27-08-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! இப்போது இந்த
எல்லையற்ற பழைய உலகம் விநாசம் ஆகப் போகிறது, புது உலகம் ஸ்தாபனை
ஆகிக் கொண்டிருக்கிறது, ஆகையால் புது உலகம் செல்வதற்காக
தூய்மையாகுங்கள்.
கேள்வி:
பரமாத்மாவைப் பற்றி
குழந்தைகளாகிய நீங்கள் எந்த ஒரு ஆச்சரியமான விசயத்தை
அறிந்திருக்கிறீர்கள், அது மனிதர்களின் அறிவுக்கு
அப்பாற்பட்டதாக உள்ளது?
பதில்:
ஆத்மா எவ்வாறு ஜோதி புள்ளியாக
இருக்கிறதோ அதே போன்று பரமாத்மாவும் மிக சூட்சும ஜோதி
புள்ளியாக இருக்கின்றார் என்று நீங்கள் கூறுகிறீர்கள். இந்த
விசயம் மனிதர் களின் அறிவுக்கு அப்பாற் பட்டதாகும். சில
குழந்தைகளும் கூட இதில் குழப்பமடைந்து விடு கின்றனர். பாபா
கூறுகின்றார் - குழந்தைகளே! குழப்ப மடையாதீர்கள். ஒருவேளை
சிறிய ரூபம் நினைவிற்கு வரவில்லையெனில் பெரிய ரூபத்தில் நினைவு
செய்யுங்கள். அவசியம் நினைவு செய்ய வேண்டும்.
பாடல்:
இரவு பயணிகளே களைப்படையாதீர்கள்
.........
ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை வந்து புரிய
வைக்கின்றார், ஆகையால் குழந்தைகள் ஆத்ம அபிமானியாகி அமர
வேண்டும். இவ்வாறு வேறு எந்த இடத்திலும் புரிய வைப்பது கிடையாது.
எந்த சாதுவோ அல்லது சந்நியாசியோ ஆத்ம அபிமானியாகி அமருங்கள்
என்று புரிய வைப்பது கிடையாது. இதை ஒரே ஒரு தந்தை தான் புரிய
வைக்கின்றார், வேறு யாருக்கும் கூறுவதற்கு வரவே வராது. இந்த
யுக்தியை யாரும் கூற முடியாது. குழந்தை களாகிய நீங்களும் கூட
நான் ஆத்மா என்பதை புரிந்திருக்கிறீர்கள். ஆத்மா தான் ஒரு
சரீரத்தை விடுத்து மற்றொன்றை எடுக்கிறது. வக்கீலாகவும்,
டாக்டராகவும் ஆகிறது. ஆத்மா தான் இப்போது தூய்மையற்றதாக
ஆகியிருக்கிறது, பிறகு தூய்மை ஆகிவிடும். ஆத்மாவில் ஞான தாரணை
ஏற்படுகிறது. தந்தை நிராகாராக, ஞானக் கடலாக இருக்கின்றார் எனில்
அவசியம் வந்து ஞானம் கூறுவார் அல்லவா! பதீத பாவன் எனில் அவசியம்
வந்து தூய்மையாக்குவார் அல்லவா! அவர் சுப்ரீம் பரம்பிதா
பரமாத்மா ஆவார். நான் உங்களது தந்தை சுப்ரீம் ஆக இருக் கிறேன்,
ஞானம் நிறைந்தவனாக இருக்கிறேன். எனக்கென்று சரீரம் கிடையாது.
இந்த அனைத்து ஞானத்தையும் உங்களது ஆத்மா தாரணை செய்கிறது எனில்
நீங்கள் ஆத்ம அபிமானியாக ஆக வேண்டும். தேக அபிமானத்தில் வரக்
கூடாது, வேறு எந்த இடத்திலும் கேட்பவர் மற்றும் கூறுபவர் ஆத்மா
அபிமானியாக இருப்ப தில்லை. தந்தை நிராகாராக இருக்கின்றார். அவர்
வந்து உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். மற்ற அனைத்து
மனிதர்களும் தேக அபிமானத்தில் இருக்கின்றனர். இந்த லெட்சுமி
நாராயணனும் ஆத்ம அபிமானியாக இருந்தனர் எனக் கூறலாம்,
இருப்பினும் தேக அபிமானம் இருக்கிறது அல்லவா! இந்த ஞானம்
பரம்பிதா பரமாத்மா வந்து தான் கொடுக்கின்றார். ஆத்மாவானது தாரணை
செய்ய வேண்டும். ஆத்மாவைத் தான் தூய்மையற்றதிலிருந்து தூய்மை
ஆவதற்கான யுக்தி கூறுகின்றார். இப்போது முழு உலகமும்
வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது, மீண்டும் எழுச்சி செய்ய வரு
கின்றார். இதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். வீழ்ச்சி
என்றால் அழிவு, எழுச்சி என்றால் படைப்பு. ஸ்தாபனை மற்றும்
விநாசம். எதை ஸ்தாபனை செய்கிறார்? புது உலகை, சொர்க்கத்தின்
ஸ்தாபனை மற்றும் பழைய உலகம், நரகத்தை விநாசம் செய்கிறார்.
விநாசம் மற்றும் படைப்பு. கலியுகம் என்றால் பழைய உலகம், இது
அவசியம் விநாசம் ஆக வேண்டும். விநாசத்தின் அடையாளம் தான் இந்த
மகாபார யுத்தமாகும். மகாபாரதத்தின் உதாரணம் மகாபாரத
சாஸ்திரத்தில் காண்பிக்கின்றனர். தந்தை பிரம்மாவின் மூலம்
ஸ்தாபனை செய்கிறார். அவசியம் புது உலகைத் தான் ஸ்தாபனை செய்வார்
அல்லவா! இது எல்லையற்ற விநாசம் மற்றும் எல்லையற்ற ஸ்தாபனை ஆகும்.
தந்தை தான் குழந்தைகளுக்காக புது கட்டிடம் கட்டுவார். பிறகு
பழையதை அவசியம் அழித்து விடுவார். பாபா இப்போது புது உலகை
ஸ்தாபனை செய்து கொண்டிருக்கின்றார் என்பதை நீங்கள்
புரிந்திருக்கிறீர்கள். தமோபிரதானத்திலிருந்து மீண்டும்
சதோபிரதானம் ஆக்குவதற்காக நம்மை தயார்படுத்திக்
கொண்டிருக்கின்றார். விநாசத்திற்காக மகாபாரத யுத்தம் பிரபலமானது.
இது அதே நேரம் என்று பாபா கூறுகின்றார். மகாபாரத நேரத்தில் அதே
நட்சத்திரங்கள் வந்து தங்களுக்குள் சந்தித்து கொள்கிறது. இந்த
ஏணியிலும் பாரதத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சிக்கான உயர்ந்த
கதை என்று எழுதப்பட்டிருக்கிறது. இந்த வாக்கியத்தில் கல்ப
கல்பம் என்ற வார்த்தையும் எழுதப்பட வேண்டும். ஆரம்பத்திலிருந்து
கடைசி வரை மனிதர்கள் 84 பிறவிகள் எடுக்கின்றனர். இதுவும்
உங்களது புத்தியில் இருக்கிறது. மனிதர்களின் புத்தியானது
முற்றிலும் காட்ரேஜ் பூட்டினால் பூட்டப் பட்டிருக்கிறது. இந்த
விசயங்களை மனிதர்கள் தான் அறிந்து கொள்ள வேண்டும். நடிப்பு
நடிப்ப தற்காக ஆத்மாக்கள் இங்கு சரீரத்தை தாரணை செய்கிறது. ஆக
நாடகத்தின் முதல், இடை, கடையின் படைப்பவர், டைரக்டர், முக்கிய
நடிகர் போன்றவற்றை அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா! இப்போது
நீங்கள் நாடகத்தின் முதல், இடை, கடை, யார் யார் நடிக்கின்றனர்?
போன்ற முழு நாடகத்தையும், ஆரம்பம் முதல் கடைசி வரை அறிந்து
கொண்டீர் கள். தந்தையின் மூலம் இந்த முழு ஞானமும் கிடைத்துக்
கொண்டிருக்கிறது. சிருஷ்டிச் சக்கரம் எவ்வாறு சுழல்கிறது? இது
தான் ஆன்மீக ஞானம் என்று கூறப்படுகிறது. உலகாய ஞானத்தை தத்துவ
ஞானம் என்று கூறப்படுகிறது. ஆன்மீக ஞானம் தான் ஞானம் என்று
கூறப்படுகிறது. இப்போது இந்த அனைத்து விசயங் களும் குழந்தைகளின்
புத்தியில் பதியும்படி புரிய வைக்கப்பட்டிருக்கிறது.
இப்போது 84 பிறவிக்கான நாடகம் முடிவடைகிறது என்பதை குழந்தைகள்
அறிவீர்கள். இப்போது நாம் திரும்பிச் செல்கிறோம், ஆனால்
தூய்மையற்றவர்கள் யாரும் திரும்பி செல்ல முடியாது. இல்லையெனில்
இந்த அளவிற்கு ஜபம், தவம், தீர்த்த யாத்திரை ஏன் செய்கின்றனர்?
தூய்மை ஆவதற்காகவே கங்கையில் குளிக்க செல்கின்றனர். ஆனால் அதன்
மூலம் யாரும் தூய்மை ஆகிவிட முடியாது. ஆகையால் யாரும்
திரும்பிச் செல்ல முடியாது. இன்னார் அனைத்தையும் கடந்து
நிர்வாண்தாமத்திற்குச் சென்று விட்டார், ஜோதி ஜோதியுடன் கலந்து
விட்டார் என்று கட்டுக்கதை கூறுகின்றனர். யாரும் திரும்பிச்
செல்வது கிடையாது என்று தந்தை புரிய வைத்திருக்கின்றார்.
அனைத்து நடிகர்களும் இங்கேயே இருக்கின்றனர். இப்போது நாடகம்
முடிவடைகிறது, ஆகையால் அனைவரும் மேடையில் நின்றுக் கொண்டி
ருக்கின்றனர். இப்போது அனைவரும் இங்கு வந்து விட்டனர். பௌத்தர்,
கிறிஸ்து போன்றவர் கள் எங்கு இருக்கின்றனர்? என்பது
மனிதர்களுக்கு தெரியாது. மேலிருந்து வந்த அனைத்து ஆத்மாக்களும்
இங்கு இந்த நேரத்தில் தமோபிரதானமாக இருக்கின்றனர் என்பதை
நீங்கள் புரிந்திருக் கிறீர்கள். தமோபிரதானத்திலிருந்து
சதோபிரதானமாக கல்பத்திற்கு முன்பும் ஆகியிருந்தீர்கள். தந்தை
வந்து தான் ஸ்தாபனை, விநாசம் செய்விக்கின்றார். இந்த ஞானம்
இராஜாவிற்கெல்லாம் இராஜாவாக ஆக்கக் கூடியது என்றும்
கூறுகின்றார். நான் உங்களை இராஜாவிற்கெல்லாம் இராஜாவாக
ஆக்குகிறேன் என்று இந்த எல்லையற்ற தந்தை கூறியிருக் கின்றார்.
கிருஷ்ணர் ஸ்தாபனை செய்விப்பது கிடையாது. படைப்பவர் தந்தை ஆவார்.
எப்போது இந்த உலகம் தூய்மை இழந்துவிடுகிறதோ அப்போது தான்
நீங்கள் என்னை அழைக்கிறீர்கள் என்று தந்தை வந்து புரிய
வைக்கின்றார். நான் புது உலகை படைக்கிறேன் என்பது கிடையாது.
பிரளயம் ஏற்பட்டது என்று காண்பிக்கின்றனர், இவை அனைத்தும்
தவறாகும். பதீத பாவனனே வாருங்கள் என்று மனிதர்கள் அழைக்கின்றனர்
எனில் அவசியம் அழுக்கான உலகில் வருவார் அல்லவா! தந்தை வந்து
தான் கிருஷ்ணபுரியின் சாட்சாத்காரம் செய்விக்கின்றார்.
கிருஷ்ணர் கடலில் ஆல இலையின் மீது வந்ததாக காண்பிக்கின்றனர்......
இது சரியான விசயமாகும். புது உலகில் முதலில் கிருஷ்ணர் தான்
வருவார். கடலில் அல்ல, கர்ப மாளிகையில் வருவார். கால் விரல்
வாயில் வைத்துக் கொண்டு, மிக ஓய்வாக கர்ப மாளிகையில் இருப்பார்.
சத்யுகத்தில் அனைத்து குழந்தைகளும் கர்ப மாளிகையில் இருப்பர்.
கர்ப மாளிகையின் விசயத்தைத் தான் அவர்கள் கடலில் இலையின் மீது
அமர்ந்திருப்பதாக காண்பித்து விட்டனர். அவை அனைத்தும் பக்தி
மார்க்கத்தின் விசயமாகும். தந்தை இந்த அனைத்து சாஸ்திரங்களின்
சாரத்தை அமர்ந்து புரிய வைக்கின்றார். இங்கு கர்ப சிறையில்
இருப்பதால் தான் எங்களை வெளியேற்றுங்கள், நாம் இனி பாவம்
செய்யமாட்டோம் என்று கூறுகிறது. ஆனால் இராவணனின் இராஜ்யத்தில்
பாவம் ஏற்படவே செய்கிறது. மீண்டும் பாவம் செய்ய ஆரம்பித்து
விடுகிறது. நீங்கள் அரைக் கல்பத்திற்கு சிறைப் பறவையாக
ஆகிவிடுகிறீர்கள். திருடர்களைத் தான் சிறைப் பறவைகள் என்று
கூறுகிறோம். வெளியில் வந்தாலும் மீண்டும் திருடிக் கொண்டே
இருப்பார்கள், சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும். அதனால் தான்
சிறைப் பறவை என்று கூறுகிறோம். இது இராவண இராஜ்யம் என்று தந்தை
புரிய வைக்கின்றார். அங்கு இந்த விசயங்களே கிடையாது. அதுவோ
இராம இராஜ்யமாகும். அங்கு கர்ப சிறையும் இருக்காது, அந்த
சிறையும் இருக்காது. இங்கு எத்தனை மனிதர்கள் சிறையில்
இருக்கின்றனர்! கர்ப சிறையும் இருக்கிறது, அந்த சிறையும்
இருக்கிறது. இரண்டு சிறைகள் உள்ளன. கலியுகத்தின் கடைசி அல்லவா!
நீங்கள் இப்போது படைப்பின் காரியம் செய்து கொண்டிருக்கிறீர்கள்
என்று தந்தை புரிய வைக்கின்றார். எழுச்சி மற்றும் வீழ்ச்சி,
ஒவ்வொரு கல்பத்திலும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. எழுச்சி
மற்றும் வீழ்ச்சி உலகில் ஏற்படுகிறது. அதிலும் முக்கிய பங்கு
பாரதத்தில் இருக்கிறது. ஆத்மா பரமாத்மாவைப் பிரிந்து வெகு காலம்
ஆகிவிட்டது ...... என்று பாடிக் கொண்டே இருக்கின்றனர். ஆக
அதற்கும் கணக்கு வேண்டும் அல்லவா! எந்த ஆத்மாக்கள் வெகு காலமாக
பிரிந்திருக்கின்றன? முதன் முதலில் நடிப்பு நடிப்பதற்காக தேவி
தேவதா தர்மத்தைச் சார்ந்த ஆத்மாக்கள் வருகின்றன. இப்போது அந்த
தேவதைகள் கிடையாது, யார் இராஜ்யம் செய்து விட்டு சென்றார்களோ
அவர்களது சிலைகள் தான் அடையாளமாக இருக்கின்றன. இராஜ்யம் அழிந்து
விட்டது. சொர்க்கம் அழிந்து விட்டது, பிறகு நரகம் ஏற்படு கிறது,
மீண்டும் நரகம் அழிந்து சொர்க்கம் ஏற்படும். ஆக புது உலக
படைப்பு ஏற்பட்டுக் கொண்டி ருக்கிறது மற்றும் நரகம் அழிந்து
விடும். படைப்பதற்கு குழந்தைகள் தேவை அல்லவா! வசிக்கக்
கூடியவர்களும் நீங்கள் தான். முதலில் நீங்கள் தெய்வீக
குணங்களுடைய தேவதை களாக ஆக வேண்டும். மனிதனிலிருந்து தேவதை........
என்றும் பாடப்பட்டிருக்கிறது. மனிதர்கள் அசுத்தமானவர்களாக
இருக்கின்றனர் அல்லவா! பகவானின் மகாவாக்கியம் - இல்லறத்தில்
இருந்தாலும் தாமரை மலர் போன்று தூய்மையானவர்களாக ஆக வேண்டும்.
இந்த மரண உலகின் கடைசிப் பிறவியில் நாம் தூய்மையாக இருக்கிறோம்.
இந்த விகாரங்களை வெல்வதன் மூலம் நீங்கள் உலகிற்கு எஜமானர்களாக
ஆவீர்கள் என்று தந்தை கூறுகின்றார். குழந்தைகள் கேட்கவும்
செய்கிறீர்கள், மேலும் மற்றவர்களுக்குப் புரிய வைக்கவும்
செய்கிறீர்கள் - இந்த பழைய உலகின் விநாசம் எதிரிலேயே இருக்கிறது.
இது அதே மகாபாரத யுத்தமாகும். காமம் மிகப் பெரிய எதிரி, ஆகையால்
உறுதிமொழி செய்யுங்கள். நாம் இப்போது தூய்மையாக ஆகிறோம் என்பதை
நீங்கள் இப்போது புரிந்திருக்கிறீர்கள். இந்த பழைய உலகம்
அவசியம் விநாசம் ஆகிவிடும், அதற்கு முன்பாக அவசியம் தூய்மையாக
ஆக வேண்டும். விநாசம் ஏற்படும், பிறகு கேட்கவே கேட்காதீர்கள் -
ஐயோ ஐயோ என்ற நிலை ஏற்படும், கடுமை யான மரணம் அதிகம் நிகழும்.
உங்களால் பார்க்கவும் முடியாது. யாருக்காவது அறுவை சிகிச்சை
நடைபெறும் போது பலவீனமானவர்களால் அங்கு நிற்க முடியாது, கீழே
மயங்கி விழுந்து விடுவர். அதனால் தான் டாக்டர்கள்
குடும்பத்தினர்களை அனுமதிப்பது கிடையாது. இது எவ்வளவு பெரிய
அறுவை சிகிச்சையாக இருக்கும்! ஒருவரை ஒருவர் கொலை செய்து
கொண்டிருக்கின்றனர். இது மிகவும் அசுத்தமான உலகமாகும். முட்கள்
நிறைந்த காடாகும். சத்யுகம் மலர்கள் நிறைந்த பூந்தோட்டம் என்று
கூறப்படுகிறது. தேவதைகள் சைத்தன்ய மலர்கள் அல்லவா!
சொர்க்கத்தில் மலர்கள் நிறைந்த பூந்தோட்டம் இருக்கும் என்று
மனிதர்கள் நினைக்கின்றனர், என்ன கேட்கிறார்களோ அதை
கூறிவிடுகின்றனர். அல்லாவின் பூந்தோட்டம் என்று கூறுகின்றனர்
அல்லவா! பிறகு தியானத்தின் போதும் பூந்தோட்டம் பார்பார்கள்.
அல்லா கைகளில் மலர் கொடுத்தார். புத்தியில் அல்லாவின்
பூந்தோட்டம் இருக்கிறது. பக்தி மார்க்கத்தில் சாட்சாத்காரம்
செய்வதற்காகவே பக்தி செய்கின்றனர். சாட்சாத்காரம் ஏற்பட்டு
விட்டால் சர்வவியாபி அல்லவா! என்று கூறுவர். எது கடந்து
முடிந்ததோ அது மீண்டும் நடைபெறும். குழந்தைகள் எந்த நிலையில்,
எப்படி வந்தீர்களோ அதே நிலையில் மீண்டும் கல்பத்திற்குப் பிறகு
வருவீர்கள். நாடகத்தை சிலர் நல்ல முறையில் புரிந்திருக்கின்றனர்,
பாபாவிடம் சிலர் வருகின்ற போது முன்பு எப்போதாவது
வந்திருக்கிறீர்களா? என்று பாபா கேட்பார். ஆம் பாபா, உங்களை
கல்பத்திற்கு முன்பும் சந்தித்திருந்தோம், உங்களிடம் ஆஸ்தியடைய
வந்திருந்தோம் என்று கூறுவர். என்ன பதவி அடைந்திருந்தீர்கள்?
என்று தந்தை கேட்பார். பாபா, மம்மா என்று கூறுகிறீர்கள் எனில்
அவசியம் அவர்களது வம்சத்தில் வருவீர்கள். உயர்ந்த பதவி
அடையுமளவிற்கு முயற்சி செய்யுங்கள் என்று பாபா கூறுகின்றார்.
இந்த அனைத்து விசயங்களும் உங்களது புத்தியில் இருக்கிறது.
யுத்தமும் நடைபெறும், நரகமும் விநாசம் ஆகியே தீரும். உங்களிடம்
மிகவும் முதல் தரமான சித்திரங்கள் உள்ளன. இரண்டு (பூமி) உருண்டை
உள்ள சித்திரமும் அச்சடிக்க வேண்டும். இதில் மிகவும் தெளிவாக
இருக்கிறது. சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது, நரகத்தை எட்டி
உதைக்கிறார். உங்களது முகமும் சொர்க்கத்தின் பக்கம் இருக்கிறது,
இது முற்றிலும் சரியான விசயமாகும். இப்போது நாம் வீட்டிற்குச்
செல்ல வேண்டும், ஆகையால் வீட்டை மட்டுமே நினைவு செய்ய வேண்டும்
என்பதை அறிவீர்கள். பழைய உலகை மறக்க வேண்டும், இது தான்
எல்லையற்ற வைராக்கியம் என்று கூறப்படுகிறது. பழைய உலகை விட்டு
விட்டு நாம் பாபாவிடம் செல்கிறோம். நினைவு யாத்திரையின் மூலம்
தான் செல்வீர்கள். முக்கியமானது நினைவிற்கான விசயமாகும்.
நினைவின் மூலம் அனைத்தும் செய்கிறீர்கள் அல்லவா! இப்போது தந்தை
வந்து யதார்த்தமான விசயங்களைப் புரிய வைக்கின்றார் - என்னை
நினைவு செய்யுங்கள். இது கலப்படமற்ற நினைவு அதுவும்
அர்த்தத்துடன் கூடியதாகும். சிவபாபாவும் புள்ளியாக இருக்கிறார்
என்பதை நீங்கள் அறிவீர்கள். தன்னையும் ஆத்மா புள்ளி என்று
புரிந்து கொள்ள வேண்டும், தந்தையை யும் புள்ளி என்று புரிந்து
கொள்ள வேண்டும். புதிய விசயத்தைப் பார்த்து மறந்து
விடுகிறீர்கள். தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு பிறகு
தந்தையை மற்றும் தனது வீட்டை நினைவு செய்ய வேண்டும். நல்லது,
புள்ளி சிறியதாக இருக்கும், வீடு பெரிதாக இருக்கும் அல்லவா!
வீட்டை நினைவு செய்யுங்கள். பாபாவும் அங்கு தான் இருக்கிறார்.
எங்கு பாபா இருக்கிறாரோ அங்கு நாம் செல்வோம். புள்ளி நினைவிற்கு
வருவது கிடை யாது, வீடு நினைவிற்கு வருகிறது அல்லவா! அது
சாந்திதாமம், அது சுகதாமம் ஆகும். இது துக்கதாமம் ஆகும்.
இப்போது நீங்கள் வரிசைக்கிரமமான முயற்சியின் படி படித்துக்
கொண்டிருக் கிறீர்கள், பிறகு சுக தாமத்திற்கு வந்து விடுவீர்கள்.
தந்தையின் குழந்தை எனில் அவசியம் சொர்க்கத்தின் இராஜ்யம் தேவை.
கல்பத்திற்கு முன்பும் சிவபாபா வந்திருந்தார், சொர்க்க இராஜ்யம்
கொடுத்திருந்தார். நீங்கள் மறந்து விட்டீர்கள். இப்போது
உங்களுக்குக் கொடுப்பதற்காக நான் மீண்டும் வந்திருக்கிறேன்
என்று தந்தை கூறுகின்றார். எத்தனை முறை நீங்கள் இராஜ்யம்
அடைந்தீர்கள்? மற்றும் இழந்தீர்கள்? எண்ணற்ற முறை ஆஸ்தி
அடைந்திருக்கிறீர்கள், இருப்பினும் இப்படிப்பட்ட தந்தையை ஏன்
மறந்து விடுகிறீர்கள்? மாயையின் புயல்களில் அதிக யுத்தம்
நடைபெறுகிறது, அதனால் தான் நாடகத்திலும் காண்பிக்கிறீர்கள் -
மாயை அந்தப் பக்கம் இழுக்கிறது, பிரபு இந்த பக்கம் இழுக்கிறார்.
ஞானத்தில் தடைகள் ஏற்படுவது கிடையாது. நினைவில் எற்படுகிறது.
இதில் தான் முயற்சி இருக்கிறது. மகாரதி ஆகுங்கள் என்று இப்போது
தந்தை கூறுகின்றார். இந்த பழைய உலகம் எரிந்து போய் விடும்.
இந்த யக்ஞத்தில் முழு பழைய உலகமும் சுவாஹா (பலி பொருளாக) ஆகியே
தீர வேண்டும், ஆக மகாவீராக ஆக வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள்
உறுதியான, ஆடாத, அசைக்க முடியாத இராஜ்யம் அடைய வேண்டும்.
எவ்வளவு தான் புயல்கள் வந்தாலும், மாயை ஒன்றும் செய்ய முடியாத
அளவிற்கு உங்களது புத்தித் தொடர்பு தந்தையிடம் இருக்க வேண்டும்.
இது உங்களது கடைசி மனநிலையாகும். மாற்றல் ஏற்படும் போது,
பள்ளிகளில் தேர்வு கடைசியில் இருக்கும். உங்களது மாலையும்
கடைசியில் உருவாகும். இன்னார் இந்த நிலை அடைவார், இன்னார்
இவ்வாறு ஆவார் என்று உங்களுக்கு அதிக சாட்சாத்காரம் கிடைக்கும்.
இவர் தாசியாக ஆவார்........ இவ்வாறு கூறுவீர்கள். கடைசியில்
ஒன்றும் செய்ய முடியாது, பட்சாதாபம் அடைய வேண்டியிருக்கும்.
இவ்வாறு நான் செய்து விட்டேன், ஸ்ரீமத் படி ஏன் நடக்க வில்லை?
ஆனால் அந்த நேரத்தில் ஒன்றும் செய்ய முடியாது. இவ்வாறு அதிகம்
பட்சாதாபம் அடைய வேண்டியிருக்கும். மனிதர்கள் யாரையாவது கொலை
செய்து விட்டு பிறகு பட்சாதாபம் அடைகின்றனர். ஆனால் கொலை நடந்து
விட்டது, பிறகு என்ன செய்ய முடியும்? அதனால் தான் தவறுகள்
செய்யாதீர்கள், சுய முயற்சி செய்து கொண்டே இருங்கள் என்று தந்தை
கூறுகின்றார். நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) 84 பிறவிகளுக்காக நாடகம் இப்போது முடிவடைகிறது, திரும்பி
வீட்டிற்கு செல்ல வேண்டும், ஆகையால் ஆத்ம அபிமானியாகி பாவனம்
ஆக வேண்டும். தேக அபிமானத்தை நீக்க வேண்டும்.
2) அர்தத்துடன் தன்னை ஆத்மா புள்ளி என்று புரிந்து கொண்டு
புள்ளியான தந்தையின் கலப்படமற்ற நினைவில் இருக்க வேண்டும்.
மகாவீர் ஆகி தனது மன நிலையை ஆடாது, அசையாது ஆக்கிக் கொள்ள
வேண்டும்.
வரதானம்:
வீணான இழப்பை (லீக்கேஜ்) முடிவுக்குக் கொண்டு வந்து,
சக்திவாய்ந்தவராக மாறும் குறைந்த செலவில் நிறைந்த பலன் காண்பவர்
ஆகுக.
சங்கம யுகத்தில் பாப்தாதாவிடமிருந்து கிடைத்துள்ள பொக்கிˆங்கள்
அனைத்தையும் வீணாகப் போவதிலிருந்து காப்பாற்றினால், நீங்கள்
குறைந்த செலவில் நிறைந்த பலன் காண்பவராக ஆகிவிடுவீர்கள்.
வீணானவற்றிலிருந்து பாதுகாப்பது என்றால்-சக்திவாய்ந்தவராக (ஸமர்த்)
மாறுவது என்று பொருள். எங்கு ஆன்மீகச் சக்தி இருக்கின்றதோ,
அங்கு வீணானவை வர சாத்தியமே இல்லை. ஒருவேளை வீணான எண்ணங்கள்
அல்லது சக்திகளின் கசிவு இருக்குமே யானால், நீங்கள் எவ்வளவுதான்
ஆன்மீக முயற்சி (புருˆôர்த்தம்) செய்தாலும், உழைத்தாலும் சக்தி
வாய்ந்தவராக ஆக முடியாது. எனவே, அந்த இழப்பைக் கண்டறிந்து
முடிவுக்குக் கொண்டு வாருங்கள்; அப்போது வீணான நிலையிலிருந்து
சக்திவாய்ந்த நிலைக்கு மாறிவிடுவீர்கள்.
சுலோகன்:
குடும்ப வாழ்க்கையில் இருந்துகொண்டே முழுமையான தூய்மையைக்
கடைப்பிடிப்பது-இதுவே யோகி ஆத்மா மற்றும் ஞானி ஆத்மாக்களின்
சவாலாகும்.
அஅவ்யக்த சமிக்ஞை - அபவித்திரதாவின் விதையையும் கூட அழித்து
முழுமையான தூய்மையானவர் (பவித்திரமானவர்) ஆகுங்கள்.
பரமாத்ம ஞானத்தின் புதுமையே தூய்மை (பவித்திரதா) தான். நீங்கள்
மிகவும் பெருமையோடு (உறுதியோடு) கூறுகின்றீர்கள்
தானே-நெருப்பும் பஞ்சும் ஒன்றாக இருந்தாலும் நெருப்பு
பற்றிக்கொள்ள முடியாது என்று! தூய்மை இல்லாமல் உங்களால் யோகி
ஆத்மாவாகவோ, ஞானி ஆத்மாவாகவோ மாறவே முடியாது என்று நீங்கள்
உங்களது உரைகளிலும் (சொற் பொழிவுகளிலும்) கூறுகின்றீர்கள். எனவே,
அந்தச் சவாலை இப்போது நடைமுறை வடிவத் திற்கு கொண்டு வாருங்கள்.