29-11-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள்
உண்மையிலும் உண்மையான இராஜரிஷிகள். உங்களின் கடமை தபஸ்யா
செய்வது. தபஸ்யாவின் மூலம் தான் பூஜைக்குரியவராக ஆவீர்கள்.
கேள்வி:
எந்த ஒரு புருஷார்த்தம் சதா
காலத்திற்கும் பூஜைக்குரியவராக ஆக்கி விடுகிறது?
பதில்:
ஆத்மாவின் ஜோதியை எழுப்புவதற்கு
அல்லது தமோபிரதான் ஆத்மாவை சதோபிர தானமாக ஆக்குவ தற்கான
புருஷார்த்தம் செய்வீர்களானால் சதா காலத்திற்கும் பூஜைக்குரிய
வராக ஆகி விடுவீர்கள். யார் இப்போது கவனக்குறைவாக தவறேதும்
செய்துள்ளனரோ, அவர்கள் மிகவும் அழுவார்கள். புருஷார்த்தம்
செய்து பாஸ் ஆகவில்லை, அதனால் தர்மராஜரின் தண்டனை களைப்
பெற்றார்கள் என்றால் தண்டனை பெறுகிறவர்கள் பூஜிக்கப் படுவதில்லை.
தண்டனை பெறுகிறவர்களின் முகம் நிமிர்ந்து இருக்க முடியாது.
ஓம் சாந்தி.
ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தை புரிய வைத்துக் கொண்டி
ருக்கிறார். முதல்-முதலில் குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார்,
தன்னை ஆத்மா என நிச்சயம் செய்யுங்கள். முதலில் ஆத்மா, பிறகு
சரீரம். எங்கெங்கே கண்காட்சி நடைபெறுகிறதோ, அல்லது அருங்காட்சி
யகத்தில் (மியுசியம்), வகுப்பில் முதல்-முதலில் இந்த எச்சரிக்கை
தர வேண்டும். தன்னை ஆத்மா என உணாந்து தந்தையை நினைவு
செய்யுங்கள். குழந்தைகள் அமரும் போது ஆத்ம அபிமானி ஆகி
அமர்வதில்லை. இங்கே அமர்ந்திருக்கும் போது கூட எங்கெங்கோ
சிந்தனைகள் செல்கின்றன. சத்சங்கத்தில் எந்த ஒரு சாது முதலிய
எவரும் வரவில்லை என்றால் அப்போது அமர்ந்து கொண்டு என்ன
செய்கிறார்கள்? ஏதாவதொரு சிந்தனையில் அமர்ந்து
கொண்டிருக்கின்றனர். பிறகு சாது வந்து விட்டால் கதை முதலிய
வற்றைக் கேட்கத் தொடங்குகின்றனர். இவையனைத்தும் பக்தி
மார்க்கத்தில் கேட்பதும், சொல்வதும் எல்லாமே செயற்கையானவை என்று
பாபா புரியவைக்கின்றார். இவற்றில் சாரம் எதுவும் கிடையாது.
தீபாவளியையும் செயற்கையாகக் கொண்டாடுகின்றனர். பாபா புரிய
வைத்துள்ளார், ஞானத்தின் மூன்றாவது கண் திறக்க வேண்டு மானால்
ஒவ்வொரு வீட்டிலும் ஒளி இருக்க வேண்டும். இப்போதோ ஒவ்வொரு
வீட்டிலும் இருள் தான் உள்ளது. இதெல்லாம் வெளிப் பிரகாசம்
மட்டுமே. நீங்கள் உங்கள் ஜோதியை எழுப்புவதற்கு முழுமையாக
சாந்தியில் அமர்ந்திருக்கிறீர்கள். குழந்தைகள் அறிவார்கள்,
சுயதர்மத்தில் இருப்பதன் மூலம் பாவங்கள் அழிந்து விடும்.
ஜென்ம-ஜென்மாந்தரத்தின் பாவங்கள் இந்த நினைவு யாத்திரையினால்
தான் அழியும். ஆத்மாவின் ஜோதி அணைந்து விட்டுள்ளது இல்லையா?
சக்தி என்ற பெட்ரோல் முழுவதும் காலியாகி விட்டது. அது மீண்டும்
நிரம்பி விடும். ஏனென்றால் ஆத்மா பவித்திரமாகி விடும். எவ்வளவு
இரவு-பகலுக்குள்ள வேறுபாடு! இப்போது இலட்சுமிக்கு எவ்வளவு பூஜை
நடைபெறுகின்றது! இலட்சுமி பெரியவரா, சரஸ்வதி பெரியவரா என்று
கேட்டு அநேகக் குழந்தைகள் எழுதுகின்றனர். இலட்சுமியோ
ஸ்ரீநாராயணருடையவர் ஆவார் அவர் ஒருவர் தான். மகா லட்சுமியைப்
பூஜிக்கின்றனர் என்றால் அவருக்கு 4 புஜங்களைக் காட்டு கின்றனர்.
அதில் இருவரும் வந்து விடுகின்றனர். உண்மையில் அது
லட்சுமி-நாராயணரின் பூஜை என்று தான் சொல்லப்பட வேண்டும்.
சதுர்புஜம் இல்லையா - இருவரும் இணைந்துள்ளனர். ஆனால்
மனிதர்களுக்கு எந்த ஒரு புரிதலும் இல்லை. எல்லையற்ற தந்தை
சொல்கிறார், அனைவரும் புத்தியற்றவர்களாக ஆகி விட்டனர். முழு
உலகில் உள்ள எல்லா குழந்தைகளையும் புத்தியற்றவர்கள் என்று
லௌகிக் தந்தை சொல்வாரா என்ன? இப்போது உலகத்தின் தந்தை யார்
என்பதைக் குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள். அவரே சொல்கிறார், நான்
அனைத்து ஆத்மாக்களின் தந்தை. நீங்கள் அனைவரும் என்னுடைய
குழந்தைகள். அந்த சாதுக்களோ, அனைவருமே பகவான் தான் என்று சொல்லி
விடுகின்றனர். நீங்கள் அறிவீர்கள், எல்லையற்ற தந்தை ஆத்மாக்கள்
நமக்கு எல்லையற்ற ஞானத்தைப் புரிய வைத்துக் கொண்டி ருக்கிறார்.
மனிதர்களுக்கோ தேக அபிமானம் உள்ளது - நான் இன்னார்.... என்று.
சரீரத்திற்கு என்ன பெயர் வைக்கப்பட்டுள்ளதோ, அதிலேயே இருந்து
வந்துள்ளனர். இப்போது சிவபாபாவோ நிராகார், மிக மேலான ஆத்மா (சுப்ரீம்
ஸோல்). அந்த ஆத்மாவுக்குப் பெயர் சிவபாபா என்பது தான். அவர்
தான் பரம ஆத்மா, பரமாத்மா. அவருடைய பெயர் சிவன். மற்றப்படி
மற்ற ஏராளமான ஆத்மாக்கள் அனைவருக்கும் சரீரத்திற்குப் பெயர்
வைக்கப்பட்டுள்ளது. சிவபாபா இங்கே வசிப்பவரல்ல. அவரோ
பரந்தாமத்திலிருந்து வருகிறார். சிவ அவதாரமும் உள்ளது. இப்போது
பாபா உங்களுக்குப் புரிய வைத்துள்ளார் - அனைத்து ஆத்மாக்களும்
இங்கே தத்தமது பார்ட்டை நடிப்பதற்காக வருகின்றனர். பாபாவுக்கும்
இதில் பார்ட் உள்ளது. பாபாவோ மிகப்பெரிய காரியத்தை இங்கே
செய்கின்றார். அவதாரம் என ஏற்றுக் கொள்கின்றனர் என்றால்
அவருக்கோ விடுமுறை மற்றும் ஸ்டாம்ப் முதலியவை கூட இருக்க
வேண்டும். அனைத்து தேசங்களிலும் விடுமுறை இருக்க வேண்டும்.
ஏனென்றால் பாபாவோ அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் இல்லையா?
அவருடைய ஜென்ம தினம் மற்றும் சென்று விடும் தினம் தேதி முதலியவை
பற்றியும் அவர்களுக்குத் தெரியாது. ஏனென்றால் இவரோ தனிப்பட்டவர்
இல்லையா? அதனால் சிவராத்திரி என்று மட்டும் சொல்லி விடுகின்றனர்.
என்பதை குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள் - அரைக்கல்பம் எல்லையற்ற
பகல், அரைக்கல்பம் எல்லையற்ற இரவு. இரவு முடிவடைந்து பிறகு பகல்
ஆரம்பமாகின்றது. அதற்கு இடையில் பாபா வருகிறார். இதுவோ சரியான
நேரம். மனிதர் பிறந்தால் நகர்மன்றத்தில் குறித்து வைக்கின்றனர்
இல்லையா? பிறகு 6 நாளுக்குப் பின் அந்தக் குழந்தைக்குப் பெயர்
வைக்கின்றனர். அதை நாமகரணம் எனச் சொல்கின்றனர். சிலர் அதை
பிறந்த ஆறாம் நாள் சடங்கு எனச் சொல்கின்றனர். மொழிகளோ அநேகம்
உள்ளன இல்லையா? இலட்சுமிக்குப் பூஜை செய்கின்றனர். வாணவேடிக்கை
நடத்துகின்றனர். நீங்கள் கேட்க முடியும் - இலட்சுமிக்கு நீங்கள்
பண்டிகை கொண்டாடுகிறீர்கள், இவர் எப்போது சிம்மாசனத்தில்
அமர்ந்தார்? சிம்மாசனத்தில் அமர்கின்ற பட்டாபிஷேகத்தைக்
கொண்டாடு கின்றனர். அவருடைய ஜென்மத்தைக் கொண்டாடுவதில்லை.
இலட்சுமியின் சித்திரத்தைத் தட்டில் வைத்து அவரிடம் செல்வத்தை
வேண்டுகின்றனர். அவ்வளவு தான், வேறொன்றும் இல்லை. கோவிலுக்குச்
சென்று எதையாவது கேட்பார்கள், ஆனால் தீபாவளி தினத் தன்று
அவரிடமிருந்து பணத்தை மட்டுமே கேட்பார்கள். பணத்தை ஒன்றும்
கொடுப்பதில்லை. இது எப்படி- எப்படியோ பாவனை....... யாராவது
உண்மையான பாவனையோடு பூஜை செய்வார் களானால் அல்ப காலத்திற்கு
செல்வம் கிடைக்கலாம். இதுவே அல்பகால சுகம். எங்கேயாவது நிலையான
சுகமோ இருக்கும் தானே? சொர்க்கத்தைப் பற்றியோ அவர்களுக்குத்
தெரியாது. இங்கே சொர்க்கத்தோடு ஒப்பிடும் போது இங்கே யாராலும்
இருக்க முடியாது.
நீங்கள் அறிவீர்கள், அரைக்கல்பம் ஞானம், அரைக்கல்பம் பக்தி.
பிறகு வருவது வைராக்கியம். புரிய வைக்கப் படுகின்றது - இது
பழைய மோசமான உலகம். அதனால் மீண்டும் புது உலகம் அவசியம்
வேண்டும். புது உலகம் என்று வைகுண்டத்தைச் சொல்கின்றனர். அது
ஹெவன், பாரடைஸ் என்றும் சொல்லப்படுகின்றது. இந்த டிராமாவில்
நடிப்பவர்களும் அவிநாசி. குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரிந்து
விட்டது, நாம் ஆத்மா எப்படி பாகத்தை நடிக்கின்றோம் என்று. பாபா
புரிய வைத்துள்ளார் - யாருக்காவது கண்காட்சி முதலியவற்றைக்
காட்டும்போது முதல்-முதலில் இந்த நோக்கம்-குறிக்கோளைப் புரிய
வைக்க வேண்டும். ஒரு விநாடியில் ஜீவன் முக்தி எப்படிக்
கிடைக்கிறது - பிறப்பு-இறப்பிலோ நிச்சய மாக வந்து தான் ஆக
வேண்டும். நீங்கள் ஏணிப்படியின் சித்திரத்தை வைத்து மிக
நன்றாகப் புரிய வைக்க முடியும். இராவண இராஜ்யத்தில் தான் பக்தி
ஆரம்பமாகின்றது. சத்யுகத்தில் பக்தியின் பெயர் அடையாளம்
இருக்காது. ஞானம், பக்தி இரண்டும் வெவ்வேறு இல்லையா? இப்போது
உங்களுக்கு இந்தப் பழைய உலகின் மீது வைராக்கியம். நீங்கள்
அறிவீர்கள், இப்போது இந்தப் பழைய உலகம் விநாசமாகப் போகிறது.
தந்தை எப்போதுமே குழந்தை களுக்கு சுகமளிப்பவராகவே உள்ளார்.
குழந்தைகளுக்காகவே தான் தந்தை எவ்வளவு கஷ்டப்படுகிறார்! குழந்தை
வேண்டும் என்பதற்காகத் தான் குருவிடமெல்லாம் செல்கின்றனர்.
சாதுக்களிடம் செல்கின்றனர். எப்படியாவது குழந்தைப் பேற்றை அடைய
வேண்டும். ஏனென்றால் குழந்தை இருந்தால் அவர்களுக்கு ஆஸ்தியைக்
கொடுத்து விட்டுச் செல்வோம். குழந்தை இருந்தால் அவர்களை நாம்
வாரிசாக ஆக்குவோம். ஆக, தந்தை ஒருபோதும் குழந்தைகளுக்கு துக்கம்
தர மாட்டார். அது முடியாத காரியம். நீங்களே தாயும் தந்தையும்
எனச் சொல்லி எவ்வளவு கூக்குரலிட்டுக் கொண்டே இருக்கின்றனர்! ஆக,
குழந்தைகளின் ஆன்மிகத் தந்தை அனைவருக்கும் சுகத்திற்கான வழி
தான் சொல்கிறார். சுகம் தருபவர் ஒரு பாபா மட்டுமே! துக்கத்தைப்
போக்கி சுகம் அளிப்பவர் ஒரே ஓர் ஆன்மிகத் தந்தை மட்டுமே! இந்த
விநாசம் கூட சுகத்திற்காகவே தான். இல்லையென்றால் முக்தி-ஜீவன்
முக்தி எப்படி அடைவார்கள்? ஆனால் இதையும் யாரும் புரிந்து
கொள்வதில்லை. இங்கோ இவர்கள் ஏழைகள், அபலைகள், தங்களை ஆத்மா என
நிச்சயம் செய்ய இயலும். மற்றப்படி பெரிய மனிதர்களுக்கு அந்தளவு
தேக அபிமானம் பக்காவாக ஆகி விட்டுள்ளது, கேட்கவே வேண்டாம். பாபா
அடிக்கடி புரிய வைக்கிறார் - நீங்கள் இராஜ ரிஷிகள். ரிஷிகள்
எப்போதுமே தபஸ்யா செய்கின்றனர். அவர்களோ பிரம்மத்தை, தத்துவத்தை
நினைவு செய்கின்றனர். அல்லது சிலர் காளி முதலானவர்களையும் கூட
நினைவு செய்வார்கள். அநேக சந்நியாசிகளும் உள்ளனர், காளிக்குப்
பூஜை செய்கின்றனர். அம்மா காளி - எனச் சொல்லி அழைக்கின்றனர்.
பாபா சொல்கிறார் - இச்சமயம் அனைவரும் விகாரிகள். காம சிதையில்
அமர்ந்து அனைவரும் கருப்பாகி (பதீத்) விட்டனர். தாய், தந்தை,
குழந்தைகள் அனைவரும் கருப்பாக உள்ளனர். இது எல்லையற்ற
விஷயமாகும். சத்யுகத்தில் கருப்பாக யாரும் இருப்ப தில்லை.
அனைவரும் வெள்ளையாக (தூய்மையாக) இருப்பார்கள். பிறகு எப்போதோ
கருப்பா கின்றனர். இதைக் குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா புரிய
வைத்துள்ளார். கொஞ்சம்-கொஞ்ச மாகப் பதித் ஆகி-ஆகியே கடைசியில்
முற்றிலும் கருப்பாக ஆகி விடுகின்றனர். பாபா சொல்கிறார்,
இராவணன் காமசிதையில் அமர்த்தி வைத்து முற்றிலும் கருப்பாக ஆக்கி
விட்டுள்ளான். இப்போது மீண்டும் உங்களை ஞானசிதையில்
அமர்த்துகிறேன். ஆத்மா தான் பவித்திரமாக ஆக வேண்டி யுள்ளது.
இப்போது பதித-பாவனராகிய பாபா வந்து பாவனமாவதற்கான யுக்திகள்
சொல்கிறார். தண்ணீர் என்ன யுக்தி சொல்லும்? ஆனால் நீங்கள்
யாருக்காவது புரிய வைப்பீர்களானால் கோடியில் யாரோ தான் புரிந்து
கொண்டு உயர்ந்த பதவி பெறுகிறார்கள். இப்போது நீங்கள் பாபா
விடமிருந்து தங்களின் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ள
வந்திருக்கிறீர்கள் - 21 பிறவிகளுக்காக. நீங்கள் இன்னும்
போகப்போக அதிக சாட்சாத்கரங்களைப் பார்ப்பீர்கள். உங்களுக்குத்
தங்களின் படிப்பைப் பற்றிய அனைத்தும் தெரிந்து விடும். யார்
இப்போது கவனக்குறைவாக இருந்து தவறு செய்து கொண்டு
இருக்கிறார்களோ, அவர்கள் அதிகம் அழுவார்கள். தண்டனைகளும் கூட
அதிக மாக இருக்கும் தானே? பிறகு பதவியும் கீழானதாக ஆகி விடும்.
தலை நிமிர்ந்து நிற்க அவர்களால் முடியாது. அதனால் தான் பாபா
சொல்கிறார் - இனிமையியிலும் இனிமையான குழந்தைகளே, புருஷார்த்தம்
செய்து பாஸாகி விடுங்கள். அப்போது எந்த ஒரு தண்டனையும்
5டையவில்லை என்றால் பூஜைக்குரியவர்களாக ஆகி விடுவீôகள். தண்டனை
பெற்றால் பிறகு பூஜிக்கப்பட மாட்டர்கள். குழந்தைகள் நீங்கள்
அதிகப் புருஷார்த்தம் செய்ய வேண்டும். ஆத்மாவாகிய தன்னுடைய
ஜோதியை ஏற்ற வேண்டும். இப்போது ஆத்மா தமோபிரதானமாக ஆகி
விட்டுள்ளது. அதைத் தான் சதோபிர தானமாக ஆக்க வேண்டும். ஆத்மாவே
ஒரு புள்ளியாகத் தான் உள்ளது. அது ஒரு நட்சத்திரம் போன்றது.
அதற்கு வேறு பெயர் எதுவும் வைக்க முடியாது. அதனுடைய
சாட்சாத்காரம் கிடைத்துள்ளது என்பது குழந்தைகளுக்குப் புரிய
வைக்கப் பட்டுள்ளது. சுவாமி விவேகானந்தர் மற்றும் இராமகிருஷ்ண
பரமஹம்ஸர் பற்றிச் சொல்கின்றனர். அவர் (விவேகானந்தர்)
பார்த்தார், அவரிடமிருந்து ஏதோ ஒளி வெளிப்பட்டது என்றால், ஆத்மா
தான் வெளிப்படுகின்றது. அது தமக்குள் பிரவேசமாகி விட்டதாக அவர்
(விவேகானந்தர்) புரிந்து கொண்டார். இப்போது ஆத்மா வந்து அப்படி
ஒன்றும் கலந்து விட முடியாது. அதுவோ போய் வேறொரு சரீரத்தை
எடுக்கின்றது. கடைசியில் நீங்கள் அநேகம் (சாட்சாத் காரங்கள்)
பார்ப்பீர்கள். பெயர்-வடிவத்திற்கு அப்பாற்பட்ட பொருள் என்பது
எதுவும் கிடையாது. ஆகாயம், போலார் (வட துருவம், தென் துருவம்)
- அதற்கும் பெயர் உள்ளது. இப்போது இதையோ குழந்தைகள் புரிந்து
கொண்டுள்ளனர், கல்ப- கல்பமாக நடைபெற்று வந்துள்ள ஸ்தாபனை
இப்போதும் நடந்தேயாக வேண்டும். நாம் பிராமணர்கள் நம்பர்வார்
புருஷார்த்தம் செய்து கொண்டே இருக்கிறோம். விநாடிகள் கடந்து
செல்கின்றன, அதற்கு டிராமா என்று தான் சொல்லப்படுகின்றது. முழு
உலகத்தின் சக்கரம் சுற்றிக் கொண்டே உள்ளது. இந்த 5000
ஆண்டுகளின் சக்கரம் பேன் போல் மெதுவாகச் சுற்றிக் கொண்டே
இருக்கிறது. டிக்-டிக் கடிகாரம் போல் ஓடிக் கொண்டே உள்ளது.
இப்போது இனிமையிலும் இனிமையான குழந்தைகள் நீங்கள் பாபாவை
மட்டுமே நினைவு செய்ய வேண்டும். நடமாடும் போதும், சுற்றிவரும்
போதும், வேலை செய்யும் போதும் பாபாவை நினைவு செய்வதில் தான்
நன்மை உள்ளது. பிறகு மாயா அடி கொடுத்து விடும். நீங்கள்
பிராமணர்கள். குளவி போல் யாரையாவது தன்னைப் போல் பிராமணராக
ஆக்க வேண்டும். இது குளவியின் ஓர் உதாரணமாகும். நீங்கள்
உண்மையிலும் உண்மையான பிராமணர்கள். பிராமணர்கள் தான் பிறகு
தேவதை ஆக வேண்டும். அதனால் இது உங்களுடைய புருஷோத்தம் (உத்தமர்களாக)
ஆவதற் கான சங்கமயுகம். இங்கே நீங்கள் வருவதே புருஷோத்தமர்களாக
ஆவதற்காகத் தான். முதலில் பிராமணராக அவசியம் ஆக வேண்டும்.
பிராமணர்களுக்குக் குடுமி உள்ளது அல்லவா? நீங்கள் பிராமணர்
களுக்குப் புரிய வைக்க முடியும். சொல்லுங்கள் - பிராமணர்களாகிய
உங்களுக்குக் குலம் உள்ளது, பிராமணர்களுக்கு இராஜ்யம் கிடையாது.
உங்களுடைய இந்தக் குலத்தை யார் ஸ்தாபனை செய்தார்? உங்களுடைய
பெரியவர் யார்? பிறகு நீங்கள் எப்போது இதைப் புரிய
வைக்கிறீர்களோ, அப்போது மிகுந்த குஷியடைவார்கள்.
பிராமணர்களுக்கு மரியாதை கொடுக்கின்றனர். ஏனென்றால் அவர்கள்
சாஸ்திரங்கள் முதலியவற்றைச் சொல் கின்றனர். முன்பு ராக்கி
கட்டுவதற்காகக் கூட பிராமணர்கள் சென்று வந்தனர். தற்காலத்திலோ
பெண்குழந்தைகள் செல்கின்றனர். நீங்களோ, யார் பவித்திரதாவின்
உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றனரோ, அவர் களுக்குத் தான் ராக்கி
கட்ட வேண்டும். உறுதிமொழி அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பாரதத்தை மீண்டும் பாவனமாக்குவதற்காக நாம் இந்த உறுதி மொழி
எடுக்கிறோம். நீங்களும் பாவனமாகுங்கள், மற்றவர்களையும்
பாவனமாக்குங்கள். இப்படிச் சொல்வதற்கு வேறு யாருக்கும் சக்தி
கிடையாது. நீங்கள் அறிவீர்கள், இந்தக் கடைசிப் பிறவியில்
பாவனமாவதன் மூலம் நாம் பாவன உலகத்தின் எஜமானர்களாக ஆகிறோம்.
உங்களுடைய தொழிலே இது தான். இது போன்ற மனிதர்கள் யாரும்
கிடையாது. நீங்கள் போய் இந்த உறுதிமொழி எடுக்குமாறு செய்ய
வேண்டும். பாபா சொல்கிறார், காமம் மகாசத்ரு. இதன் மீது வெற்றி
கொள்ள வேண்டும். இதனை வெற்றி கொள்வதன் மூலம் தான் நீங்கள் உலகை
வென்றவராக ஆவீர்கள். இந்த லட்சுமி-நாராயணர் நிச்சயமாக முந்தைய
ஜென்மத்தில் புருஷார்த்தம் செய்துள்ளனர். அதனால் தான் இதுபோல்
ஆகியுள்ளனர்! இப்போது நீங்கள் சொல்ல முடியும் - எந்தக்
கர்மத்தின் பலனாக இவர்களுக்கு இந்தப் பதவி கிடைத்தது என்று.
இதில் குழப்பமடைவதற்கோ எந்த ஒரு விஷயமும் கிடையாது. உங்களுக்
கொன்றும் இந்த தீபாவளி முதலியவற்றின் குஷி கிடையாது. உங்களுக்கோ
குஷி உள்ளது - நாம் பாபாவுடையவர்களாக ஆகியிருக்கிறோம்,
அவரிடமிருந்து ஆஸ்தி பெறுகிறோம். பக்தி மார்க்கத்தில் மனிதர்கள்
எவ்வளவு செலவு செய்கின்றனர்! எவ்வளவு நஷ்டமும் ஆகி விடுகின்றது!
நெருப்புப் பற்றிக் கொள்கிறது. ஆனால் அவர்கள் புரிந்து
கொள்வதில்லை.
நீங்கள் அறிவீர்கள், இப்போது நாம் மீண்டும் நமது புது
வீட்டுக்குப் போகப் போகிறோம். சக்கரம் மீண்டும் அப்படியே
திரும்பவும் சுற்றி வரும். இது எல்லையற்ற ஃபிலிம். எல்லையற்ற
சிலைடு. எல்லையற்ற தந்தை யினுடையவர்களாக ஆகியிருக்கிறோம்
என்றால் அளவற்ற குஷி இருக்க வேண்டும். நாம் பாபாவிடமிருந்து
சொர்க்கத்தின் ஆஸ்தியை அவசியம் பெறுவோம். பாபா சொல்கிறார்,
புருஷார்த்தத்தின் மூலம் எதை விரும்புகிறீர்களோ, அதைப் பெற்றுக்
கொள்ளுங்கள். புருஷார்த்தம் நீங்கள் அவசியம் செய்ய வேண்டும்.
புருஷார்த்தத்தின் மூலம் தான் நீங்கள் உயர்ந்தவர்களாக ஆக
முடியும். இந்த பாபா (முதியவர்) இவ்வளவு உயர்ந்தவராக ஆக
முடியும் என்றால் நீங்கள் ஏன் ஆக முடியாது? நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) எப்படி பாபா சதா குழந்தைகளுக்கு சுகம் தருபவராக உள்ளாரோ,
அதுபோல் சுகம் தருபவராக ஆக வேண்டும். அனைவருக்கும்
முக்தி-ஜீவன்முக்திக்கான வழி சொல்ல வேண்டும்.
2) ஆத்ம அபிமானி ஆவதற்கான தபஸ்யா செய்ய வேண்டும். இந்தப் பழைய
மோசமான உலகில் இருந்து எல்லையற்ற வைராக்கியமுடையவர்களாக ஆக
வேண்டும். க்ஷ
வரதானம்:
ஒவ்வொருவருடைய விசேஷத்தன்மையை நினைவில் வைத்துக்கொண்டு
நம்பிக்கை உடையவராகி ஒற்றுமையான குழுவை உருவாக்கக்கூடிய
அனைவருடைய சுபசிந்தனையாளர் ஆகுக.
நாடகத்தின் அனுசாரமாக ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஏதாவது
விசேஷத்தன்மை நிச்சயமாகக் கிடைத்துள்ளது, அந்த விசேஷத்தன்மையை
காரியத்தில் ஈடுபடுத்துங்கள், பிறருடைய விசேஷத் தன்மையைப்
பாருங்கள். ஒருவருக்கொருவர் நம்பிக்கை உடையவராக இருங்கள்,
அப்பொழுது அவர்களுடைய கருத்துக்களின் பாவனை மாறிவிடும்.
எப்பொழுது ஒவ்வொருவருடைய விசேஷத் தன்மையைப் பார்ப்பீர்களோ,
அப்பொழுது அனேகர் இருக்கும்பொழுதிலும் ஒன்றாகத் தென்படு வீர்கள்.
ஒற்றுமையான குழு ஆகிவிடும். ஒருவர் இன்னொரு வரைப் பற்றி
நிந்திக்கும் விசயத்தைச் சொன்னால், அவர்களுக்கு ஆதரவு
கொடுப்பதற்கு பதிலாக சொல்பவரின் ரூபத்தை மாற்றிவிடுங்கள்,
அப்பொழுதே சுபசிந்தனையாளர் என்று கூறலாம்.
சுலோகன்:
சிரேஷ்ட சங்கல்பம் என்ற பொக்கிஷம் தான் சிரேஷ்ட பிராப்தி
மற்றும் பிராமண வாழக்கைக்கான ஆதாரம் ஆகும்.
அவியக்த சமிக்ஞை : அசரீரி அல்லது விதேகி நிலையின் பயிற்சியை
அதிகரியுங்கள்
ஒருவேளை, நொடியில் விதேகி ஆகுவதற்கான பயிற்சி இல்லையென்றால்
இறுதி நேரம் கூட யுத்தத்திலேயே கழிந்துவிடும். மேலும், எந்த
விசயத்தில் பலவீனம் இருக்குமோ, அது சுபாவமாக இருக்கலாம்,
சம்பந்தத்தில் வருவதாக இருக்கலாம், சங்கல்ப சக்தியில்,
விருத்தியில், வாயு மண்டலத்தின் பிரபாவத்தில் வருவதாக
இருக்கலாம், இதுபோன்ற எந்த விசயத்தில் பலவீனம் இருக்குமோ, அந்த
ரூபத்தை அறிந்துகொண்டு மாயா இறுதிப் பரிட்சை வைக்கும்.
ஆகையினால், விதேகி ஆகுவதற்கான பயிற்சி மிகவும் அவசியம் ஆகும்.