29-08-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! எல்லா
விஷயங்களிலும் சகிப்புத்தன்மையுடைவர் ஆகுங்கள், இகழ்-புகழ்,
வெற்றி-தோல்வி அனைத்திலும் சமமாக இருங்கள். கேள்விபட்ட
விஷயங்களில் (வதந்தி) நம்பிக்கை வைக்காதீர்கள்.
கேள்வி:
ஆத்மா எப்போதும் ஏறும் கலையில்
முன்னேறிக் கொண்டே இருப்பதற்கு எளிய வழி கூறுங்கள்?
பதில்:
ஒரு பாபாவிடம் மட்டுமே கேளுங்கள்.
மற்றவர்களிடம் கேட்காதீர்கள். வீணான (பர) மற்றவர்களை பற்றிய
சிந்தனையில், வெளி விஷயங்களில் தங்களின் நேரத்தை வீணாக்காமல்
இருந்தால் ஆத்மா எப்போதும் ஏறும் கலையில் இருக்கும். இல்லாத
பொல்லாத விஷயங் களைக் கேட்பதால், அதன் மீது நம்பிக்கை வைப்பதால்
நல்ல குழந்தைகள் கூட கீழே விழுந்து விடுகிறார்கள். ஆகவே மிகவும்
கவனமாக இருக்க வேண்டும்.
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு உண்மையில் நாம் அரைக்
கல்பமாக இராவண இராஜ்யம் ஆரம்பமானதிலிருந்து தந்தையை நினைத்தோம்
என்பது இப்போது நினைவிற்கு வருகிறது. முழுமையாக அரைக் கல்பமாக
நினைத்தனர் என்பதும் கிடையாது. எப்போதேல்லாம் துக்கம்
அதிகரித்ததோ அப்போது நினைவு செய்தனர். பக்தி
மார்க்கத்திலிருந்து நாம் இறங்கிக் கொண்டே வந்தோம் என்பது
இப்போது உங்களுக்குத் தெரிகிறது. நாடகத்தின் ரகசியம் புத்தியில்
இருக்கிறது. வாயால் எதுவும் சொல்ல வேண்டியது இல்லை. நாம்
அவருடையவராகி விட்டோம். ஆகவே அதிகமாக ஞானத்தின் அவசியம் இல்லை.
பாபாவினுடையவராகி விட்டோம் என்றால், பாபா வின் சொத்துக்கு
அதிகாரி ஆகி விட்டோம். எதுவும் கர்மேந்திரியங்களினால் செய்ய
வேண்டியது இல்லை. பக்தி மார்க்கத்தில் பகவானை சந்திப்பதற்காக
எவ்வளவு யாகம்-தவம்- தானம்-புண்ணியம் செய்கிறார்கள். எங்கு
சென்றாலும் எல்லா இடங்களிலும் தீர்த்த ஸ்தலங்கள் கோவில்கள்
போன்றவை இருக்கின்றன. முழு பாரதத்தின் தீர்த்த ஸ்தலங்கள்
கோவில்களைச் சுற்றி வரக்கூடிய எந்த மனிதரும் இருக்க முடியாது
அப்படி சுற்றி வந்தாலும் எதுவும் கிடைக்காது. அங்கே (கோவில்
முதலியன) சேகண்டி, பெரியமணி என்று எவ்வளவு அதிகம் சத்தம்
கூச்சல் உள்ளது. இங்கே (மதுவனம்) அம்மாதிரி விஷயம் எதுவும்
இல்லை. பாட்டு பாடவோ, கைகள் தட்ட வேண்டிய அவசியமோ இல்லை.
மனிதர்கள் எதையெல்லாம் செய்யவில்லை. அளவற்ற கர்ம காண்டம் (சடங்கு
முறை) இருக்கிறது. இங்கேயோ குழந்தைகளாகிய நீங்கள் நினைவு
மட்டும் செய்ய வேண்டும். வேறு எதுவும் இல்லை.
வீட்டிலிருந்தாலும் எல்லாவற்றையும் செய்தாலும் தந்தையை மட்டும்
நினைக்க வேண்டும். இப்போது நாம் தேவதைகளாகிக் கொண்டிருக்கிறோம்
என நீங்கள் அறிகிறீர்கள். இங்கே தெய்வீக குணங்களை தாரணை செய்ய
வேண்டும். உணவு வகைகள் கூட தூய்மையாக இருக்க வேண்டும். 36
வகையான உணவுகள் அங்கே கிடைக்கும், இங்கே சாதாரணமாக இருக்க
வேண்டும். உயர்ந்ததாகவும் வேண்டாம். மிகத் தாழ்ந்ததாகவும்
வேண்டாம். அனைத்து விஷயங்களிலும் பொறுமை வேண்டும். இகழ்-புகழ்,
வெற்றி-தோல்வி, வெயில்-குளிர் அனைத்தையும் பொறுத்துக் கொள்ள
வேண்டியிருக்கிறது. நேரமே அவ்வாறு இருக்கிறது. தண்ணீர்
கிடைக்காது, இது, அது கிடைக்காது, சூரியன் கூட தன்னுடைய
வெப்பத்தைக் காண்பிக்கும். ஒவ்வொரு பொருளும் தமோபிரதானமாகிறது.
இந்த சிருஷ்டி யையும் கூட தமோபிரதானமாகத்தான் உள்ளது..
தத்துவங்களும் தமோபிரதானமாகி உள்ளது.. எனவே இவை துக்கத்தை
அளிக்கின்றன. இகழ், புகழில் கூட போகக் கூடாது. பலர் இருக்
கிறார்கள், யாராவது தவறுதலாக யாருக்காவது ஏதாவது சொல்லி
விட்டால் உடனே சீரழிந்து போகிறார்கள். ஏனென்றால், தற்போது
விஷயங்களைத் திரிப்பது நிறைய இருக்கிறது அல்லவா? யாரோ ஏதோ
சொல்கிறார்கள் என்றால் - இவருக்கு தேக உணர்வு இருக்கிறது,
வெளிப்பகட்டு நிறைய இருக்கிறது, யாரோ இதை சொல்லி விட்டார்,
அவ்வளவு தான் காய்ச்சல் அதிகமாகி விடுகிறது என உங்களுக்காக பாபா
கூறுகின்றார். தூக்கம் கூட போய்விடுகிறது. அரைக் கல்பமாக
மனிதர்கள் இவ்வாறு இருக்கிறார்கள். சிலருக்கு உடனடியாக
காய்ச்சலை வர வழைத்து விடுகின்றனர். உடனடியாக முகம் வெளிறிப்
போகச் செய்கின்றனர். எனவே இது போன்ற வீண் விஷயங்களைக்
கேட்காதீர்கள் என பாபா கூறுகின்றார். பாபா ஒரு போதும் யாரையும்
நிந்திப்பது இல்லை. பாபா புரிய வைப்பதற்காகக் கூறுகின்றார்.
இல்லாத பொல்லாத விஷயங்களை ஒருவருக்கொருவர் கூறிக் கொள்வதால்
நல்ல குழந்தைகள் கூட கெட்டுப் போகிறார்கள். துரோகி ஆகி வீணான
விஷயங்களை ஒருவர் மற்றவருக்கு சொல்வார்கள். பக்தி மார்க்கத்தில்
கூட எப்படிப்பட்ட கதைகளை எல்லாம் உருவாக்கி இருக்கிறார்கள்.
இப்போது உங்களுக்கு ஞானம் கிடைத்திருக்கிறது என்றால், ஒரு
போதும் ஓ, ராம் அல்லது ஐயோ கடவுளே ! என்று கூற முடியாது. இந்த
வார்த்தைகள் கூட பக்தி மார்க்கத்தினுடைய தாகும். உங்களுடைய
வாயிலிருந்து இது போன்ற வார்த்தைகள் வரக் கூடாது.
இனிமையான செல்ல குழந்தைகளே ! ஆத்ம உணர்வுடையவராகுங்கள் என்று
பாபா கூறுகின்றார். எவ்வளவு அன்போடு புரிய வைக்கின்றார்.
யாருடைய விஷயத்தையும் கேட்கா தீர்கள், வீணாக மற்றவர்களை பற்றி
சிந்தனை செய்யாதீர்கள். நாம் ஆத்மா என்பதை உறுதி படுத்திக்
கொள்ளுங்கள். ஆத்மா அழிவற்றது. உடல் அழியக் கூடியது. ஆத்மா தான்
சம்ஸ்காரத்தை மனதில் ஏற்றுக் கொள்கிறது. இப்போது குழந்தைகளாகிய
நீங்கள் ஆத்ம உணர்வுடையவராக வேண்டும். துவாபர யுகத்திலிருந்து
இராவண இராஜ்யத்தில் நீங்கள் தேக உணர்வுடையவரா கிறீர்கள்.
ஆகையால் இப்போது ஆத்மா உணர்வுடையவராகுவதில் உழைக்க
வேண்டியிருக்கிறது. நமக்கு எல்லையற்ற தந்தை கிடைத்திருக்கிறார்.
அடிக்கடி புத்தியில் இது வர வேண்டும். கல்ப கல்பமாக பாபா சொத்து
கொடுக்கின்றார். இப்போது அவருடைய வழிப்படி நடக்க வேண்டும்.
தாயும் நீயே, தந்தையும் நீயே...... என்று அவருக்காக தான் பாடப்
பட்டிருக்கின்றது. அவர் அனைத்து உறவுகளிலும் சுகத்தை அளிப்பவர்.
அவருக்குள் அனைத்து விதத்திலும் இனிமையானவராக இருக்கிறார்.
மற்ற நட்பு, உறவுகள் போன்றவை துக்கத்தை அளிக்கக் கூடியதாகும்.
ஒரேயொரு தந்தையே அனைவருக்கும் சுகத்தை அளிப்பவர் ஆவார். தன்னை
ஆத்மா என்று உணர்ந்து தந்தையாகிய என்னை நினையுங்கள் என்று மிக
எளிய வழியில் கூறுகின்றார். இது ஒன்றும் புதிய விஷயம் இல்லை என
பாபா கூறுகின்றார். ஒவ்வொரு 5000 வருடத்திற்குப் பிறகும் நாம்
இப்படிப்பட்ட தந்தையிடம் வருகின்றோம், இவர் யாரோ சாது,
சன்னியாசி கிடையாது என நீங்கள் அறிகிறீர்கள். நீங்கள் சாது
சன்னியாசி போன்றோரிடம் இல்லை. மற்றபடி இல்லற மார்க்கத்தில்
உறவுகளுடன் சீராகப் பராமரிக்க வேண்டும் என்று பாபா கூறுகின்றார்.
இல்லையென்றால் மேலும் பூசல்கள் தான் ஏற்படும். யுக்தியோடு
செல்லுங்கள். அன்போடு ஒவ்வொருவருக்கும் புரிய வைக்க வேண்டும்.
பாருங்கள், இப்போது அழிவின் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த அசுர உலகம் முடியப் போகிறது. இப்போது தேவதையாக வேண்டும்.
இங்கே தெய்வீக குணத்தைக் கடைபிடிக்க வேண்டும். அன்போடு புரிய
வைக்க வேண்டும். தேவதைகள் வெங்காயம், பூண்டு போன்ற வைகளை
சாப்பிடுவதில்லை. நாம் கூட மனிதனிலிருந்து தேவதையாகிறோம்
என்றால் இவ்வாறு எப்படி சாப்பிட முடியும். இதை விட்டு விடுங்கள்
என உங்களுக்கும் ஆலோசனை வழங்குகிறார். இது போன்ற பொருட்களை நாம்
சாப்பிடுவ தில்லை. இப்போது உங்களுக்கு எல்லையற்ற தந்தை தெய்வீக
குணங்களைக் கற்பிப்பவர் கிடைத்திருக்கிறார் என்றால், அனைத்து
குணங்களிலும் நிறைந்தவர்களாக..... இங்கே தான் மாற வேண்டும்.
இங்கே மாறும் போது தான் எதிர் காலத்தில் புது உலகம் வரும்.
இரவிற்குப் பிறகு பகல் வருவது போல இது நடக்கிறது. இப்போது
இரவின் முடிவில் தெய்வீக குணங்களை தாரணை செய்தால் பிறகு காலை
வந்து விடும். தங்களைத் தாங்களே ஒவ்வொருவரும் சோதித்துக் கொள்ள
வேண்டும். பாபாவிற்கு அனைத்தும் தெரியும் என்று இருக்கக் கூடாது.
நீங்கள் உங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள். டீச்சர் அனைத்தையும்
அறிவார் என மாணவர்கள் ஒரு போதும் கூறுவதில்லை. தேர்வு நாட்கள்
நெருங்குகிறது என்றால் நாம் எவ்வளவு தேர்ச்சி பெறுவோம், எந்த
பாடத்தில் நாம் மந்தமாக இருக்கிறோம் என குழந்தைகளே அறிவார்கள்.
மதிப்பெண்கள் குறைவாகப் பெறுவார்கள் பிறகு அனைத்தும் சேர்த்து
தேர்ச்சி அடை கிறார்கள். இதைப் புரிந்து கொள்கிறார் கள் என்றால்,
இதிலும் கூட தங்களை சோதித்துக் கொள்கிறார்கள். தங்களுக்குள்
என்ன குறை இருக்கிறது? நான் மிகவும் இனிமையாக மாறி இருக்கிறேனா?
ஆத்மாக்களாகிய நம் அனை வருக்கும் தந்தை பரம்பிதா பரமாத்மா என
அன்போடு அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும். மனிதர்களின் விஷயம்
அல்ல. நாம் நிராகாரரை பகவான் என்கிறோம். பகவான் படைப்பவர்
ஒருவரே, பிற அனைவரும் படைப்புகள் ! படைப்புகளிடமிருந்து
யாருக்கும் சொத்து கிடைக்காது. சட்டம் இல்லை. இப்போது அனைத்து
படைப்பிற்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் ஒருவர் தான் படைப்பவர்
தந்தையாவார். படைப்பிற்குள் சாது சன்னியாசி அனைவரும் வந்து
விடுவர். அனைவரும் ஆத்மாக்கள் தான் இல்லையா? ஆம், மனிதர்கள்
நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் இருக்கிறார்கள். பதவியும்
உயர்ந்ததாக தாழ்ந்ததாக இருக்கிறது. சன்னியாசிகளிலும் வரிசைக்
கிரமம் இருக்கிறது. சிலரைப் பாருங்கள், பிச்சை எடுத்துக்
கொண்டிருக்கிறார்கள். சிலரிடமோ அனைவரும் காலில் விழுகின்றனர்.
குழந்தைகளாகிய நீங்களும் உயர்ந்தவர்கள் ஆக வேண்டும். மிகவும்
இனிமையாக மாறுங்கள். ஒரு போதும் கோபத்தோடு பேசக் கூடாது.
எவ்வளவு முடியுமோ அன்போடு வேலையை வாங்குங்கள். குழந்தைகள்
மிகவும் துன்புறுத்துகிறார்கள், இன்றைய குழந்தைகள் இப்படி
இருக்கிறார்கள் என கூறுகிறார்கள், அன்போடு அவர்களுக்குப் புரிய
வையுங்கள். கிருஷ்ணர் குறும்பு செய்தார் என்று அவரை கயிற்றால்
கட்டி வைத்தனர் என காண்பிக்கிறார்கள். எவ்வளவு முடியுமோ அன்போடு
புரிய வைக்க வேண்டும். அல்லது லேசான தண்டனை. பாவம்,
அறியாதவர்கள். நேரமும் இவ்வாறு இருக்கிறது. வெளி சங்க தோஷம்
மிகவும் மோசமாக இருக்கிறது. நீங்கள் சிலை போன்றவைகளை வைக்க
வேண்டிய அவசியம் இல்லை என எல்லையற்ற தந்தை கூறுகின்றார்.
எதுவும் கடினமாக உழைக்க வேண்டியதில்லை. சிவனுடைய சித்திரம் கூட
ஏன் வைக்க வேண்டும்? அவர் உங்களுடைய தந்தை அல்லவா? வீட்டில்
குழந்தைகள் தந்தையின் சித்திரத்தை ஏன் வைக்கிறார்கள்? தந்தையோ
அழைத்ததும் ஆஜர் ஆவார் அல்லவா. நான் இப்போது அழைத்த உடன் ஆஜர்
ஆகிறேன் இல்லையா ! பிறகு சித்திரங்களின் அவசியம் இல்லை. நான்
குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றேன். பாப்தாதாவைப் பாருங்கள்
என்கின்றார். இப்போது பாபா நிராகாரராக இருக்கிறார். அவரைப்
பார்க்க முடியாது. புத்தியினால் புரிந்துக் கொள்ள முடியும்.
நான் இவருக்குள் பிரவேசமாகி உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கிறேன்
என பாபா கூறுகிறார். இல்லை என்றால் எப்படி வருவேன். கிருஷ்ணரின்
உடலில் எப்படி வர முடியும். சன்னியாசி களுக்குள் கூட வர
முடியாது. யார் முதல் நம்பரில் இருந்தாரோ அவருக்குள் நான்
வருகிறேன். அவரே இப்போது கடைசி நம்பரில் இருக்கிறார். நீங்களும்
இப்போது படித்து பிறகு முதல் நம்பரில் போக வேண்டும். படிக்க
வைக்கக் கூடியவர் ஒருவரே ஆவார். அவருக்கு ஞானக் கடல் என்று
பெயர். உங்களுக்கு ஞானம் மிகவும் நன்றாக கிடைக்கிறது. சாந்தி
தாமம் நம்முடைய வீடு, சுகதாமம் நம்முடைய இராஜ்யம் என நீங்கள்
அறிகிறீர்கள். துக்க தாமம் இராவணனின் இராஜ்யம் ஆகும்.
இனிமையிலும் இனிமையான குழந்தைகளே ! உங்களுடைய வீடு
சாந்திதாமத்தை நினையுங்கள் ! சுகதாமத்தை நினையுங் கள்! என பாபா
கூறுகின்றார். துக்க தாமத்தின் பந்தனத்தை மறந்துக் கொண்டே
செல்லுங்கள். இவ்வாறு வேறு யாரும் கூற முடியாது. அவர்கள்
போகவும் முடியாது. நாடகத்திற்கு இடையில் யாரும் திரும்பிச்
செல்ல முடியாது. இன்னார் ஜோதியோடு ஜோதியாக கலந்து விட்டனர்,
அல்லது நிர்வாண தாமத்திற்குச் சென்று விட்டனர் என்று
கூறுகிறார்கள். ஒருவர் கூட போக முடியாது. அனைவருக்கும் தந்தை
மற்றும் அதிபதி ஒரேயொரு பரம்பிதா பரமாத்மா, அவர் அனைத்து
மணப்பெண்களுக்கும் ஒரே மணவாளன் ஆவார். அந்த உலகியல் பிரிய
தர்ஷன் பிரிய தர்ஷினிகள் ஒருவரை ஒருவர் நினைக்கிறார்கள் என்றால்,
புத்தியில் சித்திரம் தோன்றுகிறது. பிறகு ஒருவரை ஒருவர்
நினைத்துக் கொண்டே இருப்பார்கள். சாப்பிட்டுக் கொண்டே
இருப்பார்கள். நினைத்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களோ ஒரு
பிறவியின் பிரிய தர்ஷன், பிரிய தர்ஷினி. நீங்களோ பல பிறவிகளாக
பிரிய தர்ஷனனின் பிரிய தர்ஷினிகள். நீங்கள் வேறு எதுவும் செய்ய
வேண்டியதில்லை. ஒரே தந்தையை மட்டும் நினையுங்கள். அந்த பிரிய
தர்ஷன் பிரிய தர்ஷனிக்கு முன்பு மனதில் சித்திரம் வருகிறது.
அவர்களைப் பார்த்து பார்த்தே வேலை கூட நின்று போய் விடுகிறது.
பிறகு அவர்களின் முகம் காணாமல் போகிறது. பிறகு வேலையை
செய்கின்றனர். இதிலோ அவ்வாறு இல்லை. ஆத்மாவும் புள்ளியாக
இருக்கிறது. பரமாத்மாவும் புள்ளியாக இருக்கிறார். தன்னை ஆத்மா
என்று உணர்ந்து தந்தையை நினைக்க வேண்டும். இதில் தான் உழைப்பு
இருக்கிறது. வேறு யாரும் இவ்வாறு பயிற்சி செய்வதில்லை. ஆத்ம
ஞானம் கிடைத்திருக்கிறது என்றால், ஆத்மாவைப் புரிந்துக்
கொண்டீர்கள். மற்றபடி இருப்பது பரமாத்மா. அதுவும் உங்களுக்குத்
தெரியும். பாபா வந்து இங்கே (புருவ மத்தியில்) அமர்கிறார்.
இவருடைய இடமும் இங்கே இருக்கிறது. ஆத்மா எங்கிருந்து
வேண்டுமானாலும் சென்று விடுகிறது. தெரிவதில்லை. அதனுடைய
முக்கிய இடம் புருவ மத்தியாகும். நானும் பிந்துவாக இருக்கிறேன்.
இவருக்குள் வந்து அமர்கிறேன் என பாபா கூறுகின்றார். உங்களுக்கு
தெரியவே தெரியாது. பாபா குழந்தை களாகிய உங்களுக்கு வந்து
கூறுகின்றார். உங்களுக்கு என்ன கூறுகின்றாரோ அதை நானும்
கேட்கிறேன். முற்றிலும் சரியான விளக்கம் ஆகும். தெய்வீக
தர்மத்தைச் சார்ந்தவர்கள் யாரோ அவர்கள் உடனே புரிந்துக்
கொள்வார்கள். இந்த இராஜ்யம் ஸ்தாபனையாகிக் கொண்டி ருக்கிறது.
முதலில் ஸ்தாபனை, பிறகு வினாசம் கூட நடக்கும். வேறு எந்த தர்ம
ஸ்தாபனை யாளர்களும் இவ்வாறு செய்வது கிடையாது. அவர்கள் தங்களது
தர்மத்தை ஸ்தாபனை செய்கிறார்கள். பிறகு வளர்ச்சி அடைகிறது.
இங்கேயோ யார் எவ்வளவுக்கு எவ்வளவு முயற்சி செய்கிறார்களோ
அவ்வளவு எதிர்காலத்தில் உயர்ந்த பதவி பெறுகிறார்கள். நீங்கள்
எதிர் காலத்தில் 21 பிறவிகளுக்கு சொத்தை அடைகிறீர்கள் என்றால்,
எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும். மேலும் மிகவும் எளிதாகும்.
யோகமும் மிகவும் எளிது. இதன் மூலம் உங்களுடைய விகர்மம் அழிகிறது.
நான் உத்திரவாதம் அளிக்கிறேன். கல்ப கல்பமாக நானே வந்து
குழந்தைகளாகிய உங்களை தூய்மையாக மாற்றுகிறேன் என பாபா கூறகிறார்.
அங்கே அழுக்கானவர்கள் ஒருவரும் கிடையாது. ஞானம் கூட எவ்வளவு
எளிதாக இருக்கிறது. 84 பிறவிகளின் சக்கரம் எப்படி சுழல்கிறது.
அந்த ஞானம் கூட புத்தியில் இருக்கிறது. நாம் 84ன் சக்கரத்தில்
சுழன்று வந்துள்ளோம். இதில் நிச்சயம் இருக்க வேண்டும்.
நிச்சயத்தில் தான் வெற்றி இருக்கிறது. 84 பிறவிகள் எடுக்கிறோமா
என தெரியாது? அல்லது சிறிது குறைவோ என்று இருக்கக் கூடாது.
இதுவோ மிகவும் எளிதான விளக்கம் ஆகும். இந்த படங்கள் அனைத்தும்
திவ்ய திருஷ்டியில் பாபா உருவாக்கினார் என்பது குழந்தைகளுக்குப்
புரிய வைக்கப்பட்டிருக்கிறது. திருத்தமும்
செய்யப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் பனாரஸில் தனிமையில் இருந்த
போது இது போன்ற சக்கரம் சுவற்றில் வரைந்தார். இது என்ன என்பது
எதுவும் புரிய வில்லை. மகிழ்ச்சி ஏற்பட்டது. காட்சிகள்
கிடைத்ததும் பறந்து சென்று விட்டார். இது என்ன நடக்கிறது.
எதுவும் புரிய வில்லை. எந்த படம் முதலில் உருவாக்கப்பட்டதோ அதை
மாற்றி புதிது புதிதாக உருவாக்கி வந்தனர் என நீங்கள்
அறிகிறீர்கள். இப்போது புது புது படங்கள் போன கல்பத்தை போலவே
உருவாக்கப்பட்டுக் கொண்டு வருகிறது. ஏணிபடத்தைப் பாருங்கள்
எவ்வளவு நன்றாக இருக்கிறது. இதைப் புரிய வைப்பது எளிதாகும்.
தாமதமாக வருபவர்களுக்கு மேலும் எளிதாகப் புரிய வைக்கப்படுகிறது.
இப்போது புதியதாக யார் வந்தாலும் 7 நாட்களில் முழு ஞானமும்
புரிந்துக் கொள்கிறன்றனர். பழையவர்களை விட முன்னேறி போய்
கொண்டிருக்கினறனர். சிலர் முதலிலேயே வந்திருந்தால் நன்றாக
இருக்கும் என்கின்றனர். அட, இந்த கவலை கூட வேண்டாம். முன்பே
வந்து, பிறகு ஓடிப் போய் இருந்தால்? தாமதமாக வருபவர்களுக்கும்
கூட எளிதாக சிம்மாசனம் கிடைக்கிறது. முதலில் யார் இருந்தனரோ
அவர்கள் இப்போது இல்லை. அழிந்து விட்டனர். கடைசியில் யார்
தேர்ச்சி அடைந்தனர் என ரிசல்ட் தெரிய வரும். புதிது புதிதாக
வருகிறார்கள். உடனே இந்த சேவையில் ஈடுபடுகிறார்கள். பழையவர்கள்
இவ்வளவு செய்வதில்லை. புத்தம் புது குழந்தைகள் சேவையின் மூலம்
மனதில் இடம் பிடிக்கின்றனர். பழையவர்கள் எத்தனையோ பேர் போய்
விட்டனர். ஆகவே யாரை மிக உயர்ந்த பிராமண குல பூசணர்கள் என்று
கூறுகின்றோமோ அவர்களில் ஒரு சிலர் முத-ல் ஆச்சரியப் படக்கூடிய
வகையில் கேட்கின்றனர். பிறகு ஓடி விடுகின்றனர் என பாபா
கூறுகின்றார். எது பாடப் பட்டிருக்கிறதோ அது இப்போது
நடைமுறையில் நடந்துக் கொண்டிருக்கிறது. நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தனக்கு தானே சோதித்துக் கொள்ள வேண்டும். நான் மிக மிக
இனிமையாக இருக்கிறேனா என பாருங்கள்? எனக்குள் என்னென்ன குறை
இருக்கிறது? அனைத்து தெய்வீக குணங்களும் தாரணை ஆகியிருக்கிறதா!
தங்களுடைய நடத்தை தேவதை களைப் போன்று மாற வேண்டும். அசுர
உணவுகளை தியாகம் செய்ய வேண்டும்.
2. எந்த ஒரு வீணான விஷயங்களையும் கேட்கக் கூடாது, மேலும் பேசக்
கூடாது. பொறுமையாக இருக்க வேண்டும்.
வரதானம்:
தன்னுடைய நினைவு (ஸ்மிருதி), விருத்தி (உள்ளுணர்வு) மற்றும்
பார்வையை (திருஷ்டியை) அலௌகீகமாக ஆக்கக்கூடிய அனைத்து
கவர்ச்சிகளிலிருந்து முக்தியடைந்தவராக ஆகுக.
எப்படி சங்கல்பமோ, அப்படி சிருஷ்டி என்று சொல்லப்படுகிறது.
புதிய சிருஷ்டியை படைப்பதற்கு நிமித்தமாக இருக்கும் விசேஷ
ஆத்மாக்களின் ஒவ்வொரு சங்கல்பமும் சிரேஷ்ட மான, அதாவது
அலௌகீகமானதாக இருக்க வேண்டும். நினைவு, விருத்தி மற்றும்
திருஷ்டி அனைத்தும் அலௌகீகமாக மாறிவிடும் போது, இந்த உலகத்தின்
எந்தவொரு நபரோ அல்லது எந்தவொரு பொருளோ தன் பக்கம் ஈர்க்க
முடியாது. ஒருவேளை ஈர்க்கிறது என்றால், நிச்சயம்
அலௌகீகத்தன்மையில் குறைபாடு உள்ளது. அலௌகீக ஆத்மாக்கள் அனைத்து
கவர்ச்சி களிலிருந்தும் விடுபட்டவர்களாக இருப்பார்கள்.
சுலோகன்:
இதயத்தில் பரமாத்ம அன்பு அல்லது சக்திகள்
நிறைந்திருந்தால்,மனதில் குழப்பம் வர முடியாது.
அவ்யக்த சமிக்ஞை - அபவித்திரதாவின் விதையையும் கூட அழித்து
முழுமையான தூய்மையானவர் (பவித்திரமானவர்) ஆகுங்கள்.
சம்பூரண சத்தியத்தன்மையும் கூட தூய்மையின் (பவித்திரத்தா)
அடிப்படையில் தான் அமைகிறது. பவித்திரத்தன்மை இல்லை என்றால் சதா
உண்மைத்தன்மை இருக்க முடியாது. காம விகாரம் மட்டுமே அபவித்திரத்
தன்மை அல்ல, அதனுடன் மற்ற துணைவர்களும் (விகாரங்களும்)
இருக்கிறார்கள். எனவே மஹான் பவித்திரம் என்றால் அபவித்திரத்தின்
பெயரோ அடையாளமோ இல்லாததாகும்.