30-06-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! இந்த சமயம்
பாபாவிடம் பலியானீர்கள் என்றால், 21 பிறவிகளுக்கு சுகமானோர்
ஆகிவிடுவீர்கள்.
கேள்வி:
ஞானி குழந்தைகள் தன்னுடைய நிலையை
நன்றாக வைத்துக்கொள்வதற்காக எந்த ஒரு பழக்கத்தை உறுதி செய்ய
வேண்டும்?
பதில்:
அதிகாலையில் எழுவதற்கான
பழக்கத்தைக் கொண்டுவர வேண்டும். அதிகாலையில் எழுந்து பாபாவின்
நினைவில் அமருவது இது மிக நல்ல தாரணையாகும். எந்த குழந்தைகள்
விரைவில் உறங்கி விரைவில் எழுகின்றார்களோ அவர்களின் நிலை நாள்
முழுவதும் நன்றாக இருக்கும். அஞ்ஞானிகளின் உறக்கத்தைக்
காட்டிலும் ஞானிகளின் உறக்கம் பாதியாக இருக்க வேண்டும். 10
மணிக்கு உறங்கி 2 மணிக்கு எழுந்து நினைவில் அமர வேண்டும்.
பாடல்:
எனக்கு உதவியாக இருப்பவரே...
ஓம் சாந்தி.
குழந்தைகள் (தந்தையின்) எதிரில் அமரும் போது, நாம் அனைவரும்
ஜீவாத்மாக்கள் என்று தெரிந்து கொள்கின்றார்கள் இங்கு
ஜீவாத்மாக்கள் தான் இருப்பார்கள் அல்லவா? ஆத்மாக்கள் சரீரம்
இல்லாமல் தனியாக இருக்கும் போது அதனை அசரீரி என்று
சொல்லப்படுகின்றது. நீங்கள் சரீரத்துடன்
அமர்ந்திருக்கின்றீர்கள். ஆத்மாவானாலும், பரமாத்மாவானாலும்
சரீரம் இல்லாமல் பேச முடியாது. இப்பொழுது பாபாவிற்கு முன்னால்
அமர்ந்துள்ளோம் என்பதை ஜீவாத்மாக் களாகிய நீங்கள்
புரிந்துள்ளீர்கள். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல
முன்னால் அமர்ந்திருந்தோம். குழந்தைகள் அவசியம் பாபாவிடமிருந்து
அவசியம் ஆஸ்தியை அடைவோம். நாம் நம்முடைய தந்தை பரம்பிதா
பரமாத்மாவிற்கு எதிரில் அமர்ந்துள்ளோம் என்பதைத்
தெரிந்திருக்கின்றீர்கள். ஏன் அமர்ந்துள்ளோம்? பாபாவிடமிருந்து
எல்லையற்ற ஆஸ்தியடைவதற் காக! நாம் டீச்சர் மூலமாக எஞ்சினீயர்,
பாரிஸ்டர் ஆவதற்காகப் படிக்கின்றோம் என்று பள்ளியில் புரிந்து
கொள்கின்றார்கள். இந்த நோக்கம் இருக்கின்றது. பரம்பிதா பரமாத்மா
நமக்கு பிரம்மா உடலில் அமர்ந்து இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார்
என்பதை குழந்தைகள் புரிந்திருக்கின்றீர்கள். பகவானுடைய
மகாவாக்கியம்: பகவான் என்று நிராகாரமானவரைத்தான் சொல்ல முடியும்
என்று குழந்தைகளுக்குத் தெரியும். ஜீவாத்மாக்கள் மறுபிறவி
அவசியம் எடுக்கின்றார்கள். மனிதர்கள் மறுபிறவி எடுக்கின்றார்களா?
என்று எந்தவொரு சன்யாசிகளிடமும் கேளுங்கள். எடுக்கமாட்டார் கள்
என்று ஒருபோதும் கூறமாட்டார்கள். இல்லையென்றால் 84 இலட்ச பிறவி
என்று எவ்வாறு கூற முடியும்? நீங்கள் மறுபிறவியை
ஏற்றுக்கொள்கின்றீர்களா? என்று கேளுங்கள். இது முற்றிலும் சரி.
ஆத்மா ஒரு உடலை விட்டு சமஸ்காரத்தின் பிரகாரம் மறுபிறவி
எடுக்கின்றது. அப்படி ஒருசிலர் 84 பிறவி எடுக்கின்றார்கள். 84
இலட்சம் பிறவி என்ற விஷயமே கிடையாது. முதல் பிறவி நல்ல
சதோபிதானமானதாக இருக்கும். கடைசி யில் சீ, சீ
தமோபிரதானமாகிவிடுகிறது. 16 கலையிலிருந்து பிறகு 14, 12 கலைகள்
ஆகிவிடுகின்றன. மறுபிறவி அவசியம் எடுக்கின்றார்கள். பரம்பிதா
பரமாத்மா மறுபிறவி எடுக்கின்றாரா? அல்லது மறுபிறவியற்றவரா?
என்று கேட்க வேண்டும். பாருங்கள், இந்த பாயிண்ட் மிகவும்
சூட்சமமானது. ஓருவேளை பிறப்பு இறப்பிற்கு அப்பாற் பட்டவர்
என்றால் சிவஜெயந்தியை எப்படி நிரூபிப்பது? சொல்வார்கள்,
சிவஜெயந்தி கொண்டாடப்படுகின்றது. ஆமாம் சிவ ஜெயந்தி
கொண்டாடப்படுகின்றது ஆனால் கூடவே மரணம் என்ற ஒன்று
கூறப்படுகிறதே அது சிவபாபாவுக்கு கிடையாது. ஒருவேளை இறந்தால்
மறுபடியும் ஜென்மம் எடுக்க வேண்டுமல்லவா? பாபா ஒரு போதும்
மறுபிறவி எடுப்பதில்லை. அவர் இந்த உடலில் ஒரேவொரு முறை
வருகின்றார், அவ்வளவுதான்! மறுபிறவி எடுப்பதில்லை. பரம்பிதா
பரமாத்மா மறுபிறவியற்றவர், அவர் ஒருபோதும்
சதோபிரதானத்திலிருந்து தமோபிரதான மாவதில்லை. ஆத்மாக்கள்
அனைவரும் மறுபிறவியில் வந்து வந்து பதீதமாகிவிட்டார்கள், பிறகு
பாவனமாக்குவதற்கு பாபா வருகின்றார். இதிலிருந்து
நிச்சயமாகின்றது, ஆத்மாதான் பதீதமா கின்றது. ஆத்மா
வீட்டிலிருந்து பாவனமாகத்தான் வருகின்றது. பிறகு மாயை
பதீதமாக்கி விடுகின்றது. பாபா ஒருபோதும் பதீதமாக்கு வதில்லை.
பாபா ஒருபோதும் குழந்தைகளுக்கு தவறான வழியைத் தருவதில்லை. இந்த
நேரம் மனிதர்கள் பதீதமான வழியைத் தான் தருகின்றார்கள்.
பதீதமாகாதீர்கள், அதாவது விகாரத்தில் செல்லாதீர்கள் என்று
இப்பொழுது பாவன மான பாபா கூறுகின்றார். இராவணனுடைய வழிப்படி
தான் துக்கதாமமாக ஆகிவிட்டது. முதலில் சுகதாமம் இருந்தது.
பாபாதான் சுகம், துக்கம் தருகின்றார் என்று சொல்லமுடியாது.
இல்லை. பாபா ஒரு போதும் குழந்தைகளுக்கு துக்கத்திற்கான வழியைத்
தர முடியாது. மாயை தான் துக்கம் தருகின்றது. அந்த மாயை மீது
வெற்றியடையும் போது உலகத்தை வென்றவராக முடியும். மனிதர்கள்
மாயையின் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. அவர்கள்
செல்வத்தைத்தான் மாயை என்று கூறுகின்றார்கள். இவர்களுக்கு
மாயையின் போதை அதிகமுள்ளது என்று கூறு கின்றார்கள் அல்லவா?
ஆனால் மாயையின் போதை இருப்பதில்லை. அங்கு இராவணனின் உருவத்தை
செய்து எரிப்பதில்லை. எதிரிக்குத் தான் உருவ பொம்மை செய்து
எரிக்கப்படுகின்றது. இராவண இராஜ்யத்தின் ஆரம்பம் அரைக்
கல்பத்திலிருந்து தான். தேக அகங்காரம் வருவதால் பிறகு மற்ற
விகாரங்களும் வந்துவிடுகின்றன. தேவதைகள் வாம மார்க்கத்தில்
அதாவது விகார வழியில் சென்றுவிட்டார்கள் என்று சாஸ்திரங்களில்
சொல்லப்பட்டுள்ளது. மாயையின் வசமானதால் பிறர் தாக்கத்தில்
சென்று விட்டார்கள். பிறர்வழிப்படி (தவறான) நடந்துகொள்
கின்றார்கள். இப்பொழுது நீங்கள் ஸ்ரீமத்படி நடக்கின்றீர்கள்.
பிறர்வழி என்றாலே இராவணுடைய வழி. ஸ்ரீ என்றால் சிரேஷ்டமான வழி
பாபாவினுடைய வழி. பரமத் என்பது இராவணனின் வழி ! எனவே தான் அசுர
சம்பிரதாயப்படி அனைவரும் இராவணனின் சங்கிலியில் துக்கத்தில்
உள்ளார் கள் என்று பாபா கூறுகின்றார்.
மனிதர்கள் கல்பத்தின் ஆயுளை இலட்ச கணக்கான வருடம் என்று
புரிந்துள்ளார்கள். 5 ஆயிரம் ஆண்டுகள் எப்படி என்பதின் கணக்கினை
நீங்கள் சொல்ல முடியும். கிறிஸ்துவிற்கு 2000 ஆண்டுகள்,
புத்தருக்கு 2250 ஆண்டுகள், இஸ்லாமியருக்கு 2500 ஆண்டுகள்
ஆகின்றன. அனைத்தும் சேர்ந்து அரைக் கல்பம் ஆகின்றது. அதற்கு
முன்பு தேவதைகளின் இராஜ்யம் இருந்தது, பிறகு தேவதைகளுக்கு
எப்படி இலட்ச கணக்கான வருடம் என்று சொல்ல முடியும்? இவ்வளவு
மனிதர் கள் இருக்கின்றார்கள் பிறகு பிறகு மனிதர்கள் ஆகிவிடு
வார்கள். 5 ஆயிரம் ஆண்டுகளிலேயே கோடிக்கணக்கான மனிதர்கள்
ஆகிவிட்டார்கள். கிறிஸ்து வருவதற்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னால்
பாரதத்தில் ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இருந்தது. 5000
ஆண்டுகள் முடிவடைந்து விடுகிறது. நாடகமும்
முடிவடைந்துவிடுகின்ற
தல்லவா? இந்த விஷயங்களை யாரும் தெரிந்து
கொள்ளவில்லை. நான் யார்? என்னவாக இருக்கின்றேன்? இந்த நாடகம்
எப்படி சுழல்கின்றது? இதனை யாரும் தெரிந்து கொள்ளவில்லை.
இதுதான் கீதையின் அத்தியாயம் எனபதை பாபா புரியவைக்கின்றார்.
பாபா வந்துதான் இராஜயோகத்தைக் கற்பித்திருக்கின்றார். இது மிக
சகஜமான விஷயம் என்பதை பாபா வயதானவர் களுக்கும் புரிய
வைக்கின்றார். பாபா மற்றும் ஆஸ்தியை மட்டும் நினைவு செய்யவும்.
குழந்தை உருவானதென்றால் வாரிசு உருவானது என்று கூறுகின்றார்கள்.
நாம் பாபாவினுடைய வாரிசுகள் என்பதை நீங்கள் உணர்ந்துள்ளீர்கள்.
5 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திப்பதற்காக
வந்துள்ளீர்கள். இது மிக ஆழமான விஷயம். முன்னால் நீங்கள்
சந்தித்திருக்கின்றீ
ர்களா? என்று பாபா கேட்டால், ஆமாம் ! என்று
குழந்தைகள் பதில் கூறு கின்றார்கள். நாங்கள் 5000 ஆண்டுகளுக்கு
முன்னால் உங்களை சந்தித்தோம் என்று கூறுகின்றார்கள். நீங்கள்
இந்த சரீரத்தின் மூலம் படிப்பை கற்றுத்தர வந்திருந்தீர்கள்.
நாம் இந்த பாபாவிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தியடைய அமர்ந்துள்ளோம்
என்பதை மிக உறுதியான குழந்தைகள் புரிந்திருக்கின்றீர்கள்.
பிரம்மா மூலமாகத் தான் நாம் எல்லையற்ற பாபாவினுடை யவர்
ஆகியிருக்கின்றோம். என்னை தெரிந்திருக்கின்றீர்களா? நான்தான்
உங்களுடைய தந்தை என்று பாபா கூறுகின்றார். ஆமாம் பாபா, நீங்கள்
பரம்பிதா பரமாத்மா ! ஆத்மாக்களாகிய எங்களுடைய தந்தை, என்று
குழந்தைகள் கூறுகின்றீர்கள். உங்களை நான் சொர்க்கத்திற்கு
அனுப்பியிருந்தேன், ஆஸ்தியை கொடுத்திருந்தேன், மாயை அதனை
அபகரித்துவிட்டது. பிறகு இப்பொழுது நான் உங்களுக்கு மீண்டும்
தருகின்றேன் என்று பாபா கூறுகின்றார். மாயை ஆஸ்தியை அபகரித்து
விடுகின்றது. பாபா ஆஸ்தியைத் தருகின்றார். இது பலமுறை நடந்த
விளையாட்டாகும். நடந்து கொண்டேயிருக்கும். முடிவென்பதில்லை.
பாபா வினுடையவரா கின்றார்கள் அதில் சிலர் நல்ல சொந்த
குழந்தையாகவும், சிலர் மாற்றான் தாய் குழந்தையாகவும் உள்ளார்கள்.
பக்காவாகவும், பக்குவமற்றவராகவும் இருக்கின்றார்கள். உறுதியான
மனமுடைய குழந்தைகள் மாயையை வெற்றி யடைந்து விடுகின்றார்கள்.
பாபா நான் எதுவரையில் வாழ்கின்றோமோ. அதுவரையில் ஆஸ்தியை
அடைந்துக் கொண்டேயிருப்போம் என்று குழந்தை கள் கூறுகின்றார்கள்.
விகர்மத்தினுடைய சுமை தலை மீது நிறைய இருக்கின்றது. எந்தளவு
நினைவில் இருக்கின்றீர்களோ. அந்தளவு யோக அக்னி மூலமாக பாவ
ஆத்மாவிலிருந்து புண்ணிய ஆத்மா ஆகிவிடுவிடுவீர்கள். நெருப்பு
பொருட்களை தூய்மையடையச் செய் கின்றது. உங்களுடையது யோக
அக்னியாகும். இது எல்லைக்கப்பாற்ப்பட்ட வேள்வியாகும்.
எல்லைக்கப் பாற்பட்ட சேட் (முதலாளி) எல்லைக்கப்பாற்பட்ட
வேள்வியைப் படைத்திருக்கின்றார். இத்தனை ஆண்டுகள் எந்த வொரு
வேள்வியும் நடந்ததில்லை. 7,8 நாட்கள் அல்லது ஒரு மாதத்திற்கு
வேள்வியைப் படைக்கின்றார்கள். உங்களுடைய இந்த யக்ஞமானது எத்தனை
ஆண்டுகளாக நடைபெறுகின்றது. பாபா சொல்லிக்கொண்டேயிருக்
கின்றார்.
மறந்து விடாதீர்கள் என்று கூறுகின்றார். என்னை மட்டும் நினைவு
செய்தீர்களென்றால் உங்களுடைய பல பிறவிகளின் விகர்மங்களின் சுமை
குறைந்துவிடும். என்னை நினைவு செய்யுங்கள் என்பது பகவானுடைய
மகாவாக்கியம். அவசியம் வந்திருக்கின்றார், எனவே தான்
கூறுகின்றார் அல்லவா?
இப்பொழுது நீங்கள் வாபஸ் (திரும்ப) வீட்டிற்குச்செல்ல வேண்டும்.
உங்களுடைய ஆத்மா இந்த நேரம் மிகவும் பதீதமாக உள்ளது. யோகத்தின்
மூலம் நாம் தூய்மையாகிக் கொண்டேயிருக் கின்றோம் என்பதை நாம்
தெரிந்திருக்கின்றோம். நீங்கள் எப்பொழுது வருகின்றீர்களோ,
அப்பொழுது மற்ற தொடர்பிலிருந்து விடுபட்டு தாங்கள் ஒருவருடன்
மட்டுமே தொடர்பை இணைப்போம் என்று நீங்கள் உறுதிமொழி
எடுத்திருந்தீர்கள். உங்களிடம் பலியாகிவிடுவோம். கணவன்
மனைவியிடம், மனைவி கணவனிடம் அர்ப்பணம் ஆகின்றார்கள் அல்லவா?
இங்கு பாபாவிடம் அர்ப்பணம் ஆக வேண்டும். திருமணத்தின் போது
ஒருவர் மற்றொருவரிடம் அர்ப்பணம் ஆகின்றார்கள். நீங்கள் எந்த
மனிதனிடமும் அர்ப்பணம் ஆக வேண்டாம். உங்களிடம் தான் அர்ப்பணம்
ஆவேன் என்பது உங்களுடைய உறுதிமொழியாகும். நீங்கள் என்னிடம்
அர்ப்பணம் ஆனால், நான் உங்களை 21 பிறவிகளுக்கு சதா சுகம்
நிறைந்தவராக்கிவிடுவேன். எவ்வளவு உயர்ந்த ஆஸ்தியாகும். ஸ்ரீமத்
மூலமாக நீங்கள் சிரேஷ்டமாகின்றீர்கள் இதனை மறந்துவிடாதீர்கள்.
இலட்சுமி நாராயணனுடைய சித்திரத்தைக் கூட வீட்டில் வைத்திருங்கள்.
நான் பாபாவிடமிருந்து இந்த ஆஸ்தியை அடைந்து கொண்டிருக் கின்றேன்.
பாபா பரம்தாமத்திலிருந்து வந்திருக்கின்றார். ஆனால் மாயை என்ற
பருந்து குறைவானதல்ல. அனைவருக்கான விஷயம் அல்ல, ஆனால்
நம்பர்வார் இருக்கின்றார்கள். நான் பாபாவிடமிருந்து ஆஸ்தியடை
கின்றேன் என்பதை சிலர் மறந்தேவிடுகின்றார்கள். இங்கு
அமர்ந்திருக்கும் போது போதை ஏறுகிறது. இங்கிருந்து வெளியில்
சென்றால் மறந்துவிடுகின்றது. பிறகு அதிகாலையில்
புத்துணர்ச்சியடை கின்றனர். பிறகு முழு நாளும்
மறந்துவிடுகின்றனர். 4-5 வருடங்கள் இருந்து நன்றாக சேவை
செய்தவர்களைக் கூட பாருங்கள் இன்று இல்லை. ஏதாவது
தவறிழைக்கின்றார்கள், மாயையின் அடி விழுகின்றது, பிறகு
சென்றுவிடுகின்றார்கள். ஏறினால் வைகுண்ட போதை, விழுந்தீர்
களென்றால், தூள் தூளாகி விடுவீர்கள் என்று இதற்குத்தான் பாபா
கூறுகின்றார். எப்படி தூள் தூளாகின்றார்கள் என்பதைப்
பார்க்கின்றீர்களல்லவா? சொர்க்கத்திற்கு அவசியம் செல்வார்கள்.
ஆனால் வரிசைக் கிரமமாகத்தான் இருப்பார்கள். அங்கு எல்லோரும்
சுகமாகத்தான் இருப்போம், ஆனால் நம்பர்வார் இருக்கின்ற தல்லவா?
பள்ளியில் கூட பதவியடையத் தான் முயற்சி செய் கின்றார்கள். பிரஜை
ஆனாலும் பரவாயில்லை. எது அதிர்ஷ்டத்தில் என்ன உள்ளதோ அது போதும்
என்று நினைக்கக்கூடாது. அதனை தமோபிரதான முயற்சி என்று சொல்லப்
படுகின்றது. யார் பாபாவிடம் முழுமையான ஆஸ்தியடைய முயற்சி (உறுதி)
செய்கின்றார்களோ அதனையே சதோபிரதான முயற்சி சொல்லப்படுகின்றது.
இது ஒரு ஓட்ட பந்தயம். இதில் அனைவரும் முதல் நம்பரில் செல்ல
முடியாது. இது மனித ரேஸ் ஆகும். நான் மிக துக்க மடைந்து
விட்டேன் என்று ஆத்மா சொல்கின்றது. சரீரத்தை எடுத்து எடுத்து
மிகவும் களைத்துப் போய்விட்டது. இப்பொழுது பாபாவிடம் செல்ல
வேண்டும் ஆத்மா கூறுகின்றது. பாபா யுக்தி களைக்கூட
கூறியிருக்கின்றார். பாபா நாங்கள் உங்களுடைய நினைவில்தான்
இருப்போம் என்று கூறுகின்றார்கள். எவ்வளவு நேரம் ஒதுக்கு
கின்றீர்களோ அவ்வளவு நல்லது. அரசாங்க வேலைக்கு 8 மணி நேரம்
ஒதுக்கு கின்றீர்கள், அதுபோல நினைவிற்கும் 8 மணி நேரம்
கொடுக்கவும். உலகத்தை சொர்க்கமாக்குவது எவ்வளவு பெரிய
சிரேஷ்டமான காரியம். பாபாவை நினைவு செய்யுங்கள், சுகதாமத்தை
நினைவு செய்யுங்கள். 8 மணி நேரம் சேவை செய்தீர்களென்றால், முழு
ஆஸ்தியையும் அடைந்து விடுவீர்கள். அப்படி நினைவு செய்து செய்து
உங்களுடைய விகர்மங்கள் அனைத்தும் வினாசம் ஆசிவிடும். 8 மணி
நேரம் இந்த சேவைக்குக் கொடுங்கள் மீதம் 16 மணி நேரம் ஓய்வு தான்.
எவ்வளவு முடியுமோ அடிக்கடி நினைவு செய்யுங்கள். எங்கு
அமர்ந்திருந்தாலும் நினைவு செய்ய முடியும். அனைவருக்கும்
அதிகாலை நேரம் என்பது மிகவும் நல்ல நேரம். சிந்தியில் ஒரு
பழமொழி இருக்கின்றது: விரைவில் உறங்கி, அதிகாலையில் விழிக்க
வேண்டும். இது மனிதர்களின் உயர்ந்த தன்மை என்று சொல்லப்
படுகின்றது. இந்த புகழ் இந்த நேரத்திற்கானது தான். இரவில்
விரைவில் உறங்கிவிடவும், அதிகாலை விரைவில் எழுந்துவிடவும் என்று
பாபா கூறுகின்றார். அஞ்ஞானிகள் தான் 8 மணி நேரம் உறங்குவார்கள்.
உங்களுடைய உறக்கம் அதில் பாதிதான் இருக்க வேண்டும். 4, 5. மணி
நேர உறக்கம் போதுமானது. நீங்கள் கர்மயோகியல்லவா? இரவு 10
மணிக்கு உறங்கி 2 மணிக்கு எழுந்துவிடவும். சிவபாபாவை நினைவு
செய்வதால் உங்களுக்கு நிறைய வருமானம் கிடைக்கின்றது. நமக்கு
செல்வம், ஆரோக்கியம் இரண்டுமே கிடைக்கும். நல்லது ! 2 மணிக்கு
இல்லையென்றால் 3 மணிக்கு, இல்லையென்றால் 4 மணிக்கு எழவும்.
அதுதான் மிக நல்ல நேரம். சாந்தியாக இருக்கும் அனைவரும்
அசரீரியாகி விடுகின்றார்கள். அந்த நேரம் மிக அமைதியாக உள்ளது.
அமிர்தவேளை நினைவுதான் நல்ல பிரபாவத்தை (பலனை)
ஏற்படுத்துகின்றது. பாபா அதிக நேரம் இரவில் விழித்திருப்பார்.
சூட்சும சேவையில் களைப்பு ஏற்படுவதில்லை. வருமானம் கிடைப்பதால்
மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகள் நீங்கள் கூட அதிகாலையில்
எழுந்து அழிவற்ற வருமானத்தை அடைந்துக் கொண்டே யிருங்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான வெகுகாலத்திற்குப்பிறகு கண்டெடுக்கப்பட்ட
செல்லமான குழந்தைகளுக்கு தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும், காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு,
அன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள், மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
(1) 21 பிறவிகளுக்கு சதா சுகமானவராவதற்கு பாபாவிடம் முழுமையாகப்
பலியாக வேண்டும். ஸ்ரீமத்படி சிரேஷ்டமானவராக வேண்டும். மனவழி,
மனிதவழி தியாகம் செய்ய வேண்டும். எந்த கட்டளையையும் மீறக்
கூடாது.
2) அதிகாலையில் எழுந்து நினைவில் அமர்ந்து வருமானத்தை அடைய
வேண்டும். உலகத்தை சொர்க்கமாக்குவதற்காக குறைந்ததிலும்
குறைந்தது 8 மணி நேரம் சேவை அவசியம் செய்ய வேண்டும்.
வரதானம்:
சமயம் மற்றும் சங்கல்பம் உள்பட அனைத்து பொக்கிசங்களையும்
வில் (உயில்) எழுதி கொடுத்து விடக்கூடிய மோகத்தை வென்றவர்
ஆவீர்களாக.
எப்படி குழந்தைக்கு எல்லாமே உயில் எழுதி கொடுத்து விடுவது போல
நீங்கள் கூட தந்தையை தங்களது வாரிசு குழந்தையாக ஆக்கி எல்லாமே
ஒப்படைத்து விட்டீர்கள் என்றால் வில்பவர் மனோதிடம் வந்து விடும்.
இந்த மனோதிடத்தின் மூலம் மோகம் இயல்பாகவே அழிந்து போய் விடும்.
எப்படி சாகாரத்தில் தந்தை முழுமையாகவே தன்னை ஒப்படைத்து
விட்டார். அதேபோல உங்களிடம் இருக்கும் பொக்கிஷங்களான நினைவு,
நேரம் மற்றும் எண்ணங்களை வில் செய்து விடுங்கள். அதாவது
ஸ்ரீமத்படி சேவைகளில் ஈடுபடுத்தி விட்டீர்கள் என்றால் மோகஜீத்,
பந்தன்முக்த் - மோகத்தை வென்றவராக பந்தனத்திலிருந்து
விடுபட்டவராக ஆகி விடுவீர்கள்.
சுலோகன்:
ஒருவருக்கொருவர் சிநேகம் உடையவராக ஆக வேண்டும் என்றால்
சரளத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையின் குணத்தை தாரணை
செய்யுங்கள்.
அவ்யக்த சமிக்ஞை: சதா மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால்
தங்களது சுபாவத்தை சரளமானதாக ஆக்கிக் கொள்ளுங்கள்,
சகிப்புத்தன்மை உடையவர் ஆகுங்கள்.
பாப்தாதாவின் வரதானமாவது - எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள்,
மகிழ்ச்சியின் பொக்கிசத்தை பகிர்ந்து கொடுங்கள். மகிழ்ச்சியின்
அலைகளை அனைவருக்கும் பரப்புங்கள். உங்களுடைய முகத்தில்
எப்பொழுதும் குஷியின் புன்முறுவல் பிரகாசித்து கொண்டு
இருக்கட்டும். அந்த மாதிரி மகிழ்ச்சியான முகத்துடன் இருங்கள்.
இதற்காக வார்த்தைகளில் இனிமை, திருப்தி, சரளத்தன்மையின் புதுமை
அவசியம் இருக்கட்டும். பிராமண ஆத்மாக்களின் வார்த்தைகள் சாதாரண
பேச்சாக இருக்கக்கூடாது. ஒவ்வொருவரும் பிராப்தியின் அனுபவம்
செய்யும் வகையில் அப்பேர்ப்பட்ட புதுமை ஒவ்வொரு செயலிலும்
இருக்க வேண்டும்.