29.03.26 காலை முரளி
ஓம் சாந்தி 25.10.2009 பாப்தாதா,
மதுபன்
சர்வ பொக்கிஷங்களில் நிறைந்து தன்னுடைய முகம் மற்றும்
நடத்தையினால் அலௌகீகதன்மையின் காட்சி காண்பித்திடுங்கள்
இன்று அனைத்து பொக்கிஷங்களின் வள்ளல் தனது பொக்கிஷங்களுக்கு
அதிகாரியான குழந்தை களை பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
ஒவ்வொரு குழந்தையும் அனைத்து பொக்கிஷங் களிலும்
நிறைந்திருக்கின்றார்கள், ஏனெனில், தந்தை அனைத்து குழந்தை
களுக்கும் ஒன்றுபோல் ஒரே சமயத்தில் அனைத்து பொக்கிஷங்களையும்
கொடுத்திருக் கின்றார். பாப்தாதா தங்களுடைய பாலகனாகவும்
அதிகாரியாகவும் இருக்கும் குழந்தைகளை சந்திக்க
வந்திருக்கின்றார்கள். குழந்தைகள் அழைத்தார்கள், குழந்தைகளின்
அன்பிற்காக தந்தை வந்திருக்கின்றார். பொக்கிஷங் களோ அனேகம்
உள்ளன, ஞான செல்வமே அனைத்தையும் விட முதல் பொக்கிஷம் ஆகும்,
இந்த ஞான செல்வத்தினால் செல்வந்தர்களாக ஆகிவிட்டீர்கள், மகாதானி
ஆகி பிறருக்கும் கூட பகிர்ந்தளித்துக் கொண்டே இருக்கின்றீர்கள்.
இந்த ஞான பொக்கிஷத்தின் மூலம் வெவ்வேறு பந்தனங்களில்
மாட்டியிருக்கின்ற ஆத்மா, அந்த அனைத்து பந்தனங்களில் இருந்தும்
விடுபட்டு விட்டது. பந்தனத்தில் மாட்டியிருக்கும் நிலையில்
இருந்து, பந்தனத்திலிருந்து விடுபட்டதாக ஆகி விட்டது. கூடவே,
யோகா அதாவது நினைவு என்ற பொக்கிஷம், இதன் மூலம் அனேக சக்திகளை
அடைந்துள்ளீர்கள். அதுபோல் தாரணை மூலம் அனைத்து குணங்களின்
அனுபவம் அதாவது பொக்கிஷம் கிடைத்துள்ளது. கூடவே, தாரணையின்
சக்தியினால் அனைவருடைய சினேகத்தின் சக்தி, அனைவருடைய அன்பு
மற்றும் விடுபட்ட தன்மையின் சக்தி என்ற பொக்கிஷம் கிடைத்துள்ளது,
அனை வருடைய சினேகத்தின் பொக்கிஷத்தை அனுபவம் செய்துள்ளீர்கள்.
கூடவே, அனைத்து பிராமண சம்பந்தத்தினால் அளவற்ற மகிழ்ச்சி என்ற
பொக்கிஷத்தின் அனுபவம் பெற்றுள்ளீர் கள். ஆனால், அனைத்து
பொக்கிஷங்களின் கூடவே விசேஷமான பொக்கிஷமாக இருப்பது சங்கமயுக
சமயம் என்ற பொக்கிஷம். எந்த ஆத்மாவிற்கு சமயம் என்ற
பொக்கிஷத்தினுடைய மகத்துவம் உள்ளதோ, அவர் சதா அனேக
பிராப்திகளின் எஜமானர் ஆகிவிடு கின்றார், ஏனெனில்,
சங்கமயுகத்தின் சமயம் மிகவும் சிறியது, ஆனால், சமயத்திடம்
இருந்து பிராப்தி கள் அதிகம் கிடைக்கின்றன. சுயம் பகவான்
தந்தையாக, ஆசிரியராக, சத்குருவாக கிடைத் திருப்பதே
சங்கமயுகத்தின் அனைத்தையும் விட அதிகமான சிரேஷ்டத்திலும்
சிரேஷ்டமான பிராப்தியாகும். சங்கமயுகத்தின் சிறிய பிறவியில் 21
பிறவிகளுக்கான பிராப்தி, இதில் உடல், மனம், பொருள், மக்கள் என
அனைத்து விதமான பிராப்திகளும் உள்ளன மற்றும் முழுமை யான 21
பிறவிகளுக்கும் உத்திரவாதம் உள்ளது, பாதி அல்ல, முக்கால் பங்கு
அல்ல, ஆனால், முழுமையாக 21 பிறவிகளுக்கான உத்திரவாதம் உள்ளது.
சங்கமயுகத்தின் ஒவ்வொரு நொடியும் அனேக வருடங்களுக்கு சமமானது
என்பதே அனைத்தையும் விட அதிகமான மகத்துவம் வாய்ந்ததாகும்.
கூறுங்கள், அனைத்து பொக்கிஷங்களிலும் நிறைந்து இருக்கின்றீர்
களா? நிறைந்து இருக்கின்றீர்கள் தானே? ஆகையினால், பாப்தாதா சதா
சமயத்தின் நினைவை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றார் கள். சில
குழந்தைகள், ஒருவேளை ஒன்று இரண்டு நிமிடங்கள் வேறு ஏதாவது
சிந்தித்தார்கள் என்றால், 2 நிமிடங்கள் தானே ஆனது என்று
நினைக்கின்றார்கள். ஆனால், எந்தளவு சமயத்திற்கு மகத்துவம்
இருக்கின்றதோ, அதன் அனுசாரம் 2 நிமிடங்கள் அல்ல, 2 மாதங்களும்
அல்ல, இரண்டு வருடங்களுக்கு சமமானது ஆகும். சங்கமயுகத்தின்
சமயத்திற்கு இந்தளவு மகத்துவம் உள்ளது. அனைத்து சக்தி களினுடைய,
அனைத்து குணங்களினுடைய, பரமாத்ம அன்பினுடைய, பிராமண பரிவாரத்
தின் அன்பினுடைய மற்றும் கல்பத்திற்கு முன்பாக யார் ஈஸ்வரிய
உரிமைகளைப் பெற்றி ருந்தார்களோ, இந்த அனைத்து பிராப்திகளும்
இந்த சிறிய யுகத்தில் கிடைக்கின்றன, மேலும், வேறு எந்த
யுகத்திலும் இந்த அனைத்து பிராப்திகளும் கிடைப்பதில்லை. இராஜ்ய
பாக்கியம் இருக்கும், உங்கள் அனைவருக்கும் இராஜ்யம் இருக்கும்,
சுகம், சாந்தி அனைத்தும் இருக்கும், ஆனால், பரமாத்ம
சந்திப்பினுடைய, அதீந்திரிய சுகத்தினுடைய, அனைத்து பிராமண
பரிவாரத்தின் அன்பினுடைய, முதல், இடை, இறுதி காலத்தைப் பற்றிய
ஞானத்தின் பாக்கியம் இப்பொழுது சங்கமயுகத்தில் தான்
கிடைத்துள்ளது, ஒவ்வொரு கல்பமும் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
பொக்கிஷங்கள் எந்தளவு சேமிப்பாகி இருக்கின்றன? என்பதை பாப்தாதா
ஒவ்வொரு குழந்தையின் முகத்தில் பார்க்கின்றார்கள். பொக்கிஷங்களோ
கிடைத்துவிட்டன, ஆனால், ஒவ்வொருவரும் எந்தளவு சேமிப்பு கணக்கை
அதிகரித்துள்ளீர்கள், அது ஒவ்வொருவர் முகத்தில், நடத்தையில்
தென்படுகின்றது மற்றும் நீங்கள் அனைவரும் கூட நான் எந்தளவு
சேமிப்பு செய்திருக்கின்றேன்! என்பதை தனக்குத் தானே
அறிந்துள்ளீர்கள். பொக்கிஷங் களோ கிடைத்துவிட்டன, ஆனால், இந்த
சமயம் வர்ணனை மட்டும் செய்வதற்கானது அல்ல, ஆனால், உங்கள் முகம்
மற்றும் நடத்தை யானது, இந்த ஆத்மாக்கள் விசேஷமான வர்கள்,
விடுபட்டவர்களாக இருக்கின்றார்கள் மற்றும் பரமாத்மாவிற்கு
அன்பானவர்களாக உள்ளனர் என்ற பிரத்யட்ச அனுபவம் செய்விக்க
வேண்டும் என்பதுவே இப்பொழுது பாப்தாதாவினுடைய உள்ளத்தின்
விருப்பம் ஆகும். ஏனென்றால், எதிர்காலத்தில் காலம் மாறும்போது
வர்ணனை செய்வது மட்டும் உங்களுடைய சேவை அல்ல, சமயம் நாசூக்காக
இருப்பதனால் அவ்வளவு சமயத்தை எவராலும் ஒதுக்க முடியாது. ஆனால்,
பொக்கிஷங்களால் நிறைந்திருக்கும் உங்களுடைய முகத்தின் மூலம்,
நடத்தை மூலம் உங்களுடைய அலௌகீகத் தன்மையானது தூரத்தில் இருந்தே
காட்சியாகக் கிடைக்கும். ஆகவே, தன்னுடைய இப்பேற்பட்ட முயற்சியை
இப்பொழுது பிரத்யட்சம் செய்யுங்கள். எவ்வாறு பிரம்மா பாபாவைப்
பார்த்தீர்கள், குழுவிற்கு மத்தியில் இருந்தார், ஆனாலும்
தூரத்தில் இருந்தே அவரது பெர்சனாலிட்டி, ஜொலிப்பின் அனுபவம்
ஏற்பட்டது. அதுபோன்றே இப்பொழுது இரட்டை (டபுள்) அயல்நாட்டினர்
விசேஷமாக இரட்டை முயற்சி செய்யுங்கள். பாப்தாதா இரட்டை
முயற்சியாளர் என்று கூறுகின்றார்கள், குறிப்பாக இன்று பாப்தாதா
இரட்டை அயல்நாட்டினர் குழந்தைகளைப் பார்த்து மகிழ்ச்சி
அடைகின்றார்கள். வளர்ச்சிக் கான முயற்சி நன்றாக செய்து கொண்டு
இருக் கின்றீர்கள், நிமித்தமாக ஆகியிருக்கும் ஆத்மாக் களின்
மூலம் பாலனை கூட அனைவருக்கும் மிகவும் நன்றாக கிடைத்துக் கொண்டு
இருக்கின்றது. மேலும், அனைத்து ஆத்மாக்களும் ஒவ்வொரு வருடமும்
தங்களுடைய குழுவின் சந்திப்பை மதுவனத்தில் விசேஷமாக செய்
கின்றார்கள் என்ற அனைவருடைய இந்த ஒரு விசயமானது பாப்தாதாவிற்கு
மிகவும் பிடிக்கிறது. ஏனென்றால், மதுவனத்தின் வாயுமண்டலம்
புத்துணர்வு பெறுவதில் மிகவும் சகயோகம் கொடுக் கிறது மற்றும்
ஒரே பொறுப்பு தான் உள்ளது - சுயமாற்றம், மனதின் சேவை,
ஒருவருக்கொருவர் அனுபவங் களைப் பகிர்ந்து கொள்வதற்கான நல்ல
வாய்ப்பும் கிடைக்கிறது. எனவே, பாப்தாதா இந்த விசயத்திற்கு
வாழ்த்துக்கள் கொடுக்கின்றார்கள்.
இப்பொழுது அவரவர் இடத்திற்குச் சென்று ஏதாவது அதிசயம் செய்ய
வேண்டும், தந்தையின் அன்புக்குரியதான விடுபட்டதன்மையை கொஞ்சம்
நடைமுறையில் அனுபவம் செய்விக்க வேண்டும், அதன் மூலம்
மதுவனத்தினுடைய புத்துணர்வின் சகயோகத்தை அங்கேயும் கூட அனுபவம்
செய்து கொண்டே இருப்பீர்கள். எனவே, இன்று விசேஷமாக இரட்டை
முயற்சியாளர் குழுவிற்கான சந்திப்பு ஆகும் மற்றும் பாருங்கள்
உங்கள் அனை வரின் மீதும் இந்தியக் குழந்தைகளுக்கு அந்தளவு அன்பு
உள்ளது, ஆகையினால், முதல் வாய்ப்பை உங்களுக்குத் தான்
வழங்குகின்றார்கள். எனவே, முதல் வாய்ப்பிற்கான ரிசல்ட் முதல்
நம்பர் பெற வேண்டும். நன்றாக உள்ளது, இரட்டை வெளிநாட்டினர்
அல்லது இரட்டை முயற்சியாளர் குழந்தைகள் தந்தை யினுடைய ஒரு
விசேஷமான பட்டத்தை (டைட்டிலை) பிரத்யட்சம் செய்துள்ளனர் என்பதை
பாப்தாதா முன்பே கூறியுள்ளார்கள். வெளிநாட்டில்,
பெரும்பான்மையாக தந்தையின் குழந்தை களை உருவாக்கி, அவர்களுடைய
அதிர்ஷ்டத்தின் சித்திரத்தையும் உருவாக்கி இருக்கின்றீர்கள்.
ஆகையினால், ஈடுபாட்டுடன் யார் நாலாபுறங்களிலும் உழைத்துக்
கொண்டு இருக்கின்றார்களோ, அவர்கள் அந்த உழைப் பின் மூலம்
தந்தையின் விஷ்வ கல்யாணகாரி காரியத்தை பிரசித்தம்
ஆக்கியிருக்கின்றார்கள். ஆகையினால், பாப்தாதா ஒவ்வொரு
குழந்தைக்கும் ஆஹா! குழந்தையே ஆஹா! என்ற வாழ்த்துக்களை
கொடுக்கின்றார்கள். இப்பொழுதும் கூட எவ்வாறு பாரதத்தில் மூலை
மூலையிலும் செய்தி கொடுப்பதற்கான சேவை நடந்து கொண்டு
இருக்கின்றதோ, அதுபோல் மீதம் இருக்கும் தேசங்களில் செய்தி
கொடுத்து விடவேண்டும் என்ற ஊக்கம், உற்சாகம் உள்ளது. ஏனெனில்,
சமயத்தின் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. தீடீரென்று என்ன
வேண்டு மானாலும் நடக்கலாம் என்பதை பாப்தாதா முன்னதாகவே
கூறியுள்ளார்கள், ஆகையினால், செய்தியைக் கொடுக்க வேண்டும்
மற்றும் தன்னுடைய முன்னேற்றத்தை அவ்வப்பொழுது அல்லாமல்
இப்பொழுதே செய்ய வேண்டும். உண்மையில் பிராமணர்களின் அகராதியில்
(டிக்சனரி) அவ்வப்பொழுது என்ற வார்த்தை அழகு அல்ல என்று
பாப்தாதா கூறியும் இருக்கின்றார் கள். இத்தருணமே, செய்தே
ஆகவேண்டும் என்ற சங்கல்பம் செய்து விட்டீர்கள். பார்க்கலாம்,
செய்யலாம், இந்த லாம், லாம் என்ற வார்த்தையே கூடாது, உங்களுடைய
மம்மா கூட இதே இலட்சியை வைத்தார்கள் மற்றும் இப்பொழுது
இல்லையேல் எப்பொழுதும் இல்லை என்பதை அனைவருக்கும்
நினைவுபடுத்தினார்கள்.
இரட்டை முயற்சியாளர் குழந்தைகள் இப்பொழுதே செய்யக் கூடியவர்களா
அல்லது அவ்வப் பொழுது செய்யக்கூடியவர்களா? இப்பொழுதே செய்து
காட்டக்கூடியவர்கள் என்று யார் புரிந்திருக் கின்றீர்களோ,
அவர்கள் கை உயர்த்துங்கள். செய்தே ஆகவேண்டும். செய்தே
ஆகவேண்டும். செய்யலாம் என்பது அல்ல, செய்தே ஆகவேண்டும். நினைவு
வைக்க வேண்டும், தனக்குத்தானே தன்னுடைய சார்ட் வைக்க வேண்டும்
மற்றும் ஒவ்வொரு இரவும் பாப்தாதாவிற்கு தன்னுடைய முழுநாளின்
சார்ட்டை கூறிய பிறகு தன்னுடைய புத்தியை காலி செய்துவிட்டு
உறங்குவதால் உங்களுக்கு தூக்கம் கூட நன்றாக வரும், மேலும்,
கூடவே அன்றைய நாளினுடைய நடவடிக்கை களை கூறுவதினால், நாம் பாபா
விடம் நம்முடையதைக் கூறியிருக்கின்றோம் என்பது அடுத்த நாளும்
நினைவு இருக்கிறது, ஆகவே, அந்த நினைவு சகயோகம் கொடுக்கின்றது
என்பதை பாப்தாதா முன்பே கூறி யுள்ளார்கள். பிறகு,
தர்மராஜபுரிக்குச் செல்ல வேண்டியது இருக்காது. கொடுத்து
விட்டீர்கள் அல்லவா மற்றும் மாற்றம் செய்துவிட்டீர்கள் என்றால்
தர்மராஜபுரியில் இருந்து தப்பித்து விடுவீர்கள். இப்பொழுது
அடுத்த வருடம், அதை எவரும் பார்த்ததில்லை, ஆனால், இப்பொழுது
இலட்சியம் வைத்திடுங்கள், வருடத்தை விடுங்கள், குறைந்ததிலும்
குறைவான சமயத்தில், முகம் வெளிப்படுத்த வேண்டும், நடத்தை
வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆசை எது தந்தைக்கு உள்ளதோ, அதை வெகு
விரைவாக நடைமுறையில் செய்து காட்டுங்கள். தைரியம் உள்ளதென்றால்
கை உயர்த்துங்கள். தைரியம் உள்ளதா? தைரியம் உள்ளதா? நல்லது
வாழ்த்துக்கள். பாப்தாதா ஒவ்வொரு குழந்தையிடமும் நம்பிக்கை
மற்றும் தைரியத்தின் ஊக்கம், உற்சாகத்தை இத்தருணம் பார்த்துக்
கொண்டு இருக்கின்றார்கள். ஆனால், விமானத்தில் செல்லும்பொழுது
கொஞ்சம் குறைத்து விடவேண்டாம். அதிகரித்துக் கொண்டே இருக்க
வேண்டும். திடசங்கல்பம் என்ற சாவி பாப்தாதா என்ன கொடுத்து
இருக்கின்றார்களோ, அதை எப்பொழுதும் நிலையாக வைத்திருக்க
வேண்டும். செய்தே ஆகவேண்டும், இத்தருணமே செய்தாக வேண்டும். லாம்,
லாம் என்பது கூடாது. அந்த சமயம் இப்பொழுது கடந்துவிட்டது.
நடந்துவிடும் என்பது அல்ல, நடந்தே தீரவேண்டும். பாப்தாதா இரட்டை
முயற்சியாளர்களுக்கு என்ன பட்டம் கொடுத்து இருக்கின்றார்களோ,
அதை சதா நினைவில் வைக்க வேண்டும்.
மற்றபடி பாப்தாதா ரிசல்ட் கேட்டார்கள், பாப்தாதா சேவைக்கான
திட்டம் என்ன கொடுத்தார்களோ, அதில் பாரதத்தினரும் குறைவாகச்
செய்யவில்லை மற்றும் வெளி நாட்டினரும் குறைவாகச் செய்யவில்லை.
இந்த வரதானத்தை பெரும்பான்மையான இடங்களில் ஊக்கம்,
உற்சாகத்துடன் செய்துள்ளார்கள் மற்றும் வெவ்வேறு இடங்களில்
இருந்தும் ரிசல்ட் வந்து கொண்டு இருக்கின்றது. எனவே, பாப்தாதா
பாரதக் குழந்தைகளுக்கு, மற்றும் வெளிநாட்டு குழந்தைகளுக்கு
நடைமுறை யில் கொண்டு வருவதற்கான வாழ்த்துக் களை கோடி கோடி
மடங்கு கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
இப்பொழுது இந்த வருடத்தில் விசேஷமாக எந்தவொரு விசயத்தை
நடைமுறையில் செய்ய வேண்டும்? இப்பொழுது உங்களை யாரெல்லாம்
பார்க்கின்றார்களோ, அவர்களுக்கு உங்களுடைய முகத்தில் ஜொலிப்பு
தென்பட வேண்டும் என்பதை கூறிவிட்டார்கள். பிரத்யட்சம்
செய்வதற்கு நிமித்தம் ஆகவேண்டும், தந்தையை பிரத்யட்சம் செய்ய
வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? முகம் சதா
மலர்ந்திருக்க வேண்டும், எந்த சிந்தனை யிலோ, எந்த குழப்பத்திலோ
இருக்கக்கூடாது. இப்பொழுது இரண்டு வார்த்தைகளை நினைவு
செய்யுங்கள் - கெட் அவுட் (வெளியேறிவிடு) என்று மாயாவிற்கு
எச்சரிக்கை விடுங்கள் மற்றும் தன்னை கெஸ்ட் ஹவுஸ்சில் (விருந்தினர்
மாளிகை) இருப்பதாக அனுபவம் செய்யுங்கள் என்று பாப்தாதா
கூறியிருக் கின்றார்கள். இந்த உலகம் உங்களுக்கானது அல்ல,
விருந்தினர் மாளிகை ஆகும், இப்பொழுதோ வீட்டிற்குச் செல்லத் தான்
வேண்டும். வீட்டின் காட்சிகள் மனதில், புத்தியில் தென்பட
வேண்டும். வீடு வந்தே வந்துவிட்டது என்று தானாகவே தோன்ற
வேண்டும். உங்களுடைய பாடல் ஒன்று உள்ளது - இப்பொழுது
வீட்டிற்குச் செல்ல வேண்டும். இந்த அலை ஒவ்வொரு இடத்திலும்
இருக்க வேண்டும், அது பாரதமோ அல்லது வெளிநாடோ, இப்பொழுது இந்த
அனுபவத்தை பிரத்யட்சம் செய்து காண்பியுங்கள். எல்லையற்ற
வைராக்கியம் கொண்டு வரவேண்டும். விருந்தினர் மாளிகையில் உள்ளம்
ஈடுபடாது, செல்ல வேண்டும், செல்ல வேண்டும் என்பது நினைவில்
இருக்கும். எந்தவித மனதின் எண்ணங்களையும், குழுவாக
இருக்கும்பொழுது தங்களுக்குள் வரக் கூடிய மாயாவின் தடைகளையும்
எல்லையற்ற வைராக்கியமானது முற்றிலுமாக முடிவடையச் செய்துவிடும்.
இந்த மாயாவின் புயல் உங்களுக்கு பரிசாக ஆகிவிடும். இங்கே சிறிய,
பெரிய பரீட்சை என்ன வருகிறதோ, அது பரீட்சையாகத் தோன்றாது, ஆனால்,
ஒரு அனுபவத்தை அதிகரிப்பதற்கான லிஃப்ட்டாக தோன்றும். கிஃப்ட்
மற்றும் லிஃப்ட். புரிந்ததா! இப்பொழுது எல்லையற்ற வைராக்கியம்
உடையவராக ஆகுவதற்கான இலட்சியம் வைத்திடுங்கள் மற்றும் தைரியம்,
ஊக்கம், உற்சாகத்தின் இறக்கைகள் மூலம் பறந்து கொண்டே இருங்கள்
மற்றும் பறக்க வைத்துக் கொண்டே இருங்கள். இப்பொழுது பறப்பதற்
கான சமயம். உங்களுடைய இறக்கை பலவீனமானதாக ஆகாமல் இருக்கின்றதா
என்பதை சதா சோதனை செய்யுங்கள்.
பாப்தாதா இரட்டை வெளிநாட்டினர் அதிகரித்திருப்பதைப் பார்த்து
மகிழ்ச்சி அடை கின்றார்கள், இப்பொழுது என்ன பார்க்க
விரும்புகின்றார்கள்? ஒவ்வொரு குழந்தையும் தந்தைக்கு சமமாக
சம்பன்னம் மற்றும் சம்பூரணம் ஆகவேண்டும். அனைத்து பொக்கிஷங்
களிலும் சம்பன்னமாக மற்றும் ஸ்ரீமத் ஒவ்வொன்றும் என்ன
கிடைத்துக் கொண்டு இருக்கிறதோ, அதில் சம்பூரணமாக ஆகவேண்டும்.
இது விருப்பமா? விருப்பம் உள்ள தென்றால் கை தட்டுங்கள். நல்லது.
இங்கே கை தட்டியதை ஒவ்வொரு நாளும் நினைவு செய்ய வேண்டும்,
தனக்குத் தானே மனதில் தட்ட வேண்டும், வெளியில் அல்ல மனதில்
தட்ட வேண்டும். இது வீட்டுப்பாடம் ஆகும். நல்லது.
90 நாடுகளில் இருந்து 2300 சகோதர, சகோதரிகள்
வந்திருக்கின்றார்கள்:
(ஐந்து கண்டங்களில் இருந்து வந்திருக்கின்ற சகோதர, சகோதரிகளை
தனித்தனியான குழுவில் நிற்க வைத்தார்கள்) 1 - அமெரிக்கா, கனடா,
கரீபியன் நாட்டின் சகோதர, சகோதரிகள், 2 - ஆஸ்திரேலியா, ஆசியா,
நியூசிலாந்து, ஃபிஜி, 3 - ஐரோப்பா, யூ.கே., மத்திய கிழக்கு
நாடுகள் 4 - ஆஃப்ரிக்கா, தென் ஆஃப்ரிக்கா, மொரீசியஸ், 5 - ரஷ்யா,
சி.ஐ.எஸ்., பாலிடிக் நாடுகள். அனைவரும் முன்னேறிச் செல்வதற்கான
சங்கல்பம் செய்திருக்கின்றீர்கள் மற்றும் தங்களுக்குள் ஆன்மிக
உரையாடலும் கூட செய்திருக்கின்றீர்கள். பாப்தாதாவிடம் செய்திகள்
வந்து கொண்டே இருக்கின்றன. இப்பொழுது எவரெடி குரூப்பை
உருவாக்குங்கள். எந்தெந்த நாடுகளில் இருந்து எவ்வளவு பேர்
வந்திருந்தாலும் கூட, அந்த நாடுகளுக்கு பாப்தாதா பரிசு
வழங்குவார்கள், என்ன பரிசு கொடுப்பார்கள் என்பதையோ அந்த சமயம்
பார்ப்பீர்கள். ஆனால், முதல் எண்ணில் வரும் எந்தக் குழுவாக
இருந்தாலும், அவர்களுக்கு பாப்தாதா பரிசு கொடுப்பார்கள்
என்பதையே, ஒவ்வொரு ஏரியாவின் இரட்டை முயற்சியாளர் குழந்தை களின்
குழுவிற்கு பாப்தாதா கூறு கின்றார்கள். ஒரு நாட்டினுடைய ஒவ்வொரு
நகரத்திலும் அங்கே எத்தனை சேவைக் கேந்திரங்கள் இருக்கின்றனவோ,
அது அமெரிக்காவோ, அமெரிக்காவின் தொடர்பில் உள்ள எந்த நாடுகளாக
இருந்தாலும் சரி, அந்த அனைத்து நாடுகளும், இங்கே அனைவரும்
தடையற்றவர்களாக இருப்போம், எவரெடியாக இருப்போம், மாயாவை
வென்றவராக இருப்போம், சினேகி மற்றும் சேவையில் சகயோகி யாக
இருப்போம் என்று தங்களுக்குள் ஆலோசனை செய்து நிகழ்ச்சியை
உருவாக்க வேண்டும். யார் முதல் எண்ணில் வருவார்களோ, அவர்களுக்கு
பாப்தாதா பரிசு வழங்குவார் கள், ஒன்று அல்ல மூன்று பேருக்கு
வழங்குவார்கள். ஒன்று, இரண்டு, மூன்று. மூன்று நம்பர். பொதுவாக
ஒருவருக்குத் தான் வழங்கப்படுகின்றது, ஆனால், இரட்டை முயற்சி
யாளர்கள் அல்லவா, எனவே, மூன்று வாய்ப்புகள் வழங்குவோம்.
விருப்பமா? ஆம், கை அசைத்திடுங்கள். விருப்பமா? எவ்வளவு சமயம்
வேண்டும்? இதை ஆசிரியர்கள் கூறுங்கள், பரிசு பெறுவதற்கு எவ்வளவு
சமயம் தேவை? கூறுங்கள். (பிப்ரவரி வரை என்று அனைவரும்
கூறினார்கள்) அனைத்து நாடுகளின் ஆசிரியர்கள் கை உயர்த்துங்கள்.
சரியா? தயார் ஆகிவிடு வீர்கள் தானே! பிறகு பாப்தாதா பரிசு
கொடுப்பார்கள். மிகவும் நல்லது. இதற்காக கை தட்டுங்கள். நல்லது.
பாரதத் திற்கான முறையும் (டர்ன்) வரும். இப்பொழுதோ உங்களுக்கான
டர்ன் ஆகும். ஆஹா! தீவிர முயற்சியாளர் குழந்தைகளே ஆஹா! என்று
பாப்தாதா கூட மகிழ்ச்சி அடைகின்றார்கள். நல்லது.
நாலாபுறங்களிலும் உள்ள தீவிர முயற்சியாளர், தைரியம் மற்றும்
ஊக்கம், உற்சாகத் துடன் பறக்கக்கூடிய, நடப்பவர்கள் அல்ல,
பறக்கக் கூடியவர்கள், நாலாபுறங்களிலும் உள்ள தந்தைக்கு சமமாக
சம்பன்னம் மற்றும் சம்பூரணம் ஆகக்கூடிய பாப்தாதாவின் இதய
சிம்மாசனதாரி, சதா தந்தையுடன் இணைந்த ரூபத்தின் அனுபவம் மற்றும்
சகயோகத்தைப் பெறக்கூடிய, தந்தை யினுடைய ஒவ்வொரு தேடிக்
கண்டெடுக்கப்பட்ட, சினேகி குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.
தாதிகளுடன்:
தந்தையின் கூடவே உங்கள் அனைவருடைய சகயோகம் இருந்திருக் கிறது
அல்லவா. குழந்தைகள் மற்றும் தந்தை ஆகிய இருவரின் சகயோகத்தினால்
யக்ஞம் நடந்திருக் கிறது, நடந்து கொண்டே இருக்கும். நீங்களும்
நிமித்தமானவர்கள் அல்லவா. சாகாரத்தில் ஒருவர் கூறினார், மற்றவர்
செய்தார். ஒருவர் மற்றவருக்கு சகயோகி ஆகி பறந்து
கொண்டிருக்கின்றீர்கள். பாபா பறப்பவர்களைப் பார்த்து மகிழ்ச்சி
அடைகின்றார். (குல்சார் தாதி செய்த அதிசயம் என்று தாதி ஜானகி
அவர்கள் கூறினார்கள்) அவர்களும் கூடவே தான் இருக்கின்றார்கள்.
நிமித்தமாக இருக்கும் நீங்கள் அனைவரும் சதா ஒன்றாகத் தெரிய
வேண்டும் என்பதுவே பாப்தாதாவின் சுப விருப்பமாக உள்ளது.
வெவ்வேறானவர் களாக தெரியக் கூடாது, ஒன்றாகத் தெரியவேண்டும்.
ஒருவர் கூறினார், மற்றவர் தனது கருத்தைக் கூறினார், அவர்கள்
ஒன்றாகிவிட்டனர். ஆகை யினாலேயே யக்ஞம் நடந்து கொண்டு
இருக்கின்றது. உங்கள் அனைவருடைய ஒற்றுமையினால் தான் நடந்து
கொண்டு இருக்கின்றது, வெளிப்படையாகத் தெரியவில்லை, ஆனால்,
சங்கல்பத்தில், கருத்துக்களில் ஒன்றாக இருந்து மென்மேலும்
முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும், ஏனெனில், இப்பொழுது உங்கள்
அனைவரின் மீதும் பார்வை உள்ளது. நல்லது.
ஆசீர்வாதம்:
தன்னுடைய சிரேஷ்ட விருத்தி மூலம் சுத்தமான வாயுமண்டலத்தை
உருவாக்கக் கூடிய சதா சக்திசாலி ஆத்மா ஆகுக.
யார் சதா தன்னுடைய சிரேஷ்ட விருத்தியில் (உள்ளுணர்வில்)
நிலைத்து இருக் கின்றார் களோ, அவர்கள் எந்தவொரு
வாயுமண்டலத்திலும், அதிர்வலைகளிலும் நிலைகுலைய முடியாது.
விருத்தியினாலேயே வாயுமண்டலம் உருவாகிறது, ஆக, உங்களுடைய
விருத்தி சிரேஷ்டமான தாக இருக்கிறதென்றால் வாயுமண்டலம்
சுத்தமானதாக ஆகிவிடும் .என்ன செய்வது, வாயு மண்டலமே
அப்படிப்பட்டதாக உள்ளது, வாயுமண்டலத்தின் காரணமாக என்னுடைய
விருத்தி நிலைகுலைந்துவிட்டது என்று சிலர் வர்ணனை செய்கின்றனர்,
எனில், அந்த சமயம் சக்திசாலி ஆத்மாவிற்கு பதிலாக பலவீனமான
ஆத்மாவாக ஆகிவிடுகின்றனர், ஆனால், விரதத்தின் (உறுதி மொழி)
நினைவினால் விருத்தியை சிரேஷ்டமானதாக ஆக்கிவிட்டால்
சக்திசாலியாக ஆகிவிடு வீர்கள்.
சுலோகன்:
குணமூர்த்தி ஆகி அனைவரையும் குணமூர்த்தி ஆக்குவது தான் மகாதானி
ஆகுவதாகும்.
அவ்யக்த இஷாரே: நிச்சயம் என்ற அஸ்திவாரத்தை உறுதியானதாக ஆக்கி
சதா பயமற்றவர் மற்றும் கவலையற்று இருங்கள்
தங்களுக்குள் ஒருவர் மீது ஒருவருக்கு உண்மையான சினேகம் இருக்க
வேண்டும். சினேகி ஆத்மாவின் மீது ஒருபொழுதும் அனுமானம் எழாது.
அவரது சினேகம் நிறைந்த வார்த்தை, சாதாரணமானதாக இருந்தாலும் ஃபீல்
ஆகாது. அவர்களுடைய இலகுவான பேக்சு கூட இவர்கள் அவசியமாக ஏதோவொரு
காரணத்துடன் சொல்லி இருப்பார்கள் என்று தோன்றும். காரண மற்றதாக,
வீணானதாகத் தோன்றாது. எங்கே அன்பு இருக்கின்றதோ, அங்கே
நம்பிக்கை அவசியம் இருக்கும். ஆகையினால், பிராமண பரிவாரத்தில்
ஒருவர் மற்றவர் மீது அன்பு மற்றும் நம்பிக்கை வைத்து, சம்பூரண
நிச்சயபுத்தி உடையவர் ஆகுங்கள், அப்பொழுதே பிரம்மா பாபாவின்
ஆசைகளை முழுமையாக நிறைவேற்ற முடியும்.