27.09.26    காலை முரளி            ஓம் சாந்தி 15.12.2011      பாப்தாதா,   மதுபன்


எப்போதும் ஆன்மிக பெருமிதத்தில் இருந்து, கவலையற்ற இராஜா ஆகுங்கள்;
தீவிர புருஷார்த்தத்தின் மூலம் சம்பன்னமாகவும், சமமாகவும் ஆகி,
ஒன்றாக இணைந்து செல்வதற்கான தயாராகுங்கள்.

இன்று பாப்தாதா கவலையற்ற இராஜாக்களின் சபையைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த சபை இந்த சமயத்தில் மட்டுமே கூடுகிறது. ஏனென்றால், அனைத்து குழந்தைகளும் தங்களுடைய கவலைகளை தந்தையிடம் கொடுத்து விட்டு, தந்தையிடமிருந்து பெருமிதத்தைப் பெற்றுக் கொண்டீர்கள். இந்த சபை இப்பொழுது மட்டுமே கூடுகிறது. நீங்கள் ஒவ்வொருவரும் கூட காலையில் எழுந்தது முதல், கர்மங்களைச் செய்துகொண்டு இருந்தாலும் கவலையற்ற வராகவும் இராஜாவாகவும் நடந்து கொள்கின்றீர்கள் அல்லவா! இந்தக் கவலையற்ற வாழ்க்கை எவ்வளவு பிரியமானதாக இருக்கிறது! கவலையற்றவரின் அடையாளம் என்ன தென்படுகிறது? ஒவ்வொருவரின் நெற்றியில் ஒளியான ஆத்மா பிரகாசித்துக் கொண்டிருப்பது தெரிகிறது. இந்தக் கவலையற்ற வாழ்க்கை எவ்வாறு உருவானது? தந்தை அனைத்து குழந்தைகளின் வாழ்க்கையிலிருந்தும் கவலையை எடுத்துக்கொண்டு, பெருமிதத்தைக் கொடுத்து விட்டார். யாருடைய வாழ்க்கையில் பெருமிதம் இல்லாமல் கவலை இருக்கிறதோ, அவர்களுடைய நெற்றியில் ஒளி பிரகாசிப்பதில்லை. அவர்களுடைய நெற்றியில் சுமையின் ரேகைகள் தென்படுகின்றன. எனவே, சொல்லுங்கள், உங்களுக்கு எது பிடிக்கும்? இலேசானதன்மையா அல்லது சுமையா? ஒருவேளை ஏதாவது சுமை வந்தாலும், அந்தச் சுமை, அதாவது கவலையை தந்தையிடம் கொடுத்து விட்டு, ஆன்மிகப் பெருமிதத்தை பெற்றுக்கொள்ள முடியும். உங்கள் அனைவருக்கும் கவலையற்ற வாழ்க்கை பிடித்திருக்கிறது அல்லவா! உங்களைப் பார்ப்பவர் களுக்கும் கவலையற்ற வாழ்க்கையே பிடிக்கிறது.

பாப்தாதா இன்று நான்கு திசைகளிலும் உள்ள குழந்தைகளை, அவர்கள் முன்னிலையில் இருந்தாலும் அல்லது எங்கு அமர்ந்திருந்தாலும், குழந்தைகளின் நெற்றியின் மத்தியில் பிரகாசிக்கும் ஒளியை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். எனவே எப்போதும் கவலையற்றவர்களாக இருக்கிறீர்களா அல்லது எப்போதாவது ஏதாவது கவலை வருகிறதா? கவலை ஏதாவது இருக்கிறதா? தந்தை உங்களை இயற்கையை வென்றவராகவும், விகாரங் களை வென்றவராகவும் ஆக்கிவிட்டபோது, கவலை எவ்வாறு வர முடியும்? எனவே, கையை உயர்த்துங்கள் - கவலை யற்றவராக ஆகிவிட்டீர்களா? சதா இருக்கிறீர்களா? எப்போதும் இருக்கிறீர்களா அல்லது அவ்வப்போது இருக்கிறீர்களா? எப்போதாவது இருப்பவர்களும் இருக்கிறார்களா? அவர்கள் கையை உயர்த்துவதில்லை; பாப்தாதாவும் பார்க்க விரும்பு வதில்லை. பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் கவலையற்ற மகாராஜாவாகப் பார்க்க விரும்புகின்றார்கள். ஒருவேளை, எப்போதாவது கவலையாக இருந்தால், அதை மாற்று வதற்கான மிகவும் சுலபமான வழி உள்ளது. சிறிய அல்லது பெரிய கவலை எது வந்தாலும், எனது என்பதை உனது என்று மாற்றிவிடுங்கள். இந்த எல்லைக்குட்பட்ட எனது என்பதை உனது என்று மாற்றுவது மிகவும் சுலபமான விதியாகும். நீங்கள் எப்போதுமே எனது பாபா என்று கூறுகிறீர்கள் அல்லவா! அப்படியென்றால் இப்போது எனது என்று வேறு எதுவும் மீதம் இருக்கிறதா? எல்லைக்குட்பட்ட எனது முடிந்துவிட்டது அல்லவா! எனது என்பது பாபா ஆகி விட்டார். அனைவரும் உள்ளத்திலிருந்து எனது பாபா! அன்பான பாபா! இனிமையான பாபா! என்று கூறுகிறீர்கள் அல்லவா! அப்படியென்றால் எனது என்பதில் உனது என்பதை கரைப்பது கடினமா என்ன? வித்தியாசம் என்ன உள்ளது? உனது மற்றும் எனது என்ற இந்த சிறிய வித்தியாசம் தான் உள்ளது. எல்லாமே உனது என்று சங்கல்பம் செய்துவிட்டீர்கள், அப்படியென்றால் எனது என்பது என்ன இருக்கிறது? என்னுடைய பாபா. எனவே, பெரும்பான்மையான குழந்தைகள் எல்லைக்குட்பட்ட எனதை உனது என மாற்றிவிட்டார்கள் என்பதை பாப்தாதா பார்த்தார்கள். அதனால் என்னவாகிவிட்டார்கள்? கவலையற்ற மகாராஜாக் கள். இன்று பாப்தாதா குழந்தைகளை கவலையற்ற மகாராஜா சொரூபத்தில் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். பாருங்கள், பக்தி மார்க்கத்திலும் உங்களுடைய படங்களை உருவாக்கும்போது இரட்டை கிரீடத்தைக் காட்டுகிறார்கள். ஒன்று ஒளிக் கிரீடம் - அது கவலை யற்ற ஆத்மாவின் அடையாளம்; நெற்றியில் ஒளி பிரகாசிக்கிறது. மற்றொறு கிரீடம் – விகாரங் களின் மீது வெற்றி பெற்றதற்கான கிரீடம். எனவே, பாப்தாதா கவலையை எடுத்துக்கொண்டு பெருமிதத்தைக் கொடுத்துவிட்டபோது, நீங்கள் என்னவாகிவிட்டீர்கள்? கவலையற்ற மகாராஜாக் கள். இராஜாவாக ஆகிவிட்டீர்கள் என்றால் சிம்மாசனமும் வேண்டும் அல்லவா! எனவே, பாப்தாதா உங்களை மூன்று சிம்மாசனங்களின் எஜமானர்களாக ஆக்கிவிட்டார்கள். அந்த மூன்று சிம்மாசனங்கள் எவை என்று தெரியுமா? ஒன்று புருவமத்தி (பிருக்குட்டி) என்ற சிம்மாசனம்-இது அனைவருக்கும் இருக்கவே செய்கிறது. இரண்டாவது பாப்தாதாவின் உள்ளம் என்ற சிம்மாசனம் மற்றும் மூன்றாவது உலக சிம்மாசனம், இராஜ்ய சிம்மாசனம். எனவே, இந்த மூன்று சிம்மாசனங்களும் உங்களுக்குக் கிடைத்திருக்கின்றன அல்லவா! எல்லாவற்றிலும் உயர்ந்தது பாப்தாதாவின் உள்ளம் என்ற சிம்மாசனமாகும். எனவே, சிம்மாசனத்தில் இருக்கிறீர் களா? என்பதை சோதித்துப் பாருங்கள். ஏனென்றால் பாப்தாதாவின் உள்ளம் என்ற சிம்மாசனத் தில் யார் அமர்கிறார்கள்? யார் எப்போதும் சுயம் பாப்தாதாவை தன்னுடைய உள்ளம் என்ற சிம்மாசனத்தில் அமர வைத்திருக்கிறார்களோ, யார் எப்போதும் உயர்ந்த ஸ்திதியில் (மனோ நிலையில்) மாஸ்டர் சர்வசக்திவானாக இருக்கிறார்களோ, அவர்களே இதய சிம்மாசனதாரி. எனவே, சதா சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறீர்களா? அல்லது சில நேரங்களில் மண்ணிலும் இறங்கிவிடுகிறீர்களா? என்று சோதித்துப் பாருங்கள். இந்த தேக உணர்வே மண் ஆகும். நீண்ட காலமாக மண்ணிலேயே இருந்திருக்கிறீர்கள்; எனவே, சில நேரங்களில் மண்ணிற்கு சென்று விடுவதில்லை தானே?

பாப்தாதா அனைத்து குழந்தைகளுக்கும் காலத்தின் சமிக்ஞையை வழங்கிக் கொண்டிருக் கின்றார்கள். திடீரென்று என்ற பாடத்தை உறுதியாக்கிக் (பக்கா) கொண்டிருக்கின்றார்கள். இதற்காக சங்கமயுகத்தின் இந்த நேரத்திற்கு மிகவும் அதிகமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனென்றால், இந்த ஒரு பிறவியில் பல பிறவிகளுக்கான பிராப்தியை உருவாக்க வேண்டும். எனவே, பாப்தாதா சமிக்ஞை கொடுத்திருந்தார்கள் - சங்கமயுகத்தின் நேரத்தில் இரண்டு விஷயங்களுக்கு ஒவ்வொரு நேரமும் கவனம் கொடுக்க வேண்டும். நேரம் மற்றும் சங்கல்பம் - இந்த இரண்டு விஷயங்களும் நினைவில் இருக்கும். பாப்தாதாவிடம் அனைவரும் வீணான சங்கல்பங்களை சங்கல்பத்தின் மூலம் கொடுத்து விடுவதற்கான தைரியமான சங்கல்பம் செய்திருந்தீர்கள். எனவே, அந்தத் தைரியம் எப்போதும் நிலைத்திருக்கிறதா? என்பதை சோதித்துப் பாருங்கள். ஏனென்றால், குழந்தைகளின் ஒருமுறைக்கான தைரியத்திற்கு பாபா ஆயிரம் முறை உதவியாளராக இருப்பார். இப்போது என்ன புரிந்துகொள்கிறீர்கள்? வீணான சங்கல்பங்களை முடிப்பதற்கான தைரியத்தை வைத்து, தந்தைக்கு முன் செய்த சங்கல்பம் நிலைத்திருக்கிறதா? ஏனென்றால், இந்த வீணான சங்கல்பங்களில் நேரம் அதிகமாக செலவாகிறது. மேலும், இந்த நேரத்தின் கணக்குப்படி உங்களுடைய பணி உலகின் ஆத்மாக் களுக்கு செய்தியை வழங்குவதாகும். எனவே, வீணான சங்கல்பங்களை முடிக்க வேண்டும். அப்போது தான் துக்கமான, அசாந்தியான ஆத்மாக்களுக்கு சுகம் மற்றும் சாந்தியின் அனுபவத்தை செய்விக்க முடியும். பாப்தாதாவுக்கு துக்கப்படும் குழந்தைகளைப் பார்த்து இரக்கம் ஏற்படுகிறது. உங்களுக்கும் தங்களுடைய சகோதர சகோதரிகளைப் பார்த்து இரக்கம் ஏற்படுகிறது அல்லவா!

தற்போதைய நேரத்தில் அனைவருக்கும் ஆர்வம் உள்ளது; திட்டமும் உருவாக்கியிருக்கிறீர்கள்; நடைமுறையிலும் செய்து காட்டியிருக்கிறீர்கள் என்பதை பாப்தாதா பார்த்தார்கள். அனைத்து நிகழ்ச்சிகளையும் மிகவும் நன்றாகச் செய்திருக்கிறீர்கள். அதற்காக வாழ்த்துகளையும் வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், இப்போது காலத்தின் கணக்குப்படி விரைவாக அவர்களை வாரிசுகளாக ஆக்குங்கள் - அவர்கள் ஏதாவது ஒரு விதத்தில் ஆஸ்திக்கு அதிகாரிகளாக ஆகிவிட வேண்டும். நன்றாக உள்ளது, நன்றாக உள்ளது என்று பலரும் கூறுகிறார்கள். பாப்தாதாவும் குழந்தைகளின் சேவையின் இந்த முடிவைப் பார்த்தார்கள்; தந்தை குழந்தை களைப் பார்த்து மகிழ்ச்சியும் அடைகின்றார். இதயப்பூர்வமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள் மேலும், இப்போது சமயத்தின்படி கேட்பதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். அந்தளவு வித்தியாச மும் வந்துள்ளது. நல்லதாகத் தெரிகிறது. ஆனால், நல்லவர்களாக ஆக்கி, ஏதாவது ஒரு வகையில் ஆஸ்திக்கு அதிகாரிகளாக ஆக்குங்கள். இதற்காக பாப்தாதா முன்பும் சமிக்ஞை கொடுத்திருக்கின்றார்கள் - இப்போது காலத்தின் அனுசாரம் தீவிர புருஷார்த்தி ஆக வேண்டிய அவசியம் உள்ளது. தீவிர புருஷார்த்தி ஆகுவதற்கான முக்கிய புருஷார்த்தம் ஒரு விநாடியில் புள்ளி வைப்பதாகும். விநாடியும் புள்ளியும் இரண்டும் சமமாக வேண்டும். எனவே, இப்போது பாப்தாதா குழந்தைகளின் கவலையற்ற மகாராஜாவின் சொரூபத்தைப் பார்த்துக் கொண்டிருக் கின்றார்கள். இப்போது இந்த சொரூபத்தை சதா அனுபவம் செய்யுங்கள். எது வந்தாலும், எது நடந்தாலும் எனது என்பதை உனது என்பதில் இணைத்து விடுங்கள்.

இன்று வியாழக்கிழமை (குருவார்) பல குழந்தைகள் பாப்தாதாவிடம் வந்திருக்கிறார்கள் என்பதை பாப்தாதா பார்த்தார்கள். எனவே, பாப்தாதா கூறினார்கள் - வாரத்தில் இரண்டு நாட்கள் விசேஷமானவை. ஒன்று வியாழக்கிழமை, மற்றொன்று ஞாயிற்றுக்கிழமை. வியாழக்கிழமை குருவின் நாள் ஆகும். குருவிடமிருந்து என்ன கிடைக்கிறது? வரதானம். எனவே, வியாழக் கிழமை வரதானத்திற்கான விசேஷ நாளாகும். இந்த உணர்வுடன் வியாழக்கிழமையைக் கொண்டாடுங்கள். அமிர்தவேளையிலிருந்து ஏதாவது ஒரு விசேஷ வரதானத்தை தங்கள் புத்தியில் வெளிக் கொணருங்கள் (எமர்ஜ்). வரதானங்கள் பல உள்ளன. ஆனால் ஒரு விசேஷ வரதானத்தை தங்களுக்காக புத்தியில் வைத்துக்கொண்டு, வரதான நாளில் நான் வரதான சொரூபமாக இருந்தேனா? சோதித்துப் பாருங்கள். வரதானத்தை மீண்டும் மீண்டும் கூறுவது கூடாது, ஆனால், வரதான சொரூபமாக ஆக வேண்டும். இன்று எவ்வளவு நேரம் வரதான சொரூபமாக இருந்தேன்? என்று சோதித்துக் கொண்டே இருங்கள். ஞாயிற்றுக்கிழமை உலகில் விடுமுறை நாளாகக் கருதப்படுகிறது. எனவே, ஞாயிற்றுக்கிழமையில் தங்கள் வாழ்க்கையில் எண்ணத்தளவில் கூட இருக்கும் எந்த ஒரு பலவீனத்திற்கும், கனவு அளவில் கூட இருக்கும் எந்த ஒரு பலவீனத்திற்கும் விடுமுறை கொடுக்க வேண்டும். மக்கள் இந்த இரண்டு நாட்களை யும் நல்ல முறையில் கழிப்பதைப் போல, நீங்களும் இந்த இரண்டு நாட்களில் விசேஷமாக இலட்சியம் மற்றும் இலட்சணத்தை கவனத்தில் வைத்திருங்கள். இலட்சியம் மட்டும் அல்ல; இலட்சியத்துடன் இலட்சணத்திற்கும் கவனம் (அட்டென்ஷன்) கொடுங்கள். பாப்தாதா அனைத்து குழந்தை களையும் தங்களுடன் அழைத்துச் செல்வதற்கான வாக்குறுதியை வழங்கியிருக் கின்றார்கள். இதற்காக ஒன்றாக இணைந்து செல்வதற்கான ஏற்பாடு என்ன செய்யவேண்டும்? தந்தை ஒரு விநாடியில் அசரீரியாக ஆகிவிடுவார். ஆனால், நீங்களும் பாபாவும் ஒன்றாகச் செல்வோம் என்ற வாக்குறுதி என்ன கொடுத்தீர்களோ, அதற்கான தயார் நிலை உள்ளதா? என்று சோதித்துப் பாருங்கள் ஒரு விநாடியில் புள்ளி வைத்துவிட்டு, சம்பன்னமாகவும் சம்பூர்ண மாகவும் ஆகிச் செல்ல வேண்டும். அப்படிப்பட்ட தயார் நிலை இருக்கிறதா? ஒன்றாகச் சேர்ந்து செல்ல வேண்டும் அல்லவா! செல்ல வேண்டுமா? தோள்களை அசைத்துக் காட்டுங்கள். செல்ல வேண்டும், நல்லது. உறுதியாகவா (பக்காவா)? கையில் கை கொடுப்பது என்றால் சமமானவராக ஆகுவதாகும். எனவே, நேரம் திடீரென்று வரப்போகிறது. அப்படியானால் ஒன்றாகச் செல்லும் அளவிற்கு தயாராக இருக்கிறீர்களா? என்பதை சோதனை செய்து பாருங்கள்.

தந்தைக்கு குழந்தைகளின் மீது அன்பு இருக்கிறது அல்லவா! எனவே, தந்தை ஒருவரைக்கூட தன்னுடன் செல்வதில் பின்னால் விட்டுவிட விரும்பவில்லை. கூடவே இருக்கிறோம், ஒன்றாக இருப்போம், இணைந்தே செல்வோம், ஒன்றாக இராஜ்ஜியத்தில் வந்து இராஜ குடும்பத்தில் வருவோம். ஏற்றுக்கொள்கிறீர்கள் அல்லவா? ஏற்றுக்கொள்கிறீர்களா? தயாரா? ஏற்றுக்கொள் கிறோம் என்பதில் கையை உயர்த்த வேண்டாம். தயாராக இருக்கிறோம் என்பதில் கையை உயர்த்துங்கள். நீளமாக கையை உயர்த்துங்கள். நல்லது. நாளையே விநாசம் ஏற்பட்டாலும் தயாரா? ஆனால், தங்களுடைய சேவையை முடித்துவிட்டீர்களா? சேவை இன்னும் மீதும் இருக்கிறதா அல்லது சேவை முடிந்துவிட்டதா? அனைவருக்கும் செய்தி சென்றுவிட்டதா? தங்கள் குடியிருப்பு பகுதியில் பாருங்கள் - ஒவ்வொருவரிடமும் தந்தை வந்துவிட்டார்; ஆஸ்தியைப் பெற விரும்பினால் பெற்றுக்கொள்ளுங்கள் என்ற செய்தியை வழங்கியிருக் கிறீர்களா? இப்போது திட்டம் உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். வீடு வீடாகச் செய்தி வழங்கு வதற்கான திட்டத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பாப்தாதா கேள்விப் பட்டார்கள். நல்லது. செய்தி வழங்கத்தான் வேண்டும். இல்லையென்றால் புகார் வரும். நிகழ்ச்சியை உருவாக்கியிருந்தீர்கள் அல்லவா! எழுந்திருங்கள், தந்தையிடம் திட்டத்தைத் தெரிவித்திருக்கிறீர்கள் அல்லவா! எழுந்திருங்கள். (ஊடகப் பிரிவினர் எழுப்பப்பட்டார்கள் ) நல்லது, குறையை நிறைவு செய்துவிடுங்கள்; ஏனென்றால், நடக்கப் போவது திடீரென்றுதான் நடக்கப்போகிறது. எனவே, ஒருவருக்கொருவர் இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறையில் கொண்டு வாருங்கள். தங்களுக்குள் ஆலோசனை விரைவாகச் செய்யுங்கள். அதிக நேரம் எடுத்துக்கொண்டால் உற்சாகமும் சிறிது குறைந்துவிடுகிறது. மீதமுள்ளதில், பாப்தாதாவுக்கு விருப்பம் என்னவென்றால் வீடு வீடாகச் செய்தி வழங்கும் இந்தக் குறை நிறைவேற வேண்டும். தந்தை வந்தார், சென்றுவிட்டார், எங்களுக்குத் தெரியவே இல்லை, நாங்கள் வஞ்சிக்கப்பட்டுவிட்டோம் என்று யாரும் கூறக்கூடாது. அனைவருக்கும் உற்சாகம் இருக்கிறது அல்லவா! அனைவருக்கும் உற்சாகம் இருக்கிறதா? சேவை செய்து குறையை நிறைவு செய்ய வேண்டும். உற்சாகம் இருந்தால் பாப்தாதாவின் ஒத்துழைப்பும் இருக்கிறது. நல்லது.

பாப்தாதாவின் உள்ளத்தின் ஆசையை நீங்கள் அனைவரும் அறிந்திருக்கிறீர்கள். சமமானவர் மற்றும் சம்பூர்ண மானவர்-இந்த இரண்டு வார்த்தைகளையும் எப்போதும் சோதித்துப் பாருங்கள். அப்படியானால் பாபாவின் இந்த ஆசையை நிறைவேற்றி இருக்கிறீர்களா? ஏனென்றால், பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் தந்தையின் ஆசைகளின் நட்சத்திரம் என்று கருதுகின்றார்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் தந்தையின் மீது அன்பு இருக்கிறது என்பதை பாப்தாதாவும் அறிவார்கள். இவர்கள் அனைவரையும் மதுபனுக்கு அழைத்து வருவது எது? அன்பின் ரயிலில் அவர்கள் வருகிறார்கள். அன்பின் விமானத்தில் வருகிறார்கள். எனவே, தந்தையும் குழந்தைகளின் அன்பு என்ற பாடத்தில் குழந்தைகளால் மகிழ்ச்சியாக இருக்கின்றார். ஆனால், தந்தை விரும்பும் அந்த இரண்டு வார்த்தைகளான சமமானவர் மற்றும் சம்பூர்ண மானவர் என்பதையும் நிறைவேற்ற வேண்டும். எனவே, இன்று பாப்தாதா நான்கு திசைகளிலும் உள்ள குழந்தைகளை உள்ளப்பூர்வமான அன்புடன் பார்த்து, ஒவ்வொரு குழந்தைக்கும் உள்ளத்தின் அன்பான வாழ்த்துகளை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். நல்லது.

ஆசிரியர்கள் பலர் வந்திருக்கின்றார்கள்: ஆசிரியர்களை பாப்தாதா எப்போதும் நினைவு செய் கின்றார்கள், அன்பு காட்டுகின்றார்கள். ஏனென்றால், ஒவ்வொரு சகோதர சகோதரியையும் முன்னேற்றுவதற்காக ஆசிரியர்கள் நிமித்தமாகிறார்கள். ஆசிரியர்களை பாப்தாதா குருபாயி (தனது அரியாசனத்திற்குரியவர்கள்) என்று கூறுகின்றார்கள். குருபாயி என்பதன் பொருள் சமமானவர் என்பதாகும். ஏனென்றால், எவ்வாறு தந்தையின் கடமை எப்போதும் சேவையில் பிஸியாக இருப்பதாக இருக்கிறதோ, அதுபோல தகுதியான ஆசிரியர்கள் தந்தையைப் போன்று எப்போதும் சேவாதாரிகளாகவும், எப்போதும் வெற்றியின் சொரூபமாகவும், பிறரையும் வெற்றி யின் சொரூபமாக ஆக்குபவர்களாகவும் இருக்கிறார்கள். ஆசிரியர்கள் மீது பாப்தாதாவுக்கு எப்போதும் உள்ளத்தில் அன்பு இருக்கிறது. ஏன்? ஆசிரியர் என்றால் சதா சேவாதாரி, சதா தந்தைக்கு சமமாக ஆக்குபவர் மற்றும் புதியவர்களுக்கு தந்தையின் அறிமுகத்தைக் கொடுத்து, அனுபவியாக்கி, பாபாவின் ஆஸ்திக்கு அதிகாரிகளாக ஆக்குபவர். எனவே, பாப்தாதா ஆசிரியர்கள் மீது மகிழ்ச்சி அடைகின்றார்கள். உள்தத்தின் அன்பையும், தந்தையின் அன்பையும் மாணவர்களுக்குள்ளும் நிரப்பி, அவர்களையும் தந்தையின் முழுமையான ஆஸ்திக்கு அதிகாரிகளாக ஆக்குபவர்கள் ஆசிரியர்களே. இந்த ஒவ்வொரு ஆசிரியரும் தந்தையின் ஆசைகள் மற்றும் தந்தை விரும்புவதை வெளிப்படுத்தி, நடைமுறையில் செய்து காட்டு பவர்கள். என்று தந்தைக்கு ஒவ்வொரு ஆசிரியரிடமும் நம்பிக்கை இருக்கிறது. எனவே, ஒவ்வொரு ஆசிரியருக்கும் பாப்தாதா பலகோடி மடங்கு வாழ்த்துகளை வழங்கிக் கொண்டி ருக்கிறார். வாழ்த்துகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். நல்லது.

இரட்டை வெளிநாட்டு சகோதர சகோதரிகளிடம்: இரட்டை வெளிநாட்டவர்களையும் பாப்தாதா பார்த்தார்கள். சேவையில் பாரதத்தின் ஆத்மாக்களை விட நீங்கள் குறைந்தவர்கள் அல்ல. பாப்தாதா மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள் - ஒவ்வொருவரும் அவரவர் இடத்தில் சேவையின் வளர்ச்சியையும் செய்து கொண்டிருக்கிறீர்கள் மற்றும் தங்களையும் நல்ல ஊக்கம் உற்சாகத் திலும் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். எதைச் செய்தாலும் அதை ஊக்கம் உற்சாகத்துடன் செய்து முடிக்கும் இந்த சம்ஸ்காரம் இரட்டை வெளிநாட்டவர்களிடம் உள்ளது மற்றும் புருஷார்த்தத்தின் மீதும் அட்டென்ஷன் இருக்கிறது. எனவே, அனைவரும் கையை உயர்த்துங்கள்-அனைவரும் தீவிர புருஷார்த்திகளாக இருக்கிறீர்களா? தீவிர புருஷார்த்திகளா? நல்லது. அனைவரின் சார்பிலும் மிக மிக வாழ்த்துகள். ஏன்? தீவிர புருஷார்த்தி என்றால் பாப்தாதாவின் ஆசைகளை நடைமுறையில் முழுமையாக நிறைவேற்றுபவர். எனவே, பாப்தாதா தீவிர புருஷார்த்தத்திற்கான வாழ்த்துகளை வழங்குகின்றார்கள். தீவிர புருஷார்த்தி களாக இருந்து, எப்போதும் தீவிர புருஷார்த்திகளாக ஆகி, மற்றவர்களையும் தீவிர புருஷார்த்தி களாக ஆக்குவீர்கள். எனவே, முழு வெளிநாடும் தீவிர புருஷார்த்திகளின் பட்டியலில் வர வேண்டும். அப்படிப்பட்ட ரெக்கார்டு ஏற்கனவே சிறிது உள்ளது; இன்னும் கொஞ்சம் வெளிப் படுத்த வேண்டும். ஆனால், பாப்தாதா புருஷார்த்தத்திற்கான வாழ்த்துகளை வழங்குகின்றார்கள். முரளியின் மீதும் கவனம் உள்ளது. முரளியின் மீதான இந்த அன்பு பாப்தாதாவுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மதுபன் மீதும் அன்பு, முரளி மீதும் அன்பு, பரிவாரத்தின் மீதும் அன்பு, எனது பாபா மீதும் அன்பு. இப்போது சூட்சும புருஷார்த்தத்தின் மீதும் கவனம் நன்றாக உள்ளது மற்றும் ஜனக் குழந்தைக்கும் மீதும் அதிகமான கவனம் இருக்கிறது என்பதை பாப்தாதா பார்த்தார்கள். இங்கே இருந்தாலும் ஒவ்வொரு வகுப்பும் முதலில் வெளிநாட்டை சென்றடைகிறது. எனவே, நல்ல பாலனையும் கிடைத்து வருகிறது. இதுவும் உங்களுடைய அதிர்ஷ்டம். நீங்களோ மிகவும் அதிர்ஷ்டசாலிகளாகவும், மிகவும் இனிமையானவர்களாவும் இரண்டுமாக உள்ளீர்கள். நல்லது.

முதன்முறையாக வந்தவர்களிடம்: இவர்கள் அனேக பேர் வந்திருக்கிறார்கள். கையை அசைத்துக் காட்டுங்கள். அனைவரும் தங்களுடைய மதுபன் வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள். அதற்காக பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும் வாழ்த்துகளை வழங்குகின்றார்கள். ஏனென்றால், கடைசி நேரத்திற்கு முன்பாக வந்து சேர்ந்துவிட்டீர்கள். இறுதியானாலும் முதலாவதாக (லாஸ்ட் சோ ஃபாஸ்ட்) செல்லும் வாய்ப்பு உள்ளது. பாப்தாதா குழந்தைகளைப் பார்த்து மகிழ்ச்சியடைகின்றார்கள். வந்துடைந்துள்ளீர்கள், நல்வரவு. மேலும் முன்னேறு வதற்காக இப்போது தீவிர புருஷார்த்தம் செய்து, முன்னைவிடவும் முன்னே செல்லும் திடமான சங்கல்பத்தை செய்யுங்கள். உறுதித்தன்மையே வெற்றியின் சாவி. எனவே இன்று வந்திருக்கும் குழந்தைகளுக்கு பாப்தாதா விசேஷமாக உறுதித்தன்மை என்ற சாவியைப் பரிசாக வழங்கு கிறார். உறுதித்தன்மையை ஒருபோதும் இலேசாக (வலுவற்றதாக) ஆக்கிவிடாதீர்கள். உறுதித் தன்மை எப்போதும் உங்களை சுலபமாக முன்னேற்றிக் கொண்டே இருக்கும். எனவே, பாப்தாதா மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள். நல்வரவு. தங்களுடைய ஆஸ்தியைப் பெறுவதற்காக வந்திருக் கிறீர்கள்-இதற்காக மிக மிக வாழ்த்துகள். நல்லது.

நாலாபுறங்களிலும் உள்ள அனைத்து பிராமணர்களுக்கும் பாப்தாதா உள்ளத்தின் அன்பையும், சதா முன்னேறிச் செல்வதற்கான உயர்ந்த சங்கல்பத்தையும் வழங்குகின்றார்கள். தந்தை ஒவ்வொரு குழந்தையையும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்; பார்த்துப் பார்த்து உள்ளத்தில் நிறைத்துக் கொண்டிருக்கின்றார். அருகில் இருப்பவர்கள் பாப்தாதாவை முன்னால் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அனைவரும் சாதனத்தின் மூலம் முன்னால் பார்த்துக் கொண்டி ருக்கிறீர்கள்.பாப்தாதாவும் நீங்கள் எங்கு அமர்ந்திருந்தாலும், நேரில் அமர்ந்திருப்பதைப் போலவே உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொருவருக்கும் உள்ளத்தின் அன்பை வழங்குகின்றார்கள். முன்னேறிச் செல்லுங்கள், தீவிர புருஷார்த்தம் செய்து முன்பை விடவும் முன்னேறிச் செல்லுங்கள். நல்லது. முன்னால் அமர்ந்திருப்பவர்களுக்கும் பாப்தாதா வின் அன்பு நினைவுகளும், எப்போதும் முன்னேறிச் செல்வதற்கான வாழ்த்துகள், வாழ்த்துகள், வாழ்த்துகள். நல்லது.

ஆசீர்வாதம்:
ஒவ்வொரு படிப்பினையையும் சொரூபத்தில் கொண்டு வந்து நிரூபணம் அளிக்கும் நல்ல குழந்தை மற்றும் சாட்சாத்கார மூர்த்தி ஆகுக.

எந்த குழந்தைகள் படிப்பினைகளை வெறும் கல்வியின் முறையில் புத்தியில் வைத்திருப்ப தில்லை, ஆனால் அவற்றை சொரூபத்தில் கொண்டு வருகிறார்களோ அவர்கள் ஞான சொரூபம், அன்பு சொரூபம், ஆனந்த சொரூபம் என்ற நிலையில் நிலைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு பாயிண்ட்டையும் (கருத்தையும்) சொரூபத்தில் கொண்டு வருபவர்களே பாயிண்ட் சொரூபத்தில் நிலைத்திருக்க முடியும். பாய்ண்டை மனனம் செய்வது அல்லது வர்ணனை செய்வது சுலபம். ஆனால் சொரூபமாகி, மற்ற ஆத்மாக்களுக்கும் அந்த சொரூபத்தின் அனுபவத்தை ஏற்படுத்த வேண்டும் -இதுவே நிரூபணம் அளிப்பதாகும்; அதாவது நல்ல குழந்தை மற்றும் சாக்ஷாத்கார மூர்த்தி ஆகுவதாகும்.

சுலோகன்:
மன ஒருமுகப்பாட்டின் சக்தியை அதிகரியுங்கள், அப்போது மனம்-புத்தியின் அலைச்சல் (அங்கு இங்கு அலைவது) நின்றுவிடும்.


அவ்யக்த இஷாரே: இப்பொழுது தனது வள்ளல் சொரூபத்தை வெளிப்படுத்துங்கள்

எந்த ஒரு பலவீனமான ஆத்மா உங்கள் முன் வந்தாலும், அந்த பலவீனமான ஆத்மாவிற்கு சக்தியைக் கொடுங்கள். நீங்கள் பெற்றிருக்கும் சர்வசக்திகளின் ஆஸ்தியை அவருக்குக் கொடுங்கள். அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தையின் பொக்கிஷங்களைக் கொடுக்கும் வள்ளல் ஆகுங்கள். தங்களுடைய சக்திகளின் மூலம் தாகத்துடனும் துடித்துக் கொண்டும் இருக்கும் ஆத்மாக்களுக்கு உயிர் தானம் கொடுங்கள். வரங்கள் வழங்கும் வள்ளல் ஆகி, நீங்கள் பெற்றிருக்கும் வரதானங்களின் மூலம் அவர்களையும் தந்தையின் நெருங்கிய சம்பந்தத்தில் கொண்டு வாருங்கள். இங்கேயுள்ள வள்ளல் சொரூபத்தின் சம்ஸ்காரங்களின் மூலம் எதிர் காலத்தில் 21 பிறவிகளுக்கு இராஜ்ய பதவி கிடைக்கும்.