவதைகள் ஆகிறீர்கள். ஆயிரக்கணக்கானவர்கள் தேவதைகளாவதற்கான
முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். குழந்தைகளுக்கு சத்கதி
வழங்குவதற்காக தந்தை வந்துள்ளார். குழந்தைகளாகிய உங்களை
முள்ளிலிருந்து மலர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். உங்களுக்கு
ஞானத்தின் மூன்றாம் கண்ணைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார், அதன்
மூலம் நீங்கள் முழு நாடகத்தையும், சிவபாபாவின் நடிப்பு என்ன
நடக்கிறது போன்ற அனைத்தையும் அறிவீர்கள். பிரம்மா மற்றும்
விஷ்ணுவிற் கிடையில் என்ன தொடர்பு என்பதையும் நீங்கள்
அறிவீர்கள். விஷ்ணுவின் நாபியிலிருந்து பிரம்மா வந்தார் என
அவர்கள் காட்டுகின்றனர். பிரம்மா தான் சென்று விஷ்ணு ஆகிறார்.
பிராமணரே பின்னர் தேவதையாக ஆகின்றனர். விஷ்ணுவிலிருந்து பிரம்மா
ஆவதற்கு 5 ஆயிரம் வருடங்கள் ஆகின்றன. இந்த ஞானம் உங்களுக்கு
உள்ளது. பிராமணர்களாகிய உங்களின் நாபியிலிருந்து விஷ்ணுபுரி
வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்கள் விஷ்ணுவின்
நாபியிலிருந்து பிரம்மா வந்தார், பிறகு அனைத்து வேத
சாஸ்திரங்களின் சாரத்தை உரைத்தார் என படத்தை உருவாக்கியுள்ளனர்.
இப்போது நீங்கள் பிரம்மாவின் மூலம் அனைத்து சாரத்தையும்
புரிந்து கொள்கிறீர்கள். முக்கியமான தர்ம சாஸ்திரங்கள் 4 என
தந்தை சொல்கிறார். முதல் சாஸ்திரம் தெய்வீக தர்மத்தின்
கீதையாகும். கீதையை யார் உரைத்தது? சிவபாபா. ஞானக்கடல், பதித
பாவனர், சுகக் கடல் சிவபாபா ஆவார். அவர் வந்து பாரதத்தை
சொர்க்கமாக ஆக்கினார். கிருஷ்ணர் அல்ல. கிருஷ்ணரோ
என்னிடமிருந்து ஞானத்தைக் கேட்டு பிறகு கிருஷ்ணராக ஆகினார். ஆக
இது குப்தமான (மறைமுகமான) விஷயமல்லவா. புதிய புதிய குழந்தைகள்
இந்த விஷயங்களை புரிந்து கொள்ள முடியாது. இது நரகம் என
சொல்லப்படுகிறது. அது சொர்க்கம் என சொல்லப்படுகிறது. சிவபாபா
சொர்க்கத்தை ஸ்தாபனை செய்திருந்தார், அதில் இந்த லட்சுமி
நாராயணர் இராஜ்யம் செய்து கொண்டிருந் தனர். இப்போது நீங்கள்
மனிதரிலிருந்து தேவதை ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த மரண
லோகம், துக்க தாமத்தில் இது உங்களுடைய கடைசிப் பிறவியாகும்.
பாரதம் அமரலோகமாக இருந்தது. அங்கே துக்கத்தின் பெயரும் இருக்க
வில்லை. பாரதம் பரிஸ்தானமாக (தேவதைகள் வாழும் இடமாக) இருந்தது.
இப்போது சுடுகாடாக உள்ளது, மீண்டும் பரிஸ்தானமாக ஆகப் போகிறது.
இவையனைத்தும் புரிந்து கொள்ளக் கூடிய விஷயங்களாகும். இது
மனிதரிலிருந்து தேவதை ஆவதற்கான பாடசாலையாகும். இது ஏதோ
சன்னியாசிகளினுடைய சத்சங்கம் அல்ல. அங்கே அமர்ந்து சாஸ்திரங்களை
படித்து சொல் கின்றனர். 7 நாட்களின் பாடமுறையைக் கேளாத வரை
புதியவர்கள் யாரும் இந்த விஷயங் களைப் புரிந்து கொள்ள முடியாது.
இந்த சமயத்தில் மனிதர்களாக உள்ள அனைவருமே பக்தர் களாக உள்ளனர்.
அவர்களுடைய ஆத்மாவும் கூட நினைவு செய்கிறது. அனைவரும் ஒரு
பிரியதர்ஷனாகிய பரமாத்மாவின் பிரியதர்ஷினிகளாவார்கள். தந்தை
வந்து உண்மையான கண்டத்தை உருவாக்குகிறார். அரைக் கல்பத்திற்குப்
பிறகு இராவணன் வந்து பொய்யான கண்டத்தை உருவாக்குகிறார். இப்போது
சங்கமயுகமாக உள்ளது. இவையனைத்தும் புரிந்து கொள்ளக் கூடிய
விஷயங்களாகும். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தந்தையின் ஸ்ரீமத்படி பாரதத்திற்கு உண்மையிலும் உண்மையான
சேவை செய்ய வேண்டும். சர்வசக்திவான் தந்தையிடமிருந்து சக்தி
அடைந்து 5 விகாரங்கள் எனும் எதிரிகள் மீது வெற்றி அடைய வேண்டும்.
2. மனிதரிலிருந்து தேவதைகளாவதற்காக கண்டிப்பாக தூய்மை அடைய
வேண்டும். ஞானத்தை தாரணை செய்து முள்ளிலிருந்து மலராக ஆக
வேண்டும் மற்றும் மற்றவர் களையும் ஆக்க வேண்டும்.
வரதானம்:
விநாச நேரத்தின் தேர்வில் தேர்ச்சி பெறக் கூடிய ஆகாரி லைட்
ரூபதாரி ஆகுக.
விநாச நேரத்தின் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு அல்லது அனைத்து
பிரச்சனை களையும் எதிர் கொள்வதற்கு ஆகாரி லைட் ரூபதாரி ஆகுங்கள்.
நடந்தாலும், காரியங்கள் செய்தாலும் லைட் ஹவுஸ் ஆகிவிடும் பொழுது
உங்களது இந்த ரூபம் (சரீரம்) தென்படாது. எவ்வாறு நடிக்கின்ற
பொழுது வேடம் போட்டுக் கொள்வார்கள், காரியம் முடிந்ததும் அந்த
வேடம் கலைத்து விடுவர். ஒரு விநாடியில் தாரணை செய்யுங்கள்
மற்றும் ஒரு விநாடியில் விடுபட்டவர்களாக ஆகிவிடுங் கள் .
எப்போது இந்த பயிற்சி ஏற்படுமோ அப்போது இவர்கள் லைட் ஆடை
அணிந்தவர்கள், லைட் தான் இவர்களது அலங்காரம் என்று
பார்ப்பவர்கள் அனுபவம் செய்வார்கள்.
சுலோகன்:
ஆர்வம்-உற்சாகம் என்ற இறக்கை சதா கூடவே இருந்தால் ஒவ்வொரு
காரியத்திலும் வெற்றி எளிதாக கிடைக்கும்.
அவ்யக்த இஷாரே: நிச்சயம் என்ற அஸ்திவாரத்தை உறுதியானதாக ஆக்கி
சதா பயமற்றவர் மற்றும் கவலையற்று இருங்கள்
தந்தை சர்வசக்திவான் எனில் அவரது கை பிடித்திருப்பவர்கள்
இலட்சியம் அடைந்தே விடுவார்கள் என்ற நம்பிக்கை வையுங்கள். சுயம்
பலவீனமாக இருக்கலாம், ஆனால் துணையாக இருப்பவர் உறுதியானவர்
அல்லவா! அதனால் அடைந்து விடுவார்கள். சதா இப்படிப்பட்ட நிச்சய
புத்தியுடைய வெற்றி இரத்தினம் என்ற நினைவில் இருங்கள். கடந்தது
கடந்ததாக இருக்கட்டும், முற்றுப் புள்ளி வைத்து முன்னேறுங்கள்.
விசேஷ குறிப்பு: இன்று அன்பான பாப்தாதாவின் மிகச் செல்லமான,
உள்நாடு, வெளிநாட்டு அனைத்து பிராமணக் குடும்பத்தின் மூச்சு,
நம் அனைவரின் உள்ளத்திலும் இராஜ்யம் செய்யக் கூடிய இனிமையான
தாதி ஜானகி அவர்களின் புண்ணிய நினைவு நாளாகும். தாதி அவர்கள்
104 வயது வரை விதேஹி அல்லது ஜீவன்முக்தி நிலையில் இருந்து, ஞான
தானத்தின் கூடவே குணங்களை தானம் செய்து முழு குடும்பத்திற்கும்
பாலனை செய்தார். மறைமுகமாக அவரது அநேக ஆழமான ஞான ரகசியங்கள்
நிறைந்த வகுப்புகள் அனைவருக்கும் வழிகட்டியாக இருக்கிறது.
இன்றும் அவரது குடை நிழல் மற்றும் அவர் மூலம் அடைந்த
விலைமதிப்பற்ற போதனைகள் அநேக பிராமணர்களின் காதுகளில் ஒ-த்துக்
கொண்டே இருக்கிறது. தாதி அவர்கள் சத்தியம், தூய்மை மற்றும்
எளிமையின் மூர்த்தியாக விளங்கினார். தாதியின் மூலம் அடைந்த
அநேக விலை மதிப்பற்ற போதனைகளில் சில போதனைகளை எழுதுகின்றேன்.
அனைவரும் இதனை நடைமுறை படுத்துவோம்.
1) தனது சூட்சும அபிமானத்தை கண்டறிந்து அதை விரைவாக அழிப்பது
தான் தன் மீது ஆசிர்வாதம் செய்வதாகும்.
2) அதிகமாக யோசிப்பது, பேசுவது மற்றும் கவலைப்படுவதனால் சக்தி
விரையமாகிறது. அமைதியாக இருந்தால் சக்தி சேமிப்பாகும்.
3) ஒருவருடைய தவறை மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள், மனதை
தெளிவாக வைத்து கொண்டால் அமைதியாக இருக்க முடியும்.
4) புரிந்து கொண்டு வீணானவை மற்றும் எதிர்மறைகளை அழித்து
விட்டால் அமைதிப் பிரியர்களாக ஆகிவிடுவீர்கள்.
5) பாபாவிடமிருந்து பரிசு பெற வேண்டுமென்றால் நியமங்கள் படி
நடங்கள். சிறிதளவும் எதிலும் பற்றுதல், அடிமைத்தனம் இருக்கக்
கூடாது.
6) காரியம் மற்றும் சம்பந்தங்கள் பற்றி குணங்களின் மூலம்
அறிந்து கொள்ள முடியும். ஆகையால் காரியத்தில் ஆன்மிகம் மற்றும்
சம்பந்தத்தில் சத்தியம் இருக்க வேண்டும்.
7) பணிவு மற்றும் சத்தியத்தை தனது துணைவனாக ஆக்கிக் கொண்டால்
ஒவ்வொரு விசயத்திலும் மிகச் சரியாக இருப்பீர்கள்.
8) அன்பு கேட்பதற்குப் பதிலாக சுவமானத்தில் இருங்கள் மற்றும்
அனைவருக்கும் மரியாதை கொடுத்தால் அன்பிற்கு பாத்திரமானவர்களாக
ஆகிவிடுவீர்கள்.
9) யார் உண்மையான, தூய்மையான மற்றும் சேவாதாரிகளாக
இருக்கிறார்களோ அவர்கள் தான் பரமாத்ம அன்பிற்கு
பாத்திரமானவர்கள்.
10) சேவை செய்தாலும் டபுள் லைட்டாக இருப்பது தான் அனைத்தையும்
விட மிகப் பெரிய சேவையாகும்.
11) பெரிய விசயத்தை சிறியதாக ஆக்கி விட்டால் கழு மரம் முள்ளாக
ஆகிவிடும்.
12) சிந்தனை சாதனைகளில் குறுக்கீடு செய்கிறது, நினைவு சாதனையின்
மூலம் வெற்றி ஏற்படுத்துகிறது.
13) குஷி என்ற பொக்கிஷத்தை சதா நிலையாக வைத்துக் கொள்ள
வேண்டுமென்றால் நேர்மறையாக சிந்திக்கும் முறையை கற்றுக்
கொள்ளுங்கள்.
14) இப்போதைய ஸ்திதி தான் கடைசியில் காரியத்திற்கு பயன்படும்,
ஆகையால் தனது ஸ்திதியை உருவாக்குவதில் கவனம் செலுத்துங்கள்.
15) அந்த அளவிற்கு மனோ பலம் அதிகரித்துக் கொள்ளுங்கள் - முள்
நிறைந்த காட்டில் தானும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்,
மற்றவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும்.
16) அசுத்தத்தி-ருந்து விடுபட வேண்டுமெனில் உள்ளார்ந்த
வைராக்கிய விருத்தி தாரணை செய்யுங்கள்.