27-11-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! தந்தை கற்றுத்
தரும் படிப்பை நல்ல விதமாக படித்தீர்கள் என்றால் அது 21
பிறவிகளுக்கு வருமானத்திற்கான வழியாகி விடும், எப்போதும் சுகம்
மிக்கவராக ஆகி விடுவீர்கள்.
கேள்வி:
குழந்தைகளாகிய உங்களின்
அதீந்திரிய சுகத்தின் புகழ் பாடல் ஏன் உள்ளது?
பதில்:
ஏனென்றால் குழந்தைகளாகிய
நீங்கள்தான் இந்த சமயத்தில் தந்தையை அறிகிறீர்கள், நீங்கள் தான்
தந்தையின் மூலம் சிருஷ்டியின் முதல் இடை கடைசியை
அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் இப்போது சங்கமயுகத்தில்
எல்லைக்கப்பாற்பட்ட நிலையில் உள்ளீர்கள். இப்போது நாம் இந்த
உப்பு நீர் கால்வாயிலிருந்து இனிமையான பாற்கடலுக்கு சென்று
கொண்டிருக்கிறோம் என அறிந்திருக்கிறீர்கள். நமக்கு சுயம் பகவான்
கல்வி கற்பித்துக் கொண்டிருக்கிறார் என்ற இதுபோன்ற குஷி
பிராமணர்களுக்குத்தான் இருக்கிறது, எனவே உங்களுடைய அதீந்திரிய
சுகம்தான் பாடப் பட்டுள்ளது.
ஓம் சாந்தி.
ஆன்மீக எல்லைக்கப்பாற்பட்ட தந்தை, ஆன்மீக எல்லைக்கப்பாற்பட்ட
குழந்தை களுக்குப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார் - அதாவது
தனது வழியைக் கொடுத்துக் கொண்டி ருக்கிறார். நாம் ஜீவாத்மாக்கள்
என புரிந்து கொண்டிருக்கிறீர்கள். ஆயினும் தன்னை ஆத்மா என
நிச்சயப்படுத்த வேண்டும் அல்லவா. நாம் புதிய பள்ளியில் ஏதும்
படிக்கவில்லை. ஒவ்வொரு 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு மீண்டும்
கல்வி கற்கின்றோம். முன்னர் எப்போதாவது படிப்பதற் காக
வந்திருக்கிறீர்களா? என தந்தை கேட்கிறார் அல்லவா. நாங்கள்
ஒவ்வொரு 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகும் புருஷோத்தம
சங்கமயுகத்தில் பாபாவிடம் வருகிறோம் என அனை வரும் சொல்கின்றனர்.
இது நினைவிருக்கும் அல்லவா அல்லது மறந்து விடுகிறீர்களா? மாணவர்
களுக்கு பள்ளிக்கூடம் கண்டிப்பாக நினைவுக்கு வரும் அல்லவா.
இலட்சியம் குறிக்கோள் ஒன்று தான் ஆகும். குழந்தைகளாக ஆகும்
யாராயினும், அது இரண்டு நாள் குழந்தையானாலும், பழைய குழந்தை
ஆனாலும் இலட்சியம் குறிக்கோள் ஒன்றே யாகும். யாருக்கும் நஷ்டம்
ஏற்பட முடியாது. படிப்பில் வருமானம் உள்ளது. அந்த கிரந்தத்தை
அமர்ந்து படித்துச் சொன்னாலும் வருமானம் கிடைக்கிறது. உடன்
சரீர நிர்வாகத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு விடுகிறது.
சாதுவாக ஆகி, அமர்ந்து சாஸ்திரம் சொன்னால், வருமானம் ஏற்பட்டு
விடுகிறது. இப்போது இவை யனைத்தும் வருமானத்திற்கான வழியாகும்.
ஒவ்வொரு விஷயத்திலும் வருமானம் தேவைப் படுகிறது அல்லவா. பணம்
இருக்கிறது என்றால், பிறகு எங்கு வேண்டுமானாலும் சுற்றி விட்டு
வாருங்கள். குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள் - பாபா நமக்கு
நல்ல கல்வியை கற்பிக்கிறார், அதன் மூலம் 21 பிறவிகளின் வருமானம்
கிடைக்கிறது. இந்த வருமானம் நாம் எப்போதும் சுகம் மிக்கவர்களாக
ஆகி விடும் அளவு உயர்ந்ததாகும். ஒருபோதும் நோய் ஏற்படாது,
எப்போதும் அமரர் களாக இருப்போம். இதை நிச்சயப்படுத்த வேண்டும்.
இப்படி இப்படி நிச்சயம் வைக்கும்போது உங்களுக்கு மகிழ்ச்சி (உற்சாகம்)
உண்டாகும். இல்லாவிட்டால் ஏதாவது ஒரு விஷயத்தில் ஏமாற்றம்
ஏற்பட்டபடி இருக்கும். உள்ளுக்குள் சிந்தித்தபடி இருக்க
வேண்டும் - நாம் எல்லைக் கப்பாற்பட்ட தந்தையிடம் படித்துக்
கொண்டிருக்கிறோம். பகவானுடைய மஹா வாக்கியம் - இது கீதை ஆகும்.
கீதையின் யுகமும் வருகிறது அல்லவா. இது ஐந்தாவது யுகம் என்பதை
மட்டும் மறந்து விட்டனர். இந்த சங்கமயுகம் மிகவும் சிறியதாகும்.
உண்மையில் கால் பாகம் என்றும் சொல்ல முடியாது. சதவிகிதம்
கணக்கிட முடியும். அதனையும் போகப் போக தந்தை தெரியப்
படுத்துவார். சிலவற்றை தந்தை சொல்வதும் கூட (நாடகத்தில்)
பதிவாகி உள்ளது அல்லவா. ஆத்மாக்களாகிய உங்கள் அனைவரின்
நடிப்பும் பதிவாகியுள்ளது, அது மீண்டும் மீண்டும் நடக்கும்.
நீங்கள் கற்பதும் கூட மீண்டும் நடப்பதுதான் அல்லவா. மீண்டும்
நடப்பதின் ரகசியமும் கூட குழந்தைகளாகிய உங்களுக்குத்
தெரிந்துள்ளது. ஒவ்வொரு காலடி யிலும் நடிப்பு மாறியபடி சென்று
கொண்டிருக்கிறது. ஒரு வினாடி போல் மற்றொரு வினாடி இருக்காது.
பேன் போல டிக் டிக் என ஊர்ந்துக் கொண்டே இருக்கிறது. டிக்
என்றதும் ஒரு வினாடி முடிந்து விட்டது. இப்போது நீங்கள்
எல்லைக்கப்பாற்பட்ட நிலையில் இருக்கிறீர்கள். மற்ற எந்த
மனிதரும் எல்லைக்கப் பாற்பட்ட நிலையில் இருக்கவில்லை.
யாருக்கும் எல்லைக்கப்பற்பட்டதின் அதாவது முதல், இடை, கடைசியின்
ஞானம் இல்லை. இப்போது உங்களுக்கு எதிர்காலத்தைப் பற்றியும்
தெரியும். நாம் புதிய உலகத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம்.
இது சங்கமயுகம், இதனைக் கடந்து செல்ல வேண்டும். உப்பு நீர்
உள்ள கால்வாய் அல்லவா. அது இனிமையிலும் இனிமையான அமிர்தத்தின்
கால்வாய். இது விஷக் கால்வாய். இப்போது நீங்கள் விஷக்
கடலிலிருந்து பாற்கடலுக்குச் சென்று கொண்டிருக்கிறீர்கள். இது
எல்லைக்கப்பாற்பட்ட விஷயம். உலகில் இந்த விஷயங்கள் குறித்து
யாருக்கும் எதுவும் தெரியாது. புதிய விஷயம் அல்லவா. பகவான் என
யாரை சொல்லப்படுகிறது, அவர் என்ன நடிப்பு நடித்துக்
கொண்டிருக்கிறார் என்பதும் கூட நீங்கள் அறிவீர்கள். வாருங்கள்
பரமபிதா பரமாத்மாவின் வாழ்க்கை வரலாறு பற்றி உங்களுக்குப்
புரிய வைக்கிறோம் என தலைப்பில் கூட நீங்கள் சொல்கிறீர்கள்.
பொதுவாக குழந்தைகள் தந்தையின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்கின்றனர்,
இவரோ தந்தையருக்கெல்லாம் தந்தை அல்லவா. உங்களுக் குள்ளும்
வரிசைக்கிரமமான முயற்சியின் அடிப்படையில் தெரிந்திருக்கிறீர்கள்.
இப்போது நீங்கள் சரியான விதத்தில் தந்தையின் அறிமுகத்தைக்
கொடுக்க வேண்டும். உங்களுக்கோ தந்தை (அறிமுகத்தை)
கொடுத்திருக்கிறார், அதனால் நீங்கள் மற்றவர்களுக்குப் புரிய
வைக்கிறீர்கள், மற்ற யாருக்கும் எல்லைக்கப்பாற்பட்ட தந்தையைப்
பற்றி தெரிந்திருக்க முடியாது. நீங்களும் கூட சங்கம
யுகத்தில்தான் தெரிந்து கொள்கிறீர்கள். மனிதர்களைப் பொறுத்தவரை
தேவதைகளயினும் சரி, சூத்திரராயினும் சரி, புண்ணிய ஆத்மாவாயினும்,
பாவாத்மாவாயினும் சரி, யாருமே தந்தையை அறிவதில்லை,
பிராமணர்களாகிய நீங்கள் மட்டுமே சங்கம யுகத்தில் இருக்கிறீர்கள்,
நீங்கள்தான் அறிந்து கொண்டிருக்கிறீர்கள். ஆக குழந்தைகளாகிய
உங்களுக்கு எவ்வளவு குஷி இருக்க வேண்டும். ஆகவே தான் புகழ்ப்
பாடலும் உள்ளது - அதீந்திரிய சுகத்தைப் பற்றி கோப கோபி யரிடம்
கேளுங்கள். . . .
பாபா தந்தையாகவும் இருக்கிறார், ஆசிரியர், சத்குருவாகவும்
இருக்கிறார், பரம (சுப்ரீம்) என்ற வார்த்தையும் கண்டிப்பாகப்
போட வேண்டும். அவ்வப்போது குழந்தைகள் மறந்து விடுகின்றனர்.
இந்த அனைத்து விசயங்களும் குழந்தைகளின் புத்தியில் இருக்க
வேண்டும். சிவபாபாவின் மகிமைகளில் இந்த வார்த்தைகளை
கண்டிப்பாகப் போட வேண்டும். உங்களைத் தவிர வேறு யாருக்கும்
தெரியாது. உங்களால் புரிய வைக்க முடிந்தது என்றால் உங்களுக்கு
வெற்றி கிடைத்தாற்போலதானே! எல்லைக்கப்பாற்பட்ட தந்தை அனைவரின்
ஆசிரியர், அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் என நீங்கள்
அறிவீர்கள். எல்லைக்கப்பாற்பட்ட சுகம், எல்லைக்கப் பாற்பட்ட
ஞானம் கொடுப்பவர் ஆவார். என்றாலும் கூட இப்படிப்பட்ட தந்தையை
மறந்து விடுகிறீர் கள். மாயை எவ்வளவு சக்தி வாய்ந்தது.
ஈஸ்வரனையும் சக்தி வாய்ந்தவர் என கூறுகின்றனர், ஆயினும் மாயை
ஒன்றும் குறைந்ததல்ல. குழந்தைகளாகிய நீங்கள் துல்லியமாக
அறிவீர்கள் - இதன் (மாயை) பெயர் இராவணன் என வைக்கப்பட்டுள்ளது.
இராம இராஜ்யம் மற்றும் இராவண இராஜ்யம். இது பற்றியும் கூட
துல்லியமாக புரிய வைக்க வேண்டும். இராம இராஜ்யம் இருக்கிறது
என்றால் இராவண இராஜ்யமும் உண்டு. எப்போதும் ராம இராஜ்யம்
இருக்க முடியாது. ராம இராஜ்யம், அதாவது ஸ்ரீகிருஷ்ணரின்
இராஜ்யத்தை யார் ஸ்தாபனை செய்வது என எல்லைக் கப்பாற்பட்ட தந்தை
அமர்ந்து புரிய வைக்கிறார். நீங்கள் பாரத கண்டத்தின் மகிமையை
அதிகமாக செய்ய வேண்டும். பாரதம் உண்மையான கண்டமாக இருந்த போது
எவ்வளவு மகிமை இருந்தது. அதை உருவாக்குபவர் தந்தைதான் ஆவார்.
தந்தையிடம் உங்களுக்கு எவ்வளவு அன்பு உள்ளது. இலட்சியம்
குறிக்கோள் புத்தியில் உள்ளது. மாணவர்களாகிய நமக்கு படிப்பின்
போதை இருக்க வேண்டும் என நீங்கள் அறிவீர்கள். நடத்தை குறித்த
சிந்தனையும் இருக்க வேண்டும். இறைக் கல்வி எனும்போது ஒரு நாளும்
தவற விடக் கூடாது மற்றும் ஆசிரியர் வந்த பிறகு தாமதமாகவும் வரக்
கூடாது என பகுத்தறிவும் சொல்கிறது. ஆசிரியர் வந்த பிறகு
வருவதும் ஒரு அவமரியாதை ஆகும். பள்ளியில் கூட மாணவர்கள்
தாமதமாக வந்தார்கள் என்றால் அவர்களை ஆசிரியர் வெளியே நிற்க
வைக்கிறார். பாபா (பிரம்மா) தனது சிறு வயதின் அனுபவத்தையும்
கூறுகிறார். எங்கள் ஆசிரியர் மிகவும் கண்டிப்பானவர். உள்ளே வரவே
அனுமதிப்பதில்லை. இங்கேயோ பலர் மிகவும் தாமதமாக வருகின்றனர்.
சேவை செய்யக் கூடிய நல்ல குழந்தை கண்டிப்பாக தந்தைக்கு
பிடித்தமானவராக இருப்பார் அல்லவா. இப்போது நீங்கள் புரிந்து
கொள் கிறீர்கள் - ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இருந்தது அல்லவா.
இந்த தர்மம் எப்போது ஸ்தாபனை ஆகியது என யாருடைய புத்தியிலும்
இல்லை. உங்களுடைய புத்தியில் கூட அவ்வப்போது நழுவி விடுகிறது.
நீங்கள் இப்போது தேவி தேவதை ஆவதற்காக முயற்சி செய்து
கொண்டிருக்கிறீர்கள். யார் படிப்பித்துக் கொண்டிருப்பது?
பரமபிதா பரமாத்மாவே ஆவார். நம்முடைய இந்த குலம் பிராமண குலம்
என நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இராஜ்யம் இருப்ப தில்லை.
இது அனைத்திலும் உத்தமமான பிராமண குலமாகும். தந்தையும் கூட
அனைவரிலும் உத்தம மானவரல்லவா. உயர்ந்தவரிலும் உயர்ந்தவர்
என்றால் அவரின் ஆஸ்தியும் கூட உயர்வானதாக இருக்கும். அவரையே
ஸ்ரீ ஸ்ரீ என கூறுகின்றனர். உங்களையும் உயர்வானவராக
ஆக்குகின்றார். நம்மை உயர்வாக ஆக்குபவர் யார் என குழந்தைகளாகிய
நீங்கள்தான் அறிவீர்கள். மற்றவர்கள் எதுவும் புரிந்து கொள்வ
தில்லை. நீங்கள் சொல்வீர்கள் - நம்முடைய தந்தை, தந்தையாகவும்
இருக்கிறார், ஆசிரியர், சத்குருவாகவும் இருக்கிறார், கல்வி
கற்பித்துக் கொண்டி ருக்கிறார். நாம் ஆத்மாக்கள்.
ஆத்மாக்களாகிய நமக்கு தந்தை நினைவூட்டியிருக் கிறார்-நீங்கள்
என் குழந்தைகள். சகோதரத்துவம் அல்லவா. தந்தையை நினைக்கவும்
செய்கின்றனர். அவர் நிராகார தந்தை எனும்போது கண்டிப்பாக
ஆத்மாவையும் நிராகாரி என்றே சொல்வோம் என புரிந்து கொள்கின்றனர்.
ஆத்மாதான் ஒரு சரீரத்தை விடுத்து மற்றொன்றை எடுக்கிறது. பிறகு
நடிப்பை நடிக்கிறது. மனிதர்கள் பிறகு தன்னை ஆத்மா என்பதற்குப்
பதிலாக சரீரம் என புரிந்து கொள்கின்றனர். நான் ஆத்மா.... இதை
மறந்து விடு கின்றனர். நான் மறப்பதில்லை. ஆத்மாக் களாகிய
நீங்கள் அனைவரும் சாலிக்கிராமங்கள். நான் பரமபிதா அதாவது பரம
ஆத்மா. அதற்கும் மேலே வேறு எந்த பெயரும் கிடையாது. அந்த பரம
ஆத்மாவின் பெயர் சிவன் என்ப தாகும். நீங்களும் இது போல
ஆத்மாக்களே ஆவீர்கள், ஆனால் நீங்கள் அனைவரும் சாலிக்கிராமங்கள்.
சிவன் கோவிலுக்கும் செல்கிறீர்கள், அங்கேயும் கூட
சாலிக்கிராமங்கள் நிறைய வைக்கின்றனர். சிவனுக்கு பூஜை செய்யும்
போது சாலிக்கிராமங்களுக்கும் கூட செய்கின்றனர் அல்லவா. அப்போது,
உங்களின் ஆத்மா மற்றும் சரீரம் என இரண்டுக்கும் பூஜை நடக்கிறது
என பாபா புரிய வைத்துள்ளார். என்னுடைய ஆத்மாவிற்கு மட்டும்தான்
பூஜை நடக்கிறது. சரீரம் கிடையாது. நீங்கள் எவ்வளவு
உயர்வானவர்களாக ஆகிறீர்கள். பாபாவுக்கு குஷி ஏற்படுகிறது அல்லவா.
தந்தை ஏழை ஆகிறார், குழந்தைகள் படித்து விட்டு எவ்வளவு ஏற்றம்
அடைகின்றனர். என்னவாக இருந்து என்னவாக ஆகி விடுகின்றனர்.
நீங்கள் எவ்வளவு உயர்வானவர்களாக இருந்தீர்கள் என தந்தையும்
அறிவார். இப்போது எவ்வளவு அனாதைகளாகி விட்டீர்கள், தந்தையையே
தெரிந்து கொள்ளவில்லை. இப்போது நீங்கள் தந்தையுடையவர்களாக
ஆகியுள்ளீர்கள் எனும்போது முழு உலகின் எஜமான் ஆகி விடுகிறீர்கள்.
தந்தை சொல்கிறார் - என்னை சொர்க்கத்தின் இறைத் தந்தை என
சொல்கிறீர்கள். இப்போது சொர்க்கத்தின் ஸ்தாபனை நடந்து
கொண்டிருக்கிறது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அங்கே
என்னென்ன இருக்கும் என்பது உங்களைத் தவிர வேறு யார்
புத்தியிலும் இல்லை. நாம் உலகின் எஜமானாக இருந்தோம், இப்போது
ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பது உங்கள் புத்தியில் உள்ளது.
நாங்கள் எஜமானர்கள் என பிரஜைகள் கூட சொல்வார்கள் அல்லவா. இந்த
விஷயங்கள் குழந்தை களாகிய உங்கள் புத்தியில்தான் உள்ளது என்றால்
குஷி இருக்க வேண்டும் அல்லவா. இந்த விஷயங்களைக் கேட்டு பிறகு
மற்றவர்களுக்கும் சொல்ல வேண்டும். ஆகையால் சென்டர்களும்
பொருட்காட்சி சாலைகளும் திறந்தபடி இருக்கிறோம். கல்பத்திற்கு
முன்பு என்ன நடந்ததோ அதுவே நடந்தபடி இருக்கும். பொருட்காட்சி,
சென்டர்கள் முதலானவற்றிற்காக உங்களுக்கு பலரும் முன் வருவார்கள்.
பிறகு பலர் வெளிப்படுவார்கள். அனைவரின் எலும்புகளும் மென்மை
யடைந்தபடி (பிடிவாதம் தளர்ந்தபடி) இருக்கும். முழு உலகின்
ஆத்மாக்களை நீங்கள் மென்மை யாக்கியபடி செல்கிறீர்கள். உங்களின்
யோகத்தில் எவ்வளவு சக்தி அதிகமாக உள்ளது. உங்களுக் குள் நிறைய
சக்தி உள்ளது என தந்தை சொல்கிறார். யோகத்தில் இருந்தபடி உணவு
சமைத்து, சாப்பிடக் கொடுத்தீர்கள் என்றால் புத்தி இந்தப்
பக்கமாக ஈர்க்கப்படும். பக்தி மார்க்கத்தில் குருமார்கள்
சாப்பிட்ட பின் மீதம் உள்ள எஞ்சியவற்றைச் சாப்பிடுகின்றனர்.
பக்தி மார்க்கத்தின் விஸ்தாரம் நிறைய உள்ளது, அதனை வர்ணனை
செய்ய முடியாது என குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துள்ளீர்கள்.
இது விதை போன்றது, அது மரத்தைப் போன்றது. விதையைக் குறித்து
வர்ணனை செய்ய முடியும். மற்றபடி மரத்தில் இருக்கும் இலைகளை
எண்ண முடியாது, அளவற்ற இலைகள் இருக்கின்றன என பிறருக்கு
எடுத்துச் சொல்லுங்கள். விதையில் இலைகளின் அடையாளம் எதுவும்
தென்படுவதில்லை. ஆச்சரியம் அல்லவா. இதையும் கூட இயற்கை என
சொல்வோம். ஜீவ ஜந்துக்கள் (புழு பூச்சிகள்) எவ்வளவு
அதிசயிக்கத்தக்க வகையில் இருக்கின்றன. பல விதமான புழுக்கள்
உள்ளன, எப்படி உருவாகின்றன, மிக அதிசயமான நாடகமாக உள்ளது, இது
இயற்கை என்றே சொல்லப்படும். இதுவும் கூட உருவாகி
உருவாக்கப்பட்ட விளையாட்டு. சத்யுகத்தில் என்னென்ன பார்க்கப்
போகிறோம், அதுவும் புதிய வைகளாகத்தான் இருக்கும். அனைத்துமே
புதியவையாக இருக்கும். மயிலைப் பற்றி பாபா புரிய வைத்துள்ளார்,
அதனை பாரதத்தின் தேசியப் பறவை என சொல்கின்றனர், ஏனெனில் ஸ்ரீ
கிருஷ்ணரின் மகுடத்தில் மயிலிறகைக் காட்டு கின்றனர். மயில்
அழகாகவும் இருக்கும். கர்ப்பம் கூட கண்ணீரை உட்கொள்வதால் தான்
ஏற்படும், ஆகையால் மயிலை தேசியப் பறவை என சொல்கின்றனர்.
இப்படிப்பட்ட அழகான பறவைகள் வெளி நாடுகளிலும் இருக்கின்றன.
இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு முழு சிருஷ்டியின் முதல் இடை
கடைசியின் ரகசியத்தைப் புரிய வைத்திருக்கிறேன், அது வேறு
யாருக்கும் தெரியாது. நாங்கள் உங்களுக்கு பரமபிதா பரமாத்மாவின்
வரலாறு சொல்கிறோம் என சொல்லுங்கள். படைப்பவர் இருந்தால்
கண்டிப்பாக அவரின் படைப்பும் இருக்கும். அவருடைய
வரலாறு-புவியியல் எங்களுக்குத் தெரியும். உயர்ந்ததிலும்
உயர்ந்த எல்லைக்கப்பாற்பட்ட தந்தையின் நடிப்பு என்ன என்பதை நாம்
அறிவோம், உலகத்திற்குத் தெரியாது. இது மிகவும் சீச்சீ (கீழான)
உலகமாகும் இந்த சமயம் அழகிலும் ஆபத்தே உள்ளது. குழந்தைகளை
எப்படியெல்லாம் கடத்துகிறார்கள். உங்களுக்கு இந்த விகாரி உலகின்
மீது வெறுப்பு வர வேண்டும். நாம் இப்போது தந்தையை நினைவு செய்து
தனது ஆத்மாவை தூய்மையாக்க வேண்டும். நாம் சதோபிரதானமாக
இருந்தோம், சுகமிக்கவர்களாக இருந்தோம். இப்போது
தமோபிரதானமாகியுள்ளோம், துக்க மிக்கவர்களாகியுள்ளோம், மீண்டும்
சதோபிரதானமாக வேண்டும். நாம் பதீதரிலிருந்து பாவன மாக வேண்டும்
என நீங்கள் விரும்பு கிறீர்கள். பதித பாவனா என பாடவும்
செய்கின்றனர், ஆனால் (இந்த உலகின் மீது) வெறுப்பு ஏற்பட
வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள் - இது
சீச்சீ உலகமாகும். புதிய உலகில் நமக்கு சரீரமும் கூட ரோஜா மலர்
போல் கிடைக்கும். இப்போது நாம் அமரபுரிக்கு எஜமான் ஆகிக்
கொண்டிருக்கிறோம். குழந்தை களாகிய நீங்கள் எப்போதும் குஷியாக,
மலர்ந்த முகத்துடன் இருக்க வேண்டும். நீங்கள் மிகவும் இனிமையான
குழந்தைகள். தந்தை 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு வந்து
சந்திக்கிறார் எனும்போது கண்டிப்பாக குஷி இருக்கும் அல்லவா.
நான் மீண்டும் குழந்தைகளைச் சந்திக்க வந்துள்ளேன். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. நாம் இறை மாணவராக உள்ளோம், ஆகையால் படிப்பின் போதையும்
இருக்க வேண்டும், தனது நடத்தையின் மீதும் கவனம் இருக்க வேண்டும்.
ஒரு நாள் கூட படிப்பை தவற விடக் கூடாது. தாமதமாக வகுப்புக்கு
வந்து ஆசிரியரை அவமதிக்கக் கூடாது.
2. இந்த விகாரமிக்க சீச்சீ உலகத்தின் மீது வெறுப்பு கொள்ள
வேண்டும், தந்தையின் நினைவின் மூலம் தனது ஆத்மாவை தூய்மையாக
சதோபிரதானமாக ஆக்கக் கூடிய முயற்சி செய்ய வேண்டும். எப்போதும்
குஷியாக, மலர்ந்த முகத்துடன் இருக்க வேண்டும்.
வரதானம்:
நம்பிக்கை இழந்தவர்களிடமும் கூட நம்பிக்கையை கொண்டுவரக்கூடிய
உண்மையான பரோபகாரி (பிறருக்கு உதவி செய்யவராக), திருப்தியின்
மணி ஆகுக.
திரிகாலதர்சியாக (மூன்று காலத்தையும் உணர்ந்தவராக) ஆகி ஒவ்வொரு
ஆத்மாவின் பலஹீனத்தை கண்டறிந்து கொண்டு-அவர்களுடைய பலஹீனங்களை
தன்னிடம் தாரணை செய்யாமல், வர்ணனை செய்யாமல் பலஹீனம் என்ற
முட்களை-கல்யாண்காரி ஸ்வரூபத்தின் மூலமாக அழித்து விடுங்கள்,
முட்களை மலர்களாக ஆக்கி விடுங்கள். தானும் திருப்பதியின்
மணிக்கு சமமாக இருந்து - திருப்தியாக இருங்கள் மேலும் அனை
வரையும் திருப்தி படுத்துங்கள், யார் மீது அனைவரும்
நம்பிக்கையற்ற தன்மையை காட்டுகின்றார்களோ, அப்படிப்பட்ட நபர்கள்
மீது, அப்படிப்பட்ட மனோ நிலையின் மீது சதா காலத்திற்கு ஆசையின்
தீபத்தை ஏற்றுங்கள் அதாவது மனம் உடைந்து இருப்பவர்களை
சக்திசாலியாக ஆக்கி விடுங்கள். அப்படிப்பட்ட ஓர் உயர்ந்த
காரியம் நடந்து கொண்டே இருக்கும் எனில் பரோபகாரி, திருப்தியின்
மணி என்ற வரதானத்தை பெற்று விடுவீர்கள்
சுலோகன்:
பரீட்ச்சையின் போது (சோதனை வரும் போது) - கொடுத்த வாக்குறுதி
நினைவுக்கு வந்தால் பிரத்யட்சதா (பாபாவின் வெளிப்பாடு) ஏற்படும்.
அவியக்த சமிக்ஞை : அசரீரி அல்லது விதேகி நிலையின் பயிற்சியை
அதிகரியுங்கள்
முழு நாளில்-இடை இடையே ஒரு நொடி கிடைத்தாலும் கூட, மீண்டும்
மீண்டும் விதேகி ஆகுவதற்கான பயிற்சியை செய்து கொண்டே இருங்கள்.
இரண்டு-நான்கு நொடிகள் ஒதுக் கினாலும் கூட அதன் மூலம்(அந்த
பயிற்சியின் மூலம்) நிறைய உதவி கிடைக்கும். இது போன்ற பயிற்சி
இல்லாமல்-முழு நாளும் புத்தி சுற்றிக் கொண்டே இருந்தால்- விதேகி
ஆகுவதில் நேரம் ஆகும் மேலும் எப்பொழுது பயிற்சி ஏற்படுகின்றதோ
அப்பொழுதே வேண்டிய நேரத்தல் விதேகி ஆகுவீர்கள் ஏனெனில் கடைசி
நேரத்தில் அனைத்தும் திடீரென நடக்கும். எனவே-திடீரென நடக்கக்
கூடிய பேப்பரில் விதேகி தன்மையினுடைய பயிற்சி மிகவும்
அவசியமாகும்.