28-08-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! இந்த சங்கமயுகமே
ஏறும் கலைக்கான யுகம் என்ற நாடகத்தின் ஆழமான ரகசியத்தை நீங்கள்
அறிந்துள்ளீர்கள். சத்யுகத்திலிருந்து கலைகள் குறைந்துக் கொண்டே
போகின்றன.
கேள்வி:
எல்லாவற்றையும் விட உத்தமமான சேவை
எது? மேலும் அந்த சேவையை யார் செய்கிறார்கள்?
பதில்:
பாரதத்தை சொர்க்கமாக ஆக்குவது,
ஏழையை செல்வந்தராக ஆக்குவது, பதீதர்களை பாவனமாக ஆக்குவது - இது
எல்லாவற்றையும் விட உத்தமமான சேவையாகும். இப்பேர்ப்பட்ட சேவை
ஒரு தந்தையைத் தவிர வேறு யாருமே செய்ய முடியாது. தந்தை
அப்பேர்ப்பட்ட மகான் சேவை செய்துள்ளார். அதனால் தான் குழந்தைகள்
அவரை கௌரவப் படுத்துகிறார்கள். அனைத்திற்கும் முதலாக
சோமநாத்தில் கோவில் கட்டி அவருக்கு பூஜை செய்கிறார்கள்.
பாடல்:
கடைசியில் அந்த நாளும் வந்தது
இன்று .. .. ..
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் இந்த பாட்டைக்
கேட்டீர்கள். எப்படி ஆத்மா மறைமுகமாக உள்ளது மற்றும் சரீரம்
பிரத்யட்சமாக (வெளிப்படையாக) உள்ளது. ஆத்மாவை இந்த கண்களால்
பார்க்க முடியாது. மறைவாய் உள்ளது. அவசியம் இருக் கிறது. ஆனால்
இந்த உடலால் மூடப்பட்டுள்ளது. எனவே ஆத்மா மறைவாக உள்ளது என்று
கூறப்படுகிறது. நான் நிராகாரமானவன் ஆவேன். இங்கு சாகாரத்தில்
வந்து மறைவாக ஆகி உள்ளேன் என்று சுயம் ஆத்மா கூறுகிறது.
ஆத்மாக்களின் நிராகாரி உலக மாகும். அங்கோ மறைவு என்ற விஷயம்
கிடையாது. பரமபிதா பரமாத்மா கூட அங்கு இருக்கிறார். அவருக்கு
சுப்ரீம் என்று கூறப்படுகிறது. உயர்ந்ததிலும் உயர்ந்த ஆத்மா.
இந்த ஸ்தூல உலகத்திற்கு அப்பாற்பட்டு இருப்பவர் பரமபிதா
பரமாத்மா ஆவார்.எப்படி நீங்கள் மறைவாக இருக்கிறீர்கள். நான்
கூட மறைமுகமாக வர வேண்டி உள்ளது என்று தந்தை கூறுகிறார். நான்
கர்ப்ப சிறை யில் வருவது இல்லை. எனது பெயர் ஒரே ஒரு சிவன்
என்பதாகும். நான் இவருக்குள் வரு கிறேன். அதனால் என் பெயர்
ஒன்றும் மாறுவதில்லை. இவருடைய ஆத்மாவின் சரீரத்திற்கு பெயர்
மாறுகிறது. என்னை சிவன் என்றே கூறுகிறார்கள். அனைத்து
ஆத்மாக்களின் தந்தை ஆவேன். ஆத்மாக் களாகிய நீங்கள் இந்த
சரீரத்தில் மறைவாக இருக்கிறீர்கள். இந்த சரீரத்தின் மூலமாக
கர்மம் செய்கிறீர்கள். நான் கூட மறைவாக இருக்கிறேன். நான் ஆத்மா,
இந்த உடலால் மூடப்பட்டிருக்கிறேன் என்ற இந்த ஞானம் குழந்தை
களாகிய உங்களுக்கு இப்பொழுது கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆத்மா
மறைவாக உள்ளது. சரீரம் வெளிப்படை யாகத் தெரிகிறது. நான் கூட
அசரீரி ஆவேன். தந்தை மறைவாக இருப்பவர். இந்த சரீரத்தின் மூலமாக
கூறுகிறார். நீங்கள் கூட மறைவாக இருக்கிறீர்கள். சரீரம் மூலமாக
கேட்கிறீர்கள். பாபா வந்து விட்டார் என்பதை நீங்கள்
அறிந்துள்ளீர்கள். தந்தை பாரதத்தை மீண்டும் ஏழை யிலிருந்து
செல்வந்தராக ஆக்குவதற்காக வருகிறார். நமது பாரதம் ஏழையாகும்
என்று நீங்கள் கூறுவீர்கள். எல்லோரும் அறிந்துள்ளார்கள். ஆனால்
நமது பாரதம் எப்பொழுது செல்வந்தர் நாடாக இருந்தது? எப்படி
இருந்தது என்பது அவர்கள் யாருக்குமே தெரியாது. நமது பாரதமோ
மிகவும் செல்வம் நிறைந்ததாக இருந்தது என்று குழந்தைகளாகிய
உங்களுக்கு மிகுந்த போதை உள்ளது. துக்கத்தின் விஷயமே
இருக்கவில்லை. சத்யுகத்தில் வேறு எந்த தர்மமும் இருக்க வில்லை.
ஒரே ஒரு தேவி தேவதா தர்மம் இருந்தது. இது யாருக்குமே தெரியாது.
இந்த உலக சரித்திரம் பூகோளம் பற்றி யாருக்குமே தெரியாது. நமது
பாரதம் மிகவும் செல்வந்த நாடாக இருந்தது என்பதை இப்பொழுது
நீங்கள் நல்ல முறையில் புரிந்துள்ளீர்கள். இப்பொழுது மிகவும்
ஏழையாக உள்ளது. இப்பொழுது மீண்டும் தந்தை செல்வந்தராக ஆக்க
வந்துள்ளார். பாரதம் சத்யுகத்தில் மிகவுமே செழிப்பாக இருந்தது.
அப்பொழுது தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. பிறகு அந்த
இராஜ்யம் எங்கே போயிற்று என்பது யாருக்கும் தெரியாது. ரிஷி
முனிவர்கள் கூட நாங்கள் படைப்பவர் மற்றும் படைப்பை அறியாமல்
உள்ளோம் என்று கூறு கிறார்கள். சத்யுகத்தில் இந்த தேவி
தேவதைகளுக்கு படைப்பவர் மற்றும் படைப்பின் ஞானம் இருக்கவில்லை
என்று தந்தை கூறுகிறார். முதல் இடை கடையை அறியாமல் உள்ளார்கள்.
நாங்கள் படி இறங்கி பாதாளத்திற்குச் சென்று விடுவோம் என்ற ஞானம்
ஒருவேளை அவர்களுக்கு இருந்திருந்தது என்றால் அரசாட்சியின் சுகம்
கூட இல்லாமல் போய் விடும்.கவலை ஏற்பட்டு விடும்.
நாம் தமோபிரதான நிலையிலிருந்து சதோபிரதானமாக எப்படி ஆகலாம்
என்று இப்பொழுது உங்களுக்கு கவலை ஏற்பட்டுள்ளது. ஆத்மாக்களாகிய
நாம் நிராகாரி உலகத்தில் இருந்திருந் தோம். அங்கிருந்து பிறகு
எப்படி சுகதாமத்திற்கு வந்தோம் - இதுவும் ஞானம் இருக்கிறது.
நாம் இப்பொழுது ஏறும் கலையில் இருக்கிறோம். இது 84 பிறவிகளின்
படி ஆகும். இதற்கு இடையில் என்ன ஆகிறது என்பதையும் நீங்கள்
அறிந்துள்ளீர்கள். சத்யுகத்தில் எல்லோருமே வரமாட்டார்கள்.
நாடகப்படி ஒவ்வொரு நடிகரும் வரிசைக்கிரமமாக அவரவர் நேரத்தில்
வந்து பாகத்தை ஏற்று நடிப்பார்கள்.
ஏழைப்பங்காளன் என்று யாருக்கு கூறப்படுகிறது என்பதை இப்பொழுது
குழந்தை களாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். உலகத்திற்கு தெரியாது.
கடைசியில் அந்த நாளும் இன்று வந்தது.. என்ற பாடலும் கேட்டீர்கள்.
இவை எல்லாமே பக்தி ஆகும். பகவான் எப்பொழுது வந்து பக்தர்
களாகிய நம்மை இந்த பக்தி மார்க்கத்திலிருந்து விடுவித்து
சத்கதியில் அழைத்துச் செல்கிறார் என்பதையும் புரிந்துள்ளீர்கள்.
இராம இராஜ்யம், இராவண இராஜ்யம் எந்த பொருளின் பெயர் என்பது கூட
எந்த மனிதருக்கும் தெரியாது. பாபா மீண்டும் இந்த சரீரத்தில்
வந்து விட்டார் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள்
புரிந்துள்ளீர்கள். சிவஜெயந்தி கூட கொண்டாடு கிறார்கள். எனவே
சிவன் அவசியம் வருகிறார். கிருஷ்ணருடைய உடலில் வருகிறேன் என்று
கூறுவதில்லை. இல்லை. கிருஷ்ணரின் ஆத்மா 84 பிறவிகள்
எடுத்துள்ளார் என்று தந்தை கூறுகிறார். முதல் நம்பரில்
இருந்தவர் இப்பொழுது கடைசியில் இருக்கிறார். தத்-தத்வம்
நீங்களும் அதே போல. நானோ வருவதே சாதாரண உடலில். நீங்கள் எப்படி
84 பிறவிகள் அனுபவிக்கிறீர்கள் என்பதை உங்களுக்கு வந்து
கூறுகிறேன். இச்சமயத் தில் ஒருவர் கூட தங்களை தேவதா தர்மத்தினர்
என்று நினைப்பதில்லை. ஏனெனில் சத்யுகத்தை மிகவும் தூரத்திற்கு
எடுத்துச் சென்று விட்டார்கள். கல்பத்தின் ஆயுள்
இலட்சக்கணக்கான வருடங்கள் என்று எழுதி விட்டுள்ளார்கள்.
உண்மையில் நாடகத்தின் சரித்திரமோ மிகவும் சிறியதாகும். இதில்
ஒரு தர்மத்தின் சரித்திரம் 500 வருடங்கள். மற்றொரு தர்மத்தின்
சரித்திரம் 2500 வருடங்கள். உங்களுடைய சரித்திரம் 5 ஆயிரம்
வருடங்கள். தேவதா தர்மத்தினர் தான் சொர்க்கத்தில் வருவார்கள்.
மற்ற தர்மங்களோ வருவதே பின்னால் தான். தேவதா தர்மத்தினர் தான்
மற்ற தர்மங்களில் மாற்றம் அடைந்து போயிருக்கிறார்கள். நாடகப்படி
பிறகும் இவ்வாறே மாறி போய் விடுவார்கள். பிறகு அவரவர்
தர்மங்களில் திரும்பி வருவார்கள். குழந்தைகளே நீங்களோ உலகத்தின்
அதிபதியாக இருந்தீர்கள் என்று தந்தை புரிய வைக்கிறார். பாபா
சொர்க்கத்தை ஸ்தாபனை செய்பவர் ஆவார் என்றால் நாம் ஏன்
சொர்க்கத்தில் இருக்கவில்லை என்று நீங்கள் இப்பொழுது
புரிந்துள்ளீர்கள்.
தந்தையிடமிருந்து நாம் அவசியம் ஆஸ்தி
பெறுவோம். ஆக இதிலிருந்து இவர் நமது தர்மத்தினர் ஆவார் என்பது
நிரூபணமாகிறது. யார் நமது தர்மத்தினராக இல்லையோ, அவர் வரவே
மாட்டார். அந்நிய தர்மத்தில் நாம் ஏன் செல்ல வேண்டும் என்பார்.
சத்யுகமான புது உலகத்தில் தேவதை களுக்கு நிறைய சுகம் இருந்தது
என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். தங்க மாளிகைகள்
இருந்தன. சோம நாத்தின் கோவிலில் எவ்வளவு தங்கம் இருந்தது. இது
போன்று வேறு எந்த கோவிலும் இருப்பதே இல்லை. அதில் நிறைய
வைரங்கள், வைடூரியங்கள் இருந்தன. புத்தர் ஆகியோரி னுடையது
ஒன்றும் வைரம், வைடூரியங்களின் அரண்மனை இருக்காது.
குழந்தைகளாகிய உங்களை எந்த தந்தை இவ்வளவு உயர்ந்தவராக ஆக்கினாரோ
அவர் மீது நீங்கள் எவ்வளவு மதிப்பு வைத்துள்ளீர்கள். யார் நல்ல
கர்மங்கள் செய்து விட்டு போகிறார்களோ அவர்கள்
கௌரவிக்கப்படுகிறார்கள். எல்லாவற்றையும் விட நல்ல கர்மம் பதீத
பாவனரான தந்தை தான் வந்து செய்கிறார் என்பதை இப்பொழுது நீங்கள்
அறிந்துள்ளீர் கள். எல்லாவற்றையும் விட உத்தமத்திலும் உத்தமமான
சேவை எல்லையில்லாத தந்தை வந்து செய்கிறார் என்று உங்கள் ஆத்மா
கூறுகிறது. நம்மை ஏழை யிலிருந்து செல்வந்தராக, ஆண்டியிலிருந்து
இளவரசனாக ஆக்கி விடுகிறார். யார் பாரதத்தை சொர்க்கமாக ஆக்கு
கிறாரோ அவரைக் கூட யாரும் மதிப்பதில்லை. சோமநாத் கோயில்
உயர்ந்ததிலும் உயர்ந்த கோவிலாக பாடப்பட்டுள்ளது என்பதை நீங்கள்
அறிந்துள்ளீர்கள். அதை கொள்ளையடித்து எடுத்துக் கொண்டு போய்
விட்டார் கள். இலட்சுமி நாராயணரின் கோவிலை ஒரு பொழுதும் யாரும்
கொள்ளை அடிக்கவில்லை. சோமநாத்தின் கோவிலை கொள்ளை
யடித்துள்ளார்கள். பக்தி மார்க்கத்தில் இவர்கள் மிகவும்
செல்வந்தர்களாக இருப்பார்கள். இராஜாக்களில் கூட வரிசைக்
கிரமமாக இருப்பார்கள் அல்லவா? யார் உயர்ந்த பதவி உடையவர்களாக
இருப்பார்களோ அவர்களுக்கு குறைந்த பதவி உடையவர்கள் மதிப்பு
வைக்கிறார்கள். தர்பாரில் கூட வரிசைக் கிரமமாக அமருகிறார்கள்.
பாபாவோ அனுபவசாலி அல்லவா? இங்கு பதீத இராஜாக்களின் தர்பார்
இருக்கிறது. பாவன இராஜாக்களின் தர்பார் எப்படி இருக்கும்!
அவர்களிடம் அவ்வளவு செல்வம் இருக்கிறது என்றால், அவர்களுடைய
வீடு கூட அவ்வளவு நன்றாக இருக்கும். பாபா நமக்கு படிப்பித்துக்
கொண்டிருக்கிறார் என்பது இப்பொழுது உங்களுக்குத் தெரியும்.
சொர்க்கத்தின் ஸ்தாபனை செய்வித்துக் கொண்டிருக்கிறார். நாம்
சொர்க்கத்தின் மகாராஜா மகாராணி ஆகிறோம். பிறகு நாம் கீழே
விழுகிறோம். பிறகு நாம் முதன் முதலில் சிவபாபாவின் பூசாரி
ஆகிடுவோம். யார் நம்மை சொர்க்கத்தின் அதிபதியாக ஆக்கினாரோ அவரை
நாம் பூஜை செய்வோம். அவர் நம்மை மிகவும் செல்வந்தராக
ஆக்குகிறார். இப்பொழுது பாரதம் எவ்வளவு ஏழையாக உள்ளது. இதற்கு
முன்பு இவ்வளவு ஏழையாக இருக்கவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக
இருந்தோம். எந்த பூமியை 500 ரூபாய்க்கு வாங்கி இருந்தோமோ, அது
இன்று 5 ஆயிரம் ரூபாய்க்குக் கூட கிடைப்பதில்லை. அங்கோ பூமிக்கு
விலையே இருக்காது. யாருக்கு எவ்வளவு வேண்டுமோ, அவ்வளவு
எடுத்துக் கொள்ளலாம். ஏராளமான பூமி இருக்கும். இனிமையான நதிகள்
மீது உங்களுடைய அரண்மனைகள் இருக்கும்! மனிதர்கள் மிகவும்
குறைவாக இருப்பார்கள். இயற்கை அடிமையாக இருக்கும். பழங்கள்
பூக்கள் மிகவும் நன்றாகக் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
இப்பொழுது நீங்கள் எவ்வளவு உழைக்கிறீர்கள். ஆனால் வறண்டு விடும்
பொழுது தானியம் கிடைப்பதில்லை.எனவே பாடல் கேட்ட வுடனேயே
உங்களுக்கு புல்லரித்துப் போய் விட வேண்டும். தந்தைக்கு
ஏழைப்பங்காளன் என்று கூறுகிறீர்கள். இப்பொழுது அர்த்தம்
புரிந்தது அல்லவா? யாரை செல்வந்தராக ஆக்குகிறார். அவசியம் யார்
இங்கு வருகிறார்களோ, அவர்களை செல்வந்தராக ஆக்குபவர் அல்லவா?
நாம் பாவன நிலையிலிருந்து பதீதமாக ஆவதில் 5 ஆயிரம் வருடங்கள்
பிடித்தன என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
இப்பொழுது பின்னர் சட்டென்று பாபா பதீத நிலையிலிருந்து பாவனமாக
ஆக்குகிறார். உயர்ந்ததிலும் உயர்ந்தவராக ஆக்குகிறார். ஒரு
நொடியில் ஜீவன் முக்தி கிடைத்து விடுகிறது. பாபா நாங்கள்
உங்களுடையவர் ஆவோம் என்று கூறுகிறார்கள் .குழந்தைகளே நீங்கள்
உலகின் அதிபதி ஆவீர்கள் என்று தந்தை கூறுகிறார். பையன் பிறந்த
உடனேயே வாரிசு ஆகி விடுகிறார். எவ்வளவு குஷி ஏற்படுகிறது. ஆனால்
பெண் குழந்தையைப் பார்த்த உடன் முகமே தொங்கி விடுகிறது. இங்கோ
எல்லா ஆத்மாக்களுமே ஆண் குழந்தைகள் ஆவார்கள்.நாம் சொர்க்கத்தின்
அதிபதி ஆகி விட்டோம். நாம் 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்னால்
சொர்க்கத்தின் அதிபதியாக இருந்தோம் என்பது இப்பொழுது தெரிய
வந்துள்ளது. பாபா இது போல ஆக்கி இருந்தார். சிவஜெயந்தி கூட
கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர் எப்பொழுது வந்திருந்தார் என்பது
தெரியாமல் இருக்கிறார்கள். இலட்சுமி நாராயணரின் இராஜ்யம்
எப்பொழுது இருந்தது, எதுவுமே தெரியாது. உண்மையில் பாரதத்தின்
ஜனத்தொகை எல்லாவற்றையும் விட அதிகமாக இருக்க வேண்டும். பாரதத்
தினுடைய பூமி எல்லா வற்றையும் விட பெரியதாக இருக்க வேண்டும்.
இலட்சக்கணக்கான வருடங்களாக இருந்தது என்றால் நிறைய பூமி
வேண்டும். முழு உலகத்தின் நிலம் கூட போதுமானதாக இருக்காது.
இலட்சக்கணக்கான வருடங்களில் எத்தனை மனிதர்கள் பிறந்து
இருப்பார்கள். கணக்கற்ற மனிதர்கள் ஆகி விடுவார்கள். அவ்வளவு
பேரோ இல்லை. இந்த எல்லா விஷயங்களையும் தந்தை வந்து புரிய
வைக்கிறார். மனிதர்கள் கேட்கும் பொழுது இந்த விஷயங்களை ஒரு
பொழுதும் கேட்டதில்லை, சாஸ்திரங்களில் படிக்கவும் இல்லை என்று
கூறுகிறார்கள். இதுவோ அதிசயமான விஷயங்கள் ஆகும்.இப்பொழுது
குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் முழு சக்கரத்தின் ஞானம்
உள்ளது. இவர் அநேக பிறவிகளுக்கு கடைசியில் இப்பொழுது பதீத
ஆத்மாவாக உள்ளார். யார் சதோபிரதானமாக இருந்தாரோ அவரே இப்பொழுது
தமோபிரதானமாக இருக்கிறார். மீண்டும் சதோபிரதானமாக ஆக வேண்டும்.
ஆத்மாக்களாகிய உங்களுக்கு இப்பொழுது அறிவுரை கிடைத்துக் கொண்டி
ருக்கிறது. ஆத்மா சரீரத்தின் மூலமாக கேட்கிறது. அப்பொழுது
சரீரம் (சொகுசாக) ஊஞ்சலாடு கிறது .ஏனென்றால் ஆத்மா கேட்கிறது
அல்லவா? உண்மையில் ஆத்மாவாகிய நான் 84 பிறவி கள் எடுத்துள்ளேன்.
அவசியம் 84 தாய் தந்தையர் கிடைத்திருக்கக் கூடும். இது கூட
கணக்கு தான் இல்லையா? 84 பிறவிகள் எடுக்கிறார்கள் பின் குறைவாக
பிறவி எடுக்கும் மற்றவர்கள் கூட இருப்பார்கள் என்பது புத்தியில்
வருகிறது. குறைந்த பட்சம், அதிக பட்சம் என்ற கணக்கு இருக்கும்
அல்லவா? சாஸ்திரங்களில் என்ன வெல்லாம் எழுதி விட்டார்கள் என்பதை
தந்தை வந்து புரிய வைக்கிறார் .உங்களுக்காவது 84 பிறவிகள்
கூறுகிறார்கள். எனக்கோ கணக்கற்ற பிறவிகளை கூறி விட்டுள்ளார்கள்.
அணு அணுவிலும் அவ்வளவு........ எங்கு பார்த்தாலும் நீயே நீ தான்....
கிருஷ்ணரே கிருஷ்ணர்... மதுரா பிருந்தாவனத்தில் கிருஷ்ணர் சர்வ
வியாபி (எங்கும் நிறைந்தவர்) என்று கூறுகிறார்கள்.இராதை
வழியினர்.பிறகு இராதையே இராதை என்பார்கள். நாங்கள் இராதா சுவாமி
என்று கூறுகிறார்கள். கிருஷ்ண ஸ்வாமி என்பவர்கள் வேறு.அவர்கள்
ராதையை ஏற்றுக் கொள்கிறார்கள். எங்கு பார்த்தாலும் இராதையே
இராதை.நீயும் இராதை நானும் ராதை.
உண்மையில் நான் ஏழைப்பங்காளன் ஆவேன் அல்லவா என்று இப்பொழுது
தந்தை வந்து புரிய வைக்கிறார். பாரதம் தான் எல்லாவற்றையும் விட
செல்வந்தர் நாடாக இருந்தது. இப்பொழுது எல்லாவற்றையும் விட
ஏழையாக ஆகி விட்டுள்ளது. எனவே நான் பாரதத்தில் தான் வர வேண்டி
இருந்தது. ஏற்கனவே இது அமைந்துள்ள, அமைக்கப்பட்ட நாடகம் ஆகும்.
இதில் சிறிதளவு கூட வித்தியாசம் ஏற்பட முடியாது.இது மிகப்
பெரிய நாடகமாகும். டிராமா வில் எந்த படம் பிடிக்கப்படுகிறதோ அது
மிகச் சரியாக அவ்வாறே திரும்ப நடை பெறும். நாடகம் பற்றி கூட
தெரிந்திருக்க வேண்டும். டிராமா என்றால் டிராமா. அது
எல்லைக்குட்பட்ட டிராமா ஆகும். இது எல்லையில்லாத டிராமா.
இதனுடைய முதல் இடை கடை பற்றி யாருக்கும் தெரியாது. எனவே ஏழை
பங்காளர் என்று நிராகார பகவானைத் தான் ஏற்றுக் கொள்வார்கள்.
கிருஷ்ணரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கிருஷ்ணரோ செல்வந்தராக
சத்யுகத்தின் இளவரசர் ஆகிறார். பகவானுக்கோ தனக்கென்று உடல்
கிடையாது. அவரே, வந்து குழந்தைகளாகிய உங்களை செல்வந்தராக
ஆக்குகிறார். உங்களுக்கு இராஜயோகத்தின் கல்வி அளிக்கிறார் .அவர்கள்
படிப்பின் மூலம் வழக்கறிஞர் ஆகிறார்கள். பிறகு
சம்பாதிக்கிறார்கள். தந்தை கூட உங்களுக்கு இப்பொழுது
படிப்பிக்கிறார். நீங்கள் வருங்காலத்தில் நரனிலிருந்து நாராயணர்
ஆகிறீர்கள். உங்களுக்கு ஜன்மம் இருக்கிறது அல்லவா? அப்படியின்றி
சொர்க்கம் ஏதோ சமுத்திரத்திலிருந்து வெளி வரும் என்பதல்ல.
கிருஷ்ணர் கூட ஜன்மம் எடுத்தார் அல்லவா? கம்சபுரி ஆகியவையோ
அந்த சமயத்தில் இருக்கவில்லை. கிருஷ்ணருடைய பெயர் எவ்வளவு
பாடப்படுகிறது. அவருடைய தந்தையின் பெயரே இல்லை. அவருடைய தந்தை
எங்கே இருக்கிறார்? நிச்சயம் இராஜாவின் குழந்தையாக இருப்பார்
அல்லவா? அங்கு பெரிய இராஜாவின் வீட்டில் ஜன்மம் கிடைக்கிறது,.
ஆனால் அவர் பதீதமான இராஜாவாக இருக்கும் காரணத்தால் அவருடைய
பெயர் இருக்குமா என்ன? கிருஷ்ணர் இருக்கும் பொழுது பதீத
மானவர்கள் கூட கொஞ்சம் பேர் இருப்பார்கள். அவர்கள் முற்றிலும்
இல்லாது போய் விடும் பொழுது, அவர் சிம்மாசனத்தில் அமருகிறார்.
பிறகு இராஜ்யத்தை பெறுவார். அப்பொழுது தான் அவரது சகாப்தம்
ஆரம்பமாகிறது. இலட்சுமி நாராயணரிலிருந்து சகாப்தம் ஆரம்பமாகிறது.
நீங்கள் முழு கணக்கும் எழுதுகிறீர்கள். இவர்களுடைய இராஜ்யம்
இவ்வளவு காலம். பிறகு இவர்களுடையது. இவ்வளவு காலமாக கல்பத்தின்
ஆயுள் நீண்டதாக இருக்கவே முடியாது என்பதை மனிதர்கள் புரிந்து
கொண்டு விடுவார்கள்.5 ஆயிரம் வருடங்களின் முழு கணக்கு
இருக்கிறது. நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து
கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய
பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. படைப்பவர் மற்றும் படைப்பின் ஞானத்தை புத்தியில் இருத்தி
சதோபிரதானம் ஆவதற்கான முயற்சி செய்ய வேண்டும். நாம்
சதோபிரதானமாக அவசியம் ஆக வேண்டும் என்ற ஒரே ஒரு கவலை மட்டும்
கொள்ள வேண்டும்.
2. இந்த எல்லையில்லாத நாடகத்தை புத்தியிலிருத்தி அளவற்ற
குஷியில் இருக்க வேண்டும். தந்தைக்கு சமமாக மதிப்பைப்
பெறுவதற்காக பதீதர்களை பாவனமாக ஆக்கும் சேவை செய்ய வேண்டும்.
வரதானம்:
அதிகாரத்தின் நினைவின் மூலம் சர்வசக்திகளின்
அனுபவம் செய்யக் கூடிய பிராப்தி சொரூபம் ஆகுக.
புத்தியின் சம்பந்தம் ஒரு தந்தையிடம் சதா ஈடுபட்டிருந்தால்
சர்வசக்திகளின் ஆஸ்தி அதிகார ரூபத்தில் பிராப்தியாக கிடைக்கும்.
யார் அதிகாரி என்று புரிந்து கொண்டு ஒவ்வொரு காரியமும்
செய்கிறார்களோ, அவர்கள் சொல்வது மற்றும் சங்கல்பத்திலும்
யாசிக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த அதிகாரி என்ற நினைவு
தான் சர்வசக்திகளின் பிராப்தியை அனுபவம் செய்விக்கிறது. எனவே
சர்வசக்திகளும் எனது பிறப்புரிமை என்ற போதை இருக்க வேண்டும்.
அதிகாரி ஆகி நடந்து கொண்டீர்கள் எனில் அடிமைத்தனம் நீங்கி
விடும்.
சுலோகன்:
சுயத்தின் கூடவே இயற்கையையும் தூய்மை ஆக்க வேண்டுமெனில்
முழுமையாக பற்றுதலில் இருந்து விடுபடுங்கள்.
அவ்யக்த சமிக்ஞை - அபவித்திரதாவின் விதையையும் கூட அழித்து
முழுமையான தூய்மையானவர் (பவித்திரமானவர்) ஆகுங்கள்.
தூய்மை என்ற விரதம் உறுதியானதாக இருந்தால் பற்றுதல், பொறாமை
மற்றும் கோபத்திலிருந்தும் விடுபட்டவர்களாக ஆகுங்கள். சிடுசிடு
தன்மையும் இருக்கக் கூடாது. இது நடந்தே ஆக வேண்டும் என்ற
பற்றுதலும் இருக்கக் கூடாது. சுயநலம் அல்லது பொறாமைக்கு வசமாகி
எந்த ஒரு விசயமும் கூறினால், அது நிறைவேறவில்லை எனில் கோபம்
வந்து விடும். ஆகையால் தூய்மையின் தூணை உறுதியானதாக ஆக்குங்கள்.
பிறகு இந்த தூண் கலங்கரை விளக்காக வேலை செய்யும்.