30.11.25 காலை முரளி
ஓம் சாந்தி 18.01.2008 பாப்தாதா,
மதுபன்
உண்மையான சினேகி ஆகி, அனைத்து சுமைகளையும் தந்தைக்கு
கொடுத்துவிட்டு ஆனந்தத்தின் அனுபவம் செய்யுங்கள், உழைப்பில்
இருந்து விடுபட்டவர் ஆகுங்கள்
இன்று பாப்தாதா தன்னுடைய நாலாபுறங்களிலும் உள்ள கவலையற்ற
சக்கரவர்த்திகளின் குழுவை பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
இவ்வளவு பெரிய சக்கரவர்த்திகளின் சபை முழு கல்பத்தில் இந்த
சங்கமயுக சமயத் தில் கூடுகிறது. சொர்க்கத்தில் கூட இத்தனை
பெரிய சக்கர வர்த்திகளின் சபை கூடுவதில்லை. ஆனால், இப்பொழுது
பாப்தாதா அனைத்து சக்கரவர்த்திகளின் சபையைப் பார்த்து மகிழ்ச்சி
அடைந்து கொண்டு இருக்கின்றார்கள். தூரத்தில் இருப்பவர்கள் கூட
உள்ளத்தின் அருகாமையில் தெரிந்து கொண்டு இருக்கின்றார்கள்.
நீங்கள் அனைவரும் கண்களில் நிறைந்திருக்கின்றீர்கள், அவர்கள்
உள்ளத்தில் நிறைந்திருக்கின்றார்கள். எவ்வளவு அழகான சபையாக
உள்ளது, இன்றைய விசேஷ நாளில் அனைவருடைய முகத்தில் அவ்யக்த
ஸ்திதி யினுடைய ஞாபகார்த்தத்தின் ஜொலிப்பு தெரிந்து கொண்டு
இருக்கிறது. அனைவருடைய உள்ளத்தில் பிரம்மா பாபாவின் நினைவு
நிறைந்திருக்கின்றது. ஆதிதேவ் பிரம்மா பாபா மற்றும் சிவபாபா
இருவருமே அனைத்து குழந்தைகளையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்து
கொண்டு இருக்கின்றார்கள்.
இன்றோ அதிகாலை இரண்டு மணியில் இருந்து பாப்தாதாவின் கழுத்தில்
விதவிதமான மாலை கள் வந்து விழுந்தன. இந்த மலர்களின் மாலையோ
பொதுவானவை. வைரங்களின் மாலைகள் கூட ஒன்றும் பெரிய விசயம் அல்ல,
ஆனால், அன்பினுடைய விலைமதிப்பற்ற முத்துக்களின் மாலை மிகவும்
சிரேஷ்டமானது ஆகும். ஒவ்வொரு குழந்தையின் உள்ளத்தில் இன்றைய
தினம் விசேஷமாக சினேகம் எமர்ஜாகி இருந்தது. பாப்தாதாவிடம்
நான்கு விதமான வெவ்வேறு மாலை கள் எமர்ஜாகி இருந்தன. முதல்
நம்பர் சிரேஷ்டமான குழந்தைகள் - யார் தந்தைக்கு சமமாக
ஆகுவதற்கான சிரேஷ்டமான முயற்சியாளர் குழந்தைகளாக உள்ளனரோ,
அப்பேற்பட்ட குழந்தை கள் தந்தையின் கழுத்தில் மாலை போன்று
கோர்க்கப்பட்டு இருந்தனர். முதல் மாலை அனைத்தை யும் விட
சிறியதாக இருந்தது. இரண்டாவது மாலை - உள்ளத்தின் சினேகம்
நிறைந்த, சமீபமாக, சமமாக ஆகுவதற்கான முயற்சியாளர் குழந்தைகளின்
மாலை, அவர்கள் சிரேஷ்ட முயற்சி யாளர்கள், இவர்கள்
முயற்சியாளர்கள். மூன்றாவது மாலை - அது பெரியதாக இருந்தது –
சினேகி யாகவும், தந்தையின் சேவையில் துணைவராகவும் உள்ளனர்,
ஆனால், சில சமயம் தீவிர முயற்சி யாளர்கள் மற்றும் சில
நேரங்களில் புயல்களை அதிகமாக எதிர்கொள்பவர்கள். ஆனால்,
விருப்பம் உள்ளவர்கள், சம்பன்னம் ஆகுவதற்கான விருப்பம் கூட
நன்றாக உள்ளது. நான்காவது மாலை - புகார் கூறுபவர்களுடையது.
வெவ்வேறுவிதமான குழந்தைகளுடைய அவ்யக்த ஃபரிஷ்தா முகம் கொண்ட
மாலைகளாக இருந்தன. பாப்தாதா கூட வெவ்வேறுவிதமான மாலைகளைப்
பார்த்து மகிழ்ச்சியும் அடைந்து கொண்டிருந்தார்கள், மேலும்,
சினேகம் மற்றும் சகாஷை சேர்த்து கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.
இப்பொழுது நீங்கள் அனைவரும் தன்னைத்தானே நான் யார்? என்று
சிந்தித்திடுங்கள். ஆனால், நாலாபுறங்களிலும் உள்ள குழந்தைகளிடம்
இப்பொழுது ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற விசேஷ சங்கல்பம்
நிகழ்கால சமயம் உள்ளத்தில் எமர்ஜாகி உள்ளது. இந்த ஊக்கம்
உற்சாகம் பெரும்பான்மை யினரிடம் எண்ணத்தளவில் இருக்கிறது.
சொரூபத்தில் வரிசைக்கிரமாக உள்ளது, ஆனால், சங்கல்பத்தில் உள்ளது.
பாப்தாதா அனைத்து குழந்தைகளுக்கும் இன்றைய சினேகத்தின் தினம்,
நினைவு தினம், சக்திசாலி தினத்திற்கான விசேஷமாக உள்ளத்தின்
ஆசீர்வாதங்கள் மற்றும் உள்ளத்தின் வாழ்த்துக் கள் கொடுத்துக்
கொண்டு இருக்கின்றார்கள். இன்றைய விசேஷமான தினம்
சினேகத்திற்கான தினமாக இருக்கும் காரணத்தினால் பெரும்
பான்மையினர் சினேகத்தில் மூழ்கி இருக்கின்றனர். அது போன்றே
முயற்சி செய்வதிலும் சதா சினேகத்தில் மூழ்கி இருங்கள். லவ்லீன்
ஆகி இருக்க வேண்டும் என்றால் அதற்கான சகஜமான சாதனம் சினேகம்,
உள்ளத்தின் சினேகம் ஆகும். தந்தையினுடைய அறிமுகத்தின் நினைவு
சகிதமான சினேகம். தந்தை அளிக்கும் பிராப்தி களுடைய சினேகம்
நிறைந்த சினேகம். சினேகமானது மிகவும் சகஜமான சாதனம் ஆகும்,
ஏனெனில், சினேகி ஆத்மா உழைப்பில் இருந்து விடுபட்டுவிடுகின்றார்.
சினேகத்தில் மூழ்கி இருக்கும் காரணத்தினால், சினேகத்தில்
தொலைந்துபோகும் காரணத்தினால் எந்தவிதமான கடின உழைப்பும்
மனோரஞ்சனமாக அனுபவம் ஆகும். சினேகியானவர் தானாகவே தேகத்தின்
உணர்வு, தேகத்தினுடைய சம்பந்தத்தின் மீதான கவனம், தேகத்தினுடைய
உலகத்தின் மீதான கவனத்தில் இருந்து கடந்து சினேகத்தில்
இயல்பாகவே மூழ்கியிருப்பார்கள். உள்ளத்தின் சினேகமானது தந்தை
யினுடைய அருகாமையின், துணையின், சமநிலையின் அனுபவத்தை செய்விக்
கிறது. சினேகி யானவர் சதா தன்னை தந்தையின் ஆசீர்வாதங்களுக்குப்
பாத்திரமானவர் என்று புரிந்திருப்பார். சினேகமானது
அசம்பவத்தையும் சகஜமாக சம்பவம் ஆக்கிவிடுகிறது. சதா தன்னுடைய
தலை யில், நெற்றியில் தந்தையினுடைய சகயோகம் மற்றும் சினேகத்தின்
கரம் இருப்பதாக அனுபவம் செய்வார்கள். நிச்சயபுத்தி உடையவராக,
கவலையற்றவராக இருப்பார்கள். ஆதி ஸ்தாபனை காலத்தில் இருந்த
குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் ஆதி சமயத்தின் அனுபவம்
உள்ளது, இப்பொழுதும் சேவையினுடைய ஆதியில் நிமித்தமாகி இருக்கும்
குழந்தைகளுக்கு அனுபவம் உள்ளது - ஆதியில் அனைத்து
குழந்தைகளுக்கும் தந்தை கிடைத்து விட்டார் என்ற இந்த நினை
வினால் சினேகத்தின் போதை எவ்வளவு இருந்தது! ஞானமோ பின்னால்
கிடைத்தது, ஆனால், முதன்முதலில் சினேகத்தில் மூழ்கி இருந்ததனால்
போதை ஏற்பட்டது. தந்தை சினேகத்தின் கடலானவர், எனவே,
பெரும்பான்மை குழந்தைகள் ஆதியில் இருந்து சினேகத்தில் மூழ்கி
இருக்கின்றனர், முயற்சியின் வேகத்தில் மிகவும் நல்ல வேகத்தோடு
சென்றனர். ஆனால், சில குழந்தைகள் சினேகத்தின் கடலில்
மூழ்கிவிடுகின்றனர், சிலர் மூழ்கிவிட்டு மட்டும் வெளியில்
வந்துவிடுகின்றனர், ஆகையினால், எந்தளவு மூழ்கி இருக்கும்
குழந்தைகளுக்கு உழைப்பு குறைவாக ஆகிறதோ, அந்தளவு அவர்களுக்கு
இல்லை. சில நேரம் உழைப்பு, சில நேரம் அன்பு, இரண்டு நிலையிலும்
உள்ளனர். ஆனால், யார் சினேகத்தில் லவ்லீன் ஆகி இருக்கின்றார்களோ,
அவர்கள் சதா தன்னை குடை நிழலுக்குள் இருப்பதாக அனுபவம்
செய்கின்றனர். உள்ளத்தின் சினேகி குழந்தைகள் உழைப்பையும் கூட
அன்பாக மாற்றிவிடுகின்றனர். அவர்களுக்கு முன்னர் மலை போன்ற
பிரச்சனை கூட மலையாக அல்ல, பஞ்சாக அனுபவம் ஆகிறது. கல் கூட
தண்ணீருக்கு சமமாக அனுபவம் ஆகிறது. இன்று விசேஷமாக சினேகத்தின்
வாயுமண்டலத்தில் இருக்கும்பொழுது உழைத்தது போல் அனுபவம்
செய்தீர்களா அல்லது மனோரஞ்சனமாக இருந்ததா!
இன்றோ அனைவருக்கும் சினேகம் அனுபவம் ஆனது அல்லவா! சினேகத்தில்
மூழ்கி இருந்தீர் களா? மூழ்கி இருந்தீர்களா அனைவரும்! இன்று
உழைப்பின் அனுபவம் ஏற்பட்டதா? ஏதாவது ஒரு விசயத்தின் அனுபவம்
ஆனாதா? என்ன, ஏன், எப்படி என்ற எண்ணம் எழுந்ததா? சினேகம்
அனைத்தையும் மறக்க வைத்துவிடுகிறது. எனவே, தந்தையின் இந்த
சினேகத்தை மறக்காதீர்கள் என்று பாப்தாதா கூறுகின்றார்கள்.
சினேகத்தின் கடல் கிடைத்திருக்கின்றார், நன்றாக விளையாடுங் கள்.
எப்பொழுதெல்லாம் ஏதாவது உழைப்பின் அனுபவம் ஏற்படுகிறதோ, ஏனெனில்,
மாயை இடையிடையில் பரிட்சை வைக்கின்றது, ஆனால், அந்த சமயம்
சினேகத்தின் அனுபவத்தை நினைவு செய்யுங்கள். அப்பொழுது உழைப்பு
அன்பாக மாறிவிடும். அனுபவம் செய்து பாருங்கள். ஆனால், தவறு
என்ன நடந்துவிடுகிறது! அந்த சமயம் என்ன, ஏன், . . . இதில்
அதிகமாக சென்று விடுகின்றீர்கள். எது வந்திருக்கிறதோ, அது
சென்றும்விடுகிறது, ஆனால், எவ்வாறு செல்லும்? சினேகத்தை நினைவு
செய்வதன் மூலம் உழைப்பு சென்றுவிடும். ஏனெனில், அனைவருக்கும்
வெவ்வேறு சமயத்தில் பாப்தாதா இருவருடைய சினேகத்தின் அனுபவமோ
உள்ளது. உள்ள தல்லவா அனுபவம்! எப்பொழுதோ செய்திருக் கின்றீர்கள்
அல்லவா, சரி, சதா இல்லை என்றாலும் எப்பொழுதாவது
செய்திருக்கின்றீர்கள். அந்த சமயத்தை நினைவு செய்யுங்கள் -
தந்தையினுடைய சினேகம் எப்பேற்பட்டது! தந்தையினுடைய
சினேகத்தினால் என்னென்ன அனுபவம் செய்தேன்! என்பதை நினைவு
செய்யுங்கள். எனவே, சினேகத்தின் நினைவினால் உழைப்பு மாறிவிடும்.
ஏனெனில், பாப்தாதாவிற்கு எந்தவொரு குழந்தையின் உழைப்பும்
பிடிக்கவில்லை. என்னுடைய குழந்தைகள் ஆனால் உழைக்கின்றார்கள்!
உழைப்பில் இருந்து விடுபட்டவராக எப்பொழுது ஆகப் போகின்றீர்கள்?
இது சங்கமயுகம் ஆகும், இதில் உழைப்பில் இருந்து விடுபட்டவராக
மகிழ்ச்சியே மகிழ்ச்சியாக இருக்க முடியும். மகிழ்ச்சி
இல்லையெனில் ஏதாவது ஏதாவது சுமை புத்தியில் உள்ளது, சுமையை
என்னிடம் கொடுத்துவிடுங்கள், நான் என்பதை மறந்து டிரஸ்டி
ஆகிவிடுங்கள் என்று தந்தை கூறியிருக்கின்றார். பொறுப்பை
தந்தையிடம் கொடுத்துவிடுங்கள் மற்றும் சுயம் தான் உள்ளத்தின்
உண்மையான குழந்தை ஆகி, உண்ணுங்கள், விளையாடுங்கள் மற்றும்
மகிழ்ச்சி யுடன் இருங்கள், ஏனெனில், இந்த சங்கமயுகம் அனைத்து
யுகங்களை விட மகிழ்ச்சிகளின் யுகம் ஆகும். இந்த மகிழ்ச்சிகளின்
யுகத்தில் கூட மகிழ்ச்சியைக் கொண்டாடவில்லை என்றால் எப்பொழுது
கொண்டாடுவீர்கள்? குழந்தைகள் சுமையை தூக்கிக்கொண்டு மிகவும்
உழைத்துக் கொண்டு இருக்கின்றார்கள், கொடுப்பதில்லை, தானே
சுமக்கின்றார்கள் என்பதை பாப்தாதா பார்க் கின்றார்கள் அல்லவா,
அப்பொழுது தந்தைக்கோ கருணை ஏற்படும் அல்லவா, இரக்கம் வரும்
அல்லவா. மகிழ்ச்சிகளின் சமயத்தில் உழைக்கின்றார்கள்!
சினேகத்தில் மூழ்கிவிடுங்கள், சினேகத்தை அனுபவம் செய்த சமயத்தை
அனுபவம் செய்யுங்கள். ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஏதாவது சமயத்தில்
விசேஷமாக சினேகத்தின் அனுபவம் ஏற்படத்தான் செய்கின்றது,
ஏற்பட்டு இருக்கின்றது. ஏற்பட்டு இருக்கிறது என்பதை தந்தை
அறிந்திருக்கின்றார், ஆனால், நீங்கள் நினைவு செய்வதில்லை.
உழைப்பையே பார்த்துக்கொண்டு இருக்கின்றீர்கள், குழம்பிக்கொண்டு
இருக் கின்றீர்கள். ஒருவேளை, இன்றும் அமிர்தவேளையில் இருந்து
இப்பொழுது வரை இரண்டு அத்தாரிட்டிகளான (அதிகாரிகளான)
பாப்தாதாவின் சினேகத்தை உள்ளத்தால் அனுபவம் செய் திருப்பீர்கள்
எனில், இன்றைய தினத்தைக் கூட நினைவு செய்வதனால் சினேகத்தின்
முன்பு உழைப்பு முடிவடைந்துவிடும்.
இப்பொழுது பாப்தாதா இந்த வருடத்தில் ஒவ்வொரு குழந்தையையும்
சினேக யுக்த்தாக, உழைப் பிலிருந்து முக்தி அடைந்தவராக பார்க்க
விரும்புகின்றார்கள். உழைப்பின் பெயர் அடையாளம் கூட உள்ளத்தில்
இருக்கக் கூடாது, வாழ்க்கையில் இருக்கக் கூடாது. இது முடியுமா?
இது முடியுமா? இதை செய்துவிட்டுத் தான் விடவேண்டும் என்று யார்
நினைக்கின்றீர்களோ, தைரியம் உடையவர்களோ, அவர்கள் கை
உயர்த்துங்கள். இன்று விசேஷமாக அப்பேற்பட்ட ஒவ்வொரு
குழந்தைக்கும் உழைப்பில் இருந்து விடுபடுவதற்கான விசேஷ வரதானம்
தந்தையிடம் இருந்து கிடைக்கின்றது. ஏற்றுக்கொள்கின்றீர்களா?
பிறகு எது வேண்டுமானாலும் நடக்கட்டும், என்ன செய்வீர்கள்? என்ன,
ஏன் என்றோ கூறமாட்டீர்கள் தானே? அன்பான நேரத்தை நினைவு செய்ய
வேண்டும். அனுபவத்தை நினைவு செய்ய வேண்டும் மற்றும் அனுபவத்தில்
மூழ்கிவிட வேண்டும். உங்களுடைய உறுதிமொழி உள்ளது. நாம் தந்தை
மூலம் 21 பிறவிகளுக்காக ஜீவன் முக்தி நிலையின் பதவியை அடைந்து
கொண்டிருக்கின்றோம், அடைந்துவிடுவோம் என்ற உங்கள் அனைவருடைய
உறுதிமொழி உள்ளது எனில் ஜீவன்முக்தியில் உழைப்பு இருக்கிறதா
என்ன? என்று தந்தையும் குழந்தைகளிடம் கேள்வி கேட்கின்றார். 21
பிறவிகளில் ஒரு பிறவி சங்கமயுகத்தின் பிறவி ஆகும். உங்களுடைய
உறுதிமொழி 21 பிறவிகளுக்கானதாகும், 20 பிறவி களுக்கானது அல்ல.
இப்பொழுதிலிருந்தே உழைப்பிலிருந்து விடுபட்டவர் அதாவது
ஜீவன்முக்த், கவலையற்ற சக்கரவர்த்தி ஆவீர்கள். இப்போதுள்ள
சமஸ்காரம் ஆத்மாவில் 21 பிறவிகளுக்கு எமர்ஜாகி இருக்கும். எனவே,
21 பிறவிகளுக்கான ஆஸ்தியை அடைந்துவிட்டீர்கள் அல்லவா! அல்லது
இப்பொழுது அடைய வேண்டுமா? எனவே, அட்டென்ஷன் ப்ளீஸ்,
உழைப்பிலிருந்து விடுபட்டவராக, திருப்தியாக இருக்க வேண்டும்
மற்றும் திருப்திபடுத்த வேண்டும். இருந்தால் மட்டும் போதாது,
திருப்திபடுத்தவும் வேண்டும். அப்பொழுது தான் உழைப்பில் இருந்து
விடுபட்டவராக இருப்பீர்கள். இல்லையென்றால், தினமும் ஏதாவது
ஏதாவது சுமைக்கான விசயங்கள், உழைப்பிற்கான விசயங்கள், என்ன, ஏன்
என்பது வார்த்தைகளில் வந்துவிடும். இப்பொழுது சமயத்தின்
அருகாமையை பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள். எவ்வாறு சமயம்
அருகாமையில் வந்துகொண்டிருக்கிறதோ, அதுபோல் பாபாவுடனான
உங்களுடைய சமீப நிலையின் அனுபவத்தை நீங்கள் அதிகரிக்க வேண்டும்
அல்லவா. தந்தையுடனான உங்களுடைய அருகாமையானது சமயத்தின்
அருகாமையை முடிவடையச் செய்யும். குழந்தைகளாகிய உங்கள்
அனைவருக்கும் ஆத்மாக்களின் துக்கம், அசாந்தியான குரல் காதுகளில்
கேட்கவில்லையா என்ன! மூதாதையரும்(பூர்வஜ்) நீங்கள் தான்,
பூஜைக்குரியவரும் நீங்கள் தான். ஹே! பூர்வஜ் ஆத்மாக்களே, ஹே!
பூஜைக்குரிய ஆத்மாக்களே, எப்பொழுது விஷ்வ நன்மைக்கான காரியத்தை
முடிவு பெறச் செய்வீர்கள்?
பாப்தாதா சமாச்சாரங்களை பார்த்தார்கள், உலக நன்மையினுடைய
வேகத்தை எவ்வாறு தீவிரப்படுத்துவது என்று ஒவ்வொரு துறையினரும்
அவரவர் மீட்டிங் செய்கின்றார்கள், திட்டம் போடுகின்றார்கள்.
மிகவும் நன்றாக திட்டம் போடுகின்றார்கள், ஆனால், பாப்தாதா
இறுதியாக எவ்வளவு காலம் வரை திட்டம் போடுவீர்கள்? என்று
கேட்கின்றார்கள். இறுதியாக எவ்வளவு காலம் வரை திட்டம்
போடுவீர்கள் - இதற்கான பதிலை தாதிகள் கொடுப்பார்களா? இறுதியாக
எவ்வளவு காலம் வரை திட்டம் போடுவீர்கள் - பாண்டவர்கள்
பதிலளிப்பீர்களா? தந்தையின் பிரத்யட்சதா ஏற்பட வேண்டும்
என்பதையே ஒவ்வொரு துறையினரும் திட்டம் உருவாக்குவதில்
இலட்சியமாக வைக்கின்றார்கள். ஆனால், திடமான உறுதிமொழியினாலேயே
பிரத்யட்சதா ஏற்படும். உறுதி மொழியில் திடத்தன்மை இருக்க
வேண்டும். சில நேரம் ஏதாவது காரணத்தினால் அல்லது விசயங்களினால்
உறுதித்தன்மை குறைந்துவிடுகிறது. உறுதிமொழி மிகவும் நன்றாக
செய்கின்றார்கள். அமிர்தவேளையில் ஒருவேளை உங்களால் கேட்க
முடிந்தால், தந்தையோ கேட்கின்றார், அனைவருடைய உள்ளத்தின் குரலை
கேட்க முடியும் படியான சாதனத்தை இப்பொழுது அறிவியல் உங்களுக்கு
கொடுக்கவில்லை. பாப்தாதா கேட்கின்றார்கள், உறுதி மொழிகளின்
மாலைகள், சங்கல்பம் செய்வதற்கான விசயங்கள் அவ்வளவு நல்ல நல்லவை
யாக உள்ளத்தை மகிழ்விக்கக் கூடியவையாக உள்ளன, அதற்கு பாப்தாதா
ஆஹா! குழந்தைகளே ஆஹா! என்று கூறுகின்றார்கள். என்னென்ன
செய்கின்றீர்கள் என்று சொல்லட்டுமா! எப்பொழுது கர்மத்தில்
வருகின்றீர்கள் அல்லவா, முரளி வரை கூட 75 சதவிகிதம் சரியாக
உள்ளது. ஆனால், எப்பொழுது கர்மயோகத்தில் வருகின்றீர் களோ, அதில்
வித்தியாசம் வந்துவிடுகிறது. சில சமஸ்காரம், சில சுபாவம்,
சுபாவம் மற்றும் சமஸ்காரம் எதிர்க் கின்றன, அதில் உறுதிமொழி
திடமாக இருப்பதற்கு பதிலாக சாதாரணம் ஆகிவிடுகின்றது.
திடத்தன்மையின் சதவிகிதம் குறைந்துவிடுகிறது.
பாப்தாதா குழந்தைகளுடைய ஒரு விளையாட்டைப் பார்த்து
புன்னகைக்கின்றார்கள். எப்படிப்பட்ட விளையாட்டை
விளையாடுகின்றீர்கள், என்னவென்று சொல்லட்டுமா? பாப்தாதாவிற்கோ
விளையாட்டைப் பார்க்கும்பொழுது கருணை வருகின்றது, மகிழ்ச்சி
வரவில்லை, ஏனெனில், குழந்தைகள் தங்களுடைய விசயத்தை பிறர் மீது
சுமத்துவதில் மிகுந்த புத்திசாலியாக இருக்கின்றார்கள் என்பதை
பாப்தாதா பார்க்கின்றார்கள். என்ன விளையாட்டு விளையாடு
கின்றார்கள்? விசயங்களை உருவாக்குகின்றார்கள். பார்க்கக்
கூடியவர்கள் யார் இருக் கின்றார்கள் என்று நினைக்கின்றார்கள்!
நான் அறிவேன் என்னுடைய உள்ளம் அறியும். தந்தையோ பரந்தாமத்தில்,
சூட்சுமவதனத்தில் இருக்கின்றார் என்று நினைக்கின்றார்கள். இதை
செய்யக் கூடாது என்று ஒருவேளை எவருக்கேனும் சொன்னால் . . .
என்ன விளையாட்டு விளையாடு கின்றார்கள், தெரியுமா? ஆம்,
நடந்துவிட்டது ஆனால் . . . ஆனால் என்பதை அவசியம் சொல்
கின்றார்கள். ஆனால், என்ன? அப்படி இருந்தார் அல்லவா, அப்படி
செய்தார் அல்லவா, அப்படி நடக்கிறது அல்லவா, அதனால் தான் நடந்தது,
நான் செய்யவில்லை, இப்படி நடந்தது அதனால் செய்துவிட்டேன்.
இப்பொழுது இவர் செய்தார், அதனால் செய்தேன். இல்லையென்றால் நான்
செய்வதில்லை, எனில், இது என்னவாயிற்று? தன்னுடைய உணர்தல்,
ரியலைசேஷன் குறைவாக உள்ளது. நல்லது, அவர் அவ்வாறு செய்தார்
என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்பொழுதே நீங்கள் செய்தீர்கள், சரி
மிகவும் நல்லது. முதல் நம்பராக அவர் ஆகிவிட்டார், நீங்கள்
இரண்டாவது நம்பர் ஆகிவிட்டீர்கள், சரி தானே. பாப்தாதா இதையும்
ஏற்றுக்கொள்கின்றார்கள். நீங்கள் முதல் நம்பர் இல்லை, இரண்டாவது
நம்பர் ஆவீர்கள், ஆனால், முதல் நம்பரில் உள்ளவர் மாறினால் நான்
சரியாகுவேன் என்று நீங்கள் யோசிக்கின்றீர்கள், சரிதானே? அந்த
நேரத்தில் இதைத்தான் புரிந்துள்ளீர்கள் அல்லவா. முதல் நம்பர்
மாறிவிடுகின்றார் என்று வைத்துக் கொள்ளுங்கள், பிறகு, இது
உங்களுடைய தவறு, நீங்கள் மாற்ற வேண்டும் என்று பாப்தாதா மற்றும்
அனைவரும் முதல் நம்பரில் உள்ளவர்களுக்கு கூறுகின்றார்கள்,
சரிதானே. நல்லது, ஒருவேளை முதல் நம்பரில் உள்ளவர் மாற்றம்
செய்துவிட்டார் என்றால் முதல் நம்பர் யாருக்கு கிடைக்கும்?
உங்களுடைய நம்பர் முதல் நம்பராக இருக்காது. பரிவர்த்தனை
சக்தியில் உங்கள் நம்பர் முதல் நம்பராக இருக்காது. முதல் நம்பரை
நீங்கள் அவர் களுக்கு கொடுத்துவிட்டீர்கள் என்றால் உங்களுடைய
நம்பர் என்னவாகிவிட்டது? இரண்டாவது நம்பர் ஆகி விட்டது அல்லவா.
ஒருவேளை, உங்களை இரண்டாவது நம்பர் என்று கூறுகின்றார்கள்
என்றால் ஒப்புக் கொள்வீர்களா? ஒப்புக்கொள்வீர்களா? அவ்வாறு
இருந்தது, அப்படி இருந்தது, எப்படி ஆனது, . . . என்று
சொல்லமாட்டீர்களா, இந்த வார்த்தைகள் விளையாட்டில் மிகுதியாக
வருகின்றன. அவ்வாறு, அப்படி, எப்படி - இந்த விளையாட்டை
நிறுத்திவிட்டு நான் மாறவேண்டும். நான் மாற்றம் அடைந்து பிறரை
மாற்றுவேன். ஆனால், ஒருவேளை பிறரை மாற்றமுடியவில்லை என்றால்
சுபபாவனை, சுபவிருப்பமோ வைக்க முடியும் தானே! அதுவோ உங்களுடைய
பொருள் அல்லவா! ஹே! அர்ஜுனனாக நான் ஆகவேண்டும். விஷ்வத்தின்
முதல் இராஜ்ய அதிகாரி இலட்சுமி நாராயணருக்கு சமீபமாக நீங்கள்
வரவேண்டுமா அல்லது இரண்டாவது நம்பரில் உள்ளவர் வரவேண்டுமா?
பாப்தாதாவிற்கு இந்த வருடத்தில் இந்த ஆசையே உள்ளது - அனைத்து
பிராமண ஆத்மாக்கள், பிரம்மா குமார், பிரம்மாகுமாரி எவ்வாறு
இங்கே இந்த பேட்ஜை அணிந்திருக்கின்றீர்கள் அல்லவா, அனைவரும்
அணிந்திருக்கின்றீர்கள் தானே! இங்கேயும் கூட வருகின்றீர்கள்
என்றால் உங்களுக்கு காகிதத்தால் செய்யப்பட்டதோ, தங்கத்தால் ஆனதோ,
வெள்ளியால் ஆனதோ பேட்ஜ் கிடைக்கிறது அல்லவா. எவ்வாறு இங்கே
பேட்ஜ் அணிந்து கொள்கின்றீர்களோ, அதேபோன்று நான் மாற வேண்டும்,
நான் நிமித்தம் ஆகவேண்டும் என்று உள்ளத்தில், மனதில் இந்த
பேட்ஜை அணிந்து கொள்ளுங்கள். இவர் மாறட்டும், இந்த விசயம்
மாறட்டும், இந்த மனிதர் மாறட்டும், இந்த சூழ்நிலை மாறட்டும்,
இப்படி அல்ல. நான் மாற வேண்டும். விசயங்களோ வரும், நீங்கள் உயரே
சென்று கொண்டிருக்கின்றீர்கள், உயர்ந்த இடத்தில் பிரச்சனைகளும்
கூட பெரியதாக வரும் அல்லவா! ஆனால், எவ்வாறு இன்று
வரிசைக்கிரமமாக அவரவர் சக்திக்கேற்ப சினேகம் நிறைந்த நினைவி
னுடைய வாயுமண்டலம் இருந்தது. அவ்வாறு தன்னுடைய மனதில் சதா
சினேகத்தில் லவ்லீனாகி இருப்பதற்கான வாயுமண்டலத்தை சதா எமர்ஜாக
வைத்திடுங்கள்.
பாப்தாதாவிடம் மிகவும் நல்ல நல்ல செய்திகள் வருகின்றன.
எண்ணத்தளவில் மிகவும் நன்றாக உள்ளன. சொரூபத்தில் வருவதில்
யதாசக்தி ஆகிவிடுகின்றனர். இப்பொழுது இரண்டு நிமிடங் களுக்காக
அனைவரும் பரமாத்ம சினேகம், சங்கமயுகத்தினுடைய ஆன்மிக
ஆனந்தத்தின் ஸ்திதியில் நிலைத்துவிடுங்கள். (டிரில்) நல்லது -
இந்த அனுபவத்தை ஒவ்வொரு நாளும் அடிக்கடி அவ்வப்பொழுது அனுபவம்
செய்துகொண்டே இருக்க வேண்டும். சினேகத்தை விடக் கூடாது.
சினேகத்தில் மூழ்குவதை கற்றுக்கொள்ளுங்கள். நல்லது.
நாலாபுறங்களிலும் உள்ள யோகயுக்த், யுக்தியுக்த், இராஜ்யுக்த் (இரகசியங்கள்
அறிந்த), சுயம் தானும் இரகசியங்களை அறிந்து சதா
திருப்திபடுத்தக்கூடிய மற்றும் திருப்தியாக இருக்கக்கூடிய,
சுயம் தான் மட்டும் திருப்தியாக இருக்கக்கூடாது,
திருப்திபடுத்தவும் வேண்டும், அப்பேற்பட்ட சதா சினேகத்தின்
கடலில் லவ்லீனாக உள்ள குழந்தைகளுக்கு, சதா தந்தைக்கு சமமாக
ஆகுவதற்கான தீவிரவேக முயற்சியாளர் குழந்தைகளுக்கு, சதா
அசம்பவத்தையும் கூட சகஜமாக சம்பவம் ஆக்கக்கூடிய சிரேஷ்ட
ஆத்மாக்களுக்கு, சதா தந்தைக்குத் துணையாக இருக்கக்கூடிய மற்றும்
தந்தையின் சேவையில் துணைவராக இருக்கக்கூடிய, அப்பேற்பட்ட மிக
மிக அதிர்ஷ்டமான (லக்கி) மற்றும் அன்பான (லவ்லீ) குழந்தைகளுக்கு
இன்றைய அவ்யக்த தினத்தினுடைய, அவ்யக்த ஃபரிஷ்தா சொரூபத்தினுடைய
அன்பு நினைவுகள் மற்றும் உள்ளத்தின் ஆசீர்வாதங்கள், நல்லது.
ஆசீர்வாதம்:
நினைவு என்ற மாயமந்திரத்தின் மூலம் சர்வ ஸித்திகளை பெறக்கூடிய
ஸித்தி சொரூபம் ஆகுக.
தந்தையினுடைய நினைவு தான் மாயமந்திரம் ஆகும், இந்த
மாயமந்திரத்தின் மூலம் என்ன ஸித்தியை விரும்புகின்றீர்களோ,
அதைப் பெற முடியும். எவ்வாறு ஸ்தூலத்தில் கூட ஏதாவதொரு
காரியத்தின் ஸித்திக்காக மந்திரம் ஜெபிக்கின்றார்கள், அதேபோன்று
இங்கேயும் கூட ஒருவேளை ஏதாவதொரு காரியத்தில் ஸித்தி
வேண்டுமென்றால், இந்த நினைவு என்ற மகாமந்திரம் தான் விதி
சொரூபம் ஆகும். இந்த மாயமந்திரம் நொடியில் மாற்றம்
செய்துவிடுகிறது. இதை சதா நினைவில் வைத்தீர்கள் என்றால் சதா
ஸித்தி சொரூபம் ஆகிவிடுவீர்கள், ஏனெனில், நினைவில் இருப்பது
பெரிய விசயம் அல்ல, சதா நினைவில் இருக்க வேண்டும் - இதுவே
பெரிய விசயம் ஆகும், இதன் மூலமே சர்வ ஸித்திகள் கிடைக்கின்றன.
சுலோகன்:
நொடியில் விஸ்தாரத்தை சாரமாக அடக்கிவிடுவது என்றால் இறுதி
சான்றிதழ் பெறுவது என்பதாகும்.
அவியக்த சமிக்ஞை : அசரீரி அல்லது விதேகி நிலையின் பயிற்சியை
அதிகரியுங்கள்
எவ்வாறு சரீரத்தின் ஆடையை சகஜமாகக் கழைய முடிகிறதோ, அவ்வாறு
சரீரம் என்ற ஆடையைக் கூட சகஜமாக கழைய முடியவேண்டும் மற்றும்
சகஜமாகவே தேவையான சமயத்தில் தாரணை செய்ய முடிய வேண்டும்,
இதற்கான பயிற்சி வேண்டும். ஒருவேளை, ஆடை தொந்தரவாகவோ அல்லது
இறுக்கமாகவோ இருந்ததென்றால் சகஜமாகக் கழற்ற முடியாது, அதுபோல்
இந்த தேகம் என்ற ஆடை கூட ஏதாவதொரு சமஸ்காரத்தில் ஒட்டிக்கொண்டு
தொந்தரவு செய்வதாக அல்லது இறுக்கமாக இருக்கக்கூடாது. இதற்காக
அனைத்து விசயங்களில் ஈஸியாக இருங்கள், ஒருவேளை, ஈஸியாக
இருந்தீர்கள் என்றால் அனைத்து காரியங்களும் ஈஸி ஆகிவிடும்.
எந்தளவு பழைய சமஸ்காரங்களில் இருந்து விடுபட்டு இருப்பீர்களோ,
அந்தளவு ஸ்திதியும் கூட விடுபட்டதாக அதாவது விதேகியாக சகஜமாக
ஆகிவிடும்.