30.08.26    காலை முரளி            ஓம் சாந்தி 13.04.2011      பாப்தாதா,   மதுபன்


ஜுவாலாமுகி அக்னி சொப யோக சக்தியால் சமஸ்காரங்களை தகனம் (சம்ஹாரம்) செய்யுங்கள், தங்களது நடத்தை, முகம், பார்வை, விருத்தி மற்றும் சங்கல்பத்தின் மூலம் தந்தையை வெளிப்படுத்துங்கள்

இன்று குழந்தைகளின் அன்பு, அன்புக் கடலையே தன் வசம் அழைத்து வந்துவிட்டது. தந்தை யின் மீது குழந்தைகளுக்கு இருக்கும் உள்ளப்பூர்வமான அன்பு மிகவும் நன்றாக உள்ளது என்பதில் பாப்தாதாவிற்கு மகிழ்ச்சி. மேலும் சதா இந்த அன்பின் ஆதாரத்தைக் கொண்டு தந்தைக்கு சமானமாக ஆகியே தீருவார்கள். அதுமட்டுமன்றி, அன்பெனும் பாடத்தில் பாப்தாதா குழந்தைகளை முன்னிலையில் வைத்துள்ளார்கள். எனவே, இன்று குழந்தைகள் தங்களது அன்புக் கயிற்றால் அன்புக் கடலைக் கட்டி மதுபனிற்கு விசேˆமாக வரவழைத்துள்ளனர். இத்தகைய அன்பு சதா எமர்ஜ் (வெளிப்பட்டு) ஆகி இருக்க வேண்டும். திலாராம் (உள்ளத்தைக் கொள்ளை கொள்பவர்) தந்தையிடமும் குழந்தைகளின் உள்ளப்பூர்வமான அன்பு சதா சென்ற டைந்து கொண்டே இருக்கிறது, ஆனால் அவசியம் வரிசைக்கிரமமாக இருக்கிறது. ஒவ்வொரு வருடைய உள்ளத்திலும் எப்போதும் திலாராம் கூடவே இருக்க வேண்டும், எந்தக் குழந்தையும் தனிமையாக இருக்கக் கூடாது, கம்பைண்டாக (இணைந்தே) இருக்க வேண்டும் என்பதுதான் அன்பின் அடையாளம், இதை பாபா விரும்புகின்றார். எனவே, எப்போதும் கம்பைண்டாக இருக்கின்றீர்களா அல்லது எப்போதாவது தனிமையாகி விடுகின்றீர்களா என்று சோதித்துப் பாருங்கள். தனிமையில் மாயை தனக்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறது, அதனால் தான் திலாராமை சதா உள்ளத்தில் நிறைத்துக் கொள்ளுங்கள் என்று பாப்தாதா எப்போதும் கூறுகின்றார்கள். இதைத் தான் உண்மையான மற்றும் நிலையான அன்பு என்று கூறப்படுகிறது. எனவே, எப்போதாவது தனிமையாகின்றீர்களா அல்லது சதா கூடவே இருக்கின்றீர்களா? ஒவ்வொரு குழந்தையின் வாக்குறுதி என்ன? குறிப்பாக மதுபன் நிவாசிகளின் போதை என்ன வென்றால் - கூடவே இருக்கின்றோம், கூடவே செல்வோம், கூடவே ராஜ்யம் செய்வோம் என்பதாகும். இதேபோல் விசேˆமாக, மிகவும் இனிமையான நிமித்தமான குழந்தைகள் யார் அமர்ந்திருக்கிறார்களோ, அவர்கள் உள்ளப்பூர்வமான வாக்குறுதி பாபாவிடம் கொடுத் துள்ளார்கள் மற்றும் பெரும்பான்மையினரின் நடைமுறையாகவும் இருக்கிறது, அவர்கள் எப்போதும் கம்பைண்ட் ரூபத்தில் இருக்கின்றார்கள், ஆனால் வரிசைக்கிரமமாக இருக்கின்றார் கள். ஒவ்வொரு குழந்தையும், அதிலும் நிமித்தமாக இருக்கும் மகாரதி குழந்தைகள் தங்களது முகத்தின் மூலம் தந்தையின் சாட்சாத்காரத்தை (தரிசனத்தை) செய்விக்க வேண்டும் என்று பாப்தாதா விரும்புகின்றார்கள். அவர்களின் முகம் மற்றும் நடத்தையின் மூலம் தந்தையின் பிரகாசமான முகமும், அதோடு தந்தையைப் போன்ற விடுபட்ட மற்றும் அன்பான நடத்தையின் சாட்சாத்காரமும் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கின்றது.

பிரம்மா பாபாவை பார்த்தீர்கள், பிரம்மா பாபா இறுதி வரை தந்தையின் ஸ்ரீமத்படி ஒவ்வொரு முரளியிலும் எத்தனை முறை பாபா-பாபா என்று கூறினார், ஒவ்வொரு முரளியிலும் பாபா-பாபா என்ற வார்த்தை எத்தனை முறை கூறுகின்றார் என்று எண்ணிப் பாருங்கள், மேலும் தனது தோற்றம், முகம், வார்த்தை, விசேˆமாக கண்கள் மற்றும் நெற்றியின் மூலம் தந்தையை வெளிப்படுத்தினார், குழந்தைகளாகிய நீங்கள் அனுபவசாலிகள் - பிரம்மா பாபாவை பார்க்கும் போது என்ன அனுபவமாகிறது? பாப்தாதா. வெறும் பாபா என்ற வார்த்தையை மட்டும் யாரும் கூறுவதில்லை, எப்போதும் ஒவ்வொருவருடைய வாயிலிருந்தும் பாப்தாதா, பாப்தாதா என்று இணைந்தே வெளிப்படுகிறது மற்றும் அனுபவமாகிறது. அவ்வாறே ஃபாலோ ஃபாதர் (தந்தையைப் பின்பற்றுங்கள்). உங்களைப் பார்ப்பவருக்கு உங்களுடைய முகம், சொல், நடத்தை, பார்வையின் மூலம் தந்தையின் நினைவு தானாகவே வரவேண்டும். இப்போது பெரும்பான்மை யாக உங்கள் அனைவரின் சங்கல்பமும் - நாம் நமது முகம் அல்லது சொல் அல்லது கர்மத்தின் மூலம் தந்தையை வெளிப்படுத்த வேண்டும் என்று இருப்பதை பாபா பார்த்தார். எனவே, ஃபாலோ ஃபாதர். பிரம்மா பாபா தனது நடத்தை, முகம், பார்வை, விருத்தி, சங்கல்பத்தின் மூலம் எப்போதும் தந்தையை வெளிப்படுத்தினார், உங்கள் அனைவருக்கும் அனுபவம் இருக்கிறது அல்லவா! வெறும் பிரம்மா பாபாவை மட்டும் பார்க்கவில்லை, பாப்தாதாவை தான் பார்த்தீர்கள். காரணம் என்ன? பிரம்மா பாபா எப்போதும் தன் கண்களிலும், நெற்றியிலும் தந்தையை நிறைத்திருந்தார். எனவே, விசேˆமாக உங்களுடைய கண்கள், முகம், நடத்தை பாப்தாதாவை நிறைத்திருப்பதை (உள் அடங்கியிருப்பதை) வெளிப்படுத்தட்டும். பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் கற்றுக்கொடுப்பவரின் அனுபவம் ஏற்பட வேண்டும், இவர்கள் என்னென்ன பேசிக் கொண்டு இருக்கின்றார்களோ, இவற்றை கற்றுக்கொடுப்பவர், இவர்களுக்குள் சக்தியை நிறைப்பவர் சர்வசக்திவான் தந்தை இறைவன். இவர்கள் இறைவனின் குழந்தைகள், இறைவனின் மாணவர்கள், இறைவனைப் பின்பற்றும் ஃபாலோயர்ஸ் அல்ல, ஆனால் ஒவ்வொரு அடியிலும் பல கோடிகள் சம்பாதிப்பவர்கள் என்பது பிறருக்கு அனுபவம் ஆக வேண்டும். இப்போது நேரமும் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கத் தயாராக இருக்கிறது. சூழ் நிலைகள் மாறி வருகின்றன. அந்தச் சூழ்நிலைகள் விரும்பாவிட்டாலும் இறைவனின் நினைவை ஏற்படுத்துகின்றன. எனவே, ஒன்று காலம் மற்றும் மற்றொன்று நிமித்தமாக ஆகியுள்ள நீங்கள். இரு குரூப்களின் (குழுக்களின்) விசேசத்தன்மை இருக்கின்றது, ஒன்று விசேசமாக நிமித்தமாக ஆகியுள்ள மதுபன் நிவாசிகள், மற்றொன்று திட்டமிட்டபடி நிமித்த மானவர்களின் குரூப் மீட்டிங்கிற்கு வந்துள்ளீர்கள்.

வருகை தந்துள்ள பெரும்பான்மையான குழந்தைகளின் உள்ளத்தில் - நாம் தந்தையை வெளிப் படுத்தியே ஆகவேண்டும் என்ற ஊக்கம் உற்சாகம் இருக்கிறது என்பதை பாப்தாதா பார்த்தார்கள். தங்களது முகத்தோற்றம் மூலமாக, வார்த்தை மூலமாக அல்லது எந்த ஆத்மாக் கள் சம்பந்தம் தொடர்பில் இருக்கின்றார்களோ, அவர்கள் தற்காலத்தில் உங்களுடைய மனதில் உள்ள ஆத்மாக்களின் நன்மைக்கான பாவனை மூலமாக உங்களது தொடர்பில் வந்து கொண்டிருக்கின்றார்கள் மற்றும் வரவும் விரும்புகின்றார்கள். மேலும், பாப்தாதா கொடுத்துள்ள மனதின் சேவைக்கான காரியத்தில், அதிலும் யார் யோகயுக்தமாகி மனதின் சேவையை பயிற்சி செய்கின்றார்களோ, அவர்களின் இந்த அதிர்வலைகள் இப்போது நாலாபுறமும் யாருக்காவது சென்றடைந்து கொண்டிருக்கிறது அதாவது நமக்கு எங்கிருந்தோ ஒளிக்கதிர்கள், சுகம், அமைதியின் அலை வந்து கொண்டிருக்கின்றன, ஆனால் எங்கிருந்து வருகிறது என்பது இன்னும் தெளிவாகவில்லை என்பதை பார்த்தார்கள். வந்து கொண்டிருக்கிறது, ஆனால் பாரதத்தில் உள்ள பாப்தாதாவின் குழந்தைகளிடமிருந்து வந்து கொண்டிருக்கிறது என்பது இன்னும் தெளிவாகவில்லை. இல்லையெனில் ஓடி வருவார்கள். இப்போது இன்னும் சக்தி வாய்ந்த கதிர்களை அத்தகைய ஆத்மாக்கள் மீது செலுத்துங்கள், அவர்களுக்கு அது தெளிவாக வேண்டும். சென்றடைகிறது, இப்போது ஆரம்பமாகி விட்டது, ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக சிலருடைய கதிர்கள் சென்றடையத் தொடங்கியுள்ளன, இப்போது இதை இன்னும் சக்தி வாய்ந்ததாக ஆக்குங்கள். இதற்காக ஏற்படும் தடைகள், சென்றடைவதில், தெளிவாகுவதில் காரணமாக ஆகின்றது - நீங்கள் யோகம் செய்கிறீர்கள், அமிர்தவேளையில் அமருகிறீர்கள், ஆனால் ஜுவாலாமுகி யோகத்தின் குறைபாடு உள்ளது. இதன் காரணமாக, ஒருபுறம் நீங்கள் அனுப்பும் கதிர்கள் பக்தர்களுக்கோ அல்லது ஆத்மாக்களுக்கோ அவ்வளவு தெளிவாக தெரிவ தில்லை, மறுபுறம் ஜுவாலாமுகி அக்னி சொரூப யோகத்தின் சக்தி இல்லாததால் அல்லது குறைபாடு இருப்பதால் இடையில் எந்த சமஸ்காரம் தடையாக இருக்கின்றனவோ, அந்த சமஸ்காரங்களும் சமாப்தி (அழிவது) ஆகுவதில்லை. சமஸ்கார மாற்றம் ஏற்பட வேண்டும் என்று புருˆôர்த்தம் செய்கின்றீர்கள், ஆனால் அவை இறக்கின்றனவே தவிர, எரிந்து போவ தில்லை. இராவணனை வெறும் கொல்வது மட்டுமல்ல, வதம் செய்த பிறகு எரிக்கிறார்கள், ஏனெனில், வதைத்த பிறகும் உடல் எஞ்சி விடுகிறது அல்லவா! அது போலவே நீங்கள் அமிர்தவேளையில் நினைவில் அமருகிறீர்கள், ஆனால் யோகம் அக்னி ரூபமாக, ஜுவாலா ரூபமாக குறைவாகவே உள்ளது. சந்திப்பைக் கொண்டாடுகின்றீர்கள், ஆன்மிக உரையாடல் செய்கின்றீர்கள், தங்கள் வாழ்க்கையின் விˆயங்களையும் பேசுகிறீர்கள். தொடர்ந்து யோகம் அக்னி ரூபமாக இருக்கவேண்டும், சமஸ்காரத்தை நிச்சயம் வதம் செய்கிறீர்கள், அது இறக்கிறது ஆனால், இடையிடையே எழுந்திருக்கவும் செய்கிறது. எரிந்துவிட்டால் பெயரும் உருவமும் அழிந்துவிடும். இப்போது அனைத்து குழந்தைகளும் உரையாடல் செய்கையில் கூட எவ்வளவு விரும்புகிறோமோ, அவ்வளவு இல்லை என்று கூறுகின்றார்கள்.

எனவே பாப்தாதா இன்று இந்த சமிக்ஞை கொடுக்கிறார், ஏனெனில் விசேˆமாக மகாவீர் குழந்தைகள் மீட்டிங்கிற்கு வந்துள்ளனர் மற்றும் மதுபன் நிவாசிகள் அதாவது மதுபனில் என்ன இருக்கிறது, மதுபன் என்றால் பாபா. மதுபன் என்று சொன்னவுடனே அனைவருக்கும் என்ன நினைவிற்கு வருகிறது? மதுபனின் பாபா. எனவே, மதுபன் நிவாசிகள் விசேˆமாக இந்த கவனத்தை வைக்க வேண்டும் - மதுபன் என்று சொன்னவுடனே மதுபனின் பாபா நினைவிற்கு வருகின்றார். மதுபனில் வசிப்பவர்களை எந்தப் பார்வையோடு பார்க்கின்றார்கள்? மதுபன் நிவாசிகள் கை உயர்த்துங்கள். நிறைய பேர் இருக்கின்றார்கள். கீழே இருந்தாலும் சரி, மேலே இருந்தாலும் சரி, ஆனால், இன்றைய சபையில் மிக அதிகமாக மதுபன் நிவாசிகளே இருக்கின்றார்கள். ஒவ்வொரு மதுபன் நிவாசியின் முகம் மற்றும் தோற்றத்தின் மூலம் பாபா பாபா மட்டுமே தெரிய வேண்டும் என்ற இந்த அதிசயத்தை மதுபன் நிவாசிகள் நிச்சயம் செய்து காட்டுவார்கள் என்பதில் பாப்தாதா மகிழ்ச்சி அடைகின்றார்கள். பேச்சின் மூலம் தந்தை தெரிய வேண்டும், ஏனெனில், மதுபனில் யக்ஞ சேவையின் பலமும் பலனும் மிக அதிகமாகக் கிடைக்கிறது. பெற்றுக் கொள்பவர் பெற்றுக் கொள்ளட்டும், ஆனால் கிடைக்கிறது. சமஸ்காரத்தைப் பார்ப்பதிலோ அல்லது சமஸ்காரத்தை இணைப்பதிலோ இன்னும் சதா கவனம் கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. பாப்தாதாவிற்கு ஒவ்வொரு மதுபன் குழந்தைகள் மீதும் விசேச அன்பு இருக்கிறது, ஏன்? தந்தையினால் ஸ்தாபனை செய்யப்பட்ட யக்ஞ சேவையில் தங்களை சமர்ப்பணம் செய்துள்ளனர். மதுபன் நிவாசிகளுக்கு ஒருபுறம் தங்களது முயற்சியின் பலன் கிடைக்கிறது, மறுபுறம் மதுபனிற்கு வருகை தரும் பிராமணர் களாக இருந்தாலும் சரி, புதிய ஆத்மாக்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு செய்யும் சேவை, அது யக்ஞ சேவை, சாதாரண சேவை அல்ல, அந்த யக்ஞ சேவையின் எக்ஸ்ட்ரா (கூடுதல்) புண்ணியமும் கிடைக்கிறது. எந்தவொரு மதுபன் நிவாசியும் தனது பாப்தாதாவின் ஸ்ரீமத்படி அமிர்தவேளை முதல் இரவு வரை ஸ்ரீமத்படி நடந்தால், அவர்களுக்கு கூடுதல் புண்ணியம் - மதுபன் நிவாசிகள் தாங்களே அதை அறிந்திருந்தாலும் சரி, அறியாவிட்டாலும் சரி, சோம்பேறி யாக இருந்தாலும் கூட மதுபன் சேவையின் புண்ணியம் நிச்சயமாகக் கிடைக்கிறது. மதுபன் நிவாசியாக ஆகுவது என்பது சாதாரண விˆயம் அல்ல. ஒருவர் எத்தகைய சேவையைச் செய்து கொண்டிருந்தாலும் சரி, தூய்மை செய்யும் பணியைச் செய்ய வைத்துக் கொண்டிருந்தாலும் சரி, ஆனால், அத்தகைய சாதாரண வேலையின் புண்ணியமும் மிக அதிகம், ஏனெனில், இது தந்தையினால் உருவாக்கப்பட்ட யக்ஞம். இந்த யக்ஞத்தின் மூலம் தான், மதுபனில் தான் அனைவருக்கும் பரமாத்ம அன்பு கிடைக்கிறது, எனவே, மதுபனைத் தவிர தந்தை வேறு எங்கும் வருவதில்லை. இந்த மதுபனத்திற்கு தந்தை வருவதற்கான, சந்திப்பதற்கான, சந்திப்பு செய்விப் பதற்கான பார்ட் (பாகம்) பதிவாகியுள்ளது. எனவே, ஒவ்வொரு மதுபன் நிவாசியும் தன்னுடைய புண்ணியக் கணக்கை அறிந்து கொள்ளுங்கள், புரிந்து கொள்ளுங்கள் மற்றும் அந்த மகத்தான பிராப்தி சொரூபமாக ஆகுங்கள். எதுவாக இருந்தாலும், பெரியவர்களிடம் கொண்டு சேர்ப்பது உங்களுடைய வேலை, கொண்டு சேர்த்துவிட்டீர்கள் அதாவது உள்ளத்திலிருந்து நீக்கிவிட்டீர் கள், உங்களுடைய பொறுப்பு முடிந்துவிட்டது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால், இதில் உங்களுக்கு பாவம் சேராது. யார் பொறுப்பாளரோ அவர்களுக்குச் சேரும். நீங்கள் கவலையற்று இருங்கள். கொடுப்பது உங்களுடைய வேலை, ஆனால் என்ன நடந்தது, என்ன நடக்கவில்லை, இது ஏன் நடக்க வில்லை, அது ஏன் நடக்கவில்லை என்று சிந்திப்பது உங்களுக்குத் தேவையில்லை, இதனால் வீண் சங்கல்பங்கள் தான் ஓடும். உங்களுடைய பொறுப்பு எதுவோ அதை நீங்கள் செய்யுங்கள், கொண்டு சேர்க்க வேண்டிய இடத்தில் கொண்டு சேருங்கள். ஆனால், கொண்டு சேர்த்த பிறகு, கொண்டு சேர்ப்பதும் முறைப்படி இருக்க வேண்டும், மதுபன் நிவாசிகள் பிராமணர்கள் ஆவீர்கள், உயர்ந்தவர்கள், உங்களுடைய அந்தஸ்தை அறிந்து அத்தகைய கடமையைச் செய்யுங்கள், அப்போதுதான் உங்களது கடமையைக் கேட்டு மற்றவர்களும் கற்றுக் கொள்வார்கள். மதுபன் நிவாசிகள் மீது அனைவருக்கும் பாவனை உள்ளது, எனவே, அத்தகைய பாவனை உள்ளவர்களுக்கு பாவனையின் பலனைக் காட்டுங்கள். மதுபன் நிவாசிகளில் சில குழந்தைகள் மிகவும் மரியாதைகளின் படி சுய முயற்சியாக, தந்தையின் மீது அன்பு கொண்டு ஒத்துழைப்பு கொடுக்கும் குழந்தைகளும் இருக்கிறார்கள் என்பதை பாப்தாதா அறிவார்கள். ஆனால், பாப்தாதா இதையே விரும்புகின்றார்கள், மதுபன் நிவாசிகள் மீது பாப்தாதாவின் விருப்பம் என்ன? மதுபன் நிவாசியான ஒவ்வொரு தந்தையின் குழந்தையும் யக்ஞத்தின் மீது அன்பு கொண்டவராக, ஒத்துழைப்பு கொடுப்பவர் ஆகி தனது நடத்தையின் மூலம் அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும் அதாவது மதுபன் நிவாசிகளாகிய எங்களுக்கு எவ்வளவு பெரிய பாக்கியம் உள்ளது என்று பாக்கியத்தைப் பிரசித்தி செய்யுங்கள், ஏனெனில், நீங்கள் யக்ஞ நிவாசிகள், பரமாத்மா முதலில் எதை உருவாக்கினார்? யக்ஞத்தை உருவாக்கினார். மேலும் யக்ஞத்தின் பூமிக்கு நிமித்தமானது மதுபன் ஆகும். மதுபனின் மகிமையை அறிவீர்கள் அல்லவா, மதுபனின் மகிமையை அறிந்தவர்கள் கையை உயர்த்துங்கள். பாப்தாதா இங்கே (முன்னால் உள்ள டி.வி.யில்) பார்க்கின்றார்கள். நல்லது, மிக நன்று.

நிமித்தமாக ஆகியுள்ள குழந்தைகளைக் கண்டு பாப்தாதா மகிழ்ச்சி அடைகின்றார்கள். அனைவரும் கவனம் கொடுக்கின்றார்கள் ஆனால், இன்னும் கவனம் கொடுத்து அனைவரையும் திருப்திப்படுத்துங்கள், அப்போதுதான் உலகிற்கு திருப்தியின் கதிர்கள் சென்றடையும், இந்த காரியத்தையும் கூட நிமித்தமானவர்கள் செய்ய வேண்டும். யார் நிமித்தமாக இருக்கின்றார் களோ, அவர்கள் தங்களுக்குக் கரங்களாக (துணையாக) உள்ளவர்களின் சமஸ்கார மாற்றத்தை ஏற்படுத்துவதில் கொஞ்சம் உழைக்க வேண்டியிருக்கும். சேவை செய்விக்கின்றீர்கள், தங்கு வதற்கும் உண்பதற்குமான ஏற்பாடுகளைப் பெரும்பான்மையான சென்டர்கள் (மையங்கள்) செய் கின்றன, ஆனால், அவர்களுக்குள் அத்தகைய சக்தியை நிரப்புங்கள், அவர்கள் தந்தையிடமிருந்து சக்தியைப் பெற்று உங்களுடைய சேவை நிலையத்தின் வாயுமண்டலத்தை (சூழ்நிலையை) அத்தகையதாக மாற்ற வேண்டும் - அங்கு யார் வந்தாலும் அவர் முதலில் வாயுமண்டலத்தின் ஈர்ப்பிற்குள் வந்துவிட வேண்டும், ஏனெனில், தற்காலத்தில் அனைவரும் வந்த உடனே ஏதேனும் அனுபவம் கிடைக்க வேண்டும், பார்த்த உடனே ஏதேனும் அனுபவம் கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றார்கள். கேட்பதன் அனுபவம் ஏற்படுகிறது, யோகத்தின் அனுபவம் ஏற்படுகிறது ஆனால், வாயுமண்டலத்தின் அனுபவமும் ஏற்பட வேண்டும், நிமித்த மாக ஆகியுள்ள ஆத்மாக்கள் இந்த கவனம் வைக்க வேண்டும், இது அவர்களின் விசேˆ சேவை யாகும். தானும் யோகயுக்த் ஆகி வாயுமண்டலத்தில் சரியான ஸ்திதியில் (நிலையில்) இருந்தால், அதன் தாக்கம் சேவை நிலையத்தில் தானாகவே ஏற்படும். எவ்வாறு பாப்தாதா அல்லது பெரிய நிமித்த ஆத்மாக்களின் வாயுமண்டலம், வைப்ரேˆன் ஏற்படுத்துகின்றது அல்லவா. பாப்தாதாவின் வாயுமண்டலம் மாறுகிறது அல்லவா. எனவே, ஒவ்வொரு குழந்தை யும் வாயுமண்டலத்தை உருவாக்க வேண்டும், ஏனெனில், இப்போது உங்களுடைய சென்டர் களின் வாயுமண்டலம் மாறும், அப்போதுதான் நிமித்தமான உங்களுடைய சேவை நிலையத் தின் மூலம் உலகத்தின் வாயுமண்டலம் மாறும். புருˆôர்த்தம் உள்ளது, லட்சியம் உள்ளது ஆனால், இந்த லட்சியத்தை இன்னும் சக்திவாய்ந்ததாக ஆக்குங்கள். யாரைப் பார்த்தாலும், முகம் மற்றும் வைப்ரேˆன் மூலம் தற்காலத்தில் மக்கள் அறிந்து கொள்கிறார்கள், ஏனெனில், அசுர சக்தியின் தாக்கமும் அவர்களின் புத்தியில் உள்ளது, ஞானத்தின் பிரபாவமும் உள்ளது, எனவே, மீட்டிங்கிற்கு வந்துள்ள ஒவ்வொருவரும் பொறுப்பானவர்கள். இல்லையெனில் மீட்டிங்கில் பெயர் ஏன் வந்தது! தைரியம் இருக்கிறது அல்லவா அதனால்தான் உங்களுடைய பெயர் வந்துள்ளது, எனவே, உங்களுடைய கடமையை வெளிப்படுத்துங்கள். செய்ய விரும்பவும் செய்கிறீர்கள், செய்வதற்கான முயற்சியையும் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை பாப்தாதா அறிவார்கள், ஆனால், முயற்சியை இன்னும் கொஞ்சம் அதிகரியுங்கள். புரிந்ததா.

இப்போது பாப்தாதா அனைவரின் ரிசல்ட்டையும் (முடிவையும்) பார்க்க விரும்புகின்றார்கள். மதுபன் நிவாசிகள் அல்லது மீட்டிங்கிற்கு வந்தவர்கள், இருவரின் ரிசல்ட்டையும் பார்க்க விரும்புகின்றார்கள். ஜெகதாம்பாவின் விசேˆ புருˆôர்த்தமாக தந்தை கூறுவது மற்றும் ஜெகதாம்பா செய்வது என்று இருந்தது. உங்களுடைய தீதியின் வார்த்தையும் இதுவாகத்தான் இருந்தது அதாவது இப்போது வீட்டிற்குச் செல்ல வேண்டும், இப்போது வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று. உங்களுடைய தாதியின் சங்கல்பமும் இப்போது கர்மாதீத் (கர்ம பந்தனமற்ற நிலை) ஆகவேண்டும், கர்மாதீத் ஆகுவதற்கான வகுப்பு எடுக்க வேண்டும், கர்மாதீத் நிலையின் ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதாகத் தான் இருந்தது. உங்களுடைய பாண்டவர்கள் யார் சென்றுவிட்டார்களோ, அவர்களின் உள்ளத்திலும் இந்த சங்கல்பம் தான் இருந்தது, பாண்டவர்கள் வெற்றியாளர்கள் என்று கூறப்படுகிறார்கள், எனவே, பாண்டவர்களின் லட்சிய மாக இருந்ததும் மற்றும் இருப்பதும் என்னவென்றால் வெற்றியாளரான பாண்டவர்கள் என்று மகிமை பாடப்படுகிறது, பாண்டவர்கள் என்று சொன்னால் என்ன நினைவிற்கு வருகிறது? வெற்றி. அக்ஷோனி (கோடிக்கணக்கான) சேனை இருந்தாலும் பாண்டவர்கள் என்ற வார்த்தையைக் கூறினாலே வெற்றி நினைவிற்கு வருகிறது. 5 பாண்டவர்கள் ஆனால் வெற்றி யாளர்கள். எத்தகைய வாயுமண்டலமாக இருந்தாலும், அக்ஷோனி சேனையின் வாயு மண்டலமாக இருந்தது, ஆனால், பாண்டவர்கள், பாண்டவபதியின் ஸ்ரீமத்படி வெற்றியாளர்கள் ஆனார்கள் மற்றும் வெற்றியின் பெயரைப் பிரசித்தம் செய்தனர். இப்போது அதே பாண்டவர்கள் வெற்றியாளராக ஆகி மற்றவர்களுக்கும் வெற்றியை ஏற்படுத்துபவர்களாக இருக்கின்றீர்கள். எனவே, பாண்டவர்களைப் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைகின்றார்கள், எந்த விˆயத்தில் மகிழ்ச்சி அடைகின்றார்கள்? சக்திகளின் துணைவர்களாக இருக்கின்றார்கள் என்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றார்கள். சக்திகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து முன்னோக்கி கொண்டு செல்வதில் துணைவர்களாக இருக்கிறார்கள். தந்தை சக்திகளுக்கு சிவசக்தி என்ற மந்திரத்தைக் கொடுத்து கம்பைண்ட் ஆக்கியது போல, பாண்டவர்களும் சக்திகளுக்கு பாண்டவர்களிடம் உள்ள விசேˆத்தன்மை எதுவோ, அந்த விசேˆத்தன்மைகளில் சக்திகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து முன்னால் வைப்பவர்கள் நல்லவர்கள், மற்றும் எப்போதும் சிறந்தவர்களிலும் சிறந்தவர்களாக ஆகி முன்னோக்கி செல்பவர்கள்.

பாப்தாதா இன்று உங்களுடைய அன்பைப் பார்த்து உங்கள் அனைவருக்கும் அன்பின் மாலையை அணிவிக் கின்றார்கள். நீங்களும் ஒவ்வொருவருக்கும் அன்பு, ஒத்துழைப்பின் மாலையை அணிவியுங்கள். கைகளின் மாலை அல்ல, உள்ளத்தில் ஒத்துழைப்பின் மாலையை அணிவியுங்கள். பாப்தாதா முன்பே கூறியுள்ளார்கள் - ஒவ்வொரு குழந்தையின் பாக்கெட்டிலும் (பையில்) ஒத்துழைப்பின் நோட்டுகள் இருக்க வேண்டும் என்று. தவறுகளை நோட் (குறிப்பு) செய்யாதீர்கள், ஆனால் ஒத்துழைப்பின் நோட்டுகளால் பாக்கெட் நிறைந்திருக்க வேண்டும். எங்காவது ஒத்துழைப்பு தேவைப்பட்டால் ஒத்துழைப்பின் நோட்டைக் கொடுத்து விடுங்கள். பாக்கெட்டில் இருக்கிறதா? ஒத்துழைப்பின் நோட்டுகள் இருக்கிறதா? நிறைந்திருக்கிறதா, பாக்கெட் நிறைந்திருக்கிறதா? காலியாக இல்லை அல்லவா? நீங்கள் ஒத்துழைப்பின் நோட்டைக் கொடுங்கள், அவர்கள் உங்களுக்கு ஆசிர்வாதங்களின் மாலையை அணிவிப்பார்கள்.

உங்களுடைய அட்வான்ஸ் பார்ட்டியின் விசேˆ ஆத்மாக்களும் மற்றும் சூட்சுமவதன வாசி தந்தையும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சங்கல்பம் உங்களை வந்தடைகிறதா? அவர்கள் தேதி கேட்கிறார்கள். உங்களுடைய பெரிய தாதிமார்களும் தாதாக்களும் தேதிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தேதி கொடுப்பீர்களா! கொடுப்பீர்களா? முதல் வரிசையில் உள்ளவர்கள் கூறுங்கள், தேதி கொடுப்பீர்களா? அல்லது வெயிட் அண்ட் சீ (காத்திருந்து பாருங்கள்) என்று கூறுவீர்களா? ஒவ்வொருவரும் இதில் என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொருவரும் தங்களிடம் எஞ்சியுள்ள சமஸ்காரங்களை தகனம் (சமஸ்காரம்) செய்து விடுங்கள், காலம் நெருங்கி வந்துவிடும். காலத்தை சமீபமாக கொண்டு வருவதற்கான வழி இதுதான். எஞ்சியுள்ள சமஸ்காரங்கள் தடை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. எனவே, இப்போது அடுத்த முறை சீசன் ஆரம்பம் ஆகுவதற்கு நாட்கள் உள்ளன, தாராளமாக நாட்கள் உள்ளன. தினமும் ஏதேனும் ஒரு சமஸ்காரத்தை தகனம் செய்ய வேண்டும். ஒவ்வொன்றாக செய்து கொண்டே செல்லுங்கள், இத்தனை நாட்கள் உள்ளன. எனவே அடுத்த முறை பாப்தாதா வரும்போது சமஸ்காரங்கள் தகனம் செய்யப்பட்டுவிட்டன என்று யார் கை தூக்குவீர்களோ அவர்கள் கையை உயர்த்துங்கள். ஆகிவிட்டதா? கையை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். பாப்தாதா அட்வான்ஸாக (முன்கூட்டியே) மிக மிக மிக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு இருக்கின்றார்கள். நல்லது.

ஆசீர்வாதம்:
சோம்பலின் வெவ்வேறான சொரூபங்களை முடிவுக்குக் கொண்டு வந்து
சதா உல்லாசமாக இருக்கும் தீவிர முயற்சியாளர் ஆகுக.

தற்போதைய நேரத்தில் மாயாவின் தாக்குதலானது சோம்பலின் வடிவத்தில் வெவ்வேறான வழிகளில் ஏற்படுகிறது. இந்த சோம்பலும் ஒரு விசேˆ விகாரமாகும், இதை அழிப்பதற்காக எப்போதும் உல்லாசமாக இருங்கள். சம்பாதிப்பதற்கான உல்லாசம் இருக்கும்போது சோம்பல் அழிந்துபோகிறது, எனவே, எப்போதும் உல்லாசத்தைக் குறைக்கக் கூடாது. யோசிப்போம், செய்வோம், செய்துவிடுவோம், ஆகிவிடும்... இதெல்லாம் சோம்பலின் அடையாளமாகும். இத்தகைய சோம்பல் நிறைந்த பலவீனமான சங்கல்பங்களை முடிவுக்குக் கொண்டு வந்து என்ன செய்ய வேண்டுமோ, எவ்வளவு செய்ய வேண்டுமோ அதை இப்போதே செய்ய வேண்டும் என்று சிந்தியுங்கள், அப்போதுதான் தீவிர முயற்சியாளர் என்று அழைக்கப்படுவீர்கள்.

சுலோகன்:
யாருடைய சிந்தனையும் சொல்லும் சமமாக இருக்கிறதோ,
அவரே உண்மையான சேவாதாரி ஆவார்.


அவ்யக்த சமிக்ஞை - அபவித்திரத்தின் (அசுத்தத்தின்) விதையையும் அழித்து முழுமையான தூய்மையான (பவித்திரமான) ஆத்மாவாக ஆகுங்கள்

பவித்திரதாவின் ஜோதி எப்போதும் சிரேஷ்டத்திலும் சிரேஷ்டமாக எரிந்து கொண்டே இருக்கட்டும், சிறிதும் சலனமடையக் கூடாது, அசையாமல் இருக்க வேண்டும். எவ்வளவு தூரம் அசையாமல் பவித்திரதாவின் ஜோதி இருக்கிறதோ, அவ்வளவு எளிதாக அனைவரும் தந்தையை அறிந்துகொள்ள முடியும் மற்றும் பவித்திரதாவிற்கு வெற்றி வெற்றி என்ற முழக்கம் உண்டாகும். பவித்திரதாவின் பெர்சனாலிட்டியை (ஆளுமையை) எப்போதும் எமர்ஜ் ரூபத்தில் நினைவில் வைத்திருங்கள். நினைவே சக்திக்கு ஆதாரமாகும், எங்கு சக்தி இருக் கிறதோ, அங்கு மாயா வர முடியாது. சக்திவாய்ந்த ஆத்மாவிடம் மாயா வருவது சாத்திய மற்றது